Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மனோ நோயாளர்கள் ஆகியுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மனோ நோயாளர்கள் ஆகியுள்ளனர்

army.jpg

வன்னியில் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவச் சிப்பாய்களில் பலர் இராணுவ வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிய வருகிறது. முப்பது வயதிற்கு குறைவான மன நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களே இவ்வாறு சிக்கிச்சை பெற்று வருகின்றனர். வெளியில் உலாவ முடியாத அளவிற்கு தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ராஜபக்ச அரசால் மறைக்கப்படுகின்றது. இவர்கள் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதால் ஏனையோருக்கு இதுகுறித்த தகவல்கள் தெரியவரவில்லை என்று கருத்துத் தெரிவித்த ஒருவர் குறிப்பிட்டார்.

வன்முறைகளிலும், கொலைகளிலும், பாலியல் வல்லுறவுகளிலும் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய்களே இவ்வாறான மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இவர்களது தொகை குறைந்தது ஐந்தாயிரமாவது இருக்கலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

http://inioru.com/?p=29704

  • கருத்துக்கள உறவுகள்

போர் குற்ற தண்டனைகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்ற சிங்களவனால் உருவாக்கப்பட்ட நாடகம் இதுவாக இருக்கலாம்

Edited by தமிழரசு

[size=4]"என்ன விலை கொடுத்தாலும் புலிகளை / தமிழர்களை அழிக்கவேண்டும் " என்ற சிந்தனையின் விளைவுகளே இவை. அந்த எதிர்வுளைவுகளில் ஒன்றே இது. [/size]

[size=4]ஐ.நா. அமைப்பூடாக அதைச்சார்ந்த வைத்திய நிபுணர்களிடம் சிங்களம் சிகிச்சைகளை பெறலாம், இதில் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அடங்கவேண்டும் [/size]([size=4] இல்லை அவர்களுக்கு சீன மருத்துவம் கிடைத்திருக்கலாம் ).[/size]

[size=5]இரத்தத்தால் எழுதப்படும் வெற்றிகளும் - எழுதப்படாமலே அழிந்துபோகும் மனித அவலங்களும் - ஆய்வு: [/size]http://www.yarl.com/forum3/index.php?showtopic=48336

[size=4]போரால் பெண்களும் குழந்தைகளும் இவ்வாண்டு மிகுந்த துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். இதில் முக்கியமானது என்னவென்றால் அரசாங்கம் இந்தப் போரில் ஏற்படும் மனித உயிரிழப்புக்களை மறைத்து ஊடகங்கள் எதை வெளியிட வேண்டும் என்று கட்டுப்படுத்துவது தான்.

எவ்வாறிருந்த போதும் அரசாங்கம் படைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காக வெளியிடும் விளம்பரங்களில் உள்ளதைப் போல போர் கவர்ச்சிகரமானதல்ல என்பதை வெளியிடப்படாத அந்த அறிக்கை புலப்படுத்துகிறது.

இந்தப்பிரச்சாரத்துள் தமது அன்புக்குரியவர்களை இழந்து ஏங்கும் குடும்பங்களின் துயரம் அமிழ்ந்து விடுகிறது. அத்தோடு படையினரின் மன அழுத்தங்கள் பற்றியும் ஒருபோதும் அது பேசுவதில்லை.

அவ்வறிக்கை 32 வயதான லான்ஸ் கோப்ரல் ஒருவரின் அனுபவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு படைவீரன் நிலக்கண்ணிவெடியில் அகப்பட்டுச் சாகிறான். ஒரு சிறு காயமும் இல்லாமல் ஒருவாறு இவர் தப்பி விடுகிறார். தன்னுடைய நண்பன் எவ்வாறு அந்தக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டான் என்பதை அவர் நேரடியாகத் தனது கண்களால் கண்டார். பின்னர் அவரிடம் கண்டதெல்லாம் நம்பிக்கையீனம், தன்னைத் தானே வைது கொள்ளல், குற்றவுணர்வு, ஆழ்ந்த துயரம், மரண இழப்பு. அவர் இவற்றால் பீடிக்கப்பட்டவரானார்.

இன்னுமொரு படைவீரர் தனது உற்ற நண்பர் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்படுவதைக் காண்கிறார். அவர் இறந்து விட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டதும் உடலை புதைத்துவிடுமாறு பணிக்கப்படுகிறார். ஆனால் அந்த உடல் தொடும் போது இன்னமும் கணகணப்பாக இருந்தது. அவரால் நண்பனது உடலைப் புதைக்க முடியவி;ல்லை. இருந்தாலும் உயரதிகாரியின் உத்தரவுக்கிணங்க புதைக்கிறார்.

சில வருடங்களுக்குப் பின்னரும் தான் தனது நண்பனை உயிருடன் புதைத்துவிட்டதாக அவர் தர்க்கபூர்வமற்று வருந்திக் கொண்டிருந்தார் என, அந்த அறிக்கை அப்படைவீரரின் உள நெருக்கடியைப் பற்றிச் சொல்கிறது.

இவ்வறிக்கை படையினரின் இவ்வாறான ஏராளமான உளநெருக்கடிகளைக் குறிப்பிடுகிறது. அவர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை கீர்;த்தி மிக்கதாக சொல்லப்படுவது போல அறப்போருக்குரியதாக இல்லை.[/size]

[size=4]ஏழு படையினர் எதிரியின் மோட்டார் வந்து விழுந்து வெடித்ததில் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த ஒரு லெப்டினன்ட் மிகவும் உளப்பாதிப்புக்குள்ளானார். ஒரு காலை இழந்த சார்ஜன்ட் மிகுந்த வன்முறையாளனாக மாறினார். 20 வருடங்களாகப் படையில் கடமை புரிந்த ஒரு கப்டன் பின்னர் இந்த சிவில் சமூகத்தில் பொருந்தி வாழ முடியாதவராக ஆளானார்.

இவ்வாறான பல கதைகள் இந்த ஆய்வறிக்கை எங்கும் விரவிக் கிடக்கின்றன. இந்த உதாரணங்கள் எல்லாம் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கானவை. இவை எல்லாமே 2008 ஆம் ஆண்டின் இந்த யுத்தத்தை ஒரு மிக மோசமான யுத்தம் என்று விளக்குபவை. [/size]

[size=4]களத்தில் படையினர் மிகவும் களைப்புற்றுள்ளனர். நீடித்த யுத்தம் பாரிய அளவில் உள நெருக்கடியால் அவர்களை அவதியுற வைக்கிறது. வடக்கு கிழக்கில் கடமையாற்றும் அல்லது கடமையாற்றிவிட்டு வந்த படையினரே இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் உடலைக் கையாளுதல், களத்தில் நண்பர் ஒருவரை இழத்தல், நன்கு தெரிந்தவர் கொல்லப்படுவதைப் பார்த்தல் போன்ற பல காரணங்கள் இதற்குக் காரணமாக அமைகின்றன. இது மனநலப்பிரச்சினைகளை அதிகரித்து விடுகிறது.

இது தெற்கில் என்றால் வடக்கில் இந்த 2008 ஆம் ஆண்டில் மட்டும் 14000 கிலோ தொன்கள் நிறையுடைய குண்டுகள் விமானத்திலிருந்து போடப்பட்டுள்ளன என்கிறார் டிபென்ஸ் வாச் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் போரால் உடல் ஊனமானோர் 2100 பேர் இருப்பதாக அரசாங்க செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

உடல்சிதறிப் பலியாகும் மரணங்களையும் தமது அன்புக்குரியவர்களின் இழப்புக்களையும், எந்த நேரமும் வானிலிருந்து குண்டு வந்து விழலாம் என்று அச்சத்துள் வாழ்ந்திருப்போரையும் எதிர்காலமே நிச்சயமற்று ஏங்கும் மக்களையும் உள நெருக்கடி எப்படிப் பாதித்திருக்கும்? எவ்வாறு அவர்களது உள நலம் சிதைந்திருக்கும்?

காணாமல்போன தமது கணவனையொ மகனையோ மகளையோ தேடி அந்த உள்ளங்கள் எவ்வாறு வருந்திக் கொண்டிருக்கும். அது எவ்வாறான உளநெருக்கடியை அவர்களில் உருவாக்கும்? குறிப்பாக பெண்களதும் சிறுவர்களதும் உளநெருக்கடி எத்தகையதாக இருக்கும் எதிர்காலச்சந்ததியில் என்னென்ன தாக்கங்களை விளைவிக்கும்?

சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய தருணமிது!

இந்தக் கட்டுரை ஆங்கில பத்திரிகைகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோமலாய் சிங்களவங்கள் நல்லவங்கள்.........அவங்களை மனநோயாளியாக்கியதுக்கும்....... அவங்களை கெட்டவனாய் மாத்தியதுக்கும் ஆர் காரணம்? வேறை ஆர் இவங்கள்தான்!

[size=5]நோமலாய் சிங்களவங்கள் நல்லவங்கள்.......[/size]..

[size=5]ஓமோம் மிக நல்லவர்கள் தான்! [/size][size=5]இவ்வளவு அழிவு நடந்த பின்பு அந்த நல்ல சிங்களவங்களில் எவனாவது தட்டிக்கேட்டானா தமிழர்களுக்கு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று[/size][size=5]? இவ்வளவிற்குப் பிறகும் நோமலாய் சிங்களவங்கள் நல்லது என்று சொல்லுகின்றீர்களே![/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.