Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Pakalavan Annaa நீங்களும் இதே மாதிரி ஒரு அழகான விமான பணி பெண்ணை பிடிச்சு try பண்ணலாமே அண்ணா.... :D

சுண்டலின் கேட்டது என்பது இது தானா??

என் மீது மட்டும் என்ன  கோபம்??? :lol:

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தான் டெய்லி வாடிக்கையாளர் என்ற பெயரில் அழகான பொண்ணுங்க எல்லாம் வாரங்களே.... சொல்லவே தேவை இல்லை....:D

அவருக்கு Cook ஆக இருக்க விருப்பமில்லையாம். Food  Tasting Chef. ஆகத்தானாம் இருக்க விருப்பம்.  அதாலை தனக்குதான் வாடிக்கையாளர் என்ற பெயர் வேண்டுமாம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப Food tasting chef க்கு பசிக்காதா? :D

தொழில் இடத்தையும் இன்னொரு வீடாக கருதும் Chef  என்றாலும் சாப்பாட்டுக்கு வீடுக்குத்தான் போவார்.  :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,.....

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான்.

அவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான்.

அவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும் குழந்தைகக்காக படிப்பு, திருமணம் என எந்தவித குறையும் இல்லாமல் வைக்க தன்னையே தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lankasri

23 நிமிடங்களுக்கு முன்பு ·

நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்ங்கோ. ­.!

--------------- ­--------------- ­--------------- ­-----

சப்பாத்திய கைல பிச்சு சாப்டுவோம்

ஆனா, சாதத்த ஸ்பூன்-ல மட்டும் தான் சாப்டுவோம்

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

வெளில போனா மினரல் வாட்டர்-ல முகம் கழுவுவோம்.

வீட்டுக்குள்ள, உப்பு தண்ணி நாளும் ஒன்னும் சொல்லாம குடிப்போம்.

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

காஸ்ட்லி சாப்பாடு ஆடார் பண்ணி காச குடுப்போம்

அது கம்மிய இருந்தாலும் முழுசாதிண்ண மாட்டோம்

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

கம்பெனி காசுனா காஸ்ட்லி சரக்கடிப்போம்

கை காசுனா ஓல்டு மாக்குனாலும் யோசிக்க மாட்டோம்.

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

லேப்டாப் இல்லாம நாங்க இருக்க மாட்டோம்

ஆனா, படம் பாக்கறத தவிர வேற எதுக்கும் பயன்படுத்த மாட்டோம்

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

டேட்டா கார்டு இல்லாம ட்ராவல் பண்ண மாட்டோம்

ட்ரெயின்ல போனாலும்சீன் போட மறக்க மாட்டோம்

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

அடிக்கடி ஹைஜீனிக்கபத்தி பேசுவோம்

அதேபோல சரக்கடிச்சிட்டு ­ சாக்கடையிலும் கெடப்போம்

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

மூச்ச போட்டு மீட்டிங்க்ல பேசுவோம்

அது முடுஞ்சதுமே மொக்கேன்னு சொல்லிக்குவோம்

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

ஆண் சைட் போயி அடிமையா கெடப்போம்

ஆனா பில்டப்பு மட்டும் பெருசா குடுப்போம்

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

(பெண்களுக்காக சில...)

ஊர்ல இருந்தா, சுடிதார், மருதாணி, மஞ்சள், மல்லிக பூ

ஊற கடந்தா ஜீன்ஸ், டி-ஷர்ட், ஸ்லீவ் லெஸ், லோ நெக்

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

இப்ப facial லும் பல, ஹேர் வாசும் சில

ஆனா பிளாஷ் பேக் போனமீரா சீகக்காய் மட்டும் தான்

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

உப்மா செஞ்சத ஊருக்கே தெரிய பேஸ்புக்குல போடுவோம்

அதையும் மதிச்சு, ஆங்கில அகராதில உள்ள அணைத்து வார்த்தைகளையும் ­ கண்டுபிடிச்சு amazing, fabulous, fantastic னு

பீட்டர குடுப்போம்

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

இதெல்லாம் சொல்றத கூட சுத்த தமிழ்ல சொல்ல மட்டோம்ங்க

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஜீனியர்

ஆம், சொந்த அடையாளங்களை வெள்ளைக்காரனிடம் விற்று விட்டு

போலி வாழ்க்கை வாழும் பொறியாளர்கள்..!

:D :d

  • கருத்துக்கள உறவுகள்

மாடுகளுக்கு வைக்கல் போடுவது நாங்கள்,

அதன் மடிகளில் சுரக்கும் பாலைக் கறப்பது,

நாங்களல்ல!, ஏனெனில்,

நாங்கள் சாப்ட்வேர் என்ஜினியர்கள்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

LKG Girl : புரிஞ்சுகோ.. லவ்வெல்லாம் வேண்டாம்.

LKG Boy : ஏன் இப்படி சொல்கிறாய்? நான் உனக்காக எதுஎதுவோ இழந்துருக்கேன்.

LKG Girl : நான் ஒன்னும் பன்னமுடியாது.

LKG Boy : என் சிலேட்டை வாங்கி எழுதினேயே அது லவ் இல்லயா ?

என் ரப்பர் வாங்கி உன் நோட்டை அழிச்சியே அது லவ் இல்லயா?

எத்தனை நாள் என் வாட்டர் பாடிலில் இருந்து தண்ணி குடிச்ச,

அதுலாம் என்ன? ஏமாத்திட்ட, நீயும் மத்தபொண்னுங்க

போலதானா?

LKG Girl : எனக்கு உன்ன பிடிக்கும் ஆனால் அது லவ் இல்ல .. புரிஞ்சுகோ !

LKG Boy : தெரியும்டீ உங்களபத்தி ..... மச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லேன் ! :D

Guy 1: Machan Naan romba upset ah irukaen da

Guy 2: Yaen da veetla edhuna problema???

Guy 1: Illa da nethu slate vaanga spencer poirundhan… anga oru sema figure, sumar ondra vayasu irkum avanga amma madila paduthu vaila virala vachutu enna paathu oru look vituchey paaru… iyyoooooooo…….

Guy 2: appram enna aachu???

Guy 1: Appram enna… enga appan adha paathutu poramaila en thalaila narukunu oru kottu vachan, kovathula rendu naala na cerelac kuda sapduradhu illa….

Guy 2: Indha appangalae ippadithanda poramaila alaivanga… nee dont worry machan nalaiku andha ponna thottiloda thukrom!!!

 

LKG Boy1 :

Mapla yenga appa bayanthankolliya irukkaruda.

LKG Boy2 :

Yeppadida Sollura?

LKG Boy1 :

Yeppa road cross pannunalum yen kaiya irukkama pidichikurar

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா... சூப்பர்...:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.

அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

கதையின் நீதி - இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்…. அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட… இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு.

சரி, தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுவோம்.

தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள் இருப்பதாக காமசூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. எப்படி? நாமும் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்…

* பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.

* விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்

* ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்

* பிற ஆணுக்காகத் தூது செல்பவன்

* அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்

* உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்

* அதிகத் துணிச்சல் உள்ளவன்

* ஒன்றக வளர்ந்தவன்…

* காம சாஸ்திரம் நன்கு கற்றவன்

* அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்….

* இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்

* மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்…

* புதுமாப்பிள்ளை

* முதலாளியாக இருப்பவன்

* தாராள மனப்பான்மை உள்ளவன்

* ரகசியத்தை அறிந்தவன்

* அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்

* பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்….

நன்றி:இளஞன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?'

'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.

உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!

அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.

அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. இன்றும் அந்தப் பெரியவர் இருக்கிறார். அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!

இன்றைக்கு ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா... அல்லது இதையெல்லாம் அனுமதிக்கும் பெரிய மனசுதான் யாருக்காவது வருமா?

மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!

அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!

'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.

பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார். அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு, எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்

பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு.. எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு.. சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு

கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு..

இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு

மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடுன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!

:(:D

எங்கே நம்ம சர்தாஜி பாங்கிரப்டா என்னு நெனைச்சேன்.

LGK பெட்டை பெடிகளின் ஜொலிப்பு கூட சர்தாஜிக்கு இல்லாமை போயிட்டே என்னு வருத்தப்பட்டேன். அவர் எல்லாவற்றை சேர்த்துவைச்சு ஒண்ணா அடிச்சிட்டாரு. :lol:

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு பையன்கள், ஒரு ஏரி ஓரமாகப் போய் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், பணக்கார வீட்டுப் பிள்ளை. மற்றவன் ஏழைச் சிறுவன். ஏரியோரத்தில், ஒரு ஜோடி செருப்புகள் இருப்பதை, இருவரும் பார்த்தனர். தூரத்தில், ஒரு விவசாயி, கை, கால் அலம்பிக் கொண்டிருப்பதையும் பார்த்தனர். உடனே, இருவரும் ஒரு வேடிக்கை செய்யத் தீர்மானித்தனர். பணக்கார பையன் சொன்னான்... "இந்தச் செருப்பை வீசியெறிந்து விடுவோம். விவசாயி வந்து பார்த்து, அங்குமிங்கும் ஓடித் தேடுவான். மிரள மிரள விழிப்பான். நமக்கு நல்ல வேடிக்கையாக இருக்கும்...' இப்படி சொல்லி, செருப்பைத் தூக்கி எறியப் போனான். ஏழை பையன் தடுத்து, "அப்பா... உனக்கு இப்படி ஒரு செருப்பு தொலைந்தால், உடனேயே வேறு செருப்பு வாங்க சக்தியுண்டு. அவனுக்கு இந்த செருப்பு தொலைந்து விட்டால், அவன் ஆயுட்காலம் முழுவதும் வெறும் காலில்தான் நடக்க வேண்டும். இதல்ல வேடிக்கை. நான் சொல்கிறேன் பாரு! முதலாவது செருப்பைக் கீழே வைத்தாயா? உன் ஜேப்பிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அதன் மேலே வை. நாமிருவரும் அந்த மரத்தில் ஒளிந்து கொள்வோம். பார், என்ன வேடிக்கை நடக்கிறதென்று...' என்றான்.

இருவரும் ஒளிந்து கொள்ள, விவசாயி வந்து செருப்பை மாட்டிக் கொள்ளப் போக, அதிலே ஒரு ரூபாய் இருப்பதைப் பார்த்தான். எப்படி ரூபாய் வந்ததென்று திகைத்து, சுற்று முற்றும் பார்த்து, ஒருவரையும் காணாதபடியால், ஆண்டவன் தான் கொடுத்தான் என்று பணத்தைக் கண்ணில் ஒத்திக் கொண்டு, கூப்பிய கரங்களுடன், "ஆண்டவனே, ஏழைக்கு இரங்கும் கருணாமூர்த்தி...' என்றான்.

ஏழைப் பையன், பணக்காரப் பையனை ஒரு இடி இடித்து, "பார்த்தாயா? உன்னைக் கருணாமூர்த்தி என் கிறான். நீ செருப்பைத் தூக்கி எறிந்திருந்தால் அவன் என்ன பாடுபட்டிருப்பான். இப்போ பாரு... அவனுக்கும் சந்தோஷம்; நமக்கும் ஆனந்தம். இப்படித்தான் வேடிக்கை செய்ய வேண்டும்...' என்று சொல்ல சிரித்துக் கொண்டே போயினர்.

— 1949ல் என்.எஸ்.கிருஷ்ணன் பேசிய வானொலி உரையிலிருந்து...

பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், எம்.எஸ்.சுப்புலட்சுமி வீட்டிற்கு அடிக்கடி சென்று, சிறிது நேரம் பேசிவிட்டு வருவது வழக்கம். அப்போது, எம்.எஸ்.சுப்புலட்சுமியை "குஞ்சம்மா' என்றே அழைப்பார் பி.பி.ஸ்ரீனிவாஸ். அதுபோன்று எம்.எஸ்.சுப்புலட்சுமியும் இவரை, "சீனு' என்று அழைப்பார். பி.பி.ஸ்ரீனிவாஸ் தன் வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம், அவரிடம், காலங்களில் அவள் வசந்தம்... என்ற பாடலைப் பாடச் சொல்லிக் கேட்பார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அவரும் மெய்மறந்து பாடுவார். அதை ரசித்தபடியே

எம்.எஸ்.,சும் அவருடன் சேர்ந்து பாடி மகிழ்வார். "எத்தனை அழகாய் இந்தப் பாட்டை பாடியிருக்கீங்க... இதைக் கேட்கும் பொழுது என் மனதில் மகிழ்ச்சி கூடுகிறது...' என்று பி.பி.ஸ்ரீனிவாசை மனதார பாராட்டுவார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

—"நீங்காத நினைவுகள்' நூலிலிருந்து...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பர ரகசியம்!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்

மானுடராக்கை வடிவு சிதம்பரம்

மானுடராக்கை வடிவு சதாசிவம்

மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது அழுகுரல் ஒன்று கேட்டது...

உற்று கவனித்தேன். தட்டிற்கு வெளியே இரண்டு சோற்றுப் பருக்கைகள் இறைந்து கிடந்தன. அவைதாம் அழுதுகொண்டிருந்தன. "எதுக்கு இப்படி அழறீங்க" என்று கேட்டேன்.

அதில் ஒன்று கண்ணீரோடு தன் கதையைச் சொன்னது.

"ஒரு ஏழை விவசாயி... கடனை உடனை வாங்கி விதை நெல் போட்டு, வயலை உழுது, நாற்று நட்டு, களை பறித்து, பயிர் செய்து, நீர் பாய்ச்சி ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர வைத்தார். நாங்களும் நல்லா வளர்ந்தோம்.

என்னோட சகோதர மணிகளில் சிலரை எலிகள் நாசம் செய்தன. பறவைகள் கொத்தித் தின்றன. தப்பிப் பிழைத்த நாங்கள் அறுவடைக்குத் தயாரானோம். அறுத்து, களத்துக்கு கொண்டு வந்து, தூற்றி அதிலும் வீணாகிப்போன சகோதரமணிகள் தவிர்த்து பெரிய பெரிய பைகளில் எங்களை அடைத்து வைத்தார்கள். அப்புறம் நெல் மணிகளிலிருந்து உமி நீக்கி எங்களை அரிசியாக்கும்போது காணாமல் போன சகோதரமணிகள் நிறைய பேர்.

விற்பனைக்கு கடையில் வைத்திருக்கும்போது மூட்டைகளில் விழுந்த ஓட்டைகளில் சிலரும்.... எடை போட்ட போது கொஞ்சம் பேரும் வீட்டுக்கு நீங்கள் வாங்கி வந்தபோது, அரிசி களைந்து சமைக்கும்போது என்று எல்லாவற்றிலும் தப்பிப் பிழைத்து உங்களுக்கு உணவாகி உங்கள் தட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

இத்தனைபேர் உழைப்பில் விளைந்த என்னை.... பல இடர்ப்பாடுகளை கடந்து வந்த என்னை.... இப்படி வீணாக்கினால் அழாமல் என்ன செய்ய?" என்றது.

உணவை வீணாக்காதீர்கள்; உழைப்பையும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரயில் டிக்கெட்டை தொலைத்து விட்டுத் தேடினார் சர்தார்ஜி.

“பரவால்லை… நான் உங்களை நம்பறேன். நீங்க டிக்கெட் வாங்கியிருப்பீங்கனு தெரியுது” என்றார் டிக்கெட் பரிசோதகர்.

“அது இருக்கட்டும். டிக்கெட் இல்லைனா நான் இறங்க வேண்டிய இடம் எப்படித் தெரியும்?” என்றார் சர்தார்ஜி.

-------------------------------------------------------

பரிட்சை எழுதிய மாணவன், பதில் பேப்பருடன், 100 ரூபாய் நோட்டை இணைத்து, “ஒரு மார்க்குக்கு ஒரு ரூபாய்” என குறிப்பும் எழுதி அனுப்பினான்.

தேர்வுத் தாளைத் திருத்தியவரோ ஒரு சர்தார்ஜி.

பேப்பரைத் திருத்தியதும், அவர் 81 ரூபாயை அத்துடனேயே இணைத்து, இப்படி எழுதி அனுப்பினார்.

“நீ 19 மார்க் வாங்கியிருக்கே… மீதி சில்லறையை பத்திரமா வச்சுக்கோ…”

----------------------------------------

தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த அந்த வீட்டில் 25 பேர் மாட்டிக் கொள்ள, திடீரென உள்ளே நுழைந்து 6 பேரைக் காப்பாற்றினார் அந்த சர்தார்ஜி. ஆனாலும் அவரைப் பிடித்து ஜெயிலில் அடைத்தது போலீஸ். ஏனாம்?

பின்னே, அவர் வெளியே இழுத்துக் காப்பாற்றிய அந்த 6 பேரும் தீயணைப்பு வீரர்களாச்சே!

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக மணமான் கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவருடைய அலமாரியை திறந்து பார்ப்பதில்லை என்று.

30 ஆண்டுகள் உருண்டோடின..

ஒருநாள் மனைவி தன்னுடைய அலமாரியை சுத்தம் செய்யும் போது ஒரு மூலையில் 3 புளியங்கொட்டைகளும், சில்லறையாக 500 ரூபாய்க்கு நோட்டுகளும் இருந்தன.

ஆச்சர்யம் அடைந்த மனைவி தன் கணவனிடம் இது குறித்து கேட்டாள். கணவன் சொன்னான்..

" அன்பே என்னை மன்னித்துவிடு.. ஒவ்வொருமுறை திருட்டுத்தனமாக உன் அலமாரியைத் திறக்கும்போதும் ஒரு புளியங்கொட்டையை போட்டு வைப்பேன்.."

" பரவாயில்லை உயிரே..! 30 வருடங்களில் மூன்றே மூன்று புளியங்கொட்டைகள் தானே.. அது என்ன பத்தும் ஐம்பதுமாக ரூபாய் நோட்டுகள்..?"

" புளியங்கொட்டைகள் சேர சேர கடையில் விற்று காசாக்கிவிடுவேன் கண்ணே..!"

:D :d

ஒரு நடிகை..

18 வயசுக்காரியா இருந்தா கால் பந்து மாதிரி.. 22 பய தொரத்திக்கிட்டு திரிவான்..

24 வயசாயிட்டா... கூடை பந்து மாதிரி... 10 பய இழுத்துக்கிட்டு திரிவான்..

30 வயசாயிட்டா.. கோல்ஃப் பந்து மாதிரி.. ஒரே ஒரு ஆள்தான் வச்சு விளையாடிட்டு இருப்பாரு..

35 வயசுக்கு மேலே ஆயிடுச்சுன்னு வச்சுக்கங்க... டென்னிஸ் பந்து மாதிரி.. இவன் அவன்கிட்டே தள்ளி விடுவான்.. அவன் இவன்கிட்டே அடிச்சு விரட்டுவான்..!!

:( :( :(:D

ஆசிரியர்: மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கண்வன் வாசுதேவனை சிறையில் அடைத்தான். முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது குழந்தையை...

மாணவன்: சார் ஒரு சந்தேகம்..

ஆசிரியர்:என்ன சந்தேகம்?

மாணவன்: 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....?

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பந்துகள், சந்தைக்கு வரவே, ஒரு முப்பது ஆகும்! :o

 

பிறகு, அதுகளை எறிஞ்சு, பிடிச்சு விளையாடுது கஸ்டம்!

 

வேணுமெண்டா, உருட்டி விளையாடலாம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பந்துகள், சந்தைக்கு வரவே, ஒரு முப்பது ஆகும்! :o

 

பிறகு, அதுகளை எறிஞ்சு, பிடிச்சு விளையாடுது கஸ்டம்!

 

வேணுமெண்டா, உருட்டி விளையாடலாம்! :D

 

உங்கள் தரவளியளுக்கு உருட்டி விளையாடுவதுதான் சரி. :D :D

 

 

ஆசிரியர்: மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கண்வன் வாசுதேவனை சிறையில் அடைத்தான். முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது குழந்தையை...

மாணவன்: சார் ஒரு சந்தேகம்..

ஆசிரியர்:என்ன சந்தேகம்?

மாணவன்: 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....?

பெடியன் பாரதம் முழுவதயும் கேட்டுவிட்டு கேள்வி கேட்க வேண்டும். அவசரப்படுகிறான். ஒன்றாக அடைத்தால் என்ன தனிய தனிய அடைத்தால் என்ன. குந்தியின் பாகம் வரும் வரையாவது பொறுமை காட்டியிருக்கலாம்.  குந்திகெல்லாம் வெய்யில் பட்டால், காத்து பட்டால் கூடப் பிரச்சனை. அந்த நிலைமையிலை இரண்டு அறையை வீணாக்காமல் கம்சன் செய்தது சரியே.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தேவகிக்கு எட்டுக்குழந்தைகள் பிறக்கும், என்ற சாபம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது!

 

எல்லாம், அதற்குரிய காலமொன்று வரும் வரை, காத்திருக்கும்!

 

தேவகி அவசரப்படவில்லை! அவளுக்கு இரட்டைப்பிள்ளை, அல்லது மூன்றாகப் பெறத்தெரியாமலும் இல்லை!

 

ஆனால், கம்சன், நினைத்தது போலவே, கரப்பானுக்குள்ளேயே கோழிக்குஞ்சை அமத்திவிடலாம், என்ற மாஸ்டர் பிளான் தான் பிழைச்சுப் போச்சுது! :icon_idea:

 

வாசுதேவன், சுண்டலைப் போல, எப்பவுமே 'ஒரு அடி' முன்னாலாலேயே நடந்து கொண்டிருந்ததால், கம்சன் சறுக்கி விட்டான்! :D

 

 

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.