Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டிஷ் கொடிக்கு சரிசமமாக லண்டனில் பறந்த தமிழீழத் தேசியக் கொடி!

Featured Replies

லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கை கடும் அதிருப்திக் குள்ளாகியிருப்பதாகத் தெரியவருகிறது.

அத்துடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் தமிழீழத் தேசியக் கொடி தாராளமாகப் பறப்பது குறித்தும் இலங்கை அரசு கடும் விசனம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதிக்குள் இங்கிலாந்தில் வசிக்கும் எந்தவொரு நபரும் அரசியல் கருத்துகளையோ வேறெந்த நாடுகளின் பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயற்படவோ அனுமதிக்கப் போவதில்லை யென முன்னதாகப் பிரிட்டன் அறிவித்திருந்தது.

ஆனால் நேற்றுமுன் தினம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் ஒலிம்பிக் கிராமம் ஒன்றிற்கருகில் ஸ்ட்ராட் பேர்ட் என்னுமிடத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர். அத்துடன், பிரிட்டிஷ் தேசியக் கொடிக்கருகில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றியிருந்த எதிர்ப்பாளர்கள், ஒலிம்பிக் நிகழ்வில் இலங்கை வீரர்கள் பங்கு பற்றுவதைத் தடைசெய்ய வேண்டுமெனவும், போர்க்குற்றங்களை விசாரிப்பதுடன், லண்டனில் அகதிகளாக இருப்பவர்களைத் திருப்பி அனுப்பக்கூடா தென்றும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் இவ்வாறான சுதந்திரமான செயற்பாடுகளுக்குப் பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்குவது தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ள இலங்கை அரசு இது தொடர்பான தனது ஆட்சேபத்தை இராஜதந்திர ரீதியில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மேலும் அறியமுடிகின்றது.

இலங்கை அரசின் இந்த அதிருப்தியை இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகத்திடம் வெளிப்படுத்துமென மேலும் தெரியவருகிறது.

http://thaaitamil.com/?p=28118

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நடவடிக்கை.. :D

தமிழர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக போராட்டம் நடத்தும் வரை பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்கும். :)

இந்த உலகமும், இந்த அரசுகளும் ஈழத்தமிழினம் என்ற அடிப்படையில் எதை தடுத்தாலும்,எம்மை பயங்கரவாதிகள் என்று கூறி நடித்தாலும்,இந்தக்கொடி பறப்பதை ஒரு போதும் தடுக்கமாட்டார்கள் ...................ஏனன்றால் கொடிக்கு வரைவிலக்கனமான இந்த தூய கொடியை எப்போதும் வானுயர பறப்பதற்கு அனுமதித்தே அவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஊர்வலங்களில் சிறையில் அடித்து கொல்லப்படும் தமிழர்களின் படங்கள் இடம்பெற வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.