Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெரிந்தவர்கள் கூறுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள் யாற்றை தலையை முறிசாவது எங்கட வாதங்கள் சரி என நிரூபிக்கவேண்டுமல்லே அதுதான்.

வன்னியில CBZ,kalibar,pulser, என அதி ஆடம்பரமான மோட்டார் வண்டிகளை பாவிக்கும் இளைஞர்களுக்கு ஹெல்மெட் வேண்ட காசு இல்லையாம் :P

மாதுகா நீங்கள் எங்காவது ஒரு பிழையை பிடிக்க வேண்டும் என்று முட்டாள் தனமாக கருத்தெழுதுவதை விட அதை பரவாயில்லை என்று நினைக்கின்றென். உங்களை திருத்தி கொள்ளுங்கள் மற்றவர்கள் பற்றி கதைக்க முதல்... :lol:

  • Replies 110
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெடியள் மோட்டச்சைக்கிள் வாங்கிறதே கெல்மெட் போடாமல் முறுக்கித்திரிஞ்சு கலர்ஸ் காட்டத்தான்.. இதில கெல்மெட் போட சொன்னால்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தெரியாதவர்கள் (தொண்டர்நிறுவனத்;தார், ஊடகவியலாளர் போன்றோரின்) நன்மை கருதி ஆங்கிலத்திலும் காவல்துறை போன்ற அத்தியாவசிய நிர்வாகத்துறை விடையங்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

முன்னுக்கு தமிழில் எழுதியிருக்கிறார்கள், பக்கவாட்டில் தமிழிலும் எழுதாது தவறுதான்.

முன்னர் காவல்துறயினர் அணியும் சீருடையிலும் முழுக்கட்டுப்பாடுகள் இருந்ததில்லை. காற்சட்டையில் முற்சுருக்கு வைப்பது, சுருக்கின் அளவு, எந்த மாதிரி எங்கு பாக்கற்று வைப்பது மேலங்கி நீளக்கையா அரை கையா என்று பல சீரற்ற வேறுபாடுகளை அவதானிக்கலாம். தற்பொழுது இதில் நல்ல கட்டுபாடுகள் வந்துவிட்டது. ஆனாலும் காலணியில் கவனிப்பு தேவை. காலப் போக்கில் நிச்சையமாக திருத்திக் கொள்வார்கள்.

காலப்போக்கில் சரியாகும் என்று உங்களுக்கு தெரிந்திருந்தும் பெரிய கண்டு பிடிப்பு பிடித்ததாய் சொல்கிறீர்கள்...

இவற்றை சிறிலங்கா காவல்துறையிடம் சொல்லுங்க..ஏன்டாபபா ஒரு நாட்டின்ர காவல் துறை இப்பிடியா இருக்கிறதென்று

நாம் மெதுவாக சென்றாலும் எதிரே வருவபவர் வேகமாக நம்மீது மோதும் போது நாம் உயிராபத்தில்லாமல் தப்புவதற்கு தலைக்கவசம் தேவையில்லையா??

நிதர்சன்

பிழைகள் திருத்தப்பட வேண்டுமென வாதாடும் நீங்களே தவறுகளுக்காக வக்காலத்து வாங்குவது உங்களது இன்னொரு முகமா?? நான் சமீபத்தில் தாயகம் சென்று திரும்பியவனே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவாகவே தலைக்கவசம் அணிவது அணிபவரின் உயிர் காப்பாற்றப் படுவதற்காக. இங்கே காவல்த் துறையினர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருப்பது பொதுமக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்பது போலுள்ளது.

படப்பிடிப்பிற்காய் எடுத்த படங்கள் என்பது மக்களுக்கு காவல்த் துறையை விளம்பரப் படுத்துவதற்கே. அப்படியான படங்களில் இலக்கத் தகடுகள் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் மக்களைச் சென்றடையும் படங்கள் எப்போதும் முன்மாதிரியாகவே இருக்க வேண்டும். இன்னமும் தவறுகளை நியாயப் படுத்தவே சிலர் முன்னிப்பது வேடிக்கை தான்.

எனவே நகைச்சுவைப் பகுதி தொடரட்டும்.

வசம்பு நகைச்சுவையாக உங்கள் விவாதங்கள் நடைபெறுகின்றது. இலக்கத்தகடுகள் அகற்றப்பட்டமைக்கு சில பாது காப்பு காரணங்களாக இருக்கலாம். வளரும் நாட்டை பற்றி பேசும் ஆலொசனைகளுக்கு பதிலாக குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றீர்கள். உங்கள் எண்ணம் அதுவாக தான் இருக்கின்றது எனலாம். எனவே படத்தை வைத்து பூச்சாண்டி காட்டி கட்டு கதைகளை கதைப்பதிலும் உருபடியாக பிறக்கின்ற ஒரு நாட்டின் காவல் தறையின் வளர்ச்சிக்கு உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம். விமர்சனம் வைப்பவன் தன்னை அறியவேண்டும்...விமர்சனம் செய்ய முதல்.... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரச கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி தாக்குதல் நடத்துவோரோ அல்லது கொலைகளில் ஈடுபடுவோரோ மோட்டார் சைக்கிளில் வந்தே நடத்துகின்றனர். இவர்களை அடையாளம் காண்பதற்காகவே இரு பகுதியிலும் தலைக்கவசம் அணிவது ஊக்கப் படுத்தப் படவில்லை. உண்மை இப்படியிருக்க ஏன் வீண் வக்காலத்துக்கள்.

எந்த உலகத்தில இருக்கிறீங்க வசம்பு...

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ஒரு போதும் தலைகவசம் அணிந்தோ, அல்லது மோட்டார் சைக்கிளில் வந்தோ தாக்குதல்கள்ி நடைபெறவில்லை. கொஞ்சமாவது என்னத்தை கதைக்கிறம் என்று தெரிந்து கதையுங்க.. :roll:

நிச்சயமாக Ukraj, Vasambu, Mathuka , Kavadi போல ஒரு சிலர் முட்டையில் மயிர் புடுங்கத்தான் முயற்சி செய்யினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் மெதுவாக சென்றாலும் எதிரே வருவபவர் வேகமாக நம்மீது மோதும் போது நாம் உயிராபத்தில்லாமல் தப்புவதற்கு தலைக்கவசம் தேவையில்லையா??

நிதர்சன்

பிழைகள் திருத்தப்பட வேண்டுமென வாதாடும் நீங்களே தவறுகளுக்காக வக்காலத்து வாங்குவது உங்களது இன்னொரு முகமா?? நான் சமீபத்தில் தாயகம் சென்று திரும்பியவனே.

வசம்பு

தலைகவசம் தேவையில்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தற்போது அது பற்றி கதைப்பது நேர விரையம் என்றே சொன்னேன். நீங்கள் தலை கீழா நின்றாலும் அந்த சட்டத்தை அமுல் படுத்துவதில் பல யாதர்த்த பூர்வமான சிக்கல்கள் இருக்கு. இதை புரிந்து கொள்ள தவறும் நீங்கள் காவல் துறை மீது குற்றம் சாட்டுவதிலும், ஏன் இலக்கத்தகடு காவல் துறைக்கு இல்லை என்றும் வாதாடுகின்றீர்கள், நீங்கள் தாயகம் சென்று திரும்பியிவன் என்றால்... அங்கே மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை தலைகவசம் அணியும் படி காவல் துறையினர் கேட்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் (வன்னியில் நின்றிருந்தால்) ஆனால் அவர்கள் அதை நடைமுறைப்படுத்தா விடினும் மக்களுக்கு அது பற்றிய அறிவுறுத்தல்களை விடுத்த வண்ணம் தான் உள்ளனர். இதை பற்றி யாரும் அறிய வாய்பில்லை. தாயகத்தில் குறிப்பாக வன்னி பிரதேசத்தில் இருப்பவர்கள் தவிர. அதே போல நல்லவன் சொன்ன கருத்தில் புலிகளின் போராளிகளுக்கென்று இலக்கத்தகடுகள் வழங்கப்படுவதலி்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. முன்னர் பிரிவு ரீதியாக வழங்கப்பட்ட இலக்கம் தற்போது போராளிகள் என்று அடையாளப்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றது. அந்த இலக்கம் த,உ. போன் கோசங்களை கொண்டிருப்பதில்லை அவை மூன்று இலக்கங்களின் அரம்பிக்கின்றது. இது தற்போதையை நடை முறை என்று நினைக்கின்றேன்.

நிதர்சன்

இங்கு பலர் 40 கிமீ வேகம் என்பதால் தலைக்கவசம் தேவையில்லை என்று எழுதினார்கள். அதனால்த் தான் அதனைக் குறிப்பிட்டேன்.

மேலும் பல விடயங்களில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும் புலிகளால் தலைக்கவச விடயத்தில் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்காததற்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்புடையன அல்ல.

காலப்போக்கில் சரியாகும் என்று உங்களுக்கு தெரிந்திருந்தும் பெரிய கண்டு பிடிப்பு பிடித்ததாய் சொல்கிறீர்கள்...

இவற்றை சிறிலங்கா காவல்துறையிடம் சொல்லுங்க..ஏன்டாபபா ஒரு நாட்டின்ர காவல் துறை இப்பிடியா இருக்கிறதென்று

சீருடையில் ஆரம்பத்தில் கவனம் குறைவாக இருந்து இப்பொழுது முன்னேற்றம் இருக்கு. அதேபோல் எனைய விடையங்களையும் (வாகனத்திற்கு பக்கவாட்டி தமிழில் எழுதவில்லை போன்ற தோற்றப்பாடு சார்ந்தவற்றை) படிப்படியாக திருத்தி ஒழுங்கமைத்துக் கொள்ளுவார்கள் என்பதற்காக சொன்னேன். நான் கண்டும் பிடிக்கேல்லை மாடும் பிடிக்கேல்லை. உமது விளக்கத்தை சீர்செய்து கொள்ளும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன்

இங்கு பலர் 40 கிமீ வேகம் என்பதால் தலைக்கவசம் தேவையில்லை என்று எழுதினார்கள். அதனால்த் தான் அதனைக் குறிப்பிட்டேன்.

மேலும் பல விடயங்களில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும் புலிகளால் தலைக்கவச விடயத்தில் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்காததற்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் ஏற்புடையன அல்ல.

வசம்பு..சட்டத்தை மக்கள் மீது திணிக்க அவர்கள் ஒரு போதும் விரும்பவில்லை. ஏனெனில் அவர்களும் மக்களோடு வாழ்பவர்களே அவர்களுக்கு அவர்களின் சூழ்நிலை நன்றாகவே தெரியும். அதை விட புலிகளால் பொறுப்பாளர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் காவல் துறை -புலிகள் இரு வேறு கட்டமைப்பு என்பதை இன்னும் பலர் புரியவில்லை....நீங்கள் உட்பட

நிதர்சன்

நீங்களும் இதை நகைச்சுவைப் பகுதியாக்கவே முயற்சிக்கின்றீர்கள். நடத்துங்கள் :roll: :lol: :P

நன்பரே இந்தப்படத்தை வைத்துக்கொண்டு எமது காவல்த்துறையை விமர்சிப்பது அழகில்லையென நினைக்கின்றேன் ஏனெனில் இந்தப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் வேறு வேறு நாட்டு காவல்த்துறையிடம் குற்ரத்தடுப்புப்பிரிவு. போதைத் தடுப்புப்பிரிவு. போக்குவரவு கண்காணிப்புப்பிரிவு. வீதிப்பாதுகாப்புப்பிரிவு என வேவ்வேறு பிரிவுகள் உள்ளது போல் எமது காவல்த்துறையிலும் இருக்கலாம்அல்லவா? எதிரியின் வீதியோர குண்டுத்தாக்குதலில் இருந்து எமது மக்களை பாதுகாக்கவே இவர்கள் வீதிப்பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என எமது தெரியாத தாயக உறவுகளுக்கு எடுத்துக்காட்டவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என நினைக்கின்றேன். அந்தந்தப்பிரிவினர் அந்தந்த வேலையை சரிவரச்செய்தால் நிர்வகிப்பது இலகுவாக இருக்கும் அல்லவா அதேதான் எமது காவல்த்துறையும் செய்கின்றது எமது மக்கள் சிங்களஅடக்குமுறைக்குள்ளும் போராட்ட சூழளுக்குள்ளும் வாழ்ந்தவர்கள். அவர்கள் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் எல்லேரும் போராட்ட காலத்தில் இப்படிப்பட்ட வாகனனெரிசலையோ வீதிக்கட்டுப்பாட்டையோ சந்தித்ததில்லை அவர்கள் போராட்ட காலத்தில் தாங்கள் வாகனமில்லாமல் பட்ட கஸ்ரத்தை உணந்து அவர்கள் இப்போது ஈருளி சிற்ருளி மகிழ்ருளி என வேண்டிக்கொண்டிருக்கின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல மற்றும் உறவுகளுக்கு இங்கு உங்களால் இயன்றவரை கருத்தை கருத்துக்களால் முறியடியுங்;கள்.

அதைவிடுத்து உமக்கு இலாபமா நட்டமா என்றோ அல்லது வெளிநாட்டிலிருக்கும் உமக்கு இதுபற்றி என்ன தேவையென்றோ அல்லது இந்தப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் வேறாக இருக்கலாம்(என்ன சூட்டங்கா நடக்குது..?) உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறேர் மிகவும் கீழ்தரமாக வாதாடாதீர்கள்.

இந்த படத்தின் இருபக்கங்களும் உங்கள் பார்வைக்கு

photo115me.jpg

photo128xk.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வாகனத்திற்கு இருபக்கமும் இலக்கத்தகடில்லை.

முட்டையில மயிர் பிடுங்குதல் என்றால் என்ன...?

ukrai wrote:

முட்டையில மயிர் பிடுங்குதல் என்றால் என்ன...?

ஓ அதுவா சிலர் மினக்கிட்டு முட்டையில் மயிர்களை நட நாங்கள் வந்து புடுங்குகின்றோமாம். நீங்களே சொல்லுங்கள் பறைவைக் காய்ச்சல் பிரைச்சினையெல்லாம் இருக்க இவங்க போய் முட்டையில் மயிர்களை நடலாமா?? அதைச் சுட்டிக் காட்டினால் தப்பாம். பாருங்க இப்போ திரும்பவும் சுபித்திரன் வந்து நடுவார். :roll: :cry: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களுக்கு பிழைகளை ஏற்றுக்கொண்டு திருந்தும் பக்குவம் இன்னும் வரவில்லை. அதனால் எம்முடன் மிகவும் கீழ்தரமாக அநாகரிகமாக தமது கருத்தை எம்மீது திணிக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய செயற்பாடுகள் பிற்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றன என்பதை சிந்திக்கும் திரணியற்றவராக உள்ளனர்.

முட்டாளுடன் விவாதம் செய்தால், பார்ப்பவர்களுக்கு யார் முட்டாள் என்ற சந்தேகம் ஏற்பட்டுவிடும்.

:lol::lol::lol::lol::lol:

அதானே பார்த்தேன் இன்னும் பெரியயயயயய மு.......ளைக் காணவில்லையே என்று. என் நம்பிக்கையை வீணாக்காமல் வந்த பெ.மு விற்கு நன்றீங்கோ. :P :lol: :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7 பக்கங்களை அடைந்தும் உம்மைப்போன்றவர்களால் ஒரு முடிவான விளக்கத்iதை தரமுடியாமல் உள்ளதே. இதிலிருந்த தெரியவில்லலையா யார் முட்டள் என்று?

ukraj

முட்டையில் மயிர்களை நடுபவர்களிடம் நீங்கள் போய் விளக்கம் கேட்கின்றீர்கள். :lol: :P :lol: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணைமார், புலிகளின்ர கட்டுப்பாட்டுப்பகுதி தவிர்ந்த இடங்களில கட்டாயம் எல்லாரும் பூட்ஸ்போட்டுத்தான் உதைபந்து விளையாட வேணுமெண்டு சட்டமில்லை. ஆனா புலிகளின்ர கட்டுப்பாட்டிலயும் அவை வேற இடத்தில போட்டியளிலயும்தான் கட்டாயம் பதினொரு பேரும் பூட்ஸ் போட்டு விளையாட வேணுமெண்டு சட்டமிருக்கு தெரியுமோ? பூட்ஸ் வாங்க வசதியில்லாதவன் பற்றியெல்லாம் ஆர் யோசிச்சவை? சிலருக்குக் கழகங்கள் வாங்கிக்குடுத்துது. ஆனாலும் வரவேற்கப்படவேண்டிய நடைமுறை அது.

ஒரு பூட்சின்ர விலையென்ன? ஆறு தலைக்கவசங்கள் வாங்கலாம் தெரியுமோ? உயிர்போற விசயத்துக்கு கட்டாயச் சட்டம் போடாம என்ன பெரிய பொருளாதாரப்பிரச்சினை கதைக்கிறியள்? வருசம் நானூறு ரூபா கட்டி லைசென்ஸ் எடுக்கிறவனுக்கு உயிர்காக்க அதைவிட விலைகுறைஞ்ச தலைக்கவசம் பெரிய பொருளாதாரச் சிக்கலோ? உந்தப்படத்திலயே பின்னுக்கு வாற மோட்டச் சைக்கிள்காரன் என்ன பிச்சைக்காரன் மாதிரியோ தெரியுது? (அல்லது போட்டோ எடுக்கிறதுக்காக வடிவா வெளிக்கிடுத்தி எடுத்தவங்கள் எண்டு கத விடப்போறியளோ?) காவடி சொன்னமாதிரி பெட்டையளுக்குச் சுருள் விடத்தான் மோட்டச்சைக்கிள் எண்டது உண்மை. எழுபது வீதமாவது இந்தக்காரணத்துக்குள்ள வரும். இதுக்குள்ள பொருளாதாரக்காரணத்தைச் சொல்லி சப்பைக்கட்டுக் கட்ட ஏலாது.

பக்கவாட்டில காவல்துறை எண்டு எழுத நீளம்காணாது எண்டு நான் சொன்னதில இருக்கிற நக்கல் விளங்காமல் எனக்கே அதைத் திருப்பிக் கேக்கிறியளே? நியாயமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவ வெண்ணிலாவின்ர கதை பெரிய பம்பல். "என்னத்துக்கு வாகன இலக்கத்தகடு?" எண்டு கேட்டு தந்தாவே ஒரு விளக்கம்.

தங்கச்சி, அப்ப என்ன கோதாரிக்கு இலக்கத்தகட்டைப் போடச்சொல்லி சனத்தை கழுத்தை நெருக்குப்படுது? இலக்கத் தகடில்லாட்டி நூற்றுக்கணக்கில தண்டம் வேண்டுப்படுது? மற்ற எந்தப்பகுதியையும்விட புலிகளின்ர பகுதிக்குள்ளதான் இலக்கத்தகட்டுக்கான இறுக்கமும் தண்டமும் அதிகம் தெரியுமோ? காவல்துறைக்கு வக்காலத்து வாங்க வந்து எதிர்மறையா ஒரு போடுபோட்டுப் போறியள்.

வாகன இலக்கத்தகட்டை வச்சு வாகன எண்ணக்கை தெரியுமெண்டதுக்காக அதைக் கழட்டிப்போட்டு படமெடுத்ததெண்ட புருடாவெல்லாம் கேக்க நல்லாத்தானிருக்கு. ஏனுங்கோ! அப்ப வன்னியில அந்த வாகனத்தை இலக்கத்தகட்டோட பாக்கிறவனுக்கு உதொண்டும தெரியாதோ? குறைந்தபட்சம் காவல்துறை இலக்கத்தகடே அணியிறேல எண்டாவது ஒரு கதை சொன்னா அதில ஞாயமிருக்கு.

அதவிட அங்க வாகன நெரிசலில்லை எண்டு விட்டா ஒரு கதை. கிளிநொச்சியோ வாகன நெரிசலில்லாத இடம்? இப்பதான், குறிப்பா மகிந்த வந்தபிறகு கொஞ்சம் குறைஞ்சிருக்கு. அதுக்கு முந்தி கிளிநொச்சியின்ர வாகன நெரிசல்பற்றி அங்க இருந்தவைக்குத் தெரியும். நடந்த விபத்துகளின்ர எண்ணக்கையும் தெரியும்.

மெதுவா ஓடுற கதையெல்லாம் ஒருகாலத்தில சரி. அப்ப மண்ணெண்ணையில ஓடின வாகனங்களும், பழுதாப்போன பாகங்களோட ஓடின வாகனங்களும் மெதுவாப் போயிருக்கும். பத்தாததுக்கு குண்டும்குழியுமான பாதைக்குள்ள அப்பிடித்தான் ஓடவேண்டியிருந்தது. இப்ப அப்பிடியோ? வேகக்கட்டுப்பாடு இருக்கிறதால ஓரளவு பரவாயில்லை.

புலிகளின்ர அங்கத்துவ இலக்கத்தகடு மூலமா ஒரு படையணியின்ர எண்ணிக்கைய அறியலாம். ஆனா அதுக்காக புலிகள் இண்டை வரைக்கும் அது வெளியில தெரியக்கூடாதெண்டு நினைக்கவேயில்லை. இண்டை வரைக்கும் சில துறைகளைத் தவிர்த்து பெரும்பாலான படையணிகளுக்கு, இலக்க முறையைக்கூட மாத்தவேயில்லை. தங்கட அங்கத்துவ இலக்கத்தை மறைக்கிறதுக்கு ஆரும் முயற்சிக்கிறதுமில்லை. சனத்துக்கு அவயின்ர தகட்டிலக்கங்கள் வடிவாத் தெரியும். அவை மக்களுக்கு தெரியவைக்கிறதுக்கு இயக்கம் பின்னிற்கிறதுமில்லை.

உதுக்க வாகன எண்ணிக்கைதான் பிரச்சினையா வந்திட்டுதாக்கும்.

அதுசரி, எண்ணிக்கை வெளியத் தெரியாதபடி இலக்கமுறையை வடிவமைக்கிறதுகூட பெரிய இமாலயப்பிரச்சினையாக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவர் நிதர்சன்,

மக்கள் மேல சட்டங்களைத் திணிக்க அவை விரும்பிறேல எண்டுறார். சட்டமெண்டா திணக்கத்தான் வேணும். நீங்களே உணர்ந்து செய்யுங்கோ எண்டா, காவல்துறையோ அரசோ கூட தேவையில்லை. உது கால்மாக்சின்ர பொதுவுடமைக் கற்பனை வரை போகும்.

இதவிட முக்கியம் குறைஞ்ச தமிழ் இலக்கத்தகட்டுக்கு பத்துவருசத்துக்கும் மேல இறுக்கு இறுக்கெண்டு கட்டாயப்படுத்திப்போட்டு (நான் முழு மனத்தோடு இந்தக் கட்டாயத்தை ஏற்கிறேன்) தலைக்கசவப்பிரச்சினைக்கு மட்டும் திணக்க வெளிக்கிடேல எண்டு வரிஞ்சு கட்டிக்கொண்டு வர என்ன தேவைகிடக்கு?

மன்னார் பண்டிவிரிச்சானுக்குள்ளால போக்குவரத்து நடந்த காலத்தில நான் அங்க நிண்டன். அப்ப அரசபகுதியிலயிருந்து வாற சாமான் லொறியெல்லாம் புலிகளின்ர சோதனை, வரிஅறவீட்டு நிலையத்துக்கு வரமுதல் தமிழ் இலக்கத்தகடு மாத்திப்போட வேணும். மாத்தாட்டி தண்டம். அவனின்ர பொயின்ற் கடக்குமட்டும் அரச இலக்கத்தகட்டைக் கழட்ட ஏலாது.

இப்பிடி உன்னிப்பா (முட்டையில மயிர் புடுங்கிறதெண்டு இதையும் சொல்லலாம்) இலக்கத்தகட்டு முறைய நடைமுறைப்பபடுத்திற நிர்வாகம் இருக்கிற வன்னியிலதான் தலைக்கவசத்துக்கு உந்த பேக்கதையள் கதைக்கவேண்டிக்கிடக்கு.

(திரும்பவும் சொல்லிறன், உந்த இறுக்கமான நடைமுறைகளை நான் நிபந்தனையற்று ஆதரிக்கிறன்)

இன்னும் இறுக்கமான நடைமுறை எண்டு பாக்கிறதெண்டா புலிகளின்ர வரிவிதிப்புக்களைப்பற்றியும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.