Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்திற்கு பணிந்து போகுமாறு தந்தை செல்வாவிடம் பெரியார் சொன்னாராம்: நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு திராவிட மாணவனால் இதில் கூற்றப்பட்டு இருப்பதை பொய் என சொல்லி நிரூபிக்க முடியுமா?

அப்படி என்றால் கிட்லருக்கு பின்னால் இருப்பவர்காளையும், ஏன் ராஜ்பக்சா, சோனியா, கருனாநிதிக்கு பின்னால் இருப்பவர்களையும் கூடத்தான் புன்படுத்த கூடாது.

ஒரு பெரிய கொள்ளைக் காறனுக்கு பின்னால் இருக்கின்ற கூட்டம் அவன் திருட்டு தேட்டத்தில் வயிறு வளர்கின்ற கூட்டம். இவர்கள் கொள்ளையர்களுடன் சேர்த்து தண்டிக்கப் பட வேண்டியவர்களே.

ஒரு பொது நன்மையின் அடையாளத்தால் ஒருவனை சேர்ந்த கூட்டம் அந்த வகையானது அல்ல!

பிராமணியத்தை அணைப்பதற்காக பெரியாரிசத்தை தூக்கி எறிவதானது எந்தப் பண்புடையவன் அறிவிற்கும் ஏற்புடையதாகாது!

பிரபாகரனுக்கு தோத்திரம் சொல்லிக் கொண்டு சிங்களவாதத்தை அணைப்பவன் கொண்டிருக்கின்ற கயமைத்தனத்தைப் போன்றதே இதுவும்!

பெரியாரிசத்தை வெறுப்பவனுக்கு இருக்கின்ற நியாயமான காரணி என்ன வென்றால் அவரது நாத்தீகவாதமே என்றால் தமிழ்நாட்டின் அநாத்தீகரகளில் பெரும்பான்மை அவரை நேசிப்பதற்கு என்ன காரணம்? ஆக

அவரது கொள்கைகளில் விளங்கும் பகுத்தறிவின் தேவை அனைவருக்கும் உடன்பாடாய் கிடப்பதே அதற்கு காரணம்! தவிர பிராமணியவாத்தின் மீது காட்டும் வெறுப்பால் பெரியாரிசம் கசப்பவர்களுக்கு நாம் பரிவே காட்ட வேண்டியதில்லை. ஏன் என்றால் அடுத்தவனை ஏய்க்கின்ற கொடுமையை வாழவிடு என்று கேட்பது கொடுமையிலும் கொடுமை அன்றோ!

  • Replies 165
  • Views 17.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் அவர்களும் மேலும் பல நாம் தமிழர் கட்சியின் தலைவர்கள் தொண்டர்கள் அனைவரும் பெரியாரின் சீடர்கள் என்றும் அவரை மதிப்பவர்களாகவும் இருக்கும்போது இது எப்படி வந்தது...??? :( :( :(

http://www.youtube.com/watch?v=OG2fqNM_Ryo

  • கருத்துக்கள உறவுகள்

நான் புரிந்து கொண்டவகையில், சீமான் திராவிடம் என்ற பதரில் இருந்து தமிழ் தேசியம் என்ற கொள்கைக்குள் மாறி போக ஈழத்தில் நடந்த அழிவுகள் காரணமாக இருக்கலாம். ஆரியம் அழித்தது, திராவிடம் துணை போனது என்ற கருத்தில் அவர் அக்காலத்தில் உடன்பட்டிருந்தார். அந்த வெறுப்பு, திராவிடத்தின் போலித்தன்மையை ஆராய வெளிக்கிட்டிருக்கலாம்.

1.நேதாஜிக்கும், ராமசாமிக்கும் நடந்த போட்டியின் விரிவு தான் ராமசாமி திராவிடம் என்ற ஏமாற்றுக் கொள்கையைத் தமிழனின் தலையில் சூட்டினார். பிற்பாடு அதையே அவர் காவ வேண்டி ஏற்பட்டது.

2. தமிழரில் பார்ப்பானி மட்டுமா ஆதிகக் சக்தியாக இருந்தான்?? எத்தனை பார்ப்பானி, தனக்கு அடிமையாக மக்களை வைத்திருந்தான். பண்ணையார், நாயக்கர்கள் தாங்கள் நடக்க பின்னலால் குடி பிடிக்க ஒரு அடிமை, பல்லக்குத் தூக்க அடிமை, வீட்டு வேலை செய்ய நூற்று அடிமைகள் என்று மக்களைப் போட்டுச் சித்திரவதை செய்யவில்லையா? இவர்கள் ஆதிக்க சக்தி இல்லையா? சொல்லப்போனால் பார்ப்பானி கூட இப்படி மக்களை இப்படிச் சித்திரவதை செய்யவில்லை. தாங்களும் நின்று அனுபவித்து விட்டு, ஒரு தலையில் பழி போடுகின்ற சாணக்கியம் இவர்களுக்குத் தான் உண்டு.

3. உண்மையில் ராமசாமி தமிழ் மக்களின் விடுவு பற்றிக் கதைத்திருந்தால் இப்படியான ஆதிக்க சக்திகளின் அடிமைத்தனத்தில் இருப்பது பற்றியும் கதைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களைக் காப்பாற்றி வைததுக் கொண்டார். ஏனென்றால் தன் சாதியும் குற்றவாளி ஆகுவதை அவர் விரும்பவில்லை.

4. எல்லோரும் சமமான மக்கள் என்ற கருத்தை அவர் ஏற்படுத்தியிருந்தால், இன்றைக்கும் சாதி என்ற பிரச்சனையை முடிவுகட்டி மக்களின் வளர்ச்சி எங்கோ போயிருக்கும். ஆனால் தமிழருக்குள் அந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து பேணவே இவர் முயன்றார்.இன்று வரைக்கும் சாதிப்பிரச்சனையில் எமக்கிடையே ஒரு தீர்வும் வரவில்லை. பார்ப்பானி பார்ப்பானியாகவே இருக்கின்றான். தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவானவே இருக்கின்றான். ஆனால் நமக்கிடையிலான பிரிவு மட்டும் பல மடங்கு அதிகமாக உள்ளது. அவர் தீர்வுக்காக உழைக்கவில்லை. எதிர்காலம் பற்றிய சிந்தனை எதுவுமே அந்த மனிதருக்குள் இருந்திருக்கவில்லை. பார்ப்பானியைத் துாற்றுதல் என்பது மட்டுமே அவர் கண்ணுக்குள் இருந்தது.

தேவன்இ

ராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கை என்பதில் 4 விடயங்களைத் தந்து, அது எவ்வாறு பகுத்தறிவாக இருக்கும் என்று சொல்லமுடியுமா?

நாம் தமிழரின் அறிக்கை மிகவும் பலவீனமான அனுமானக்கள்,வரலாறு,அறிவியல் அடிப்படைகளைக் கொண்டிருகிறது.அதனால் அதற்குள்ளயே பல முரண்பாடுகளைக் கொண்டதாக அமைந்து இருக்கிறது.அவற்றை கொன்ச்சம் ஆளமாகப் பார்ப்போம்.

//இம்மண்ணில் இதுவரை திராவிடம் என்ற பெயரில் பிற மொழியாளர்கள் இம்மண்ணை நயவஞ்சகமாக ஆண்ட, ஆளும், ஆளத்துடிக்கும் போக்கினை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.//

//அவ்வாறு வந்தேறிகளின் மினுக்கத்தில் மயக்கமுற்ற இரண்டகத் தமிழர்கள் தம் மொழியை மனுவாளர்களின் சமஸ்கிருதக் கலப்பிற்கு இடம் தந்ததால் பிறந்தவையே திராவிட மொழிகள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, மராட்டியம் முதலியன) அதனால் உண்டானவர்கள் திராவிடர்கள். திராவிடம் என்பது கலப்பு கூட்டு இனத்தினை அடையாளபடுத்துமேயன்றி, தனிப்பட்ட இனத்தினை குறிக்காது” (ப.எண் 9) என்பதை உரத்தக் குரலில் அறிவிக்கிறது//

மேலுள்ள இரண்டு மேற்கோள்களைப் பார்ப்போம்.கீழ் உள்ள பந்தி சொல்கிறது, ஆரியர் என்னும் வந்தேறிகளின் மினுக்கத்தில் மயக்கமுற்ற இரண்டகத் தமிழர்கள் தம் மொழியை மனுவாளர்களின் சமஸ்கிரதக் கலப்பில் இடம் தந்தால் உருவான மொழிகள் தெலுங்கு,கன்னடம் என்று சொல்கிறது.ஆகவே இனத்தால் அவர்களும் தமிழர்கள் என்கிறது. ஆனால் இக் கூட்டு இனம் வெவ்வேறு மொழிகள் பேசியதால் வேறு இனமாகி விட்டது எங்கிறது.அப்படியானல் ஒரு இனத்தின் அடையாளம் என்ன ? பேசும் மொழியா? நன்று அப்படியாயின், ஏன் கீழ் உள்ளவாறு சொல்கிறது?

//தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்று சொன்னால் திராவிடப் பற்றாளர்களுக்கு அது தந்தை பெரியார் மீதான எதிர்ப்பாக மாறி விடுகிறது. //

இங்கே தமிழர் என்பவர் தமிழைப் பேசுபவர் எனில் கருணானிதியும்,ஜெயலலிதாவும், வைகோவும் ,விஜயகாந்தும் தமிழர்கள் தானே?

எம்ஜிஆரும் தமிழர் தானே?

இங்கே தமிழர்கள் தானே தமிழகத்தை ஆண்டனர்?

//இம்மண்ணில் திராவிடர்களாக இருக்கும் பிறமொழியாளர்களையும் கட்சி “உங்களை பிறமொழியாளர்கள் என்று சொல்லி உங்களைப் பிறராக பார்க்க நாங்கள் விரும்பவில்லை. உங்களின் மூலத் தாய்மொழியாம் தமிழுக்கு திரும்பிட, உங்களுக்கு உள்ள முழு உரிமையை நாங்கள் ஏற்கிறோம். நீங்கள், நாங்களென ஏன் இனி இருக்க வேண்டும்? வாருங்கள் நாம் தமிழராய் ஒன்றாவோம்! உயர்வோம்!" (ப.எண் 50) என அழைக்கிறது.//

மூலத் தாய்மொழிக்குத் திரும்பி தமிழர்களாக மாறிய கருணானிதியையும்,எம்ஜிஆரையும்,செயலலிதாவையும்,வைகோவையும் நீங்கள் மாற்றான் தமிழகத்தை ஆள்கிறான் என்று சொல்லிக் கொண்டு எவ்வாறு நாம் தமிழராவோம் ஒன்றாவோம் என்று அழிப்பீர்கள்?

இது முரண்பாடானாதாக, பாசிசத் தனமானதாகத் தெரியவில்லையா?

மிகவும் தவறான முரண்பாடான `தேசியச்` சிந்தனைகள்.

இந்தத்திரி தமிழீழத்தமிழர்களாகிய எங்கள் இன்றைய சூழ்நிலையுடன் வைத்து ஆராயப்பட வேண்டுமா ..அல்லது தொப்பிள் கொடிகளாகிய தமிழ்நாட்டு தமிழர்களின் இன்றைய வாழ்வியல் சூழ்நிலையுடன் வைத்து ஆராயப்படவேண்டுமா ... அல்லது உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களின் இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் வைத்து ஆராயப்படவேண்டுமா.....ஏனனில் நாம் இங்கு வழங்கும் கருத்துக்கள் இந்த மூன்று நிலைகளின் அடிப்படையிலேயே இங்கு பிரதிபலிக்கும் என நான் நினைக்கிறேன்.ஏனனில் இன்று இந்த மூன்று நிலைகளிலுமுள்ள அடிப்படை ,வாழ்வியல் ,சமூக பிரச்சனைகள் வெவ்வேறு வடிவம் கொண்டது.ஆகவே ஒவ்வொரு நிலையில் உள்ளவர்கள் ஒவ்வொரு கோணத்திலேயே இந்தத்திரியின் கருப்பொருளை அணுகுவார்கள்.எனவும் நான் நினைக்கிறேன்.ஆகவே இங்கே பொதுவான ஒரு அடிப்படையான ஒரு முடிவைக்காண நாம் முயற்சிப்போமானால் விவாதங்கள் மட்டுமே மிஞ்சும். வரலாற்றின் திருப்பமாக ஒருங்கிணைந்து கொண்டிருக்கும் இந்த மூன்று நிலையினரிடமும் மீண்டும் ஒரு பெரிய இடை வெளியை உருவாக்கும் வாய்ப்பும் உண்டு. நான் இந்ததிரிக்கு கருத்தெழுதிய அனைத்து உறவுகளின் சிந்தனை வடிவங்களையும், அவர்களுக்குத்தெரிந்த தரவுகள் ,வரலாறுகள் அனைத்திற்கும் மதிப்பளிக்கிறேன். இன்று வரை எமக்காக குரல் கொடுத்து வரும் அனைத்து மதிப்புக்குரிய தமிழ்நாட்டு தலைவர்களையும் .எம் தொப்பிள் கொடிகளாகிய உறவுகளையும் மதிக்கிறேன்.ஆகவே எனது வேண்டுதல் என்னவென்றால் இந்ததிரியிநூடு எம் ஒற்றுமையின் கூரையை பலப்படுத்தவேண்டுமேன்பதே . மீண்டும் இடைவெளியை ஏற்படுத்தி முளாசி எறிவதற்கு எண்ணையை ஊற்ற கூடாதென்பதே....//நன்றி

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?

பெரியார் திங்கள், 28 மே 2012 20:43

emailButton.pngprintButton.pngpdf_button.png

பயனாளர் தரப்படுத்தல்:rating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.png / 4

குறைந்தஅதி சிறந்த

தோழர்களே!

தலைவர் அவர்கள் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந்நியாசம் இருக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் மற்றும் பல சொற்களோடு அறிமுகப்படுத்தினார்கள்.

முதலில் நான் அவரது பாராட்டுதலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

தமிழ் பாஷை

நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன். நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமேயாகும். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்தவன். என்னை என் வீட்டார் படிக்க வைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டாமல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந்தேன். காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல்லாம் பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். அக் காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள். வீட்டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ்வொரு மாணவனும் எச்சில் துப்பி விட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டுமென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார். அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும். அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழையறக் கூட எழுத முடியாது என்பது தான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத்துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

பொதுவாகவே பள்ளிக் கூடங்களிலும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்ப்பந்தமுண்டு. இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது. அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப் பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது. தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரியதரிசி சொன்னார். ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேசவேண்டிய வனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டியவனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும் போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும்படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது. மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகி விடுவார்களே என்று பயப்பட வேண்டியவனாய் இருக்கிறபடியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசுவதைக் கொண்டு திருப்தி அடையுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்

தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபாரபற்று என்று தலைவர் சொன்னார். அதற்காகவே பாடுபடுகிறேன் என்றும் சொன்னார்.

தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை. அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ, அகத்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்று கிடையாது. அது மூடப்பற்று - மூட பக்தியே ஆகும். குணத்திற்காகவும், அக் குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.

எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன். மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார்களுடையது என்பதற்காக அல்ல.

அன்பு என்பது...

உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய், தகப்பன் முதலாகிய எல்லாரிடத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும், பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன்களும்தான் ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும் இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால் புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும். புருஷன் செத்தால் மனைவிக்கு சாகும்வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக்கும். மறுவிவாகம் செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில் துக்கம் ஆறி, மறந்துபோகும். தகப்பனுக்கும் - பிள்ளைக்கும் கூட பிறந்த உடன் பிள்ளை செத்துவிட்டால் பிள்ளையைப் பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம் இருக்காது. 90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று, மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும் என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம் இருக்காது. தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை இறந்துபோனால் படுகிற துக்கத்தின் அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசிகளில் பெண்பிள்ளை இறந்து போனால் படுகிற துக்க அளவு ஆண் பிள்ளை இறந்து போனால் படுவதில்லை. மற்றபடி எந்த விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில் மகிழ்ச்சியோ, இன்பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில் ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுபவிப்பதும், அது இல்லாதவிடத்தில் அவ்வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.

அதுபோல்தான் நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்ட மேற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத்துகிறேன்.

அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல் தான் எதிர்க்கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.

நாடும் - காலமும்

ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒருவித பழக்க வழக்கமும், அவைகளிடத்தில் சில விருப்பு வெறுப்பும் இருந்து வருவதுடன் விருப்பமானதைப் பெருக்கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப்பதுமுண்டு. ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.

ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கலாம். ஆதலால், அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழையது - புதியது என்பதற்காகவும் எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக்காக அவன் போராடவேண்டியவனே ஆவான். மற்ற நாட்டு பாஷை எதினாலாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.

இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள். இங்கிலீஷால் தீமை இல்லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன். இது என் அபிப்பிராய மாத்திரமல்ல. இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னியில் போற்றப்படுகிறார்கள். ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலன்தான் காரணம் என்பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத் தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம். ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன்னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக்கூடிய கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன். ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.

பழங்காலம்

பழம் பெரியோர்கள், முன்னோர்கள் செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற்காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும். யார் என்ன சொன்ன போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர்களைவிட, பழம் பெரியோர்களைவிட, நாம் முன்னேற்றமடைந்தவர்களே ஆவோம். ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத சாதனங்களும், சுற்றுச்சார்புகளும் இன்று நமக்கு இருந்துவருகின்றன. இதன் மூலம் நாம் எவ்வளவோ முற்போக்கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும் அடைந்திருக்கிறோம். இனியும் எவ்வளவோ காரியங்களில் நம் பின் சந்ததியார்கள் அடையப் போகிறார்கள்.

முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்ததாகச் சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக மக்கள் அடைந்து வருகிறார்கள். இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான் மூடர்கள் என்று குறைகூறவில்லை. அக்கால மக்களுக்கு இருந்த வசதியும், சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந்தது. இக்கால மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு மேம்பட்டதும் செய்ய முடிகிறது என்கிறேன்.

இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள் இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமையர்கள் கேட்கலாம். பழங்காலத்தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச் சார்புகளும் இருந்திருக்கலாம். ஆனால், அவைகளும், அவற்றால் ஏற்பட்ட பலன்களும் உடையனவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்கலாம்; பூகம்பத்தால் மறைந்தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல் அழித்திருக்கலாம். இப்போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத்திற்கு எட்டிய பழமை அ,ஆ,வில் இருந்து தான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆகையால், பெரும்பான்மையான விஷயங்கள் பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். இவற்றையெல்லாம் மாணக்கர்களாகிய உங்களுக்குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர்களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து முடிவுக்கு வர வேண்டும்.

தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக்காகப் பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள். நம் தாய் நமக்குக் கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது. நாம் பயன்படுத்துவதுமில்லை. உதாரணமாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற்றுக்கு சோச்சி என்றும், படுத்துக்கொள்வதற்கு சாச்சி என்றும் சொல்லிக் கொடுத்தார்கள். இன்று நாம் அவற்றையா பயன்படுத்துகிறோம்? அது போலவே பாஷைகள் காலத்துக்குத் தக்கபடி, பருவத்திற்குத் தக்கபடி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும். தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத்தில் இல்லாத பல காரியங்கள் அரசியல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரணமாகவும் இப்போது ஏற்பட்டு, அவற்றிற்காக பல அந்நிய பாஷை வார்த்தைகள் இன்று பழக்கத்தில் இருக்கின்றன. இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால் சொல்லிவிட முடியுமா? அவசியமானவற்றை வைத்துக்கொள்ள வேண்டும். அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவைகளைப்பற்றிக் கவலை இல்லாமல் இருந்து விடலாம்.

கேடு பயப்பவைகளை வார்த்தைகளானாலும், கலைகளானாலும், இலக்கியங்களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதேயாகும். இந்தக் கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை எதிர்ப்பதும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர்களே! இவ்வளவுதான் இந்த இடத்தில் தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று கருதுகிறேன். இதற்கு மேற்பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல என்று கருதி இவ்வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.

-----------

21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு-”குடிஅரசு” - 06.08.1939

அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19930

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முக புத்தகம். 2.36 நிமிடத்தில் M G R யும் போட்டு தாக்கியிருக்கிறார். அப்ப அவரும் கெட்டவர்.மறுமலர்ச்சி திராவிட வை கோவை என்ன செய்யபோறீங்க அவரு தியாகியா துரோகியா??

379331_3900475158061_1754877163_n.jpg

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் என்ற மாயைக் கருத்தியலால் அடையாளம் அழிந்து.. இன இருப்பு அழிந்து போனவர்கள்.. அதிகம்.. தமிழர்களே அன்றி வேறு யாரும் அல்ல..! ஆரியத்துக்கு ஒப்ப திராவிடமும் தமிழரை அழித்தே வந்துள்ளது. ராமசாமி காலத்தில் வாழ்ந்த தனித் தமிழ்நாடு கேட்ட தலைவர்களே ராமசாமியின் திராவிட வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி விட்டுத்தான் சென்றுள்ளனர். இருந்தாலும்.. சினிமா மோகத்துள்.. தமிழர்களைத் தள்ளி அதனூடு திராவிடமும் பார்பர்ணியமும் தமிழர்களை அடிமைப்படுத்தி வந்துள்ளன என்பது வெள்ளிடை மலை..!

எம் ஜி ஆர்.. தமிழகத்தில் இருந்த அன்றைய மக்கள் எழுச்சிக்கு ஏற்ப.. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்தார். உதவி நின்றார். அதே எம் ஜி ஆரின் கட்சி தான் பின்னர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர தீர்மானம் இயற்றியதோடு.. அன்னை பார்வதி அம்மாவுக்கு மனிதாபிமானம் இன்றி மருத்துவ சிகிச்சைக்கு கூட இடமளிக்காத வகைக்கு சட்டம் இயற்றி வைத்து நடந்து கொள்ளச் செய்தது..!

எம் ஜி ஆர்.. முழுமையான ஈழ விசுவாசியாக இருந்து செயற்பட்டார் என்பது ஒன்றும் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தல்ல. எம் ஜி ஆர் ஈழத்தமிழ் போராட்டம் மீது அக்கறை செய்ய அன்றைய இந்திராகாந்தி அம்மையாரின் இந்திய மத்திய அரசின் வெளிவிவகாரத் தேவைகளும் உள்ளூர் மக்கள் உணர்வுக் களமும் அதிகம் செல்வாக்குச் செய்தன. அதனை விடுதலைப்புலிகள் உட்பட போராட்ட அமைப்புக்கள் பயன்படுத்திக் கொண்டன. அதற்காக எம் ஜி ஆர்.. தமிழீழத்துக்காக எல்லாம் செய்தார் என்பது எவ்வளவு தூரம் உண்மை என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.

வை. கோ.. போன்றவர்கள்.. திராவிடக் கொள்கை அரசியலாக்கப்பட்டுள்ள களத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால்.. திராவிடத்தை முன்னிறுத்தி.. மக்கள் முன் வருகிறார்களே தவிர.. தமிழகத்தில் தமிழன் நாட்டை ஆளும் நிலை வந்தால் வை.கோ போன்றவர்கள் நிச்சயம் அந்த நிலையை வரவேற்கவே செய்வார்கள். காரணம்.. வை.கோ.. தீவிர திராவிட வாதியல்ல. அவர் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப திராவிடம் சார்ந்திருக்கிறாரே தவிர.. தமிழகத்தில் தமிழ் தேசிய உணர்வு மேலோங்கும் போது நிச்சயம் வை.கோ போன்றவர்கள் அதனை தடுக்கும் அரசியல் செய்ய முன்வரமாட்டார்கள் என்பதை நம்பலாம்.

ஆனால் கருணாநிதியும்.. ஜெயலலிதாவும் நிச்சயம் வை.கோ போல நடந்து கொள்ளமாட்டார்கள். நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ் தேசியத்தை வளர்க்கும் கட்சிகளுக்கு நாளை தமிழகத்தில் நக்சல் பட்டம் வழங்கப்பட்டு அவை தேச விரோத கட்சிகளாக்கப்பட்டு தடுக்கப்பட்டால் கூட அது திராவிடத்தின் தமிழின அழிப்பின் கூறாகவே தான் இருக்குமே தவிர.. திராவிடத்தினூடு.. தமிழர்களின் உண்மையான நலனோ.. ஆட்சியுரிமையோ.. வாழ்வுரிமையோ பாதுகாக்கப்பட வெகு குறைந்த வாய்ப்பே உள்ளது..!

இந்த நிலையில் தமிழ் தேசிய உணர்வூட்டப்பட்ட தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்படும் நிலை வருதல் என்பது மட்டுமே ஈழத்திலும்..தமிழகத்திலும்.. சிங்கள ஆரியத்தாலும்.. இந்திய ஆரியத்தாலும்.. திராவிடத்தாலும் அடிமைப்படுத்தப்பட்டுள்ள ஆண்ட பரம்பரையான தமிழ் மக்கள் தங்கள் வாழ்வுரிமையை ஆட்சியுரிமையை தாமே தீர்மானிக்கும் நிலைக்கு வருவதை தீர்மானிக்கும்.

இதற்கு ராமசாமிப் பெரியார் என்ற அரசியல் திராவிட மாயாவியினால்.. தமிழர்களிடம் மட்டும் திணிக்கப்பட்ட மாயை திராவிடம் அழிக்கப்பட வேண்டும். வேரறுக்கப்பட வேண்டும். அதற்காக அவர் முன்மொழிந்த தமிழ் சீர்த்திருத்தம்.. மூடநம்பிக்கைக்கு.. சாதியத்துக்கு எதிரான கருத்துக்களை வரவேற்கக் கூடாது என்று இல்லை. அதனையும் அவரின் திராவிட தமிழின அழிப்புக் கொள்கையையும் சிலர் வேறு பிரித்துப் பார்க்க தயங்குகின்றனர். அந்தளவுக்கு அவர்கள் பெரியார் விசுவாசத்தை வளர்த்து அதனூடு தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க முயல்கின்றனர்.

இந்த நிலை மாறி... பெரியாரின் நியாயமான சமூகக் கருத்துக்கள் புறம்பாகவும்.. தமிழினத்தை வேரறுக்கும்.. திராவிட கருத்துக்கள் புறம்பாகவும் பிரிக்கப்பட்டு.. பெரியார் என்பவரின் உண்மை முகம் தமிழர்களுக்கு இனங்காணட்டப்பட வேண்டும். அத்தோடு.. தமிழ் தேசிய உணர்வுள்ள தமிழர்கள் தமிழர்களை ஆண்டால் தான்.... அதுவே உலகத் தமிழினத்தின் விடிவுக்கும்.. இருப்புக்கும் சரியான அத்திவாரத்தை அளிக்க முடியும். :icon_idea:

Edited by nedukkalapoovan

யார் தமிழர், யார் தமிழர் அல்லாதவர் என்பதை முதலில் நாம் தமிழர் வரையறுக்கட்டும்.

தமிழ் நாட்டின் வரலாறு அறியாத பாலகர்களும், இனத்துவம், அடையாள அரசியல் என்றால் என்ன என்பதை அறியாதவர்களும் உளறிக் கொட்டி தமது இந்து மத வெறியின் பாற்பட்ட பெரியார் மீதான துவேசத்ததைக் கொட்டாமல்.

மேற்கூறிய முரண்பாட்டைத் தெளிவு படுதிய பின் வேறு விடய்ங்கள் பற்றிப் பேசலாம்.

திராவிடம் என்பது இன அடையாளம் கிடையாது, அதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை, அறிவியல் அடிப்படை அற்றது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆரியம் X திராவிடம் என்று தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இதில் எது சரியானது? இதை விளக்கமுடியுமா?

திராவிடம் என்ற கருத்தாக்கம் உருவாவதற்கு அன்றைக்கு இருந்த அடிப்படையான காரணங்களில் ஒன்று காலனி ஆட்சியிலே ஏற்பட்ட சமூக மாற்றம். அதைவிட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மாநிலங்களுக்கு இடையே அடிப்படையிலே கலாச்சார ஒற்றுமைக் கூறுகள் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. வட இந்தியர்கள் இந்த நாலு மாநிலத்தவர்களையும் ஒன்றாக 'மதராஸி' என்று குறிப்பிடுவது தற்செயலானதல்ல. தோற்ற அமைப்பில் இருக்கும் ஒற்றுமைதான் இவர்களை ஒரே இனமாக மற்றவர்களைப் பார்க்க வைக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்த சமூகத்தில் எந்த ஜாதியாக இருந்தாலும் சில அடிப்படையான கலாச்சார ஒற்றுமைகள் உண்டு. எடுத்துக்காட்டாக தாய்மாமன் மரியாதை என்பது இன்றும் நான்கு மாநிலங்களிலும் கடுமையாய் இருக்கிறது. ஆண்கள் மீசை வைத்துக் கொள்வது இந்த நான்கு மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்படுகிறது. அதே மாதிரி இறுதி மரியாதை, சடங்கியல் தகுதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பூர்வீகத்திலே அனைவரும் ஒரு மொழி பேசுபவர்களாக இருந்தார்கள் என்று கால்டுவெல் ஏற்கனவே நிருபித்து இருக்கிறார். அது உண்மை தான். ஒரு இனத்துக்காரர்களாய் இருந்தோம். ஏன் பிரிந்தோம் என்று தெரியவில்லை. வரலாற்றுத் தொடர்ச்சியும், காரணங்களும் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இக்கருத்தை அரசியல் ரீதியாகவும் (Socail Political phenomenon) முன் வைத்தார்கள். அரசியல் ரீதியாக தோற்றுப்போய்விட்டதால் திராவிடக் கருத்தியலே தோற்றுப் போனது என்று சொல்ல முடியாது.

ஆரியர் என்பது ஒரு இனமா அல்லது கூட்டமைப்பா?

ஆரியர் என்பது இனம் தான். குறிப்பாக இந்தோ-‍ஆரியர் என்று இனமே இருக்கிறது. ஜெர்மனிக்கும் சமஸ்கிருதத்துக்கும் அடிப்படையிலே சில வேர்ச் சொற்களைக் கண்டு கொண்டதன் காரணமாகத்தான் மேக்ஸ்முல்லர் இந்தியாவை தன் பூர்வதேசம் என்று நினைக்கிறார். ‘ஜா’ என்ற வேர்ச்சொல் ஆங்கிலத்தில் ‘ஜி’ என்றும், சமஸ்கிருதத்தில் ஜாதி என்றும் இருக்கிறது. ஆரியர் உயர்வு வாதத்திற்கு அடித்தளம் இட்டவர் மேக்ஸ்முல்லர். அவர்தான் ஆரியர் இனம் ஆளப்பிறந்த இனம் என்று கூறினார். கீழைநாட்டு வேத நூல்களை இது தொடர்பாக மொழிபெயர்த்தார்.

ஆரிய இனத்திற்கு சில அடிப்படை மரபுகள் உண்டு. ஆரிய இனத்திற்கும் நமக்கும் வேறுபாடுகள் உண்டு. நாம் வெப்ப மண்டலத்திலே வாழ்கிறவர்கள். தமிழர்களும், மலையாளிகளும் நீரைக் கொண்டாடுவார்கள். நீர் சார்ந்த சடங்குகள், புனிதங்கள் நமக்கு அதிகம். கங்கைச் சமவெளியில் வாழ்ந்த ஆரியர்களுக்கு நெருப்பு சார்ந்த சடங்குகள் அதிகம். அவர்கள் தந்தை வழிச்சமூகம், நாம் தாய்வழிச் சமூகம். அவர்கள் கிராமப்புற நாகரிகம், நாம் நகர நாகரிகம்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19877

அன்று மனுதர்மவாதிகள்; இன்று தமிழ்த்தேசியவாதிகள்!

அதிஅசுரன் சனி, 22 ஜனவரி 2011 19:51

emailButton.pngprintButton.pngpdf_button.png

பயனாளர் தரப்படுத்தல்:rating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.pngrating_star_blank.png / 14

குறைந்தஅதி சிறந்த

பெரியார் மீதும், திராவிடம் என்ற கருத்தியல் மீதும் பெரியார் காலம் முதல் இந்தக்காலம் வரை தமிழ்த் தேசியமாயைக்காரர்கள் அனைவராலும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானவைகளில் சில.

“பலநூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்து தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் சக்கிலியர், நாயக்கர், நாயுடு, கவுடர், ஒக்கலிகர் போன்ற சில ஜாதியினர் அந்நியர்கள். சுத்தத் தமிழர்கள் அல்ல. இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் பெரியாரே ஒரு தெலுங்கர், பெரியார் ஒரு கன்னடர்.”

“தமிழ்நாட்டின் மண்ணுரிமைக்காக பெரியார் போராடவில்லை. மொழிவாரி மாநிலப் பிரிவினையில் தமிழ்நாட்டின் தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி போன்ற பகுதிகள் கேரளாவுடன் சேர்க்கப்பட்டபோதும், திருத்தணி ஆந்திராவுடன் போனபோதும் பெரியார் அதை எதிர்த்துப் போராடவில்லை.”

பிறப்பை அடிப்படையாக வைத்து மனித இனத்தைப் பிரிப்பதும், அந்தப் பிரிவினையிலும் உயர்வு, தாழ்வு கற்பிப்பதும், அந்த ஏற்றத்தாழ்வை இன்றளவும் நடைமுறைப்படுத்துவதும் மனுதர்மத்தின் பணி; இந்து மதத்தின் பணி. அந்த வர்ணாஸ்ரம பாணியிலேயே, பார்ப்பன முறையிலேயே நமது தமிழ்த்தேசிய மாயைக்காரர்களும் ஒடுக்கப்பட்ட மக்களை பல கூறுகளாகப் பிரித்து வருகிறார்கள்.

மனித இனத்தை பிரித்துப் பார்க்கவேண்டும் என முடிவு செய்துவிட்டால் பல்வேறு வகைகளில் பிரிக்கலாம். உடலின் நிறத்தை வைத்துப் பிரிக்கலாம். அதற்குள்ளேயே உயரத்தை வைத்து ஆறடி உயரமுள்ளவர்கள் - ஆறடிக்கும் குறைவான உயரமுள்ளவர்கள் என்று பிரிக்கலாம், அதற்குள்ளேயும் உடல் பருமனை அடிப்படையாக குண்டானவர்கள் - ஒல்லியானவர்கள் என்று பிரிக்கலாம். வேகமாக ஓடுபவர்கள் - ஓட முடியாதவர்கள் என்று பிரிக்கலாம், ஆனால் எதற்காகப் பிரித்துப் பார்க்க வேண்டும்? என்ன காரணத்துக்காகப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது அடிப்படையான கேள்வி.

மனித குலத்தின் ஆதிக்கவாதிகள் - அந்த ஆதிக்கவாதிகளால் சுரண்டப்படுகிறவர்கள் என்று இரண்டு பிரிவினை அவசியம் தேவை. ஆதிக்கவாதிகளை அடையாளம் கண்டு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக இது பயன்படும். அப்படியில்லாமல் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் இனத்திற்குள்ளேயே நுணுக்கி நுணுக்கி பிரித்துப் பார்ப்பது, பேசுவது யாருக்குப் பயன்படும்? ஆதிக்கவாதிக்குத்தானே பயன்படும். இந்துமதத்தால், மனுதர்மத்தால், இந்திய தேசியத்தால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்குள்ளேயே பிறப்பின் அடிப்படையில் பிரிவினைகளை உண்டாக்குவதும், அத்தகைய பிரிவினைகளையே பெரிதாக்கிக் காட்டுவதும் முக்கிய எதிரியான, ஆதிக்கவாதிகளான பார்ப்பனர்களைக் காப்பாற்றுவதுமான காரியங்களைத் தொடர்ந்து பலகாலமாக தமிழ்த்தேசிய மாயைக்காரர்கள் செய்துவருகிறார்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல்வேறு காரணங்களால் இங்கு வந்து தமிழ்நாட்டுக்குள்ளேயே பெண் எடுப்பது, பெண் கொடுப்பது போன்ற மணஉறவுகளை வைத்துக்கொண்டு, தம் வருமானத்தையும் சொத்துக்களையும் தமிழ்நாட்டுக்குள்ளேயே வைத்துள்ளவர்களும், ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ எந்த தொடர்பும் இல்லாமல், வேர்கள் இல்லாமல், தமிழர்களுக்கு உள்ள தீண்டாமைக் கொடுமைகளை தாமும் ஏற்று, தமிழர்களுக்குள்ள ஜாதி இழிவுகளைத் தாமும் சுமந்து, தமிழர்களாகவே வாழ்பவர்களுமான இலட்சக்கணக்கான மக்களை பிறப்பு பார்த்து, ஜாதி பார்த்து அவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் தமிழ்த் தேசியர்கள். அவர்களை அந்நியர்கள் என்றும் சுத்தத்தமிழர்கள் அல்ல என்றும் அறிவிக்கிறார்கள்.

ஆனால் உண்மையிலேயே ஆந்திராவில் வாழ்ந்துவரும் உண்மையான தெலுங்கு இனத்துக்கும், நேரடியான மலையாள இனத்துக்கும், நேரடியான கன்னட இனத்துக்கும் பிறந்த மன்னர்களையும் பார்ப்பனர்களையும் தமிழர்கள் என்றும், தமிழ்ப்பேரரசன் என்றும் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள். தாய்லாந்துக்குப் போய் தமிழை முற்றிலும் மறந்து உடன் கொண்டுசென்ற தேவாரம், திருவாசகத்தை வைத்து இன்றுவரை இராஜகுருவாகவே வாழ்ந்துவரும் பார்ப்பனர்கள் தமிழர்களாம்.

தெலுங்கு பரம்பரையில் பிறந்து, தெலுங்கர்களால் வளர்த்து ஆளாக்கப்பட்டு, மலையாளப் பெண்ணை மணந்து, தெலுங்கர்களுக்காக அண்டை நாட்டினருடன் போராடி தெலுங்கு தேசங்களை உருவாக்கி அவர்களுக்கே கொடுத்து, உடன்பிறந்த சகோதரியையும், தனது மகளையும் ஆந்திர தெலுங்கு தேசத்து ராஜாக்களுக்கு மணம்முடித்துக் கொடுத்து, கொள்வினை கொடுப்பினைகளை அந்நிய நாட்டவருடன் மட்டுமே செய்து கொண்ட இராஜராஜன் தமிழனாம்! தமிழ்ப் பேரரசனாம்! இராஜராஜனை ஒரு தமிழன் என்று சொல்வதைப் போன்ற மானக்கேடு தமிழனுக்கு இனி எப்போதும் நேரக்கூடாது.

தமிழ்த்தேசியர்களின் சுத்த இரத்த அளவுகோலை - சுத்தத் தமிழர்களைக் கண்டறியும் சோதனையை வரலாற்று அடிப்படையில் அவர்களுக்கே திருப்பிவிட்டுப் பார்த்தால் இங்கு இன்றைய நிலையில் சுத்தத் தமிழன் என்று யாரும் இல்லை என்ற உண்மையைக் கண்டறியலாம். தமிழ்த் தேசியர்களின் பிரிவினையில் உள்ள நேர்மையற்ற தன்மையையும் அறியலாம்.

தமிழன் என்றால் யார்? தமிழன் என்பதற்கு வரையறை என்ன?

முருகன், விநாயகன், இராமன் போன்ற பார்ப்பனக் கடவுளர்களுக்கு அடுத்தபடியாக மிகக்கடுமையாகப் பார்ப்பனர்களுக்குப் பயன்பட்டவன் இராஜஇராஜசோழன். அந்த இராஜராஜன் தான் தற்போது தமிழ்த்தேசியர்களின் கனவுநாயகன். எனவே முதலில் அவனது பரம்பரையை தமிழ்த்தேசியர்களின் பாணியிலேயே பிறப்புச் சோதனைக்கு உட்படுத்துவோம்.

திணைவழிப்பட்ட நாகரீக காலத்திற்குப் பிறகு அரசுகள் தோன்றியபிறகு சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையில் கணக்கிலடங்காத போர்கள் நடைபெற்றன. மூன்றுபுறமும் கடலால் சூழப்பட்டிருந்த நிலம் முழுதும் தமிழ் மன்னர்களின் ஆட்சிதான் நிலவியது. படையெடுப்புகளாலும், போர்களாலும் இம்மூன்று அரசுகளுக்குள்ளும், அந்த அரசுகளில் வாழ்ந்த மக்களுக்குள்ளும் இரத்தக்கலப்பு நடந்தே இருக்கும். போர்களால் இரத்தக்கலப்பு நடைபெறுவது உலகெங்கிலும் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சங்க காலத்தில் மூன்று மன்னர்களும் தமிழ்பேசியவர்களே. ஆனால் அதன் பிறகு மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் தோன்றியபிறகு, தெலுங்கு, கன்னட, மராட்டிய அரசுகள் தோன்றிய பிறகு நடந்த ஆதாரப்பூர்வமான இரத்தக்கலப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

rajaraja_chozhan.jpgகி.பி. 846 முதல் கி.பி 1279 வரையிலான பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் “பிற்காலச்சோழர் சரித்திரம்” என்னும் பெயரில் மூன்று பாகங்களாக எழுதியுள்ளார். அமிழ்தம் பதிப்பகம் வெளியிட்ட அந்நூலில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சில செய்திகள்.

பிற்காலச் சோழப் பேரரசுக்கு வித்திட்ட விஜயாலயச் சோழனை அடுத்து கி.பி. 871 முதல் கி.பி 906 வரை சோழநாட்டை ஆண்ட முதல் ஆதித்தசோழனே வேற்றுமொழி இனத்தவருடன் இரத்தக்கலப்பை தொடங்கிவிட்டான். தற்போதைய மகாராஷ்ட்ராவிற்கும் கர்நாடகாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் கி.பி. 890 முதல் கி.பி. 915 வரை அரசாண்ட இராஷ்ட்ரகூட மன்னனான இரண்டாம் கிருஷ்ணதேவனின் மகளான இளங்கோப்பிச்சிதான் முதல் ஆதித்தசோழனின் பட்டத்தரசி. பிற்காலச்சோழப் பேரரசில் நடந்த முதல் மாற்று இனக்கலப்பு இது. சோழனுக்கும் இராஷ்ட்டிரகூடனுக்கும் கலந்து பிறந்த முதல் பராந்தக சோழன் கி.பி. 907 முதல் கி.பி. 953 வரை சோழ நாட்டை ஆண்டான்.

இராஷ்ட்ரகூடர் - தமிழர் கலப்பில் பிறந்த முதல் பராந்தகசோழனின் பட்டத்தரசி யார் தெரியுமா? மலையாள மொழி உருவானதற்குப் பிந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த சேரநாட்டு இளவரசி கோக்கிழானடி. பராந்தகனின் மற்றொரு அரசியும் கேரளாவைச் சேர்ந்தவள்தாள். இப்படி இராஷ்ட்டிரகூடர் - தமிழர் - மலையாளி கூட்டுக்கலப்பில் பராந்தகனுக்குப் பிறந்த மகள் வீரமாதேவி மீண்டும் இராஷ்ட்டிரகூட இளவரசன் நான்காம் கோவிந்தனுக்கு மனைவியாகிறாள்.

பராந்தகனுக்குப் பிறகு கி.பி.953 முதல் கி.பி.957 வரை சோழநாட்டை பராந்தகனின் மகன் கண்டராதித்த சோழன் ஆண்டான். அவனும் தன் பங்குக்கு ஒரு வேற்றுஇன இரத்தக்கலப்பை உருவாக்கினான். கண்டராதித்தனின் பட்டத்தரசியும் ஒரு மலையாளம் பேசும் கேரளப் பெண். அவள் பெயர் செம்பியன் மாதேவி. கண்டராதித்த சோழனுக்குப் பிறகு அவனது தம்பி அரிஞ்சயசோழன் பட்டத்துக்கு வருகிறான்.

இந்த அரிஞ்சய சோழன்தான் இன்றைய தமிழ்த்தேசியர்கள் சிலரின் கனவுநாயகனான, இலட்சியப் பேரரசனான இராஜராஜனின் பாட்டனாவான். இராஜராஜனின் பாட்டனான அரிஞ்சயனே இராஷ்ட்ரகூடர் - தமிழர் - மலையாளிகளின் கூட்டணியில் கருவானவன்தான். அந்தக் கூட்டணி போதாதென்று அரிஞ்சயனும் தன் கடைமைக்காக தானும் ஒரு புது இனத்தோடு இரத்தக்கலப்பை உருவாக்குகிறான். ஆம், அரிஞ்சய சோழனின் பட்டத்தரசி வீமன்குந்தவை என்பவள் தெலுங்கு மொழி பேசிய ஆந்திரப் பெண் ஆவாள். அரிஞ்சயனின் மற்றொரு மனைவி கோதைப்பிராட்டி ஒரு மலையாளப் பெண். மற்றொரு துணைவியான கல்யாணி வைதும்பராயன் என்ற தெலுங்கு மன்னனின் மகள்.

ஆக, இராஜராஜனின் தந்தை இரண்டாம் பராந்தக சோழன் என்ற சுந்தரசோழனே தமிழர் - மலையாளி - தெலுங்கர் - இராஷ்ட்டிரகூடர் கலப்பில், நான்கு இனக்கூட்டணியில் கருவானவன் தான். இந்த சுந்தர சோழனுக்கு மனைவியும், துணைவியுமாக பராந்தகன் தேவியம்மன், வானவன் மாதேவி என இருவர் இருந்தனர். பராந்தகன் தேவி வழக்கம்போல ஒரு மலையாளப்பெண். இராஜராஜனின் தாயார் வானவன் மாதேவி வைதும்பர்கள் என்னும் தெலுங்கர்குலப் பெண். இராஜராஜன் தன்னுடன் பிறந்த சகோதரி குந்தவையை கீழைச்சாளுக்கியனான வல்லவரையன் வந்தியத்தேவன் என்ற ஆந்திர இளைஞனுக்குத்தான் மணம்முடித்தான். அதோடு தனது மகள் குந்தவையையும் சாளுக்கியனான விமலாதித்தன் என்ற ஆந்திர இளைஞனுக்குத்தான் மணம்முடித்துக் கொடுத்துள்ளான். குந்தவை என்ற பெயரே தமிழச்சிகள் வைத்துக் கொள்ளும் பெயர் அல்ல என்று சதாசிவப் பண்டாரத்தார் விளக்குகிறார்.

விஜயாலயச் சோழனை அடுத்து பட்டத்துக்கு வந்த முதல் பராந்தகசோழன் காலம் முதல் இராஜராஜன் காலம் வரை ஒவ்வொரு சோழனும் தான் பெண்கொடுத்த, பெண் எடுத்த சாளுக்கிய, இராஷ்ட்ரகூட, மலையாள, கன்னட அரசுகளுக்காக பல்வேறு போர்களை தமிழ்ப்படையினரைக் கொண்டு நடத்தியுள்ளனர். மேலைச் சாளுக்கியர்களுக்கும், கீழைச்சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த போர்கள், இராஷ்ட்டிர கூடர்களுக்கும், சாளுக்கியர்களுக்குமிடையே நடந்த போர்கள், கங்கர்களுக்கும் வாணர்களுக்கும் நடந்த போர்கள், மகாராஷ்ட்ராவினருக்கும், ஆந்திரர்களுக்குமிடையிலான போர்கள் என பல்வேறு வகைப்பட்ட போர்களுக்கு சோழப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்தந்த அரசுகளோடு சோழர்கள் கொண்ட மண உறவுகள் காரணமாக அவர்களுக்கு ஆதரவாக தெலுங்கர்களின் வெற்றிக்காகவும், சில சமயம் கன்னடர்களின் வெற்றிக்காகவும், சில சமயம் மராட்டியர்களின் வெற்றிக்காகவும், சில சமயம் மலையாளிகளின் வெற்றிக்காகவும் சோழர்களால் குறிப்பாக இராஜராஜ சோழனாலும் தமிழர்கள், தமிழ்ப்படைவீரர்கள் இலட்சக்கணக்கில் பலியாக்கப்பட்டுள்ளனர்.

எல்லாவற்றையும்விட மிகக் கொடுமையான வரலாறுகளும் மூவேந்தர்கள் காலத்தில் நடந்துள்ளன. தெலுங்கர், கன்னடர், மராட்டியர் வெற்றிக்காக தமிழ்ப்படையினர் சோழர்களால் பயன்படுத்தப்பட்டது போல சிங்களனின் வெற்றிக்காகவும் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் உழைத்திருக்கின்றனர். இராஜராஜ சோழனின் தந்தையே நான்காம் மகிந்தன் என்ற சிங்கள மன்னனோடு நட்புரிமை பூண்டு உடன்படிக்கை செய்துகொண்டு பலகாலம் சிங்களரின் நட்பு நாடாக சோழநாட்டை வைத்திருக்கிறான். அதுபற்றி தனி கட்டுரையாக எழுத வேண்டிய அளவுக்கு செய்திகள் உள்ளன. தேவை வரும்போது அவற்றை விளக்கலாம்.

இராஜராஜன் ஆட்சிக்காலத்தில் கி.பி.1007இல் அப்போது மராட்டியப் பகுதியாக இருந்த தார்வார் பகுதிக்கு இராசேந்திரசோழனின் படை சென்று பெரும் போர்புரிந்து பெரும் செல்வங்களைக் கொண்டு வந்ததோடு தமிழ்ப்படையினர் ஆயிரக்கணக்கான பெண்களை மனைவியராக்கி தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தனர் என்று ஹொட்டூர் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வாறு வேற்று இனத்தவரோடு அந்நிய இனத்தவரோடு சோழமன்னர்கள் கொண்ட மணஉறவுகளுக்காக போரிடச் சென்ற தமிழ்ப்படையினர் ஒவ்வொருவரும் தத்தம் பங்குக்கு வேற்றுஇன இரத்தக்கலப்புகளை உருவாக்கியே வந்துள்ளனர். தமிழினத்தை ஒரு சர்வதேசிய இனமாக மாற்றியுள்ளனர்.

பிறப்பிலோ, வளர்ப்பிலோ, அடையாளப்படுத்திக் கொள்வதிலோ, கொள்வினை - கொடுப்பினையிலோ பல நூற்றாண்டுகளாக பிற்காலச் சோழர்கள் சுத்தத் தமிழர்களாக இல்லை. இராஜராஜனும் சுத்தத்தமிழன் இல்லை. இல்லவே இல்லை. யார் யாருக்கெல்லாம் பயன்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தாலும் பார்ப்பனர்கள் மற்றும் மாற்று இனத்தவர்களைத் தவிர தமிழர்களுக்குச் சிறிதும் பயன்படவில்லை. இப்படி எதிலுமே தமிழனாக இல்லாத இராஜராஜன் தமிழ்த் தேசிய மாயைக்காரர்கள் கண்களுக்கு மட்டும் எப்படி தமிழ்ப் பேரரசன் ஆனான்?

சர்வதேசிய இனத்தான் என்றும், தேசிய இனசார்பற்றவன் என்றும் அடையாளப்படுத்தப்பட வேண்டிய இராஜராஜனின் இரத்தப் பரிசோதனை அறிக்கையும் - எம் பாட்டன் இராஜராஜன் என வீரமுழக்கமிடும் பேரன்களாகிய நமது இரத்தப் பரிசோதனை அறிக்கையும் இதுதான். நான் சைவப்பிள்ளை, நான் முக்குலத்தான், நான் படையாச்சி, நான் கவுண்டன், நான் ராஜராஜசோழன் பரம்பரை, நாங்களெல்லாம் சுத்தத்தமிழர்கள். சக்கிலியர்களும், நாயக்கர்களும், ஒக்கலிகர்களும் சுத்தத் தமிழர்கள் இல்லை என்று யாராவது சொன்னால் ஒன்று அவருக்கு வரலாறும், அறிவியலும் சுத்தமாகத் தெரியாமல் இருக்க வேண்டும். அல்லது மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட வேண்டியவராக இருக்க வேண்டும்.

உணர்வால், வளர்ப்பால், உழைப்பால், செயலால் தமிழனாக வாழ்ந்து, தமிழருக்கே தமிழரை உணர வைத்து, உயரவைத்த தோழர் பெரியார் தெலுங்கராம்? நேரடியாக வேற்று இனத்தவரான நான்கு இனங்களின் கூட்டணியில் கருவாகி வாழ்நாளெல்லாம் பார்ப்பானுக்கும் ஆந்திராக்காரனுக்கும். கன்னடத்தானுக்கும், மலையாளிக்கும் உழைத்துக்கொண்டிருந்த இராஜராஜன் தமிழனாம்? தமிழ்த்தேசியமாயைக்காரர்களின் நேர்மையை எப்படிப் பாராட்டுவது? இவர்கள் அளவுகோலில் தமிழினத்துக்கு உண்மையாக உழைப்பவர்கள் எல்லாம் அந்நியர்கள். பார்ப்பனர்களுக்கு உண்மையாக உழைப்பவர்கள் எல்லாம் தமிழர்கள்.

மனுவின் முறையில் பிறப்பின் அடிப்படையில் சுத்த இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தால் இங்கு யாரும் தமிழன் இல்லை. திராவிடனும் இல்லை. பெரியாரின் ஆரியர் - திராவிடர் என்ற பிரிவினைகள் இரத்த அடிப்படையிலோ, பிறப்பின் அடிப்படையிலோ கடைபிடிக்கப்படுவதல்ல. பெரியாரே இதைத் தெளிவாக விளக்குகிறார்.

“இந்நாட்டில் வாழும் தற்காலப் பார்ப்பனர்கள் மத்திய ஆசியாவில் இருந்து குடியேறிய ஆரியர்களின் நேரான சுத்தமான சந்ததியர்கள் அல்ல என்பது உண்மையே ஆனாலும் அவர்களையும் திராவிடர்கள் என்று ஒப்புக்கொள்ளாமைக்கு காரணம், அவர்களுக்கும் நமக்கும் உள்ள பல்வேறு பண்பு, கலை, ஆசாரம், நடப்பு ஆகிய பல வேறுபாடுகள் தாம்.

நம் கழகத்தில் யாரையும் பிறவி காரணமாக வேறினத்தவர் என்று ஒதுக்கவில்லை. பழக்க வழக்கங்களையும் பார்த்துத்தான் அவர்களுக்கும் நமக்கும் இருந்து வரும் அடிப்படை பேதத்தைக் கருதித்தான் பிரிவினை செய்கிறோம். அவர்கள் எப்போதுமே திராவிடர்களை ஒதுக்கி வைத்துத்தான் வந்திருக்கிறார்கள். ஒதுக்கி வைத்திருக்கும்படியான கலாச்சாரத்தைத் தான் பின்பற்றி நடந்து வருகிறார்கள். அதாவது தாம் உயர்ந்தவர்கள் திராவிடர்கள் தாழ்ந்தவர்கள் இருவருமே தனித்தனிப் பிறப்பு என்கிற உணர்ச்சி அவர்களை விட்டு எப்போதும் நீங்கியதில்லை."- (பெரியார் - விடுதலை 6-10-1948)

"ஆரியன் - திராவிடன் என்பது கலந்து போய்விட்டது. பிரிக்க முடியாதது இரத்த பரிட்சையிலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்வேன். ஆரிய திராவிட இரத்தம் கலந்து விட்டிருக்கலாமே தவிர ஆரிய - திராவிட அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? சட்டைக்காரர் என்று கூட்டம் இருக்கிறது. இது வெள்ளை ஆரிய - கருப்பு திராவிட ரத்தக் கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும் நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது?

இன்றைய தினம் ஆரிய - திராவிட என்ற பிரிவினை இரத்தப் பரீட்சையின் பேரிலல்ல. அல்லாமல், கலாச்சார, பழக்க வழக்க அனுஷ்டானத்தின் படியாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அந்தப்படி பார்க்கிறபோது, யார் ஆரியர், யார் திராவிடர் என்றால், சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தங்களைப் பிராமணர்கள் என்றும், அந்தப்படி பிராமணர்கள் என்பதால் உயர் ஜாதிக்காரர்கள் என்றும் சொல்லப்படுகிற பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள். அதுபோலவே அந்தப் பார்ப்பனர்களாலும், அவர்களின் கடவுள், மதம், சாஸ்திரம், புராண, இதிகாசங்கள் என்பவைகளின் பேரால் நாலாவது ஜாதி மக்கள், கீழ் ஜாதி மக்கள் என்று சொல்லப்படுகிற சூத்திர மக்கள் என்பவர்கள் திராவிடர்கள் ஆவார்கள்." (28.08.1953-இல் தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் தந்தை பெரியார் சொற்பொழிவு)

தமிழன் என்பதற்கு என்ன வரையறை? எந்த அடிப்படையில் தமிழனை அடையாளம் காண்பீர்கள்? மனுவைப் போல பிறப்பின் அடிப்படையிலா? பிறப்பின் அடிப்படையில் என்றால் படையெடுப்புகள் நடப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்களைத்தான் சுத்தத் தமிழர்கள் என்று ஒரளவுக்குச் சொல்லலாம். அது தமிழனோ, தெலுங்கனோ, பீகாரியோ, குஜராத்தியோ யாராக இருந்தாலும் சுத்தரத்தத் தத்துவம் பேசமுடியாது.

தமிழ்த் தேசிய இன மாயை

விஞ்ஞானப்பூர்வமான(!) தேசிய இனவாதிகளின் தேசிய இன வரையறையை மீண்டும் நினைவு கொள்வோம். ஒரு பொதுமொழி, ஒரு பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம், பொதுவான பொருளியல் வாழ்வு, தொடர்ச்சியான நிலப்பரப்பு ஆகிய நான்கு சிறப்புக்கூறுகள் ஒரு தேசிய இனத்துக்கு வேண்டும்.

அய்.நா. பொது அவையில் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்துலக மனிதஉரிமைப் பிரகடனத்தின் 15 ஆவது பிரிவு,

“தேசிய இன உரிமையைப்பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. தேசிய இன உரிமையை எவரிடமிருந்தும் தன்னிச்சையாகப் பறித்துவிடக்கூடாது. தன் தேசிய இனத்தை மாற்றிக்கொள்ளும் உரிமையையும் எவருக்கும் மறுத்தல் கூடாது.”

என்று கூறுகிறது. ஒருவன் தனது தேசிய இனத்தையே மாற்றிக்கொள்ளலாம் என ஒரு நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவே அகில உலக மனித உரிமைப் பிரகடனங்கள் உள்ளன. அந்த நெகிழ்வுத்தன்மையை இங்குள்ள தமிழ்த்தேசியர்கள் எதிரியான பார்ப்பானை உள்ளே நுழைப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். பார்ப்பனர்களால் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களை ஒருங்கிணைக்க நெகிழ்வுத்தன்மைகளைப் பயன்படுத்துவதில்லை. அவர்களது முறையிலேயே விஞ்ஞானப்பூர்வ தேசிய இனவாதிகளின் வழியிலேயே நாமும் கட்டுத்திட்டமாக, கறாராக தேசிய இன வரையறையை தமிழ்இனத்துக்குப் பொருத்திப் பார்த்தால் தேசிய இனம் என்ற சட்டகம் (Frame) தமிழனுக்குப் பொருந்தாமல் இருப்பதைக் காணலாம். தமிழ்தேசியம் என்பதே மாயை என்பதை உணரலாம்.

பொதுமொழியை வைத்து தமிழனை எப்படி அடையாளம் காண்பீர்கள்? மொழியின் அடிப்படையில் தமிழனை அடையாளங் காணத் தொடங்கினால், ஒடுக்கும் பார்ப்பான் தமிழனாக வந்துவிடுவான். ஒடுக்கப்படும் இஸ்லாமியர்கள் வெளியே நிற்பார்கள். ஆதிக்கத்தின் உச்சியில் இருக்கும் ஆரியர்கள் தம்மை அந்தணர் எனக் கூறிக்கொண்டு உள்ளே வந்துவிடுவர். ஆரிய அடக்குமுறையால் மிகக் கடுமையாக நசுக்கப்படும் இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட தோழர்கள் வெளியே நிற்பர். தமிழ்நாட்டில் அய்யரும் அய்யங்காரும், கேரளாவில் நம்பூதிரியும், கர்நாடகாவில் ஹெக்டேயும், வங்காளத்தில் முகர்ஜியும் அந்தந்த தேசிய இனங்களின் மொழியைப் பேசி அந்தந்த இனங்களின் ஆதிக்க சக்தியாக கேள்வி கேட்பாரில்லாமல் சுகமாய் வாழ்வான். உலகில் எந்த மனிதனும் பேச்சுவழக்கில் பயன்படுத்தாத சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு கோடிக்கணக்கான பணம் அம்மொழியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை தொடரும். சமஸ்கிருதப் பண்பாடும் தொடரும். இங்கு பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஒடுக்குமுறை சிறிதும் மாற்றமின்றித் தொடரவே செய்யும்.

எந்தத் தமிழை அடிப்படையாக வைத்துள்ளீர்கள்? ஈழத்தமிழா? சென்னைத் தமிழா? மதுரைத் தமிழா? கொங்குத்தமிழா? நெல்லைத்தமிழா? இவை எல்லாவற்றிற்கும் எதிராக வழங்கும் பார்ப்பனத்தமிழா? ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையான ஆயிரக்கணக்கானோருக்கு தமிழ்மொழி சுத்தமாகத் தெரியாது. பேசவோ, எழுதவோ, படிக்கவோ தெரியாது. பண்பாட்டு விழாக்களுக்காக தமிழ்நாட்டிலிருந்து ஐரோப்பா செல்லும் தமிழ்த் தலைவர்கள்கூட கூட்டங்களில் ஆங்கிலத்தில் பேசித்தான் ஈழ விடுதலைக் கருத்துக்களுக்கு அழுத்தம்தர வேண்டியுள்ளது. தமிழே தெரியாத ஐரோப்பா வாழ்தமிழர்களை எந்த இனத்தில் இணைப்பீர்கள்?

தமிழ்நாட்டில் வாழும் தமிழனும் “தமிழ்பேசு; தங்கக்காசு” என்னும் நிகழ்ச்சிகள் நடத்தினால் தான் தமிழ் பேசுவது என்ற நிலையில் தமிழ் பேசுகிறான். இப்படி அரைகுறையாகத் தமிழைப் பேசுபவர்களையும் தமிழனாக ஏற்றுக் கொள்வீர்களா? தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி பகுதிகளிலுள்ள மக்கள் எல்லாம் வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசித்தான் வாழ்கின்றனர். அடுத்தடுத்த தலைமுறைகள் மலையாளம் மட்டுமே பேசுகின்றனர். இந்த கேரளத் தமிழர்களை எந்த இனத்தில் இணைப்பீர்கள்? தமிழை அடிப்படையாக வைத்து தமிழர்களை முழுமையாகவும், தமிழர்களுக்கு எதிரிகளான பார்ப்பனர்களை பிரித்தும் தேசிய இன வரையறையை உறுதிப்படுத்த முடியுமா? அப்படிச் செய்தாலும் தேசிய இனம் என்ற சட்டகம் (Frame) இங்கே மாயையாக, பொருந்தாமல்தானே போகும்.

“ஒரு பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம்” இதுவும் மாயையானதுதான். இங்கு தமிழர்களுக்கென்று என்ன பொதுப்பண்பாடு இருக்கிறது? ஜாதிக்கொரு பண்பாடுதானே இருக்கிறது? ஒவ்வொரு ஜாதியினராலும் தனித்தனி பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அந்த ஜாதியின் பண்பாடுகள் யாராலும் மீறப்படாமல் மனுதர்மச் சட்டங்கள் பாதுகாக்கின்றன. உணவு உண்பது, கழிவை வெளியேற்றுவது என்ற உலக மனித இனங்களுக்குப் பொதுவானவைகளைத் தவிர மற்ற பழக்கவழக்கங்களை ஜாதியும் மதமும்தான் நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு ஜாதியும் இங்கு ஒவ்வொரு தேசிய இனங்களாகத்தான் இயங்குகின்றன. உணவுமுறை, உணவு உண்ணும் முறை, உடை, உடை உடுத்தும் முறை, இருப்பிடம், இருப்பிடங்கள் இருக்க வேண்டிய முறை, ஊர், ஊர்கள் அமைய வேண்டிய முறை, ஊர்மக்கள் - சேரி மக்கள், இருவகை மக்களிலும் ஆண்கள், பெண்களுக்கென்று தனித்தனியான பழக்க வழக்கங்கள் என ஒவ்வொரு அணுவையும் நிர்ணயிப்பது இந்துமதமும், ஜாதியும் தான். இவை உருவாக்கும் உளவியல் உருவாக்கம் தேசிய இன இலக்கணங்களுக்கு பொருந்துமா?

ஒருவனது வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வான திருமணம் தமிழர் முறையிலா நடக்கிறது? செம்புலப் பெயல்நீர் போல ஜாதியும், மதமும், பணமும் கலந்த ஆரியமுறைத் திருமணங்கள் தானே நடக்கின்றன. ஜாதி பார்த்து, மதம் பார்த்து, ஜாதிக்குள்ளேயே குலம், கோத்திரம், மாமன் மச்சான் முறைகள் பார்த்து, பார்ப்பான் குறித்துக் கொடுக்கும் சுபமுகூர்த்த நன்நாளில் திதி, நட்சத்திரம் பார்த்து பார்ப்பானை வைத்து சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டு, தாலி கட்டப்பட்டு, கன்னிகாதானம் நடக்கிறது. நாள் குறிப்பதிலிருந்து தாலிகட்டுவது வரை, சாந்தி முகூர்த்தம் என்பது வரை எது தமிழ்ப் பண்பாடு?

கடுமையாக உழைத்து சிறுகச்சிறுகச் சேமித்தோ, வங்கிகளில் கடன்பட்டோ சிறிய அளவில் ஒரு வீட்டைக் கட்டும் சராசரித் தமிழனோ அல்லது இந்தியா முழுமைக்கும் வட்டிக்குவிட்டு மற்ற தேசிய இனங்களைச் சுரண்டி தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான செலவில் அரண்மனைகளைக் கட்டும் தமிழனோ யாராக இருந்தாலும் வாஸ்து முறையில் அளவு பார்த்து, வாஸ்து முறையிலோ கதவு, ஜன்னல்கள்கள் வைத்து, வாஸ்து சாஸ்த்திரத்தின்படி வண்ணமும் பூசி வழக்கம்போல பார்ப்பான் சொல்லும் சுபமுகூர்த்த நன்நாளில் பசுமாட்டை உள்ளேவிட்டு க்ரானைட் திரையில் சிறுநீர் (சிறு நீரா, பெரு நீரா) கழிக்கச்செய்து, நெருப்பை வளர்த்து, நெருப்பின் முன் வீட்டைக் கட்டியவரை உட்கார வைத்து அந்த மாட்டு மூத்திரத்தை முகத்தில் அடித்து, பொன்னையும் பொருளையும் பெருமளவில் பிடிங்கிச் செல்கிறான் பார்ப்பான். இதில் எது தமிழ்ப் பண்பாடு?

செத்துப்போனாலும் ஒவ்வொரு ஜாதிக்கென்று தனித்தனியாக சடங்குகள், சம்பிரதாயங்கள், சுடுகாடு போனாலும் ஜாதிக்கொரு சுடுகாடு, மின்சார சுடுகாட்டுக்குப் போனாலும் அங்கேயும் ஜாதி, மதச் சடங்குகள், புதைக்கப்பட்ட பிறகோ, எரிக்கப்பட்ட பிறகோகூட விட்டுத் தொலையாமல் கருமாதி, 30 ஆம் நாள், திதி, திவசம் என்று தொடர்கொள்ளையடிக்கிறான் பார்ப்பான். இதில் எது தமிழ்ப்பண்பாடு? ஒரு தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் அவன் கடைபிடிப்பது பார்ப்பனப் பண்பாட்டைத்தான். ஆரியப் பண்பாட்டைத்தான். தமிழன் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்துமே தமது வாழ்வின் பல்வேறு நிலைகளில் ஆரியப் பண்பாட்டைத்தான் கடைபிடிக்கிறார்கள்.

அகில உலக மனித உரிமைப் பிரகடனங்கள் தேசிய இனத்தையே மாற்றிக்கொள்ளலாம் என நெகிழ்வுப் போக்கில் சென்றாலும், தமிழ்நாட்டில் இந்துமதத்தில் ஜாதி மாறமுடியுமா? நேற்றுவரை நான் பறையன்; நாளையிலிருந்து படையாச்சியாகவோ, தேவராகவோ, சைவப்பிள்ளையாகவோ மாறிக்கொள்கிறேன் பிள்ளைமார்களின் பண்பாட்டைப் பின்பற்றிக்கொள்கிறேன்; படையாச்சியின் பண்பாட்டைப் பின்பற்றிக் கொள்கிறேன் என்றால் மேற்கண்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் அதை ஏற்றுக்கொண்டு பறையர்களைப் பிற்படுத்தப்பட்டவர்களாக ஏற்றுக்கொள்வார்களா? அல்லது ஜாதி கடந்து தமிழனாக மாறிவிடுகிறேன். தமிழ்ப் பண்பாட்டைக் கடைபிடிக்கிறேன் என்று அறிவுப்பூர்வமாகச் சொல்வதாக வைத்துக்கொள்வோம். அந்த கன்வெர்ட்டட் தமிழன் கடைபிடிக்க தமிழ்ப்பண்பாடு என்று என்ன இருக்கிறது? நமக்கு கிடைத்த விழாக்கள், நமது இலக்கியங்கள், நமது மொழி, பண்பாடு, நமது அரசியல் அனைத்தும் பார்ப்பனமயமாகவும் இந்திய மயமாகவும்தானே இருக்கின்றன. “பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம்” என்பது தமிழனைப் பொறுத்தவரையில் ஜாதியும், மதமும்தான். தமிழ்த் தேசியஇனம் என்கிற சட்டகம் இங்கும் இடிக்கிறது.

periyar_404.jpgஅடுத்து “பொதுவான பொருளியல் வாழ்வு.” ஒட்டுமொத்த சமுதாயமே ஆரியமயமாகிவிட்ட பிறகு பொருளியல் மட்டும் தனியாக எங்கே பொதுப்பண்பைக் காட்டப்போகின்றது? தமிழனின் பொருளியலையும் அரசியலையும் நிர்ணயிப்பது இந்துமதமும், ஜாதியும், இந்திய தேசிய - பார்ப்பன நலன்களும் தான். தற்போது புதிய மாற்றமாக பன்னாட்டு நிறுவனங்களும், பன்னாட்டு நிதியங்களும் நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கின்றன. இவையும்கூட பார்ப்பனநலன்களுக்கு எதிராக எதையும் இந்தியாவில் செய்துவிட இயலாது. உயிரைப் பணையம்வைத்து ஆழ்கடல் சென்று மீன்பிடித்து வாழும் நெய்தல் நில பரதவருக்கும், ஆயிரக்கணக்கான வேலி நிலங்களை கையகப்படுத்தி வாழும் மருதநில மூப்பனார்களுக்கும் பொதுவான பொருளியல் வாழ்வு எப்படி இருக்கமுடியும்? அப்படிப் பொதுவாக இருக்கிறது என்று எதையாவது காட்ட முனைந்தால் அது அவசியம் பார்ப்பன – இந்திய தேசிய பொருளியலாகத் தான் இருக்கும். தமிழ்த் தேசிய இனம் என்பதற்கான பொதுவான பொருளியல் என்று எதுமில்லை.

இறுதியாக “தொடர்ச்சியான நிலப்பரப்பு”. தற்போது விஞ்ஞானப்பூர்வ தமிழ்த்தேசியர்களால் அடையாளப்படுத்தப்படும் தமிழ்நாடு 1953க்குப் பின்னால் காங்கிரஸ் - பார்ப்பன – இந்திய தேசிய முதலைகளால் குறித்துக் கொடுக்கப்பட்ட நிலப்பகுதியாகும். பார்ப்பான் அவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் பிரித்துக் கொடுத்த பகுதிகளை அடிப்படையாக வைத்துத்தான் தேசிய இன அரசு முழக்கத்தை வைக்கிறார்கள். இந்திய தேசியவாதிகளால் கேரளப்பகுதிக்குப் பிரித்துத் தரப்பட்ட தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி போன்ற பகுதிகளை மீட்க வேண்டும் என்று சில குழுக்களும், திருப்பதியை மீட்கவேண்டும் என்று சில குழுக்களும், பெங்களூரையும், மைசூரையும், கோலாரையும் மீட்க வேண்டும் என்று சில குழுக்களும் இவை எல்லாவற்றையும் சேர்த்து மீட்க வேண்டும் என்று சில குழுக்களும் எழுதியும் பேசியும் வருகின்றன.

பெரியார் எல்லைப் போராட்டத்திலும், மேற்கண்ட பகுதிகள் கேரளாவோடு போனபோதும் போராடவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் சில தமிழ்த்தேசியர்கள். மொழிவாரி மாகாணப் பிரிவினையில் முழுமையான வெற்றிபெறுவதற்கு ம.பொ.சி போன்ற மதவாதிகள்தான் தடையாக இருந்திருக்கிறார்கள் என்பதை ம.பொ.சி உயிரோடு இருக்கும்போதே பெரியார் விளக்கிவிட்டார். அதோடு நான் விடுதலைக்குத் தான் போராடுகிறேன். விஸ்தீரணத்துக்குப் (பரப்பளவுக்கு) போராடவில்லை என வெளிப்படையாகவே அறிவித்தார். எல்லைகளைப் பொறுத்தவரையும் தேசிய இனப்பரப்புகள் குறித்தும் பெரியாரின் பார்வை இது:

"நான் மலையாளிகள் போவதற்கு முன்பே "மலையாளி வேண்டாம்" என்கிறவன். ஆகவே எனக்கு உரிமை உள்ள எல்லை வரையில் இருக்கும் தமிழ்நாடு (மதராசை) சொன்னேன். அதாவது மதராஸ் மாகாணம் என்றுதான் அப்போது சொன்னேன். பிறகு அந்தந்த நாட்டுக்காரன் பிரிந்ததும் எல்லை குறைந்துவிட்டது. இப்போது எந்த எல்லையுள்ளதோ அந்த எல்லை வரையில் உள்ள மதராசைத்தான் கேட்கிறேன். முன்பு நாகர்கோயில் மலையாள இராஜ்ஜியத்தோடு (திருவாங்கூரோடு) சேர்ந்திருந்தது. நாகர்கோயிலுக்குப் போய் மலையாள ஆதிக்கத்தை எதிர்த்தே கண்டித்து வந்தேன். பிறகு இப்போது நாகர்கோயில் தமிழ்நாட்டோடு சேர்ந்து விட்டதும் போன மாதம் போய் பத்து நாள்களுக்குமேல் அங்கே சுற்றுப்பிரச்சாரமே பண்ணினோம். நீங்களும், நாங்களும் ஒன்று. இப்போது ஒரு நாட்டார் ஆகிவிட்டோம். ஆதலால் தமிழ்நாடு அல்லது மதராஸ் சுதந்திரம் பெற வேண்டும் என்று கூறினேன். இதில் என்ன தப்பு? இதிலே என்ன பல்டியடிக்கிறது இருக்கிறது?

நாளைக்கு இந்த திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி தமிழ்நாட்டை விட்டு நீங்கிவிட்டால் இவை நீங்கிய மற்றதைத்தானே கேட்பேன்! ஏன் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரியை விட்டு பல்டி அடிக்கிறாய் என்றால் அவனுக்கு அறிவு இருக்கிறது என்று சொல்லலாமா?" -(பெரியார் - “விடுதலை” 27-1-1959)

இந்தப் பிரச்சனைகளில் நேர்மையாகப் போராடுகிறவர்கள் என்ன நிலை எடுக்கவேண்டும்? தமிழ்த் தேசிய இனத்துக்கு உரிய எல்லைகள் எது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். அந்த எல்லைகளை மீட்கப் போராட வேண்டும். இரண்டையுமே செய்யாமல் அந்த எல்லைப் பிரச்சனை எங்களுக்கு வேண்டியதில்லை என்று ஒதுங்கிக் கொள்பவர்களிடம் சண்டையிட்டுக்கொண்டே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பதில் என்ன நேர்மை இருக்கிறது? முதலில் உங்கள் கடமையைத் தொடங்குங்கள்.

தமிழ்தேசிய இனத்தின் எல்லை 1953இல் இந்திய தேசியம் அறிவித்த அளவுதானா? நாம் படித்த வரலாறுகளில் சேரநாடு, பாண்டியப் பேரரசு, சோழப்பேரரசு, பல்லவப்பேரரசு என்றுதான் படித்திருக்கிறோம். தமிழ்ப்பேரரசு என்றோ, தமிழ்நாடு என்றோ உலகில் எந்த நாட்டையும் நாம் இதுவரை படித்திருக்கமாட்டோம். இந்தியாவில் இருந்ததாகச் சொல்லப்படும் 56 தேசத்திலும், 562 குறுநில அரசுகளிலும் எதிலுமே என்றுமே எங்குமே தமிழ்நாடு என்ற பெயரில் ஒருநாடுகூட, ஒரு சமஸ்தானம்கூட இருந்ததில்லை. அந்த சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளின் எல்லைகளும், நிலப்பரப்புகளும் அவ்வப்போது மாறிமாறி வந்தள்ளன. ஒரு 25 வருடம்கூட தொடர்ச்சியாக மூவேந்தர்களின் எந்தப் பேரரசும் எல்லையை மாற்றாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் எழுதிய பனம்பரனார் “வடவேங்கடம் தென்குமரி, யாயிடைத், தமிழ்கூறுநல்லகத்து” என்று குறிப்பிடுகிறார். அதாவது வடக்கேயுள்ள வேங்கடமலையிலிருந்து தெற்கே குமரி வரை தமிழர் அரசுகளின் எல்லை இருந்திருக்கிறது. பத்துப்பாட்டின் பாயிரத்தில் “இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க” என்ற வரிகள் இருக்கிறது. அதாவது முப்புறமும் கடலையே எல்லையாகக் கொண்டவன் என சேர மன்னனைப் பாடுகிறது. எனவே எல்லைப் போராளிகளும் விஞ்ஞானப்பூர்வ தேசிய இனவாதிகளும் தமிழ்த்தேசிய எல்லையாக வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய மூன்றுக்கும் நடுவே உள்ள நிலப்பகுதி என்றுதான் தொடங்கியிருக்கவேண்டும். அரபிக்கடலில் இருக்கும் மாலத்தீவு, இலட்சத் தீவுகளும் சங்ககாலத்தில் தமிழர் வாழ்ந்த பகுதிகளாகத்தான் இருந்தன என்று இலக்கியங்கள் கூறுகின்றன. “முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம்” என்றுதான் அவை அழைக்கப்பட்டன. “கன்னித்தென்கரைக் கடற்பழந்தீபம்” என்று அகத்தியசூத்திரம் சொல்வதும் இந்த மாலத்தீவு, இலட்சத்தீவுகளைத்தான். எனவே அவற்றையும் சேர்த்துத் தான் தமிழ்த் தேசிய எல்லையைத் திட்டமிடவேண்டும்.

இவ்வளவு பெரிய பரப்பு தமிழர்களின் பரப்பு என்பதை திட்டமிட்டு மறைக்கும்விதமாக ஏதோ ஓரிரு மாவட்டங்களான தேவிகுளம், பீர்மேடை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே அதுவும் கேட்டுக் கொண்டு மட்டுமே இருப்பது ஏன்? இந்தியாவால் பிடுங்கப்பட்ட அந்த ஊர்கள் இன்னும் இருக்கின்றதல்லவா? பூகம்பத்தில் மூழ்கிவிடவில்லையே? பிறகென்ன இந்திய அரசாங்கத்தோடு போராடிப் பெறவேண்டியதுதானே? இந்திய அரசை எப்படி எதிர்ப்பது? மேலும் அதற்கெல்லாம் அங்கிருக்கும் மக்களின் ஆதரவும் வேண்டுமல்லவா? கொஞ்சம் சிக்கல்தான். முக்கடலையும் எல்லையாக அறிவிக்க முடியாததற்கு அப்பகுதிகளிலெல்லாம் தற்போது தமிழர்கள் வாழவில்லை என்றுகூட ஒரு பதிலைச் சொல்லலாம். ஆனால் ஈழத்தில்? தமிழ் ஈழத்தை தமிழ்த்தேசிய எல்லைக்குள் கொண்டு வந்திருக்கவேண்டும். ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழீழ தேசியம் என்று தனியாகப் பிரித்துக்கொண்டார்கள். எனவே அதுவும் முடியாது.

மலையூர் என்றும் அவுணர்நாடு என்றும் காழகம், கடாரம் என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மலேசிய நாடும், சிங்கபுரம் என்ற சிங்கப்பூர் நாடும் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்திருக்கிறது. இன்றும் அந்த நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. தமிழர்கள் தமிழ்நாட்டைவிடச் சிறப்பாக வாழ்கிறார்கள். அவற்றையும் தமிழ்த் தேசிய எல்லையில் இணைக்க வேண்டும்.

வியட்நாமில்கூட கி.மு 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரை ஸ்ரீமாறன் பாண்டியன் என்ற தமிழ்மன்னன் ஆண்டிருக்கிறான். கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்கள் அதிகாரத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மாறன்மாதேயம் என்றழைக்கப்பட்ட பர்மாவில் 1 ஆம் நூற்றாண்டிலிருந்தே பாண்டியர் ஆண்டதற்கான சான்றுகள் உள்ளன. சயாம் என்றழைக்கப்பட்ட தாய்லாந்தில் மன்னர்களின் முடிசூட்டுவிழாவில்கூட தேவாரமும், திருவாசகமும் பார்ப்பனர்களால் பாடப்பட்டுத்தான் விழாச் சடங்குகள் நடத்தப்பட்டன. புறநானூற்றுப் பாடலில் பாடப்பெற்ற கவுண்ணியன் விண்ணத்தாயன் என்ற பார்ப்பான் கி.பி. 1 ஆம் நூற்றாண்டிலேயே அங்கு சென்று தமிழர்(!) ஆட்சியை நிறுவினான் என்று வரலாறுகள் கூறுகின்றன. மிக முக்கியமாக நான்கு இனக் கூட்டணியில் கருவான பிற்காலச் சோழர்கள் மேற்கண்ட அனைத்து நாடுகளையும் ஆண்டிருக்கிறார்கள். அவை சோழப் பேரரசாக இருந்திருக்கின்றன. சில சமயம் பாண்டியப் பேரரசாகவும், சேரநாடுகளாகவும் இருந்திருக்கின்றன.

எனவே தமிழ்த் தேசிய இன எல்லைப்பரப்பு மேற்கண்ட நாடுகளை எல்லாம் இணைத்தே அறிவிக்கப்பட வேண்டும். அகண்ட தமிழ்க் குடியரசாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளின் எல்லைகளை இராஜராஜசோழனின் பேரன்களே சுருக்கலாமா? தமிழ்த்தேசிய அமைப்புகள் வெளியிட்டிருக்கும் எந்த தமிழ்நாட்டு வரைபடத்திலும் மேற்கண்ட நாடுகளின் வரைபடங்கள் இணைக்கப்படவில்லையே ஏன்? காலத்துக்கேற்றபடி, எதார்த்த நிலைக்கு ஏற்றபடி ஒரு தேசிய இனத்தின் நிலப்பரப்பு எல்லையை மாற்றிக் கொள்ளலாமா? மாற்றிக் கொள்ளலாம் என்றால் விஞ்ஞானப்பூர்வ தேசிய இன வரையறை என்ன ஆனது?

மேலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒன்றுக்கொன்று வேறுபட்ட ஐவகை நிலங்களில் தமிழன் வாழ்ந்திருக்கிறான். மலைகள், காடுகள், வயல்வெளிகள், கடல், பாலை என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வேறுபாடான நிலவகைகள் தமிழ்நாட்டில் இன்றும் உள்ளன. இப்படி தொடர்பற்ற நிலப்பரப்புகளை தேசிய இன வரையறை ஏற்றுக்கொள்கிறதா?

இப்படி மொழி அடிப்படையிலோ, பொதுவான பண்பாட்டில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம், பொதுவான பொருளியல் வாழ்வு, தொடர்ச்சியான நிலப்பரப்பு என எதிலுமே தமிழ்த்தேசியர்கள் மூச்சுக்கு மூச்சு முழங்கிக்கொண்டிருக்கும் “சமூகம் நிர்ணயித்த வரையறைகளையும், இனம், தேசிய இனம், தேசம் என்பவற்றுக்கான ஐரோப்பியர்களின் வரையறைகளையும்” தத்தம் வசதிகளுக்கு ஏற்ப, சூழலுக்கு ஏற்ப மாற்றியுள்ளனர். ஐரோப்பியர்களின் சட்டகங்களை அப்பட்டமாக மீறியுள்ளனர். இதை நாம் வரவேற்கிறோம். இந்த நெகிழ்வுத்தன்மையை பெரியார் தமிழர்களின் இன எதிரியை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார். திராவிடர் என்ற கருத்தியலை நிறுவினார். திராவிடர் என்பதற்கு பெரியார் தரும் வரையறை:

"முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும். தாழ்த்தப்பட்ட மக்களும், தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் அல்லாத மற்ற இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும் ஆகிய எல்லோரும் திராவிடர்கள் என்ற தலைப்பின் கீழ் வருவார்கள்”. (பெரியார் - குடிஅரசு - 26-11-1939)

"‘தமிழ்' என்பதும் ‘தமிழர் கழகம்' என்பதும் மொழிப் போராட்டத்திற்குத் தான் பயன்படுமேயொழிய இனப்போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது. சரி, ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித்தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைத் தடுத்துத்தான் நம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும் நம் கலாச்சாரத்தை மறந்து ஆரிய கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டதால்தான் அவர்களுக்குக் கீழான மக்களாக - அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம்.

எனவே, அக் கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டும் வெற்றி பெற்று விடமுடியாது. கலாச்சாரத்தின் பேரால் - இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறவேண்டும். அப்போது தான் நாம் விடுதலை பெற்றவராவோம்.

மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதி தானேயொழிய முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்து விடமாட்டா” - (பெரியார் - குடிஅரசு - 27-1950)

இவ்வாறு விலக்க வேண்டியவர்களை விலக்கி, இணைக்க வேண்டியவர்களை திராவிடராக இணைத்தார் பெரியார். ஆனால் தமிழ்த் தேசியர்கள் தமிழர்களின் இன எதிரியை தமிழர்களோடு இணைத்துக் கொள்ளவும் - ஆரியச்சுரண்டலும் இந்திய தேசியச் சுரண்டலும் தங்கு தடையின்றித் தொடரவும் இந்த நெகிழ்வுப்போக்குகளைப் பயன்படுத்துகின்றனர். பெரியார் தொடங்கி வைத்த ஆரிய எதிர்ப்புப் பண்பாட்டுப்புரட்சி - திராவிடர் பண்பாட்டுப் புரட்சிதான் தற்போதைய அவசியத் தேவை. ஒரு தனி தேசிய இனமாக தமிழன் மாறவேண்டுமானால், பெரியாரின் திராவிடர் பண்பாட்டை வளர்த்தெடுப்பதில்தான் கவனம் செலுத்தியாக வேண்டும். தேசிய இனக்கருத்தாக்கம் என்பது தமிழ்த் தேசியத்துக்குப் பொருந்தாமல் மாயையாக இருப்பது தவறில்லை. நவீன மனுதர்மமாக மாறி வருவதைத்தான் தவறு என்கிறோம். தமிழ்த் தேசிய இனம் குறித்தும், அதன் நாயகர்களில் ஒருவனான நான்கு இனக் கூட்டணியாளன் ராஜராஜனைப் பற்றியும் சுருக்கமாகப் பார்த்தோம். அடுத்து தமிழ்தேசியர்களின் மனங் கவர்ந்த மற்றொரு பார்ப்பன நாயகனான தொல்காப்பியனைப் பற்றியும், தொல்காப்பியத்தைப் பற்றியும் இனி பார்ப்போம்.

(தொடரும்)

- அதிஅசுரன் ( atthamarai@gmail.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12577:2011-01-22-14-31-28&catid=1:articles&Itemid=264

இலக்கணங்களுக்குக் கட்டுப்படாத இலக்கியம் - திராவிடம்

அதிஅசுரன் வியாழன், 06 ஜனவரி 2011 12:58

emailButton.pngprintButton.pngpdf_button.png

பயனாளர் தரப்படுத்தல்:rating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.png / 8

குறைந்தஅதி சிறந்த

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞரான எஸ்.கே.பிஸ்வாஸ் அவர்கள் ‘பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டுகளாக மார்க்சியம்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதிய மிகச்சிறப்பான மார்க்சிய ஆய்வுநூல் ஒன்று தலித்முரசு இதழில் தமிழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கிறது. அதில் அந்த ஆய்வாளர் கூறுகிறார்,

“இந்து மதம், ஒரு சமத்துவமற்ற மதம். வெறுப்பு, பயங்கரவாதம், சுரண்டல், கொள்ளை ஆகியவற்றின் ஆதரவோடு ஒடுக்குமுறையின் முன்னோடியாக திகழும் இந்து மதம், தனது ஆற்றல் மிக்க எதிரிகள் அனைத்தையும் கடத்தி ஆரியமயமாக்குவதன் மூலமே பல்லாண்டு காலமாக நிலைத்து வருகிறது. இந்தத் திட்டமே உள்வாங்குதல் என்று அழைக்கப்படுகிறது. ஆரிய படையெடுப்பினை எதிர்த்து தனது தாய் நாட்டை காக்கப் போரிட்டபோது வேத படையெடுப்பாளரான போர்த்தலைவன் இந்திரனால் கொல்லப்பட்ட பூர்வகுடி நாயகனான கிருஷ்ணனை பார்ப்பனியம் ஆரியமயமாக்கியது. நாட்டுப்பற்றுமிக்க கிருஷ்ணா, வெளிநாட்டு ஊடுருவாளரான இந்திரனை எதிர்த்து பத்தாயிரம் போர் வீரர்களுடன் போரிட்டார். இறுதியில் எரித்துக் கொல்லப்பட்டார். கர்ப்பமாக இருந்த அவரது மனைவிகள் ஆரிய போர்த் தலைவனான இந்திரனால் கொல்லப்பட்டனர். பிற்காலத்தில் இந்த புகழ் பெற்ற மண்ணின் தலைவனின் பெயரால், சதுர்வர்ண தத்துவம் கீதையில் போதிக்கப்பட்டது. ரிக் வேத காலத்தின் தொடக்கத்தில், பெரும்பான்மை மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த பூர்வகுடித் தலைவனான மனு ஒரு கிராம தலைவராக இருந்தார். அவரது ஆளுமை கடத்தப்பட்டது. பிருகு என்ற பார்ப்பனன் அளித்த சட்டங்கள், மனுவின் பெயரில் எழுதப்பட்டு, மனு ஸ்மிரிதியில் சட்டமாக்கப்பட்டு, இந்தியாவின் பூர்வகுடி மக்களை சுரண்டி அடிமைப்படுத்தப் பிரச்சாரம் செய்யப்பட்டன. மண்ணின் போர்ப்படையை வீழ்த்தவும், இந்திய உழவர்களிடையே பார்ப்பனியத்தை பிரச்சாரம் செய்யவும் நடைமுறைப்படுத்தவும் அவர் ஆரியமயமாக்கப்பட்டார். புரட்சியாளரான அசுர மன்னன் பாலாவின் மகனான அக்னியை, இந்திரனின் முகாமில் சேர்ந்து, நாட்டிற்கு துரோகியாக நடிக்க காரணமாக இருந்தது மனுவாகும். ஆரிய காலத்திற்கு முந்தைய சிந்து-ஹரப்பா-மொகஞ்சதாரோ பகுதிகளில் நிலவிய, மண்ணின் மதமான பௌத்தத்தை பிரச்சாரம் செய்த, பழமையான சிரமண பண்பாட்டை ஏற்றுக் கொண்ட சாக்கிய பழங்குடியைச் சேர்ந்த கவுதமரையும் உள்வாங்கியது. புத்தர் இந்து மதக் கடவுளான விஷ்ணுவின் 9-ஆவது அவதாரமாக ஆக்கப்பட்டுள்ளார். பார்ப்பனியம் முகமது மற்றும் இஸ்லாத்தையும் கூட கடத்த முயற்சித்தது (அலோபனிஷத், பவிஷ்ய பூரண் ஆகியவற்றை பார்க்கவும்) சூத்திரரான சிவாஜி சிவசேனை உருவாக்கியதன் மூலம் மிக செறிவாக இந்துமயமாக்கப்பட்டுள்ளார். டாக்டர் அம்பேத்கரை இந்துமயமாக்கி 'ஒரு உண்மையான ஆரியன்” எனவும், விஷ்ணுவின் 10-ஆவது அவதாரம் (கல்கி) எனவும் வழங்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

இப்படிப்பட்ட ஆரியப் படையெடுப்பிற்கும், பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கும் தமிழர் வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஏராளமான ஆதாரங்களில் சிலவற்றை ஏற்கனவே பார்த்தோம். பார்ப்பனர்களுக்கு எதிரான திராவிடர் என்ற சொல்லும் இப்படித்தான் ஆரியர்களால் அழிக்கப்பட்டுள்ளது.

periyar_403.jpgதிராவிடர் என்றால் தென்னாட்டு பிராமணர் என்று பொருள் என காஷ்மீர வரலாற்று நூலான இராஜதரங்கினி சொல்வதாக போராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். அந்த நூலின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. அதற்கு முன் கி.மு.வில் இராஜதரங்கினி காலத்துக்கு முன்பாக சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்ட மனுதரும சாஸ்திரத்தில் திராவிடர் என்றால் பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் என்றே குறிப்பிடப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இருந்த அந்த மனு சாஸ்திரத்தை 1919 இல் திருவைந்திரபுரம், கோமாண்டூர் இராமாநுஜாச்சாரியார் தமிழில் மொழிபெயர்த்து ‘அசல் மனுதரும சாஸ்திரம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அந்த நூலில் திராவிடர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

துவிஜாதிகளுக்கு தன்ஜாதி ஸ்த்ரீகளிடத்தில் பிறந்த புத்திராளுக்கு விதிப்படி காலத்தில் உபநயந முதலிய சம்ஸ்காரம் இல்லாமற்போனால் காயத்திரியில்லாதவரான விராத்திய ஜாதிகளாகச் சொல்லப் படுகிறார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 20)

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சு விநடன், கரணன், கஸன், திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

பிராமணிடத்தில் வணங்காமையாலும், உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத்தன்மையையடைந்தார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 43)

பௌண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம்,தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்கனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாய்விட்டார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 44)

மேற்கண்ட ஸ்லோகங்களின்படி க்ஷத்திரிய ஜாதிகளுக்கு என விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யத் தவறியவர்களும் - க்ஷத்திரிய ஜாதிகென்ற வரையறைகளை மீறியவர்களும் சூத்திரர்கள் ஆகி விடுகிறார்கள். அந்த சூத்திரர்கள் திராவிடர்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஆண்ட தேசங்களில் ஒன்று திராவிடம் என்றுதான் மனுதருமம் கூறியுள்ளது.

மனு தர்மத்தையோ, ஸ்லோகங்களையோ நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. புராணங்களையும் சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்து, ஆய்ந்தறிந்து, “புராணங்களில் வரலாற்று உண்மைகள் ஒளிந்து கிடக்கின்றன” என்று கண்டுபிடித்த வரலாற்றுப் பேராசிரியருக்கு மேற்கண்ட அசல் மனுதருமத்தில் இருக்கும் வரலாற்று உண்மை தெரியாதது எப்படி?

சாஸ்திரத்தில் திராவிடர் என்ற சொல் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிப்பதைப் பார்த்தோம். வரலாற்றிலும் அப்படி ஒரு சான்று உள்ளது. சமணமதம் தமிழ்நாட்டுக்குள் வந்து, வளர்ந்து, இந்து மதத்தில் தேய்ந்து, மறைந்த வரலாற்றை மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் ‘சமணமும் தமிழும்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். கிறிஸ்து பிறப்புக்கு முன்பே தமிழ்நாட்டுக்குள் சமணம் வந்துவிட்டது. ஆரம்ப காலங்களில் இந்து மதத்துக்கு எதிராகவே சமணம் இருந்தது. பார்ப்பனர்களுக்கு எதிரான - கடவுளுக்கு எதிரான மதமாகவே சமணம் இருந்தது. சமணத்தைப் பின்பற்றுவோர் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கின்றனர். எனவே கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சமண மதத்தில் நந்திகணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என நான்கு பிரிவுகள் உண்டாயின. அந்தப் பிரிவுகளில் ஒன்றான நந்திகணத்திலிருந்து திரமிள சங்கம் அல்லது திராவிட சங்கம் உருவானது என்று மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது. (EC.Vol.V.Hassan Taluk, 131, Arsikera Tq, IEC. Vol IV. Gundlupet Tq.27)

மேலும் கி.பி. 470 ஆண்டு சமண சமயத்தவரான வச்சிரநந்தி என்பவர் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் என்பவர் எழுதியிருக்கிறார். சமண மதத்தின் இந்த திராவிட சங்கம் மதுரையில் தான் தொடங்கப்பட்டது என்றும், கி.பி 900 வரை அந்த திராவிட சங்கத்தைச் சேர்ந்ததுறவிகள் வாழ்ந்தனர் என்றும் வரலாற்றுக் குறிப்புகளை ஆதாரம் காட்டி மயிலை சீனி.வேங்கடசாமி எழுதியுள்ளார். ஆக 5ம் நூற்றாண்டின் இறுதிவரைகூட திராவிடர் என்ற சொல் ஆரியர்களுக்கு - பார்ப்பனர்களுக்கு - இந்து மதத்துக்கு எதிரான சொல்லாகவே இருந்திருக்கிறது. பேராசிரியர் ஜெயராமன் குறிப்பிடும் காஷ்மீரத்து இராஜதரங்கினி 10 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் வெளிவந்திருக்கும் என நம்பப்படும் நூலாகும்.

தமிழ்நாட்டு வரலாற்றை ஓரளவு மேலோட்டமாகப் படித்தாலே 6 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அதாவது களப்பிரர்கள் காலத்தில் அடங்கியிருந்த பார்ப்பனர்கள் அதன் பிறகு முழுவீச்சில் செயல்பட்டு வெகு வேகமாக தன் பழைய அடிமைகளாகிய தமிழ்மன்னர்களையும், தமிழ்ச்சமுதாயத்தையும் முழுமையாக ஆரியமயமாக்கினர். இக்கால கட்டத்தில்தான் ஆதிசங்கரர் என்ற நம்பூதிரிப் பார்ப்பான் தோன்றி இந்துமத மறுமலர்ச்சிக் காலம் உருவானது. வாழ்ந்தால் பார்ப்பன அடிமையாக - இந்துவாக வாழ வேண்டும். அல்லது அழிய வேண்டும் என்ற நெருக்கடியை பார்ப்பனர்கள் உருவாக்கினர். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் அனைவரும் பார்ப்பனதாசர்களாக பார்ப்பனர்களின் தளபதிகளாகச் செயல்பட்டு ஆரியத்துக்கு எதிரான அனைத்தையும் அழித்தனர். ஆரியத்துக்கு எதிரான சமண, புத்த மதங்கள் அழிக்கப்பட்டன. சமணர்களும் பௌத்தர்களும் திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர். கழுவேற்றப்பட்டனர். புத்த கோவில்கள் இந்துக் கோவில்களாக்கப்பட்டன. அல்லது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. ஆரியத்துக்கு எதிரானவர்களின் அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. அவை ஆரியர்களின் அடையாளங்களாக மாற்றப்பட்டன.

தற்காலத்தில் ஆரியர்களின் பாசறையாக இயங்குவது ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கரமடம். அந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் சின்னம் ஸ்வஸ்திக். நான் ஆரிய இனத்தைச் சேர்ந்தவன் என இறுமாப்புடன் பெருமையாகப்பேசி வாழ்ந்த கொடுங்கோலன் ஹிட்லரின் சின்னம் ஸ்வஸ்திக். அந்த ஸ்வஸ்திக் சின்னத்தில் சிறு மாற்றத்தைச் செய்து தமிழ்நாட்டில் இந்துமுன்னணி இராமகோபலனும் தனது அமைப்பின் அடையாளமாக வைத்திருப்பது ஸ்வஸ்திக். இந்துமத்தின் அடையாளமாகவும், ஆரியக்கொடுங்கோலனின் அடையாளமாகவும் இந்துப்பாசிச, காவி பயங்கரவாதத்தின் அடையாளமாகவும் பல நூற்றாண்டுகளாக நாம் அறிந்திருக்கும் இந்த ஸ்வஸ்திக் சின்னம் உண்மையில் இந்து மதத்திற்கு எதிரான சமணமதத்தின் சின்னமாகும். ஸ்வஸ்திகம் என்றும் பிறவிச்சக்கரம் என்றும் தமிழ் இலக்கியங்களில் இந்த சமணச் சின்னத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. மதுரையில் ஆனைமலைப் பகுதிகளில் உள்ள சமணர்களின் பாறைச் சிற்பங்கள் மற்றும் பிராமிக் கல்வெட்டுக்களிலும் இச்சின்னம் காணப்படுகிறது.

இதேபோல ‘சங்கம்’ என்ற சொல் ‘புத்தர்களின் குழு’ அல்லது ‘புத்த துறவிகளின் கூட்டம்’ என்ற பொருளில்தான் வழங்கிவந்தது. ஆனால் ஆனால் இந்து சமய மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு நம் காலத்தில் சங்கம் என்ற சொல் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தான் குறிக்கிறது. ‘ராஷ்ட்ரியம் ஸ்வயம் சேவக் சங்,’ ‘சங் பரிவார்’ என புத்தர்களின் ‘சங்கம்’ பார்ப்பன ஆதிக்கத்திற்காக உழைக்கும் ‘சங்’ ஆகிவிட்டது.

புத்தருக்கு ‘சாஸ்தா’ என்ற ஒரு பெயரும் உண்டு. அமரகோசம், நாமலிங்கானசாசனம் போன்ற வடமொழி நிகண்டுகளில் இதற்கான ஆதாரம் உண்டு. அந்த ‘சாஸ்த்தா’ என்ற சொல்லின் திரிபு ‘சாத்தன்’ எனப்படும். தமிழில் சங்க இலக்கியங்களில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சாத்தனார் என்றே அழைக்கப்பட்டுள்ளனர். மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரைப் போல பல புத்த சமய இலக்கியவாதிகள் சாத்தன் என்ற பெயரில் வாழ்ந்திருக்கின்றனர். இன்றும் நம் தமிழ்நாட்டு கிராமங்களில் சாத்தப்பன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இன்று பல தலைமுறைகளாக நமக்கு ‘சாஸ்தா’ என்றால் ஹரி ஹர புத்திரன் ஐயப்பனைத் தானே தெரியும்.

புத்தருக்கு ‘விநாயகன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் விநாயகர் கோவிலோ விநாயகர் வழிபாடோ கிடையாது என்று மறைமலைஅடிகளும் கருத்துத் தெரிவித்துள்ளார். வடமொழி நிகண்டுகளில் ‘விநாயகன்’ என்ற பெயரில் புத்தர் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. அதுபோல போதி மரத்தடியில் புத்தருக்கு ஞானம் வந்தது என்பதால் புத்த மதத்தினர் போதி மரத்தையும் முக்கியமானதாகக் கருதினர். போதிமரம் என்றால் வேறொன்றுமில்லை. அரச மரம். சங்க இலக்கியங்களில் இளம்போதியர் என்ற பெயரில் ஒரு புலவர் வாழ்ந்திருக்கிறார். புத்த மதத்தினரைக் குறிக்க சில சங்க இலக்கிய வரிகளில் ‘போதியர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தர் போதி மரத்தை அதாவது அரச மரத்தை சுற்றிவரும் வழக்கமுள்ளவர் என்று ஒரு காரணத்தைச் சொல்லி புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அரச மரத்தை வலம் வரும் வழக்கத்தைக் கடைபிடித்துவந்தனர். ஆனால் இன்று ‘விநாயகன்’ என்ற சொல் புத்த மதத்துக்கு நேர் எதிரான இந்து மதத்தின் காவிக் கூட்டத்தின் காலிக்கூட்டத்தின் அடையாளமாகவும், அரசமரத்தைச் சுற்றிவரும் வழக்கம் இந்துமத மூடநம்பிக்கையின் சின்னமாகவும் மாறிவிட்டது.

இந்துமதத்திற்கு மாற்றாக இருந்த கிறிஸ்தவ மதமும், இஸ்லாம் மார்க்கமும் தமிழ்நாட்டில் கி.மு. காலத்திலிருந்து இயங்கிவந்த ஆசீவகம், சமணம், பௌத்தம் போன்ற மதங்களைப் போல முற்றாக அழிந்து விடாமல் ஓரளவு தாக்குப்பிடித்து இயங்கிவருகின்றன. ஆனால் இந்து மதத்தின் முதுகெலும்பான - அடிநாதமான வர்ணாஸ்ரமத்தை - ஜாதிப் பிரிவினைகளை ஏற்றுக்கொண்டு, தத்தம் மதங்களிலும் பார்ப்பன ஆதிக்கத்தை அனுமதித்து, ஆரியச் சுரண்டலுக்கு தத்தம் மதங்களையும் பலியாக்கிவிட்டுத்தான் இந்தியாவில் நீடித்து உயிர் வாழ்கின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு தொடங்கப்பட்ட ஆரிய ஆட்டம் இன்னும் அடங்கவில்லை. மார்க்சின் பொதுவுடைமைத் தத்துவம்கூட பார்ப்பன மண்ணில் செரிக்கப்பட்டுவிட்டது என்பதைத்தான் அறிஞர் எஸ்.கே.பிஸ்வாஸ் தனது நூலில் நுணுக்கமாக ஆய்ந்துள்ளார்.

பல நூற்றாண்டாக நடந்துவரும் இந்து சமய வெறியாட்டத்தில் அதை எதிர்த்த அனைத்தும் அழிக்கப்பட்டன; உள்வாங்கப்பட்டன. அந்த வரிசையில்தான் ‘திராவிடர்’ என்ற சொல்லும் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பார்ப்பனர்களால் அவர்களது அடையாளமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அது வெற்றி பெறாமல் போய்விட்டது. ஏதோ ஒரு வரலாற்று நூலிலும் பார்ப்பனர்கள் இயற்றிய ஓரிரு நூல்களிலும், ஆதி சங்கரன் போன்றோரின் வரிகளிலும் அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பார்ப்பனர்கள் முயன்று, தோற்றுவிட்ட ஒரு செயலை மாயவரத்துக் குணாவும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ரகஸ்ய கார்யவாஹ்களும் தற்போது மீண்டும் தேடிப்பிடித்து பார்ப்பான் காலடியில் வெற்றிக்கனிகளைக் கொட்டிட முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.

அந்த முயற்சிகளில் நேர்மை இல்லை என்பதை அவர்களது ‘மனு என்பவன் திராவிட அரசன்’ என்ற ஆய்விலேயே பார்த்தோம். அந்த ஆய்வின் பித்தலாட்டத்தை வலுப்படுத்த மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது. “நம் தமிழ் மன்னர்களான சோழர்கள் மனுவின் வாரிசுகளே,” “ சோழர்களின் மூத்தவர், முன்னோர் மனு ஆவான்” என்பதற்கு ஒரு சான்று கிடைத்துள்ளது. ஆதாரமாக, சங்க இலக்கிய வரிகளை இதில் மேற்கோள் காட்டவில்லை. லீடன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆனைமங்கலச் செப்பேட்டுச் சாசனங்களிலேயே இதற்கான சான்று உள்ளது. பிற்காலச் சோழர்களையோ அல்லது தெலுங்குச் சோழர்களையோ அல்லது மனுநீதிச் சோழனையோ சொல்லவில்லை. காவிரிக்குக் கரை கட்டிய கரிகால் பெருவளத்தான் என்ற பண்டைச்சோழனே, முற்காலச்சோழனே மனுவின் வாரிசுதான் என ஆனைமங்கல பெரிய செப்பேடு தெரிவிக்கிறது. மயிலை சீனி.வேங்கடசாமி தனது ‘பௌத்தமும் தமிழும்’ என்ற நூலில் அந்த லீடன் சாசனமான ‘ஆனைமங்கலச் செப்பேட்டுச் சாசனங்களை அப்படியே பதிவு செய்துள்ளார்.

சங்க இலக்கியங்களைப் போல வரலாற்றுச் செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலும் ஆரியம் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளது என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும். இந்த ஆனைமங்கலச் செப்பேட்டைச் சான்றாகக் கொண்டு மனு தர்மம் என்பது சோழர்களின் தத்துவம், தமிழர்களின் தத்துவம், சங்க காலத்திலிருந்து தமிழர்கள் அனைவரும் பார்ப்பனர்களே என்றெல்லாம்கூட வரலாறு எழுதலாம். மனு தர்மத்திலேயே ‘திராவிடன்’ என்றால் சத்திரியன், சூத்திரன் என்று சொல்லிவிட்டான். எனவே நாங்கள் ‘திராவிடர்கள்’ எனவும் எழுதலாம். பெங்களுர் குணாவின் புதிய அடிமைகளைப் போல நம்மாலும் மயிர்பிளக்கும் சொல் ஆராய்ச்சிகளிலும், பார்ப்பனத்தனமான வரலாற்று ஆராய்ச்சிகளிலும் ஈடுபடமுடியும் என்பதற்கு ஒரு சுருக்கமான முன்னுரை தான் (Synopsis) மேற்கண்ட பத்திகள்.

12 ஆம் நூற்றாண்டில் பார்ப்பனர்கள் தம்மை எப்படி அடையாளப்படுத்தினார்கள் என ஆராயத் தெரிந்தவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் பார்ப்பனர்கள் தம்மை தமிழர்களாக, அந்தணர்களாக அடையாளப்படுத்தப்படுத்துவதைப் பார்க்கமுடியவில்லை. அமிதாப் பச்சனுக்கும் தங்கர்பச்சனுக்கும் பொதுவாக பச்சன் என்ற சொல் வருவதால் இருவரும் ஒரே இனத்தவர் என்பது போன்ற ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, தற்போது ஆரியன் என்பதற்கும், அந்தணன் என்பதற்கும் யார் உரிமை கோருகிறார்கள் எனப் பாருங்கள். இன்றைய காலகட்டத்தின் அந்த ஆரியத்தை எதிர்த்துப் போரிடும் தத்துவம் எது எனப் பாருங்கள். “அருந்தொண்டாற்றிய அந்தணர்கள்” என்று காஞ்சி சங்கராச்சாரி நூல் வெளியிடுகிறான். தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்து நாட்டைக் கெடுத்த அனைத்துப் பார்ப்பனர்களைப் பற்றியும் பெருமையாக அதில் பட்டியலிடுகிறான். இப்போதும் இந்த வாரமும் ஆனந்தவிகடன் இதழில் ஸ்ரீரங்கப் பார்ப்பான் வாலி “நினைவு நாடாக்கள்” என்ற பெயரில் ஒரு தொடர் எழுதுகிறான். அதில் “நான் ஒரு அந்தணன்” எனப் பெருமையுடன் பதிவு செய்துள்ளான். செத்துப்போன சங்கராச்சாரி இந்து தர்மங்கள் என்ற தனது நூலில் திராவிடர் என்ற சொல்லைக் கண்டு அலறுவதைப் பாருங்கள்,

“மேனாட்டு வரலாற்று ஆசிரியர்கள் ஆரியர் என்ற சொல்லால் இந்தியாவிலுள்ள பிராமணர்களைக் குறிக்கிறார்கள். திராவிடர் என்ற சொல்லால் பிராமணரல்லாதவரைக் குறிக்கிறார்கள் இப்படி ஆரியர் - திராவிடர் என்ற பேதத்தை ஏற்படுத்தி அதன்மூலம் பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற வேற்றுமையை வளர்த்து அதன்மூலம் இந்து மதத்தினுடைய ஒற்றுமைக்கே உலை வைக்க முயற்சி செய்கிறார்கள்.” (வானதி பதிப்பகம் இந்து தர்மங்கள் 6-ஆம்பதிப்பு பக்கம் 94)

இந்து மத ஒற்றுமைக்காக சங்கராச்சாரி துடிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பேராசிரியர் ஜெயராமனும் பெ.மணியரசனும் துடிப்பது என்? தமிழ்த்தேசிய தமிழர் கண்ணோட்டத்தின் இணையாசிரியர் வெங்கட்ராமன் ஒரு பார்ப்பனர் என்பதால் ஒரு இனத்தின் வரலாற்றையே மாற்ற முனைவது ஏன்? அந்தணர் என்றும் ஆரியர் என்றும் நம் கண்முன்னே அடையாளப்படுத்திக்கொள்ளும் பார்ப்பனர்களை எதிர்த்து - அவர்களின் ஆயுதமான மனுதர்மம், சாதி, இந்துமதம், கடவுள்கள், இராமாயணம், மகாபாரதம், சமஸ்கிருதம், இந்தி, இந்தியா ஆகியவற்றை எதிர்த்து தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் தொடுத்த போர்கள் யாவை? அந்தப் போர்களில் எந்த விதத்தில் வீரியம் குறைந்த தன்மையில் திராவிடர் என்ற கருத்தியல் போராடியது? அந்தப் பட்டியலைப் போடுங்கள். எந்தக் கருத்தியல் தமிழனை அடிமைத் தளையிலிருந்து மீட்குமோ அதையே நம் போர்க்கருவியாக்கலாம்.

திராவிடர் என்ற கருத்தாக்கம் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், கிறிஸ்தவர், இஸ்லாமியர், பௌத்தர் போன்ற ஒடுக்கப்பட்ட சமுதாயங்களை ஒன்றிணைத்து மேற்கண்ட அனைத்து சமுதாயத்திற்கும் ஒட்டுமொத்த எதிரிகளான பார்ப்பனர்களை அடக்கிவைத்து, அவர்களது ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கி திராவிடர் சமுதாயத்திற்கு ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியது என்பதற்கும், திராவிடர் என்ற சொல்லை பெரியார் எதற்காகப் பயன்படுத்தினார் என்பதற்கும் பக்கம்பக்கமாக பல்வேறு தோழர்கள் பல கட்டுரைகளிலும், நூல்களிலும் விளக்கங்களைக் கொடுத்துவிட்டார்கள். ‘பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகளுக்கு மறுப்பு’, ‘திராவிடம் - தமிழ்தேசியம் ஒரு விளக்கம்’ ஆகிய பெரியார் தி.க.வின் நூல்களுக்கு இன்றுவரை நேர்மையான எந்த பதிலும் வரவில்லை. மாயவரத்து குணாகூட தனது இனவியல் கட்டுரையின் தொடக்கத்தில் திராவிடர் என்ற கருத்தாக்கம் சமூகத்தளத்தில் உரிமைகளைப் பெற்றுத்தந்தது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். பெரியாருக்குப்பின் பெரியார் என்ற மணியரசனின் கட்டுரையில்,

“பெரியாரின் பார்ப்பன ஆதிக்க ஒழிப்புக் கருத்துகள் மதிப்பு மிக்கவை. சாதி ஒழிப்பு, பெண்விடுதலை போன்றவற்றில் அவருடைய கருத்துகள் சாரத்தில் முற்போக்கானவை. தமிழ்நாடு விடுதலை குறித்து அவர் அவ்வப்போது வெளிப்படுத்திய கருத்துகள் தமிழ்த் தேச விடுதலைக் கருத்துகளுக்குத் துணை செய்பவை. அவரது கடவுள் மறுப்புப் பரப்புரைகளும் மூட நம்பிக்கை எதிர்ப்புப் போராட்டங்களும் தமிழ்நாட்டில் பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. பெருந்திரளான மக்களிடம் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டு சேர்த்தன. கணிசமான மக்கள் சக்தியைத் திரட்டியிருந்த அவர், அரசுப் பதவிக்கு ஆசைப்படாமல் சமூக-அரசியல் பணியாற்றியது அரிய செயல்.”

என்று கூறியுள்ளார். சமூகத்தளத்திற்குத்தானே திராவிடர் என்ற கருத்தியல் முன்வைக்கப்பட்டது. அந்த சமூகத்தளத்தில் சரியாகத்தானே திராவிடம் இயங்கியுள்ளது. அதை மணியரசன் கும்பலே ஒப்புக்கொண்டு விட்டு, பிறகு என்ன மயிர் பிளக்கும் ஆராய்ச்சி? சொல்லாராய்ச்சிகளின் யோக்கியதையைப் பார்த்துவிட்டோம். அடுத்த கட்ட ஆராய்ச்சிகளை இனி பார்ப்போம்.

“பெரியாரிடம் கோட்பாட்டுக் குறைபாடுகளும் உத்திகளில் போதாமைகளும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.”

“இனம், தேசிய இனம், தேசம் குறித்த சமூக அறிவியல் வரையறைகளைப் புறக்கணித்ததால், இவை சார்ந்த கருத்தியல் எதையும் பெரியாரால் உருவாக்க முடியவில்லை.”

இந்தக் கோட்பாட்டுக் கோமான்கள், சமூக அறிவியல் விஞ்ஞானத்தாலும் தமது திறமையான உத்திகளாலும் இந்த தமிழ்ச்சமுதாயத்துக்கு ஒரு குண்டூசி அளவாவது, ஒரு குண்டுமணி அளவாவது இன்றுவரை பயன்பட்டிருக்கிறார்களா? அதற்கான பட்டியல், மன்னிக்கவும் ஒரு சிறு குறிப்பாவது இருக்கிறதா? தேசிய இன விடுதலை நோக்கிலான புள்ளிவிபரங்கள் சேகரிப்பு, ஆவணங்கள் உருவாக்கம் எதாவது நடந்திருக்கிறதா? எதைச் சொல்லிப் பிழைக்கிறோமோ அந்த தமிழ்த்தேசிய இன விடுதலைக்கான ஒரு சிறு நகர்வாவது நடந்துள்ளதா? எதுவுமே இல்லாமல், களப்பணியில் இறங்காமல் காகிதப்பணியில்கூட தேவையானவற்றைச் செய்யாமல், தமிழர் சமுதாயத்தின் வரலாற்றில் மறுக்கமுடியாத முற்போக்கான மாற்றங்களைச் செய்த திராவிடர் என்ற கருத்தியலைக் கொச்சைப்படுத்துவதிலேயே காலத்தை வீணடிப்பது ஏன்?

19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை தேசியம், தேசிய இனம் என்பவை போன்ற வரையறைகளே உலகில் இல்லை. அப்படிப்பட்ட வரையறைகளைக் கொடுத்த முதலாளித்துவ நாடுகளிலோ, பாட்டாளி வர்க்க சோசலிச நாடுகளிலோ உலகில் வேறெங்குமோ “உழைக்காமல் சுரண்டிப் பிழைப்பதற்கு பிறவி அடிப்படையிலேயே உரிமை பெற்ற ஒரு இனம் இருந்ததில்லை” உலகின் அனைத்து பாகங்களிலும் ஒடுக்கும் தேசிய இனம், ஒடுக்கப்படும் தேசிய இனம் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. தேசிய இனம் என்ற அடிப்படையில் ஒடுக்குமுறைகள் நடந்தால் அதை எதிர்த்து அடக்கும் தேசியஇனத்தை எதிர்கொண்டு போராடலாம். நிற அடிப்படையில் ஒடுக்குமுறைகள் நடந்தால், நிற அடிப்படையில்தான் ஒடுக்கப்படும் இனம் ஒன்றிணைய முடியும். நிற அடிப்படையில்தான் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு போராடமுடியும். பொருளாதார அடிப்படையில் ஒடுக்கப்பட்டால் பொருளாதார அடிப்படையில் வர்க்கப்புரட்சி நடக்கும். இதுபற்றி தமிழ்ச்சான்றோர் பேரவையின் செய்திமடலில் இளவேனில் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் குறிப்பில்,

“இனம் என்கிற கருதுகோளில் இருவித தன்மைகள் உண்டு. ஒன்று நிற இனம். மற்றொன்று தேசிய இனம். தேசிய இனம் என்கிற கொள்கை புதிதாக அரும்பும் முதலாளித்துவ எழுச்சியுடன் தொடர்புடையது. தேசிய இனக்கொள்கைக்கு முன்பும் இப்போதும் கூட ஆதிக்க சக்திகளின் வலிமைவாய்ந்த கொள்கையாய் விளங்குவது நிற இனக்கொள்கையே. காலனிய ஆதிக்கத்திலிருந்தும் முடியரசின் பிடியிலிருந்தும் விடுதலைபெற விரும்பும் தேசிய இனங்களின் போராட்டங்களைக் கூட நிறவெறிக் கொள்கை நசுக்கிவிடத் துடிக்கிறது. வெள்ளை நிறத்தவர் உயர்ந்த இனத்தவர். மஞ்சள் நிறத்தவரும், கருப்பு நிறத்தவரும் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து இன்று வரையிலும் முன்நிறுத்தப்படுகிறது.

மேற்குலகில் அய்ரோப்பிய ஆதிக்கச்சக்திகளுக்கு உதவும் இந்த நிற இனக்கொள்கை இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு உதவுகிறது. வருணாசிரமதர்மம் என்று இன்றும் இங்கே அது போற்றப்படுகிறது. நீ என்ன சாதி என்று கேட்பதற்கு பதிலாக நீ என்ன வர்ணம் என்று பல கிராமங்களில் இப்போதும் கேட்கப்படுவது உண்டு.

பார்ப்பனர் அல்லாதார் யாவரும் தாழ்ந்தவர்களே என்பதுதான் வேதங்களும், கீதா உபதேசங்களும், மனுதர்மங்களும் வலியுறுத்தும் கோட்பாடாகும். உயர் வர்ணத்தவரான பார்ப்பனர்களே சாத்திரப்படியும், சமூக ஏற்பாட்டின்படியும் வணக்கத்திற்குரியவர்கள்: தெய்வீக உரிமைபெற்றவர்கள் என்கிற சனாதானக்கருத்தை அரசியல் சாசனத்தால் கூட மீற முடிவதில்லை.

ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறு ஆகும் என்றால் இந்தியாவில் அது பார்ப்பனர் - பார்பனரல்லாதார் போராட்டங்களாகவும் அமைந்திருக்கின்றன. பார்ப்பனியம் அல்லது மனுதர்மம் அல்லது நிற இனக்கொள்கை என்னும் வர்ணாச்சிரமதர்மத்திற்கு எதிராக பார்ப்பனர்களால் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்ட மக்களின் போராட்ட வடிவமாக எழுந்ததுதான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் அல்லது திராவிடர் இயக்கம்.

திராவிடர் என்கிற நிலைப்பாடு ஒரு தேசிய இனத்தைக் குறிப்பதாக பெரியாரோ, திராவிட இயக்கமோ சொன்னதில்லை. நிறபேதக் கொள்கையின் எதிர்ப்பு நிலையில் பார்ப்பன ஆதிக்க சக்திகளையும் பார்ப்பனியச் சிந்தனைகளையும் மறுக்கும் எதிரணி- எதிரினம் என்கிற பொருளிளேயே திராவிட இனம் என்கிற கருதுகோள் முன்வைக்கப்படுகிறது. பார்ப்பனிய நிறவெறிக்கொள்கையின் அவலங்களையும், அபாயங்களையும் மூடிமறைக்க விரும்புவோர்க்கு திராவிட இனம் என்பது அறிவியல் அடிப்படை அற்றதாகவே தோன்றும்.”

என்று மிகத்தெளிவாக பார்ப்பன மனவியல் அறிவியல் அறிஞர்களை அம்பலப்படுத்துகிறார் இளவேனில். அந்த அறிவியலாளர்கள் சொல்லும் தேசம், தேசிய இனம், தேசியம் குறித்த அறிவியல் பார்வை பற்றியும் பார்ப்போம்.

தேசம் என்றால் என்ன?

வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி, நிலையான வாழ்க்கையினைப் பெற்ற மக்கள்சமூகம், மக்கள் அனைவராலும் வழங்கப்படும் பொதுமொழி, பொருளாதாரப் பிணைப்பும் ஆட்சியும், பொதுவான நோக்கங்களும் உறவுகளும் ஏற்படுத்தித்தரும் மனஇயல்பு ஆகியவரை வரலாற்று அடிப்படையில் தொடர்நிலைகளாக இணைந்து உருவாவதே ‘தேசம்’ (Country Of State)

தேசிய இனம் என்றால் என்ன?

ஒரு பொது மொழி, பொதுபிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்வு, பொதுவான மனஇயல்புடன் கூடிய உறவுகளைப் பிரதிபலிக்கும் உயிர்ப்பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த வரலாற்று ரீதியாக உருவாகிய மக்கள் சமூகமே தேசியஇனம்.

ஆதாரம்: ‘சோவியத் யூனியனின் தேசங்களும், தேசிய இனங்களும்’ நூல்

தேசியம் என்றால் என்ன? (Nationalism or Nationality)

ஒருவனால் தனது நாட்டின்மீது மதச்சார்பற்ற நிலையில் உணர்வுப்பூர்வமாக வைக்கப்படும் பற்று.

ஆதாரம் : என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா 1981

பார்ப்பன மனவியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டும் அறிவியல் பூர்வமான சமூக வரையறகள்தான் இவை. தேசிய இனம் என்பதற்கு பொதுமொழி, பொதுவான பொருளாதார வாழ்வு, பொது பிரதேசம் என்பவற்றோடு வரையறைகள் முடிந்துவிடவில்லை.

“பொதுவான மனஇயல்புடன் கூடிய உறவுகளைப் பிரதிபலிக்கும் உயிர்ப்பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த வரலாற்று ரீதியாக உருவாகிய மக்கள் சமூகம்” என்ற வரிகள் முக்கியமாக உள்ளன. தமிழ்த்தேசியம் என்ற வரையறையில் பொதுவான பண்பாடோ, பொதுவான மனஇயல்புடன் கூடிய உறவுகளைப் பிரதிபலிக்கும் உயிர்ப்பண்போ எங்கே இருக்கிறது? ஒவ்வொரு சாதியும் இங்கே ஒவ்வொரு தேசிய இனம் என்ற அளவில் வேறுபட்டுத்தானே நிற்கிறது?

தேசிய இனங்களுக்கு இடையேகூட கொள்வினை, கொடுப்பினைகள் நடந்துவிடுகின்றன. சாதிகளுக்குள் திருமண உறவுகள் இயல்பாக இருக்கிறதா? விவேக் ஓபராய் குடும்பமும் தமிழ்நாட்டு மன்றாடியார்(கவுண்டர்) குடும்பமும் திருமண உறவு வைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் மன்றாடியார் வீட்டுக்குள் ஒரு தாழ்த்தப்பட்டவர் நுழையக்கூட முடியாது. பிறப்பு முதல் இறப்பு வரை, இன்னும் சொல்லப்போனால் கற்பனையான சொர்க்கம், நரகம் ஆகியவற்றிற்குச் சென்றடையும் வரைகூட ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனி பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், வெவ்வேறுபட்ட அங்கீகாரங்கள் என தமிழ்ச் சமுதாயம் பல்வேறு தேசிய இனங்களாகப் பிரிந்துதானே உள்ளது. தில்லைவாழ் அந்தணர்களின் பண்பாடும், மனஇயல்பும் ஆறுமுகநாவலரின் சொந்தங்களின் பண்பாடும், மனஇயல்பும் எப்படி ஒன்றாக இருக்கமுடியும்?

“நாங்கள் அந்தணர்கள்” இறுமாப்புப் பேசிக்கொண்டு ஆதிக்கத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் சங்கராச்சாரிக்கும் - உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெற்ற பின்பும் தான் அமர வேண்டிய உள்ளாட்சி அலுவலகத்திற்குள் நுழைய முடியாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒரே அடிப்படையில் மொழி அடிப்படையில் தேசிய இன விடுதலை கோருவதானால் அந்த தேசிய இன விடுதலை யாருக்கு இலாபமாக இருக்கும்? அப்படிப்பட்ட முயற்சி எப்படி அறிவுப்பூர்வமானதாக இருக்கும்?

பெரியார் தேசியம் குறித்தும் தேசம் குறித்தும் பேசிய மிக விரிவான உரை ஒன்று குடி அரசில் உள்ளது. 1932 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு கொழும்பு வழியாக தமிழ்நாட்டுக்கு வந்தார். கொழும்பு, யாழ்ப்பாணம், பருத்தித்துறை போன்ற பல இடங்களில் பேசிய உரைகளின் தொகுப்பு இது.

தேசியம்

தேசியம், தேசியம் என்பதும் முற்கூறியவைகளை போன்ற ஒரு போலி உணர்ச்சிதான். ஏனெனில் தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலக பொது மக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாய் இருந்து வரும் மக்கள் தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்கும் வாழ்விற்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் ஒரு உண்மையை மறைப்பதற்கும் மற்றும் அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்கு பரிகாரம் தேடுவதை தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களால் அதிகாரப் பிரியர்களால் சோம்பேறி வாழ்க்கை சுபாவிகளால் கற்பிக்கப்பட்ட சூக்ஷியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.

தேசம் என்றால் எது?

தேசம் என்றால் எது? உலகப் பரப்பு ஐந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்திற்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்கின்றன. இவைதவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும் மாகாணத்திலும் பல மாதிரியான பிறவிகளும், பல ஜாதிகளும், பல பாஷைகளும், பல மதங்களும், பல உட்பிரிவுகளும், பல பழக்க வழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வக் கட்டளை என்றும் மதக் கட்டளை என்றும் தேசிய கொள்கை என்றும் தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்ற முடியாது என்றும் இவைகளில் எதையும் காப்பாற்ற உயிர் விட்டாவது முயற்சிக்க வேண்டும் என்றும் கருதிக் கொண்டிருப்பதாகும்.

இவற்றின் பயனாய் மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப்பதை நன்றாய் பார்க்கின்றோம். அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், கீழ் நிலை - மேல் நிலை, கஷ்டப் படுகின்றவன் - கஷ்டப்படுத்துகிறவன் முதலிய கொடுமைகள் இருந்தும் வருகின்றன. இவற்றுள் என்ன கொள்கைமீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு விஸ்தீரணத்தை பிரித்துக் கொண்டு தங்களுக்கென தனித்த தேசம் தேசியம் என்ற ஒன்றைச் சொல்லிக் கொள்ளுவது என்பது எனக்கு புரியவில்லை. நமது தேசம் என்று எந்த விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப்படுத்திக் கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென்னவோ, அதிலுள்ள மனிதர்களின் நிலை என்னென்னவோ, அதுதான் மற்ற எந்த தேசம் என்பதிலும் நாடு என்பதிலும் இருந்து வருகிறது.

நாம் குறிப்பிடும் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களாகவும் தாழ்மைப்படுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றார்களோ அவ்வளவு நிலையில் தான் மற்ற தேசத்தார் என்கின்ற மக்களும் இருந்து வருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்த விதமான மக்களின் துயரம் நீக்கப் பாடுபடுகின்றோம் என்கின்றோமே, அந்த விதமான துயரம் கொண்ட மக்கள் அன்னிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகின்றார்கள். நம்முடைய தேசியம் என்பதிலேயே எந்த விதமான மக்கள் சோம்பேறிகளாகவும் சூழ்ச்சிக்காரர்களாகவும், செல்வவான்களாகவும் அரசாங்க ஆதிக்கக்காரர்களாகவும், குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான பொது ஜனங்களை பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கி பட்டினி போட்டு வதைத்து தாங்கள் பெருஞ் செல்வம் சேர்த்து வாழ்ந்து சுகபோகம் அனுபவித்து வருகின்றார்களோ அது போலத்தான் அன்னிய தேசம் என்பதிலும் சிலர் இருந்து அந்நாட்டு பெரும்பான்மையான மக்களை கொடுமைப்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலைமையில் என்ன கொள்கையைக் கொண்டு எந்த லட்சியத்தைக் கொண்டு உலகப் பரப்பில் ஒரு அளவை மாத்திரம் பிரித்துத் தேசாபிமானம் காட்டுவது என்று கேட்கின்றேன்.

துருக்கி தேசத்துக்கும், இந்தியா தேசத்திற்கும் சண்டை வந்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு தேசாபிமானம் இந்தியாவுக்கா? துருக்கிக்கா? ஹைதராபாத்துக்கும் மைசூருக்கும் யுத்தம் தொடங்கினால் ஹைதராபாத் இந்தியர்கள் தேசாபிமானம் மைசூருக்கா? ஹைதராபாத்துக்கா? ஆகவே தேசம் தேசாபிமானம் என்கின்ற வார்த்தைகளும் கடவுள் மதம் என்பது போன்றே ஒரு வகுப்பாருடைய சுயநலத்திற்கு ஏற்ற ஒரு சூழ்ச்சி வார்த்தை என்று சொல்ல வேண்டியிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை. முடிவாகக் கூறும் பட்சத்தில் தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் மற்ற தேச முதலாளிகளுடன் சண்டை போட்டு தங்கள் தங்கள் முதலை பெருக்கிக் கொள்ள ஏழை மக்களை - பாமர மக்களை பலி கொடுப்பதற்காக கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.

உதாரணமாக இங்கிலாந்து தேச முதலாளிகள் அமெரிக்கா நியூயார்க் தேச முதலாளிகளுடன் சண்டை போட்டு வெற்றி பெற்று தங்கள் செல்வத்தை மேலும், மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை ஏற்பட்டால் அல்லது நியூயார்க் முதலாளிகள் வேறு தந்திரத்தின் மூலம் இங்கிலாந்து தேசத்துக்கு முதலாளிகளின் செல்வத்தை கொள்ளை கொள்ள முயற்சிப் பதாயிருந்தால் இங்கிலாந்து தேசத்து முதலாளிகள் இங்கிலாந்து தேசத்து ஏழைமக்களையும் பாமர மக்களையும் பார்த்து “ஓ இங்கிலாந்து தேசிய வீரர்களே, தேசாபிமானிகளே தேசத்துக்கு நெருக்கடி வந்து விட்டது. இங்கிலாந்து மாதா உங்கள் கடமைகளைச் செய்ய அழைக்கிறாள் ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்” என்று கூப்பாடு போடுவார்கள். கூலிகளை அமர்த்தியும் வயிற்றுப் பிழைப்பு பத்திரிகைகாரர்களுக்கு எலும்பு போட்டும் பிரசாரம் செய்விப்பார்கள்.

இது போலவே அமெரிக்க முதலாளியும் தன் தேசம் நெருக்கடி நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க மாதா அங்குள்ள பாமர மக்களையும், வேலையில்லாமல் வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல் பட்டினி கிடக்கும் ஏழை மக்களையும் தங்கள் கடமையைச் செய்ய அழைப்பதாகவும், கூவிக் கொண்டு கூலி கொடுத்து பிரசாரம் செய்வார்கள். இரண்டு தேச ஏழை மக்களும் மற்றும் சாப்பாட்டிற்கு அறவே வேறு வழியில்லாத மக்களும் கிளர்ச்சியில் சேர்ந்தும் பட்டாளத்தில் சேர்ந்தும் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சண்டைக்குப் போய் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்வார்கள் சிறைப்பிடிப்பதின் மூலம் இரு தேச சிறையையும் நிரப்பி விடுவார்கள். கணக்குப் பார்த்தால் இரு கக்ஷியிலும் பத்து லக்ஷக்கணக்கான மக்கள் உயிர் விட்டிருப்பார்கள். பிறகு இருவரும் ராஜியாகப் போயோ அல்லது யாராவது ஒருவர் ஜெயித்தோ இருப்பார்கள்.

ஜெயம் பெற்றவர்களுக்கு முதலோடு முதல் சேரும், அல்லது தங்கள் முதல் என்றும் குறையாத மாதிரியில் பத்திரமேற்பட்டிருக்கும். ஆனால் சுட்டுக் கொண்டு செத்தவர்களுக்கு சுடுகாடும் அவர்கள் பெண் ஜாதிகளுக்கு சிறு பிச்சையும் அல்லாமல் மற்ற ஏழை மக்களுக்கு என்ன பயன் என்பதை யோசித்துப் பாருங்கள். அமெரிக்கா குடி அரசு நாடாவதற்கும் அன்னிய ஆக்ஷியைத் துரத்துவதற்கும் அமெரிக்க ஏழைமக்கள் தொழிலாளி மக்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் எவ்வளவு உயிர்ப்பலி கொடுத்திருப்பார்கள் என்பதை அமெரிக்கா விடுதலைச் சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள். இன்று அதன் பயனாக உலகில் அமெரிக்காவிலேயே அதிகமான செல்வவான்களும், வியாபாரிகளும், விவசாயப் பெருக்கும் இருந்து வருகின்றன. ஆனால் ஏழைகள் படும் கஷ்டமும் வேலையில்லாத பட்டினியும் தொழிலாளிகள் அனுபவிக்கும் கொடுமையும் அமெரிக்காவில் இன்றைய தினம் இருந்து வருவது வேறு எந்த நாட்டிற்கும் குறைந்ததல்ல.

தோழர்களே! அமெரிக்கா தேசாபிமானத்தின் தன்மையும் அதன் பயனையும் சிந்தித்துப் பாருங்கள். அமெரிக்கா அன்னிய ஆக்ஷியை ஒழித்தாலும் ஒரு அரசனையே விரட்டி விட்டு “குடிகளின் ஆக்ஷி” ஏற்படுத்திக் கொண்டதாலும் ஏழைமக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது என்பதை மற்றொரு தரம் யோசித்துப் பாருங்கள்.

இந்த லங்கையில் இருந்து கொண்டு இந்திய தேசாபிமானம் பேசும் தேசிய வீரர்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள், அவர்கள் ஏறக்குறைய அத்தனை பேருக்கும் 100க்கு 90 பேர் இந்தியா முதலிய தேசத்தில் இருந்து வந்து இலங்கை தேசத்தை சுரண்டிக் கொண்டு போக இருக்கிறவர்களும் அவர்களுக்கு உதவியாளர்களாய் - அடிமைகளாய் இருப்பவர்களும் ஆகும்.

லேவாதேவிகாரர்கள் பெரிதும் மாதம் 100க்கு 12 வரை வட்டி வாங்கி ஏழை மக்களையும் இலங்கைவாசிகளையும் பாப்பராக்கி கொள்ளை கொண்டு போக வந்தவர்களும், விவசாயக்காரர் பெரிதும் இலங்கை பூமிகளை ஏராளமாய் கைப்பற்றி விவசாயம் செய்து கூலிகள் வயிற்றில் அடித்து பொருள் சேர்த்து கொள்ளை கொண்டு போக வந்தவர்களும், வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்து இலங்கை செல்வத்தை கொள்ளை கொண்டு போக வந்தவர்களும், உத்தியோகஸ்தர்கள் இலங்கை ஆக்ஷியில் வந்து புகுந்து இலங்கையர்களின் அனுபவத்தில் மண்ணைப் போட்டு பணம் சுரண்டிக் கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும் ஆணவம் பிடித்த வன்னெஞ்ச பார்ப்பனர்களுமாகக் கூடிக் கொண்டு இந்திய தேசாபிமானக் கூப்பாடு போடுகின்றார்கள்.

வெள்ளைக்காரனான அன்னியன் 100 -க்கு வருஷம் 6 வட்டிக்கு கொடுத்தால் கருப்பனான அன்னியன் 100க்கு ¯மாதம் 6 வட்டிக்கு கொடுக்கிறான். வெள்ளையன் பணக்காரர்களிடம் வட்டி வாங்கினால் கருப்பன் ஏழைகளிடம், கூலிகளிடம் வட்டி வாங்கி கொடுமைப் படுத்துகிறான்.

இந்தப் படி மக்களை சதித்து கொள்ளை அடிப்பவர்களே (வெள்ளையரிலும், கருப்பர்களிலும்) எங்கும் கடவுளபிமானம் மதாபிமானம் தேச அபிமானம் பேசுகிறார்கள்.

ஆகவே இவ்விஷயங்களை அதாவது கடவுள், மதம், தேசம், என்கின்ற விஷயங்களை இனி அறவே மறந்து விடுங்கள். அவை ஒரு நாளும் கஷ்டப்படும் மக்களுக்குப் பயனளிக்காது, உலகில் ஏழை பணக்காரன் என்று இரண்டு வகுப்புக்கள் இருக்கவும் ஏழைகளைத் தொழிலாளிகளை, பணக்காரரும் சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாய் வாழவும் தான் பயன்படும்.

- குடி அரசு- 20.11.32

தேசியம், தேசம் என்பவைகளின் யோக்கியதையை ஆழமாக, தன் அனுபவ அறிவின் மூலமாக அறிவுப்பூர்வமாக விளக்கிவிட்டார் பெரியார். இந்த உரை மட்டுமல்ல, குடி அரசில் தேசியம் குறித்து பல்வேறு கட்டுரைகளையும் எழுதி தேசிய இன விடுதலை என்பதில் உள்ள பித்தலாட்டத்தை நாம் எளிதில் புரிந்துகொள்ள வைக்கிறார் பெரியார்.

முதலாளித்துவ சுரண்டல் தத்துவமாகவே இருந்தாலும், தேசிய இன விடுதலை பேசும் ஐரோப்பிய, உலக நாடுகளில் ஒடுக்கும் தேசிய இனத்துக்கென்று ஒரு பொது மொழி இருக்கும், பொதுப் பண்பாடு இருக்கும். பொதுவான நிலப்பரப்பும் இருக்கும். ஆனால் இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களுக்குள்ளும் மோதலை உருவாக்கி, தேசிய இனங்களுக்கிடையே போரை உருவாக்கி அந்த மோதலில், அந்தத் வெப்பத்தில் கதகதப்பாகச் சுரண்டலை நடத்திவரும் பார்ப்பனர்கள் ஒரு தனித்த தேசிய இனமும் கிடையாது. எந்த தேசிய இன வரையறைகளும் அவர்களுக்குப் பொருந்தவும் பொருந்தாது. இந்தியா முழுமைக்கும் அவர்களை இணைப்பது, இந்தியாவையும் இணைப்பது அவர்களது சுரண்டல் ஆயுதமான சமஸ்கிருதம், வர்ணாஸ்ரமம், மனுதர்மம், இந்துமதம், இராமாயண, பாரத புராணங்கள், இந்துக் கடவுள்கள் ஆகியவைகளே. அனைத்து தேசிய இனங்களுக்கும் எதிரியான ஆரிய இனத்தையும் அவர்தம் அடையாளங்களையும் அழிக்க திராவிடர் என்ற தத்துவமே தேவையானது. அறிவியல் பூர்வமாக நிருபிக்கவும்பட்டது.

இந்தியா முழுவதிலும் கிளைகளைப் பரப்பி அனைத்து மாநிலங்களையும் சுரண்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு அந்தணனான டி.வி.எஸ் அய்யங்கார்களுக்கும், ஸ்ரீராம் குழும பார்ப்பனர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ் ஸையும், பார்ப்பனர்களையும் தோள்மீது தாங்கிக்கொண்டு அவர்களுக்குச் சேவகம் செய்துகொண்டு அதன் பயனாக கர்நாடகாவிலும் பல்வேறு வடமாநிலங்களிலும் பல்லாயிரங்கோடி முதலீடுகளில் தொழில்களை நடத்திவரும் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற பார்ப்பன அடிமைகளுக்கும் இந்தத் தேசிய இனவிடுதலை பயனாக இருக்கலாம். அதே பொள்ளாச்சி பகுதியில் டீக்கடையில்கூட தனி இடத்தில் மறைவாக உட்கார வைக்கப்பட்டு சிரட்டையில் டீ குடிக்க வைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு தேசிய இன விடுதலையால் என்ன பயன்? உணவகங்களில் தரையில் உட்கார வைக்கப்பட்டு சிற்றுண்டி உண்ண வைக்கப்படும் சமுதாயத்துக்கு என்ன பயன்? கவுண்டர் டீஸ்டால் உங்கள் தேசிய இனப் புரட்சியால் கவுண்டர் தேநீரகம் என்று வேண்டுமானால் மாறலாம். கவுண்டர் என்ற இழிவோ, அந்தக் கவுண்டரால் நடைமுறைப்படுத்தப்படும் இழிவோ மாறுமா?

தேசிய இனம் என்ற கருத்தியலால் இதுவரை அப்படி ஒரு மாறுதல் நடந்தது என்ற சிறு குறிப்பாவது, ஒரு செய்தியாவது உள்ளதா? சாணிப்பாலையும், சவுக்கடிகளையும் ஒழித்தது எந்த தேசிய இனப்புரட்சி? கள்ளுக்கடைகளில்கூட வைக்கப்பட்டிருந்த மூன்று சொம்புகளை உடைத்தெறிந்தது எந்த தேசிய இனப்புரட்சி? மனுதர்மத்தைக் கொளுத்தியது; இராமாயணத்தை எரித்தது; இராமனை எரித்தது; இந்திய அரசியல் சட்டத்தையே கொளுத்தியது இவையெல்லாம் எந்த தேசிய இனப்புரட்சி? அந்த வகையாக புரட்சிதான் தமிழனுக்குத் இன்றும் தேவை. அதைச் செய்து காட்டியதும், இறுதி முடிவு கட்டப் போவதும் திராவிடர் என்னும் கருத்தியலே. அந்தச் சொல் தமிழா? அதை யார் யார், எதற்காகப் பயன்படுத்தினார்கள், அந்தச் சொல் உங்கள் வரையறைக்குள் வருமா என்பதெல்லாம் அந்தக் கருத்தியலால் பயன்பெறும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையற்ற ஆராய்ச்சி. எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்படாத இலக்கியம் திராவிடம்.

ஒரு தேவை கருதி, சூழல் கருதி, நோய் கருதி பெரியாரால் கையாளப்பட்ட மருத்துவமே திராவிடர் கருத்தியல். அந்த நோயின் அழிவுதான் அதற்கான அறிவியல்பூர்வமான நிருபணம். அந்த நோயின் அழிவிற்குப் பிறகு தான் அந்த மருத்துவத்தின் தேவை அற்றுப்போகும். உலகெங்கிலும் இப்படிப்பட்ட தேவை கருதியே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் சொன்னதற்காகவோ, ஐரோப்பாக்காரன் சொன்னதற்காகவோ அவர்கள் சொன்னபடி இம்மி அளவுகூட மாறாமல் எந்த நாட்டிலும் தேசிய இனப்புரட்சி நடந்ததில்லை. அது குறித்து தோழர் சுபவீ அவர்கள் தமது “பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்” என்ற நூலில் விளக்கியுள்ளார்.

“தேசிய இனங்கள் தங்களின் சுயநிர்ணய உரிமை அல்லது தன்னுரிமைக்காக நடத்தும் போராட்டங்களையே நாம் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் என்று அழைக்கிறோம். தங்கள் தேசிய இனத்தின் சமூக, அரசியல், பொருளாராரச் சிக்கல்களுக்கான தீர்வை தாமே எடுக்கும் உரிமைதான் தன்னுரிமை. இத்தகைய போராட்டங்கள் அடிப்படையில் இரு குணங்களைக் கொண்டவை. அடையாளம், ஜனநாயக உரிமை என்னும் இரு அடிப்படைகளில்தாம் தேசிய இனப்போராட்டங்கள் வலிமை பெறுகின்றன. அடையாளம் என்பது என்ன, மொழியா, மதமா, மரபினமா, புவியியல் தன்மையா என்னும் கேள்விக்குப் பல்வேறு விடைகள் உள்ளன. மொழிவழி தேசியம், மதவழித்தேசியம், நிலவழித்தேசியம் என்று எல்லா வகை அடையாளங்களும் உலக நாடுகளில் காணப்படுகின்றன. ‘அயர்ஷ் மொழி பேசும் நாங்கள் தனித் தேசிய இனம், எங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும்’ என்றுதான் அயர்லாந்துப்போராட்டம் எழுந்தது, அது மொழிவழி தேசியம்.

‘இஸ்லாமியர்களாகிய எங்களுக்குத் தனிநாடு வேண்டும்’ என்பது தான் இந்திய முஸ்லீம் லீக்கின் கோரிக்கை அப்படித் தான் பாகிஸ்தான் பிரிந்துபோனது. அது மதவழி தேசியம். பஞ்சாபியர்கள் என்னும் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள், இந்துக்கள், இசுலாமியர்கள் என்று மத அடிப்படையில் பிரிக்கப்பட்டு கிழக்கு பஞ்சாப் இந்தியாவோடும், மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானோடும் இணைக்கப்பட்டது. இனவழி தேசியத்தை மதவழி தேசியம் அங்கு வென்றது....

...அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கரையோரமாகக் கொண்டுள்ள மொரோக்கோ தொடக்கம், பாரசீக வளைகுடா வரை, 8 கோடி மக்களுக்கு மேலாக, சாராம்சத்தில் ஒரே மொழியைப் பேசுகின்றனர். ஒரே மதத்தைப் பின்பற்றுகின்றனர்... ஒரு காலத்தில், ஒரே அய்ரோப்பிய ஏகாதிபத்தியத்தினால் அனைவரும் ஒடுக்கப்பட்டனர். இத்தனை ஒற்றுமைகள் இருந்தும் அவர்கள் ஒரு நாட்டினராக இல்லாமல், இன்று பல்வேறு நாட்டினராகப் பிரிந்தே உள்ளனர். இந்த மக்களில் எவரையேனும் பார்த்து, நீங்கள் எந்தத் தேசிய இனத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டால் ஒருவர் கூட தான் அராபியர் என்று விடையளிக்கமாட்டார். மாறாக, மொரோக்கன் என்றோ, எகிப்தியன் என்றோ, ரோமனியன் என்றோதான் விடையளிப்பர்”....

..எனவே அடிப்படையில் தேசிய இனங்களுக்கான நாடுகளை அமைப்பது என்ற கேள்வி இப்போது எழுகின்றது. நில அடிப்படையில் தேசங்களும், நாடுகளும், அமைப்புகளும், கண்டங்களின் அடிப்படையில் ஏழு அரசுகள்தான் உலகில் இருக்க முடியும். மத அடிப்படையில் அமைந்தாலும் ஏழு, எட்டு அரசுகளுக்குள் அதிகம் போனால் பத்து அரசுகளுக்குள் உலகைப் பிரித்து விடமுடியும். மொழிக்கு ஒரு நாடென்றால், உலகில் பல்லாயிரம் நாடுகள் தோன்றி விடும். ஒரே மொழிக்காரர்கள் பல நாடுகளாகப் பிரிந்துள்ளனர். ஒரே நாட்டில் பல மொழிகள் பேசப்படுவதும் உண்டு. இனம், மதம் ஆகியவற்றிற்கும் இது பொருந்தும். ..

..காஷ்மீரில் மொழி, இனம், மதம் எனப் பல்வேறு அடிப்படையில் போராட்டம் நிகழ்கிறது. நாகலாந்து விடுதலைப் போராட்டம் வேறு மாதிரியானது. அங்கு ‘ஒரு பொது மொழி’ என்னும் கோட்பாடு பொருந்தவில்லை. ஒன்பது மொழிகளைக் கொண்ட நாகா இனக்குழுவினர் ஒருங்கிணைந்து, நாகாலாந்தின் விடுதலை கோரி இனவழித் தேசியப் போரில் ஈடுபட்டு உள்ளனர். இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் வேளையில், தேசிய இனப் போராட்டத்தில், பலவிடங்களில் மொழி முதன்மைப் பாத்திரம் வகிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், மொழியின் அடிப்படையில் மட்டுமோ அல்லது வேறு எந்த ஒன்றின் அடிப்படையில் மட்டுமோ தேசிய இனப் போராட்டம் எழும் என்று கூற முடியவில்லை.

தங்களின் அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்வதென்பதே தேசிய இனப் போராட்டத்தின் முதல் அடிப்படையாக உள்ளது. தங்களின் முதன்மையான அடையாளம் எது என்பதில் இடம், சூழலுக்கு ஏற்ப வேறுபாடுகள் ஏற்படுகின்றன...”

தோழர் பெரியார், தோழர் சுபவீ ஆகியோரது கருத்துக்களுக்குப் பிறகு, பேராசிரியர் ஜெயராமன், மணியரசன் கும்பல்களின் ஆராய்ச்சிகளை மீண்டும் படித்துப்பாருங்கள்.

“பெரியாரிடம் கோட்பாட்டுக் குறைபாடுகளும் உத்திகளில் போதாமைகளும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை,” “இனம், தேசிய இனம், தேசம் குறித்த சமூக அறிவியல் வரையறைகளைப் புறக்கணித்ததால், இவை சார்ந்த கருத்தியல் எதையும் பெரியாரால் உருவாக்க முடியவில்லை.”

யாரிடம் கோட்பாட்டுப் பஞ்சம் என்பதும், யாரிடம் சமூக அறிவியல் வரையறைகள் இல்லை என்பதும் பார்ப்பனத்தனமான இந்தக் குற்றச்சாட்டுகளின் யோக்கியதை என்ன என்பதும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது.

(தொடரும் )

- அதிஅசுரன் ( atthamarai@gmail.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12255:2011-01-06-07-36-21&catid=1:articles&Itemid=264

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தோழர் மின்னல்...

உங்களின் கருத்துக்களை எவையும் எம்மை புண்படுத்தவில்லை, எனது கருத்துக்கள் நான் உங்களைப்புண்படுத்தும்படியாக பதிந்துள்ளன என்று நினைக்கிறேன். எனது கடந்த பதிவினை அவசரத்தில் பதிந்ததால் ஒரு சில வார்த்தைகளில் பதிந்துவிட்டுச்சென்றேன். அது பிழையாக உங்களுக்கு புரிதலை உண்டுசெய்துவிட்டது என்று எண்ணுகிறேன். ஆகவே எம்மை பொறுத்தருளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.,?

வீரவேங்கைகள் தளம் சிறப்பாக அமைந்துள்ளது. அதில் 30 ஆண்டுகள் முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற செய்திகள், நிகழ்வுகளையும் ஆவணங்களாக பதிய வேண்டும் என்ற எனது எண்ணத்தை தெரிவித்திருந்தேன்... அப்பையா அவர்களுடன் நெருங்கிப்பழகியவர்கள், எங்கள் அமைப்பினர். அவர்களின் மூலமே அப்பையா என்பவரைப்பற்றியும், இதர மூத்த போராளிகள் பெரியாரிய சிந்தனையில் தமிழகத்தில் வளர்ந்ததைப்பற்றியும் அறிந்துகொண்டேன். இக்கால ஈழத்தலைமுறையினருக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் இவ் உண்மைகளை வீரவேங்கைகள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது அவா.

திராவிட மாணவன் எனது கருத்துக்கள் உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

கொளத்தூர் மணி அண்ணன் உட்பட்ட உறவுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்பை மறுத்தோ அல்லது அவர்களை விமர்சித்தோ எனது கருத்துக்கள் அமையவில்லை. (அப்படி அவர்களை விமர்சிக்கிற எந்தத் தகுதியும் எனக்கில்லை)

தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் உட்பட்ட இனங்களை உள்ளடக்கியதே திராவிடக் குடும்பம்.

மற்ற மூன்று இனத்தவர்களும், திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது கிடையாது ஆனால் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகளின் பெயரில் தமிழைவிட திராவிடம் என்பதே நிலைத்து இருக்கிறது.

திராவிடக் குடும்பத்தில் உள்ள மற்ற மூன்று பிரிவினராலும்(மாநிலத்தினாலும்) நதி நீர் உட்பட்ட முக்கிய பிரச்சினைகளில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். தமிழர்களைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் இவர்களையும் உள்ளடக்கிய திராவிடத்தை ஏன் தமிழக கட்சிகள் கொண்டுள்ளன என்ற ஆதங்கத்திலேயே எனது கருத்து இருந்தது.

மற்றபடி தமிழகத்தில் தீண்டாமை, பிற்போக்குத்தனம் உட்பட்டவற்கு எதிராகவும், தமிழர் நலன்களிற்கு ஆதரவாக போராடுபவர்களை விமர்சிக்கும் படியாக எனது கருத்தை எழுதப்படவில்லை

தோழர் மின்னல் "மன்னிப்பு" என்பது தமிழல்ல. அது உருது மொழிச்சொல். தமிழில் அதை மென்மையாக "பொறுத்தருள்க" என்போம்...

திராவிட மாணவன் எனது கருத்துக்கள் உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

Edited by திராவிட மாணவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் உட்பட்ட இனங்களை உள்ளடக்கியதே திராவிடக் குடும்பம்.

மற்ற மூன்று இனத்தவர்களும், திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது கிடையாது ஆனால் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகளின் பெயரில் தமிழைவிட திராவிடம் என்பதே நிலைத்து இருக்கிறது.

திராவிடக் குடும்பத்தில் உள்ள மற்ற மூன்று பிரிவினராலும்(மாநிலத்தினாலும்) நதி நீர் உட்பட்ட முக்கிய பிரச்சினைகளில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். தமிழர்களைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் இவர்களையும் உள்ளடக்கிய திராவிடத்தை ஏன் தமிழக கட்சிகள் கொண்டுள்ளன என்ற ஆதங்கத்திலேயே எனது கருத்து இருந்தது.

இது தொடர்பாக தந்தைப்பெரியார் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.

திராவிட"ர்" என்பதிலிருந்து சறுக்கிச்சென்று திராவிட அரசியல் கட்சிகள் பற்றியும் ஏன் திராவிடம் என்கிறோம் என்பதைப்பற்றியும் கீழ்க்காணும் காணொளியில் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் உரையினை 94 மணித்துளிகள் நேரம் ஒதுக்கி கேளுங்கள்...

தீண்டாமை, பிற்போக்குத்தனம் உட்பட்டவற்கு எதிராகவும், தமிழர் நலன்களிற்கு ஆதரவாக போராடுபவர்களை

இதற்கு பெயர் தான் திராவிடம்,,

தமிழர் விடுதலைக்கு ஆயுதமான " திராவிடம்" என்ற சொல்லை தமிழக அரசியல் கட்சிகள் "திராவிட" என்று பயன்படுத்திக்கொண்டிருப்பதற்தாக திராவிடத்தை எதிர்ப்போம் என்றால்...

தமிழீழத்தில் துரோகிகள் "ஈழம்" என்ற பெயரில்தானே அரசியல் கட்சிகள் நடத்துகிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் விடுதலை ஆயுதம் திராவிடம் என்று எவ்வாறு வரையறை செய்கின்றீர்கள். திரு. திராவிட மாணவன்?? தென் மாநிலத்தவருக்கு ஒட்டுமொத்தமானது என்று சொல்லித் தானே தமிழனின் தலையில் கட்டினீர்கள்?

நிச்சயம் தமிழனுக்குத் திராவிடம் என்பது தீர்வு அல்ல. ராமசாமி செய்தது வெறும் பழிக்குப் பழி. அது ஒருபோதுமே தமிழனுக்கான தீர்வாகாது. பர்ரப்பானி எப்படி ஆதிக்கம் செலுத்த முனைந்ததாக கருதப்பட்டதோ, அதே பதிலலைத் திராவிடம் செய்ய முனைந்தது. ஒரு வகையில் பார்ப்பானிக்கு நிகரான சாதிவெறி அதனிடத்திலும் இருந்தது.

-----------------

நிழலி.

கண்ட கண்ட பித்தலாட்டங்களை வெட்டி ஒட்டுவதைத் தடை செய்யமாட்டீர்களா?

பெரியார் செய்த நன்மைகளை வரவேற்க வேண்டும் அதேநேரம் பெரியார் செய்ததெல்லாமே நன்மை என வாதாடும் ரசிக மனப்பான்மையிலிருந்து வெளிவரவேண்டும். பகுத்தறிவை பாவித்தால் திராவிட மாயை பற்றிய தெளிவு பிறக்கும்.

எது மாயை எது நிசம் என்பதை போராடும் மக்களே தீர்மானிப்பார்கள். எந்த வடிவில் அடக்குமுறை நிகழ்கிறதோ அதன் எதிர் அடையாளத்தின் அடிப்படையிலேயே மக்கள் அணிதிரள்வர்.அடையாள அரசியலின் அடிப்படை அது தான்.இதனை புரிந்து கொள்ளாத இயக்கங்களும் தலைவர்களும் வரலாற்றில் அழிந்து போவார்கள்.

ஒரு களத்தில் இருக்கும் அடக்குமுறை இன்னொரு களத்தில் இல்லை.அவ் அவ் களங்களில் இருக்கும் அடக்குமுறைகளின் வடிவங்களுக்கு ஏற்பவே இயக்கங்களும் போராட்டங்களும் எழும்.இயங்கியல் விதி அது.

பல்வேறு கருதுக்கள் வராலாறுகள் எழுதப்பட்டு விட்டன.இவை எவற்றுக்கும் `இந்துமத` வெறியர்களிடம் பதில் இல்லை.ஆனால் கருதுக்களைத் `தடை` செய்து, தலையை மண்ணில் புதைத்துக் கொள்ளும் தீக் கோழித் தனமான முட்டாள்த்தனமே மிகுந்து இருக்கிறது.

பலரும் ஈழத் தமிழத்தேசிய இனப் போரையும், தமிழ் நாட்டில் சொல்லப்படும் தேசியம் என்னும் சொல்லின் பின்னால் இருக்கும் அர்ததையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கின்றனர்.

ஈழத்தில் , அறிவியல் அடிப்படையில் பார்த்தால் தமிழர் என்று சொல்லப்படுபவர்களும் சிங்கலவர்களும் ஒரே இனத்தவரே.

ஈழத்தின் தென்பகுதியில் குறிப்பாக ஒரு நூறு ஆண்டுகளின் முன் பவுத்ததையும் ,பாலிய மொழிக் கலப்பினால் உருவான சிங்கள மொழியையும் கொண்டு `சிங்கள` இனத் தேசியம் , மாகாவம்சம் என்னும் கதையாடல் மூலம் தோற்றம் பெறுகிறது.

இது தமிழர்கள் பவுதர்களாக இருந்தார்கள் என்னும் உண்மையை மறுதலித்து ,தூய இன மத துவேசமாக உருப்பெறுகிறது.அதே நேரம் யாழ்மையவாதச் சிந்தனையும் தமிழ் பவுத்ததை நிராகரித்து, சைவ வேளாளத் தேசியத்தை யாழ் தீபகற்பத்தில் வளர்த்தது.

ஆனால் பெரு வெறியாக உருவாகிய சிங்கள பவுத்த பேரின்வாதமே, தமிழ்த் தேசிய இன அடையாளத்தை , யாழ் தீபகற்பத்திற்க்கு வெளியாலும் கொண்டு வந்து, தமிழத் தேசிய இன விடுதலைப் போராக மாற்றியது.இங்கு தமிழத் தேசியம் என்னும் அடையாளம் ,சிங்கள பவுத்த பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாள அரசியலாக உருவெடுத்தது.

ஆனால் தமிழ் நாட்டின் வரலாறு இது அல்ல.அங்கே பண்டைய பூர்வ குடிகளான திராவிட இனத்தினருக்கும் ,வந்தேறிகளான ஆரியருகும் பன்னெடுங்காலமாக சமூக பண்பாட்டு அடிப்படையில் ஒடுக்கு முறை நிகழ்ந்தது. இந்த மத கலாச்சார அடிப்படையில் நிக்ழந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த அரசியல் இயககமே `திராவிட` இயக்கம். அங்கே `தமிழர் ` என்னும் அடையாளத்தின் அடிப்படையில் இல்லாமல் . `பூர்வ` குடிகள் , அண்மையில் வந்தோர் என்னும் அடிப்படையிலும், சாதிய அடிப்படை , சாதிகள் அற்ற அடிப்படை என்னும் நிலையிலுமே போராட்டங்கள் எழுந்தன. அடக்கு முறையின் வடிவம் வெவ்வேறாக இருக்கும் நிலையில், அது சார்ந்த போராட்ட அரசியலின் அடையாளமும் வேறு வேறாந்தாகவே இருக்கும்.

நான் இந்து மத வெறியன் இல்லை பெரியார் சொன்ன பகுத்தறிவோடு சிந்நதிப்பவன். தமிழனை தவிர வேறு எந்த இனமும் திராவிடம் என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை என்பதுதான் யதார்த்தம் திராவிடம் இல்லாதொழிந்து கனகாலம் ஆகிவிட்டது. திராவிடத்துக்குள் மிஞ்சியிருப்பது தமிழன்தான் இன்றும் தமிழன் தன்னை உணராதுவிட்டால் நளை தமிழன் என்ற இடையாளமும் இல்லாது போய்விடும்.

இதுவரைக்கும் வாசித்தவைகளில் இருந்து எந்த முடிவுக்கும் வர முடியவில்லையே.. தமிழர்கள் என்ற வரையறைக்குள் யார் எல்லாம் உள்ளடங்குவர்?

இந்த தமிழ்த் தேசியம் என்பது தமிழ் நாட்டு தமிழர்களுக்கு மட்டும் தானே? இன்னும் திராவிடர் என்று சொல்லிகொள்வதினால் என்ன நன்மை இருக்க கூடும்? திராவிடம் என்ற சொல் இளைய தலைமுறைக்கு அந்நியப் பட்டு நிற்கிறதே...

நான் இந்து மத வெறியன் இல்லை பெரியார் சொன்ன பகுத்தறிவோடு சிந்நதிப்பவன். தமிழனை தவிர வேறு எந்த இனமும் திராவிடம் என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை என்பதுதான் யதார்த்தம் திராவிடம் இல்லாதொழிந்து கனகாலம் ஆகிவிட்டது. திராவிடத்துக்குள் மிஞ்சியிருப்பது தமிழன்தான் இன்றும் தமிழன் தன்னை உணராதுவிட்டால் நளை தமிழன் என்ற இடையாளமும் இல்லாது போய்விடும்.

தமிழ்ர் என்றால் யார் என்று வரயறை செய்வீர்கள்.?

இதுவரைக்கும் வாசித்தவைகளில் இருந்து எந்த முடிவுக்கும் வர முடியவில்லையே.. தமிழர்கள் என்ற வரையறைக்குள் யார் எல்லாம் உள்ளடங்குவர்?

எவர் எவரை சிங்களவர் அல்ல என சிங்களப் பேரினவாதாம் கூறுகிறதோ அவர்கள் எல்லாம், ஈழத்தில் தமிழர்கள்.

//இந்த தமிழ்த் தேசியம் என்பது தமிழ் நாட்டு தமிழர்களுக்கு மட்டும் தானே? //

தமிழத் தேசிய விடுதலை என்பது , ஈழத்தில் மட்டுமே சாதியப்படும்.ஏனெனில் அங்கே தான் தமிழத் தேசிய ஒடுக்குமுறை நிகழ்கிறது.

இன்னும் திராவிடர் என்று சொல்லிகொள்வதினால் என்ன நன்மை இருக்க கூடும்? திராவிடம் என்ற சொல் இளைய தலைமுறைக்கு அந்நியப் பட்டு நிற்கிறதே...க

நாம் தமிழர் கட்ச்சி கூட ,தமிழகத்தில் , தனினாடு கேட்க்கவில்லை. இந்திய தேசியத்தை எதிர்த்து, தமிழருக்கு தமிழ் மானிலத்தில் மேலும் உரிமைகளைக் கோருகிறது. அதன் எதிரியாக , இந்திய ஆரியமும், இந்து மதமும் இருக்கிறது. ஆனால் அது கண்மூடித் தனமாக , தூய தமிழ் இனம் என்னும் பிற்போக்குத் தனமான அறிவியல் அற்ற ஒரு கோட்பாட்டை முன் வைக்கிறது. இதன் நோக்கம் ஒன்று தான்.

அது சீமான் ஒரு `தூய தமிழன்` , மற்றவர் எல்லாம் தமிழர்கள் அல்ல, வைகோ, கருணானேண்டிய்,விஜயகாந்த்,செயலாலிதா ஆகியோர். இதன் மூலம் அது `சீமானைத்` தலைவராக்கும் ஒரு செயற்கையான `தூய தமிழன்` கோட்பாட்டை முன் வைத்து, நான் மேற்காட்டிய `முரண்பாடுகளை` தனது கொள்கையாக முன் வைக்கிறது.

மாற்றாக `சீமான்` செய்திருக்க வேண்டியது கருணானிதியின் துரோகத்தை முன் நிறுத்து, பெரியார் வழியில் போராட்டங்களை முன் வைத்திருக்க் வேண்டும்.இதன் மூலம் ஒரு பரந்த அணியயை அவர் உருவாக்கி இருக்கலாம்.

தமிழ்னாட்டின் வட மாவட்டங்களில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் ஆந்திர, கர்னாடக அடியை உடையவர்கள்.தென் மானிலத்தவர் கேரள அடியை உடையவர்கள். நாம் தமிழர், இவர்கள் அனைவரையும் `தமிழரல்ல` என்று சொல்லி பிரிக்கிறது.ே

இதன் மூலம் ஓர் அணியில் நிற்க்க வேண்டிய ஈழ ஆதரவு அணியினர் சிதறிப் போவதே நடக்கப் போகிறது.

இதன் மூலம் அதிமுகாவும்,திமுகாவும், ததிமுகாவுமே பயன் அடையப் போகின்றன.

நன்றி நாரதர்.

தமிழ்னாட்டின் வட மாவட்டங்களில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் ஆந்திர, கர்னாடக அடியை உடையவர்கள்.தென் மானிலத்தவர் கேரள அடியை உடையவர்கள். நாம் தமிழர், இவர்கள் அனைவரையும் `தமிழரல்ல` என்று சொல்லி பிரிக்கிறது.ே

ஆனால் இது கொஞ்சம் மிகையாக உள்ளது போல் தோன்றுகிறது. நாம் தமிழர் கட்சி தமிழர்களை "இம்மண்ணில் பிறந்த, இம்மண்ணின் விழுமியங்களை பண்பாடாக, வாழ்வியல் நெறியாக கொண்ட, இம்மண்ணின் மொழியை பேசுகிற இம்மண்ணின் மக்கள்" என்றே ஆவணத்தில் குறிப்பிடுவதாக எண்ணுகிறேன். தற்போது உள்ள சூழலில் தமிழகத்தில் தமிழ்த் தேசியம் என்பது ஒவ்வாதுதானோ?

இதன் மூலம் ஓர் அணியில் நிற்க்க வேண்டிய ஈழ ஆதரவு அணியினர் சிதறிப் போவதே நடக்கப் போகிறது

நானும் அதையே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்!

பெரியாரையோ, இல்லை பெரியார் கொள்கைகள் வழிபடப்படலோ ஒரு சமூகவியல் மேம்பாட்டு பொறியாக நான் கருதியது இல்லை!

இன்னும் சொல்லப்போனால் பெரியாரிசத்தின் கருத்தியலில் முழுமையான உடன்பாடும் நான் கொண்டிருக்க வில்லை. ஆனால் அங்கே இருந்திருக்கின்ற நன்மைகள் அவற்றிற்கு இன்னும் இருக்கின்ற தேவைப்பாடுகள் கருதி வேண்டியவற்றை உள்வாங்கலாம். பொருத்தம் இல்லாதனவற்றை நீக்கிவிடலாம். தவிர ஆதாரத்தையே அசுத்தம் பண்ணி அனைத்தையும் கெடவைக்கின்ற பணி பொருத்தம் அற்றது என்பதே எனது வாதம்!

கடவுள் இல்லை என்பதோ? இந்துமதம் மானிட முற்றேற்றத்தின் எதிரி எனபதும் அல்ல எனது வாதம்!

பிரபாகரனிடம் இருந்த புலிகளின் தலமைப் பொறுப்பு பின்னாளில் டக்ளஸிடம் போய் இருந்தால் அதன் கொள்கைகள் எப்படியானதாய் மாற்றாம் கண்டிருக்கும்? பல்லாண்டுகளின் பின்னால் பிரபாகரன் ஒரு ஒரு மைய்யக் கருத்திற்காக பிறள்வடைந்து போய் உள்ள அந்த புதுச் செருகல் கோட்பாடு கொண்டாடப்பட வேண்டியதுதானா?

இப்போது நித்தியானந்தாவைப் பார்ப்போம்!

இவரது பண்பின் கேவலம் உலகமே பார்தாகிவிட்டது, இருந்தும் இவரிடம் இருக்கும் பணபலதின் அரூபசக்திகளின் செல்வாக்கால் மதுரை ஆதீனதீனத்தின் தலைமைப் பதவி கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

எனவே இதுவெ ஒரு போதுமான உதாரணமாகின்றது; எப்படிப் பட்ட கடையரேரும் பணபலத்தின் அருள்பாலிப்பால் எந்தப் பொறுப்பையும் பெறமுடியும்!

எனவே காலாகாலமாய் இப்படிப்பட்ட தறுதலை அதிகாரங்கள் தம் கள்ளங்களுக்கு சார்புடைய சட்டங்களை மதச் சடங்குகளும் ஆக்கி இருக்வைதிருக்கின்றார்கள்!!!

பிரித்தானியார் ஆட்சிக்காலத்தில் கூட, கொலையாளி ஒரு பிராமணனாய் இருந்தால் தூக்கூத்தண்டனை வளங்க முடியாது என்ற ஒரு சட்டம் இருந்திருக்கின்றது இந்தியாவில்!

நாட்டின் பஞ்சம் ஒளிய பிராணமணுக்கு கோதானம் செய்யவேண்டும் என்ற ஒரு மரபு இருந்திருக்கின்றது!

இப்படியான அறியாமையை கொண்டாடுவதுதான் தெய்வ பக்தியின் செயலா?

இப்படியான விதிகளை படைத்தது சோ என்றோ? இல்லை சு சுவாமி என்றோ பழியை அவர்கள் தலையிலா போடமுடியும்? பார்பானிய வெறி என்றுதானே சொல்ல முடியும்.

பிராமண வெறி என்பது உதைக்கப்பட வேண்டியதே, ஆனால் பிராமணர்கள் மீதான வெறி அல்ல அது.

சு சுவாமிக்கு முட்டை அடிக்கப்பட்ட போது பிராமண வெறி தன் அகோர பழிவாங்கும் குணத்தை எப்படி அம்மணமாக வெளிப்படுத்தியது. இதைவிட வேறு என்ன வேண்டும் அவர்கள் கேவலத்தச் சொல்வதற்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.