Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குத் தலைமைகள் மாற்றாந்தாய்ப் பிள்ளைகள்போல் எம்மை கருதுகின்றார்கள் -பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வெற்றியடைவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. மாங்கேணி மக்கள் தெளிவாக இருக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மாங்கேணி பிரப்படிமடுப் பகுதியில் இடம் பெற்ற அரசியல் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்குத் தலைமைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். எம்மை மாற்றாந் தாய்ப் பிள்ளைகளாகவே அவர்கள் கருதுகின்றனர். அதனால் தான் வெருகலாற்றில் எம்மீது படையெடுத்து எம் போராளிகளைக் கொலை செய்தனர்.

நிச்சயமாக இத் தேர்தலில் தோற்கப் போகும் கூட்டமைப்பினர் ஒரேயொரு அறிக்கையினை மாத்திரம் பத்திரிகை வாயிலாக விட்டு எம் மக்களைக் கைவிட்டு ஓடி விடுவர். இதைத்தான் அவர்கள் 62 வருட காலமாகச் செய்து வருகின்றனர். நாம் அழிந்த போதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தாம் மட்டும் சுக போகிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் எமக்குத் தேவையா? நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

வாகரைப் பிரதேச சபைத் தவிசாளர் சூட்டி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா, மண்முனை மேற்குப் பிரதேச சபை தவிசாளர் பிறைசூடி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39788

[size=4]என்னத்தை செய்தாலும் சொன்னாலும் மக்கள் தேர்தல்களில் தெளிவாக இருந்துள்ளனர். இம்முறையும் அதுவே நடக்கும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ம்

அது அவருக்கும் புரியும்

அதனால்தான் இந்த நஞ்சு விதைப்பு எல்லாம்.

ஆனால் மக்கள் தேர்தல்களில் தெளிவாக இருந்துள்ளனர். இம்முறையும் அதுவே நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சிந்தனையின் சிங்கள பேரினவாதம் சிங்கள மக்களிடம் எடுபடும். கருணா.. பிள்ளையானின் பிரதேசவாதம்.. தமிழ் மக்களிடம் எடுபடும் காலம் மலையேறி விட்டது.

பிரதேசவாதத்தின் மூலம்.. சாதிய வாதத்தின் மூலம்... தமிழ் மக்களை பிரித்தாள நினைக்கும் சிங்களப் பேரினவாதிகளின் அவர்களின் அருவருடிகளின் செயல்களுக்கு எனியும் எனியும் தமிழ் மக்கள் தொடர்ந்து பலியாக மாட்டார்கள் என்பதை தமிழ் மக்கள் நிரூபிக்க இன்னொரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதையே பிள்ளையான் போன்றோரின் இந்தப் பேச்சு எடுத்துக்காட்டி நிற்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உட்பட.. அதன் செயற்பாடுகள் கிழக்கையே மையப்படுத்தி அமைந்துள்ளன. இந்த நிலையில்.. பிள்ளையானின் பிரதேசவாதக் கூக்குரல்.. கிழக்கு மக்களைப் பாதிக்காது.

2004 இல் பலமாக இருந்த கிழக்குப் படையணிகளை சிதைத்து.. 2006-7 இல் கிழக்கை எதிரிக்கு தாரைவார்க்க உதவியவர்கள் யார் என்பதையும் வாகரைப் படுகொலைக்கு வித்திட்டவர்கள் யார் என்பதையும்.. 40,000 மாவீரர்கள் சார்பில் மக்கள் அறிவார்கள்..! இவர்களின் துரோகம் முள்ளிவாய்க்கால் வரை நீண்டதையும் மக்கள் அறிவார்கள்.

இவர்களின் பிரதேசவாத வெறித்தனத்தால்.. இன்று கிழக்கு முற்றாக சிங்கள மயமாகி நிற்கும் நிலையையே தமிழ் மக்களுக்கு இவர்கள் பரிசளித்துள்ளார்கள். தமிழ் மக்கள் சிறுகச் சிறுக தங்கள் இருப்பை சிங்களவர்களிடமும்.. முஸ்லீம்களிடம்.. கிழக்கில் இழந்து வரும் நிலை தான் இவர்களின் பிரதேசவாதம் அந்த மக்களுக்கு ஈட்டிக் கொடுத்துள்ளது.

இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் அகதி முகாம்களில் உள்ள பிரச்சனையைக் கூட இவர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை.. இந்த பிரதேசவாத ஓநாய்கள்.. கிழக்கு மக்களுக்காக கண்ணீர் வடிப்பதுதான் வேடிக்கை.. விநோதம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதையே எத்தின நாளைக்கு தான் சொல்லிட்டு இருக்க போறிங்க பிள்ளையான் மாமா? கேட்டு கேட்டு சுண்டல்க்கு அலுத்து போச்சு அதனால மாத்தி யோசிங்க

பாராளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த கிழக்கு மக்களும் தமிழ் தேசியத்துக்கு ஆதரவா தான் வாக்களிச்சு இருந்தவை என்றதையும் நாங்க மறக்க கூட....

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை ஒட்டு மொத்த தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தையும் காட்டிக்கொடுத்து கிழக்கு பிரதேச போராளிகள் மாவீரர்கள் மற்றும் பொதுமக்களின் விடுதலை உணர்வை சிதறடித்தவர்கள் இவர்கள்

இதேவேளை ஒட்டு மொத்த தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தையும் காட்டிக்கொடுத்து கிழக்கு பிரதேச போராளிகள் மாவீரர்கள் மற்றும் பொதுமக்களின் விடுதலை உணர்வை சிதறடித்தவர்கள் இவர்கள்

உண்மை.....

இந்த அழும் பிள்ளையிn வாயில் ஒரு சூப்பிப் போத்தலை வைத்து யாரவது அதன் தொட்டிலையும் ஆட்டிவிடுங்கள்.

அனுமார் வேடம் போட்டிருக்கும் பிள்ளையான் தேர்தலில் வென்றாலும் இந்த முறை வீடு போவது கூட சாத்தியம்.

Edited by மல்லையூரான்

[size=5]கூட்டமைப்பு வேட்பாளர்களின் தேர்தல் பிரசுரங்கள் த. ம. வி. புலிகளால் பறிப்பு[/size]

[size=4]கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் தேர்தல் பிரசுரங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைச்சேர்ந்த சிலர் நேற்று பறித்துச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று நான் எனது ஆதரவாளர்கள் சகிதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தேன். பால்சேனை கிராமத்தில் நண்பகல் 12.00 மணியளவில் எனது கட்சி சார்பில் அந்த பிரதேசத்திலிருந்து போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான பரசுராமன் சிவனேசன் சகிதம் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.

நானும் அவரும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட வேளை எமது ஆதரவாளர்கள் அங்கு தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். அவ் வேளை பச்சை நிற ஆட்டோ ஒன்றில் வந்த இரண்டு, மூன்று பேர் வரை அவர்களை அச்சுறுத்தி துண்டுப் பிரசுரங்களை பறித்து சென்றுள்ளார்கள்.

குறித்த நபர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்பதை என்னால் அறிய முடிந்தது. இந் நபர்களின் செயற்பாடுகள் அந்த பிரதேசத்தில் நாம் சுதந்திரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபடுவதற்கு இடையூறாக இருந்தது. குறித்த சம்பவமானது அந்த பிரதேசத்தில் தேர்தல் சுதந்திரமாக நடைபெறுமா? என்றொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.

எனவே அந்த பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் என்றாலும் சரி, சுயேட்சைக் குழுக்கள் என்றாலும் சரி சுதந்திரமான முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அம் முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாட்டுக்கடிதத்தின் பிரதிகள் தேர்தல் ஆணையாளர் நாயகம் மற்றும் கபே உட்பட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.[/size]

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39795

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.