Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டைவர்ஸுக்குப் பிறகு ஆண்கள் சுதந்திரப் பறவைகளாக உணர்கின்றனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்?[/size]

23-after-divorce-300.jpg

திருமணம் ஆனப்பின் நடக்கக்கூடாத ஒன்று தான் டைவர்ஸ். திருமணத்திற்குப் பின் ஏற்படக்கூடிய ஒரு சில சண்டைகளும், நன்கு புரிந்து கொள்ளாமல் இருப்பதுமே, இந்த செயலுக்கு பெரிதும் காரணமாகின்றன. இவ்வாறு இந்த காரணத்திற்கு டைவர்ஸ் ஆகக் கூடாது தான், ஆனால் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையினாலே இந்த முடிவு அவர்களால் எடுக்கப்படுகிறது.

மேலும் இத்தகைய பிரிவு இருவருக்குமே பெரும் வலியை ஏற்படுத்தும். அப்படி அவர்கள் டைவர்ஸ் ஆனப் பின் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும், அவர்கள் என்ன நினைப்பார்கள், எதற்கு கவலைப்படுவார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர் என்பதை கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

டைவர்ஸிற்குப் பின் ஆண்களின் மனநிலை...

1. முதலில் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு எந்த ஒரு பொறுப்பும் இருக்காது, ஒருவித சுதந்திரமாக இருப்பதாக நினைப்பார்கள். அவர்கள் ஒரு சுதந்திரப் பறவை போல் உணர்வார்கள். மேலும் ஆண்களுக்கு பொதுவாக எந்த ஒரு பிடிக்காத வாழ்க்கையும் விரும்ப மாட்டார்கள். இருப்பினும், பொறுத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அப்படி இருக்கும் போது மனைவி நிறைய கண்டிசன் போட்டால் அவர்களுக்கு அது நரகமாகிவிடும். இப்போது அந்த வாழ்க்கை இல்லையென்று நினைக்கும் போது அவர்களைப் போல் சுதந்திரப் பறவை யாராகவும் இருக்க முடியாது என்பது போல் இருப்பார்கள்.

2. சமைக்கும் நேரத்தில் மிகவும் வருந்துவர். ஏனெனில் சமைத்து சாப்பிட வேண்டுமென்றால் அவர்களுக்கு பிடிக்காத விஷயம். அந்த நேரத்தில் அவர்கள் மனைவியை நினைத்து மிகவும் வருந்துவர். மேலும் சாப்பிட வேண்டுமென்றால் அருகில் இருக்கும் ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் போய் நண்பர்களோடு சாப்பிடுவது என்று இருக்கும். இப்படி சாப்பிடுவது கொஞ்ச நாட்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் போக போக அலுத்துவிடும். இதுவே டைவர்ஸ் ஆன ஆண்களின் பெரும் கவலை ஆக இருக்கும்.

3. டைவர்ஸ் ஆகியதும், முதலில் ஆண்களின் மனதில் தோன்றுவது என்றால் அது "என் துணியை யார் துவைப்பர்? முதலில் ஒரு வேலைக்காரி வேண்டும்" (ஏய்யா வார்ஸிங் மிசின் இருக்கிறது தெரியாமலா ஆண்கள் பூலோகத்தில இருக்காங்க..ஐயோ ஐயோ..!) என்பது தான். அப்போது அவர்கள் இதுவரை நம்மை பார்த்துக் கொண்ட, வீட்டை எல்லாம் சுத்தமாக வைத்துக் கொண்ட அவர்களது மனைவியை நினைப்பர். ஆனால் இப்போது... என்ற கேள்விக் குறி மனதில் வரும். மேலும் அந்த சமயத்தில் அவர்களுக்கு அவருடைய மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கை அடிக்கடி நினைவுக்கு வரும். பிறகு பழைய கால காலேஜ் வாழ்க்கை எல்லாம் நினைவுக்கு வந்து, அவர்கள் தங்களது லைப் ஸ்டைலையே மறுபடியும் மாற்ற வேண்டும் என்றெல்லாம் நினைப்பர்.

4. டைவர்ஸ் ஆனப் பின் மறுபடியும் 'பேச்சுலர்'. அப்போது அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் பழகலாம். யாரும் அவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள். மேலும் இப்படியே தனியாகவே வாழ்க்கை முழுவதும் இருக்கவும் போவதில்லை. ஆகவே தனக்கு ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்று எந்த பெண்ணைப் பார்த்து தோன்றுகிறதோ, அவர்களிடம் அவர்கள் போய் பேசி பழகுவது என்றெல்லாம் நினைப்பர். அது தவறில்லையே!!!

5. சுதந்திரப் பறவை ஆனப் பின், இனிமேல் மனைவி தொல்லை இருக்காது. ஆகவே இனிமேல் "நான் என்ன செய்கிறேன்?", "எங்கு இருக்கிறேன்?", "எதற்கு? ஏன் தாமதம்?", "எங்கு சாப்பிட்டேன்?" என்று எந்த ஒரு கேள்வியும் வராது, யாரிடமும் சொல்லவும் தேவையில்லை என்றும் சந்தோஷமாக இருப்பர்.

ஆகவே மேற்கூரியவாறே ஆண்கள் டைவர்ஸிற்குப் பிறகு நினைப்பர் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நன்றி:தட்ஸ்ரமிழ்.

Edited by nedukkalapoovan

  • Replies 59
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  1. விவாகரத்து ஆன பின் சுவையான புவ்வாவிற்கு வழி என்ன என்பதை சிந்திப்பதில்லை..
  2. தன் கையே தனக்குதவி என்ற கோட்பாடு தொலைநோக்கில் சரிப்பட்டு வராது..
  3. துன்பம் வரும் நேரத்தில் ஆறுதலாக பகிர்ந்துகொள்ள ஆலோசிக்க துணை இருப்பதில்லை..
  4. உடல்நிலை வருத்தங்களுக்கு அன்பாய் ஆதரவான சினேகிதியை காண்பதில்லை..
  5. எல்லா முறுக்குகளும் ஓய்ந்து முதுமையில் தள்ளாடும்போது துணை இருப்பதில்லை..
  6. சட்ட ரீதியான சந்ததிகளுக்கு வழி இருப்பதில்லை..
  7. இறுதியில் இயற்கையான இன்பத்தை அனுபவிக்க தனக்கே உரித்தான துணை நகி ஹை!

மேடு, பள்ளங்களுடன், சீண்டல்கள், ஊடல்கள், கூடல்களில்லாத சுவையற்ற,அர்த்தமற்ற நரக வாழ்க்கை தேவையாவென ஆண்களும், பெண்களும் விவாகரத்து கோருமுன் சற்றே சிந்திக்க வேண்டும். :unsure:

[size=4]விவாகரத்தினால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள், குழைந்தைகள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவற்றில் அனுபவம் இல்லை ஆனால் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் தப்பில்லை என்று நினைக்கிறன்....சுகமாக ஆண்களோ பெண்களோ தங்கள் வாழ்வு சந்தோசமாக அமையாத விடத்து டைவர்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள்..அங்கே அவர்கள் தங்கள் இருவரது நலனையும் தான் பார்க்கிறார்களே ஒளிய தங்களுக்கு ஒன்றோ இல்லை அதற்கு மேற் பட்டோ பிள்ளைகளின் இருப்பின் அவர்களின் மன உணர்வையோ அல்லது எதிர்கால முன்னேற்றத்தையோ கவனத்தில் கொள்வதில்லை..இதனால் மிகவும் பாதிகப்படுபவர்கள் பிள்ளைகளே..தந்தையாரைப் பிரிந்து தாயோடு வாழும் சில பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன்..அவர்களோடு பேசி இருக்கிறேன்...சிறு குழந்தைகளை விட்டுப் பிரிந்து வாழும் அப்பா,அல்லது அம்மா எப்படி நடமாடித் திருகிறார்கள் என்று தான் நினைத்து கவலைப்படுவேன்..பெரியவர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக சிறு குழந்தைகளையும் தண்டிப்பது மிகவும் கொடுமை.சில பிள்ளைகளைப் பார்த்தால் தாயாரை விட தந்தையாரோடு மிகவும் பாசமாக இருப்பார்கள்...ஆனால் அந்த தந்தையார் தங்களோடு இருக்கிறார் இல்லையே என்ற வேதனையாலே மனோ ரீதியாக பாதிப்படைகிறார்கள்...

பள்ளிப் பாடங்களைக் கூட சரிவர செய்ய மாட்டார்கள்...டைவர்ஸ் ஆகின தாய் ஒருவர் சொல்லிக் கவலைப் பட்டார்..தனது பிள்ளை வகுப்பு ஆசிரியை மறக்க முடியாத சம்பவம் பற்றி எழுதும் படி கேட்க, தந்தையார் நான்கு வயதில் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அது தன்னுடைய மறக்க முடியாத சம்பவம் என்றும் அதைப் பார்த்து பாட சாலையில் பலரும் மனம் உரிகி நின்ற தாகவும் கேள்விப் பட்டு இருக்கிறன்..இப்போ சொல்லுங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் என்றால் உடன் டைவர்ஸ் தான் தீர்வா...???உங்கள் நலன் தான் முக்கியமா...??பிள்ளைகளுக்காகவேனும் ஏன் உங்களால் பிரச்சனைகளை சுமுகமாக தீர்க்க முடிவதில்லை....மேற்கு உலக நாடுகளில் எப்படியும் வாழலாம்,யாரும் நினைத்த உடன் எந்த முடிவும் எடுக்கலாம் என்பது யாவரும் அறிந்த ஒன்று...தேவை அற்ற முடிவுகளால் உடல் ரீதியாக,மனோரீதியாக பாதிப்பபடுபவர்கள் ரொம்ப பாவங்கள்...ஆகவே இனிவரும் காலத்திலாவது ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து முடிவு எடுங்கள்..

Edited by யாயினி

கிறுக்கு பய பிள்ளை அறியாம சொல்லிட்டாங்க,விட்டுடுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பு.. விவாகரத்தும் ஆண்களின் சிந்தனை ஓட்டமும் பற்றி அமைகிறதே அன்றி விவாகரத்து நல்லதா கெட்டதா என்பதல்ல.

விவாகரத்து ஒரேயடியா கெட்டது என்றும் இல்லை. நல்லது என்றும் இல்லை. சில சந்தர்ப்பங்களில் அது அவசியம் என்று சட்டமும்.. நீதியும் கருதினால்.. அது அவரவருக்கு வழங்கப்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து நீதித்துறைகளும் சமூகவியலாளர்களும் கருசணை கொண்டே உள்ளனர். ஆனால் அதைத் தாண்டிய பாதிப்புக்கள் விவாகரத்துக்களால் குழந்தைகள் மத்தியில் இருப்பதும் அவதானிக்கப்பட்டே வருகின்றன.

விவாகரத்துச் சூழலுக்குள் பெண்களால் தள்ளப்படும் ஆண்.. விவாகரத்தின் பின் அங்கு தன்னை ஒரு சுதந்திரப் பறவை என்று எண்ணத் தலைப்படுகிறான் என்றால்.. அவனின் அந்த உணர்வுத்தூண்டலுக்கு தடையாக்.. பெண்கள்.. என்னத்தை குடும்பங்களில் செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு தேடினால்... விவாகரத்து நோக்கிய ஆண்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உருவாகும்.

இந்த நோக்கத்தை இட்டு எவரும் கருத்துச் சொல்வதாக இல்லை. மாறாக.. விவாகரத்து.. நல்லதா கெட்டதா என்றே பல்லாண்டு காலமாக விவாதிக்கப்படும் அதே விடயத்தை மீண்டும் மீண்டும் விவாதிக்க முற்படுகின்றனர். இவ்வாறான வாதங்களின் பயனாக விவாகரத்துக்கள் குறைவதாக இல்லை.. மாறாக கூடிச் செல்கின்றன..???! ஏன்..?????!

காரணம்.. மனித சிந்தனை ஓட்டங்களை மாற்றத்தக்க வகையில்.. குடும்ப வாழ்வியல் அமையவில்லை என்பது தான் யதார்த்தம்..! ஒரு ஆண்.. தன் குடும்பத்தில் தன் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்ற உணர்தலை செய்கின்ற போது அவன் விவாகரத்தை நோக்கி செல்ல முற்படுகிறான் என்பது தான்.. இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விடயம். அதற்காகவே தான் இந்த விடயம் இங்கு முன் வைக்கப்பட்டும் இருக்கிறது. இது குறித்து குடும்ப வாழ்வியலில் உள்ள.. அல்லது அதற்குள் போக இருக்கும்.. பெண்கள் சிந்திக்க வேண்டும். ஒரு ஆண் தன் சுதந்திரம் இழக்கப்படுகிறது என்ற சிந்தனையை தூண்டக் கூடிய செயல்களை பெண்கள் தவிர்த்து அல்லது நிராகரித்து வாழ்வது அவசியம் என்பதையே இந்த ஆய்வு கோடிட்டுக் காட்டுகிறது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாருக்குத் தான் பதில் கருத்து இடாமல் விட்டனீங்கள்..உங்கள் கண்களுக்கு மற்வர்கள் செய்யும் எல்லாம் தப்புத் தான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாருக்குத் தான் பதில் கருத்து இடாமல் விட்டனீங்கள்..உங்கள் கண்களுக்கு மற்வர்கள் செய்யும் எல்லாம் தப்புத் தான்..

விவகாரம் திசை மாறும் போது அல்லது மாற்றப்படும் போது.. அதை தெளிவுபடுத்த வேண்டியது.. கருத்தாளனின் கடமை..!

நீங்கள் பெண்களை எப்படி தற்காத்துக் கொள்ள முனைகிறீர்களோ.. அதேபோல் தான்.. நான்.. சமூகம் பார்க்கத்தவறும்..ஆண்களின் பக்க நியாயத்தை முன் வைக்கிறேன். நீங்கள் ஆண்கள் கெட்டவங்களாக காட்டப்படும் போது.... அதை இட்டு நியாயத்தை முன் வைப்பதில்லை.???! ஆனால் நாங்கள் அப்படியல்ல.. பெண்களுக்கு சமூகத்தில்.. நிஜமாக நிலவும் அநியாயங்களையும் சொல்லத்தான் செய்கிறோம். :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இங்கே இரண்டொருவர் கதைக்கேக்க காது கொடுத்தானான், அவை சொல்லிச்சினம் - டைவார்ஸ் என்பது கொஸ்டியன சாமாச்சாரம் என்று. யாழில் டைவேர்ஸ் செய்த ஆண்கள்/பெண்கள் அதுபற்றிய தவல்களை தந்தால் ஆரும் கேட்டால் சொல்லாம் பாருங்கோ :)

நெடுக்ஸ் அண்ணாவின் கைகளில் தான் தாம் மாட்டுப்பட வேண்டுமென்று இப்படியான தலைப்புக்கள் தவம் கிடக்கின்றன. :)

divorce இன் பின்னர் பெரும்பாலும் ஆண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது உண்மை தான். அப்ப தானே மனைவி இருக்கும் போது மனைவிக்கு மறைத்து மறைமுகமாக கொண்டு திரிந்தவர்களை எல்லாம் பின்னர் வெளிப்படையாக கொண்டு திரியலாம். :icon_idea: (சிலர் விதிவிலக்கு. அவர்கள் மன்னிச்சுக்கொள்ளுங்கோ :D)

3. டைவர்ஸ் ஆகியதும், முதலில் ஆண்களின் மனதில் தோன்றுவது என்றால் அது "என் துணியை யார் துவைப்பர்? முதலில் ஒரு வேலைக்காரி வேண்டும்" (ஏய்யா வார்ஸிங் மிசின் இருக்கிறது தெரியாமலா ஆண்கள் பூலோகத்தில இருக்காங்க..ஐயோ ஐயோ..!) என்பது தான்.

ஏய்யா... வேலைக்காரன் வேண்டும் என்று கூறாமல் வேலைக்காரி வேண்டும் என்று கூறும் போதே புரியவில்லையா வார்ஸிங் மிசின் இருக்கிறது என்று தெரிந்தும் கூட அதில் தோய்ப்பதை அவர்கள் விரும்பவில்லை என்று. :D

4. டைவர்ஸ் ஆனப் பின் மறுபடியும் 'பேச்சுலர்'. அப்போது அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் பழகலாம். யாரும் அவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள். மேலும் இப்படியே தனியாகவே வாழ்க்கை முழுவதும் இருக்கவும் போவதில்லை. ஆகவே தனக்கு ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்று எந்த பெண்ணைப் பார்த்து தோன்றுகிறதோ, அவர்களிடம் அவர்கள் போய் பேசி பழகுவது என்றெல்லாம் நினைப்பர். அது தவறில்லையே!!!

5. சுதந்திரப் பறவை ஆனப் பின், இனிமேல் மனைவி தொல்லை இருக்காது. ஆகவே இனிமேல் "நான் என்ன செய்கிறேன்?", "எங்கு இருக்கிறேன்?", "எதற்கு? ஏன் தாமதம்?", "எங்கு சாப்பிட்டேன்?" என்று எந்த ஒரு கேள்வியும் வராது, யாரிடமும் சொல்லவும் தேவையில்லை என்றும் சந்தோஷமாக இருப்பர்.

ஆகவே மேற்கூரியவாறே ஆண்கள் டைவர்ஸிற்குப் பிறகு நினைப்பர் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

:D :D

இதை தான் நான் ஏற்கனவே கூறி விட்டேனே. :D

இதற்காக தானே விவாகரத்தையே எடுக்கிறார்கள். :icon_idea: (இங்கும் சிலர் விதிவிலக்கு :))

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

...சமூகம் பார்க்கத்தவறும்..ஆண்களின் பக்க நியாயத்தை முன் வைக்கிறேன். நீங்கள் ஆண்கள் கெட்டவங்களாக காட்டப்படும் போது.... அதை இட்டு நியாயத்தை முன் வைப்பதில்லை.???! ஆனால் நாங்கள் அப்படியல்ல...

ம்.. ஒரு முடிவோடத் தான் இருக்கீங்க... நடத்துங்கள்! :rolleyes:

விவாகரத்துச் சூழலுக்குள் பெண்களால் தள்ளப்படும் ஆண்.. விவாகரத்தின் பின் அங்கு தன்னை ஒரு சுதந்திரப் பறவை என்று எண்ணத் தலைப்படுகிறான் என்றால்.. அவனின் அந்த உணர்வுத்தூண்டலுக்கு தடையாக்.. பெண்கள்.. என்னத்தை குடும்பங்களில் செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு தேடினால்... விவாகரத்து நோக்கிய ஆண்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உருவாகும்.

---------

-----------

-----------

ஒரு ஆண் தன் சுதந்திரம் இழக்கப்படுகிறது என்ற சிந்தனையை தூண்டக் கூடிய செயல்களை பெண்கள் தவிர்த்து அல்லது நிராகரித்து வாழ்வது அவசியம் என்பதையே இந்த ஆய்வு கோடிட்டுக் காட்டுகிறது..! :icon_idea:

ஆண்கள் விடும் தவறுகளை தட்டிக்கேட்காமல் அனைத்தையும் பார்த்தும் பார்க்காதது போல் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் விவாகரத்து நோக்கிய ஆண்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உருவாகும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் விடும் தவறுகளை தட்டிக்கேட்காமல் அனைத்தையும் பார்த்தும் பார்க்காதது போல் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் விவாகரத்து நோக்கிய ஆண்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உருவாகும். :lol:

இந்திய ஆய்வாளர்களுக்கு இன்னும் வார்சிங் மிசினின் பாவனை உள்ளது தெரியவில்லைப் போலும். நாங்கள் எல்லாம் என்ன வேலைக்காரியா வைச்சிருக்கிறம்... நாங்க தானே தோய்க்கிறம்..! :lol:

மேலும்... ஒரு ஆண் சகஜமா பெண்களோடு பேசிப் பழகிறது என்பதை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை பெண்கள் நிறுத்தனும். பெண்கள் ஆண்களோடு அதே வகையில் பழகுவது தவறல்ல. ஆனால் அவங்க.. அப்படிப் பழகுவதாக வெளில காட்டிக் கொண்டு ரகசியமா தப்புப் பண்ண துணியுறாங்க. அப்ப ஆண் பெண் மீது நம்பிக்கை இழக்கிறான். அவளை வெறுக்க ஆரம்பிக்கிறான். அங்கு தான்.. கருத்து முரண்பாடுகள் எழுகின்றன..! அந்த முரண்பாடுகள் முடிவின்றி தவறான முடிவுகளை எடுக்க உந்துகின்றன..! இதில் பெண்களே அதிகம் ஆரம்பத் தவறு செய்யுறாங்க. ஆண்களைக் காட்டிலும்..! :):icon_idea:

தாயின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளுற ஆண்.. ஏன் மனைவியின் புத்திமதியை ஏற்றிக் கொள்ளுறான் இல்லை. அதற்கு காரணம்.. அவன் தாயை நம்பும் அளவிற்கு மனைவி மீது நம்பிக்கை வைக்கிற அளவுக்கு அவள் அவனோட நடந்துகொள்ளேல்ல.. அவனைப் புரிஞ்சு கொள்ள முயலல்ல என்று தானே.

இது யார் தப்பு.. ஆணினதா... பெண்ணினதா..???! பெண்கள் தங்கள் தந்தை.. சகோதர்கள் போல.. கணவன்.. காதலனை அணுகினா.. என்னா குறைஞ்சா போயிடுவினம்..! ஏன் அவனோட மல்லுக்கட்டினம்.. அநாவசியமா. வெறுப்பை ஏத்தினம். கடுப்பை வளர்க்கினம்...! இவற்றை களைஞ்சா ஆண் - பெண் நல்லுறவு நல்லா நீடிக்குமே. எந்த ஒரு ஆணும் அன்பான மனைவியை விட்டிட்டு ஓடமாட்டான். அவனுக்கு அப்படி ஒரு மனசே வராது..! அப்படி ஓடிறானுன்னா... அவன் சாதாரண மனிதனே இல்ல. எந்த மகனாவது அன்பு காட்டும் அம்மாவை விட்டிட்டு ஓடுவானா..???! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து பக்க சார்பாக எழுதுவதை சற்று குறைத்தால் யாரது மனமும் காயப்படாது..இப்படியே பெண்களை மட்டம் தட்டியே எழுதிக் கொண்டு போவதால் உங்களுக்கு எப்படி பெண்களைக் கண்டால் அலர்ஜியோ அப்படித் தான் பெண்கள் ஆண்களை விட்டு ஓட வேண்டி இருக்கு..நீங்கள் தான் கிடந்து கத்துறீங்கள் வேறையாராவது முன்வந்து சொல்கிறார்களா தாங்கள் செய்தது தப்பு,அல்லது செய்வது தப்பு என்று..மனம் திறந்து சொல்ல மாட்டார்கள்.

மன சுத்தியோடு பழகிய எந்த ஒரு ஆணும் ஓளிக்கவும் தேவை இல்லை மற்றவேக்கு எடுப்பு காட்டவும் தேவை இல்லை..அல்லது கொஞ்சம் ஏதாச்சும் ஒருவகையில் நொந்தவர்கள் என்றால் நீ இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டாய்..அன்னை தெரேசா போல் தங்கம்மா அப்பாக்கு குட்டிபோல் பொது தொண்டில் இறங்கி அவற்றில் காலத்தை செலவிடலாம் என்று இதயமுள்ள,சகோதரங்களோடு பிறந்த எவரும் சொல்ல மாட்டார்கள்..பாசம் என்றால் என்னவென்றே தெரியாததுகள் எப்படி தன்னை நேசிப்பவளைப் பற்றி புரிந்து கொள்ள போகுதுகள்..எல்லாம் வேசம் தான்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

...வேறையாராவது முன்வந்து சொல்கிறார்களா தாங்கள் செய்தது தப்பு,அல்லது செய்வது தப்பு என்று..மனம் திறந்து சொல்ல மாட்டார்கள்.

நீங்கள் எதிர்பார்க்கிற தப்பை நாங்கள் செய்வதே இல்லையே? பின்னே எப்படி இங்கே மனம் திறந்து எழுதுவதாம்? நாங்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறோம்? :rolleyes:

நெடுக்கர் அப்படித்தான் இப்போ துள்ளுவார்..கல்யாணம் ஆனால் எல்லாம் சரியா போயிடும்... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும்.. இது ஒரு ஆய்வுரீதியான அறிக்கை என்று தான் சொல்லி போட்டிருக்காங்க. ஆண்கள் மனசில.. விவாகரத்து என்ன எண்ணத்தை ஏற்படுத்துது என்ற அறிதலுக்கான ஆய்வும் கூட. அது சாதாரணமானதல்ல. அந்த எண்ண அலைகளுக்கான தோற்றுவாய்களை கண்டறிந்து பெண்கள் அவற்றிற்கு ஏற்ப ஆண்களோடு பழகின்.. கணவன் - மனைவி பிரிவினைக்கான வாய்ப்பை வெகுவாக குறைக்கலாம் என்பது தான் எங்க வாதமே தவிர.. பெண்கள் தவறே செய்யாமல்.. ஆண் விட்டிட்டு ஓடுறான் என்பது போன்றதான உங்கள் சிலரின் அர்த்தமற்ற கருத்துக்களில் எனக்கு உடன்பாடும் இல்லை.. அவற்றை நான் ஏற்றுக் கொள்ளுபவனும் அல்ல..!

நீங்கள் எதிர்பார்க்கிற தப்பை நாங்கள் செய்வதே இல்லையே? பின்னே எப்படி இங்கே மனம் திறந்து எழுதுவதாம்? நாங்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறோம்? :rolleyes:

நெடுக்கர் அப்படித்தான் இப்போ துள்ளுவார்..கல்யாணம் ஆனால் எல்லாம் சரியா போயிடும்... :lol:

இதோ ராஜவன்னியன் அண்ணா சொல்லிடார்.

ஆண்கள் பொதுவாவே ஒரு விடயத்தை நீண்ட காலம் மறைக்கமாட்டாங்க. எப்படியாவது அது தெரியவர வைச்சிடுவாங்க. ஆனால் பெண்கள் அப்படியல்ல. மறைக்கனுன்னு நினைச்சா ஒன்றை அப்படியே மூடி மறைச்சிடுவாங்க..! இங்க தான் ஆண்கள் பெண்களோடு அநேகம் முரண்படுறாங்க என்று நினைக்கிறன்.

நன்றி.. என்னைத் தவிர.. இன்னொரு ஆண் இதனை பகிர்ந்து கொண்டது.. வரவேற்க வேண்டிய விடயம்..! :):icon_idea:

நிச்சயமா நான் என் சுயத்தை சுதந்திரத்தை இழந்து வாழ தயார் இல்லை... ராஜவன்னியன் அண்ணா. என்னை என் சுயத்தோடு சுதந்திரத்தோடு.. ஏற்றுக் கொள்ளக் கூடியவங்க யாராச்சும்.. இருந்தால்.. (இருக்க வாய்ப்பில்லை) அவங்கள எனக்கும் எங்கள் சார்ந்தவருக்கும் பிடிச்சிருந்தா மட்டும் தான் (அதுவும் ரெம்பக் கடினம்).. நான் ஏற்றுக்குவன். இல்லைன்னா... எனக்கு அப்படியான ஒரு வாழ்க்கை அவசியமில்லை என்பதில் நான் தெளிவாகவே இருக்கிறன்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

இந்திய ஆய்வாளர்களுக்கு இன்னும் வார்சிங் மிசினின் பாவனை உள்ளது தெரியவில்லைப் போலும்.

பாவம். உலகம் தெரியாதவர்களின் ஆய்வு என்றால் முடிவு இப்படி தான் எழுதுவார்கள். கருத்து சொன்ன ஒருவருக்கும் கூட washing machine பாவனை இருப்பது தெரியவில்லை போலும்.

எதற்கும் washing machine இலவசம் என்று சொல்லி இந்தியாவில் விளம்பரம் செய்ய வேண்டும்.

நாங்கள் எல்லாம் என்ன வேலைக்காரியா வைச்சிருக்கிறம்... நாங்க தானே தோய்க்கிறம்..! :lol:

divorce பண்ணியவர்களுக்கு சொன்னதை உங்களுக்கு சொன்னதாக நினைச்சுப்போட்டியள். ஏன் உங்களுக்கும் டிவோர்ஸா? உங்களுக்கு எப்ப கல்யாணம் நடந்தது? :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம். உலகம் தெரியாதவர்களின் ஆய்வு என்றால் முடிவு இப்படி தான் எழுதுவார்கள். கருத்து சொன்ன ஒருவருக்கும் கூட washing machine பாவனை இருப்பது தெரியவில்லை போலும்.

எதற்கும் washing machine இலவசம் என்று சொல்லி இந்தியாவில் விளம்பரம் செய்ய வேண்டும்.

divorce பண்ணியவர்களுக்கு சொன்னதை உங்களுக்கு சொன்னதாக நினைச்சுப்போட்டியள். ஏன் உங்களுக்கும் டிவோர்ஸா? உங்களுக்கு எப்ப கல்யாணம் நடந்தது? :o

இந்தியாவில் வார்சிங் மிசினை பாவிக்கிற பொறுப்பையும் பெண்களே எடுத்துக்கிறாங்க. மாமியாரிடம் இருந்து சாவிக் கொத்தைப் புடுங்கி குடித்தனம் நடத்தின காலம் போய்.. தனிக்குடித்தனம் என்று போய் ஆண்களை முற்றாக நிர்வகிக்கும் பொறுப்பை பெண்களே அங்கு அதிகம் செய்வதால்.. அங்குள்ள ஆண்களின் சிந்தனை அப்படி எழுப்பப்பட்டிருக்கக் கூடும். அது அங்கு எழுதப்பட்டிருக்கக் கூடும். :)

மேலும்.. டைவர்ஸ் ஆன ஆணும்.. பச்சிளர் ஆணும்.. சுதந்திரத்தை விரும்புகின்றவங்க என்ற வகையில்.. அந்த ஒப்பீட்டை அளித்தேன். மற்றும்படி.. திருமணம் எல்லாம் செய்து கொண்டு வாழ்ந்து பார்த்து.. விவாகரத்து வாங்கித்தான் இதைச் சொல்லனுன்னா.. அதை நான் சொல்ல முடியாது தான்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

மேலும்... ஒரு ஆண் சகஜமா பெண்களோடு பேசிப் பழகிறது என்பதை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை பெண்கள் நிறுத்தனும்.

அப்படியானவர்களை நான் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காததால் தான் சிலர் விதிவிலக்கு என்று போட்டு கருத்து எழுதியிருக்கிறன். :D மேலுள்ள கருத்துகளை பாருங்கோ. :)

பெண்கள் ஆண்களோடு அதே வகையில் பழகுவது தவறல்ல. ஆனால் அவங்க.. அப்படிப் பழகுவதாக வெளில காட்டிக் கொண்டு ரகசியமா தப்புப் பண்ண துணியுறாங்க. அப்ப ஆண் பெண் மீது நம்பிக்கை இழக்கிறான். அவளை வெறுக்க ஆரம்பிக்கிறான். அங்கு தான்.. கருத்து முரண்பாடுகள் எழுகின்றன..! அந்த முரண்பாடுகள் முடிவின்றி தவறான முடிவுகளை எடுக்க உந்துகின்றன..! இதில் பெண்களே அதிகம் ஆரம்பத் தவறு செய்யுறாங்க. ஆண்களைக் காட்டிலும்..! :):icon_idea:

:o :o

பெண்களில் சிலர் அப்படி உள்ளனர் என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் பெண்கள் அனைவரும் அப்படி என்று நினைத்து பெண்கள் அனைவரையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை ஆண்கள் நிறுத்தணும். :lol: :lol:

அதெப்படி ஆண்கள் பெண்களுடன் பழகினால் அவர்கள் சகஜமாக பழகுகிறார்கள் என்றும் பெண்கள் ஆண்களுடன் பழகினால் அவர்கள் தப்பு பண்ணுகிறார்கள் என்றும் சொல்கிறீர்கள்?

குடும்ப வாழ்வியலில் உங்கள் யதார்த்தம் பிழைக்கிறதே.

நீங்கள் கூறியதை அப்படியே ஆண்களுக்கு மாற்றி பாருங்கள். (சிலர் விதிவிலக்கு :D )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி ஆண்கள் பெண்களுடன் பழகினால் அவர்கள் சகஜமாக பழகுகிறார்கள் என்றும் பெண்கள் ஆண்களுடன் பழகினால் அவர்கள் தப்பு பண்ணுகிறார்கள் என்றும் சொல்கிறீர்கள்?

குடும்ப வாழ்வியலில் உங்கள் யதார்த்தம் பிழைக்கிறதே.

நீங்கள் கூறியதை அப்படியே ஆண்களுக்கு மாற்றி பாருங்கள். (சிலர் விதிவிலக்கு :D )

பெண்கள் ஆண்களுடன் சகஜமாகப் பழகுகிறோம் என்ற போர்வையில் தப்புப் பண்ணிறது அதிகம் என்ற வகையில் தான்.. சொல்லப்பட்டுள்ளது. (எல்லா பெண்களும் அல்ல). அங்கு.. ஆணுக்கு அப்படி ஒரு தேவை அதிகம் இருப்பதில்லை... அல்லது குறைவு. அவன் நேரடியாவே பழகிட்டு போவான்.. இல்ல விவாகரத்து வாங்கிட்டு போவான்.. ஆனால் பெண்கள் ஊருக்கு உலகத்திற்கு பயந்து.. எதிர்காலத்தை நினைச்சு.. இப்படிச் செய்யுறாங்க.. என்பதை தினசரி.. புதினங்களில் அறிகிறோம்..! அதனால் இதனை ஆண்களுக்கு மாற்றிப் போடுவது அவர்களுக்கு அவ்வளவு பொருந்தாது..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

...நிச்சயமா நான் என் சுயத்தை சுதந்திரத்தை இழந்து வாழ தயார் இல்லை... ராஜவன்னியன் அண்ணா. என்னை என் சுயத்தோடு சுதந்திரத்தோடு.. ஏற்றுக் கொள்ளக் கூடியவங்க யாராச்சும்.. இருந்தால்.. (இருக்க வாய்ப்பில்லை) அவங்கள எனக்கும் எங்கள் சார்ந்தவருக்கும் பிடிச்சிருந்தா மட்டும் தான் (அதுவும் ரெம்பக் கடினம்).. நான் ஏற்றுக்குவன். இல்லைன்னா... எனக்கு அப்படியான ஒரு வாழ்க்கை அவசியமில்லை என்பதில் நான் தெளிவாகவே இருக்கிறன்..!

பெரும்பாலும் அதை நீங்கள் அறுதி முடிவாக தீர்மானிக்க இயலாது நெடுக்ஸ்...அது காலத்தின் கைகளில்.

முதலில் முறுக்கோடு திரிந்த பல இளைஞர்கள், பின்னர் சமர்த்தானதை கண்டிருக்கிறேன். உங்கள் சுயத்தை (தற்சமயம்) விட்டுக்கொடுக்காத நிலையில் வாழ்க்கை அமைந்தாலும், சம்சார வெள்ளத்தில் நீங்கள் அடித்துச் செல்லும்போது விட்டுக்கொடுத்துதான் வாழ நேரிடும்..

விட்டுக்கொடுத்து ஒருவர்கொருவர் அந்நோன்யமாய் வாழ்வதே வாழ்க்கை-இஞ்ஞானம் தற்பொழுது உங்களுக்கு வேடிக்கையாக படலாம், பின்னர் இதை நீங்களே அனுபவபூர்வமாக உணர்வீர்கள்.. அதுவரை தனிக்காட்டு ராஜா(ராணி இல்லாத & முழுமை இல்லாத) வாழ்க்கையை அனுபவியுங்கள்..

வாழ்த்துக்கள்!

பெண்கள் ஆண்களுடன் சகஜமாகப் பழகுகிறோம் என்ற போர்வையில் தப்புப் பண்ணிறது அதிகம் என்ற வகையில் தான்.. சொல்லப்பட்டுள்ளது. (எல்லா பெண்களும் அல்ல). அங்கு.. ஆணுக்கு அப்படி ஒரு தேவை அதிகம் இருப்பதில்லை... அல்லது குறைவு. அவன் நேரடியாவே பழகிட்டு போவான்.. இல்ல விவாகரத்து வாங்கிட்டு போவான்.. ஆனால் பெண்கள் ஊருக்கு உலகத்திற்கு பயந்து.. எதிர்காலத்தை நினைச்சு.. இப்படிச் செய்யுறாங்க.. என்பதை தினசரி.. புதினங்களில் அறிகிறோம்..! அதனால் இதனை ஆண்களுக்கு மாற்றிப் போடுவது அவர்களுக்கு அவ்வளவு பொருந்தாது..! :):icon_idea:

பாவம் நெடுக்ஸ் அண்ணா, ரொம்ப அப்பாவியாக இருக்கிறீர்களே (நடிக்கிறீர்களே :D).

ஆண்கள் செய்யும் தவறுகள் தினசரி புதினங்களில் பெரிதாக வருவதில்லை. காரணம் ஆண்களின் தவறுகளை ஏனைய ஆண்களும் சேர்ந்து மறைக்கின்றனர். அல்லது வெளியில் தெரிந்தாலும் அவர்கள் செய்வதை தவறாக கருதாமல் விட்டு விடுவார்கள். ஆனால் பெண்களின் தவறுகளை பூதாகாரமாக பெருப்பித்து எழுதுவார்கள். இந்த சமூகம் முதலில் மாற வேண்டும். (நீங்கள் உட்பட)

ஆனால் சமூகம் மாறாதவரை தினசரி புதினங்களில் வருவதை மட்டும் வைத்து கருத்து எழுதாமல் யதார்த்தத்தை உணர்ந்து கருத்து எழுதுங்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் நெடுக்ஸ் அண்ணா, ரொம்ப அப்பாவியாக இருக்கிறீர்களே (நடிக்கிறீர்களே :D).

ஆண்கள் செய்யும் தவறுகள் தினசரி புதினங்களில் பெரிதாக வருவதில்லை. காரணம் ஆண்களின் தவறுகளை ஏனைய ஆண்களும் சேர்ந்து மறைக்கின்றனர். அல்லது வெளியில் தெரிந்தாலும் அவர்கள் செய்வதை தவறாக கருதாமல் விட்டு விடுவார்கள். ஆனால் பெண்களின் தவறுகளை பூதாகாரமாக பெருப்பித்து எழுதுவார்கள். இந்த சமூகம் முதலில் மாற வேண்டும். (நீங்கள் உட்பட)

ஆனால் சமூகம் மாறாதவரை தினசரி புதினங்களில் வருவதை மட்டும் வைத்து கருத்து எழுதாமல் யதார்த்தத்தை உணர்ந்து கருத்து எழுதுங்கள். :)

இதெல்லாம் பண்டைக்காலம். இன்று ஊடகத்துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பணிபுரிகின்றனர். எனவே புதினம் திரட்டுவதில் இருந்து செய்தி ஆக்குவது வரை குறைந்தது ஒரு பெண்ணின் மேற்பார்வையின்றி அது பிரசுரிக்கப்பட முடியாது. அந்த வகையில்.. உங்கள் குற்றச்சாட்டு இன்றைய உலகில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவை அல்ல. அதுவும் இன்றி ஆண்களின் உரிமைகளைக் காக்க இல்லாத அமைப்புக்கள் எல்லாம் பெண்களின் உரிமைகளைக் காக்க இருக்கின்றன. 24/7 ஆண்களின் செயற்பாடுகளை அவர்கள் விளக்கெண்ணை விட்டு கண்காணிக்கவும் செய்கின்றனர். இந்த நிலையில்.. ஒரு ஆண் தவறு செய்தால் அதுதான் பூதாகரமாக்கப்பட்டு ஆணாதிக்கமாக சித்தரிக்கப்பட்டு செய்தியாக்கப்படும். பெண்களுக்கு அப்படியல்ல. பல செய்திகளில் அவர்களின் பக்கம் தவறிருந்தாலும் அதை மறைத்தே எழுதி வந்திருக்கிறார்கள். வருகிறார்கள். இதனை எல்லாம் தாண்டி.. பெண்களின் தவறுகள் வெளில வருகுது என்றால் பெண்கள் பெருமளவில் தவறு செய்கின்றனர் என்பதுதான் யதார்த்தமான உண்மையாக இருக்க முடியும்.

ஆண்களுக்கு நிகராக அல்லது மேலதிகமாகவே பெண்கள் சமூகத்தில் தவறிழைக்கிறாங்க.. (எல்லோரும் அல்ல). அந்த வகையில்.. யதார்த்தம் என்பது உங்களை விட்டு தான் அதிகம் தூரம் இருக்கிறதோ அல்லது நீங்கள் பெண்களின் தவறுகளை இனங்காட்ட விரும்பாமல் இருக்கிறீங்களோ என்று எண்ணத் தோன்றுகிறது..! அதற்காக ஆண்களை எல்லாவற்றிற்கும்.. நீங்கள் குற்றவாளியாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது..! :):icon_idea:

நன்றி உங்கள் கருத்துக்கு.

இங்கு பெண்கள் தவறு விடவில்லை என்று எங்கும் நான் கூறவில்லை. இதே திரியில் அவர்களில் ஒருபகுதியினர் தவறு விட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அப்படியிருக்கும் போது பெண்களின் தவறுகளை நான் இனங்காட்ட விரும்பாமல் இருக்கிறேன் என்று கூற முடியாது. :rolleyes:

அதே போல் எல்லா ஆண்களும் தவறானவர்கள் என்றும் நான் கருத்து எழுதியிருக்கவில்லை. :rolleyes:

பெண்கள் மேல் குற்றச்சாட்டுகளை வைக்கும் நீங்கள் ஆண்கள் விடும் தவறுகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் கருத்து எழுதும் போது அதிலுள்ள உண்மைகளை ஒப்புக்கொண்டு அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து தனியே அவர்கள் கருத்துகளை பிழை பிடித்து பதில் எழுதுவது நியாயமில்லை.

ஒரு கணவன் மனைவி divorce எடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் நீங்கள் கூறுவதோ அனைத்துக்கும் பெண்கள் தான் காரணம், பெண்கள் தான் விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும் என்று. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.