Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆருக்கும் - டி.எம்.சவுந்தர் ராஜனுக்கும் இடையே எதிர்பாராத சிறிய, "விரிசல்' ஏற்பட்டிருந்த சமயம் அது. அப்போது சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் தயாரித்த, "நல்ல நேரம்' படத்தில், எம்.ஜி.ஆர்., நடித்துக் கொண்டிருந்தார்.

"நல்ல நேரம்' படத்தில், டி.எம்.எஸ்.,சுக்கு பதிலாக எல்லா பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையே பாட வையுங்கள். ஒரு மாறுதலுக்காகத்தான் இந்த யோசனை...' என்று தேவரிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார் எம்.ஜி.ஆர்.,

தேவருக்கு இது அதிர்ச்சியைத் தந்தது.

"டி.எம்.எஸ்., ஏன் என் படத்தில் பாடக் கூடாது? அவர் செய்த பாவம்தான் என்ன? அவர் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள்; இரண்டு தட்டு தட்டிக் கொண்டுவந்து உங்கள் முன்னாலே கொண்டுவந்து அவரை நிறுத்துகிறேன். ஆனால், டி.எம்.எஸ்.,சை பாட வைக்கக் கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், "நல்ல நேரம்' படத்தை எடுப்பதையே நான் நிறுத்திக் கொள்கிறேன்...' என்றார் தேவர் படபடப்பாக.

அதைக் கேட்டதும் அதிர்ந்து போன, எம்.ஜி.ஆர்., "பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க அண்ணே... உங்க விருப்பப்படியே டி.எம்.எஸ்., பாடட்டும்...' என்றார் சமாதானமாக.

இந்த சம்பவம் பற்றி தேவர், டி.எம்.எஸ்.,சிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, பழைய கால சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்...

"ஜூபிடர் பிக்சர்ஸ், "கிருஷ்ண விஜயம்' படத்தில் நீ பாடிக்கொண்டிருந்த சமயம்... அந்தப் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். இருவரின் கலைப் பயணமும் கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்திலேயே துவங்கியது. அதே போல, "சுதர்சன்' என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நீயும், நானும் ஒன்றாக நடித்தோமே... ஞாபகம் இருக்கிறதா? இசையிலும், வாழ்விலும் நீ முருகனை நம்பி வந்தாய். கலையுலகிலும், வாழ்க்கையிலும் நானும் அதே முருகனையே நம்பி வந்தேன். இருவரையும் அவனே உயர வைத்தான். ஒரு முருக பக்தனான, டி.எம்.எஸ்.,சுக்கு எந்த குறையும் வராமல் பார்த்துக் கொள்வது, இன்னொரு முருக பக்தனான என் தார்மீக கடமை அல்லவா? அதனால் தான், உனக்காக எம்.ஜி.ஆரிடம் பரிந்து பேசினேன்...' என்றார் தேவர்.

தேவர் உயிரோடு இருக்கும் வரை, தாம் தயாரிக்கும் ஒவ்வொரு படத்திலும் டி.எம்.எஸ்.,சையே பாட வைத்தார்.

இளைய தலைமுறை நடிகர்கள் கமல், ரஜினி, சிவக்குமார் ஆகியோரை வைத்து, "தாயில்லாமல் நானில்லை, தாய் மீது சத்தியம், ஆட்டுக்கார அலமேலு மற்றும் வெள்ளிக்கிழமை விரதம்' போன்ற படங்களை எடுத்த போதெல்லாம் கூட, அவர்களுக்காகவும் டி.எம்.எஸ்.,சை பாட வைத்தார். முருகனையே பரிபூரண கதியாக எண்ணி வாழ்ந்த தேவர், முருகப் பெருமானுக்கு உரிய நாளாகிய சஷ்டியன்று காலமானார்.

நன்றி மறக்காத டி.எம்.எஸ்., தேவரின் பூதவுடல் அருகே அமர்ந்து, ஒரு மணி நேரம் முருக பக்திப் பாடல்களை கண்ணீர் மல்கப் பாடி, தேவருக்கு மானசீகமாக நன்றி மலர்களைக் காணிக்கையாக்கினார்.

— "தேவரின் கலைப்பயணம்' என்ற நூலிலிருந்து...

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓய் மாமா பெண்ண தானு திமிரா கேட்டது ஒரு காலம்

இப்ப மெடரோமொனியில் பொண்ண தேடி லூசா அலைகிறோம்

நம் வீட்டு பக்கத்துல இருக்கும் நெபர் பெயர் தெரியாது ஆனா

facebook-ல உலகம் பூரா frienda தேடுகிறோம்

யே புள்ள மீனாச்சி உங்க அண்ணா வேலை என்னாச்சு

இப்படியெல்லாம் இப்ப நாம எங்க பேசுறோம்

எல்லாம் கையில செல் போனு

அதில் சினிமா பாட்டு ரிங்கிங் டோனு

மனச விட்டு பேச மறந்து

போலி வாழ்க்கை தான் வாழ்கிறோம்

தக்க தையா...

இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா

ஹே... தகக்க தையா...

அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்

ஹேய் அப்பனோட அப்பா பெர மரக்கிறோம்

பிள்ளைக்கு சச்சின், தோனி பெயர வச்சு வளக்கிறோம்

அப்பா அப்பா அத அத கத்து தார மரந்துடு

பின்னால பொலம்புறோம்

டீவீ பெட்டி முன்ன நித்தம் கிடக்கிறோம்

அதில் தேம்பி அழும் பெண்ண கண்டு உருகுறோம்

பக்க வந்த சொந்தங்களை காக்க வெச்சி

பாசத்த பஞ்சர் ஆக்கி அனுப்புறோம்

ஹோய் தாலாட்டு பாட்டெல்லாம் காணாம போச்சேடா

அட குத்து பாட்ட கேட்டு தான் இப்ப

பச்ச குழந்தையும் தூங்குது

தக்க தையா...

இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா ஹோய்

ஹேய் தக்க தையா...

அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்

ஹேய் கட்டு கட்டா பணம் வந்து பலனில்லை

உன் கட்டிக் கொஞ்சம் சொந்தம் வேணும் மாப்பிள்ள

நாடு நாடு சுத்தினாலும் வீடு வந்து

சேரும் போது நிம்மதி பொறக்குமே

அண்ணா தம்பி சண்ட கூட நடக்கலாம்

அதில் ஆளுக்கொறு பல்லு கூட உடையலாம்

வேரோறுத்தன் யாரே வந்து அண்ணன் மேல கைய வச்சா

தம்பி மனம் துடிக்குமே

கா கா-னு சொன்னாலே காக்கைகும் கூட கூட்டம் வரும்

பாடான மனுசம் தானே பாதி பாதி வாழுறான்

தக்க தையா...

ஹேய் இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா ஹோய்

தக்க தையா...

அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோ

http://www.youtube.com/watch?v=o9pqMxC73hw

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓடும் பேரூந்தும் -உன்

காதலும் ஓன்றுதானடி ...!

இருந்தால் போல் அதிவேகமாக

அன்பை தீவிரமாக காட்டுகிறாய் ...!

அடிக்கடி தேயையில்லாமல்

பிரேக் போடுவதுபோல்

கோபப்படுகிறாய் .....?

சிலகாலம் பிரேக்டவுன் போல்

பேசாமல் விடுகிறாய் ...?

"பாவம் பயணியான நான்"

:( :( :D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாராயணசாமி அவர் வசித்த ஊரின் மிகப்பெரிய‌ பணக்காரர்.

தன் வேலைக்காரர் யாராக இருந்தாலும் அவர்களை சந்தேகக்கண்ணோடு பார்ப்பது அவரது வழக்கம்.

ஒரு நாள் ஒரு வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணெய்யை வாங்கி வரச் சொன்னார்.

வேலைக்காரனும் கடைவீதிக்குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான்.

வேர்த்து விறுவிறுத்து வீட்டிற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த நாராயணசாமி,

"ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய்" என்று கேட்டுவிட்டி எண்ணெய் டின்னை பார்த்தார். எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது.

"ஏன் எண்ணேய் குறைவாக இருக்கிறது?" என்று கேட்டார்.

அதற்கு வேலைக்காரன்,

"டின் அடியில் ஓட்டை இருந்தது அதனால் கீழே வழிந்து விட்டது" என்று கூறினான்.

நாராயணசாமி அவனைக் கேட்டார்,

"கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நேரம் உட்க்காருவது உயிருக்கு ஆபத்து..! எச்சரிக்கை தகவல்..!

நீண்ட காலம் வாழ ஆசையா… இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். ஆம். ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று மிரட்டுகிறது ஒரு ஆய்வு முடிவு. ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ். இவரது தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது. அதில் இடம்பெற்ற விவரங்கள்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.

2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான். ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில் , இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம். குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.

* 45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2006,10 வரை 5 ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

* ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரைவிட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம்.

* பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது ஆபத்தானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.

‘‘எந்த ஊர் நீங்க?’’

‘‘திருவண்ணாமலை பக்கம்..’’

‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’

‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’

‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’

‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’

‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’

‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’

‘‘சாப்பாடு?’’

‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’

‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’

‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’

‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’

‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’

‘‘உட்காரவே கூடாதா?’’

‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’

- யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.

‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’

‘‘5,500 ரூபாய்.’’

‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’

‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’

‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’

‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’

‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’

‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’

‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’

‘‘ஆமாம்.’’

‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’

‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’

‘‘லீவு எல்லாம் உண்டா?’’

‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’

‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’

‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’

‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’

‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’

‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’

‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’

‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’

‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’

‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’

‘‘தெரியலை..’’

‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’

‘‘நெல் விவசாயம்..’’

‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’

‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’

‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’

‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’

‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’

‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’

‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப் பார்த்திருக்கீங்களா?’’

‘‘ஆவடில எங்க அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டு வருவேன்.’’

- கனத்த மனதுடன் அந்தப் பெண்ணிடம் விடைபெற்று நகர்ந்தோம். அந்த தளம் முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும் இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த பிரமாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.

நன்றி; Barathi Thambi

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே வேதனையாக இருக்கிறது :(  :(  :( ...வளர்ந்து வரும் நாடுகளில் மேலை நாடுகளில் உள்ளதுபோல் தொழிலார்களின் பாதுகாப்புக்கு உரிய சட்டம்கள் கொண்டுவராத வரை அவற்றை தீவிரமாக அமுல்படுத்தாதவரை இவை தொடர்கதைதான்..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டங்கள் கொண்டு வந்தாலும் கூட பெரிய பெரிய நிறுவனங்களுக்கு சட்டத்தை எப்பிடி விலை கிடுத்து வாங்கணும் என்று தெரியும் மனிதாபிமான முடியில் இவர்களே திருந்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
இப்படி உடுப்பு கடைகளில் கஸ்டப்படும் பெண்களது வாழ்க்கையைத் தானே "அங்காடித் தெருவாக" எடுத்தார்கள்...அந்த கடைகளுக்குப் போறவர்களும் அவர்களை மனிசராய் நினைக்காமல் அதை எடுத்துக் காட்டு,இதை எடுத்துக் காட்டு என கஸ்டம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
 
நல்ல திரி சுண்டல் பல பதிவுகள் வாய் விட்டு சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்துள்ளன...தொடரட்டும் உங்கள் சேவை :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடத்தில் திருமணத்தின்போது தாலி கட்டும் பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களிலும் இதற்கு ஆதாரம் இல்லை. கி.பி., 11ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டது கந்தபுராணம். எழுதியவர் கச்சியப்ப சிவாச்சாரியார். இந்நூலில் மூன்று திருமணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன.

சிவபெருமானுக்கும், உமாதேவியாருக் கும் நடந்த திருமணம் ஒன்று. ¬முருகனுக்கும், தெய்வானைக்கும் நடந்த திருமணம் ஒன்று. ¬முருகனுக்கும், வள்ளிக்கும் நடந்த திருமணம் ஒன்று. உமா தேவியார் திருக்கல்யாணப் படலத்தில் இறைவனின் திருமணச் சடங்குகள், மூன்று செய்யுட்களில் கூறப்பட்டுள்ளன. உமாதேவியின் தாய், நீர் வார்க்க, தந்தையான இமையவன், மணமகனான சிவபெருமானுடைய திருவடிகளை கழுவினான். பிறகு, உமா தேவியின் கைகளை மணமகனின் கையில் வைத்து, "நேசமோடு அளித்தேன்!' என்று தாரை வார்த்துக் கொடுத்தான்.

இத்திருமணத்தில் சிவபெருமான், உமா தேவியை, பெற்றோர் தர, கைப் பிடித்தல் ஒன்றே - பாணிக்கிரஹணம் — கூறப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டும். வள்ளியின் தந்தையான குறவர் கோமான், ¬முருகன் கையில் வள்ளியின் கரத்தை வைத்து, "என் தவப் பயனால் வந்த வள்ளியம்மையை இன்று உனக்கு கொடுத்தேன்... கொள்க!' என்று தாரை வார்த்தான். இத்திரு மணத்திற்கு புரோகிதராக இருந்து வேத விதிப்படி எரி வளர்த்து, பிற சடங்கு களைச் செய்து ¬முடித்தான் நாரதன். இத்திருமணத் திலும் தாலி கட்டாமை கவனிக்கத்தக்கது.

தெய்வானை இந்தி ரனின் மகள். அவள் திருமணக் கோலம் பூண்டு மணப்பந்தலுக்கு வந்தாள். ¬முருகனுக்கு பாத பூஜை செய்தான் இந்திரன். பின், மணமகள் கையை ¬முருகன் கையில் வைத்து, "இவளை உனக்குத் தந்தேன்!' என்று தாரை வார்த்தான் இந்திரன்.

பிறகு, "நான்முகன் தன் கருத்தினால் ஆக்கி, கரத்தினால் அளித்த மங்கள நாணை, ¬முருகன், தெய்வானைக்கு அளித்தான்!' என்று ஒரு செய்யுள் கூறுகிறது. திருமணத்தின் போது மங்கள நாண் கட்டப்பட்டதாக தமிழ் இலக்கியத்தில் வந்துள்ள ¬முதல் குறிப்பு இதுதான். எனவே, இடையில் புகுந்தது தான் தாலி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதையே காட்டி 15 பவுன்ல தாலிகட்டுறதில இருந்து எஸ்கேப் ஆகிக்கலாம் :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில அரிய சுவையான தகவல்கள்

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

6.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

7. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

8.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

9. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

6.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

பிரேசிலில் தேன் கசக்குமோ என்னமோ அங்கு காணப்படும் சம்பா (Brazilian samba) இலங்கை, இந்தியாவில் கிடைக்காத சுவை.   :lol:

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

எப்ப இருந்து டாக்டர் சுண்டலானீர்கள்??? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்றது கா யாராச்சும் விழா எடுத்து எனக்கு டாக்டர் பட்டம் கொடுப்பாங்க எண்டு பாத்தன் கொடுக்கல்ல அதான் நானே ஆகிட்டன் கா :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு யாழே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

#ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!

:D:(:D

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nandan anna : ஏண்டா தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண்ணை எங்க பையனுக்கு கேக்கலாம் எண்டு இருக்கிறம் ..!பெண்ணு எப்படி ...?

Sundal : நான் காதலிச்ச வரைக்கும் பெண்ணு

நல்ல பெண்ணுதான் சார் ...

:( :( :(:D

  • கருத்துக்கள உறவுகள்

#ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!! :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருடரை பிடிக்கும் மிசின்

அமெ ரிக்காவில் திருடரை கண்டுபிடிக்க

மிசின் ஒன்றை கண்டு பிடிச்சாங்க ...

அந்த மிசினை ........................................?

இங்கிலாந்து வாங்கி பயன் படுத்திய போது

30 நிமிடத்தில் 50 திருடர்களை கண்டு பிடித்தது

பிரான்ஞ் வாங்கி பயன் படுத்திய போது

30 நிமிடத்தில் 80 திருடர்களை கண்டு பிடித்தது

நம்ம நாடு வாங்கி பயன் படுத்திய போது

ஒரு நிமிடத்தில் மிசினையே காணல்ல :( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பே நீ என்ன தினசரி பத்திரிகையா ..?

தலைப்பு செய்திபோல் திடீரென பேசுகிறாய் ..?

சிறு விளம்பர பகுதிபோல் சிலநேரம் பேசுகிறாய் ..?

நடுப்பகுதிபோல் கவர்ச்சியாக பேசுகிறாய் ..?

மரணறிவித்தல் போல் சோகமாக பேசுகிறாய் ..?

அரசியல் பகுதிபோல் அடிதடியாக பேசுகிறாய் ..?

சினிமாபகுதிபோல் சிரித்து பேசுகிறாய் ..?

விளையாட்டு பகுதிபோல் விளையாட்டாக பேசுகிறாய் ..?

ஆரோக்கிய பகுதிபோல் ஆரோக்கியமாக பேச மாட்டாயா ..?

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்காவும் தம்பியுமா

அவளைப் பாத்தேன்

மொத மொதலா

அக்காவை மடக்கணுன்னா

தம்பியை பிடிக்கணுன்னு

சின்னவன் அவன் பக்கம்

சிந்தனையை திருப்பிவிட்டேன்

தெருமுனையில் அவனை மடக்கி

ஐஸ்க்ரீமு சாக்லேட்டு

சீஸ் பீட்ஸா பர்கர்னு

வகை வகையா வாங்கித் தந்து

பொடிசுக்கு நெருக்கமானேன்

அப்புறமா ஒரு நாளு

'ஐ லவ் யூ' கார்டு வாங்கி

'அக்காகிட்ட கொடுத்துரு'ன்னு

அவன்கிட்ட கொடுத்தா

'அது என் அக்கா இல்லை

அம்மா'ன்னுட்டான் பய புள்ளை..

எங்க போயி நான் சொல்ல

என் சோக காதல் கதையை...!

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நல்ல  கண் வைத்தியரை  நாடவும் என்றுதான் எழுத நினைத்தேன்

 

இது

அதையும்  தாண்டி

அதையும்  தாண்டி

நல்ல மனநல வைத்தியரை  நாடவும்......... :lol:  :D  :D

(அவசரமாக)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடு இரவில் கண் விழித்த ஒரு பெண்மணி தன் கணவர் அருகில் இல்லாதது கண்டு அவரை வீட்டில் தேடியபோது, கணவர் சமையலறையில் காபி அருந்திக் கொண்டிருப்பதை பார்த்தார்.

கணவர் சுவற்றை வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் தோன்றினார். அவர் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

திடுக்கிட்ட மனைவி, "என்ன ஆச்சு, டார்லிங் ? இந்நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?" என்று வினவினார்.

கணவர், மனைவியை நிமிர்ந்து பார்த்து, "20 வருடங்களுக்கு முன் நாமிருவரும் காதல் வயப்பட்டது உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? அப்போது உனக்கு 16 வயது தான் !". மனைவி, "நன்றாக நினைவிருக்கிறது" என்றார்.

இருவருக்குமிடையே சிறிய மௌனம் நிலவியது ! கணவரின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றத்தால், வார்த்தைகள் மெல்ல மெல்ல வெளிவந்தன, "உன்னுடைய அப்பாவிடம் நாம் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் (மனைவியின் முகத்தில் இப்போது வெட்கம்!) மாட்டிக் கொண்டதும்,

முன்கோபியான அவர், நான் உடனே உன்னை திருமணம் செய்யாவிடில் என்னை 20 வருடங்கள் சிறையில் அடைக்க சட்டத்தில் வழி இருக்கிறது என்று துப்பாக்கி காட்டி மிரட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா ?" என்று கேட்டதும், மனைவி மிக மென்மையாக, "ஆமாம், செல்லம், ஞாபகம் வருகிறது" என்று பதிலுரைத்தார்.

கணவர் கண்களை துடைத்துக் கொண்டே, "இன்று நான் விடுதலை அடைந்திருப்பேன் !!!" என்று மிக்க விரக்கத்துடன் கூறினார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.