Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழர்கள் என்ன செஞ்சு கிழிச்சவை என்று கேட்டவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் இலங்கை அரசு வெளியிட்ட 400 பேருக்கும் மேற்ப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் பெயர்ப்பட்டியல் சமர்ப்பணம்

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழர்கள் என்ன செஞ்சு கிழிச்சவை என்று கேட்டவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் இலங்கை அரசு வெளியிட்ட 400 பேருக்கும் மேற்ப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் பெயர்ப்பட்டியல் சமர்ப்பணம்

 

உண்மைதான்  சுண்டல

400 பேருக்கு மேற்பட்ட குட்டிப்பிரபாகரன்களை  புலிகள் உருவாக்கி  வைத்திருப்பதாக சிறீலங்காவே  சொல்லுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா கொடுக்கிற ஆடு மாடு குட்டி போடும் பட் கருணாநிதி தந்த டிவி குட்டி போடுமா?

கேக்குறது நான் இல்லைங்க நடிகர் ராமராஜன் ....

என்ன ஒரு அறிவு பூர்வமான கேள்வி?

ஹல்லலூஜா கோஷ்டியோடு போய் சேரும் போதே நினைச்சன் இனி இப்பிடி தான் பேசுவாருன்னு...... தொடங்கிட்டாரு.....

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா கொடுக்கிற ஆடு மாடு குட்டி போடும் பட் கருணாநிதி தந்த டிவி குட்டி போடுமா?

கேக்குறது நான் இல்லைங்க நடிகர் ராமராஜன் ....

என்ன ஒரு அறிவு பூர்வமான கேள்வி?

ஹல்லலூஜா கோஷ்டியோடு போய் சேரும் போதே நினைச்சன் இனி இப்பிடி தான் பேசுவாருன்னு...... தொடங்கிட்டாரு.....

 

ஹல்லலூஜா கோஷ்டியோடு சேர்ந்தால்

குட்டி போடாமல் 

ஆனால் அதற்கான எல்லாவேலைகளையும் செய்யலாம் என அறிந்து போயிருப்பதால்

அதை வைத்துக்கொண்டு   மேடையில் பேசிய  பழக்கம் தவறி இங்கும் வந்துவிட்டது... :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் செயல்ப்பாட்டாளர்களின் பெயர் விபரங்களை இலங்கை அரசு வெளியிட்டுருப்பதை தமிழர் தரப்பு பெரிதாக எடுக்க தேவை இல்லை.....

இலங்கை அரசுக்கு இந்த அமைப்புகளால் கடும் சர்வதேச அழுத்தம் ஏற்ப்பட தொடங்கி இருப்பது பெரும் தலைவலியாக இருக்கின்றது..... ஆகவே இந்த தமிழ் அமைப்புகளை ஒரு வித அச்ச நிலைக்குள் வைத்திருக்கும் அதே நேரம் அவர்களுடை

நேரத்தை

காலத்தை

பணத்தை

சட்ட நடவடிக்கைளின் ஊடாக செலவழிக்க பண்ணி அவர்களுடைய செயல்ப்பாடுகளில் ஒரு தேக்க நிலையை உண்டு பண்ண முயற்சிக்கின்றது.......

ஆகவே இதுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் தங்கள் நேரத்தையும் காலத்தையும் பெரும் தொகை பணத்தையும் செலவு செய்யாமல் தொடர்ந்து சர்வதேச ரீதியில் தமிழர் தரப்புக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வரை ஔயாது செய்து வந்த பணிகளை அந்தந்த நாடுகளில் செய்யவேண்டும்..... சர்வதேசம் ஊடாக ஒரு அழுத்தம் கொடுக்க வேண்டும்......

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தாயக தமிழர்களாக இருக்கட்டும் .......

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தாயக தமிழர்களாக இருக்கட்டும் .......

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Australia உறவுகள் உங்கள் நேரத்தை இன்றில் இருந்து ஒரு மணிநேரம் பின்னோக்கி வைக்க தவறாதீர்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

’’ 91 வயதிலும் உழைத்துக்கொண்டிருக்கும் கருணாநிதி என எனக்கு முன்பு பேசிய ஒருவர் குறிப்பிட்டார். என் துணைவியார் அருகில் இருக்கும்போது எனக்கு 91 வயது என்று சொல்வது மிகவும் கூச்சமாக உள்ளது- சற்று முன் கலைஞர் கோவை கூட்டத்தில்.

40 வயதில் முதுமையை ஏற்றுக்கொள்ளும் எவ்வளவோ இந்திய தாத்தாக்கள் சிந்திக்க வேண்டிய கருத்து..

Thanks manush

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பையன் அப்பாவிடம் கேட்டான்.'' அப்பா...அரசியல் என்றால் என்ன...?''

அப்பா யோசித்துவிட்டுச் சொன்னார்.

''நல்லது. உனக்கு நான் அதனை இப்படி விளங்கப்படுத்துகிறேன். நமது இந்தக் குடும்பத்தில் அதிகாரமுள்ளவன் நான். ஆகவே நான் அரசாங்கம். எனக்கு ஆலோசனை சொல்பவள் அம்மா. ஆகவே அவள் அமைச்சர். வேலைக்காரி நமது தயவில் வாழ்கிறாள். எனவே அவள் மக்கள். நீ அடிக்கடி கேள்வி கேட்பவன். ஆகவே நீ ஊடகம். உனது சின்னத் தம்பிப் பாப்பாதான் நாட்டின் எதிர்காலம்.''

பையனுக்குக் கொஞ்சம் புரிந்தது, மீதி புரியவில்லை. யோசித்துக் கொண்டே அவன் படுக்கைக்குப் போய் விட்டான்.

சிறிது நேரத்திற்குள் தம்பி அழும் சத்தம் கேட்டது. பையன் எழுந்து சென்று பார்த்தான். தம்பி சிறுநீர் கழித்துவிட்டு, ஈரத்தில் படுக்க முடியாமல் அழுது கொண்டிருந்தான். அவனுக்கு உடை மாற்ற வேண்டும்.

அம்மாவின் அறைக்குள் போனான் சிறுவன். அம்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.

வேலைக்காரியின் அறைக்குள் போகுமுன், சாவித் துவாரத்தால் பார்த்தான். அங்கே வேலைக்காரியை அப்பா அடித்து துன்புறுத்தி கொண்டிருந்தார்.

பையன் பேசாமல் வந்து படுத்துக் கொண்டான்.

காலையில் எழுந்ததும் அப்பாவிடம் சொன்னான்.''அப்பா..அரசியல் என்பதன் அர்த்தம் எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது...!''

''கெட்டிக்காரன்...சரி, சொல் பார்க்கலாம்..'' என்றார் அப்பா.

மகன் சொன்னான்:

''அரசாங்கத்தால் மக்கள் கொடுமைக்குள்ளாகும் போது அமைச்சர்கள் குறட்டை விட்டுத் தூங்குவார்கள். ஊடகங்கள் எதுவும் பேசாமல் மௌனமாகிவிடும். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க யாருமே இருக்க மாட்டார்கள்!''

எந்த நாட்டுக்கு இது பொருந்தும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் வெளிநாட்டில பிறந்து வளர்ந்த தமிழ் பொண்ணுங்க அந்தந்த நாட்டு மொழிகள்ல பீட்டர் விட்டிட்டு திரிஞ்சாளும் வீட்ட போனா அவிங்க அம்மா சமைச்சு வைச்ச சோறு கறிய தான் திங்கணும் .... இல்லைனா பட்டினிதேய்ன்

சோ பொண்ணுங்களா வீட்டுக்கு வெளில வந்த உடன பீட்டர் விடுறத விட்டிட்டு தமிழர்களுடன் தமிழில் பேசுங்க........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்பதும் ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரிப்பதும்.....பணிந்து செல்ல வேண்டிய இடத்தில் பணிந்தும்..... நிமிர்ந்து நிக்க வேண்டிய இடத்தில் நிமிர்ந்தும் நிப்பது தான் ஆரோக்கியமான அரசியல் ஆகும் மாறாக தொட்டதை எல்லாம் எதிர்த்தால் இறுதி வரை எந்த தீர்வுக்கும் வர முடியாது........

அதற்காக ஒட்டு மொத்த இனத்தை அடகு வைத்து காட்டி கொடுப்பு அரசியல் செய்வது அரசியல் ஆகாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று வைகோவிற்கு வயது 70

அரசியலில் எத்தனயோ உச்சங்களை தொட்டிருக்க வேண்டிய மனிதர்...... தன்னுடைய முன் எழும் கோபத்தாலும்...... தமிழ் ஈழ ஆதரவு நிலைப்பாட்டாலும் இழந்தவைகள் அதிகம்......

அரசியலில் அதிஷ்டம் இல்லாத தலைவர் வைக்கோ.....

ஆனால் அரசியலின் அதிசயமும் அவர் தான்......

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வைக்கோ.....

காலம் ஒரு நாள் உன்களை அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உண்டு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வெறும் 20 மில்லியன் சனத்தொகையை கொண்ட ஒரு குட்டி நாடு..... இந்தியாவோடு ஒப்புடுகையில் அதன் மாநிலங்களில் பாதிக்கு பாதி கூட இல்லை ஆனால் இத்துனுன்னு இருந்து கிட்டு இந்த பெண்ணாம் பெரிய இந்தியாவ எல்லா விஷயத்திலையும் போட்டு ஆட்டுது இலங்கை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 ஆம் வகுப்பில் நண்டு ஜியிடம்

வாத்தியார் : டேய்... எந்திரிடா.... மகாகவி பாரதியைப் பத்தி சொல்லுடா...?

நண்டு ஜி : சார்.....

நண்டு ஜி : என்னடா இழுவை..... இப்போ ஒழுங்கா சொல்லல அடி பின்னிருவேன்...சொல்லுடா....

நண்டு ஜி : சார்.....

வாத்தியார் : நீ இப்படி கேட்டால்லாம் சொல்ல மாட்ட.... எங்க அந்த பிரம்பு.......

நண்டு ஜி : சார்.... சொல்லிடுறேன் சார்....

வாத்தியார் : ம்...சொல்லு...

நண்டு ஜி : சார் மகாவும்...கவியும்......8 ங் கிளாஸ் படிக்கிறாங்க சார்... பாரதி 9 ங் கிளாஸ் படிக்கிறா சார்.... 3 பேர்ல பாரதிதான் அழகா இருப்பா சார் .... நான் வேணாம்னுதான் சார் சொன்னேன்...ஆனா அந்தப்புள்ள தான் காதலிக்கிறேன்னு இன்னைக்கி சொல்லுச்சு ....அந்தப்புள்ள எனக்கு சொந்தகார பொண்ணு தான் சார்...அதான் சரின்னு சொல்லிட்டேன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வெறும் 20 மில்லியன் சனத்தொகையை கொண்ட ஒரு குட்டி நாடு..... இந்தியாவோடு ஒப்புடுகையில் அதன் மாநிலங்களில் பாதிக்கு பாதி கூட இல்லை ஆனால் இத்துனுன்னு இருந்து கிட்டு இந்த பெண்ணாம் பெரிய இந்தியாவ எல்லா விஷயத்திலையும் போட்டு ஆட்டுது இலங்கை.....

 

 ஊரில் "நாய்க்கு நல்லது தின்ன தெரியாது" என்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் தனது கவிதை தொகுதியை வெற்றிகரமாக வெளியிட்ட அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய பெரும்புலவர் ஐயா நெர்க்கொலு ( இடுகாட்டான்) அவர்களுக்கு வாழ்த்துக்கள் கனடாவில் வெகு விரைவில் வெளிவர இருக்கும் அவருடைய கவிதைகள் வெளியீட்டு விழா வெற்றியடையவும் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ் : ருவாண்டா இனப்படுகொலையைத் தடுக்காத ஐநாவின் செயல்பாடு வெட்கக்கேடானது: பான் கீ மூன்

சுண்டல் : இத்தனை வருடங்களுக்கு பிறகு இப்போ தான் தெரிஞ்சிருக்கு..... வெட்கக்கேடு எண்டும் தடுக்க முடியவில்லை என்றும்.....

இன்னும் இருபது வருடங்கள் கழித்து அப்பொழுது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இப்பிடி சொல்லுவார்....

முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலையை தடுக்க முடியாத ஐக்கிய நாடுகள் சபையின் செயல்ப்பாடுகள் வெட்க கேடானது என்று......அப்பொழுது இலங்கையில் தமிழினம் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய் இருக்கலாம் .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு இழிவாக வைக்கோவை கேவலப்படுத்தி யாராலும் பேட்டி கொடுக்க முடியாது எதிரிகள் கூட இப்பிடி செய்தது இல்லை ஆனால் நேற்று அரசியலுக்கு வந்த சீமான் இப்பிடி கேவலப்படுத்தி பேட்டி கொடுத்திருப்பது சீமான் மீதான மரியாதை அறவே இல்லாமல் போய்விட்டது

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரை அரங்குக்கு செல்லும் இரண்டு தோழிகளில் ஒருத்தி மற்றொருத்திக்கு சொன்ன பாதுகாப்பு அறிவுரை

தோழி 1 : படம் பார்க்கும் போது உன்னை

யாராவது தொட்டால் உதாரணமாக ,

கையை தொட்டால் கத்தரிக்காய் ,

காலை தொட்டால் முருங்கைக்காய் ,

விரலை தொட்டால் வெண்டைக்காய்

மேனியை தொட்டால் புடலங்காய் என்றும்

சொல்லு . நான் புரிந்து கொண்டு செயல்படுவேன் என்றாள்

தோழி 2 : ஆம் என்று சம்மதித்தாள்

விளக்குகள் அணைந்து படம் தொடங்கிய

சில நிமிடங்களில் ,

சாம்பார் சாம்பார் என்று கத்தினாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ஜி: ஹலோ நண்டு ஜி கவிதை சொல்லி ரொம்ப நாளாச்சு ..... ஒண்டு எடுத்து விடுங்களன்....

நண்டு ஜி: அடப்போடா.... மனுஷர் க்கு நிம்மதியே இல்லை இதுக்குள்ள கவிதையாம் கவிதை ....

சரி எதோ ஆசைப்பட்டு கேட்டுட்டே இந்தா பிடி இது கவிதை எல்லாம் இல்ல நிஜமாவே நடந்தது....

அதிகாலை அரக்கியின் கனவில்

அரக்க பரக்க எழுந்தேன்

வாசல் கதவு தட்டும் சத்தம்

திறந்து பார்த்தேன்

ஊருக்குப் போன என் மனைவி

வாசலில் நின்றிருந்தாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை சன் சிங்கர்ல தமிழ் குட்டிங்கள விட மலையாள குட்டிங்க எல்லாம் அழகா பாடினம் .... இன்னும் ஒரு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழில் பாடுவது அழகா இருக்கு....திறமைகள் எங்கிருந்தாலும் எந்த வடிவில் இருந்தாளும் போற்றப்படவேண்டியதே ......

  • கருத்துக்கள உறவுகள்

08-1396935403-25copy.jpg

 

அரை நூற்றாண்டுக்கு மேல்... ஒரு குழந்தைப் படத்துடன் வரும், பிஸ்கற் விளம்பரம். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னையும், என் தம்பி ஸ்டாலினையும் யாராலும் பிரிக்க முடியாது: அழகிரி திடீர் பல்டி

இவனுங்க காமடி தாங்க முடியலப்பா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாப்பாக்கு ‘விக்கிலீக்ஸ்’னு பேரு வைக்கக் கூடாது... பெற்றோருக்கு தடை விதித்த ஜெர்மன் அரசு

என்ன மாதிரியான ஒரு நாட்டில் வாழுறாங்க இந்த ஜேர்மன் மக்கள் பேரு வைக்க கூட அரசு அனுமதிக்க வேண்டி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அது பாப்பாக்கள் வீட்டு வீக்ஸ் எல்லாம் லீக்ஸ் பண்ணிடுவாங்கள்  என்ற ஜெர்மன் அரசின் பெருந்தன்மை   புரிந்து கொள்ளனும்...! :lol:  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.