Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன் நிலவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]என் இனிய பொன் நிலாவே..[/size] - ஒரு இசை அலசல்

2) அதுபோன்றே மூடுபனியினின் என் இனிய பொன்னிலாப் பாடலையும் நேரம் கிடைப்பின் உங்கள் பாணியில் பிரித்து மேய்ந்தீர்கள் ஆயின் என்னைப் போன்றவர்களிற்கு மகிழ்வளிக்கும்.

சென்றமுறை இசைகுறித்த ஒரு திரியில் சக கள உறுப்பினர் இன்னுமொருவன் போகிற போக்கில் தந்துவிட்ட வேண்டுகோள் ஒன்று.. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகிவிட்டன.. :rolleyes: இசைக் கோர்வைகளை அறிந்துகொள்ள இவ்வளவு நாட்கள் மினக்கட வேண்டியதாகிவிட்டது.. :rolleyes:

இந்தப்பாடல் மிகவும் பிரபலமானது. ஆகையால் கிட்டார் பழகும் எவருக்குமே அதன் ஒலிவடிவத்தைப் பயிற்றுவிப்பார்கள்.. ஆனால் பின்னணி வாசித்தல் மிகக் கடுமையானது. :unsure:

இப்போது ஒருமுறை இப்பாடலைக் காது ஒலிப்பான் உதவியுடன் கேளுங்கள்..

(தொடரும்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலின் ராகம் ஆங்கில முறைப்படி சி மைனர் (C minor) ஆகும்.. அதன் சுரக்கோர்வை பின்வருமாறு அமையும்.

C D D# F G G# A# (ஏழு சுரங்கள்)

பாடலின் ஆரம்ப இசையை கிட்டாரைக் கொண்டு ஆரம்பிக்கிறார் இசையமைப்பாளர்..

C D D# D

C D D# D

C D# D D#

CF E F

C D# D D#

CF E F

C D# D C A# G#

எடுத்த உடனேயே இராகத்தில் இல்லாத சுரம் E இசைக்கோர்வைக்குள் வந்துவிடுகிறது.. :D திரைப்பட மெல்லிசையில் இந்த வகை உத்தி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. ரசிகர்களின் மனம் ஒரு வரைமுறைக்குள் சிந்திக்கும்போது அதைமீறி வரும் சுரங்கள் மனதில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும்.. இந்த உத்தியை கவனத்துடன் பயன்படுத்தவேண்டியது இசையமைப்பாளரின் திறமையில் உள்ளது. :unsure:

தற்கால இசையில் இந்தப் பயன்பாட்டை அதிகம் காணமுடிவதில்லை.. :blink: கணினியில் ஒரு இராகத்தைப் புகுத்தினால் அது அதற்குள்ளேயே சடைந்து தரும் மெட்டில் எப்படி உணர்வுகள் பிறக்கும்?? :D

(தொடரும்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலின் பின்னணி வாத்திய இசை (Chords) என்னவெல்லாம் என்பதை அறிவதிலேயே பல மணிநேரங்களைச் செலவிடவேண்டியதாகி விட்டது.. :unsure: பாடல் சி மைனரில் ஆரம்பிப்பது இலகுவாகத் தெரியும்.. ஆனால் அதன் பின்னர் என்ன கோர்ட்ஸ் எல்லாம் பாவித்திருக்கிறார் என்பது தலை சுற்றும் இரகம். :blink:

இணையத்தில் தேடல்கள் செய்தபோது ஆளாளுக்கு பலவிதமான அபிப்பிராயங்களை வெளியிட்டிருந்தார்கள். யூரியூபில் பலவிதமான காணொளிகள்.. யார் எதைச் சொன்னாலும் பாடலுடன் சேர்த்து வாசிக்கும்போது இணைந்து இசை வருகிறதா என்பதிலேயே சரி பிழை தங்கியுள்ளது. :rolleyes:

எனது அனுமானத்தின்படி கண்டறிந்ததை வெளியிட முதலில் எனக்கு விருப்பமில்லை. :D சரி போனால் போகுது யாழ் நண்பர்கள்தானே.. :lol:

இப்போது பாடல்.. படத்தின் காட்சிப்படி, பிரதாப் ஒரு கிறுக்குப் பேர்வழி மாதிரி.. கலங்கிய சூழல் என்று சொல்லலாம். அதாவது மேஜர், மைனர் போன்று தெளிவான மனநிலையை வெளிப்படுத்தக்கூடிய இசைக்கு இங்கே பெரும்பாலும் வேலையில்லை.. :rolleyes:

என் இனிய பொன் நிலாவே..

என பாடல் மிக மெதுவாக ஆரம்பிக்கிறது.. வேகமற்ற ஒரு நிலை காணப்படுவதை அவதானியுங்கள்.. மிகவும் மந்தமான ஒரு சூழலையும் அவதானியுங்கள்.. இதற்கென பின்னணியில் உபயோகிக்கப்படும் கோர்ட்ஸ் என்னவெல்லாம் என்பதைப் பார்ப்போம்..

என் இனிய பொன் நிலாவே..

-----Cm----- -Csus2- ---Cm-----

பொன் நினைவில் என் கனாவே..

------Cm------- -Csus2- ---Cm-----

இந்த இரு வரிகளில் "பொன்", "என்" ஆகிய இரு சொற்கள் வரும்போதும் உபயோகிக்கப்படும் கோர்ட்ஸ் சாதாரண தமிழிசைப் பாவனையில் வருவது மிகக் குறைவு. அதில் சாதாரணமாக A# மேஜர் பாவிக்கத் தோன்றும். உணர்வு சம்பந்தப்படுவதால் சிக்கலான கோர்ட் ஒன்றை உபயோகிக்கிறார் இசையமைப்பாளர். :rolleyes:

நீங்களும் முயன்றுபார்க்க, கீழுள்ள முகவரியில் சென்று Select Root என்பதில் C ஐ அழுத்துங்கள்..

http://www.chordbook.com/guitarchords.php

Select type என்பதில் m ஐ அழுத்தினால் Cm கோர்ட் வரும். :rolleyes: அதே போல sus2 என்பதை அழுத்தினால் Csus2 கிடைக்கும்.. :rolleyes:

(தொடரும்.)

  • கருத்துக்கள உறவுகள்

:wub:

பச்சை இருப்பிலில்லை

நன்றாக இருக்கிறது தொடருங்கள்.

இந்த cm இற்கும் sus2 விற்கும் என்ன வித்தியாசம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:wub:

பச்சை இருப்பிலில்லை

தங்கள் வரவுக்கு நன்றிகள் விசுகு அண்ணா.. :D

தொடருங்கள் இசை...

உங்கள் இந்தத் திரியும் யாழ் இணையத்தின் முகப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதால் இன்னும் அதிகமானவர்களைச் சென்றடையும்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி நிழலி

இந்த பச்சையில் ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்......??? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது தொடருங்கள்.

இந்த cm இற்கும் sus2 விற்கும் என்ன வித்தியாசம்?

முச்சுரங்கள் கொண்ட அமைப்பில் 1-3-5 என்கிற வரிசை மேஜர் அமைப்பாகும். உதாரணமாக C மேஜர் ராகத்தில் பின்வரும் சுரங்கள்.

C D E F G A B

C - 1 (முதலாவது சுரம்)

D - 2

E - 3 (மூன்றாவது சுரம்)

F - 4

G - 5 (ஐந்தாவது சுரம்)

A - 6

B - 7

இப்போது 1-3-5 என்கிற அமைப்பில் C-E-G ஆகிய சுரங்கள் வரும். இது சி மேஜர் கோர்ட் ஆகும். :rolleyes:

1-b3-5 என்பது மைனர் அமைப்பாகும். b3 என்று குறிப்பிட்டது மூன்றாம் சுரத்தில் அரை நோட் (சுருதி) குறைத்தல்.

C minor இன் சுரங்கள் C D# G

மூன்றாவது சுரத்தை கைவிடுதல் suspended (sus) எனப்படும். அதனுடன் இராக வரிசையில் இரண்டாவது சுரத்தை சேர்க்க sus2 கோர்ட் கிடைக்கும்.

அதாவது C D G என்கிற சுரங்களை சேர்த்து வாசிக்கும்போது Csus2 கிடைக்கும். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் இசை...

உங்கள் இந்தத் திரியும் யாழ் இணையத்தின் முகப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதால் இன்னும் அதிகமானவர்களைச் சென்றடையும்

நன்றிகள் நிழலி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரு வரிகளுக்கான இசையமைப்பைக் கண்டறிய அதிக நேரம் பிடிக்கவில்லை.. ஆனால் அடுத்த இரண்டு வரிகளும் பிராணனை வாங்கிவிட்டது. :unsure:

ஒரு ஏகாந்தம் போன்ற சூழலை ஏற்படுத்துவதற்கு, மீண்டும் பாடலின் இராகத்தில் அமையாத் B சுரத்தைப் பயன்படுத்தியிருந்ததால் குழப்பம் தீர நேரம் எடுத்தது. :rolleyes:

நினைவிலே புதுசுகம் ததததா தத.. (இசை)

-----Cm---- ----Baug--- -----Fm----... ----Cm--

தொடருதே தினம்தினம் ததததா தத.. (இசை)

-----Cm---- ----Baug--- -----Fm-------... ----Csus2--

இந்த இசையமைப்பை மேலும் அனுபவிக்க கீழுள்ள இணைப்பிற்குச் செல்லுங்கள்..

http://www.bgfl.org/...double_bass.htm

இதில் பேஸ் (Bass) பின்னணியில் வாசிக்க முடியும்..

நினைவிலே புதுசுகம் தததா த..

தொடருதே தினம்தினம் தததா த..

இப்போது பாடலை ஒலிக்கவிடுங்கள்.. இணைப்பிலுள்ள கீபோர்டில் பின்வரும் எழுத்துக்கள் வரும்போது கீழே குறிக்கப்பட்ட கட்டைகளை அந்த கீபோர்டில் அழுத்துங்கள்..

நி - C

பு - B

த - F

த - F

பாடலில் பேஸ் இசை ஏற்படுத்தும் தாக்கத்தை அவதானியுங்கள்.. :rolleyes:

(தொடரும்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலில் திடீரென்று B நோட்டை உள்நுழைக்கும்போது ஏதோ ஏகாந்தத்தில் சஞ்சரிப்பதுபோன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறான இசையமைப்பை கணினி உதவியுடன் செய்யமுடியாது. மனதில் ஒரு உணர்வின் அடிப்படையில் இசையமைக்கும்போதே இவ்வாறான தாக்கங்களை நிகழ்த்தமுடியும்.. :unsure:

பாடலின் பல்லவி முடிந்தவுடன் வரும் இசையில் Cm உம் அதைத்தொடர்ந்து Csus2 உம் கோர்ட்ஸ் ஆக வாசிக்கப்படுகிறது.

அதன்பிறகு வரும் பெண்குரல்கள் பாடலை ஒரு விரிவான தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. வயலின் இசை அவர்களுடன் பின்னிப் பிணையும்போது பாடலின் மந்தமான தன்மை முழுமையாக நீக்கப்படுகிறது. :rolleyes: சரணம் ஆரம்பிக்கும்போது ஒரு உற்சாகம் பிறக்கிறது.. :rolleyes:

பன்னீரைத் தூவும் மழை

------Cm-------- --Csus2--

சில்லென்ற காற்றின் அலை

------Cm-------- --Csus2--

சேர்ந்தாடும் இந்நேரமே.. (பெண்குரல்கள்)

---------A#----------- ----------Cm--------

என்னெஞ்சில் என்னென்ன வோ

------Cm--------------- --Csus2--

வண்ணங்களாடும் நிலை

------Cm-------- --Csus2--

என் ஆசை உன்னோரமே.. (பெண்குரல்கள்)

---------A#---------- ----------Cm--------

(தொடரும்.) :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணீல வானில்.. அதில் என்னென்ன மேகம்

-------------------D#-----------------------

ஊர்கோலம் போகும்.. அதில் உள்ளாடும் தாகம்..

-------------------D#-----------------------

இந்த இரு வரிகளிலும் ஒரு திறந்த மனப்பாங்கு, சலனமற்ற தன்மை இருப்பதை உணருங்கள்.. :rolleyes: இது மேஜர் கோர்ட் உபயோகத்தால் சாத்தியமாயிற்று.

புரியாதோ என் எண்ணமே..

---D#--- --A#-- -----Fm------

அன்பே..

B7 dim

அன்பே என்று முடிக்கும்போது மீண்டும் கலக்கமான ஒரு சூழல் உருவானதைக் கவனியுங்கள்.. இதற்கு B7 Diminished Chord உதவியிருக்கிறது..

மீண்டும் என் இனிய பொன் நிலாவே என்று ஆரம்பிக்கும்போது தாள ஒலிகள் சேர்ந்து ஒரு விறுவிறுப்பான நடைத்தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.. ஆனால் பழைய கலங்கலான தோற்றம் அப்படியே ஒட்டிக்கொண்டுள்ளது.. :rolleyes:

இந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பல்லவிகளில் கிட்டார் இசை சிறிது ஒலி அதிகமாக மீட்டப்படுவதைக் காணுங்கள்.. :rolleyes:

முடிவுரை:

இசை என்பது உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு கணிதம். எல்லா நேரக்கணக்குகளும் சரியாக அமையவேண்டும். அதே சமயத்தில் மன உணர்வுகளையும் சொல்ல வேண்டும்.. :unsure: ஏண்டா பழைய புராணத்தையே இவன் பாடுறானே என்று நீங்கள் நினைப்பீர்கள்.. :lol: இக்காலப் பாடல்களில் வெறும் கணிதத்தை மட்டுமே காண்கிறேன். முழுமையான இசையை அல்ல.. :rolleyes:

(முற்றும்.)

இசை அண்ணா, உங்களுக்கு ஏன் இசைக்கலைஞன் என்று பெயர் வைத்தீர்கள் என்று இன்று தான் அறிந்து கொண்டேன். :) தொடருங்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா, உங்களுக்கு ஏன் இசைக்கலைஞன் என்று பெயர் வைத்தீர்கள் என்று இன்று தான் அறிந்து கொண்டேன். :) தொடருங்கள். :)

நன்றிகள் உங்கள் கருத்திற்கு காதல்.. :D

பதிவு நன்றாக இருக்கிறது.

நேரம் கிடைக்கும் பொழுது, இப்படியான உணர்வு பூர்வமாக இசைகோர்க்கப்பட்ட பாடல்களின் பின்னணியை தொகுத்து வழங்குங்கள்.

இசை என்பது உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு கணிதம். எல்லா நேரக்கணக்குகளும் சரியாக அமையவேண்டும். அதே சமயத்தில் மன உணர்வுகளையும் சொல்ல வேண்டும்.. :unsure: ஏண்டா பழைய புராணத்தையே இவன் பாடுறானே என்று நீங்கள் நினைப்பீர்கள்.. :lol: இக்காலப் பாடல்களில் வெறும் கணிதத்தை மட்டுமே காண்கிறேன். முழுமையான இசையை அல்ல.. :rolleyes:

தலை வாழையிலையில் பதினெட்டுக் கறி / கூட்டுடன் இரசித்து சாப்பிட்டவர்களுக்கு, பிளாஸ்டிக் டப்பாவில் வரும் 'திடீர் உணவு' உண்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவு நன்றாக இருக்கிறது.

நேரம் கிடைக்கும் பொழுது, இப்படியான உணர்வு பூர்வமாக இசைகோர்க்கப்பட்ட பாடல்களின் பின்னணியை தொகுத்து வழங்குங்கள்.

தலை வாழையிலையில் பதினெட்டுக் கறி / கூட்டுடன் இரசித்து சாப்பிட்டவர்களுக்கு, பிளாஸ்டிக் டப்பாவில் வரும் 'திடீர் உணவு' உண்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.

நன்றிகள் உங்கள் கருத்துக்கு தப்பிலி.. :D

மக்களே..

இன்று வழக்கமான யூரியூப் தேடலில் இந்தக் காணொளி அகப்பட்டது. :rolleyes: இதைப் பார்த்து சரியாக வாசிக்கிறாரா என்று உங்கள் கருத்தைப் பகிருங்கள்..! :D

http://www.youtube.com/watch?v=QUBlCkUSoHY

தொடருங்கள் இசை அண்ணா.. :)

நன்றாக இருக்கிறது. சரி பிழை கண்டுபிடிக்குமளவுக்கு அறிவில்லை. Original இல் 0.04 விலும் இலும் 0.08 வரும் ஒலி ஆழமாக (கிட்டாரின் கட்டைக் கம்பியை பாவிக்கும் பொழுது எழும் ஒலி) இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தொடருங்கள் இசை அண்ணா.. :)

வருகைக்கு நன்றிகள் துளசி.. :D வேறு காணொளிகள் அகப்பட்டாலும் இணைக்கிறேன். :unsure:

இந்தத்திரியினை இத்தனை நாள் எவ்வாறு நான் காணாது விட்டேன் என்று நம்பமுடியவில்லை. இந்தப் பாடலை இத்தனை துல்லியமாக, நேரம் மிகச்செலவளித்து உண்மையிலேயே பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள். உங்கள் திறமையும் இரசனையும் பிரமிக்க வைக்கின்றன.
 
எனக்கு ரசிப்பதைத் தவிர இசை பற்றி எதுவே தெரியாது. ஆனால் இவ்வுலகில் தான் பேசுகின்ற விடயத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் ரசனையுடனும் பேசப்படுகின்ற எந்த விடயமும் கேட்பவரில் ஒரு அதிர்வினை உண்டாக்கியே தீரும் என்பதைப் பல முறை உணர்ந்திருக்கிறேன். உங்களின் இந்தத் திரியும் ஒரு உதாரணம்.
 
ஒரு முறை, சீனாவில் கவிதை எழுதியதற்காக ஒருவரைத் தூக்கிச் சிறையில் போட்டார்கள். சொல்லணாச் சித்திரவதைகளைச் செய்தார்கள். விரல் இடுக்குகளில் கிளித்துப் போட்டது பத்தாது என்று கைகளின் பத்து விரல்களையும் முறித்துப் போட்டார்கள். மேலும் பல கொடுமைகளின் பின்னர் கடுமையான எச்சரிப்புடன் விடுதலை செய்யப்பட்ட அந்த மனிதர் ஒரு மேற்கு நாட்டிற்கு எப்படியோ வந்து அகதித் தஞ்சம் கோரியிருந்தார். ஒரு வார்ர்த்தை தன்னும் ஆங்கிலம் தெரியாத அந்த மனிதரிற்கு தனது அகதி விண்ணப்பக் கதையினை உண்மை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அந்த நிலையில் அந்த மனிதன் தனக்குத் தெரிந்த சீன மொழியில் தான் எழுதிய கவிதையினை, அதாவது தன்னைச் சிறையில் போட்ட கவிதையினை, தான் உணர்ந்தவகை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு சொல்லுத்தன்னும் சீன மொழி தெரியாது தொலைக்காட்சியில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குள்ளும் மொழியினைத் தாண்டி அந்தக் கவிதையின் தார்ப்பரியம் அதிர்ந்ததாக உணர்ந்தேன்.
 
உங்கள் பதிவிற்கும் நேரத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் இசைக்கலைஞன். 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நன்றாக இருக்கிறது. சரி பிழை கண்டுபிடிக்குமளவுக்கு அறிவில்லை. Original இல் 0.04 விலும் இலும் 0.08 வரும் ஒலி ஆழமாக (கிட்டாரின் கட்டைக் கம்பியை பாவிக்கும் பொழுது எழும் ஒலி) இருக்கும்.

உண்மைதான். :unsure: அந்தக் கட்டை ஒலியை பேஸ் கிட்டாரின்மூலம் ஒலிக்கச் செய்ய வேண்டும்.  :huh:  இவருக்குப் பக்கத்தில் இன்னுமொரு ஆள் இருந்து Eb சுரத்தை வாசித்திருந்தார் என்றால் சரி வந்திருக்கும்.. :lol:

நன்றிகள் தப்பிலி.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்தத்திரியினை இத்தனை நாள் எவ்வாறு நான் காணாது விட்டேன் என்று நம்பமுடியவில்லை. இந்தப் பாடலை இத்தனை துல்லியமாக, நேரம் மிகச்செலவளித்து உண்மையிலேயே பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள். உங்கள் திறமையும் இரசனையும் பிரமிக்க வைக்கின்றன.
 
எனக்கு ரசிப்பதைத் தவிர இசை பற்றி எதுவே தெரியாது. ஆனால் இவ்வுலகில் தான் பேசுகின்ற விடயத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் ரசனையுடனும் பேசப்படுகின்ற எந்த விடயமும் கேட்பவரில் ஒரு அதிர்வினை உண்டாக்கியே தீரும் என்பதைப் பல முறை உணர்ந்திருக்கிறேன். உங்களின் இந்தத் திரியும் ஒரு உதாரணம்.
 
ஒரு முறை, சீனாவில் கவிதை எழுதியதற்காக ஒருவரைத் தூக்கிச் சிறையில் போட்டார்கள். சொல்லணாச் சித்திரவதைகளைச் செய்தார்கள். விரல் இடுக்குகளில் கிளித்துப் போட்டது பத்தாது என்று கைகளின் பத்து விரல்களையும் முறித்துப் போட்டார்கள். மேலும் பல கொடுமைகளின் பின்னர் கடுமையான எச்சரிப்புடன் விடுதலை செய்யப்பட்ட அந்த மனிதர் ஒரு மேற்கு நாட்டிற்கு எப்படியோ வந்து அகதித் தஞ்சம் கோரியிருந்தார். ஒரு வார்ர்த்தை தன்னும் ஆங்கிலம் தெரியாத அந்த மனிதரிற்கு தனது அகதி விண்ணப்பக் கதையினை உண்மை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அந்த நிலையில் அந்த மனிதன் தனக்குத் தெரிந்த சீன மொழியில் தான் எழுதிய கவிதையினை, அதாவது தன்னைச் சிறையில் போட்ட கவிதையினை, தான் உணர்ந்தவகை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு சொல்லுத்தன்னும் சீன மொழி தெரியாது தொலைக்காட்சியில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குள்ளும் மொழியினைத் தாண்டி அந்தக் கவிதையின் தார்ப்பரியம் அதிர்ந்ததாக உணர்ந்தேன்.
 
உங்கள் பதிவிற்கும் நேரத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் இசைக்கலைஞன். 
 
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் இன்னுமொருவன்.. இறுதியில் ஒருவழியாக உங்கள் கண்ணில் அகப்பட்டுவிட்டது..! :D

இந்தப் பாடல் பற்றியே இன்னும் பலவற்றை எழுதலாம் போல் உள்ளது.. ஒவ்வொருமுறையும் புதுவித அனுபவங்கள்.

ஆத்மார்த்தகாக செய்யப்படும் எந்தக் காரியத்தின் விளைவும் பார்ப்பவர்களைச் சென்றடையும். நீங்கள் சொன்ன சீனக்கவிஞரின் உதாரணம் அதற்கு நல்ல எடுத்துக் காட்டு.

பழைய இந்திப்பாடல்களிலும் அந்த உணர்வுகள் குரல்கள், இசை மூலம் அழகாக வெளிப்படும். ஆனால் எங்களுக்கு அந்த மொழி தெரியாமலும் இரசித்திருப்போம். இன்றைய தொழில்நுட்பம் அவ்வாறான உணர்வு வெளிப்பாட்டைத் தடுக்கிறது என நினைக்கிறேன். :unsure:

நன்றிகள் உங்கள் கருத்துக்கு தப்பிலி.. :D

மக்களே..

இன்று வழக்கமான யூரியூப் தேடலில் இந்தக் காணொளி அகப்பட்டது. :rolleyes: இதைப் பார்த்து சரியாக வாசிக்கிறாரா என்று உங்கள் கருத்தைப் பகிருங்கள்..! :D

http://www.youtube.com/watch?v=QUBlCkUSoHY

அழகான chords  changing இசை ...........உண்மையில் கிட்டாரில்  rhythim பண்ணுவது அற்புதமான ஒரு இசை அனுபவம் . ஓர் ரிதம்  guitarist ஆகவே எனது இசைப்பயணம் ஆரம்பமாகியது ............யாழ் திருமறைக்கலாமன்றத்தில்  16 வயதில் அந்த இசைக்குழுவுக்கு ரிதம் கிட்டாரிஸ்ட் ஆக உல் நுழைந்தேன் ....மதிப்புமிகு இசை அமைப்பாளர் யேசுதாசன் மாஸ்டர் அவர்கள் எனது திறைமையை கண்டு இசையில் பல நுணுக்கங்களை சொல்லித்தந்தார் ..........இன்று நான் ஒரு இசைக்கலைஞனாக உருவாகியிருப்பதற்கு காரணமான கிடாரை என் வாழ்நாளில் மறக்கமுடியாது ................ஆனால் அதை இன்று நான் மிஸ் பண்ணி விட்டதாக என் மனம் குத்திக்கொண்டே இருக்கிறது ................

 நீங்கள் குறிப்பிடுகின்ற இசை அதன் வரிகளோடும் அப்படியே ஒத்துப் போகிறது (உதாரணம்: சனலமற்ற தன்மை என்று இசையினை நீங்கள் வர்ணித்த இடத்தில் வார்த்தைகளும் அப்படியே இருக்கின்றன). நீங்கள் அறிந்தவரை இந்த இசை, பாடல் வரிகளும் எழுதப்பட்டபின்னர் இசையமைக்கப்பட்டதா? அல்லது போடப்பட்ட இசை கவிஞருக்குள் சென்று அத்தகைய வரிகளைக் கொண்டுவந்ததா?
 
எப்பிடிப் பார்த்தாலும் இனிமையாவும் வியப்பாகவுமே இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.