Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பா : என்னம்மா சமையல் இது.

சாம்பார்-ல உப்பே இல்லை. ரசத்து-ல புளிப்பே இல்லை.

மகள் : போதும் நிறுத்துங்கப்பா.......

இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும்

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை வளம் பெற வாழ்த்திப்பாடும் சொற்களெல்லாம் வந்து சேரட்டும் உங்கள் வாசல் கதவு தட்டிடவே இனிய தமிழ் வருடபிறப்பு நல்வாழ்த்துக்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

திமுக பிரச்சாரப் பீரங்கிகள் எல்லோரும் படிப்படியாக அதிமுக ஜோதியில் ஐக்கியம் ஆகிவிட்டார்கள். மதிமுகவின் நாஞ்சில் சம்பத்தும் விதிவிலக்கல்ல.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்; வாழ்த்துக்கள்... எது சரி?

இயக்குனர் சீமான், மாதவனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கினார். வசனத்தில் ஒருவரி கூட ஆங்கிலம் இடம்பெற்றுவிடக் கூடாது என்கிற கவனத்தோடு அப்படம் எழுதப்பட்டது. ‘வாழ்த்துக்கள்’ என்று பெயர் வைத்தார். நிறைய பேர் ‘க்’ வரக்கூடாது என்று சீமானை குழப்பினார்கள். அப்போது கலைஞரை சந்தித்த சீமான், ‘க்’ வருமா, வராதா என்று சந்தேகம் கேட்டார். “வாழ்த்துகள்தான் சரி. உன் படம் வெற்றியடைய வாழ்த்துகள்” என்று கலைஞர் தெளிவுப்படுத்தி அனுப்பினார்.

‘வாழ்த்துகள்’ என்று ‘க்’ வெட்டப்பட்டே படம் வெளியானது. ஆனால் கலைஞர் வாழ்த்தியபடி ‘வாழ்த்துகள்’ வெற்றியடையவில்லை

Thanks yuva

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

swiss ரம்யாவின் குரலில் இந்த பாட்டும் நல்லா தான் இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிடித்திருக்கா என்னை என்று கேட்கிறாய் ..?

பிடிக்காது விட்டால் என் பிறப்பில் என்ன பயன் ..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெ. கரத்தை வலுவாக்கி காங். - பாஜகவை நாட்டை விட்டு விரட்ட வேண்டும்: சீமான்

மொதல்ல உன்னைய ஊர விட்டு விரட்டனும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திராவிட கட்சிகளை அழித்துவிட்டு 2016ம் ஆண்டில் ஒரு தமிழனை ஆட்சிக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்துவிட்டு தற்போது சீமான் திராவிட கட்சிக்கு வாக்கு சேகரிப்பது கேள்விக்குறியாகவும், பிறர் நகைக்கும்படியும் உள்ளது. ஒரே நேரத்தில் 40 தொகுதிகளிலும் 40 நிலைப்பாடுகள் என்பது தமிழக மக்கள் மற்றும் அவரை நம்பி வந்த இளைஞர்கள் ஆகியோரை ஏமாற்றுவதாக உள்ளது. அவரின் நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

அதனால் தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்து விலகுகிறோம். மேலும் மாவட்ட கட்சியும் கலைக்கப்படுகிறது என்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்க்கு

மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது.

கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும்,

முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம்

அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க

வேண்டுமே தவிர இந்து மதத்தை அழிக்க நினைத்தால்

தாம் அழிந்து போவார்கள் என்பதை வரலாறு நமக்கு

சொல்கிறது.

~ விவேகானந்தர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமார் பெண்களுக்கெதிராக "களமாடமாட்டேன்" என்ற statement.....2016ல இல்ல எந்த காலத்துலயும் அம்மையாருக்கு எதிராக "காலாட்ட மாட்டேன்" என்பதன் மறைவாக்கம் என்பதறியாத "நாம் தமிழர்",தோழர்களே ...

இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா கரத்தை வலுப்படுத்தி காங்கிரசையும் பா ஜ க வையும் நாட்டை விட்டு விரட்டனும் என்று சொல்லி ஜெயலலிதாவிற்கு ஆதரவு கேட்கின்ற அ தி மு க வில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி தனக்கு கிடைக்காதா என்ற சீமான் என்கின்ற இந்த மாயமான் முதலில் தேர்தலுக்கு பின் பா ஜ க ஆட்சி அமைத்தால் அ தி மு க தன்னுடைய ஆதரவை அதற்க்கு வழங்காது என்று உறுதி கூற முடியுமா? அப்பிடி ஆதரவு அளித்தால் சீமான் சொல்ல போவது என்ன தெரியுமா?

ஈழத்தமிழர் நலன் கருதி தான் அம்மா பா ஜ க வை ஆதரிக்கின்றார் என்று....

கொய்யாலே இவரு மட்டும் கொள்கைய மாத்தி அம்மாக்கு வாக்கு கேட்டிட்டு திரியலாம் அதையே வைக்கோ செய்தா தப்போ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததினால் மூன்றாண்டு தண்டனை பெற்ற வடிவேலு ஆளும்கட்சிக்கு தூதுவிட்டுக் கொண்டே இருந்தார். அங்கிருந்து பாசிட்டிவ்வான சிக்னல் வராதநிலையில், தன்னையே நொந்தபடி புலம்பிக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல, தற்போது அவர் கதாநாயகனாக நடித்து வரும் தெனாலிராமன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் கடைசிநேரத்தில் சிக்கலை ஏற்படுத்திவிடுவார்களோ என்ற பயத்திலும் இருந்தார். அவரது பயத்தை அதிகரிப்பதுபோலவே தொடர்ந்து பல சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இப்படியான சூழலில், கடைசிமுயற்சியாக ஒரு கல்லை வீசிப்பார்ப்போம் என்று தன் மானேஜர் முத்தையா என்பவர் மூலம் ஒரு முயற்சியை செய்தார்.

அதாவது ஆளும்கட்சி சேனலுக்கு தன் மானேஜரை அனுப்பி, தமிழ்ப்புத்தாண்டு அன்று ஒளிபரப்பு செய்யத்தக்க வகையில் சிறப்பு நிகழ்ச்சி செய்ய ஆர்வம் இருப்பதாக, ஆளும்கட்சி சேனலில் உள்ள முக்கிய நிர்வாகியிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். வடிவேலுவின் கோரிக்கை மேலிடத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து க்ரீன் சிக்னல் வர, வடிவேலுவை வைத்து தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இதற்கிடையில், தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு வடிவேலுவை அணுகியது கலைஞர் தொலைக்காட்சி. வடிவேலு கடைசிவரை போனை அட்டெண்ட் பண்ணவே இல்லை. அதுக்குள்ளே நன்றி கெட்ட மனுஷனாயிட்டாரே என்ற வடிவேலு மீது கோபத்தில் இருக்கிறதாம் கலைஞர் டிவி வட்டாராம்.

Dinamalar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லிபியா கடாபியின் சர்வாதிகாரியா இருந்த பொழுது மக்கள் மற்றும் குழுக்கள் எல்லாம் ஒழுங்கா இருந்தார்கள் காரணம் பயம் இப்பொழுது ஜனநாயம் என்ற ஒன்றை பெற்றுக்கொடுத்தால் மக்களுக்கு சரியாக பயன்படுத்தி கொள்ள தெரியவில்லை தினமும் மோதல்கள் பிரதி பிரதமரின் வீட்டுக்குள் புகுந்து கூட தாக்குதல் நடாத்துகின்ற அளவுக்கு அங்கெ சட்டம் ஒழுங்கு கெட்டுப்பொஐ இருகின்றது இப்பொழுது பிரதமர் ராஜினாமா செய்து விட்டார்.... மக்கள் குழுக்களாக பிரிந்து தங்களுக்குள்ளே மோதி கொள்கின்றார்கள் சில நாடுகளுக்கு சர்வாதிகாரம் தான் சரி என்பதனை இப்பிடியான சம்பவங்கள் மீண்டும் நிரூபிக்கின்றன.....

  • கருத்துக்கள உறவுகள்

99 ஆவது பக்கத்தில் நிக்கிறீங்கள்...வாழ்த்துக்கள் சுண்டு பிறதர்.

  • கருத்துக்கள உறவுகள்

15-1397539233-149314-579247138821519-603

 

ரீமோட் கண்டு பிடித்ததால்...
மனித‌ன் இருந்த இடத்தில் இருந்தே... சனல் மாற்றியதால்,
ரீவி மெலிய... மனிதன் பருத்து விட்டான். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

15-1397539980-10155458-306511222838528-4

 

:D  :lol:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு

பூங்காவனம் என

பூப்போல் கனவுகளை சுமந்து

பூக்கள் மலர முடியாமல்

கசக்கப்படும் போது

கசங்கும் உறவுகள் .....

ஆளுமை எனும்

அதிகாரமான

விதி முறையால்

விபத்துக்களை சந்தித்து

கசங்கும் உறவுகள் ....

கற்ற பெற்றோர்களின்

கருத்து வேறுபாடால்

காயங்களை சுமந்து

கசங்கும் பிஞ்சு உள்ளங்கள் ...

மண வாழ்வின்

மன மாற்றத்தினால்

மருண்டு போய்

மௌனமாய்

கசங்கும் உறவுகள் ...

நான், எனது, என்னுடைய எனும்

சுய நலத்தால்

கசங்கும் மனித உறவுகள் ....

உடல் சுருங்கி

உள்ளம் சுருங்கி

ரத்தம் சுருங்கும் நேரத்தில்

உதாசீனத்தால்

கசங்கும் முதுமை உறவுகள்

உறவுகள் கசந்து

உறவுகள் நலமற்று

உறவுகள் வர்த்தகமாகி

உறவுகள் உருவாகாமல் அழிவது ஏன்?

நலமற்ற

சுய நலம் தான் ...

சுய நலம் உள்ள வரை

"சுயம்" நலமாக இயங்காது

உறவுகளும் இனிக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியும் தமிழர்களுக்காக யாரவது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடுவார்களாக இருந்தால் அவர்களைப்போல அடி முட்டாள் இந்த உலகில் யாரும் கிடையாது......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் ஜெயலலிதா போகும் பிரசாரக் கூட்டத்துக்கெல்லாம் முதல் ஆளாக போய் நிற்பது ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட நால்வர் அணிதான். இவர்கள்தான் முதல்வரின் அத்தனை பிரசாரப் பயணங்களுக்கான அத்தனை ஏற்பாடுகளையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள்.

உசேன் போல்ட்டா.. ஓ. பன்னீர் செல்வமா...

முதல்வர் ஜெயலலிதா எந்த ஊரில் வந்து ஹெலிகாப்டரில் இறங்குகிறாரோ, முதலில் வரவேற்பது இவர்கள்தான். ஹெலிபேடுக்கு சற்று தள்ளி நிற்கும் இவர்கள், ஜெயலலிதா ஹெலிகாப்டர் வந்து இறங்கியதும் ஓடுவார்களே பார்க்க வேண்டும்.. உசேன் போல்ட்டுக்கே நட்டு கழன்று போய் விடும்.

ஹெலிகாப்டரை நோக்கி இப்படி வேட்டி படபடக்க ஓடி வரும் அமைச்சர் பெருமக்களும், அவர்களை விட படு வேகமாக ஓடி வரும் வேட்பாளர் பெருமக்களும் ஹெலிகாப்டரின் வாசல் பகுதியை நோக்கி படு பவ்யமாக நின்று கொள்கிறார்கள்.

ஹெலிகாப்டர் கீழே இறங்கும்போதுதான் செம கூத்து நடக்கிறது. அதாவது ஹெலிகாப்டரின் ராட்சத விசிறி பறப்பதால் கீழே புழுதி கிளம்பும். காற்றும் பலமாக வீசுகிறது. அந்த சமயத்தில் லைனாக அணிவகுத்து கூப்பிய கரங்களுடன் நிறகும் அமைச்சர்கள், அதிமுக பிரபலங்களின் வேட்டிகளும் படு வேகமாக பறக்கிறது. சிலருக்கு ஒரு பக்கமாக வேட்டி விலகியும் விடுகிறது.

ஆனால் கூப்பிய கரத்தை சற்றும் விலக்காமல், பறக்கும் வேட்டியை சற்றும் பிடிக்காமல், கப்பலேறும் மானத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், தரையிறங்கும் அம்மாவை வணங்குவதில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தி, 'கான்சென்ட்ரேஷன்' என்றால் என்ன என்பதை ஒரு பாடம் போல தமிழக மக்களுக்கும், உலக மக்களுககும் அழகாக சொல்லிக் காட்டுகிறார்கள் நமது மாண்புமிகுக்கள்..

பிறகு ஜெயலலிதா ஹெலிகாப்டரை விட்டு வெளியே வந்ததும் அப்படியே முதுகை வளைத்து குணிந்து வணக்கம் வைத்தபடி.. அப்படியே சில நிமிடங்கள் வரை நிற்கிறார்கள். தலை மண்ணைப் பார்க்க.. முதுகு வளைந்து நிற்க.. அவர்கள் நிற்கும் ஸ்டைலே தனி.. அழகு.. அழகு.. அழகு...

சிலரைப் பார்க்க வேண்டும். அப்படியே ரொம்பக் குணிந்து அவர்களது கட்டை விரலே அவர்களே பார்க்கும் அளவுக்கு ஓவரா குணிந்திருப்பார்கள்.. நிறைய ஏரோபிக்ஸ் செய்து பழக்கம் போல...

அடுத்து பாத காணிக்கை. அதாவது அம்மா காலில் விழுந்து வணங்குவது. என்ன காமெடி என்றால் அம்மா அருகில் போவதற்குள்ளாகவே பலர் படார் படாரென்று தரையில் விழுந்து விடுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் முதல்வரின் காலுக்குப் பதில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பாதுகாவலர்கள் காலில்தான் போய் பொத்தென்று விழுகிறார்கள்...

அடுத்து ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் வரும்போதும், கிளம்பிப் போகும்போதும், கீழே கூடியிருக்கும் அமைச்சர்கள் உள்பட அனைவருமே வானத்தைப் பார்த்து பறக்கும் ஹெலிகாப்டரை கும்பிட்டபடி நிற்கிறார்கள்.. ஏதோ கருட சேவையன்று கருட தரிசனம் செய்வது போல.

ஒரு வேளை பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து கீழே நிற்போரில் யாரெல்லாம் கும்பிடாமல் இருக்கிறார்கள் என்று அம்மா பார்த்து நோட் பண்ணி விடுவாரோ என்று பயந்து இப்படிச் செய்கிறார்களா என்று தெரியவி்ல்லை.

நிறைய பேசிக் கொண்டே போகலாம்.. அம்புட்டு அமர்க்களமாக இருக்கிறது அதிமுகவினரின் செயல்களைப் பார்க்கும்போது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிரசார பாணியே தனிதான். ஆக்சன் காட்டுவது... இடத்திற்கு தகுந்த மாதிரி பஞ்ச் அடிப்பது... பேச வந்த விஷயத்தையே மறந்துபோவது, உன் பேர் என்ன என்று வேட்பாளரிடமே கேட்பது, சில சமயம் மைக் ரிப்பேர் ஆனால் கடுப்பாகி கத்துவது, அம்மாவுக்கு அமைச்சர்கள் இப்படித்தான்யா கும்பிடு போடுறாங்க என்று உடலை 90 டிகிரி வரை வளைத்து கும்பிட்டுக் காட்டுவது, இடையிடையே தொண்டை பிரச்சனை, வயித்துப் பிரச்சனை, கூட்டணிப் பிரச்சனை என்று ஓடிக் கொண்டிருக்கிறார்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பின்தங்கி இருந்த அ தி மு க தேர்தல் ரேசில் மீண்டும் முந்துவது போல தோணுது....ஜெயலலிதாவின் ஓயாதா பிரச்சாரங்களும் பேச்சு பாணியை மாற்றியும் மீண்டும் தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றார் மற்றைய கட்சி தலைவர்கள் எல்லாம் களைத்து போய் உக்காந்து இருக்கும் நேரம் பாத்து ஜெயலலிதா அதிரடி ஆட்டத்தை தொடங்கி இருக்கின்றார் 22 வரையான இடங்களில் தான் வெல்லுவார் என்று பார்த்தால் எப்பிடியும் 28 இல் இருந்து 30 வரை கிடைக்கலாம் போல இருக்கு பாப்போம் கடைசி நேரம் நிலைமைகள் மாறுகின்றதா என்று....

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சொன்னதுமாதிரி 32 அம்மாவுக்கு..! :D

யுவகிருஷ்ணாவின் வாந்தி திமுகவுக்கு வாக்குகளாக மாறாது.. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இலங்கை இந்தியாவை விட மிகத்தீவிரமாக மலேசியா செயல்ப்படுகின்றது மலேசியாவின் ஆதரவு இல்லாமல் சில பல கைதுகளை இலங்கையால் மேற்கொண்டு இருக்கவே முடியாது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லகாலம் மலேசியா எண்ட சாக்கடையிலை இருந்து சிங்கப்பூர் தப்பீட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் மலேசியா எண்ட சாக்கடையிலை இருந்து சிங்கப்பூர் தப்பீட்டுது.

 

மலேசியா... முஸ்லீம் நாடு. சிங்கப்பூர் அப்படியல்ல....

இந்த முஸ்லீம் சாக்டையிலிருந்து தாக்குப் பிடிக்க...

சிங்கப்பூர் அதிக... வலுவுள்ள, மூளை தந்திரத்தை பாவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.