Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்:

நடிகைகள் நமீதா, தேவயானிக்கு காங்கிரஸ் திடீர் வலை

சுண்டல்: கொய்யாலே கட்டுமரம் உஷாராகி சீக்கிரம் குஷ்பூக்கு ஒரு பதவிய கொடுத்திடனும் இல்லைனா குஷ்பூ க்கும் வலைய போட்டிடுவாங்க.....

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hahaha super........

தனது மனைவியை திக்விஜய் சிங் திருமணம் செய்துகொள்ளுவதில் அதிருப்தியில்லை என்று கூறியுள்ள அம்ரித்தா ராயின் கணவன் ஆனந்த்பிரதான், ஒருபடி மேலேயே போய் தன்னைப்போல எல்லோரும் பரந்தமனதுடன் இருந்தால்தான் இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் சாத்தியம் என்று கூறியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் பற்றிய கருத்து தொடர்பில் விக்னேஸ்வரன் விளக்கம்

ஹ்ம்ம் எப்பவும் அந்த பயம் மரியாதை இருக்கட்டும்.... சும்மா வாய்க்கு வந்த படி பேசினா என்ன நடக்கும் எப்பிடி எதிர்ப்பு வரும் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க முடியாத நிலைகூட வரும்.... என்றத இந்த எதிர்ப்போட விக்கி நல்லா உணர்திருப்பார்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கழுத்தின் ரத்த நாளம் போன்றது காஷ்மீர்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு

சுண்டல்: சும்மா

சவுண்டு விட்டிட்டு இருக்காம முடிஞ்சா அந்த இரத்த நாளத்தில கை வைச்சு பாருங்க பாப்பம்.......(எதோ நம்மளால முடிஞ்சது)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா செம.....தலிவிர் நடு நடுங்கி போய் இருப்பார்............ தூக்கி உள்ள போட்டு முட்டிக்கி முட்டி தட்டி விசாரிப்பாங்களா?

கருணாநிதிக்கு குண்டுவெடிப்பு தகவல் தெரிந்து இருக்கலாம்: சந்தேகம் கிளப்புகிறார் முதல்வர் ஜெ.,

''தி.மு.க., தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் எம்.பி.,யான இளங்கோவன், ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கும் போது, பயங்கரவாதிகளிடம் இருந்து, நிறைய தகவல்களை பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் செய்தது சிறுபிள்ளை வேளாண்மை அது தான் வீடு வந்து சேரவில்லை என்று புலம்புவர்களுக்கு .......

பஞ்ச பாண்டவர்கள் தரப்பில் வயதிலும் அனுபவத்திலும் குறைந்த துருபத நாட்டு இளவரசன், திரௌபதியின் சகோதரன் திருஷ்டத்யுமனன் சேனாதிபதியாக 7 அக்ரோணிச் சேனையை நடத்தி 18 நாள் யுத்தத்தில் பாண்டவர்களுக்கு வெற்றி தேடிக் கொடுத்தான்.

அதே போல தான் யுத்த களத்தில் நாம் தோல்வி அடைந்து இருக்கலாம் ஆனால் அரசியல் களத்தில் நாம் முன்னெப்போதும் இல்லாத அளவு வெற்றி அடைந்து இருக்கின்றோம்........ ஒட்டுமொத்த வெற்றிகள் கால தாமதம் ஆகலாம்......ஆனால்

‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்’ கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று கட்டுண்டோம். பொறுத்து இருப்போம். காலம் மாறும். தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து  எழுதாவிடினும்

வந்தவுடன் பார்க்கும் ஒரு திரி  இது

உலகத்தரவுகளை  அறிய இதற்குள்  வந்து போகலாம்

நன்றி  சுண்டல் நேரத்திற்கும் உழைப்பிற்கும்

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்........

  • கருத்துக்கள உறவுகள்
1780630_243208229194302_395208520_n.jpg

 

இது செவ்வாயில்
இருந்து எடுக்கப்பட்டது, இதில் பூமியின் மிக
பெரிய நிலப்பரப்புகள்
மட்டுமே தெரிகின்றன ...! :rolleyes: 
.
.
.
.
.
.
.

அப்புடின்னு சொன்னாலும்...
நீங்க, நம்பத்தான் போறீங்க!!. :D 
.
.
.
.
.
.
.

ஆனாலும் நான் உண்மைய
சொல்லிடறேன்...
இது "வடை சுடும் சட்டியின்....
அடிப்பாகம்"..! :lol: 

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தன்மானம் இருக்குல்ல மு க அழகிரி......

சுண்டல்:...... பார்டா..... அண்ணனுக்கு அதெல்லாம் வேற இருக்காம்.....ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் யாழ். இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

சுண்டல்: விக்கியரும் கருணாநிதிய பலோ பண்ண தொடங்கிட்டார் எப்போல்லாம் அரசியல் ரீதியா சர்ச்சை வருகின்றதோ இல்லது எப்பல்லாம் ஏடா கூடமா பேசி சர்ச்சையில் மாட்டிக்கிறாரோ....அப்போலாம் உடன hospital ல போய் படுத்திக்கிறது கருணாநிதி ஸ்டைல்.....

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் யாழ். இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

சுண்டல்: விக்கியரும் கருணாநிதிய பலோ பண்ண தொடங்கிட்டார் எப்போல்லாம் அரசியல் ரீதியா சர்ச்சை வருகின்றதோ இல்லது எப்பல்லாம் ஏடா கூடமா பேசி சர்ச்சையில் மாட்டிக்கிறாரோ....அப்போலாம் உடன hospital ல போய் படுத்திக்கிறது கருணாநிதி ஸ்டைல்.....

 

எது நெருப்பு

எதைத்தொடக்கூடாது  என்று  கூட தெரியாதவர்

சட்டத்தை  படித்ததுடன் நிறுத்துக்கொண்டார் போலும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் அமெரிக்க இராணுவத்தினர் சிலரை சந்தித்து இலங்கையில் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விளக்கினேன். அப்போது மறுஜென்மத்தில் இலங்கையில் பிறக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

இலங்கை இராணுவத்தளபதி

சுண்டல்: இதுக்கு எதுக்கண்ணே....மறு ஜென்மம் எல்லாம் இந்த ஜென்மத்திலையே எல்லாம் வல்ல உலக வல்லரசு ஸ்ரீ லங்கா உடனடியா அமெரிக்கா மீது படையெடுத்து அமெரிக்க வீரர்களை தங்கள் நாட்டின் படையுடன் இணைத்து சகல சலுகைகளையும் இலங்கை வழங்க வேண்டும் .....இந்த ஜென்மத்திலையே அன்றாடம் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் அமெரிக்கா துருப்புகள் இலங்கையின் படையினருக்கான சலுகைகளை அனுபவித்து இந்த ஜென்மத்தின் பிறவிப்பயனை அடைய இலங்கை உதவி புரியணும் என்பது தான் எங்களை போன்ற தேசப்பற்று உடையவர்களின் ஆசை

---------------------------------------------------------------------

கனேடிய வாழ் புலம்பெயர் தமிழ் சமூகத்தை நாடோடிகள் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வர் சாடியுள்ளார்.

சுண்டல்: அவர்கள் நாடோடிகளாகவே இருக்கட்டும் நீங்க என்ன மாதிரி? எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அந்த பக்கம் தாவுவதும் ஏற்கனவே அரசியல் வாழ்வு தந்தவர்களை மண்ணை வாரி தூற்றுவதும் தானே உங்கள் இத்தனை வயதில் நீங்கள் செய்தது? முதலில் மற்றவர்களை தூற்றுவதற்கு முன்பு உங்கள் அரசியல் வாழ்வில் கொஞ்சமாவது நேர்மையாக இருந்து நீங்கள் சார்ந்த முஸ்லிம் சமூகத்திற்கு ஏதாவது செய்யப்பாருங்கள் அஸ்வர் அவர்களே.....

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன், ஒரு ராஜாவிடம் கதை சொல்லி, சன்மானம் வாங்கிப் போகலாமென வந்தான். ராஜாவும் , 'நேரமில்ல; நாலு வரியில் கதை சொல்...' என்றான். அதற்கு கதை சொல்ல வந்தவன், 'ஒரு வரியில கூட சொல்வேன்...' என்றான்.

'அப்படியா... இந்த எலுமிச்சைப் பழத்தை மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பேன். இது மேலே போகும்போது, ராமாயணத்தின் கதையையும், கீழே வரும் போது, மகாபாரதத்தின் கதையையும், அதன் சாராம்சம் குறையாமல் சொல்ல வேண்டும்...' என்றான் மன்னன்.

'தூக்கிப் போடுங்கள், நான் சொல்கிறேன்...' என்றான் புலவன். 'எச்சரிக்கை... சொல்லத் தவறினால் உன் தலை இருக்காது...' என்று, அரசன் மிரட்டினான்.

'போடுங்கள்...' என்றான் புலவன். பழத்தை மேலே விட்டெறிந்தான் அரசன். பழம் மேலே போகும்போது, 'மண்ணாலே கெட்டது பாரதம்...' என்றவன், பழம் கீழே வரும் போது, 'பெண்ணாலே கெட்டது ராமாயணம்...' என்றான்.

எது நெருப்பு

எதைத்தொடக்கூடாது  என்று  கூட தெரியாதவர்

சட்டத்தை  படித்ததுடன் நிறுத்துக்கொண்டார் போலும்.....

 

 

எல்லாம் தெரிந்தவை அகதியாய் வெளி நாடுகளுக்கு வந்திட்டினமே!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக போலீஸ் பாணியில் பாரிய குற்றங்களை கட்டுப்படுத்த சில என்கவுன்டர் நடவடிக்கைகளை தயவு தாட்சணியம் பாக்காது யாழ்ப்பாண போலீஸ் எடுத்தால் தான் அதிகரித்து வரும் குற்ற செயல்களை யாழ்ப்பாணத்தில் கட்டுப்படுத்த முடியும் போல.....மற்றும் படி இலங்கை போன்ற நாடுகளில் சட்டங்களும் நீதி மன்றங்களும் குற்றவாளிகளை ஒன்றும் பண்ணிவிடப்போவதில்லை........அரசியல் செல்வாக்குகளும் சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளும் குற்றவாளிகள் தப்பிபதற்க்கும் முறையான தண்டனைகளை இழுத்தடிப்பதற்க்கும் தான் உதவுகின்றன........

யாருடைய உயிரை பறிப்பதற்கும் யாருக்கும் உரிமை இல்லை என்றாலும் கூட.......மனிதத்தன்மை சற்றேனும் இல்லாதவர்களுக்கும் மிருகங்களை விட கேவலமாக நடந்து கொள்பவர்களுக்கும் இது பொருந்துமா என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்தானம் இனி காமெடியனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சூரி ஒருநாளைக்கு அஞ்சு லட்சம் சம்பளம் கேட்கிறார். வடிவேலுவை கமிட் பண்ணினால் வரிவிலக்கு கிடைக்காது என்ற பயம். கருணாஸ், கஞ்சா கருப்பு முகத்தை போஸ்டரில் போட்டாலே மக்கள் தியேட்டருக்கு வர யோசிக்கிறார்கள். இது போன்ற காரணங்களினால் காமெடியனுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. எனவே சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்க எண்ணுபவர்களுக்கு இப்போதைய சாய்ஸ் யார் தெரியுமா?

கவுண்டமணிதான். சில பல வருடங்களாக பட வாய்ப்பில்லாமல் வீட்டில் உட்கார்ந்திருந்த கவுண்டமணி, நீண்டஇடைவெளிக்குப் பிறகு தற்போது49 ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப்படம் வெளியாகி கவுண்டருக்கு மீண்டும் மவுசு வரும் என்ற எதிர்பார்ப்பில் அவரை ஒப்பந்தம் செய்ய சிலர் கவுண்டமணியை அணுகினார்கள். கவுண்டமணியோ வந்த வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிட்டார். ஏன்? 49 ஓ படம் ரிலீஸான பிறகே புதுப்படங்களை ஒப்புக்கொள்வாராம்.

கவுண்டரின் கணக்கே தனி...

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா   ஆச்சு

ஏற்கனவே 2 தரம்

மீண்டும் 3வது தரம்

 

சுண்டலுக்கு தண்ணிப்பழக்கம் இல்லையே.....? :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

எனது வீட்டில் நிகழ்ந்த நிகழ்வு

 

தம்பியாரிடம் கொஞ்ச  பணம் வங்கியிலிருந்து வங்கிக்கு மாற்றும்படி அக்காகாறி  கேட்டார் (கடனாக)

சரி  போடுகின்றேன் என்றான் தம்பி

 

காசு வங்கிக்கு வந்ததற்காக வங்கியிலிருந்து அக்காவுக்கு கடிதம் வந்திருந்தது

அதை  பார்த்துவிட்டு

தம்பியாரை கலைத்து கலைத்து அடித்துக்கொண்டிருந்தாள் அக்காள்(பகிடிக்கு)

 

தம்பியார் அக்கா அடிக்கிறா  தடுங்களப்பா என என்னிடம் ஓடிவந்தான்

அக்காகாறியிடம் கேட்டேன் ஏன் அவனை  அடிக்கிறாய் என

 

இந்த கடிதத்தை பாருங்களப்பா என்றாள்.

வங்கியிலிருந்து வங்கிக்கு காசு மாற்றும் போது காரணம் காட்டவேண்டும்

காரணம் என்ற  இடத்தில்  PICHCHAI என்று எழுதப்பட்டிருந்தது........... :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்டர்நெட் செய்த சதி அண்ணா சுட்டிக்காட்டியதுக்கு நன்றி.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசு எமது பாதைக்கு வரா விட்டால் நாம் தனிப் பாதையில் செல்வோம் - விமல் எச்சரிக்கை

மகிந்தா: போய்க்கோ.......

விமல்:....... தலிவா சும்மா காமடி பண்ணிணன்......இதை எல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு அய்யோ அய்யோ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யானைக் குட்டி ஏற்றுமதியின் பின்னணியில் யார்? அம்பலப்படுத்தப் போவதாக அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை

ஹ்ம்ம் ஒரு யானை குட்டிக்காக இன்னொரு யானைக்குட்டி குரல் கொடுக்க போகுது..... அதிசயம்த்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயந்திரமயமான உலகில் பொன், பொருள், பதவி, வேலை, புகழ் என்று எதை எதையோ தேடியும் மற்றவருடன் போட்டியிட்டுமே வாழ்க்கையைத் தொலைக்கிறோம். உறவுகளுக்குள் புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைப் பேசவும் பாசங்களைப் பகிரவும் நேரமில்லாமல் பரபரப்பாக ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதமான சொற்களைப் பயன்படுத்தி இனிமையாகப் பழகத் தவறுகிறோம். மனம் விட்டுப் பேசினாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து விடும். ஆனால் விரிசல்களை விரிவாக்கித் தீர்க்கக் கூடிய சிறிய பிரச்சினைகளையும் பெரிதாக்கிக் கொண்டே போகிறோம். அன்பு காட்டுதல், புரிதல், விட்டுக் கொடுத்தல், உணர்வுகளை மதித்தல் ஆகியவை உறவுகளைப் பலப்படுத்தும் அஸ்திவாரங்கள். அஸ்திவாரங்கள் பலப்படும் போது குடும்பஉறவுகள் மேம்படுகின்றன. நேசமும் மனிதாபிமானமுமே வாழ்க்கையின் முக்கிய கோட்பாடுகள். மனம் நிறைய பாசங்களுடன் ஒருவர் மற்றவரிடத்துச் செலுத்தும் அக்கறையே வாழ்க்கையை உயிர்ப்பிக்கிறது. பொறுமையின்மையும் நடுநிலையின்மையும் மனம் விட்டுப் பேசாமையும் உணர்வுகளை மதிக்காமையும் விட்டுக் கொடுக்காமையும் புரிந்து கொள்ளாமையுமே பல உறவுகள் உடைவதற்கும் வாழ்க்கையின் சிக்கல்களுக்கும் காரணங்களாகின்றன. மனித உறவுகளுக்குள் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க மனித நேயத்துடன் நடத்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்து போக பழகிக் கொள்ளுங்கள். ஆத்திரங்கள் சாதிக்காததை அன்புச்சூத்திரங்கள் சாதிக்கட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சுகதரத்துறையும் போக்குவரத்து துறையும் படு மோசமான முறையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன.......அண்மையில் ரயில் விபத்து ஒன்றின் போது மிகப்பெரிய மனித பேரவலம் ஏற்பட இருந்து பலர் காயங்களுடன் தப்பி இருக்கின்றார்கள்......தினமும் சாலை விபத்துகளில் பலர் இறக்கின்றார்கள்.....சுகாதரத்துறை படுமோசமான நிலையில் சென்று கொண்டு இருக்கின்றது தினமும் தவறான சிகிச்சைகள் மூலம் நோயாளர்கள் பாதிக்கப்படுவதும்...இறப்பதும்........போதிய மருந்துகள் மருத்துவ வசதிகள் இன்றி மக்கள் பாதிக்கப்படுவதும் என்று போய் கொண்டு இருக்கின்றது..........

பாதுகாப்பு தொடர்பாக ஒதுக்கப்படும் பாரியளவு நிதிகளை குறைத்து இந்த இரண்டு முக்கிய துறைகளையும் நவீன காலத்துக்கு ஏற்ப மேம்படுத்திக்கொள்ள அரசு முன்வர வேண்டும்......இந்த இரண்டு துறைகளிலும் கடுமையான சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளை அரசு உருவாக்க வேண்டும்.....முக்கியமா இந்த இரண்டுக்கும் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர்கள் திறமையாக செயல்ப்படாது விட்டால் அவர்களை மாற்றி திறமையானவர்களை கொண்டுவர வேண்டியது இலங்கை அரசு தலைமையின் கடமை........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுசு புதுசா கார் வாங்கி ஓட்டறீங்கே, சிரமம் இருக்காதா?

அதெல்லாம் ஒண்ணும் இல்லே…இப்ப மணிக்கு 160 மைல் வேகத்துலே…போய்க்கிட்டிருக்கோம்…தெரியுமா? ஆனாலும் இந்தக் காரிலே ஒரே ஒரு விஷயம்தான் எங்கே இருக்குன்னு தெரியலே!

எது?

பிரேக்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nadarajah Muralitharan

4 மணி நேரம் முன்பு

இன்று நடைபெற்ற தமிழீழத் தேசிய துக்க நாளுக்கான (மே 18) ஊடகவியலாளர் சந்திப்புக்குச் சென்றிருந்தேன். அந்தச் சந்திப்பைத் தலைமை ஏற்று நடத்தியவர் எந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து இதனை நடத்துகின்றன என்பதைத் தெரிவிக்காது கூட்டத்தை நடத்த ஆரம்பித்தார். இது மொட்டையாக இருந்தது. மற்றது ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு என்பது பற்றிய எந்த வகையான அடிப்படை அறிவுமற்றவர் போன்று அவர் தொழிற்பட்டுக் கொண்டிருந்தார். பின்பு பேச வந்த பிரமுகர்களில் சிலர் தாங்கள் என்ன அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் வேறு சிலர் தங்கள் அமைப்பைக் கூறாமலும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். அவர்கள் அனைவரும் வரிக்குவரி "இனப்படுகொலை" என்ற வார்த்தையை உச்சாடனம் செய்து கொண்டு தேசிய துக்க நாளுக்கு வாருங்கள் என்று பேசியது முரண்பாடாக இருந்தது. கடந்த நான்கு வருடங்களாக "தேசிய துக்க நாள்" என்ற விடயம் கனடாவில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தத் துக்க நாள் தொடர்பான வைவபவங்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அனைவரும் ஒற்றுமை பற்றிப் பேசிக்கொண்டு வேறுபட்ட தலைப்புகளில் செயற்படுவது இவர்கள் சொல்லும் ஒற்றுமையைக் கொண்டு வரப்போவதில்லை. அதே வேளை ஏகோபித்த அமைப்பு என்று சொல்லப்படுவது அனைத்துக் கருத்தாளர்களையும் அரவணைக்க வேண்டியதும் ஜனநாயக மயமாக்கப்படுவதும் அவசியமாகிறது. ஆயுட்காலத் தலைமைகள் வரலாற்றைத் தேக்கி வைத்து விடும். எதேச்சதிகாரத்தைக் கட்டமைத்து உட்கட்சிச் சதியில் பலரது மண்டைகளை உருள வைத்துவிடும். இங்குதான் ஊன்றிக் கவனித்தலும் உறுதியான கருத்துக்களை அச்சமின்றி முன் சொல்லுதலும் அவசியமாகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.