Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருமுகம் காட்டும் சரத் பொன்சேகா – இந்திய ஊடகம்

Featured Replies

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் அரசியலில் நுழைவதை நோக்காகக் கொண்டு, தற்போது பெரும்பான்மை சிங்கள மற்றும் சிறுபான்மை தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

எவ்வாறெனினும், சரத் பொன்சேகாவின் திட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ராஜபக்ச அரசாங்கம் நகர்வுகளை முன்னெடுத்து வருவது போல் தெரிகிறது.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சரத் பொன்சேகாவால் ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட நேர்காணல்களில், சிறிலங்காவில் தற்போது நடைமுறையிலுள்ள ஊழல் மற்றும் ஆட்சி மோசடி போன்றவற்றை எதிர்த்து சிறிலங்கர்கள் அனைவரும் குறிப்பாக பெரும்பான்மை சிங்கள மக்கள் போராட வேண்டிய தேவையுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், 'சுடர் ஒளி' என்ற தமிழ் நாளிதழுக்கு சரத் பொன்சேகா வழங்கியுள்ள நேர்காணலில், தமிழ் பேசும் மக்கள் வாழும் சிறிலங்காவின் வடக்கில் தற்போதும் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் படைகளை அங்கிருந்து வெளியேற்றுதல் மற்றும் சிறிலங்கா இராணுவத்தினர் பொது நிர்வாகங்களில் தலையீடு செய்வதை தடுத்தல் போன்றவற்றுக்காக தமிழ் மக்கள் ஒன்றுகூட வேண்டும் என்ற விடயத்தை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளார்.

'பொது நிர்வாகங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் தலையீடு செய்ய முடியாதெனவும், வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் எனவும்' பொன்சேகா தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் ஜெனரல் மீண்டும் அரசியல் அரங்கில் நுழைவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதை ராஜபக்ச அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

தொலை நோக்கை அதிகம் கருத்தில் கொண்டு செயற்படும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பொன்சேகாவின் சிறைத் தண்டனையை மட்டுமே குறைத்து அவரை விடுதலை செய்துள்ளார்.

ஆனால் சரத் பொன்சேகா ஏற்கனவே மேற்கொண்ட பணிகளைத் தொடர்வதற்கான அனுமதியை வழங்கவில்லை.

இந்நிலையில், சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் கூட, தற்போதும் குற்றவாளியாகவே கருதப்படுகின்றார்.

சட்ட நடைமுறைகளின் படி, சரத் பொன்சேகா ஏழு ஆண்டுகள் வரை அதிபர் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ போட்டியிட முடியாது.

இதன்படி, 2016 இல் நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட முடியாது. இது முதலாவது விடயம்.

இரண்டாவதாக, சரத் பொன்சேகா அதுவரை காலமும், பெற்றுக் கொண்ட இராணுவ உயர் நிலைகள், பதக்கங்கள் மற்றும் இராணுவப் பட்டிகள் போன்றவற்றை மீளவும் பெறமுடியாது.

சரத் பொன்சேகாவால் பெற்றுக் கொள்ளப்பட்ட இராணுவ உயர் நிலைகள், பதக்கங்கள் மற்றும் இராணுவப் பட்டிகள் போன்றவற்றை ஆகஸ்ட் 2010ல் சிறிலங்கா இராணுவ நீதிமன்றின் கட்டளையின் படி பறிக்கப்பட்டன.

சரத் பொன்சேகா சிறிலங்கா இராணுவத்தில் பதவி வகித்த அதேவேளையில், அரசியலில் ஈடுபட்டதால் இவர் 'இராணுவச் சட்டத்தை' மீறியிருந்தார் என சிறிலங்கா இராணுவ நீதிமன்றம் குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில் சரத் பொன்சேகாவை இந்த நீதிமன்றம் 'அவமரியாதையுடன்' இராணுவ சேவையிலிருந்து பணி நீக்கம் செய்திருந்தது.

- பி.கே.பாலச்சந்திரன்

வழிமூலம் - Express News Service

http://www.puthinappalakai.com/view.php?20120527106276

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகாவுக்கு இருக்கிறது ஒரு முகம் தான். அது அவர் ஒரு சிங்கள பெளத்த பேரினவாதப் போர்க்குற்றவாளி என்ற முகம் தான். அதை மறைக்க.. மற்றும்.. சும்மா சும்மா சனத்தின்ர கவனத்தை திருப்ப.. அவருக்கு இரண்டு முகம்.. நாலு முகம்.. ஆறு முகம் என்று கதையளப்பதை றோ உளவாளிகள் கைவிட வேண்டும். றோ.. எம்மை அழித்தது போதும். எனி நாம் றோவை அழிக்கிற நிலை வரணும்...! சிந்திக்கவும் அதை நோக்கி செயற்படவும் வேண்டியவர்கள் தமிழ் மக்களே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இந்தக் செய்தி எழுதிய PK பாலச்சந்திரன் என்னும் --- மலையாளி இந்தியப் பயங்கரவாதிகளின் நீண்டகால முகவர்.

போர் நடந்த காலங்களில் "Hindustan Times" இன் இலங்கை நிருபராக பாலச்சந்திரன் நீண்டகாலம் இருந்து தமிழின விரோத செய்திகளை, இந்தியப் பயங்கரவாதிகள் ஆதரவான போலிச் செய்திகளை வெளியிட்டு வந்தவன். "Times of India" அதன் ஹிந்தி பதிப்புகள் மூலம் வட இந்தியக் காட்டுமிராண்டிகளின் தமிழின விரோதத்தை மேலும் வளர்த்ததில் இந்த மலையாளியின் பங்கு கணிசமானது.

கருணா பிளவின் போது முதன் முதலில் அவனை தொடர்புகொண்டு, புலிகளுக்கு எதிரான கேள்விகளைக் கேட்டு அவனது செவ்விகளை வழங்கியவனும் ---!

இப்போது "தினமணி" "Indian Express" மூலம் மீண்டும் இந்தியக் காட்டுமிராண்டிகளுக்கு வெள்ளையடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளான்.

புதினப்பலகை இத்தகைய செய்திகளை வெளியிடுவதில் தற்போது முன்னணியில் இருப்பதுவும் கவனிக்கத் தக்கது.

http://www.yarl.com/...14

Edited by நிழலி
அநாகரீகமாக எழுதப்பட்டது மட்டுறுத்தப்பட்டுள்ளது

பொன்சேக்கா யாழ்ப்பாணத்தில் ஆமியை வைத்து செய்த அநியாயங்களை கண்டு வியந்து இன அழிப்பை திட்டமிட்டு கச்சிதமாக நடத்தக்கூடிய காட்டு மிரண்டி பொசேக்காவேதான் என்றுதான் கோத்தாவால் தளபதியாக தெரிவு செய்யபட்டவர். இவர் தமிழர்களுக்கு புதியவர் அல்ல. இவர் தப்பின அன்றே தெரியும் கடவுள் வேறை பக்கம் என்று.

வெளியில் வந்தவுடன் மிச்ச தமிழரின் ரத்தத்தையும் தேடி வெளிக்கிட்டிருக்கிறார்.

மகிந்தா மனித உரிமை கேட்டு ஐ.நா.வரை போனவர். திரும்பி வந்து இன அழிப்பை தொடக்கியவர். அவருடன் சேர்ந்து அவருக்கு திட்டங்கள் போட்டு செயல் ஆறியவர் பொன்சேக்கா. இப்போ ரணில் மாதிரி எதிர்கட்சிகளுக்கு உதவவும் வெளிக்கிட்டிருக்கிறார். இவருக்கும் மகிந்தாவுக்கும்தான் தெரியும் எப்படி மனித உரிமைகளை வைத்து பதவிக்கு வருவதும், மனிதஅபிமான போர்கள் நடத்தி நிலையான அரசபதிகள் கைப்பற்றுவதும் என்று. இவர் எப்போதுமே தமிழரை(தமிழரின் உயிரை) விடுவிக்க படாத பாடுதான் பட்டுக்கொண்டுதிரிகிறார்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.