Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Golden_Conure-Parrot_small.jpg
 

//உங்கள் முடிவிற்கு எங்களின் பூரண சம்மதம்.//

 

மேற் கூறிய‌ வ‌ச‌ன‌ம், யாழ்க‌ள‌த்தில்... புக‌ழ் பெற‌ப் போகும் வ‌ச‌ன‌ம்.
இது, எங்கே... யாரால், யாருக்காக‌... கூற‌ப் ப‌ட்ட‌ வார்த்தை?
க‌ண்டு பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு.... பொற்கிழி இனாமாக‌, வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ மாட்டாது. :rolleyes:  :D

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அ தி மு க கூட்டங்களில் கழுத்து சுளுக்கெடுக்க கொஞ்ச பேர வைச்சிருக்கணும் போல இருக்கு அமைச்சர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை அண்ணாந்து பாத்து அம்மா பறக்கிற ஹெலிய கும்பிட்டு கும்பிட்டே கழுத்து நோக போகுது

இதுகளை எழுதி எழுதியே உங்கள் கை நோகப் போகுது சுண்டு! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த கட்சிக்கு ஆதரவு, எந்த வேட்பாளருக்கு ஆதரவு, எதன் அடிப்படையில் ஆதரவு, எப்படி ஆதரவு என்றெல்லாம் ஒரு திட்டமும் இல்லாமல், "அப்பாயின்ட்மென்ட்' கொடுத்தவர்களுக்கு எல்லாம் ஆதரவு தெரிவித்து வந்த, "மாஜி' தி.மு.க., மதுரை பிரபலம் அழகிரி, தற்போது, பா.ஜ.,விற்கும், மோடிக்கும் ஆதரவு தெரிவித்து உள்ளார். நடிகர் ரஜினிக்கு அடுத்த படியாக ஆதரவு தெரிவிப்பதால், பெரும் பர

பரப்பு ஏதேனும் உண்டாகும் என, அவர் எதிர்பார்த்து இருந்தார்; அது நடக்கவில்லை. ஆதரவு பெற்ற பா.ஜ.,வை தான், பீதியில் பரபரப்பு அடைய செய்திருக்கும். இந்த நிலைப்பாட்டை அழகிரி எடுத்ததற்கு, பா.ஜ., கூட்டணியின் விருதுநகர் வேட்பாளரும், ம.தி.மு.க.,வின் பொது செயலருமான வைகோ தான் காரணம் என, கூறப்படுகிறது.

சகோதர யுத்தத்தின் உச்சகட்டத்தில் கட்சியை விட்டு நீக்கப்பட்ட அழகிரி, தடாலடியாக எதையாவது செய்து, தன் அரசியல் எதிர் காலத்தை பாதுகாத்துக் கொள்வார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரிக்கெட் ஆட்டத்தில் நெருக்கடியான கட்டத்தில் "கேட்ச்'ஐ விட்டவர் போல் அழகிரி தடுமாறியதால், அவரை மேற்கொண்டு யாரும் கண்டு கொள்ளவில்லை. அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த தி.மு.க.,வினரும், செயல்திட்டம் தெரியாததால், மெல்ல கிளம்பிவிட்டனர். அதில் முக்கியமாக, அழகிரியின் தீவிர ஆதரவாளராக அடையாளம் காட்டிக்கொண்ட எம்.பி., ரித்தீஷ், அ.தி.மு.க.,வில் ஐக்கியமானது, அழகிரிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கிடையில், "ஸ்டாலினும், நானும் சகோதரர்கள்' என, தி.மு.க.,வோடு சமரச முயற்சி, விஜயகாந்தை சந்திக்க முயற்சி, ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி என, அழகிரி எடுக்காத முயற்சியே இல்லை. ஏதாவது ஒன்று ஒத்துவந்தாலும், அப்படியே "கம்முனு குந்திக்கலாம்' என்பது தான் அவரது திட்டமாக இருந்தது. ஆனால், அனைத்து கதவுகளும் சாத்தப்பட்டன. தட்டியும் திறக்கப்படவில்லை.

இதனால், தனது எதிர்காலம் குறித்து, மிகவும் கவலையடைந்த அழகிரி, வைகோவை, தனது அரசியல் ஆசானாக்கிக் கொண்டார். தற்போது, வைகோவின் வழிகாட்டுதல்படி நடந்து வருகிறார் என, கூறப்படுகிறது.

வைகோவின் ஆலோசனைப்படி, பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்த அழகிரி, நேற்று முன்தினம், மதுரை தயா மஹாலில், தன் ஆதரவாளர்களை அழைத்துப் பேசினார். அங்கு ஆதரவாளர்களிடம் கருத்து கேட்பதாக வரச் சொல்லிவிட்டு, விஜயகாந்த் பாணியில், "நீங்கள் இதை தான் விரும்புகிறீர்கள். அதனால், நானும் அந்த முடிவை எடுக்கிறேன்' என, ஆதரவாளர்கள் எதிர்பார்க்காததை சொல்லி, தற்காலிகமாக, தன்னுடைய பா.ஜ.,

ஆதரவு செயல்பாட்டுக்கு உரம் சேர்த்து இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியோடு, தி.மு.க., நட்புறவு பாராட்ட வேண்டும் என, வலியுறுத்தி வந்த அழகிரி, அரசியல் சூழல் காரணமாகவும், காங்கிரசின் "ஏ பிளான்' காரணமாகவும் (தேர்தல் களம், மார்ச் 13) பா.ஜ.,வை மறைமுகமாக ஆதரிப்பார் என, பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நிலையில்; அவரது, வெளிப்படையான பா.ஜ., ஆதரவு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அழகிரியின் இந்த புதிய அரிதாரம் குறித்து, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:

எரியும் நெருப்பில் எண்ணெயை அள்ளிக் கொட்டும் வேலையை வைகோ, ஜே.எம்.ஆரூண், ப.சிதம்பரம், ஞானதேசிகன் என்று, பலரும் செய்ய ஆரம்பித்தனர். அழகிரியை சந்தித்து, ஆதரவாளர்களின் ஆதரவை தேர்தலுக்காக கோரினர். ஆனால், வைகோ மட்டும், அழகிரியை, ஸ்டாலினுக்கு எதிராக சீண்டும் வேலையை கூர்படுத்தி விட்டார். இருந்தாலும், இந்த களேபரங்களுக்கு இடையில், அ.தி.மு.க., தரப்பில் இருந்து தனக்கு, அழைப்பு வரும் என, எதிர்பார்த்தார் அழகிரி. அது நடக்கவில்லை என்றதும், தன் தரப்பில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார். ஆனால், அதுவும் நடக்கவில்லை. மாறாக, அழகிரியோடு கூடவே இருந்த, தி.மு.க.,வின் எம்.பி.,யான ஜே.கே.ரித்தீஷை அழைத்து கட்சியில் இணைத்துக் கொண்டார் ஜெயலலிதா. இந்த இடத்தில் தான், அழகிரிக்கு திடீர் "ஷாக்' ஆனது. அரசியலில் தான் தனித்து விடப்பட்டு

விடுவோம் என, உணர ஆரம்பித்தார். அதனால், தன் சகோதரருடன் சமாதானத்துக்கு போய்

விடலாம் என்பது போல, "நானும், ஸ்டாலினும் சகோதரர் தான்' என்று பேச ஆரம்பித்தார். ஆனால், அதற்கு தி.மு.க., தரப்பில் இருந்து எந்த "ரியாக்?ஷனும்' இல்லை என்றதும், தன்னுடைய ஆதரவாளர்களில் முக்கியஸ்தர் ஒருவரை விட்டு, கருணாநிதியிடம் ஈரோட்டில் சந்தித்துப் பேசச் சொன்னார். அப்போது, மதுரைக்கு பொதுக் கூட்டத்துக்காக கருணாநிதி வரும்போது, தன் இல்லத்துக்கு வருமாறு அழைத்தார். ஆனால், கருணாநிதி மறுத்துவிட்டார். அதனால், கருணாநிதி மதுரை வந்த நாளில், ஊரில் இல்லாமல், தன் ஆதரவாளர்களை பார்க்க போவதாக சொல்லி, கன்னியாகுமரிக்குச் சென்று, வழக்கம்போல, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார். இப்படி எதற்கும் எந்த தரப்பும் அசைந்து கொடுக்காத நிலையில், மீண்டும் வைகோவுடன் அழகிரி பேசினார். தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையை சொன்னார்.

அந்த சூழ்நிலையில் தான், அழகிரியை, நரேந்திர மோடிக்கு ஆதரவாக, வைகோ திருப்பினார்.

அந்த அடிப்படையில் தான், அவர் பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு என, முடிவெடுத்து விட்டதாக, தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்தார். அதோடு மட்டுமல்ல, நரேந்திர மோடி குஜராத்தில் மிகப் பிரமாதமாக ஆட்சி செய்வதாகவும், அவர் நாட்டின் பிரதமராக வந்தால், நாடு பல துறை

களிலும் முன்னேறும் எனவும், தன் ஆதரவாளர்களிடம் இந்த முடிவெடுத்தற்கான காரணத்தையும் விளக்கிச் சொல்லிவிட்டார். இனி, பா.ஜ., ஆதரவு முழக்கத்தை தேர்தல் வரையில் கொண்டு செல்வார் அழகிரி. நரேந்திர மோடி ஆதரவு நிலை எடுத்திருக்கும் அழகிரி, தேர்தலில் தான் எதிர்பார்ப்பது போல, நரேந்திர மோடி வெற்றிடைந்து விட்டால், தன்னுடைய ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைவது என, முடிவெடுத்திருக்கிறார். ஒருவேளை பா.ஜ., எதிர்பார்ப்புக்கு மாறாக, முடிவுகள் அமைந்து விட்டால், மீண்டும் அ.தி.மு.க., தரப்புக்கு "அப்ளிகேஷன்' போடலாம் என, திட்டமிட்டிருக்கிறார். அவருடைய முடிவுகள் அவருக்கு சாதகமாக இருக்குமா என்பதை, தேர்தல் முடிவுகள் தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

திடீரென வந்த அழகிரி ஆதரவு குறித்து, பா.ஜ., வட்டாரங்களில் கூறியதாவது: நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ., பெரும் வெற்றி அடையும் என்பது உறுதியாகி விட்டது. அதனால், பலரும் இப்பவே பா.ஜ., முகாமுக்கு மாறி வருகின்றனர். அந்த வகையில், அழகிரி தன்னிச்சையாக தன் ஆதரவாளர்களை எங்கள் பக்கம் திருப்பி இருப்பது, எங்களுக்கு லாபம் தான். தேர்தலுக்குப் பின்னால், அவர் தன் ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தால், அதை வரவேற்போம். எந்த ரூபத்திலும் நரேந்திர மோடிக்கு வலு சேர வேண்டும். அவ்வளவு தான் எங்கள் எதிர்பார்ப்பு. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Dinamalar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சார்ஸ்' வைரஸ்கள் கொண்ட 2,300 குப்பிகள் மாயம்: பிரான்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் பகீர்!

யோகத்தார்: நம்ம இடுகாட்டான் மரணத்த பற்றி கவிதை கவிதையா எழுதி தள்ளும்போதே நினைச்சன்..... என்னமோ நடக்க போகுது எண்டு எலே பிரான்ஸ் காரரே கவனம் லே

அங்க இருந்து ஷெல் அடிக்கு தப்பி வந்தா இங்க வைரஸ் காட்டி பயமுறுத்துறாங்க லே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 3000 டாலர்ஸ் பெறுமதியான வைன்க்கு ஆசைப்பட்டு NSW மாநில பிரதமரின் பதவியையே கொண்டு போய்ட்டுது.....

  • கருத்துக்கள உறவுகள்

well done & keep it up sundu bro.

1551479_10152063124463097_51811884496426

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரக்கடித்தாலும் அதிமுகவுக்கு சரியா ஓட்டு போடணும்... சீமான் சர்ச்சை பேச்சு

இதுங்க எல்லாம் தமிழக முதல் அமைச்சரா வந்து தமிழ் நாடு உருப்பட்ட மாதிரி தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.

தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம். வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி “ஐஸ் கிரீம் செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்..

ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா

எனக்குன்னு அழ யாரு இருக்கா”ன்னு கேட்டுச்சாம்.. அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!

அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி வருதாம்..

நீங்க ஏன் அழறீங்க...????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் திமுக அலையைத் தவிர எதுவும் இல்லை...கருணாநிதி

ஆமா மெரினா கடல்ல கூட தி மு க அலை தான்னா பாத்துக்குங்க ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் க்கு வாற DD கூட எப்பிடியும் பக்கத்தில நிண்டு போட்டோ எடுத்திடனும் எண்டு நம்ம குருவிகள் இப்பவே நலஸ் அப்பக்கடைக்கு முன்னாடி துண்டு போட்டு இடம் பிடிச்சு தூங்கிட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன..... இதேவேளை குருவிக்கு முதல் தான் போய் எப்பிடி DD யுடன் படம் எடுத்து முகப்புத்தகத்தில் போடுவது என்று இரவு பகலாக யோசித்து கொண்டு தூக்கம் இன்றி தவித்துக்கொண்டு இருக்கின்றாராம் நண்டு ஜி..... இதேவேளை லண்டன் வரும் சூப்பர் சிங்கர் குழுவினருடன் தான் எப்பிடியும் ஒரு டூயட் பாடலாவது பாடி தன்னுடைய திறமையை நிரூபிக்க மெசோ அக்கா சந்தர்ப்பம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியை முற்றாக இரத்து செய்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றார்களாம்...

லண்டன் க்கு வாற DD கூட எப்பிடியும் பக்கத்தில நிண்டு போட்டோ எடுத்திடனும் எண்டு நம்ம குருவிகள் இப்பவே நலஸ் அப்பக்கடைக்கு முன்னாடி துண்டு போட்டு இடம் பிடிச்சு தூங்கிட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன..... இதேவேளை குருவிக்கு முதல் தான் போய் எப்பிடி DD யுடன் படம் எடுத்து முகப்புத்தகத்தில் போடுவது என்று இரவு பகலாக யோசித்து கொண்டு தூக்கம் இன்றி தவித்துக்கொண்டு இருக்கின்றாராம் நண்டு ஜி..... இதேவேளை லண்டன் வரும் சூப்பர் சிங்கர் குழுவினருடன் தான் எப்பிடியும் ஒரு டூயட் பாடலாவது பாடி தன்னுடைய திறமையை நிரூபிக்க மெசோ அக்கா சந்தர்ப்பம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியை முற்றாக இரத்து செய்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றார்களாம்...

  • கருத்துக்கள உறவுகள்

தொழிலதிபர் ஒருவர் ரோபோ ஒன்றை வீட்டில் வாங்கி வைத்திருந்தார். அந்த ரோபோ யாரவது பொய் சொன்னால் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடும்..

ஒரு முறை தொழிலதிபர் மகன் இரவு நேரத்தில் வீட்டுக்கு லேட்டாக வந்தான்..

தொழிலதிபர்: ஏன்டா லேட்டு ?? எங்கட போயிருந்த
மகன்: அப்பா நண்பர்களோட சேர்ந்து பரீட்சைக்கு படிக்க போயிருந்தேன்

ரோபோ மகனின் கன்னத்தில் நச்சுன்னு ஒரு அறை விட்டது ...

கோவம் அடைத்த தொழிலதிபர் மகனிடம்: ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்ல ரோபோ கிட்ட மறுபடியும் அடி வாங்குவ

மகன்: மன்னிச்சிடுங்க அப்பா .. நண்பர்களோட சினிமா பார்க்க போயிருந்தேன்

தொழிலதிபர்: டேய் நீ எல்லாம் உருப்படவே மாட்ட.. நானெல்லாம் உன் வயசுல எப்படி படிப்பேன் தெரியுமா ????

ரோபோ தொழிலதிபரின் கன்னத்தில் ஒரு அறை விட்டது ...

இதை பார்த்து லேசான புன்னகையுடன் வந்த தொழிலதிபரின் மனைவி: என்ன இருந்தாலும் உங்களுக்கு பிறந்த பையன் உங்களை மாதிரி தானே இருப்பான்..

இப்போது ரோபோ தொழிலதிபரின் மனைவியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hahaha. ரோபோ குடும்பத்தையே பிரிச்சிட்டுது ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விருதுநகரில் திமுகவுக்கு வெற்றி - வைகோ தோல்வி முகம்.- அதிமுகவுக்கு 3வது இடம்தானாம்

இப்பொழுதே விழிப்படைந்து ம தி மு கவும் அதன் கூட்டணி கட்சியினரும் தீயாக வேலை செய்யாது விட்டால் வை கோவை கரையேற்றுவது கடினமாக இருக்க போகின்றது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரன் வார பத்திரிகையின் தேர்தல் சர்வே முடிவுகள் வெளிவந்து இருக்கின்றன அம்பட்டமான தி மு க விசுவாசம் தெரிகின்றது கோபாலு சார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடங் கொய்யாலே .....ஓய்வு பெறும் வயச எழுபது வயசா அதிகரிக்க போகுதாம் ஆஸ்திரேலியா அரசாங்கம்.......இப்பிடியே ரெண்டு ரெண்டு வயசா கூட்டிட்டு போய் மவனே நீ ஓய்வே எடுக்காத, சாகும் வரைக்கும் வேலை செய்யிங்க எண்டு சொல்ல ...போறானுங்க...

என்ன மாதிரியான ஒரு நாட்டுல வாழுறம் நாம்?

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடங் கொய்யாலே .....ஓய்வு பெறும் வயச எழுபது வயசா அதிகரிக்க போகுதாம் ஆஸ்திரேலியா அரசாங்கம்.......இப்பிடியே ரெண்டு ரெண்டு வயசா கூட்டிட்டு போய் மவனே நீ ஓய்வே எடுக்காத, சாகும் வரைக்கும் வேலை செய்யிங்க எண்டு சொல்ல ...போறானுங்க...

என்ன மாதிரியான ஒரு நாட்டுல வாழுறம் நாம்?

 

 

உப்பிடியான நெருக்கடி ஜேர்மனியிலையும் வந்துட்டுது... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடியான நெருக்கடி ஜேர்மனியிலையும் வந்துட்டுது... :huh:

அது சரி... நானும், குமாரசாமி அண்ணரும் கவலைப்படுகிறதில நியாயமிருக்கு!  :o

 

அதுக்கேன், இந்த இருபதுகள் இப்பவே துள்ளுதுகள்?  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி... நானும், குமாரசாமி அண்ணரும் கவலைப்படுகிறதில நியாயமிருக்கு!  :o

 

அதுக்கேன், இந்த இருபதுகள் இப்பவே துள்ளுதுகள்?  :D

 

 

எங்களுக்கு 60,70 வதிலை பெஞ்சன் தாறம் எண்டாவது சொல்லுறாங்கள்.......  :)
 
உலகம் போற போக்கை பார்த்தால் இப்ப இருக்கிற 20வயதுக்காரர் 60வதை தாண்டேக்கை மேல் லோகத்திலைதான் பெஞ்சன் எண்டு சட்டம் வரும் போலை கிடக்கு.. :o  :(  :rolleyes:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் ஒருவரின் பெயரை கொண்ட தொலைக்காட்சியில் கடமையாற்றும் அந்த திவ்யமானவரை தரிசிக்க லண்டனில் ஏகப்பட்ட கூட்டமாம் ஆப்பக்கடைகளின் முதலாளிகளில் இருந்து அரிசிக்கடைகளின் முதலாளிகள் வரை போட்டி போட்டு உபசரிப்பாம்..... பக்கத்தில் நிண்டு படம் எடுக்கவே செம ரகளையாம்......இதை பார்த்த லண்டன் முன்னாள் பிரபல தொழில் அதிபர் நந்தனமானவர் அவசரப்பட்டு கோழிக்கடையை விற்றுவிட்டோமோ என்று மனைவிக்கு தெரியாமல் மனசுக்குள் செம பீலிங்க்ஸ் ஆம்....

சரி தனக்கும் ஒரு நாள் காலம் வரும் அப்போது நல்ல நேரம் வரும் என்று திவ்யமானவரை டிவியில் அடிக்கடி போட்டு பாக்கின்றாராம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன தான் விஜயகாந்தை பற்றி நக்கல் அடித்தாலும் ஒட்டு மொத்த கூட்டணி கட்சிகளுக்காகவும் அனைத்து தொகுதிகளிலும் முகம் சுளிக்காமல் பிரச்சாரம் செய்கின்றார் ராமதாஸ் போன்றவர்கள் அவரை மதிக்கா விட்டாலும் அதனைக்கண்டு கொள்ளாமல் அவர்களின் வேட்ப்பாளர்களுக்காகவும் பணியாற்றுகின்றார்..... ஒட்டு மொத்த கூட்டணி சுமையையும் அவர்தான் சுமப்பதாக தோணுது.... கூட்டணி தர்மம் என்றால் என்னவென்பதை அனைத்து கட்சிகளும் கப்டனிடம் பாடம் படிக்கட்டும்

Hats off captain

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலுவுக்காக தெனாலிராமனை ஒருமுறை பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி... நானும், குமாரசாமி அண்ணரும் கவலைப்படுகிறதில நியாயமிருக்கு! :o

அதுக்கேன், இந்த இருபதுகள் இப்பவே துள்ளுதுகள்? :D

இருபதா...புங்கையர் இது உங்களுக்கே அடுக்குமா
  • கருத்துக்கள உறவுகள்
deer.gif
 
ஒரு பெரிய சிங்கமும் ,குட்டி சிங்கமும் ஒரு மரத்தடியில் அமைதியாக ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்துச்சாம். அந்த நேரம் ஒரு மான் ரொம்ப......ஃபாஸ்ட்டா ஓடிப் போச்சுதாம்.

 

அதைப் பார்த்து குட்டி சிங்கம் பெரிய சிங்கத்துக்கிட்டே, என்னம்மா....இது, இவ்ளோ ஃபாஸ்ட்டா போகுதுன்னு கேட்டுச்சாம்..!

 

அதுக்கு பெரிய சிங்கம் சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சாம்
‘இதுக்குப் பேருதான் ‘ஃபாஸ்ட் ஃபுட்’!!

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த இனத்தையும் வேறு ஒரு இனம் அடக்கி ஆள முடியாது. நாட்டில் வாழும் எந்த இனத்திற்கும் அநீதி ஏற்பட இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

வெறும் பேச்சளவில் நிக்காமல் நடைமுறையாக்கும் போது தான் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டிஎழுப்ப முடியும்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.