Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழத்திற்காய் தினம் தினம் தன்னையே உருக்கி இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு எதிராக நீதி கேட்டு நல்லூரின் முன்றலில் அகிம்சை வழியில் போராடி ஈழத்தமிழர்களால் அகிம்சையின் வடிவிலும் போராட முடியும் என்று நிருபித்த எங்கள் தியாக பெரும் சுடர் லெப்டினன்ட் கேணல் திலீபனின் நினைவு நாள்

உணர்வுடன் நினைவு கூறுவோம் தியாக வேங்கையை .....

http://youtube.com/watch?v=EGJbgAV3i14

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஞ்சநேயருக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற‌ சாபம்!, இன்று வரைதொடரும் அதிசயம்-அரியதகவல்

சில தலங்களுக்கென தனித்துவங்கள் உண்டு. காசிக்கு ஐந்து அதிசயங்களை ச் சொல்வார்கள். காசியில் கருடன் பற ப்பதில்லை; பல்லி ஒலிப்பதில்லை; மாடு முட்டுவதில்லை; பூக்கள் மணப்ப தில்லை; எரிக்கப்படும் பிணங்கள் நாறு வதில்லை.

இந்த அதிசயங்களில் காசியில் கருடன் பறக் காமைக்கும்

பல்லி ஒலிக்காமைக்கும் கார ணமானவர் பைரவர்தான். காசி நக ரைச் சுற்றி 45 மைல் பரப் பளவில் கருடன் பறப்பதில்லை என்கிறா ர்கள்.

இராவணனை வதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்ய நி னைத்தார் இராமபிரான். காசிக் குச் சென்று சிவலிங்கம் ஒன்று கொண்டு வருமாறு அனுமனுக் குக் கட்டளையிட்டார். அனுமன் காசிக்குச் சென்றார். அங்கு எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்கள் இருந்த ன. அந்த லிங்கங்களில் எந்த லிங்கம் சுயம்பு லிங்கம் என்று புரியாமல் தடுமாறினார் அனுமன்.

அந்த நேரத்தில் அவருக்குத் துணை செய்ய நினைத்தார் மகா விஷ் ணு. விஷ்ணுவின் அருளால் அவருடைய வாகனமான கருடன் ஒன்று பறந்து வந்தது.ஒருகுறிப்பிட்ட லிங்கத்துக்கு மேல் வட்டமடித்தது. பல்லியும் அதே நேரத்தில் நல்லுரை சொல்வ துபோல ஒலித்தது.

இந்த இரண்டு குறிப்புகளையும் புரிந்து கொண்ட அனுமன், அந்த லிங்கம்தான் சுயம்பு லிங்கம் என்று உணர்ந்து, அச்சிவலிங்கத்தைப் பெ யர்த்து எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிப் பறக்கலானார்.

காசிக்கு காவல் தெய்வம் பைரவர். எட்டு பைரவர்கள் காசி நகரின் எட் டு திசைகளிலிருந்து காவல் செய் வதாக ஐதீகம்.

சிவலிங்கத்துடன் வந்த அனுமனைத் தடுத்த பைரவர், “என்னுடைய அனுமதியில்லாமல் காசியில் இருக்கும் லிங்கத்தை நீ எப்படி பெய ர்த்துச் செல்லலாம்?” என்று கேட்டார்.

அனுமன், பைரவரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், “என் தெய்வ மான இராமபிரானின் உத்தரவு. அதனால் லிங்கத்தை எடுத்துக் கொண்டு செல் கிறேன்” என்று சொன்னார்.

அனுமனின் பதிலில் திருப்தியடையாத பைரவர் அனுமனுடன் சண்டையிட்டா ர். இருவருக்கும் கடும் போர் நடந்தது. வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அந்தப் போர் அமைந்தது. அவர்கள் இருவரும் சண்டை யிட்டுக் கொள்வதைக் கண்ட முப்பத்து முக் கோடி தேவர்களும் கவலையில் ஆழ் ந்தார்கள். அவர் களுள் சிலர் காசி நக ரைநோக்கி விரைந்தார்கள். கால பை ரவரை வணங்கினார்கள். “சுவாமி! உலக நன்மைக்காக இந்த சிவ லிங்கத்தை எடுத்துக்கொண்டு தென்னாடு போக அனுமனுக்கு அனு மதி தரவேண்டும். ஸ்ரீஇராமபிரான் இந்த லிங் கத்துக்குப் பூஜை செய்வதற்காக சேதுவில் காத் திருக்கிறார். எனவே அனுமனை அனும திக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் கள்.

தேவர்களின்வேண்டுகோளுக்கு இணங்கினார் பைரவர். மனசாந்திஅடைந்தார். சிவலிங்கத்தை க் கொண்டுபோக அனுமதித்தார்.

அனுமனுக்குச்சரியான லிங்கத் தை அடையாளம் காட்டியது கரு டனும் பல்லியும். அனுமனுக்குத் துணைபுரிந்த கருட ன் இனிமேல் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடா து என்றும்; காசியில் பல்லிகள் இருந்தாலும் அவை ஒலிக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார் பைரவர்.

பைரவரின் கட்டளைப்படிதான் காசியில் இன்றும் கருடன் பறப்பதில்லை; பல்லி ஒலிப்பதில்லை என்கி றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படத்தில் பாடல் எழுதுவதற்காக கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது, ரஜினியின் உதவியாள் அவரிடம் வந்து காதில் கிசுகிசுத்து இருக்கிறார்.

உடனே ரஜினி அவர்கள் கவிஞர் வாலியிடம் “இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்“ என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றார். அங்கே கவியரசர் வைரமுத்து அவர்கள் ரஜினியைப் பார்க்க வந்து வாசலில் காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.

ரஜினிக்குக் கொஞ்சம் சங்கடம். வைரமுத்து அவர்களை அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம். என்ன செய்வது என்று தெரியாமல் “நீங்கள் இங்கேயே இருங்கள். இதோ ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்“ என்று ரஜினி வைரமுத்துவிடம் சொல்லி விட்டு திரும்பவும் வாலி இருந்த அறைக்குள் வந்தார்.

வந்தவர் கவிஞர் வாலியிடம் “ஐயா.... இன்று சிங்கமும் புலியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள போகிறார்கள்“ என்று சொன்னார்.

அதைக்கேட்ட வாலி உடனே, “யாரு.... வைரமுத்து வந்திருக்கிறாரா?“ என்று கேட்டார்.

ரஜினியும் “ஆமாம் ஐயா“ என்று பதில் சொன்னார்.

உடனே கவிஞர் வாலி கேட்டார்...., “ஆமாம்.... எங்களில் யார் சிங்கம்? யார் புலி?“ என்று.

ரஜினிக்கு மிகவும் தர்மச்சங்கடமாகி விட்டது. “ஐயா... அது வந்துங்க... நீங்க ரெண்டு பேருமே.....“ என்று இழுத்து இருக்கிறார் ரஜினி.

அவரின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட கவிஞர் வாலி, “இதில் என்ன தயக்கம்? இங்கே நான் தான் சிங்கம்.“ என்று மிகச்சாதாரணமாக சொன்னார்.

ரஜினி, அவர் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அசடாகச் சிரித்தார். அவரைப் பார்த்த கவிஞர் வாலி, “என்ன ரஜினி... என்னை நானே சிங்கம்ன்னு சொன்னது ஏன் என்று தெரியவில்லையா?“ என்று கேட்டார்.

ரஜினி “இல்லை“ என்று தலையாட்டி இருக்கிறார்.

உடனே கவிஞர் வாலி, “இங்கே எனக்குத் தானய்யா தாடி இருக்கிறது“ என்றார் தன் தாடியைத் தடவி விட்டுக்கொண்டே...

அவர் சொன்னதின் பொருளைப் புரிந்து கொண்ட ரஜினி வியந்து ரசித்துச் சிரித்தார். அங்கு வந்த வைரமுத்து அவர்களிடமும் இதைச் சொல்ல அவரும் சேர்ந்து சிரித்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் முப்பாடட்டனின் மூளையை மூடநம்பிக்கை என்று சொல்லாதீர்கள், காரணம் இல்லாமல் அவர்கள் எதையும் செய்வதில்லை.

வீட்டில் இருந்து வெளியே கிளம்பும் போது நாம எதுலயாவது தடுக்கி விழ பாத்த, வீட்ல பெரியவங்க சொல்லுவாங்க "ஒரு சொம்பு தண்ணி குடிச்சிட்டு போ " னு.. ஆனா நாம அத கண்டுகிறதே கிடையாது...

கீழ கிடக்குற எதையாவது தட்டி கீழ விழ நாம சின்ன குழந்தைங்க இல்லை, நாம வெளிய கிளம்பும் போது எதையாவது மனசுல நினைச்சிகிட்டே தான் வெளிய வருவோம், அதனால் கீழ பாக்கமா வந்து தட்டிருவோம், அதனால தண்ணி குடிக்க சொல்வாங்க, அதுல என்ன இருக்குனு கேட்குறீங்களா... இருக்கு, தண்ணீர் குடிச்ச நம்ம மூளை புத்துணர்ச்சி பெரும், நம்ம மனசுல இருக்குறது கொஞ்சம் குறையும், குடிக்காம போன அதையே நினைச்சிட்டு வேற எதாவது கவனக்குறைவா பெரிய விபத்து நடக்கலாம்...

அதனால நீங்க வெளிய கிளம்பும் போது எதாவது தட்டிருச்சுனா கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு போங்க...

  • கருத்துக்கள உறவுகள்

அதனால நீங்க வெளிய கிளம்பும் போது எதாவது தட்டிருச்சுனா கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு போங்க...

 

அவுஸில தண்ணி(குடிச்சிட்டு) அடிச்சிட்டு வெளியில் போனால் பொலிஸ் லைசென்சை தட்டிப்போடுவான் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11 முதல் 17 வயது வரையிலான பள்ளி பருவமே எனக்கெல்லாம் பொற்காலம். கவலைகளை புறம் தள்ளி விட்டு வெறும் மகிழ்ச்சி பூக்களை மட்டுமே எண்ணம் முழுக்க நிரப்பிக்கொண்ட காலம் அது. புரட்டும் பொய்மையும் நிறைந்த சமூகத்தில், அதன் நிழல் கூட படாது தெளிந்து கிடந்த காலம். இலைகளே உதிராத வசந்தத்தின் நிறங்களை மட்டும் அணிந்து கொண்ட காலம் அது....

  • கருத்துக்கள உறவுகள்

11 முதல் 17 வயது வரையிலான பள்ளி பருவமே எனக்கெல்லாம் பொற்காலம். கவலைகளை புறம் தள்ளி விட்டு வெறும் மகிழ்ச்சி பூக்களை மட்டுமே எண்ணம் முழுக்க நிரப்பிக்கொண்ட காலம் அது. புரட்டும் பொய்மையும் நிறைந்த சமூகத்தில், அதன் நிழல் கூட படாது தெளிந்து கிடந்த காலம். இலைகளே உதிராத வசந்தத்தின் நிறங்களை மட்டும் அணிந்து கொண்ட காலம் அது....

 

 

இப்ப  எதுக்கு ராசா இதெல்லாம்...?

அது ஒரு கனாக்காலம்... :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா மாங்கல்யான் இப்போ தான் செவ்வாய சுத்திது நாங்கலாம் அப்பவே சுத்திட்டம்.....

‪#‎கோயில்ல‬.....9 கிரகத்தையும்......

அப்போ நான் வட்டா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு,கிழக்கு பெண்களுக்கான கடன் மீள்செலுத்தல் ரத்துச்செய்யப்படலாம்!- அமைச்சர் சரத் அனுமுகம ....

இலங்கையில் யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது வடக்கு கிழக்கு பகுதியே சேர்ந்த பெண்கள்..... ஆகவே அமைச்சர் அவர்கள் இந்த உதவியை செய்வாராக இருந்தால் வடக்கு கிழக்கு பெண்கள் தங்களை மீளமைத்துகொள்ள சமூகத்தில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள மிகப்பெரும் உதவியாக இருக்கும் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அம்மா சிமெண்ட் திட்டம்"ஒரு மூட்டை ரூ190க்கு விற்பனை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

இன்றைய இந்த அறிவிப்புக்கும் நாளைய வழக்கிற்கும் சில நேரம் சம்மந்தம் இருக்கலாம் யாரோ செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒருவருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்ட்டிருக்கோ தெரியா ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஜெயாவின் வழக்கை எத்தினை நீதிபதிகள் விசாரித்திருந்தாலும் கடசியா தீர்ப்பு சொல்ல போகின்ற நீதிபதிக்கு தான் அடிச்சுது அதிஷ்ட்டம்.... இத தான் சொல்லுறது குடுக்கிற தெய்வம் கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்குமாம்

‪#‎நான்‬ நீதிய சொன்னேன் பா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நாள் கழிச்சி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன,

வெறும் டீ மட்டும் தானா மச்சி?

வேற என்ன வேணும்?

கடிச்சிக்க ஏதாவது?

நாய் இருக்கு அவுத்து விடவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2002 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் வை கோ வை கைது செய்து அடைகின்றது ஜெயா அரசு.... அதனை தொடர்ந்து இதைய நோய்க்கு சிகிச்சை பெற்றுவிட்டு இருந்த நெடுமாறன் ஐயா கைது செய்யப்படுகின்றார் இவர்களுடன் ஏராளமான தமிழ் உணர்வாளர்கள்...... இத்தனைக்கும் அவர்கள் ஊழல் செய்தோ மற்றவர்களின் சொத்தை அபகரித்தோ கைது செய்யப்படவில்லை..... முழுக்க முழுக்க புலிகளுக்கு ஆதரவாக பேசினார்கள் என்ற ஒரு குற்றசாட்டை வைத்து அத்தனை பேரையும் உள்ளே தூக்கி போட்டது ஜெயா அரசு..... அவர்களின் வீட்டு பெண்கள் எப்பிடி துடித்து இருப்பார்கள்? எப்பிடி அழுது புலம்பி இருப்பார்கள்?

காலங்களும் காட்சிகளும் மாறின 2014 இப்பொழுது உள்ளே தூக்கி போட்டவர்களையே காலம் உள்ளே அழைத்து சென்றுவிட்டது பாத்தீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை: யாழில் மூவர் முதலிடம்

அதுவும் குறிப்பா நம்ம ஊர் அளவெட்டி அருணேதயாக் கல்லூரியின் மாணவனும் 192 புள்ளிகளை பெற்று முதலிடம்.....

வாழ்த்துக்கள் Students நாங்க செய்யாத சாதனைங்களா எல்லாம் நீங்க செய்றீங்க....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அருணோதயாக் கல்லூரி மாணவனா , சொல்லவேயில்ல...!  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி ரொம்ப டென்ஷன் கூடாது இரத்தத்தின் இரத்தங்களே.............இப்போ இத படிச்சு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க........

அமேரிக்காவில் பணிபுரியும் கோபால்சிங் ஒருநாள் பீச்சில் ஹாயாக படுத்து பலவற்றையும் யோசித்துகொண்டிருந்தார்.

அங்கு வந்த அமெரிக்கர் ஆர் யூ ரிலாக்சிங்...? என்று கேட்டார். நம்மாளோ ..., நோ .., "அயாம் கோபால்சிங்" என்றார். அடுத்து வந்த இன்னொருவரும் அதையே கேட்க நம்மவரும் அதையே சொல்ல ,அடுத்தடுத்து வந்தவர்களுக்கு பதில்சொல்ல எரிச்சல்பட்டு வேறிடம் சென்றார்.

அங்கே ஒருவர் இவரைப்போல ஹாயாக படுத்து தம்மடித்துக்கொண்டிருந்தார். நம்மாளு அவரிடம் போய் ஆர் யூ ரிலாக்சிங்...? என்று வினவினார். புன்னகையுடன் திரும்பிய அவரோ எஸ்...என்றார்.

அடுத்த நிமிடம் கோபால்சிங் கோபம் கொண்ட சிங்காய் மாறி தனக்குத் தெரிந்த குங்க்பூ கராத்தே எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து தாக்கத் தொடங்கினார் ...,ஏண்டா நீ இங்க ஹாயா கெடக்குற..., வர்றவன் போறவனெல்லாம் என்னைய ரிலாக்சிங்கா, ரிலாக்சிங்கா 'னு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டானுன்களே... என்று போட்டாரே ஒரு போடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்க கடலை போடுற தொழிலுக்கு முக்கிய துணையா இருப்பது இந்த போன் தான் சோ இந்த முறை ஆயுத பூஜைல அதுக்கு தான் முதல் மரியாத.... தொழில் செழித்து பல நாடுகளுக்கும் விரிவடைந்து பல்கி பெருகணும் சாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாடுகளைக் கையாளும் இராஜதந்திரத்தில் சிங்களத் தலைவர்கள் மிகச் சிறப்பான தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். ஈழத்தமிழரது நீண்ட தோல்விகளின் வரலாறானது அவர்களிடம் காணப்பட்ட பிழையான சர்வதேசப் பார்வையினால் உருவானது. குறிப்பாக சர்வதேச அரசியலைப் புரிந்து கொள்ளுதல், கையாளுதல் எனும் விடயங்களை 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே தமிழ்த் தலைவர்கள் கொண்டிருக்கவில்லை. இதில் ஓர் அப்பாவித்தனமும், அறிவியல் மறுப்பும் தமிழ் தலைமைகளிடம் இருந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி சில தமிழக தமிழர்கள் அடிக்கடி கேட்பதுண்டு.....ஈழத் தமிழர்கள் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு என்ன செய்தார்கள் ஏன் அவர்களுக்கு நாங்கள் உதவ வேண்டும் என்று?

ஒரு வரலாற்று சம்பவம் அந்த உறவுகளுக்காக

1927ஆம் ஆண்டு யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் மகாத்மா காந்தியை இலங்கைக்கு வரவழைத்தது. அப்போது மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க இளைஞர் காங்கிரஸ் அன்றைய நிலையில் 1,00,000 ரூபா திரட்டி இந்திய தேசிய போராட்டத்திற்கான நிதியாகக் கையளித்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரத்தில் இருந்து கொண்டு அதை துஷ்பிரயோகம் செய்து தவறுகள் நடக்கக் காரணமாக இருந்ததற்காக உங்களுக்கு அதிகபட்ச தண்டனையான 7 வருடம் என்றுதான் தீர்ப்பளிக்க நினைத்தேன். ஆனால் உங்களது வயது காரணமாகவும், வழக்கு 18 வருட தாமதம் என்பதாலும் 4 வருட தண்டனை அளிக்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பளித்தபோது மாஜிஸ்திரேட் மைக்கேல் டி குன்ஹா கூறியுள்ளார்.

ஜட்ஜ் ஐயாவின் கருணையோ கருணை.....இப்பிடி கருணை உள்ளம் கொண்ட ஜட்ஜ் ஐயாவை இரத்தத்தின் இரத்தங்கள் கழுவி ஊத்தலாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2010 ஆம் ஆண்டு பொங்கு தமிழ் இணையத்தில் வந்த ஒரு கட்டுரை இது

வாசிப்பதற்கு இலகுவாக சிறு சிறு பகுதிகளாக பிரித்து தருகின்றேன்......முடிந்தால் படியிங்கள்....

இந்தியாவின் மீதான தமது ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான சமுத்திரத் திட்டத்தின் (Oceanic Theory) மையப் புள்ளியாக இலங்கைத் தீவைப் பிரித்தானியர் பேணிக்கொண்டனர். 500 க்கு மேற்பட்ட இந்திய அரசுகளை ஒன்றாக இணைத்த பிரித்தானியர், இலங்கையை இந்தியாவுடன் இணைக்காது பேணியதற்கு குறுங்கால மற்றும் நீண்டகால நோக்கங்கள் இருந்தன.

பிரித்தானியரின் பார்வையில் இலங்கைத் தீவானது இந்தியாவைப் பாதுகாப்பதற்கான ஓர் இராணுவ முகாம்தான். பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில் அளவால் சிறிய இனங்களை அணைத்து அளவால் பெரிய இனத்தை ஆட்சி செய்வதே பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தினது அடிப்படையாகும். ஆரம்பத்தில் இதனையே பிரித்தானியர் இலங்கையில் கைக்கொண்டனர்.

1920ஆம் ஆண்டுகளின் மத்திவரை அளவால் பெரிய சிங்கள இனத்திற்கு எதிராக அளவால் சிறிய தமிழினத்திற்கு சலுகைகளைக் காட்டி தமது நிர்வாகத்தை இலகுவாக்கும் போக்கை பிரித்தானியர் கைக்கொண்டனர். ஆனால் 1920ஆம் ஆண்டுகளின் மத்திக்குப் பின் இந்நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

அமெரிக்க மிஷன் வடபகுதியான வட்டுக்கோட்டையில் அமைந்த போதிலும், அது தன்னை தென்னிந்திய திருச்சபை எனவே பெயரிட்டுக் கொண்டது. உண்மையில் அதன் நோக்கம் தென்னிந்தியாவை இலக்கு வைப்பதாகவே இருந்தது. அதாவது இந்தியாவிற்கான ஒரு வாசலாகவே அதனை அவர்கள் கருதினர். ஆரம்பத்தில் பிரித்தானியர் தென்னிந்தியத் திருச்சபை மீது அச்ச உணர்வைக் கொண்டு கட்டுப்பாடுகளை விதித்து நடந்து கொண்டமைக்கு இதுவே காரணமாகும்.

இத் தென்னிந்தியத் திருச்சபையால் நடாத்தப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரி நவீன சிந்தனையை தமிழ் மக்களிடம் விதைக்கத் தொடங்கியது. இதனை மையமாகக் கொண்டெழுந்த இளைஞர்கள் ஜனநாயகம், விடுதலை போன்ற எண்ணங்களினால் உருத்திரண்டு யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என அமைப்புகளை உருவாக்கக் காரணமாய் அமைந்தது. இவர்கள் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தம்மை இனங்காட்டத் தொடங்கினர்.

1920ஆம் ஆண்டுகளின் மத்தியில் எழுந்த இந்த அமைப்பு இந்தியத் தேசிய விடுதலைத் தலைவர்களை யாழ்ப்பாணம் வரவழைப்பதிலும், இந்தியப் பாணியில் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதிலும் அக்கறை காட்டினர். குறிப்பாக, யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸினர் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இலங்கையை இணைத்து விடுவர் என்ற அச்சம் பிரித்தானியரிடம் 1920ஆம் ஆண்டுகளின் மத்தியில் தோன்றத் தொடங்கியது.....

மிகுதி பிறகு.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் நம்ம தமிழாக்கள் வெளிநாடுகளில் நல்ல வேலைகளில் நல்ல பதவிகளில் இருந்து லட்சக்கணக்கில் உழைத்தாலும்..... வாங்கி ஓடுறது என்னமோ toyota வகையறா காரா தான் இருக்கும்.....அம்புட்டு காதல் toyota மேல நம்ம ஆக்களுக்கு

‪#‎அவதானிப்பு‬.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலம் முடிந்து எப்படா வெயில் காலம் வரும் என்று யாரு ஆசைபடுறாங்கலோ இல்லையோ இந்த பன்னாட்டு நிறுவனங்கள் அதை பயன்படுத்தி காசாக்க ஆசைப்படுவாங்க..... இந்த காலத்தில் தான் விதம் விதமான ஐஸ் கிறீம் தயாரிப்புகளும் , குளிர் பான வகைகளும் கடைகளில் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்க தொடங்கும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக அரசியல் கடலிலே நீந்துவதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை இருக்கு... வடிவேலு என்ற மாபெரும் நகைச்சுவை கலைஞன் தங்களுக்கு பிடிக்காத அரசியல் கட்ச்சியுடன் சேர்ந்து தேர்தலில் பிரச்சாரம் செய்தான் என்ற ஒரே காரணத்துக்கா திரைப்பட உலகை விட்டே வனவாசம் அனுப்பியவர்கள் நீதிதேவனின் கரங்களில் சிக்குண்டு இன்று சிறைவாசத்தில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வரூபம் படத்துக்கு வேண்டும் என்றே பிரச்சனை குடுத்து படத்தை வெளியே வரவிடாமல் பண்ண முட்டுக்கட்டை போட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர்.... தன்னுடைய சொத்தெல்லாம் போக போகுது என்று கதறி அழுத போது கமல் என்ன விபரம் தெரியாதவரா .... சிறு பிள்ளையா என்றெல்லாம் கேட்ட ஜெயாவை பார்த்து இப்பொழுது கமல் கூட திருப்பி கேக்கலாம்..... சில கேள்விகளை கமலகாசனை எவ்வளவு அழகழித்திருப்பார்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.