Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவும் இப்பிடி சொல்லிட்டு போய்ட்டு திரும்ப வரல்லியா?

ke ke ke வெக்கம் கெட்ட வைகோ..

இதிலை இலுப்பம் புூ யார்?? ஆலை யார்?? ஏனென்றால் ராஜேந்தர் வைகோ போல் அல்லாமல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர். அம்மாவிடம் மூக்குடைபட்ட பின் அவருக்கு ஐயாவின் அருமை தெரிந்து இப்போ ஐயா புராணம் பாடினார். அதனால் மீண்டும் திமுக அணைத்துக் கொள்வதில் தவறில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தடவை வைகோவைப் தேடிப் போய் பார்த்தவர் யார்??

  • கருத்துக்கள உறவுகள்

தேடிப்போய் பாத்தவர் கிட்ட ஆள் அணுப்பி கெஞ்சினது யார்...

விஜய ராஜேந்தர் தி.மு.க விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தீர்மானித்து இருக்கின்றார்.. :lol::lol:

அப்ப மயிலாப்பூர் தொகுதி.? :lol:

ஒருவர் சிறையில் அநியாயமாக அடைபட்டிருந்தபோபது பழைய நட்பின் காரணமாக கருணாநிதி சென்று பார்த்தார். தற்போது காளிமுத்து சுகையீனமுற்று அப்பலோவில் இருந்த போதும் தன்னை தரக்குறைவாக விமர்சித்தவர் என்று கூடப் பார்க்காமல் சென்று நலம் விசாரித்தார். இவை அரசியல் நாகரீகம்.

இதிலை இலுப்பம் புூ யார்?? ஆலை யார்?? ஏனென்றால் ராஜேந்தர் வைகோ போல் அல்லாமல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர். அம்மாவிடம் மூக்குடைபட்ட பின் அவருக்கு ஐயாவின் அருமை தெரிந்து இப்போ ஐயா புராணம் பாடினார். அதனால் மீண்டும் திமுக அணைத்துக் கொள்வதில் தவறில்லையே.

அது சரி வெளில போனவன் எல்லாம் கெட்டவன் திரும்பிவந்தால் நல்லவன் ஞானஸ்தான குடுக்கினம் போல கிடக்கு / பாவ மன்னிப்பு வேணும் எண்டால் கலைஞரிட்ட போக வேணும்.!

கலைஞருக்கு ஜேசு ரேஞ்சுக்கு ஒரு கட்டவுட் பிளீஸ். :lol::lol::lol:

ஒருவர் சிறையில் அநியாயமாக அடைபட்டிருந்தபோபது பழைய நட்பின் காரணமாக கருணாநிதி சென்று பார்த்தார். தற்போது காளிமுத்து சுகையீனமுற்று அப்பலோவில் இருந்த போதும் தன்னை தரக்குறைவாக விமர்சித்தவர் என்று கூடப் பார்க்காமல் சென்று நலம் விசாரித்தார். இவை அரசியல் நாகரீகம்.

அப்பிடி எண்று நீங்கள் சொல்லுவீங்கள், உது பாமரமக்களின் அறியாமை கண்ணோட்டம். :P ஆனால் திரைக்குப்பின்னால் இருக்கும் தேர்தலுக்கு முந்திய அரசியல் கூத்து அறிவாளிகளுக்குத்தான் விளங்குமாம் எண்று அறிவாளிகள் சொல்லுகினம்.

தயவு செய்து வெற்றுப் புலம்பல்கள் வேண்டாம். ராஜேந்தரைப்பற்றி கலைஞர் தரக்குறைவாகச் சொன்ன ஒரு உதாரணம் தங்களால் தர முடியுமா???

தயவு செய்து வெற்றுப் புலம்பல்கள் வேண்டாம். ராஜேந்தரைப்பற்றி கலைஞர் தரக்குறைவாகச் சொன்ன ஒரு உதாரணம் தங்களால் தர முடியுமா???

ஆனால் கலைஞரைப்பற்றி இராஜேந்தர் சொன்னவை ஞாபகத்தில் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையில்லாமல்.. எதற்கு எங்க வாக்குவாதம்.. :lol:

நெப்போலியன் என்ன மாதிரி..?? :P

அப்ப சன் ரிவி ராதிகாவின் செல்வி என்னவாம், இனி அம்மா ரிவி இல் தான். போச்சு.

அப்ப சன் ரிவி ராதிகாவின் செல்வி என்னவாம், இனி அம்மா ரிவி இல் தான். போச்சு.

செல்வி மட்டுமில்லை! ராதிகாவின் ராடன் ரிவி தயாரிக்கும் வேறு சில நாடகங்களும் சன்ரிவியில் ஒளிபரப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சன் ரிவி ராதிகாவின் செல்வி என்னவாம், இனி அம்மா ரிவி இல் தான். போச்சு.

ஏன் சூரியத்தொலைக்காட்சிக்கா அழுகிறிர்கள்?. TTN பாருங்கள்.

அடச்சா ஒழுங்கா சனத்தை "செல்வி" பார்க்க விடமாட்டாங்க போல இருக்கே !!!

  • கருத்துக்கள உறவுகள்

அடச்சா ஒழுங்கா சனத்தை "செல்வி" பார்க்க விடமாட்டாங்க போல இருக்கே !!!

நாட்டுக்கு ரொம்ப முக்கியம்?. நையாண்டி மேளம், படலைக்குப்படலை போன்றவற்றினைப் பார்ப்பதில்லையா?

நான் என்னை சொல்லவில்லையே..

இஞ்ச படலைக்கு படலை தான் என்ட விருப்பமான நாடகம்..நான் அந்த அக்கா பக்கம் தான்...நீங்களோ அந்த "அங்கிள்" ;)

கந்தபு இதை பற்றி கதைக்க வேணும்..வேற இடத்தில கதைப்பம்..ஒரு பகுதி போடலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்னை சொல்லவில்லையே..

இஞ்ச படலைக்கு படலை தான் என்ட விருப்பமான நாடகம்..நான் அந்த அக்கா பக்கம் தான்...நீங்களோ அந்த "அங்கிள்" ;)

கந்தபு இதை பற்றி கதைக்க வேணும்..வேற இடத்தில கதைப்பம்..ஒரு பகுதி போடலாம்..

நான் பிள்ளை ஒஸ்ரேலியாவிலை இருக்கிற நான் படலைக்குப்படலை, நையாண்டிமேளம் போன்ற நாடகங்கள் பிரான்ஸ் TTN எடுக்கப்பட்டு அய்ரோப்பா எல்லாம் காண்பிக்கப்படுகிறது. TTN இல்லாத நாடுகளான கனடா, ஒஸ்ரேலியா, நியூசிலாந்தில் முறையே TVI , சிகரத்தில் காண்பிக்கப்படுகிறது.

ஜெவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் சரத்: ராதிகாசரத்துக்கு கருணாநிதி 'வாழ்த்து'

ஏப்ரல் 17இ 2006

தேனி:

திமுகவிலிருந்து விலகியுள்ள நடிகர் சரத்குமார் இன்று முதல்வர் ஜெயலலிதாவை தேனியில் வைத்து சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவருடன் ராதிகாவும் அதிமுகவில் இணைந்தார்.

திமுக வழங்கிய அதிமுக எம்பி பதவியையும் சரத்குமார் ராஜினாமா செய்தார்.

திமுகவில் அடிமைகள்தான் தேவைப்படுகிறார்கள் கருணாநிதிக்கு நெருக்கமானவர்களால் தானும் தனது மனைவியும் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டோம். ஆனால் கருணாநிதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி சரத்குமார் சமீபத்தில் திமுகவிலிருந்து விலகினார்.

இதையடுத்து அவரது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன என்பது தெரியாமல் இருந்து வருகிறது.

குமாருக்கு ரூ. 20 கோடி வரை கடன் இருப்பதாகவும் அதை சமாளிக்க உதவினால் அதிமுக பக்கம் அவர் போகக் கூடும் என்றும் கூறப்பட்டது. சரத்குமாரை அதிமுவில் இணைய வைக்க தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கையின் அதிபர் தீவிரமாக முயன்று வந்தார்.

இந் நிலையில் ராதிகாவுடன் சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் சென்ற சரத்குமார் அங்கு ராடன் டிவி அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

அதே நேரத்தில் நடராஜனும் சிங்கப்பூர் சென்றதாகத் தெரிகிறது. சிங்கப்பூரில் வைத்து சரத் ராதிகாவுடன் பேசிய நடராஜன் சரத்குமார் தரப்பின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுவதாக வந்த கருத்துக் கணிப்பைத் தொடர்ந்தே சரத்தின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்கவும் அவரை அதிமுகவுக்கு இழுக்கவும் கடந்த இரு நாட்களாக தீவிர முயற்சிகள் நடந்துள்ளன.

இந் நிலையில் இன்று காலை சென்னை திரும்பிய ராதிகாவும் சரத்குமாரும் விமானம் மூலம் மதுரை வந்தனர்.

சங்கம் ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் இன்று காலை சுமார் 100 கார்களில் தனது ரசிகர் மன்றத்தினருடன் தேனி சென்றார் சரத்குமார். ராதிகாவுடன் ஒரு காரை சரத்குமாரே ஓட்டிச் சென்றார்.

தேனி என்டிஆர் நகரில் பங்களாவில் தங்கியுள்ள ஜெயலலிதாவை சரத்தும் ராதிகாவும் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.

திமுக வழங்கிய ராஜ்யசபா எம்பி பதவியையும் குமார் ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் அனுப்பி வைத்தார்.

ஜெயலலிதாவை சந்திக்க மதுரை ஹோட்டலில் இருந்து புறப்பட்ட சரத்குமார் லைட் கிரீன் ஷேட் கொண்ட சட்டையை அணிந்திருந்தார். ராதிகாவும் பச்சை கலந்த சேலை அணிந்து கிளம்பினார். ஆனால் தேனிக்கு வந்தபோது வெள்ளை சட்டைக்கு மாறியிருந்தார்.

ஜெயலலிதாவுக்கு பச்சை சால்வையை அணிவித்து அதிமுகவில் இணைந்தார் குமார்.

நல்ல காலம் பிறக்க இணைந்தேன்:

அதிமுகவில் இணைந்த பின்னர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும். அப்போதுதான் தமிழகம் சிறந்து விளங்கும். தமிழகத்திற்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்பதால்தான் அதிமுகவில் இணைந்தேன். நன்கு சிந்தித்து ஆலோசனை செய்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன்.

சமீபத்தில் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் நான் பேசும்போது கடைசி வரை திமுகவில்தான் இருப்பேன் எனது இறுதிச் சடங்கின்போது எனது உடலில் திமுக கொடிதான் போர்த்தப்பட வேண்டும் என்று பேசினேன். அதை மறுக்கவில்லை. அது உண்மைதான்.

ஆனால் அதன் பிறகு எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் வந்தன. ஆனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன். திமுகவில் எத்தனையோ முன்னோடிகள் இருந்தாலும் அவர்களது பேச்சுக்கு மதிப்பு இல்லை எடுபடுவதில்லை.

இப்போது வந்து சேர்ந்தவர்களுக்குத்தான் அங்கு மதிப்பு உள்ளது. இந் நிலையில்தான் நான் அதிமுகவில் இணைந்தேன். எனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்து விட்டேன். தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். இதற்காக நான் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன். பிரசாரத்தில் ராதிகா கலந்து கொள்ள மாட்டார்.

எனது பிரசாரத்தின்போது திமுகவின் குடும்ப அரசியல் குறித்து விரிவாகப் பேசுவேன்.

நான் அதிமுகவில் இணைந்து விட்டதால் ராதிகாவின் டிவி தொடர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என நினைக்கவில்லை. சன் டிவி ஒரு தனி நிறுவனம் அதேபோல ராடான் டிவி நிறுவனமும் ஒரு தனி நிறுவனம். எனவே இப்போதைக்குப் பிரச்சினை வராது என்று நம்புகிறோம் என்றார் சரத்குமார்.

வாழ்த்துக்கள்:

கருணாநிதி

அதிமுகவில் சேர்ந்துள்ள சரத்குமாருக்கு அவருடன் சென்றுள்ள ராதிகாவுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி.

அப்போது சரத்குமார் விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது சரத்குமார் தனது கடந்த காலத்தை அசைபோட்டு நிகழ்காலத்தை நிழல் படமாக்கி வருங்காலத்தில் வளமோடு வாழட்டும் என்று வாழ்த்துகிறேன்.

ராதிகாவும் சரத்குமாரோடு சென்றிருப்பதாக கூறப்படுவது உண்மையாக இருந்தால் (கருணாநதி பேட்டி கொடுத்தபோது சரத்குமார் தேனிக்குச் சென்று கொண்டிருந்தார்) அவருக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

சரத்குமார் தனது எம்.பி பதவியையும் கட்சி உறுப்பினர் பதவியையும் ஏற்கனவே ராஜினாமா செய்து விட்டார் என்றார்.

எதற்காக குமார் விலகியிருக்கிறார் என்று நிருபர்கள் கேட்டதற்கு எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் சொல்கிறேன் அது கடவுளுக்கே வெளிச்சம் என்றார்.

தொடர்ந்து கருணாநிதி பேசுகையில் தரிசு நிலம் கொடுக்க அரசிடம் நிலம் இல்லை என்று வைகோ கூறியுள்ளார். ஆனால் மதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 86 லட்சம் ஏழை விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இது குறித்து வைகோ விளக்கமளிக்க வேண்டும்.

தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு சோனியா காந்தி வருகிறார். காங்கிரஸுடன் கலந்து பேசி அவரசு பிரசார சுற்றுப் பயணத்தை முடிவு செய்வோம். ராகுல்காந்திஇ பிரியங்கா வருகிறார்களா என்பது தெரியவில்லை என்றார் கருணாநிதி.

இதற்கிடையே அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகளை கார்த்திக் பிரிப்பதைத் தவிர்க்க சரத்குமார் மூலமாக அவரை வளைக்கும் வேலைகளிலும் அதிமுக தீவிரமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நன்றி தற்ஸ்தமிழ்

http://thatstamil.oneindia.in/news/2006/04.../17/sarath.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓண்றும் தெரியாதமாதிரி வந்து ஆதாரம் கேட்ப்பார் பாருங்கோ....!

சரத் 20 கோடி கடன் வாங்கினார் ஆனால் நான் அங்கு இருந்தனான்... ஆனால் நான் கையெழுத்து போட இல்லை.. உங்களால் நிறுபிக்க முடியுமா... எண்டு கேக்கப்போறார் சொல்லீட்டன்.... :P :P :P

எல்லோரும் சரியாத்தான் இவரைப்பற்றி கணக்குவைத்திருக்கிறீயள். வசம்பு எங்கப்பா உங்கட ஆதாரம். :roll: :roll: :roll: :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை இலுப்பம் புூ யார்?? ஆலை யார்?? ஏனென்றால் ராஜேந்தர் வைகோ போல் அல்லாமல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர். அம்மாவிடம் மூக்குடைபட்ட பின் அவருக்கு ஐயாவின் அருமை தெரிந்து இப்போ ஐயா புராணம் பாடினார். அதனால் மீண்டும் திமுக அணைத்துக் கொள்வதில் தவறில்லையே.

ராஜேந்திரர் ஒன்று கருணா நிதி புராணம் பாடவில்லை. தனித்து 13 தொகுதிகளில் போட்டி இட நின்றார். ஆனால் கருணா நிதியின் கபடத்தை கண்டு கூட இருந்தவர்கள் விலத்தி போனாதால் தான் கடைசியில் இவர்களைப் போய் பிடித்து வந்து அரசியல் நடத்துகின்றார். பாவம்!!!!

இப்ப சிம்ரனையையும் வைத்து பிரச்சாரம் செய்கின்றாராமே?? கலைஞருக்கு கலை உணர்வு அதிகம் போலும்!! :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

தேடிப்போய் பாத்தவர் கிட்ட ஆள் அணுப்பி கெஞ்சினது யார்...

தேடிப்பார்த்தது ஏன் கண்ணா?? தேடித் பார்ப்வருக்கே ஆள் அனுப்பினது என்றால் கேலியாக இல்லை?? :wink:

  • கருத்துக்கள உறவுகள்

அடச்சா ஒழுங்கா சனத்தை "செல்வி" பார்க்க விடமாட்டாங்க போல இருக்கே !!!

"செல்வி"யை எனி செல்வி(?)யுடையதில் பார்க்க வேண்டியது தானே!!

கடவுளே வந்து சொன்னாலும் நான் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட மாட்டேன். ஏனென்றால் அவர் தான் என் அரசியல் குரு. உபயம் : ராஜேந்தர் இதன் அர்த்தம் புரிகின்றதா??

சிம்ரன், விந்தியா, கோவை சரளா போன்றவர்கள் அதிமுக விற்காகத்தான் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

சிலருக்கு நான் இணைத்த தற்ஸ்தமிழ் இணைப்பு தெரியவில்லையா?? அல்லது படிக்கத் தெரியவில்லயா?? :P :lol:

கருணாநிதி அரிசி கிலோ 2 ரூபாவிற்கு தருவதாக அறிவித்த போது அவர் பொய் சொல்கின்றார் அதற்கு வழியே இல்லை என்று புலம்பியவர்கள் நேற்று ஆண்டிப்பட்டியில் கிழமைக்கு 40 கிலோ அரசியில் பாதி இலவசமாக தருவதாக அறிவித்துள்ளனர். தற்போது ஒரு கிலோ அரிசியின் விலை 3 ரூபா 50 காசு. அதன்படி பார்த்தால் கிலோ 1 ரூபா 75 காசிற்கு வழங்குகின்றார்கள். இது எப்படிச் சாத்தியமாகும். யார் யார் காதில் புூ சுற்றுகின்றார்கள்

தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள்

கார்த்திக்.

எனக்கு தினமும் போனில் கொலை மிரட்டல் வருகிறது. எலெக்ஷனிலிருந்து ஒதுங்கிக்கொள் என்று மிரட்டுகிறார்கள். நான் இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவனல்ல. எனக்கு என் மக்களின் ஆதரவு இருக்கும்வரை எதையும் தைரியமாகச் சந்திப்பேன். தில்லாக விரல் சொடுக்குகிறார் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் கார்த்திக்.

என் இயக்கத் தொண்டர்கள் இரண்டு பேரை சில நாட்கள் முன்பு, வேண்டுமென்றே வண்டியால் இடித்து விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருவர், ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். இன்னொருவர், காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும், எலெக்ஷன் மூலம் தண்டனை கொடுப்பார்கள். இதற்கெல்லாம் மேலாக கடவுளும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என்று கூறி விட்டு மேலே கைகாட்டியவரிடம், ஏன் இப்படி? என்று கேட்டோம்.

கார்த்திக்குக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் கொடுத்தால், எரிச்சலை ஏற்படுத்திவிடலாம். இந்தப் பதவியை சுமையாக நினைக்கச் செய்யலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். அதெல்லாம் பலிக்கப் போவதில்லை. மக்கள் கொடுத்த பதவி இது. அதைத் தக்க வைத்துக் கொள்வேன். அதற்கான பொறுமை, நிதானம் எல்லாம் எனக்கு நிறைய இருக்கிறது.

அ.தி.மு.க.வில் உங்கள் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படாதது ஏன்?

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ§டன் முதல்வர் இல்லத்திற்குக் கூட்டணி விஷயமாகப் பேசப் போனபோது, எங்களுக்கு பயங்கர ஷாக், காரணம் எங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்தானம், அங்குள்ள ஒரு அறையிலிருந்து வந்தார்.

உடனே, பிஸ்வாஸ் முதல்வரிடம், நாங்கள் பக்கத்து அறையிலிருக்கிறோம், நீங்கள் சந்தானத்திடம் பேசி, அவரை அனுப்பிய பிறகு நாம் கூட்டணி பற்றிப் பேசுவோம் என்றார்.

அதற்கு முதல்வர், சந்தானத்தை கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர் என் விருந்தாளி, இங்குதான் இருப்பார் என்றார். உடனே பிஸ்வாஸ், அவர் எங்கள் கட்சியில் இல்லை. அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதோடு அல்லாமல் என்னை ரொம்பவும் இழிவாகப் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவரை வைத்துக்கொண்டு எப்படிக் கூட்டணி பேசமுடியும். இது எங்கள் கட்சியின் உள்விவகாரம். இதற்கும், கூட்டணி பேசுவதற்கும் என்ன சம்பந்தம். இது, வேறு அது வேறு என்றார்.

ஆனால், முதல்வர் இவை எதையுமே ஏற்றுக்கொள்ளவில்லை.

முதல்வரை சந்திப்பதற்கு முன் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்தித்தீர்களே...

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஃபார்வர்டு பிளாக் அங்கம் வகிப்பதால், மரியாதை நிமித்தமாக பிஸ்வாஸ், கலைஞரைச் சந்திக்க வேண்டுமென்றார். நானும் அவரும் போயிருந்தோம். போனோமே தவிர, கூட்டணி பற்றியெல்லாம் எதுவுமே பேசவில்லை. இதுதான் உண்மை.

ஆனால், யாரோ முதல்வரிடம் நாங்க தி.மு.க.வுடன் கூட்டணி பற்றிப் பேசி முடித்துவிட்டோம் என்று தவறான தகவல் சொல்லி பாலிடிக்ஸ் செய்ய அவரும் அதை நம்பி விட்டார்.

எனக்குள்ள வருத்தம் முதல்வர் என்னை அழைத்து உண்மையில் என்ன நடந்தது என்று கேட்டிருந்தால், எல்லாவற்றையும் சொல்லியிருப்பேன். கூட்டணியும் ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தைக்கூட எனக்கு அவர் கொடுக்கவில்லை. அதனால்தான் தனித்துப் போட்டியிடுவதென்று நாங்கள் முடிவு செய்தோம்.

உங்களிடம் பேரம் பேச முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறதே...

ஆம்... எங்கள் கட்சியின் நேர்காணல் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு பெரிய கட்சியைச் சேர்ந்த சிலர் என்னைச் சந்தித்தார்கள். கூட்டணி பற்றிப் பேசினார்கள். நான் அவர்களிடம் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதென்று முடிவு செய்துவிட்டோம் என்று சொன்னதற்கு அவர்கள் ஐந்து தொகுதிகள் தருகிறோம் என்றார்கள். நான் உடனே, அப்படியென்றால் ஒரு நிபந்தனை. நாங்கள் எந்தத் தொகுதியைக் கேட்கிறோமோ அந்தத் தொகுதியைக் கொடுக்க வேண்டும் என்றேன். உடனே ஒருவர், ஃபார்வர்டு பிளாக் எங்களுக்கு வேண்டாம், தனிப்பட்ட கார்த்திக் போதும் என்றார். அப்புறம் ராஜ்யசபா சீட் தருகிறோம். இந்தத் தேர்தலில் நீங்களோ அல்லது உங்கள் இயக்கமோ போட்டி போடக்கூடாது என்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது என்ன நியாயம்? என்றேன். நீங்கள் ஒதுங்கிக்கொள்ள எத்தனைக் கோடி பணம் வேண்டும்? என்றார் ஒருவர். இன்னொருத்தர் வந்து என் கண் முன்னே பணத்தை அடுக்கி வைத்தார். மூன்றரைக் கோடி பணம் வாங்கித் தருகிறேன். உங்களுக்கு ஏதோ கடன் பிரச்னை இருக்கிறதாமே! என்றார். எனக்கு இன்னும் ஷாக். எனக்கு இருக்கும் பிரச்னையை எப்போதோ முடித்துவிட்டேன் என்பது அவருக்குத் தெரியாது பாவம். அப்படியே என்னுடைய பிரச்னை முடியாவிட்டாலும் நான் பணம் வாங்க மாட்டேன் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன்.

ஆண்டிப்பட்டியில் முதல்வரை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா?

அப்படி என் கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்ல, அவர்களும் நீங்கள் ஏன் நிற்கக் கூடாது? தொண்டர்கள் விருப்பத்தைப் பரிசீலனை செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் கட்சிக்காரர்களின் வெற்றிக்காகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடப் போகிறேன்... என்றார் கார்த்திக்.

நன்றி குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.