Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சே பிறந்தது, சிங்களர்கள் செய்த பாவம்!

Featured Replies

[size=4]ராஜபக்சே பிறந்தது, சிங்களர்கள் செய்த பாவம்![/size]

[size=2][size=4]இலங்கை அரசில் இன வாதிகளை வெளியேற்றாவிட்டால் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அரசு எந்த நேரத்திலும் கவிழும். இவரைப் போன்றவர்கள் இங்கு பிறந்தது சிங்களர்களும், பெளத்தவர்களும் செய்த பாவம் என்று இலங்கையைச் சேர்ந்த சிங்களக் கட்சியான நவசம சமாஜக் கட்சி கூறியுள்ளது.[/size][/size]

[size=2][size=4]இது குறித்து நவசம சமாஜக் கட்சி தலைவரும், தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கூறுகையில்,[/size][/size]

[size=2][size=4]அணைந்து போக உள்ள விளக்கு மிக பிரகாசமாக எரியும். அதே போல அரசாங்கத்தில் உள்ள இனவாத அமைச்சர்களான சம்பிகா ரணவகாவும், விமல் வீரவன்சவும் நன்றாகவே பிரகாசிக்கின்றனர். விரைவில் இந்தப் பிரகாசம் மறைந்து போகும். அதிபர் தன்னையும், அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் இனவாதிகளை உடனே வெளியேற்ற வேண்டும். இது வெகு விரைவில் நடைபெறும் என நம்புகின்றேன்.[/size][/size]

[size=2][size=4]நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அதிபர் ராஜபக்சேவுக்கு மனம் இல்லை. ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பரிந்துரைகளை அமல்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ய முன் வராது. அப்போது ஆட்சியை தொடர முடியாது போகும். எனவே, மிக விரைவில் அரசிற்குள் ஒளிந்திருக்கும் இனவாதிகள் வெளியேற்றப்பட்டு நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் நிலைமை உருவாகும்.[/size][/size]

[size=2][size=4]இது போன்ற இனவாதிகள் இந்த நாட்டில் தோன்றியது சிங்கள, பௌத்த மக்கள் செய்த பாவம் ஆகும். அரசுக்குள்ளேயே அரசை கவிழ்க்கும் சதித் திட்டம் தோல்வி அடையாவிட்டால் அதிபரின் பதவி பறிபோகும் என்றார்.[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=108783[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தைப் பற்றி எனக்குத் தெரியவில்லை, அகூதா!

ஆனால், நிச்சயமாக, பவுத்தம் செய்த பாவம்!

நல்ல வேளை, புத்தரை அவரது சீடர்கள் எரித்துவிட்டார்கள்!

இல்லாவிட்டால், கல்லறையிலிருந்து அவர் தாங்கமுடியாமல், கட்டாயம் எழுந்து வந்திருப்பார்!

  • தொடங்கியவர்

[size=4]உண்மை புங்கையூரன். [/size]

[size=1]

[size=4]தமிழரை பொறுத்தவரையில்இந்த பாவங்களுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. [/size][/size]

ராஜபக்சாவை ஜனாதிபதியாக்கியது அறியாமை ,முழு தமிழர்களும் செய்த பாவம் .

ராஜபக்சா பதவி வந்துதும், இவ்வளவு தமிழர்கள் அழிந்ததும், இன்று நாட்டில் நடப்பதும் நன்மைக்கே என்று ஒருவன் நினைத்தால் அவனை விட ஒரு கேடு கேட்ட பிறவி இவ்வுலகில் இல்லை .

Edited by arjun

  • தொடங்கியவர்

ராஜபக்சாவை ஜனாதிபதியாக்கியது தமிழன் செய்த பாவம் .

ராஜபக்சா பதவி வந்துதும், இவ்வளவு தமிழர்கள் அழிந்ததும், இன்று நாட்டில் நடப்பதும் நன்மைக்கே என்று ஒருவன் நினைத்தால் அவனை விட ஒரு கேடு கேட்ட பிறவி இவ்வுலகில் இல்லை .

[size=4]சிங்கள நாட்டில் ஒரு பௌத்த சிங்கள பேரினவாதியால் மட்டுமே ஒற்றையாட்சி கொண்ட நாட்டின் (நன்றி ஐக்கிய இராச்சியம்) தலைவராக வரமுடியும். இதுதான் உண்மை, இதுதான் சரித்திரம். இதில் தமிழர்களால் எந்த மாற்றத்தையும் இதுவரை கொண்டுவர முடியவில்லை, கொண்டுவரவும் முடியாது. [/size]

  • தொடங்கியவர்

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர் , நேராக அவரிடம் சென்றார்.

"காந்தி , நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள் . அவர்கள் சுயசரிதை எழுதியது சரி. நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள் ' என்று கேட்டார் .

இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் எவரும் ஆத்திரமடைய வாய்ப்புண்டு. ஆனால் கண்ணதாசனோ மிக அமைதியாக , ' காந்தி , நேரு போன்றவர்கள் ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதற்காக எழுதினார்கள் . ஒருவர் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் எழுதுகிறேன் ' என்றார்.

மகிந்த இராஜபக்சே பற்றியும் சரித்திரம் எழுதப்பட்டு கொண்டிருக்கின்றது

Edited by akootha

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர் , நேராக அவரிடம் சென்றார்.

"காந்தி , நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள் . அவர்கள் சுயசரிதை எழுதியது சரி. நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள் ' என்று கேட்டார் .

இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் எவரும் ஆத்திரமடைய வாய்ப்புண்டு. ஆனால் கண்ணதாசனோ மிக அமைதியாக , ' காந்தி , நேரு போன்றவர்கள் ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதற்காக எழுதினார்கள் . ஒருவர் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் எழுதுகிறேன் ' என்றார்.

மகிந்த இராஜபக்சே பற்றியும் சரித்திரம் எழுதப்பட்டு கொண்டிருக்கின்றது

நன்றி அகூதா இணைப்பிற்கு

எனக்குப்பிடித்த ,அற்புதமான ,அபூர்வமான ,கலைஞ்சர் ,மனிதர் மதிப்பிற்குரிய கலைமாமணி கண்ணதாசன் அவர்கள்.....

அவர் சார்ந்த நூல் ஒன்றிலிருந்து சிலவரிகள் [size=5].....................நீ எப்படி வாழ வேண்டும் என்று கூறுவதற்கு எனக்கு ஜோக்கியதை இருக்கு ....

ஏனனில் நான் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தேன் ....அதனால் நீ எப்படி வாழ வேணும் என்று கூற எனக்கு

ஜோக்கியதை இருக்கு ........................[/size]

  • தொடங்கியவர்

[size=5]சந்திரிகாவின் அழுகை போல உங்களுக்கும் ஏற்படலாம்[/size]

[size=4]முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பத்து வருடங்கள் தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்தவர். ஜனாதிபதியாக இருந்த காலத்தின் ஆரம்ப கட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விடயங்களில் அவர் கரிசனை கொண்டிருந்தார். ஆயினும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை அவராலும் அடைய முடியாமல் போயிற்று.[/size]

[size=4]சந்திரிகாவுக்கு விடுதலைப் புலிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், 1995களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாண த்தை படையினர் கைப்பற்றிய பின் னர் அப்போதைய ஜனாதிபதி சந்தி ரிகா குமார துங்க இனப்பிரச்சினைக் கான தீர்வு பற்றி எந்தவிதமான அக்கறை அற்றவராகவே இருந்தார்.இந்த வரலாறுகளை கூறுவதன் மூலம் எது வும் நடந்தேறப்போவதில்லை என் பது மட்டும் உறுதி.

[size=5]ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வுக்கு முன்னதாக ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவின் தற்போதைய நிலை என்ன என்பதை சந்திரிகா அம்மையார் உணர்ந்து எந்த பிரயோசனமும் இல்லை. ஆனால், அவரின் தற்போதைய நிலைமையை இப்போதைய அதிகார த்திலும் ஆட்சிப்பீடத்திலும் இருப்பவர்கள் நன்கு புரிந்து கொள்வது மி[/size][/size][size=5]வும் அவசியம்.[/size]

[size=4]இலங்கையில் நடந்த சார்க் மாநாட்டின் போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க மாநாட்டில் இருப்பதற்கு ஆசனம் இல்லாமல் அலைந்த வரலாறு இல ங்கையில் இருக்கக் கூடிய நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதி ஆட்சி முறையின் மறுபக்கம் என்பதே. அந்தப் பதவியில் இருந்த வர்கள்- பதவியில் இருப்பவர்கள்-இருக்க நினைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பத்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சந்திரிகா குமாரதுங்க பதவி யிழந்த பின்னரான ஆண்டுகளில் அவர் அடைந்த துன்பம் ஜனாதிபதி யாக பதவி கிடைக்காமல் இருந்திருக் கலாம் என்று நினைக்கும் அளவிற்கு அவரை ஆளாக்கி விட்டது.

இது தவிர, இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வந்த காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன தனக்கான ஜனாதிபதிக்கான பதவிக்காலம் முடி புற்ற போது அந்த இடத்திற்கு பிரேம தாஸவை விருப்பத்தோடு முன்னி லைப்படுத்தவில்லை.

அதேபோல பிரேமதாஸவின் மரண த்தை அடுத்து, ஜனாதிபதியாக இரு ந்த டி.பி. விஜயதுங்கவை அந்தப் பதவியில் இருந்து வீட்டிற்கு அனுப் பிவைப்பதற்கு சந்திரிகா குமாரதுங்க பட்ட துன்பம் கொஞ்சமல்ல.இந்த மரபில் சந்திரிகா அம்மையாரும் விதி விலக்கல்ல. தனக்குப் பின் மகி ந்த ராஜபக்­வை ஜனாதிபதியாக்குவ தில் அவருக்கு இம்மியேனும் விருப் பமில்லை.

சுனாமி நிதியை தனது சொந்தக் கணக்கில் வைப்புச் செய்த எவரும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்க முடியாது என சந்திரிகாஉரக்கக் கத்தி னார்.ஆனாலும், ஜனாதிபதித் தேர்தல் மகிந்த ராஜபக்­வை சர்வ அதிகாரம் உள்ளவராக்கிவிட சந்திரிகா அம்மை யார் மோசம் போனேன்; மோசம் போனேன் என்று அழாத நாளே இல் லை எனலாம்.இந்த ஒழுங்கு மரபுகள் இந்த நாடு இன்னொரு ஜனாதிபதியை வேண்டிநிற்கும் வேளையில் விலகி நிற்குமென்று யாரும் நினை த்துவிடக் கூடாது.சிலவேளைகளில் முன்னையவர்களின் துயரத்தைவிட மிக மோசமாகவும் நிலைமை மாறலாம் என்பதை உணர்தல் அறிவின் பால்பட்டதாகும்.[/size]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=29146

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.