Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவரையும் ஒரு சந்தோசமான செய்தி அல்லது சோகமான செய்தியுடன் அடுத்த கிழமை சந்திக்கிறேன்.

Featured Replies

வாழ்த்துக்கள் துளசி!!!

  • Replies 112
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யாழில் ஊர்ப்புதினம் திரியைத் தவிர மிகுதித் திரிகள் வாசிப்பதற்கு நேரம் இப்போது இல்லாததால் வாசித்து பதில் எழுதுவதைல்லை.சில திரிகளில் நீங்கள் எழுதியவை வாசித்திருக்கிறேன்.உங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து இருப்பது திண்ணையில் தெரிந்து ஏன் என்று தேடி இந்தத் திரியை இப்போது வாசித்தேன்.

பலரும் சொல்லி விட்டார்கள் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை. நம்பிக்கையும் மன உறுதியும் தான் வாழ்க்கை அதனை எப்போதும் இழக்காதீர்கள். எங்கேயும் வெற்றி பெறுவீர்கள். பிரார்த்தனை ,கடவுள் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.

சிந்தனை ,செயல், மன உறுதி இவை தான் முக்கியம்.இவை அனைத்தும் உடையவர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

தேடி வந்து வாழ்த்து சொன்னமைக்கும் உங்கள் ஆலோசனைக்கும் நன்றி. :) :) :)

வாழ்த்துக்கள்.

நன்றி அண்ணா :)

வாழ்த்துக்கள் துளசி முடியும் என்டால் எதாவது படிக்க முயற்சி செய்யுங்கோ

நன்றி அக்கா,

வந்ததிலிருந்து address மாறிக்கொண்டிருந்ததில் மொழி படிக்க ஒழுங்காக செல்ல முடியவில்லை. இப்பொழுது மொழி படிக்க சேர்வதுடன் பகுதிநேர வேலையும் தேட முயற்சி செய்ய போகிறேன். சிறிது காலத்தின் பின் ஏதும் படிக்க முடிந்தால் படிக்கிறேன். :)

வாழ்த்துக்கள் துளசி. சுண்டல் கேட்டதைப் போல நானும் முன்பே யோசித்தேன், ஆனால் பிரச்சனையில் இருக்கும் போது என் கேட்பான் எண்டு விட்டு விட்டேன்.

நன்றி அண்ணா. சந்தேகம் இருந்தால் கேட்க வேணும். என்னிடம் தாராளமா கேட்கலாம். அதற்காக கவலைப்பட மாட்டன். சண்டை பிடிக்கவும் மாட்டன். :)

உங்களுக்கு விசா கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி. சிரமங்களைப் பாராது உங்கள் படிப்பைத் தொடர முயற்சியுங்கள். அதோடு, முடிந்தவரையிலும், உங்களை அடையாளப்படுத்தாமல் இருப்பது சிறந்தது. இப்போது சிக்கல்களைத் தராவிட்டாலும் பிற்காலங்களில் சிரமங்களைச் சந்திக்கக்கூடும். இது நான் எனது அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட பாடம். விசா கைக்குக் கிடைத்ததும் ஒரு சின்ன பார்ட்டியாவது வையுங்கள்.

நன்றி அக்கா. ஆம் முடிந்தவரை தவிர்க்கிறேன். அதே நேரம் யாழில் உறுப்பினராக உள்ள எவரையும் சந்திக்கும் நோக்கமும் இல்லை.

பார்ட்டி வைக்கும் எண்ணம் இல்லை. வேணுமெண்டால் பாட்டி யாரையும் உங்களுடன் உரையாட அனுப்பி வைக்கிறேன். :lol:

மகிழ்ச்சியான செய்தி, வாழ்த்துக்கள். துளசி.

ஒரு பெரிய தலையிடி குறைந்தது என்று நினைத்துவிட்டு, அடுத்த படியை... நோக்கி முன்னேறுங்கள்.

நன்றி தமிழ்சிறி அண்ணா. :)

ஆம். ஒரு தலையிடி குறைந்து விட்டது. அடுத்த படியை நோக்கி செல்ல வேண்டும். நன்றி.

Edited by துளசி

  • தொடங்கியவர்

துளசி, உங்களுக்கு வயதிருக்கின்றது!

இப்படியான சந்தர்ப்பங்கள் கிடைப்பது, மிகவும் அரிது!

பயன்படுத்தி மேலே செல்ல வாழ்த்துக்கள்!

வானமே உங்கள் எல்லையாகட்டும்! :D

நன்றி அண்ணா. :)

எம் வரலாறே ஒழுங்காக தெரியாத நான் வானம் வரை செல்வது என்பது கொஞ்சம் இல்லை கூட ஓவராக இருக்கு. :lol::icon_idea:

பாராட்டுக்கள். :D

நன்றி அண்ணா. :)

வாழ்த்துக்கள் துளசி

நன்றி அண்ணா. :)

வாழ்த்துக்கள் துளசி!!!

நன்றி அண்ணா. :)

  • தொடங்கியவர்

இன்றைய நாளில் இன்னுமொரு விடயத்தை சொல்ல விரும்புகிறேன். இது யாருக்கும் பயன்பட்டால் பிரயோசனம்.

நாம் அகதியாக கோரும்போது விமான நிலையத்தில் வைத்தே எம் பிரச்சனைகளை சொன்னால் பரவாயில்லை. அதிக நேரம் தந்து சிலவேளை பதிலளிக்க விடுவார்கள். :unsure:

ஆனால் கேஸ் எழுதி அனுப்பிய பின்னர் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் கேள்விக்கு பதில் கூறினால் உரிய நேரத்திற்குள் பதில் கூற வேண்டும். எனவே,

  • பந்தி பந்தியாக பதிலளிக்காமல் ஓரளவு short ஆக பதிலளிக்க வேண்டும்.
  • இங்கு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். மேலதிகமாக பதிலளிக்க வெளிக்கிட்டால் அதற்குள் ஒரு point ஐ கண்டுபிடித்து அதை பற்றி கேள்வி கேட்க வெளிக்கிட்டிடுவார்கள்.

முதல்முறை எனக்கும் இது நடந்தது. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் கேள்வி கேட்டார்கள். அவர்கள் கேள்வி கேட்கும் போது நான் விளக்கமாக பதில் கூற வெளிக்கிட்டு :D இடையில் நிறுத்தி அதற்குள்ளிருந்து வேறு வேறு கேள்விகளுக்கு தாவி விட்டார்கள். :D அதனை கருத்தில் கொண்டு இம்முறை கேட்டதற்கு மட்டும் பதிலளித்தேன். (இம்முறையும் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் கேள்வி கேட்டார்கள்.)

அடுத்தது நான் லண்டன் போன நாள், இந்த நாடு வந்த நாள், நாட்டில் சண்டை முடிந்த நாள் ஆகியவற்றுக்கு மட்டும் தான் திகதியை கூறினேன். வேறு எந்த சம்பவமும் திகதியாக நினைவில்லை. மாதம் நினைவிருந்தால் மாதத்தை மட்டும் குறிப்பிட்டேன். (குடும்பத்தினரின் பிறந்த திகதி கேட்டால் கூற தான் வேண்டும்.)

ஆனால் இங்கு பொய் கேஸ் எழுதி கொடுப்பவர்கள் ஆயிரத்தெட்டு திகதி போட்டு பாடமாக்கி கொண்டு போவார்கள். இவர்களுக்கு எப்படி எல்லா திகதியும் நினைவிருக்கு என்று கேள்வி கேட்பவர்களும் யோசிப்பதில்லை. இவர்கள் இப்படி சொல்லி சொல்லி உண்மை சம்பவங்களை சொல்பவர்களையும் இது என்ன திகதி நடந்தது? இது என்ன திகதி நடந்தது? என்று கேட்க தொடங்கிவிட்டார்கள்.

இப்படியான பல கேள்விகளுக்கு எனக்கு திகதி நினைவில்லை என்றே சொல்லிக்கொண்டு வந்தேன். உண்மையிலேயே நினைவில்லை. (கிட்டத்தட்ட என்ன மாதம் என்றே சொன்னேன்.)

  • கருத்துக்கள உறவுகள்

துளசி, உங்களுக்கு வயதிருக்கின்றது!

இப்படியான சந்தர்ப்பங்கள் கிடைப்பது, மிகவும் அரிது!

பயன்படுத்தி மேலே செல்ல வாழ்த்துக்கள்!

வானமே உங்கள் எல்லையாகட்டும்! :D

http://m.youtube.com/watch?v=F6nboGWqwPw

  • தொடங்கியவர்

வாழ்த்து தெரிவித்த, இனி வாழ்த்து தெரிவிக்க போகும் அனைவருக்கும் நன்றி.....

இன்று நான் யாழை விட்டு நீங்குகிறேன். என்னை யாரும் இனி தேட வேண்டாம். அனைவருக்கும் அறிவித்து விடுங்கள். நான் யாழில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.

நாற்சந்தியில் திரி ஆரம்பித்து முறையிடும்படி நிழலி அண்ணா கூறினார். பின் "நிழலி அண்ணாவை திரிக்கு அழைக்கிறேன்" என்று நான் ஆரம்பித்த திரியை அவர் அகற்றி விட்டார். அதில் அவரை பற்றி பல காரணங்கள் முறையிட்டதால் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலிருக்கிறது.

மீண்டும் நாட்சந்தியில் ஆரம்பிக்க விரும்பவில்லை. எவரும் எனக்கு பதில் கருத்திட வேண்டாம். நான் மீண்டும் வந்து வாசிக்க மாட்டேன். வேண்டுமென்றால் நீக்கப்பட்ட திரியை மீண்டும் இணைக்கும்படி கூறி நான் கூறிய முறைப்பாட்டை பாருங்கள்.

எனக்கும் யாழுக்குமான உறவு இன்றுடன் முடிந்து விட்டது.

[size=5]இதனை நீக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்,[/size]

இனிய பொழுது பகுதியில் நான் ஆரம்பித்த திரிகளையும் தென்னங்கீற்று பகுதியில் நான் ஆரம்பித்த திரியையும் இன்றுடன் நிறுத்தி விடுமாறு நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க்கையில் நான் எவ்வளவோ துயரங்களை சந்தித்த போதும் அழவில்லை. ஆனால் இன்று நான் அழுதழுது type பண்ணுகிறேன்.

என்னுடன் அன்புடன் பழகிய அனைத்து கள உறவுகளுக்கும் நன்றி.

[size=5]எவரும் பதில் கருத்திட வேண்டாம். உங்களுக்கு பதில் கருத்திட நான் யாழில் இருக்க மாட்டேன். அனைவருக்கும் நன்றி.....[/size]

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மிகுந்த மனத்தைரியம் உள்ளவராக நினைத்திருந்தேன் .இதுக்குப்போய் விலகுவது மிகுந்த கோழைத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]ஏன் இவ்வளவு அவசரம் . நின்று நியாயம் கேட்கவும்.அவசரபட்டு முடிவு எடுக்க வேண்டாம்............[/size][size=1]

[size=3] துணிச்சலான பெண் என எண்ணி இருந்தேன் ... [/size][/size]

பதிற்கருத்து இடத்தேவையில்லை, ஆனால் நேரம் கிடைக்கும்போது இதையொரு தடவை வாசித்துப்பாருங்கள் துளசி.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76768

  • கருத்துக்கள உறவுகள்

துளசி,

கருத்துக் களத்தில் முரண்பட்ட கருத்துக்களுக்கு பதிலளிப்பதே... உண்மையான கருத்தாளருக்கு அழகு.

இங்கிருக்கும் எல்லோரும்... ஒத்த கருத்துடையவர்கள் அல்ல.

அதற்காக... களத்தை விட்டு ஒருவரும் வெளியே செல்லவில்லையே.

குறுகிய காலத்தில் பலரை கவர்ந்த உங்களில், மிகுந்த அனுமானம் வைத்திருந்தேன்.

அதுகும்... நீங்கள், சனல் - 4 ற்காக நடந்த வாக்களிப்பில் உங்கள் பங்களிப்பும், பிரச்சாரமும் மிகவும் பயன் தரத்தக்கதாக அமைந்தது. யாழிற்கு கிடைத்த... மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் என்று மிக மனம் மகிழ்ந்தேன்.

இந் நிலையில்... உங்கல் அறிவிப்பு, எங்களை மனம் நோக வைக்கின்றது.

தயவு செய்து முடிவை மாற்றி, மீண்டும் யாழில் வலம்வருவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...தொடர்ந்து யாழில் இருந்தால் நல்லம் ...

  • கருத்துக்கள உறவுகள்

டோன்ட் வொர்ரி புத்தன் அண்ணா நேற்று காலையில் இருந்து துளசியோட மிக தீவீரமான கலந்துரையாடலில் ஈடுபட்டு இருக்கன்....மீண்டும் யாழ்கு கொண்டுவர பாப்பம்

  • தொடங்கியவர்

வணக்கம்,

அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். நான் நிர்வாகத்துடனோ யாழுடனோ கோவித்துக்கொண்டு யாழை விட்டு போகவில்லை. நிழலி அண்ணாவுடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டு தான் போனேன். (அது கூட என் பக்கம் தவறுள்ளது.) அது என்ன பிரச்சினை என்று உங்களில் பலருக்கு தெரியாது. அது தெரியாமல் பலர் நான் நிர்வாகத்தை குற்றம் சாட்டியதாக கருத்து எழுதியிருந்ததை வாசித்தேன்.

எனக்கு பலரும் தனிமடல், முகநூல், மின்னஞ்சல் மூலம் என்னை மீண்டும் யாழுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்கள். அதில் ஒருவர் நிழலி அண்ணாவுக்கும் தனிமடல் அனுப்பி எனக்கும் அனுப்பினார். அவருக்கு என் நன்றி. :) ஏனையவர்களுக்கும் நன்றி. :)

நிழலி அண்ணாவிடம் தனிமடல் மூலம் என் கேள்விகளை கேட்டிருந்தேன். தனிமடலில் அவர் பதிலளித்தால் எமக்குள் மீண்டும் சமரசம் ஏற்பட்டு நான் மீண்டும் வருகிறேன். நானும் நிழலி அண்ணாவும் இப்பொழுது ஒற்றுமையாகி விட்டோம். :lol:

ஆனால் இந்த திரி மூலம் எனக்கு சில நன்மைகள் கிடைத்தது.

***

நான் என் கதையை எழுதுவேன், விடுவேன். அதை எழுத வேண்டாம் என்று நீங்கள் சொல்லுமளவுக்கு கள விதி இல்லை. எம்மை அடையாளப்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்கும்படி கள விதியில் கூறப்பட்டுள்ளதே தவிர எழுதவே கூடாது என்று சொல்லப்படவில்லை.

3. கருத்தாடல்
  • கருத்தாளர் ஒருவர் தனது அடையாளங்களை பகிரங்கமாக குறிப்பிடுவதை கூடியவரைக்கும் தவிர்க்கவும். இணையத்தில் இடம்பெறும் தகவல் / தனிநபர் தகவல் திருட்டுக்களைத் தடுக்கும் நோக்கில் உறுப்பனர்கள் தங்கள் சுயவிபரங்களை பகிரங்கப்படுத்தாது இருப்பது விரும்பப்படுகின்றது. தனிப்பட்ட விபரங்களை உறுப்பினர்கள் பகிர்ந்தால் அவர்களே அதற்கான விளைவுகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.

இங்கு நான் பகிர்ந்த விபரங்களால் எனக்கு ஆபத்து வந்தால் அதற்கு நான் தான் பொறுப்பு. மற்றபடி யாழ் இணையம் தான் பொறுப்பு என்று குற்றம் சாட்ட மாட்டன்.

குமாரசாமி அண்ணாவுக்கு,

உங்களுடன் எனக்கு கோபமில்லை. ஏனெறால் நான் ஏன் யாழை விட்டு நீங்குகிறேன் என்று தெரியாமல் நீங்கள் கருத்து கூறியிருந்தீர்கள். நான் யாழில் எழுத பிடிக்காமலோ அல்லது நேரமில்லாமலோ யாழை விட்டு போகவில்லை. இப்பொழுது summer holiday. இப்ப class க்கு சேர முடியாது. எனவே வீட்டில் தான் இருக்கிறேன். எனவே நேரம் இருக்கிறது.

சுண்டல் அண்ணாவுக்கு,

நீங்கள் பகிடியாக என்னுடன் சண்டை பிடிப்பது எனக்கு தெரியும். ஆனால் மற்றவர்களுக்கு அது உள்குத்தல் போலவே தெரியும். (ஆனாலும் என்னை கிளி என்று வேறு சொல்லி விட்டீர்கள். இன்றிரவு நான் நித்திரை கொண்ட மாதிரி தான் :lol:)

விசா கிடைத்தவுடன் கிளி பறந்து போய் விடாது. விசா கிடைத்தவுடன் தான் கிளிக்கு சிறகு முளைக்கிறதோ? பறக்க வேண்டுமென்று நினைத்தால் முதலே பறந்திருக்கும். நல்லவேளை, விசா கையில் கிடைக்க , படிக்க செல்ல, பகுதி நேர வேலைக்கு செல்ல கொஞ்சம் நாளாகும். இவை எல்லாம் கிடைத்த பிறகு நான் யாழில் சண்டை பிடித்திருந்தால் உங்கள் பொய் கூற்று உண்மை போல் மற்றவர்களுக்கு தோற்றியிருக்கும். நல்ல வேளை. summer holiday இருந்து என்னை காப்பாற்றி விட்டது. என்ன தான் இருந்தாலும் நான் யாழுக்கு திரும்ப வந்ததால் எனக்கு குச்சி ஐஸ் அனுப்பி வையுங்கோ. :lol:

கலைஞன் அண்ணாவுக்கு என்னில் என்ன கோபமோ தெரியவில்லை. வேறொரு திரியிலும் தானாக தனகினார். இந்த திரியிலும் தனகினார்.

நான் கொஞ்சம் அதிகமாகவே மற்றவர்களை குறை சொல்கிறேன் போலிருக்கு. எனக்கே தெரிகிறது. சில திரிகளை கண்டவுடன் கோபம் வந்து விடுகிறது. எனவே நான் கோபப்பட்டு எழுதினால் சீரியஸா எடுக்காதீர்கள். :D

நான் பிலிம் காட்டுறதுக்காக இப்பிடியெல்லாம் நடக்கிறன் என்று அல்லது நல்ல பிள்ளை போல் என்னை காட்டிக்கொள்ள இப்படி நடக்கிறன் என்று பலர் யோசித்தால் ஒன்றும் செய்ய முடியாது. யோசிப்பவர்கள் அப்படியே யோசித்துக்கொண்டிருங்கோ.

இந்த திரியை சோகமான திரியாக மாற்றியமைக்கு அனைவரும் மன்னித்துக்கொள்ளுங்கள். :(

நந்தன் அண்ணா, நிலாமதி அக்கா, தமிழ் சிறி அண்ணா , கரும்பு அண்ணா, புத்தன் அண்ணா, சுண்டல் அண்ணா ஆகியோருக்கும் தனிமடல் மூலம், முகநூல் மூலம், மின்னஞ்சல் மூலம் அழைத்தோருக்கும் நன்றி. (அவர்கள் பெயரை இங்கு குறிப்பிடுவதை விரும்புவார்களோ தெரியவில்லை. எனவே குறிப்பிடவில்லை.)

நான் யாழுடன் தொடர்ந்து இணைந்திருக்கிறேன்.

நன்றி.

பி:கு:- இங்கு நான் அவர்களுக்கு புரிய வைப்பதற்காக சில விடயங்களை எழுதியிருந்தேன். அவற்றை எழுதியது தவறென்றால் நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டுங்கள். நான் நீக்கி விடுகிறேன். அல்லது நீங்கள் எடிட் பண்ணி தேவையற்ற கருத்துகளை நீக்கி விடுங்கள்.

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.