Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை பிற்பகல் கொழும்பு வரும் சிவ்சங்கர் மேனன் மாலையே புதுடெல்லி திரும்புவார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

shiv-shankar-menon.jpg

[size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவதற்காக, கொழும்பு வரும் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் சில மணித்தியாலங்களே சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை பிற்பகல் கொழும்பு வரும் சிவ்சங்கர் மேனன் சிறிலங்கா அதிபரையும், பாதுகாப்புச் செயலரையும் தனித்தனியாக - உதவியாளர் துணையின்றிச் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்புகள் முடித்ததும் அவர் உடனடியாகவே புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் செல்வார் என்று கூறப்படுகிறது.

இதனால், ஏனைய வேறு சந்திப்புகள் எதற்கும் வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

றியோ பிளஸ் 20 மாநாட்டில், சிறிலங்கா அதிபரை இந்தியப் பிரதமர் சந்தித்துப் பேசியதை அடுத்து, இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய், பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக சிவ்சங்கர் மேனனின் கொழும்பு பயணத்தின் போது ஆராயப்படும் என்று கூறியிருந்தார்.

சிறிலங்கா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலருடன் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து சிவ்சங்கர் மேனன் பேசுவாரா என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் வினவிய போது, மேலதிக கருத்துகள் எதையும் வெளியிட மறுத்து விட்டது.

சந்திப்புகள் முடிந்த பின்னர் நாளை மாலை அதுபற்றிய அறிக்கை வெளியிடப்படும் என்று இந்தியத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, போர் முடிவுக்கு வந்தபின்னர் சிறிலங்காப் படையினர் மீள்நிலைப்படுத்தப்பட்டுள்ளதால், வடக்கில் குறிப்பாக, யாழ்.குடாநாட்டில் படைக்குறைப்பு ஒரு சிக்கலுக்குரிய விவகாரம் அல்ல என்று சிறிலங்காவின் மூத்த அரச அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சிவ்சங்கர் மேனன் இந்த விவகாரம் குறித்து சர்ச்சை எழுப்பினாலும் சிறிலங்கா அதிபரோ, பாதுகாப்புச் செயலரோ விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை என்றே தெரியவருகிறது.[/size]

[size=4]http://www.puthinapp...?20120628106483[/size]

[size=4]கூட்டமைப்பினர் வரும் செயலாளரை சந்திப்பதை சிங்களம் தடுக்கும் போல உள்ளது. அதனால் தான் மின்னல் வேகத்தில் அனுப்பப்படுகின்றார் போலுள்ளது. [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கூட்டமைப்பினர் வரும் செயலாளரை சந்திப்பதை சிங்களம் தடுக்கும் போல உள்ளது. அதனால் தான் மின்னல் வேகத்தில் அனுப்பப்படுகின்றார் போலுள்ளது. [/size]

கூட்டமைப்புக்கு மயக்கம் தெளியவே வந்த மேனன் திரும்பி இந்தியா போய்விடுவார் . :D

[size=5]இலங்கை செல்லும் சிவ்சங்கர் மேனன், கூட்டமைப்பை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.[/size]

[size=4]இன்றிரவு இலங்கை செல்லும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் எவையும் இதுவரை செய்யப்படவில்லையென எமது கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இலங்கை செல்லும் மேனன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரைச் சந்திப்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கக்கூடுமென இந்த வாரம் செய்திகள் சில வெளியாகியிருந்தன.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் எவையும் செய்யப்படவில்லையென கொழும்பிலுள்ள எமது செய்தியாளர் அறிவிக்கிறார்.[/size]

[size=4]http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12311[/size]

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்தில் வைத்து அடித்து அனுப்பாமல் விட்டால் சிங்களவனுக்கு வரலாற்று தப்பாகிவிடும்.

நல்ல செய்தியை எதிர்பார்க்கின்றேன்.

[size=4]புதுடெல்லி உண்மையில் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண விரும்பினால் அது கூட்டமைப்பை சந்திக்கவேண்டும். அதை செய்யத்தவறும் என்றால் அது மீண்டும் பிழை விடுகின்றது எனவே எண்ணத்தோன்றுகின்றது.[/size]

[size=5]சிவ்சங்கர் மேனன் கொழும்பு வருவது ஏன்?[/size]

ஆக்கம்: கே. சஞ்சயன்

[size=4]இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இந்தவாரம் கொழும்புக்கு மேற்கொள்ளும் பயணம் முன்னெப்போதையும் விட அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. [/size][size=4]இலங்கை ஊடகங்களில் மட்டுமன்றி இந்தியாவின் பிரதான ஆங்கில ஊடகங்களிலும் பலநாட்களாக இதுவே பேச்சாக இருந்து வருகிறது. போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் இவ்வாறான செய்திகள் வருவது இயல்பு தான். [/size]

[size=4]ஆனால் போர் முடிந்த பின்னர் இந்தியத் தரப்பில் இருந்து, இவ்வாறான ஒருவரின் பயணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை உணர முடிகிறது.[/size]

[size=4]சிவ்சங்கர் மேனன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி ஏற்க முன்னர், கொழும்பில் இந்தியத் தூதுவராக பணியாற்றியிருந்தார். அந்தவகையில் இலங்கை அரசுடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தவர். [/size][size=4]அவரையே புதுடெல்லி ஒரு சிறப்புத் தூதுவராக கொழும்புக்கு அனுப்பவுள்ளது. வெள்ளிக்கிழமை அவர் கொழும்பில் நடத்தப் போகும் இரண்டு சந்திப்புகள் மிக முக்கியமானவை என்று கூறப்படுகிறது.[/size]

[size=4]முதலாவது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப் போகும் சந்திப்பு. இரண்டாவது - பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நடத்தவுள்ள சந்திப்பு. இந்த இரண்டு சந்திப்புகளுமே தனித்தனியான சந்திப்பாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.[/size]

[size=4]அதுவும் போர் முடிவுக்கு வந்த பின்னர்- கடந்த மூன்று ஆண்டுகளில் ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷவையோ, கோட்டாபய ராஜபக்ஷவையோ தனியாக சந்தித்துப் பேசுவதற்காக இந்தியா அனுப்பும் முதல் தூதுவர் இவர் தான் என்று தகவல்கள் கூறுகின்றன. [/size][size=4]இலங்கையில் அதிகாரம் மிக்கவர்களை வரிசைப்படுத்தினால், அதில் முதலாவது இடத்தில் உள்ளவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இரண்டாவது இடத்தில் இருப்பவர் கோட்டாபய ராஜபக்ஷ.[/size]

[size=4]இந்த முதலிரு இடங்களை வகிப்போருடன் சிவ்சங்கர் மேனன் தனியாகச் சந்திக்கவுள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது.[/size]

[size=4]வெளிநாட்டு உறவுகளில், தனியான சந்திப்புகள் என்பது பொதுவாக இரண்டு சந்தர்ப்பங்களில் நிகழ்வதுண்டு. ஒன்று- அதிகம் நெருக்கமான சூழலில். இரண்டு- மிகவும் சிக்கலான நேரத்தில். [/size][size=4]சிக்கலான நேரத்தில் நடக்கின்ற இத்தகைய சந்திப்புகள்- வெளிப்படையாக பேச முடியாத விடயங்களைப் பேசுவதற்கு, மறைமுகமாகவோ நேரடியாகவோ எச்சரிக்கை விடுப்பதற்கு உதவும்.[/size][size=4]அதாவது, அதிகாரிகள் மட்டத்தில் கூட விவகாரங்கள் கசிந்து போகாதபடி இருப்பதற்காக நடத்தப்படுவதுண்டு.[/size]

[size=4]இந்தியாவும் இலங்கையும் இப்போது அதிகம் நெருக்கமான சூழலில் இல்லை என்பதால், இந்தத் தனியான சந்திப்பை வேறு விதமாகவே அர்த்தப்படுத்த வேண்டியுள்ளது.[/size]

[size=4]அண்மையில் பிரேஸிலில் நடந்த றியோ+ 20 மாநாட்டுக்கு சென்றிருந்த போது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்திருந்தார்.[/size]

[size=4]இதன்போது கூட முதலில் சிறிது நேரம் இருவரும் தனியாகவே சந்தித்துப் பேசினர். அதையடுத்தே இருநாட்டுக் குழுவினரும் பங்கேற்றனர். அந்தச் சந்திப்பிலும் கூட சிவ்சங்கர் மேனன் உடனிருந்தார்.[/size]

[size=4]மன்மோகன்சிங் தனியான சந்திப்பை நடத்திய பின்னர் தான் சிவ்சங்கர் மேனன் தனியான சந்திப்புக்காக கொழும்புக்கு அனுப்பப்படுகிறார். [/size][size=4]ஆக, புதுடெல்லி ஒரு இறுக்கமான போக்கில்தான், இருக்கிறது என்பதும்இ எச்சரிக்கை செய்யும் செய்தியுடன் தான் சிவ்சங்கர் மேனனை புதுடெல்லி அனுப்புகிறது என்பதுமே ஊடகங்களின் பொதுவான எதிர்வு கூறலாக இருக்கிறது.[/size]

[size=4]இதற்குக் காரணம், ஜெனிவா தீர்மானத்தின் பின்னர், புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒருவித இடைவெளி தான். இதை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுப் பிளவு அல்லது விரிசல் என்று சொல்வது பொருந்துமா என்பது சந்தேகம் தான். ஆனால் இந்த உறவுகளில் சுமுகநிலை இல்லை என்பதும், நெருடலான ஒரு நிலையே உள்ளதும் உண்மை.[/size][size=4]இந்த நெருடல் நிலை நாளுக்கு நாள் தீவிரமடைவதையும் அவதானிக்க முடிகிறது.[/size]

[size=4]இந்தியாவின் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் போட்டு வரும் முட்டுக்கட்டைகளில் ஆகப் பிந்தியதாக, பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் இருந்து இந்தியா கழற்றி விடப்பட்டதை குறிப்பிடலாம். [/size][size=4]ஏற்கனவே, சம்பூரில் கூட்டு முயற்சியாக அனல் மின்நிலையத் திட்டத்தை அமைக்கும் பணி இன்னமும் தொடங்கப்படாமல் இழுபறியில் உள்ளது. நீண்டகாலமாக ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இந்தத் திட்டத்துக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா வரப் போகிறார் என்றதும் அவசரஅவசரமாக அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.[/size]

[size=4]திருகோணமலையில் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட எண்ணெய் குதங்களை மீளப்பெறும் முயற்சிகளிலும் அரசாங்கம் இறங்கியுள்ளது. இப்போது பலாலி விமான நிலைய விரிவாக்கத்துக்கான பணிகளையும் இந்தியாவிடம் இருந்து பிடுங்கிக் கொண்டுள்ளது அரசாங்கம். [/size][size=4]இதற்கான உடன்பாடு கையெழுத்திடப்படாது போனாலும், பலாலி விமான நிலைய விரிவாக்கத்துக்கு இந்தியா உதவும் என்று புதுடெல்லியில் மஹிந்த ராஜபக்ஷவும் மன்மோகன்சிங்கும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.[/size]

[size=4]2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது, பலாலி விமான நிலைய ஓடுபாதையைப் புனரமைக்க இந்தியா உதவியிருந்தது. [/size][size=4]ஆனால், போர் முடிந்த பின்னர் இந்தியாவை அரசாங்கம் மெல்ல மெல்ல வெட்டி விட்டு வருகிறது.[/size]

[size=4]பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டது குறித்து இந்தியத் தரப்பில் இருந்து எந்தக் கருத்தும் வெளியாகாத போதும் இந்தியாவுக்கு கடுப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.[/size]

[size=4]இதைவிட, அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் கருத்தை இலங்கை மதிக்காதது, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் உதாசீனம் செய்து வருவது போன்ற எல்லாமே இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா வெறுப்புக் கொள்வதற்கான காரணங்களாக காட்டப்படுகின்றன. [/size][size=4]இவைபற்றி கொழும்புடன் கண்டிப்பாகப் பேசுவதே, சிவ்சங்கர் மேனனின் பயண நோக்கம் என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால் சிவ்சங்கர் மேனனின் உண்மையான நிகழ்ச்சிநிரல் என்னவென்று யாருக்கும் தெரியாது.[/size]

[size=4]உண்மையில் சிவ்சங்கர் மேனனின் பயணம் குறித்து இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள ஊடகங்கள் முதலில் செய்திகளை வெளியிட்ட போது, இலங்கை வெளிவிவகார அமைச்சோ அதுபற்றித் தமக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியிருந்தது. [/size][size=4]எவ்வாறாயினும் மேனனின் கொழும்பு வருகை என்பது சுமுகமானதொரு சூழலில் இடம்பெறவில்லை. அதுபோலவே அவரது சந்திப்புகளும் சுமுகமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.[/size]

[size=4]விரைவில் இந்தியாவிலும் நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. அதற்குள் காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. [/size][size=4]தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளும் காங்கிரசுக்கு முக்கியமானவை. அவற்றை வெற்றிகொள்ள வேண்டிய தேவை காங்கிரசுக்கு உள்ளது. [/size][size=4]இந்திய அரச, போரை நிறுத்தத் தவறியதுடன், தமிழ்மக்களின் அழிவுகளை வேடிக்கை பார்த்தது என்ற கருத்து தமிழ்நாட்டில் ஆழமாக பதிக்கப்பட்டு விட்டது.[/size]

[size=4]இந்தநிலையில் தமிழ்நாட்டின் கவனத்தை மீண்டும் பெறுவதற்கு இழந்து போன செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கும் மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. இலங்கை அரசுடன் கடும் போக்கை வெளிப்படுத்தினால் தான் அதனால் காரியம் சாதிக்க முடியும். [/size][size=4]இந்தநிலையில் மேனனின் கொழும்பு வருகை இலங்கை மீதான இந்தியாவின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்கான திறவுகோலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தோன்றியிருப்பதில் ஆச்சரியமில்லை.[/size]

[size=4]மூலம்: தமிழ் மிரர் - ஆனி 28, 2012

பிரசுரித்த நாள்: Jun 28, 2012 10:10:30 GMT[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தநிலையில் மேனனின் கொழும்பு வருகை இலங்கை மீதான இந்தியாவின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்கான திறவுகோலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தோன்றியிருப்பதில் ஆச்சரியமில்லை

இப்படி எத்தனை செய்திகளை நாங்கள் வாசித்து ஏமாற்றம் அடைந்தோம் என்று அந்த ஆண்டவனுக்கும் தெரியாது.....

[size=4]இந்திய தேசம் தனது பாதுகாப்பு ஆலோசகரை இன்று அனுப்புவதில், அதிலும் இருவரை மட்டும் சந்திப்பதில் (மகிந்தர் / கோத்தா ), சில கசப்பான செய்திகளை மட்டுமே கூற உள்ளார் என [/size]நம்பலாம். சில காலம் சென்ற பின்னரே உண்மைகள் தெரியவரும், பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பாருங்கோ அடிக்கடி மேனன் சிறிலங்கா பயணம் செய்வார். ஆனால் சிங்களவன் இந்தியாவினைக் கண்டுகொள்ளமாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பாருங்கோ அடிக்கடி மேனன் சிறிலங்கா பயணம் செய்வார். ஆனால் சிங்களவன் இந்தியாவினைக் கண்டுகொள்ளமாட்டான்.

ராஜராஜ சோழன் மீண்டும் தமிழ்நாட்டில் பிறக்கும் வரை சிங்களவன் இந்தியாவினைக் கண்டுகொள்ளப்போவதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.