Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இளைஞர்கள் விரைவில் விடுதலை-பிள்ளையார் கோவில் விடயத்தில் நீதியான தீர்வு!கூட்டமைப்பிடம் கோத்தபாயா உறுதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gotabaya-rayapasa-150.gif

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்களெனவும், திருகோணமலை பொது வைத்தியசாலை வளவிலுள்ள பிள்ளையார் கோவில் உடைப்பு விடயத்தில் நீதியான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று பாதுகாப்புச் செயலாளரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

திருகோணமலையில் கடந்தவாரம் திடீரென தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டமை மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது என இங்கு குறிப்பிட்டிருக்கும் சம்பந்தன், கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அதேசமயம், திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலின் ஒரு பகுதி உடைக்கப்படுவது குறித்தும் பாதுகாப்புச் செயலரின் கவனத்திற்குக் கொண்டுவந்த சம்பந்தன், அதற்கும் நீதியான தீர்வு கிடைக்கப்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் திருமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னணியில் இவ்வாறான கைதுகள் இடம்பெற்றுள்ளன எனவும், புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிய முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு அழிக்கப்படாமல் இருந்தால் அவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பது குறித்து அரசு ஆராய்ந்து வருவதால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்படுவார்களென்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இதன்போது சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

பிள்ளையார் கோவிலின் ஒரு பகுதி உடைக்கப்படும் விவகாரம் குறித்து இங்கு கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலர், இந்தப் பிரச்சினைக்கு ஏதுவாக இருக்கும் பாதைக்குரிய காணி வைத்தியசாலைக்கே ஒப்படைக்கப்படுமென்று உறுதியளித்துள்ளார்.

இதனால் குறிப்பிட்ட பாதை சம்பந்தமான விதிகள் குறித்தான பிரச்சினை எழாதபடி இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாமெனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட சம்பந்தன், இந்த விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருக்குமெனத் தெரிவித்தார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் குறிப்பிட்ட பாதை சம்பந்தமான விதிகள் குறித்தான பிரச்சினை எழாதபடி இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாமெனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட சம்பந்தன், இந்த விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருக்குமெனத் தெரிவித்தார்.

பிறகு என்ன இனி கோவணத்தையும் சிங்க கொடியில போட வேண்டியதுதான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறகு என்ன இனி கோவணத்தையும் சிங்க கொடியில போட வேண்டியதுதான்...

:lol: :lol:

பிறகு என்ன இனி கோவணத்தையும் சிங்க கொடியில போட வேண்டியதுதான்...

விலைவாசி ஏற்றம், துணி மணி வீனாவதை தடுக்க என்றால் மற்ற மாதிரியும் செய்யலாம். அதுகெண்டு புது வேட்டி கிளிக்ககாமல்.....

சம்பந்தர் பார்க்கும் போது திறந்து விட்டுவிட்டு அதே கையுடன் போய் திரும்ப பிடித்தும் வருவார்கள்.

இதை பெருதுபடுத்தாமல் சம்பந்தர் தீர்வு திட்டத்தை கதைக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

பிறகு என்ன இனி கோவணத்தையும் சிங்க கொடியில போட வேண்டியதுதான்

மன்னிக்கவும் உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.... <_<:unsure:

ஏனெனில் கோவணம் போடுகிறவர்களுக்கு கூறியிருந்தால் உடன்பட்டிருப்பேன்........ :rolleyes::D:icon_idea:

இரா. சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் பாதுகாப்புச் செயலாளரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

மீண்டும் வேதாளங்கள்!

கொலையாளி கோட்டபாய - சம்பந்தர் உறவு மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.