Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குச் சார்பான அதிபரை ஆதரிக்குக; வேம்படி பழைய மாணவிகள் சங்கத்திடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை

Featured Replies

வேம்படி மகளிர் கல்லூரியில் தனக்குச் சார்பானவர் அதிபராக வருவதை ஆதரிக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.பழைய மாணவிகள் சங்கத்தின் தலைவியை நேரில் சந்தித்தே இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

இது குறித்து பழைய மாணவிகள் சங்கத்தலைவியிடம் "உதயன்" கருத்துக் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:

உண்மையில் வேம்படியில் நடைபெறுவது ஒரு வெற்றிடத்துக்கான போட்டிதான். ஏற்கனவே வெற்றிடமாக இருந்த அதிபர் பதவிக்கு தற்காலிகமாக பதில் அதிபராகக் கடமையாற்றியவரும் நிலையிலேயே நிரந்தரமாகப் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக இன்று (நேற்று) என்னைச் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா "ஏற்கனவே பதில் அதிபராக இருந்தவரையே நான் அதிபர் பதவிக்கு பரிந்துரை செய்திருந்தேன். ஆனால் அதில் ஏதோ குழப்பம் நடந்துவிட்டது. அதனை நான் நிவர்த்தி செய்வேன். எனவே அதிபராக யார் வந்தாலும் பதில் அதிபராக இருந்தவர் வந்தால்கூட அவருக்கு பழைய மாணவிகள் சங்கம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். பதில் அதிபராக இருந்தவர் அதிபராக வருவதை ஆதரித்தால் அவர் முன்னர் போன்று பழைய மாணவிகள் சங்கத்துடன் முரண்படவும் மாட்டார்'' என்று எம்மிடம் தெரிவித்தார். இதற்கு "முறையான நடைமுறைகள் மூலம் அதிபராகத் தெரிவு செய்யப்படுபவருக்கு எமது சங்கத்தின் ஆதரவு உண்டு.'' என்று பதிலளித்தோம். இவ்வாறு பழைய மாணவிகள் சங்கத்தலைவி தெரிவித்தார்.

http://onlineuthayan...621141318258725

  • தொடங்கியவர்

z_p17-Weweldeniya-04.jpg

... நேற்றைய தினம் யாழிலுள்ள ஓர் நண்பருக்கு தொலைபேசி எடுத்தால், அவரின் மகளுடன் கதைக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. நண்பரின் மகளோ யாழிலுள்ள பிரபல கல்லூரியான வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்று வருகிறார். எப்படி படிப்பெல்லாம் போகிறதென்று கேட்டதற்கு நண்பரின் மகளோ, யாழ் வேம்படி பாடசாலையில், ஆயுததாரி அத்தியடிக்குத்தி டக்லஸ் தேவானந்தா கும்பல் தொடர்ச்சியாக பெரும் குழப்பங்களில் ஈடுபட்டு வருவதாக சொன்னார்.

... அப்பாடசாலையில் அதிபர் பதவிக்கு ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்துக்கு, கல்வித்திணைக்களம் தகுதி வாய்ந்த ஒருவரை நியமித்திருக்கிறது, அதே நேரம் அப்பாடசாலையில் உபஅதிபராக இருந்தவர், தற்காலிக அதிபரின் வேலையை கவனித்து வந்திருக்கிறார். இவ்வுபஅதிபரோ அத்தியடி குத்தி கும்பலுக்கு வேண்டப்பட்டவர். இவ்வுபஅதிபர் அத்தியடி குத்தி டக்லஸின் உதவியுடன் அதிபர் பதவியில் நிரந்தரமாக அமர குத்தியை அணுகவும், குத்தி உடனடியாக புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை நியமிப்பதை தடுக்க கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கு நெருக்கல்கள், மிரட்டல்களை கொடுக்கத்தொடங்கியதுடன், வேம்படி பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவிகளை மிரட்டி, புதிய அதிபராக உப அதிபரையே தெரிவு செய்ய வேண்டும், இல்லையேல் நாம் பாடசாலையை பகிஸ்கரிக்க உள்ளோம் என கையெழுத்துக்களை திரட்டி மாணவிகளை பகிஸ்கரிப்பிலும் ஈடுபடுத்தியுள்ளான். இதில் அப்பாடசாலைக்கு புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டிருப்பவரின் மகளும் இப்பாடசாலையில் தானாம் கல்வி கற்கிறார், அப்பிள்ளையும் மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறார். தன் தாயுக்கு எதிராக மகள் கையெழுத்து இடப்பட்டிருக்கிறார். அதை விட அப்புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டவரின் குடும்பம் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் ..

... நண்பரின் மகள் குறிப்பிட்டார்.

... யாழ் பல்கலைக்கழகத்துக்கு உப அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரட்னஜீவன் கூலை துரத்திமாயுததாரி குத்தி, இன்று சாதாரன பாடசலைகளிலும் .. எங்கு சென்று முடியப்போகிறதோ???????

... குத்தி போன்ற கழுதைகளுக்கு தெரியுமா? கல்வி எனும் கற்பூரத்தின் வாசனை! ..

Edited by Nellaiyan

... குத்தி போன்ற கழுதைகளுக்கு தெரியுமா? கல்வி எனும் கற்பூரத்தின் வாசனை! ..

அட்ராசக்கை.கதை இப்ப இப்படி போகுதோ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... குத்தி போன்ற கழுதைகளுக்கு தெரியுமா? கல்வி எனும் கற்பூரத்தின் வாசனை! ..

அட்ராசக்கை.கதை இப்ப இப்படி போகுதோ ?

எனக்கு விளங்கவில்லை ., வேற ஆக்களுக்கும் இருக்கும்?

என்ன சொல்ல வாறிங்கள் என்று ? விளங்கப்படுத்த முடியுமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.