Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இளையோர் அமைப்புக்களை என்னத்துக்கோ தொடங்கி விட இப்போ எல்லாம் அழகு ராணி போட்டி நடத்துவதிலும் ஆடல் போட்டி நடத்துவதிலும் பிஸியா இருக்காங்க... ......

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக கடுமையான பொருளாதாரத்தடை இருந்தது தான், நாளைக்கு உயிர் வாழ்வோம் என்ற உறுதி இல்லாத வாழ்க்கை இருந்தது தான், நாளாந்தம் குண்டு வீச்சும் ஷெல் வீச்சும் இருந்தது தான் ஆனால் இவற்றை எலாம் தான்டி தனித் தமிழ் ஈழ அரசாங்கத்தின் கீழ் சில வருடங்களாவது இருந்த பெருமை கர்வம் எனக்கு நிறையவே உண்டு.....யாழ் குடா புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது நான் அனுபவித்த சுதந்திர காற்றை அந்த நிம்மதியான வாழ்வை சந்தோஷமான தருணங்களை பூமியின் எந்த பகுதிக்கு போனாலும் எந்த பணக்கார நாட்டிற்கு போனாலும் அனுபவிக்க போவதில்லை...... எனது மொழி பேசி எனது மக்களோடு வாழ்ந்து எனது மண்ணில் இருந்த சுதந்திரமான வாழ்க்கை அனுபவித்த கடைசி தலைமுறையும் நாமாக தான் இருப்போம்..... நினைவுகளை மீட்ட சுபேஷ்க்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

News:

மு.க.அழகிரியைச் சந்தித்தார் வைகோ. மதுரை வீட்டில் சந்திப்பு.. ஆதரவு கோரினார்

இப்பொழுது தான் வைக்கோ உண்மையான அரசியல் செய்ய தொடங்கி இருகின்றார் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை

ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

#பாட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இறுதி நேரத்தில் ஜெனிவா செல்லவே திட்டமிட்டிருந்தார்.

அவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் அவரது பயணம் அவசியமில்லை என்று உணரப்பட்டதால், அந்தப் பயணத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுண்டல்: அவருடைய பயணம் அவசியம் இல்லையா? இல்லை சம்மந்தரே இனி அவசியம் இல்லையா......

தலை பம்முது எண்டா யாரோ மிரட்டி இருக்காங்க.... அநேகமா...மகி மாமாவா தான் இருக்கும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகளும் துரோகங்களும் நிலைப்பதில்லை....,,,,,,,

வைக்கோ தி மு க வை விட்டு வெளியேறிய பொழுது அவருடன் மிக முக்கியமாக வெளியேறியவர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் கணேஷன் ஆகியோர்.......

வைக்கோ அவர்கள் தன்னுடன் கூட வந்த இவர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கி மத்திய அமைச்சர்களாகவும் ஆக்கினார்....வாஜ்பாயி ஆட்சியில் கண்ணப்பன் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்த பொழுதும் வைக்கோ அவர்கள் அவரை பெரிதும் நம்பினார்.... காரணம் தன்னை நம்பி வந்த மூத்த தலைவர் என்று............

அப்பொழுது தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தவர் கருணாநிதி...... எப்பிடியாவது ம தி மு க வை உடைக்க வேண்டும் என்று நினைத்தவர் செஞ்சியாருக்கும் கண்ணபனுக்கும் கணேசனுக்கும் பல ஆசை வார்த்தைகள் கூறி தி மு க பக்கம் இழுத்தார்..... இந்தா வைக்கோ காலி என்றவர்களுக்கு வைக்கோவின் பதில் வெறும் மௌனம் மற்றும் பொறுமை.....ம தி மு கவில் செல்வாக்கோடு இருந்த இந்த மூவரும் இப்பொழுது தி மு க வில் முகவரி அற்ற மனிதர்களாக இவர்கள்.....

பல ஆண்டுகள் காட்சிகள் மாறுகின்றன இப்பொழுது எந்த கருணாநிதி அந்த கட்சியை உடைத்தரோ ..... அவரின் மகனை வைத்தே பொறுமையாக இருந்த வைக்கோ தி மு க வை தென்மாவட்டங்களில் தோற்கடிக்கும் முயற்சியில்.....

இதை விட கருணாநிதிக்கு வேற என்ன மன உளைச்சல் வேண்டும்

சரியான அனுமானங்கள் ஆய்வாளர் சுண்டல் அவர்களே.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்பவுமே இந்த ஜெனீவா மாநாடு என்பது ஒரு திரைப்படம் மாதிரி விறுவுருப்பாக தமிழர்களை எல்லாம் சீட் நுனி வரை கொண்டு சென்று கடைசி கிளைமாக்ஸ் இல் கைய விட்டிடும்.....

உங்கட பதிவைப் பார்த்துச் சிரித்தேன் பலமுறை.

  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகளும் துரோகங்களும் நிலைப்பதில்லை....,,,,,,,

வைக்கோ தி மு க வை விட்டு வெளியேறிய பொழுது அவருடன் மிக முக்கியமாக வெளியேறியவர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் கணேஷன் ஆகியோர்.......

வைக்கோ அவர்கள் தன்னுடன் கூட வந்த இவர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கி மத்திய அமைச்சர்களாகவும் ஆக்கினார்....வாஜ்பாயி ஆட்சியில் கண்ணப்பன் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்த பொழுதும் வைக்கோ அவர்கள் அவரை பெரிதும் நம்பினார்.... காரணம் தன்னை நம்பி வந்த மூத்த தலைவர் என்று............

அப்பொழுது தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தவர் கருணாநிதி...... எப்பிடியாவது ம தி மு க வை உடைக்க வேண்டும் என்று நினைத்தவர் செஞ்சியாருக்கும் கண்ணபனுக்கும் கணேசனுக்கும் பல ஆசை வார்த்தைகள் கூறி தி மு க பக்கம் இழுத்தார்..... இந்தா வைக்கோ காலி என்றவர்களுக்கு வைக்கோவின் பதில் வெறும் மௌனம் மற்றும் பொறுமை.....ம தி மு கவில் செல்வாக்கோடு இருந்த இந்த மூவரும் இப்பொழுது தி மு க வில் முகவரி அற்ற மனிதர்களாக இவர்கள்.....

பல ஆண்டுகள் காட்சிகள் மாறுகின்றன இப்பொழுது எந்த கருணாநிதி அந்த கட்சியை உடைத்தரோ ..... அவரின் மகனை வைத்தே பொறுமையாக இருந்த வைக்கோ தி மு க வை தென்மாவட்டங்களில் தோற்கடிக்கும் முயற்சியில்.....

இதை விட கருணாநிதிக்கு வேற என்ன மன உளைச்சல் வேண்டும்

எனக்கு இன்னும் நம்பிக்கையில்லை. கருணா ,ஸ்டாலின் , அழகிரி  எல்லாம் சேர்ந்து பழைய தொழிலைத் தொடங்கியிருப்பார்கள். அதுதான் நாடகம் போடுவது.

வை . கோவும் ஏற்கனவே இரண்டு கட்சியிலயும் செமையாய் ஏமாத்துப் பட்டவர். மீன்டும் விட்டில் பூச்சி போல் சூரியனை நோக்கிப்  பறக்கின்றார்.

இரு பொல்லாத நரிகள் , ஜே.ஆர், கருணா ² ...!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் அண்ணா நானும் நினைக்கிறன் கருணாநிதியின் கண் அசைவின் படி தான் எல்லாம் நடக்குது எண்டு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிமைப் பெண் படத்தின் படப்பிடிப்பு, 1968ல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடந்தது. அப்போது ராஜஸ்தான் முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா (பின்னாளில் இவர் தமிழ்நாடு கவர்னராகவும் இருந்தார்) எம்.ஜி.,ஆரையும், ஜானகி அம்மாளையும் அழைத்து, விருந்து கொடுத்தார். விருந்து முடிந்து கிளம்பிய எம்.ஜி.ஆர்., கையில், சிறிய பெட்டி ஒன்றை கொடுத்தார் சுகாதியா.

'இது என்ன பரிசு?' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்., 'திறந்து பாருங்கள், தெரியும்...' என, சுகாதியா சொல்லவும், பெட்டியைத் திறந்து பார்த்த எம்.ஜி.ஆர்., அதனுள் இருந்த, 'புஷ் குல்லா'வைக் கண்டதும், ஆச்சரியப்பட்டார். அதை சுகாதியா கையில் கொடுத்து, 'நீங்களே என் தலையில் அணிவித்து விடுங்கள்...' என்றார்.

எம்.ஜி.ஆர்., தலையில் தொப்பியை அணிவித்த சுகாதியா, 'இப்போது நீங்கள் முன்பை விட அழகாக இருக்கிறீர்கள்...' என்றார். அருகில் இருந்த ஜானகி அம்மாளும் அதை ஆமோதித்தார். பின், தொப்பி அணிந்து, பல கோணங்களில் தன்னை படம் எடுத்துப் பார்த்த எம்.ஜி.ஆர்., தொப்பி அணிவதை, வழக்கமாக்கிக் கொண்டார்.

- 'நம்மோடு வாழும் எம்.ஜி.ஆர்.,' நூலிலிருந்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா சிங்கம்னா சீறனும் ........சிறுத்தைனா பாயணும் ........சுண்டல்னா கடலை போடணும்........ஹா ஹா ஹா.....அப்போ நான் வர்ட்டா.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவின் நடவடிக்கைகளை நம்பி பயன் இல்லை என்பதால் இப்பொழுது மலேசிய விமானத்தை தேடும் பொறுப்பை எங்கள் சூப்பர் ஹீரோ ஆஸ்திரேலியா பொறுப்பெடுத்து இருக்கு.......ஆஸ்திரேலியாவின் வழி காட்டுதலின் கீழ் சீனா,ஜப்பான், அமெரிக்கா மற்றும் நாடுகள் இந்த தேடுதலில் ஈடுபட்டுக்கொண்டு .இருகின்றன........காணமல் போன மலேசிய விமானத்தில் எடுத்து செல்லப்பட்ட சரக்குகளின் பட்டியலை தருமாறு ஆஸ்திரேலியா கேட்டதற்கு மலேசியா மறுத்து விட்டது.....என்னத்தையோ மறைக்க மலேசியா முயல்வது தெரிகிறது.......

“There is no reason you wouldn’t have given it to AMSA (the Australian Maritime Safety Authority) on the first day of the search.”

AMSA has requested a cargo manifest for Flight M370 from Malaysia Airlines.

The manifest is expected to give the search operation a better idea in identifying objects they spot in the Indian Ocean if they indeed came from the missing plane.

However, the Malaysian authorities to date have refused to release it, insisting the document is with the police who are conducting their own investigation into the cause of the plane’s disappearance.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவுக்கு அடுத்து அந்தப் பொறுப்பை விஜயகாந்த் எடுத்துக்கொள்வார் என்பது சற்று ஆறுதல்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாடுகள் எத்தனை வளங்கள் அனைவருக்கும் போக்கு காட்டிடது மலேசிய விமானம்..... ஒரு கட்டத்தில் சலித்து போன மலேசியா கூட இந்து சமுத்திர பிராந்தியத்தில் தேடும் பொறுப்பை ஆஸ்திரேலியா விடம் ஒப்படைத்தது.....வழமை போல் எந்த பொறுப்பை எடுத்தாலும் திறம்படவும் வேகமாகவும் விவேகமாகவும் செய்து முடிக்கும் ஆஸ்திரேலியா இதில் காட்டியதும் வேகம் வேகம் ஒன்றே காரணம் யாரவது உயிருடன் தப்பி இருந்தால் அவர்களை மீட்க..... canberra தலை நகரத்தில் இருக்கும் AMSA அதிகாரிகள் இரவுபகலாக தங்கள் தேடுதலை தொடர்ந்த பொழுது அவர்களுக்கு வெளிச்சம் தந்தது அவர்களுடைய சட்டலைட் அனுப்பிய ஒரு படம்..... அந்த படத்தை அடிப்படையாக வைத்து ஆஸ்திரேலியாவின் விமானப்படை மற்றும் கடல்ப்படை ஆகியன முடுக்கி விடப்பட்டன.... பெர்த் பகுதியில் இருந்து சும்மார் 2300 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மிக கடினமான இலக்கு அது எனினும் ஒப்படைத்ததை வேலையை தங்கள் உயிரை கொடுத்தாவது முடித்து காட்டுகின்றோம் என்று பறந்தன விமானப்படை விமானங்கள்...... இப்பொழுது விமானம் விழுந்த இடம் அது தான் என்று உறுதிபடுதப்படிருக்கு......எந்தனை நாடுகள் முயன்றும் முடியாததை சாதித்து காட்டிய ஆஸ்திரேலியாவே

We r very proud of you

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தா, எனக்கு இறக்கை முளைச்சிடுச்சு!  :lol:

Bald_Eagle_Bird_38.jpg?m=1347514648

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, “ நீ உண்மையில் ஒரு பேராசிரியரா”? என்று கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HAHAHA சூப்பர்.......

  • கருத்துக்கள உறவுகள்

history-of-coca-cola.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் சைக்கிள் டைனமோ சுத்தி பாட்டு கேட்ட படம் பாத்த கடைசி தலைமுறை நாங்க தான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்: விருதுநகரில் - ஏப்ரல் 1ம் தேதி வைகோ மனுத்தாக்கல்!

சுண்டல்: அப்போ தான் வெற்றி பெற மாட்டேன்னு தெரிஞ்சு போச்சா? முட்டாள்கள் தினத்தினத்தில் மனு தாக்கல் செய்யிறாரு......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை ஸ்டான்லின் அவர்களுடைய பிரச்சாரம் கடந்த காலங்களை விட நல்லா இருக்கு தேறிவிடுவார் போல தான் இருக்கு...

உதாரணம்

"ஆகாயத்தில் பறக்கும் அம்மா!... சொல்வதெல்லாம் சும்மா"

என்றெல்லாம் ஜெயலலிதாவை தாக்கி மிகவும் சிறப்பாக அந்த அந்த டைமிங்கோடு அம்மாவை போட்டு தாக்குவது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூப்பிட்டாக.. பாஜக ராஜா வந்து சந்திச்சாக.. மதிமுக அழகு சுந்தரம் வந்து போனாக.. காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் வரப் போராக.. என்று அழகிரியை நாடி வரும் பக்தர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இப்பொழுது அழகிரியை முற்று முழுதாக கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து இருகின்றது தி மு க தலைமை..... அழகிரியிடம் சில முரட்டு பக்தர்கள் இருப்பது உண்மை தான் ஆனால் இவைகள் எல்லாவறையும் பார்த்து வளர்ந்தது தி மு க MGR பிரிந்த பொழுது கட்சியே அழிந்து விட்டது என்றார்கள் நின்று MGR க்கு எதிரா அரசியல் புரிந்த கட்சி பிறகு வைகோ பிரிந்த பொழுது இந்தா தி மு க இனி தமிழகத்தில் எழ முடியாது என்றார்கள் மீண்டும் ஆட்சி கட்டில் ஏறியது இப்பொழுது அழகிரி பூச்சாண்டி காட்டி வருகின்றார் வெறும் சலசலப்பை ஏற்படுத்தாமே தவிர அவரால் சில வாக்குகள் பிரியலாமே ஒழிய.... ஒரே தலைமை தான் தி மு கவிற்கு இருக்க முடியும் அதுவும் ஸ்டான்லின் என்ற கருணாநிதியின் முடிவு வரவேற்க கூடியது....அரசியலில் பழம் தின்று கொட்டையும் போட்டவர் அல்லவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா விமானம் போல மேல் எழும்பி திடீர்னு கீழ விழாம இருக்கணும் எண்டு விஜையகாந்த் சொல்ல குலுங்கி குலுங்கி சிரிக்குறாரோ வைக்கோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூயார்க்கில் மாநகரில், ஒரு சர்தார்ஜியும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.

அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.

அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து சர்தார்ஜியிடம் காட்டி,

"நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?" என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல், "உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?" என்று சவால் வேறு விட்டார் சர்தார்ஜியிடம்.

விடுவாரா நம்ம சர்தார்ஜி... "உள்ள வா... உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு", சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

விற்பனை கவுன்டரில் இருந்தவரிடம் சென்ற சர்தார்ஜி, அவனிடம் கேட்டார், ஒரு மேகிக் காட்டுறேன் பார்க்கிறியா?..

கடைக்காரரும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3 வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த கடைக்காரரை ஏறிட்டுப் பார்த்தார்.

கவுன்டரில் இருந்தவர், " எல்லாம் சரி. இதில் மேஜிக் எங்கே இருக்கிறது?."

சர்தார்ஜி அமைதியாக பதில் அளித்தார், " என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு... நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்...'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.