Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்திற்கு பணிந்து போகுமாறு தந்தை செல்வாவிடம் பெரியார் சொன்னாராம்: நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தமிழ் பைத்தியம் ரென்சன் ஆயிட்டாரு விடுங்கப்பா...

  • Replies 165
  • Views 17.4k
  • Created
  • Last Reply

இந்த லட்சணத்தில் ஏசு நாற்பது வருடம் உயிர் வாழ்ந்தார் . விவேகானந்தர் முப்பத்தி சொச்சம் இருந்தார் . கடவுள் நம்பிக்கை இல்லாததால் பெரியார் என்பது வருடம் இருந்தார் என கதை வேறு .

ஏசுவை நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் பின் பற்றுகின்றனர். விவேகானந்தாவை தெரியாத இந்துக்களே கிடையாது . பெரியாரை பின் பற்றுவோர் திராவிட நாட்டில் பத்து சதவிகிதம் கூட கிடையாது . எத்தனை வருடம் வாழ்ந்து உவ்வுலகை நாற வைத்தாய் என யாரும் கேட்க மாட்டார்கள் . எத்தனை பேர் நெஞ்சில் இருக்கிறாய் என கேட்பார்கள். பெரியாரை விட பன் மடங்கு ஏசுவும் விவேகாவும் மக்கள் மனங்களில் வாழவும் ஆளவும் செய்கின்றனர்

தோழர் தமிழ் பைத்தியம் ரென்சன் ஆயிட்டாரு விடுங்கப்பா...

அய்யா சாமி . நீர் செய்ய வேண்டிய வேலைகளை இங்கு நான் செய்து கொண்டு இருக்கிறேன் . என்னை பார்த்தால் உமக்கு இளக்காரமா இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா சாமி . நீர் செய்ய வேண்டிய வேலைகளை இங்கு நான் செய்து கொண்டு இருக்கிறேன் . என்னை பார்த்தால் உமக்கு இளக்காரமா இருக்கு

தோழர் .. நான் இந்தியத்தை ஒழித்துவிட்டுதான் மறு வேலை என்று இருக்கிறன்.. என்னை போய் இந்த களத்தில்... :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி தமாசு பண்ணினார்,

அதுக்கு, கோவிக்காதேங்கோ... தமிழ்பைத்தியம். :D

அய்யா சாமி . நீர் செய்ய வேண்டிய வேலைகளை இங்கு நான் செய்து கொண்டு இருக்கிறேன் . என்னை பார்த்தால் உமக்கு இளக்காரமா இருக்கு

சிவனே எண்டு இருக்கிற ஆளின்ர வேட்டிக்கை வேலியிலை போற ஓணானை பிடிச்சு விட நிக்கிறீயளே உருப்படுவியளா...?? :D

தோழர் .. நான் இந்தியத்தை ஒழித்துவிட்டுதான் மறு வேலை என்று இருக்கிறன்.. என்னை போய் இந்த களத்தில்... :icon_idea: :icon_idea:

முதல்ல இந்த திராவிடத்தை இருவரும் சேர்ந்து ஒழிப்போம் . ஏனெனில் தமிழ் நாட்டில் மட்டுமே இருக்கு . சீக்கிரம் ஒழிச்சு கட்டிடலாம் .அப்புறம் இந்தியத்தை பற்றி ரூம் போட்டு யோசிப்போம்

புரட்சி தமாசு பண்ணினார்,

அதுக்கு, கோவிக்காதேங்கோ... தமிழ்பைத்தியம். :D

அடுத்தவன் வாயை புடுங்குவதே அவரின் முதல் வேலை . பு த தே எனது நெருங்கிய நண்பர் . நானும் அவரும் சேர்ந்து திராவிடம் அழித்து தமிழியம் நிறுவலாம் என புதிய உறுதி கொண்டு இருக்கிறோம் .

அது சரி . அந்த சனியனின் படம் பார்த்து கதை சொல் விடை தெரிந்ததா ???

சிவனே எண்டு இருக்கிற ஆளின்ர வேட்டிக்கை வேலியிலை போற ஓணானை பிடிச்சு விட நிக்கிறீயளே உருப்படுவியளா...?? :D

நான் எழுதுறது ரொம்ப கொஞ்சம் . ரொம்ப எதிர்ப்பு கண்டா சைலன்ட் ஆகி விடுவேன் . ஆனா அவர் எழுத ஆரம்பிச்சா யாழ் காலத்தில எல்லாருக்கும் சேர்த்து அவரே எழுதிடுவார் . ஒரு வழிபண்ணிட்டு தான் ஓய்வார் . அதனால் தான் அவரை கூப்பிட்டேன் . வெற்றியோ தோல்வியோ முடிவு முக்கியம் அல்லவா ???

Edited by tamil paithiyam

நான் எழுதுறது ரொம்ப கொஞ்சம் . ரொம்ப எதிர்ப்பு கண்டா சைலன்ட் ஆகி விடுவேன் . ஆனா அவர் எழுத ஆரம்பிச்சா யாழ் காலத்தில எல்லாருக்கும் சேர்த்து அவரே எழுதிடுவார் . ஒரு வலி பண்ணிட்டு தான் ஓய்வார் . அதனால் தான் அவரை கூப்பிட்டேன் . வெற்றியோ தோல்வியோ முடிவு முக்கியம் அல்லவா

ஓ... அண்ணன் பேச்சு ஒண் வே ராபிக்கோ...??? திருப்பி வரவே படாது... ஞாபகத்திலை வைச்சு இருக்கன்..

தோழர் தமிழ்பைத்தியம் திராவிடமாணவன்..........திரியில் அழகான பதில் வழங்கி உள்ளீர்கள் ,நாம் இப்படியான பதிலைவழங்குவதை விட தமிழ் நாட்டு உறவாகிய நீங்கள் வழங்குவதுதான் எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.நன்றி..........

நான் திராவிடத்தை சிந்தாந்தமாக கொண்டிருக்கின்ற ஒரு தமிழன். திராவிட சிந்தனையை ஒழித்தால் அதுவே தமிழ் தேசியத்தின் இறுதித் தோல்வியாக இருக்கும்.

சீமான் போன்றவர்கள் வெறும் உணர்ச்சியின் அடிப்படையில் சிந்திக்காது செயற்படுகிறார்கள். இந்திய தேசியத்தை அழிக்கப்புறப்பட்ட சீமானை தன்னுடைய சகோதரர்களோடு மோத வைத்து பார்ப்பனிய சூழ்ச்சி மீண்டும் வெற்றி பெறுகிறது.

சீமான் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்த போதே அவருடைய நிலைப்பாடு புரிந்து விட்டது. ஒரு பெரும் சக்தியாக வளர வேண்டிய சீமான் கடைசியல் வாட்டாள் நாகராஜ் போன்ற கூட்டங்களில் ஒன்றாகிக் கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தயா.. சபேசன்.. அவர்கள் திரும்ப வந்ததை இட்டு மிக்க மகிழ்ச்சி..தோழர் சபேசன் .. நான் உங்களுடைய களத்தில் இதே பெயரில் முன்பு பின்னூட்டம் போட்டு கொண்டு இருந்தன் என்னை நினைவில் இருக்கிறதா..? :) :)

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வார்த்தை ஜாலங்களின் வெளிப்பாடு. ஏலவே விடுதலைப்புலிகளுக்கு அட்வைஸ் அள்ளிக்கொடுத்து முள்ளிவாய்க்காலில் அவர்களை திராவிடத்தின் 3 மணி நேர.. உண்ணாவிரதம் மூலம்.. வெற்றி பெற வைத்தவர்கள் :( இப்போ.. சீமானுக்கு திராவிட சித்தாந்த வகுப்பு எடுக்கிறார்கள். என்னே வேடிக்கை காணுங்கள்..! :lol:

பார்பர்னியம் தெளிவான எதிரி..! திராவிடம் தெரியாத எதிரி..! ஆரியம் தெரிந்த எதிரி..! மொத்தத்தில் எல்லாம் தமிழர்களுக்கு எதிரி தான். தமிழ் தேசியத்தை தவிர..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வார்த்தை ஜாலங்களின் வெளிப்பாடு. ஏலவே விடுதலைப்புலிகளுக்கு அட்வைஸ் அள்ளிக்கொடுத்து முள்ளிவாய்க்காலில் அவர்களை திராவிடத்தின் 3 மணி நேர.. உண்ணாவிரதம் மூலம்.. வெற்றி பெற வைத்தவர்கள் :( இப்போ.. சீமானுக்கு திராவிட சித்தாந்த வகுப்பு எடுக்கிறார்கள். என்னே வேடிக்கை காணுங்கள்..! :lol:

பார்பர்னியம் தெளிவான எதிரி..! திராவிடம் தெரியாத எதிரி..! ஆரியம் தெரிந்த எதிரி..! மொத்தத்தில் எல்லாம் தமிழர்களுக்கு எதிரி தான். தமிழ் தேசியத்தை தவிர..! :icon_idea:

அதை விட சிங்கள அரசுக்கு எதிராகக் கதைத்து விட்டு, அங்கே போய் மூஞ்சை காட்டி வருகினம். அது உங்களுக்குத் தெரியுமா? அதுக்கு ஆயிரம் நியாயம் சொல்லுகினமாம்...

Edited by தூயவன்

வணக்கம் தமிழ் தேசியன். இன்னும் ஒரு வாரத்தில் தற்போது செய்து வருகின்ற வேலையில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு என்னுடைய நேரத்தை நானே தீர்மானிக்க கூடிய வேலைi செய்ய இருப்பதால், யாழ் களத்திலும் என்னுடைய தளத்திலும் அதிகம் எழுதுவதாக முடிவெடுத்திருக்கிறேன்.

அதற்குள் இந்த விவாதம் என்னை இங்கே எழுத வைத்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அதை விட சிங்கள அரசுக்கு எதிராகக் கதைத்து விட்டு, அங்கே போய் மூஞ்சை காட்டி வருகினம். அது உங்களுக்குத் தெரியுமா? அதுக்கு ஆயிரம் நியாயம் சொல்லுகினமாம்...

தலைவருக்கு கிளிநொச்சி தக்க வைக்க.. வகுப்பு எடுத்தவர்கள் இப்போ.. டக்கிளசுக்கு சுமந்திரனுக்கு.. இணக்க அரசியல் வகுப்பு எடுப்பதாகக் கேள்வி தூயவன்..! :lol::icon_idea:

வணக்கம் தமிழ் தேசியன். இன்னும் ஒரு வாரத்தில் தற்போது செய்து வருகின்ற வேலையில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு என்னுடைய நேரத்தை நானே தீர்மானிக்க கூடிய வேலைi செய்ய இருப்பதால், யாழ் களத்திலும் என்னுடைய தளத்திலும் அதிகம் எழுதுவதாக முடிவெடுத்திருக்கிறேன்.

அதற்குள் இந்த விவாதம் என்னை இங்கே எழுத வைத்து விட்டது.

வணக்கம் என்னை நானாக அறிமுகம் செய்து கொண்டு உங்களை வரவேற்கிறேன்

இங்கே திராவிடம் பற்றியும் சீமானின் தற்போதைய போக்குப் பற்றியும் கதைப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

நண்பர்களே!

நீங்கள் நினைப்பது போன்று திராவிடம் என்பது ஒரு தேசிய இனம் அல்ல. திராவிட தேசியம் என்பது அர்த்தமற்ற ஒன்று. சென்னை மாகாணம் இல்லாது போனதன் பிற்பாடு, அது தந்தை பெரியாரால் இல்லாமற் செய்யப்பட்டு விட்டது. தந்தை பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முழங்கினார்.

ஆனால் திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம். பார்ப்பனிய அடக்குமுறைக்கும், தீண்டாமை கொடுமைக்கும் எதிராக போராடக் கற்றுக் கொடுப்பது அது. தமிழர்களை தமது இனத்தினதும் மொழியினதும் சுயமரியதையை காப்பதற்கு அறைகூவல் விடுப்பதே திராவிட சிந்தனை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பந்தியாகக் பிரதி பண்ணிப் போடுவதை வாசிக்க வெறுப்பாக இருக்கின்றது. யாராவது திராவிடத்தால் தமிழன் அடைந்த நன்மைகள் என 5 ஐப் பட்டியலிடுங்கள். அதன் பிறகு அதைன் தேவை பற்றிக் கதைக்கலாம்.

பார்ப்பான எதிர்ப்பினைத் தவிர வேறு ஏதாவது ஆக்கபூர்வ செயலில் ஈடுபட்டார்களா என்பது பற்றி அறிய ஆவலாக உள்ளேன்

<p>ஈழத் தமிழர்களை எக் கட்டத்திலும் ஆதரித்து நின்றவர்கள் பெரியாரை பின்பற்றுபவர்களே. எமது விழாக்களில், சடங்குகளில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்று போராடி நின்றவர்களும் அவர்களே.

இதற்கான உணர்வை திராவிடமே தருகிறது.

திராவிட இனம் என்பது மொழிக் குடும்பத்தின் அடிப்படையிலானது. ஆனால் தேசியம் என்பது வேறு. இன்றைக்கு ஒரு மொழி பேசுபவர்களே தனித் தனி தேசியங்களாக இருக்கிறார்கள். பல மொழி பேசுபவர்கள் ஒரு தேசியமாகவும் இருக்கிறார்கள்.

ஆனால் திராவிட தேசியத்தை யாரும் கோருவது இல்லை. தெலுங்கு மற்றும் மலையாள நாடுகள் சென்னை மகாணம் என்ற பெயரில் ஒன்றாக இருந்த பொழுது அந்த மாநிலத்திற்கு சுதந்திரம் கேட்டு போராடிய தந்தை பெரியார் அதை திராவிட நாடு என்று அழைத்தார்.

Edited by சபேசன்

இங்கே திராவிடம் பற்றியும் சீமானின் தற்போதைய போக்குப் பற்றியும் கதைப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

நண்பர்களே!

நீங்கள் நினைப்பது போன்று திராவிடம் என்பது ஒரு தேசிய இனம் அல்ல. திராவிட தேசியம் என்பது அர்த்தமற்ற ஒன்று. சென்னை மாகாணம் இல்லாது போனதன் பிற்பாடு, அது தந்தை பெரியாரால் இல்லாமற் செய்யப்பட்டு விட்டது. தந்தை பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முழங்கினார்.

ஆனால் திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம். பார்ப்பனிய அடக்குமுறைக்கும், தீண்டாமை கொடுமைக்கும் எதிராக போராடக் கற்றுக் கொடுப்பது அது. தமிழர்களை தமது இனத்தினதும் மொழியினதும் சுயமரியதையை காப்பதற்கு அறைகூவல் விடுப்பதே திராவிட சிந்தனை.

மிக உயரிய கருத்து . ஆனால் அந்த கருத்து நீர்த்து போகும் அளவுக்கு திராவிட செயல் பாடுகள் இருந்துள்ளன . தீண்டாமை கொடுமை பெரியார் அதிகம் போராடிய ஒன்று . ஆனால் திராவிட சித்தாந்த வழிதோன்றல் கட்சிகள் சாதி அரசியல் அல்லவா செய்கின்றனர் ???

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

மா.பொ.சி போன்ற தமிழகத்தில் உருவான தமிழ் தேசிய தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் நாடு தமிழர்களுக்கு என்ற சித்தாந்தத்தை காப்பி அடித்து தமிழர் எதிர்ப்புணர்வை அப்பப்ப வெளிக்காட்டிக் கொண்டு.. பிழைப்புவாதம் செய்தவர் ஈ.வே.ராமசாமி.

ராமசாமியின் திராவிடப் பொய் முகத்தை தோலுருத்துக் காட்டியவர்கள் தான்.. சீமானின் மூதாதையர்களாக உள்ளனர். அதில் மா.பொ.சி போன்றவர்களும் அடங்குவர்.

இங்கு எவரும்.. திராவிடம் இனம் என்றே வரையறுக்கவில்லை. அதை ஒரு மாயை வாதம் என்றே வரையறுத்துள்ளனர். இந்த நிலையில்.. ஒருவர் தனது சுய கண்டுபிடிப்பாக அதனை இனமாகக் காட்டி.. தானே அதற்கு மறுப்பும் எழுதி.. அடுத்தவர்களை முட்டாள் ஆக்க நினைக்கிறார்.

இதைத்தான் திராவிடமும் தமிழர்கள் மத்தியில் இவ்வளவு காலமும் செய்து வருகிறது. எனியும் செய்ய அனுமதிப்பது.. தமிழர்கள்.. சுய அறிவற்ற.. பகுத்தறிவற்ற.. காட்டுமிராண்டிகள் என்ற கன்னட ராமசாமியின் எக்காள வாதத்திற்கு உண்மை சான்றாக அமையலாமே தவிர.. தமிழ் இன இருப்புக்கு அது உதவாது.

தமிழர் நிலங்களில்.. திராவிடத்தின்.. ஆரியத்தின் அழிவில் தான்.. தமிழினத்தின் எழுச்சியே தங்கி இருக்கிறது. ஆரியத்தை விட திராவிடம் என்ற மலைப்பாம்பு தான் தமிழர்களின் காலடி சுற்றி அவர்களை தமிழர்களாகவே உணர விடாது.. சீரழித்து வருகிறது...! பார்பர்னியத்தை விட திராவிடம் மிகக் கொடிய மாயை ஜந்து..! :icon_idea:

Edited by nedukkalapoovan

சாதி விடயத்தில் திராவிட இயக்கம் சில விடயங்களை சாதித்து இருக்கிறது.

பார்ப்பனிய ஆதிக்கம் குறிப்பிட்டளவு குறைக்கப்பட்டுள்ளது. மற்றைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சாதிகளை தமது பெயரோடு இணைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டில் வெகு குறைவு.

மற்றைய மாநிலங்களில் கவனித்தீர்கள் என்றால், மேனன், நாயர், ரெட்டி என்று நடிகர்களும் அரசியல்வாதிகளும் தங்கள் பெயரோடு சேர்ந்து வைத்திருப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. ஆயினும் திராவிட இயக்கம் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

சாதி விடயத்தில் திராவிட இயக்கம் சில விடயங்களை சாதித்து இருக்கிறது.

பார்ப்பனிய ஆதிக்கம் குறிப்பிட்டளவு குறைக்கப்பட்டுள்ளது. மற்றைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சாதிகளை தமது பெயரோடு இணைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டில் வெகு குறைவு.

மற்றைய மாநிலங்களில் கவனித்தீர்கள் என்றால், மேனன், நாயர், ரெட்டி என்று நடிகர்களும் அரசியல்வாதிகளும் தங்கள் பெயரோடு சேர்ந்து வைத்திருப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. ஆயினும் திராவிட இயக்கம் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

தமிழ் நாட்டில் சாதியை சேர்க்காமல் பெயர் எழுதும் பழக்கம் திராவிடம் வரும் முன்பு இருந்தே உள்ளது அன்பரே. எதோ திராவிடம் கற்று கொடுத்தது போல சொல்கிறீரே???

காலி பண்ணிடலாம்னு சொன்னா இன்னும் ரொம்ப தூரம் போகனும்ம்னு சொல்றீங்களே .

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்றால் வட இந்திய ஆதிக்கத்துக்கு எதிராக அக்காலத்தில் தமிழ்த்தேசியம் வளரமுடியவில்லை. அதனால் தமிழ் உணர்வாளர்கள் திராவிட மாயைக்குள் வாழ வேண்டி ஏற்பட்டது. தலைவர் பலமாக்கிய தமிழ்த்தேசியம் இப்போது தேவையாக உள்ளபோது அதைக் கொண்டு வர சீமான் முயல்கின்றார். அதில் என்ன தவறு இருக்க முடியும்??

அதே திராவிடக் கருத்தோடு தான் கருணாநிதி, போன்றவர்களும் இருந்தார்கள். அதனால் தமிழ்த் தேசியத்துக்கு அது எதிராக இருந்தது என்றும் கொள்ளலாமா?

சாதிகளில் தமிழ்ப் பெயர் இல்லை என்பதற்கு முன்பும் இந்தக் காரணத்தைச் சொன்னே;ன. இப்போது தமிழ்நாட்டில் வைக்கப்படும் பெயர்களில் தமிழ்ப்பெயர்கள் மிகக் குறைவு. ஆயினும் மற்றய மாநிலங்களில் இருந்து அது பெரிதளவான வேறுபாட்டைக் கொண்டிருக்கவும் இல்லை. இருக்கின்ற வேறுபாடு என்பது, சமகாலத்தில் ஏற்பட்ட நாகரீக மேம்பாடாக இருக்கலாம்.

எனக்கு கலைஞரை பிடிக்காது. பெரும்பாலான ஈழத தமிழர்கள் அவரை நம்பிய காலங்களில் அவரை நம்பிய காலங்களில், நான் அவரை எதிர்த்து எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் எல்லோரும் அவரை திட்டத் தொடங்கிய நேரத்தில் நான் அவரை திட்டுவரை நிறுத்தியிருந்தேன். அவர் மீது ஆனுதாபம் காட்டுகின்ற சில கருத்துக்களையும் வெளியிட்டிருந்தேன்.

இதற்குக் காரணம் அவருடைய தொண்டர்கள் சிலரோடு எனக்கு ஏற்பட்ட தொடர்பு. பெரும்பாலும் அவருடைய தொண்டர்கள் தமிழீழப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரிப்பதை கவனித்தேன். இந்தத் தொண்டர்களை புண்படுத்த வேண்டாம் என்று கலைஞரை எதிர்ப்பதை விட்டுவிட்டேன்.

கலைஞர் ஒரு பல நெருக்கடிகளால் சந்தர்ப்பவாதமாக நடக்கின்ற போதும், திராவிட சிந்தனைக்கு முரணாக நடக்கின்ற போதும், அவடைய தொண்டர்களுக்கு எங்கள் மீது தெளிவிக்கு ஆதரவு இருக்கிறது.

இதை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தது திராவிட சிந்தனைகளை. இது இல்லாது போனதால்தான் அதிமுகவில் மறைந்ந காளிமுத்துவை தவிர எமக்கு ஆதரவாக யாரும் இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈ வெ ராமசாமியும் கொள்கைகளும் திருகுதாளங்களும்.

ஈ வெ ராமசாமி (பெரியார் எனப்படுபவர்) வட இந்திய ஆரியரை எதிர்க்க திராவிடம் பேசினார் எங்கிறீர்கள்.. இன்று தமிழக திராவிட கழகங்கள் வட இந்திய ஆரியக் கட்சிகளுடன் ஒத்துழைத்து தமிழருக்கு எதிராகச் செயற்படவில்லையா..???! அதேபோன்றே ராமசாமி காந்திஜியிடம் அரசியல் நடத்த பேரமும் பேசியவர். இதுதான் திராவிட வாதத்தின் ஆரிய எதிர்ப்பின் தார்ப்பரியமா..???! இப்படி சொந்த மக்களையே ஏமாற்றி அடுத்தவருக்கு அடிபணிந்து பிழைப்பு நடத்த ஏன் ஒரு திராவிடக் கொள்கை. அது எனியும் நமக்கு அவசியம் தானா..??! தமிழன் என்ற இன உணர்வை ஊட்டவல்ல தமிழ் தேசிய எழுச்சிதான் இன்றைய உலகில் தமிழரின் இருப்புக்கு அவசியாமனது..!

சந்திரகாசனை (தந்தை செல்வாவின் உறவினர்) யாரும் ஈழத்தமிழ் பற்றாளர் என்று இனங்காண்பதில்லை. காரணம் அவரின் செயற்பாடுகள்.. நேரடியாக ஈழத்தமிழரின் போராட்டத்துக்கு எதிராக அமைந்திருப்பதால். நேரடியாக அன்றி எத்தனை பேர் ஈழத்தமிழர் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களை எல்லாம் அவதானிக்கிறமா.. அப்படியானவர்களை இனங்காண்கிறமா.. இனங்காட்டத்தான் முடிகிறதா.. இல்லையே..??! அவ்வளவுக்கு ரகசியமாகவும் திரைமறைவிலும் மற்றவர்கள் எளிதில் உணராத படிக்கும் நடந்து கொள்கின்றனர்.

ஈ வெ ராமசாமி தனது பத்திரிகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டதும்.. அதை ஈழ ஆதரவு என்று காட்ட முனைகிறீர்கள். அதைவிட அவர் ஏதும் செய்யவில்லை. மா பொ சி போன்றவர்களை சத்தியசீலன் ( ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர்) சந்திக்க முற்பட்ட போது அவர்கள் உங்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்றாலும்.. எமது ஆதரவைக் கொண்டு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். காரணம் அவர்கள் உணர்ந்திருந்தார்கள் இந்திய மத்திய அரசின் பலமும் அதன் தமிழர் விரோதப் போக்கையும் தெளிவாக..! அதை அவர்கள் மறைக்காமல் செயற்பட்டனர். இன்று வரை அதுதான் நிலை. இந்தியா தனது நலனுக்கு வெளியில் எம்மை ஆதரிக்கவே இல்லை..!ஆனால் ராமசாமி என்ன செய்தார்.. எதையும் ஆழமாக சிந்திக்கத் தெரியாத ராமசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டு.. தனது அரசியலை கவனித்தாரே அன்றி அதன் பின் விளைவுகள்.. அதன் மூலம் தோன்ற இருக்கும் நெருக்கடிகள் என்பன குறித்து சிந்தித்தாரா..??!

எம் ஜி ஆர் போன்றவர் தலைவர்கள் செய்த உதவிகள் பற்றி இன்று (அண்மையில் இறக்க முன்னர்) அன்ரன் பாலசிங்கம் போன்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அளவுக்கு ரகசியமாக இருந்துள்ளன..! ஏன் அவர்கள் பகிரங்கமாக தங்கள் உதவிகளைச் செய்யவில்லை. காரணம் அவர்களுக்கு அவர்கள் இருந்த அரசியல் புறச்சூழல் பற்றிய தெளிவிருந்தது. ஆனால் ராமசாமிக்கு.. அப்படி எதுவுமே கிடையாது. கடவுள் சிலையை செருப்பால் அடித்தால் கடவுளைக் கைவிடுவான் என்பது சிலையில் கடவுளை காண்பவனைக் காட்டிலும் மோசமான நிலை..!மக்கள் மனங்களில் உள்ள ஒரு கொள்கை தொடர்பில் ஒரு மாற்றத்தை சரியான விளக்கங்களுக்கு அப்பால் வெறும் கேலித்தனமான செயற்பாட்டால் ஏற்படுத்த முடியாது. இந்த எளிமையான உண்மையைக் கூட புரியக் கூடிய அறிவு ஈ வெ ராமசாமியிடம் இருக்கவில்லை..!

இந்துமதத்துக்கும் மூடநம்பிக்கைக்கும் வெகுலாவகமா முடிச்சுப் போடிறீங்கள். ஆனால் மூடநம்பிக்கைகளில் அதிகம் ஈடுபட்டவர்கள்.. முனியையும்.. ஐயனாரையும்.. வைரவரையும் வணங்கிய பழங்குடி மக்கள் தான். அதனால் தான் அவ்வழிபாட்டு முறைகளையும் இந்து மதம் உள்வாங்கி அதற்கு ஆன்மீக விளக்கமளித்து மக்களிடம் மூடநம்பிக்கைகளைக் களைய முனைந்தது. காரணம் அவர்களின் மூடநம்பிக்கைக்கு மதமல்ல காரணம்..அறியாமையே. கல்வி அறிவற்ற தன்மையே. கல்வி அறிவால் இந்துமதம் (சைவம்) கொண்டுள்ள ஆன்மீக மெய்யியல் அறிவைப் புகட்ட முடிகின்ற போது மனிதன் தன்னிலை மட்டுமன்றி இந்தப் பிரபஞ்சத்தின் தன்மை குறித்தும் அறிகின்ற போது அவன் அறியாமை இருளில் இருந்து விடுபடுகின்ற போது மூடநம்பிக்கைகளும் பேராசைகளும் அவனை விட்டுக் கழன்று விடுகின்றன. அப்போது அவனிடம் தெளிவும் மனிதாபிமானமும் அன்பும் மிகும்..! அத்தோடு அறிவியல் அறிவும் வழங்கப்படும் போது அவன் சிறந்த சிந்தனைவாதியாக நவீன உலகின் படைப்பாளியாக புதிய புதிய கண்டுபிடிப்புக்களுக்கான முன்னோடியாக திகழ வழிபிறக்கும்..!

அதைவிடுத்து.. சிலைக்கு சோடா புட்டியால் அடித்தால் அறியாமை விலகாது. கடவுள் சிலைக்குப் போட்டியாக பதிலாக ராமசாமிக்கு 95 அடியில் சிலை வைத்தால் கல்வி அறிவு எழாது. மாறாக குரோதமும் கோபமுமே வளர்க்கப்படும். சாதி அழிக்கின்றன் என்ற சிலர் இங்கு எத்தனை தடவைகள் சாதிப் பெயர்களையும் சாதிகளையும் உச்சரித்திருப்பார்கள். காரணம் அவர்கள் ராமசாமி வாரிசுகளாகவே மாறிவிட்டதால். இதைத்தான் ராமசாமி என்ற கன்னடனும் செய்தது. பிராமணன் பிராமணன் என்று கொண்டே... அந்த ஒரு மக்கள் குழுமத்தின் மீது தனக்குள்ள வெறுப்பை என்னென்ன வழியில் வெளிக்காட்டி தன்னை பிரபல்யம் அடையச் செய்யலாமோ அதை செய்தார். அதன் மூலம் தமிழர்களைப் பிளவுபடுத்தி தமிழர்களின் அரசியல் தளத்தைப் பலவீனமாக்கி அதில் தான் எங்கு இலாபம் பெறலாம் என்று தான் ராமசாமி அதிகம் அக்கறை செய்தாரே தவிர.. தமிழக மக்களின் அறியாமையை விலக்கி.. அறிவை வளர்த்து ஒற்றுமையை ஓங்கச் செய்து.. மூடநம்பிக்கைகளை களையச் செய்ய முற்படவில்லை.

இந்துமதம் அறியாமையை வளர்க்கின்ற மதமல்ல. இந்து ஒரு கலாசாரமாக உலகில் மிளிர்கிறது. எத்தனையோ பல்கலைக்கழகங்களில் இந்துமதமும் இந்துக்கலாசாரமும் போதிக்கப்படுகின்றன. அந்தளவுக்கு அதற்குள் மெய்யியல் மற்றும் வரலாற்று அறிவியல் கலந்திருக்கிறது. ஆனால் ராமசாமியைப் போல கண்ணை மூடிக்கொண்டு ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பை உமிழ.. அறிவிலித்தனமான வாதங்களை முன் வைத்து மொத்த மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அதுவே மூடநம்பிக்கையின் மூலம் என்பது மோசமான நிலை..! ஆய்ந்து அறியும் தன்மையற்ற நிலை..!

மூடநம்பிக்கைக்கு மதம் அல்ல காரணம். மனித அறியாமையே காரணம். மனித அறியாமைக்குக் காரணம் கல்வி அறிவின்மை. கல்வி அறிவின்மைக்குக் காரணம் அரச சலுகைகளுடன் கூடிய கல்வியை அல்லது இலவசக் கல்வியைக் கூட சரிவர பெற இல்லாத ஆர்வமும் வழங்க முற்படாமையும்..! அடிப்படைக் கல்வி அறிவற்ற ராமசாமிக்குள்ளும்.. ஒரு அறியாமை இருந்திருக்கிறது என்பதை.. அவர் தன் கருத்துக்களைச் சொல்லிய விதத்தில் காண முடிகிறது.

ராமசாமியை திராவிடக் கட்சிகள் தான் "தந்தை" "பெரியார்" எங்கின்றனர். காந்திஜிக்கு வழங்கப்படும் மரியாதை இந்திய மண்ணில் ஏன் அண்டை மாநிலங்களில் கூட ராமசாமிக்கு கிடையாது. ஏன்..?? அவரின் சொந்த மாநிலமான கர்நாடகத்தில் அவருக்கு ஒரு சிலை இருக்கோ தெரியாது..! கர்நாடகத்தில் ஒரு கட்சி கூட "ராமசாமியின்" புகழ்பாட இல்லை..! திராவிடக் கொள்கை பேசி கன்னடன் என்று தன்னை இனங்காட்டி கன்னட விசுவாசத்தை வெளிப்படுத்திக் கூட ராமசாமி கன்னட தேசத்தில் மதிக்கப்படவில்லை. காரணம் என்ன..??! ராமசாமியின் கோமாளித்தனக் கொள்கைகளும் போலிப் பேச்சுக்களும்.. பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத கீழ்த்தரமான பண்பாடற்ற பழக்கங்களுமே..! இப்படியான ஒருவர் தமிழர்களுக்கு "தந்தை" "பெரியார்" என்று இனங்காட்டப்படுவது திராவிடக் கட்சிகளுக்கு அரசியல் நடத்த உதவலாம்.. தமிழர்கள் மத்தியில் உள்ள பிளவுகளை போக்க உதவாது.

ராமசாமியை பிராமண சமூகம் வெறுக்கக் காரணம் என்ன..??! பிராமண சமூகம் என்பதை தமிழர்கள் என்று இனங்காணாத அந்த நிலையே..! பிராமண சமூகம் சரி இதர சமூகங்களும் சரி சாதியச் சாயங்களால் பிளவுபடுத்தப்பட்டிருப்பினும்.. இனத்தால் மொழியால் கலாசாரத்தால் தேசத்தால் பண்பாட்டால் தமிழர்களே..! அந்த வகையில் அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்க ஏன் முற்படவில்லை. தமிழ் தேசியம் அதைச் செய்யும்..! திராவிடக் கொள்கைகள் நிச்சயம் அதற்கு இடமளிக்காது. காரணம் திராவிடம் சாதி இல்லை இல்லை என்று கொண்டே சாதியை வளர்த்ததும் அரச ஆட்சி மட்டத்துக்கு சாதியைக் கொண்டு வந்ததுமே அதனால் சாத்தியப்பட்டது.

மூடநம்பிக்கைகளை அகற்ற கல்வி அறிவை ஊட்டி அறிவை தெளிவை வளர்க்க வேண்டுமே தவிர அறியாமை உள்ள மக்களிடம் குரோதத்தை கோபத்தை வன்முறையைத் தூண்டி.. சொந்த இனத்தின் இன்னொரு சமூகத்தின் மீது கொலை வெறியை வெறுப்புணர்வை ஊட்டுவதல்ல சமூக அக்கறை.. சமூகப் புரட்சி..! அந்தவகையில் ராமசாமி அரசியலுக்காக தனது செல்வாக்குக்காக தமிழர்களை பிளவுபடுத்த கையில் எடுத்ததே பிராமண எதிர்ப்பும் பார்பர்னிய ஆரிய மாயைகளின் உச்சரிப்பும்..!

அறியாமையைப் போக்கி அறிவியலை வளர்த்து கல்வி அறிவுடன் ஆன்மீக அறிவையும் ஊட்டி மெய்யியல் அறிவையும் பெறும் ஒரு சமூகம் எப்போதும் தளம்பலற்ற.. உயர்சியை ஒற்றுமையை சந்திக்கும் என்பதற்கு யூதர்கள் நல்ல உதாரணம்.

தமிழர்கள் அதை உணர்வதும் ராமசாமி போன்ற சந்தர்ப்பவாத உளறல் கோமாளிகளின் கொள்கைகைகளை தூக்கி எறிஞ்சிட்டு.. தங்கள் அறியாமை திரை விலக்கி.. தங்கள் தனித்துவத்தை இழக்கச் செய்யும் திராவிட மாயைப் போர்வைக்குள் இருந்து வெளிவந்து தமிழ் தேசிய எழுச்சியுடன் தமிழ் தேசிய உணர்வுடன் கூடிய தமிழர்களாக உலகில் பரிணமிக்க சிந்திக்க வேண்டும்.

ஆரியரை எதிர்ப்போம் என்று கூறிக் கொண்டே ஆரியர்களாக தாங்கள் வரையறுப்பவர்களின் கொள்கைக்கும் பிழைப்புக்கும் முண்டுகொடுக்கும் திராவிட கழகங்களின் கொள்கைகள் தமிழின மொழி அழிப்பைப் பற்றிய அக்கறை அற்றவை என்பதை இன்று தமிழர்கள் நன்கே உணர்ந்துள்ளனர்..! இதுதான் ஈ வெ ராமசாமியின் கொள்கைகள் செய்த அறுவடை..!

தமிழகம் இந்திய தேசியத்தால் தனது தமிழ் தேசிய உணர்வை இழந்து நிற்க மூல காரணமே திராவிடக் கழகங்கள் என்றால் மிகையல்ல..! தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தமது தவறுகளைத் தொடர்கின்றனர். இதற்கும் இந்து மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..!

பாதையைப் பற்றிப் பேசனும் என்றால் எதற்கையா இராமரைப் பற்றிப் பேசுறீங்க...! இராமரே இல்லை என்பவர்கள் திரும்பத் திரும்ப அதை நிரூபிக்க வேண்டியதில்லை. தங்களின் அறிவார்த்த அணுகுமுறையைச் செய்ய வேண்டும். வெறுமனவே வார்த்தை ஜாலங்களால் அரசியல் செய்யலாம் அறிவியலை அணுக முடியாது. கப்பற் பாதை அமைப்புக்கு சாத்தியமான முன்னோடியாக அமையத்தக்க அடிப்படை அறிவியல் ஆய்வென்று கூறி ஒரு காத்திரமான ஆய்வை மேற்கொண்டு பாலம் இராமருடையதல்ல என்பதையும் நிறுவி, இதர பிற எதிர்ப்புக்களுக்காக முன்வைக்கப்படும் காரணங்களையும் முறியடிக்க வாய்ப்பிருந்தும்.. அறிவியல் இருந்தும்...அதை செய்ய நிரூபிக்க தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு திராணி இல்லை. ஆனால் தமிழக முதல்வர் கேட்கிறார் இராமர் எந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்று. காலங்காலமா இராமரே இல்லை என்று சொல்லுறவர் இப்படி வினவுவது எவ்வளவு அறிலித்தனமானது மட்டுமன்றி விசமத்தனமானதும் கூட..! இப்படிப்பட்ட மு... முக்கள் தான் தமிழரின் தலைவர்கள்..! இவர்கள் தாம் ராமசாமியின் வாரிசுகள்..! இவ்வாறான தலைவர்கள் உலகில் சுய சிந்தனைமிக்க, அறிவியற் சமூகமாக, சுயாதியபத்திய ஆட்சியுரிமையுள்ள, தமிழன் என்ற இன அடையாளம் தாங்கி மிளிர இடமளிப்பரா..??!

http://thedatsaram.blogspot.co.uk/2007_12_01_archive.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.