Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் டெசோ மாநாடு தொடங்கியது

Featured Replies

[size=5]"டெசோ' மாநாடு நடக்கும் இடம் மாற்றம்: தி.மு.க., ஆபீசில் நடத்த முடிவு[/size]

[size=3][size=4]டெசோ மாநாடு நடக்கும் இடத்தை, தி.மு.க., தலைமை அலுவலகமானஅறிவாலயத்துக்கு மாற்றி நேற்றிரவு தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். மாநாட்டை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்த, சென்னை மாநகர போலீஸ் தடை விதித்ததால், இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி, இம்மாதம் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை, மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் கருணாநிதி கூறியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, டெசோ எனப்படும் தமிழ் ஈழ பாதுகாப்பு அமைப்பின் சார்பாக சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடலில் இன்று, பிரமாண்ட மாநாடு நடக்கும் என தி.மு.க., அறிவித்திருந்தது. இதற்காக, இந்த திடலில் மிகப்பெரிய பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது. [/size][/size]

[size=3][size=4]இந்நிலையில், டெசோ மாநாட்டுக்கு அனுமதி அளிக்க முடியாது. மாநாடு நடைபெறும் இடம், மாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கைக்கு ஏற்றதாக இல்லை. மேலும், மாநாட்டு பந்தல் அருகே ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை உள்ளதால், நோயாளிகளுக்கு பெரும் தொல்லை ஏற்படும். [/size][/size]

[size=3][size=4]தீவிரவாத அமைப்புகள், மாநாட்டில் கலந்து கொண்டு, அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாநாட்டுக்கு தடை விதிக்கிறோம் என,சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் நேற்று காலை அறிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]போலீஸ் கமிஷனரின் தடையை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மாநாட்டு அமைப்பாளர் அன்பழகன் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பால் வசந்தகுமார் தலைமையில், மனு விசாரணைக்கு வந்தது. மாநாடு தொடர்பான வழக்கு, டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணையில் இருப்பதால், வழக்கை ஒரு நீதிபதி விசாரிக்க முடியாது எனக் கூறி வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி பால் வசந்தகுமார் அறிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]இதையடுத்து, வழக்கு, இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. விசாரணை நேற்றிரவு 7 மணியாகியும் துவங்கவில்லை. இந்நிலையில், ஐகோர்ட்டும் மாநாட்டுக்கு தடை விதித்து விட்டால் என்ன செய்வது என, நேற்று மாலை முதலே, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க., பிரமுகர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றனர். இறுதியில், நேற்றிரவு 8 மணியளவில், மாநாட்டை தி.மு.க., தலைமை அலுவலகம் இயங்கும் அண்ணா அறிவாலயத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. [/size][/size]

[size=3][size=4]இதுகுறித்து, கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:[/size][/size]

[size=3][size=4]டெசோ அமைப்பின் சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடும், ஆய்வரங்கமும் ஆகஸ்ட் 12ம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், மாநாடு நடத்துவதற்கு சென்னை மாநகர போலீசார் தடை விதித்துள்ளனர்.ஆய்வரங்கம், காலை 10 மணிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சென்னை அக்கார்டு ஓட்டலில் நடைபெறும். அதில், மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் பற்றி ஆலோசித்து இறுதி செய்யப்படும்.ராயப்பேட்டையில் மாநாட்டுக்கு ஐகோர்ட் அனுமதி அளிக்கவில்லை எனில், தீர்மானங்களை விளக்கி, ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு, அண்ணா அறிவாலயத்தில் மாலை 4 மணிக்கு நடக்கும். மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி இம்மாதம் 20ம் தேதி முதல், 30ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.இப்பொதுக் கூட்டங்கள் ஈழத் தமிழர் கண்ணீர் துடைப்பதற்கும், ஐ.நா., சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வலு சேர்க்கும் வகையிலும் இருக்கும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]மாநாட்டின் இடம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அறிவாலயத்தில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை, தி.மு.க., நிர்வாகிகள் உடனடியாகத் துவங்கினர்.[/size][/size]

[size=3][size=4][size=5]ஈழம் சொல்லை பயன்படுத்த அனுமதி[/size]:[/size][/size]

[size=3][size=4]ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என, மத்திய அரசு அறிவித்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம், ஈழம் என்ற சொல்லை பயன்படுத்த அனுமதி வழங்கிய கடிதம், டெசோ மாநாட்டு செயலருக்கு அனுப்பியுள்ளது என, கருணாநிதி தெரிவித்ததோடு, கடித நகலையும் வெளியிட்டார்.[/size][/size]

[size=3]http://tamil.yahoo.c...-183500630.html[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]பல சர்ச்சைகளில் சிக்கியிருந்த தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) மாநாடு இன்று திட்டமிட்டபடி சென்னையில் தொடங்கியது.[/size]

[size=3][size=4]இந்த மாநாட்டை திட்டமிட்டபடி ஒய்.எம்.சி.ஏ அரங்கில், சில நிபந்தனைகளுடன் நடத்தசென்னை உயர்நீதிமன்றம், இன்று மதியம் அனுமதி அளித்தது.[/size][/size]

[size=3][size=4]அங்கு மாநாட்டை நடத்த அனுமதி மறுத்த, சென்னை மாநகர காவல்துறை ஆணையரின் உத்தரவிற்கு நீதிபதிகள் இலிபி தர்மாராவ் மற்றும் வேணுகோபால் அகியோர் அடங்கிய அமர்வு தடை விதித்தது.[/size][/size]

[size=3][size=4]இதையடுத்து மாநாடு இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கிலேயே நடக்கும் என்று திமுக அறிவித்தது.[/size][/size]

[size=3][size=4]முன்னதாக தமிழ் ஈழ ஆதராவாளர் அமைப்பின் மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த ஆய்வரங்கை திமுக தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120812_tesoconferencestart.shtml

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]"தவறான தகவலின் அடிப்படையில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன்"[/size]

[size=3][size=4]இலங்கையில், விடுதலைப்புலிகளுடனான மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியபோது,[size=5] இலங்கை அரசின் தவறான வாக்குறுதிகளை நம்பியே,[/size] உடனடிப் போர் நிறுத்தம் கோரி தாம் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதத்தினை சிலமணி நேரங்களிலேயே கைவிட்டதாகக் கருணாநிதி ஆய்வரங்கத்தின் போது தெரிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]2009ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாளன்று கருணாநிதி உண்ணாவிரதம் துவங்கியவுடன், புதுடில்லிக்கும் கொழும்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தமாட்டோம் என இலங்கை அரசு அறிவிக்க திமுக தலைவரும் தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டார்.[/size][/size]

[size=3][size=4]அது குறித்து இன்றளவும் பல்வேறு கடுமையான விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.[/size][/size]

[size=3][size=4]இப்பின்னணியிலேயே சென்னையில் இன்று துவங்கிய தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு டெசோவின் மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த ஆய்வரங்கத்தைத் துவக்கிவைத்துப் பேசுகையில்தான் கருணாநிதி, தான் உண்ணாவிரதத்திலிருந்தபோது, போர் முடிவிற்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டது, அது தனக்கு மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் அனுப்பிவைக்கப்பட்டது, அவ்வறிக்கையை நம்பியே உண்ணாவிரதத்தைக் கைவிடநேர்ந்தததாகக் கூறினார்.[/size][/size]

[size=3][size=4]ஆய்வாளர் அரங்கிற்குள் சென்று செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கருணாநிதியின் உரை விவரங்களை டெசோ அமைப்பு வெளியிட்டிருக்கிறது.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120812_tesoconferencestart.shtml

  • தொடங்கியவர்

[size=4]"இலங்கை இந்தியாவை ஏமாற்றியது"[/size]

[size=3][size=4]''ஈழத்தமிழர்களின் பிரச்சினையானது மனிதாபிமானம், மனித உரிமைகள், சுயமரியாதை தொடர்புடையது, ஈழத்தமிழர்கள் பிரச்சினை கால்நூற்றாண்டாக எரிந்து கொண்டிருக்கிற ஒரு பிரச்சினை என்பதை மறக்க முடியாது. [size=5]இலங்கை அரசு இந்தியாவை ஏமாற்றி விட்டது. இலங்கையில் போருக்கு முன்பும், போருக்கு பின்பும் தமிழர்கள் இரண்டாந்தார குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு சட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன[/size]'' எனவும் கருணாநிதி கூறியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]ஈழத்தமிழர்கள் புரிந்த தியாகங்கள் அற்புதமானவை, அவர்கள் அனுபவித்த சித்ரவதைகளும், அடக்கு முறைகளும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதவை என்றும் அங்கு திட்டமிட்ட 'சிங்களமயமாக்கலும் அரங்கேறுகிறது' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மீள் குடியமர்வு, நிவாரணம், புனர்வாழ்வு போன்ற விடயங்களில் அவசரத் தீர்வு காணப்பட வேண்டும். இடைக்காலத் தீர்வாக உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தமிழர்கள் நிம்மதியாக வாழ வகை செய்ய வேண்டியுள்ளது என்றும் திமுக தலைவரின் உரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் இதில் அடங்கும் எனவும், நிரந்தரத் தீர்வாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.[/size][/size]

[size=3][size=4]ஆய்வரங்ககத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிகள் பங்கேற்றனர். [size=5]ஈழத்தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்த திமுக எப்போதுமே அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் [/size]என்றும் அவர் அப்போது கூறினார்.[/size][/size]

[size=3][size=4]இலங்கையிலிருந்து விக்ரமபாகு கருணாரட்ண உட்பட, பல்வேறு வெளிநாட்டு மனித உரிமை ஆர்வலர்கள், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் மாநாட்டில் கல்ந்துகொள்கின்றனர்.[/size][/size]

[size=3]http://www.bbc.co.uk...encestart.shtml[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]"தவறான தகவலின் அடிப்படையில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன்"[/size]

இலங்கையில், விடுதலைப்புலிகளுடனான மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியபோது,[size=5] இலங்கை அரசின் தவறான வாக்குறுதிகளை நம்பியே,[/size] உடனடிப் போர் நிறுத்தம் கோரி தாம் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதத்தினை சிலமணி நேரங்களிலேயே கைவிட்டதாகக் கருணாநிதி ஆய்வரங்கத்தின் போது தெரிவித்தார்.

யாரை மன்னித்தாலும் உன்போன்றோரை நிச்சயமாக மன்னிக்க முடியாது

  • தொடங்கியவர்

120812154136_teso_111_512x288_bbc_nocredit.jpg

120812154252_teso222_512x288_bbc_nocredit.jpg

120812154350_teso_333_512x288_bbc_nocredit.jpg

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் நடத்தப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் மாநாடான டெசோ மாநாடு குறித்து வட இலங்கையின் மக்கள் அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்கள். அது குறித்து எமது செய்தியாளரிடம் அவர்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பை இங்கு கேட்கலாம்

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/08/120812_voxonteso.shtml

  • தொடங்கியவர்

[size=4]இந்த மாநாட்டில் அதனை நடாத்தும் தலைமைகளை நாம் நம்பவில்லை.[/size]

[size=4]இருந்தாலும் இந்த மாநாட்டின் ஊடாக எமக்கு சாதகமாக சில மாற்றங்களை கொண்டுவர முடிந்தால், குறிப்பாக நடுவண் அரசு கொள்கைலகளில், அது எமக்கு வெற்றியே. எனவே அதற்குரியவர்கள் அதற்குரிய வழிகளில் தாம் ஏமாறாமல், இதற்கான அணுகுமுறைகளை கையாளவேண்டும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி அன்று எய்த அம்பு இன்று அவர் மீதே பாய்கிறது...!

ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு பல்வேறு இழுபறிக்குப் பிறகு ஒரு வழியா உயர்நீதிமன்றத்தின் தயவால் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் மாநாட்டு வேலைகள் எந்தவித தடங்களும் இல்லாமல் தொடங்கப்பட்டு, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் விதமாக அரண்மனை போல் அலங்காரப் பந்தல்கள் கம்பீரமாக உயர்த்தி நிறுத்தப்பட்டு, வழியெங்கும் வரவேற்பு வளைவுகள் என ஒரே தடபுடல் ஏற்பாடுகள் தான்.

இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து ''டெசோ'' மாநாட்டில் ''ஈழம்'' என்ற வார்த்தையை உபயோகிக்கக் கூடாது என்று தடைவிதித்தது. மத்திய அரசின் இந்த செயல் டெசோ வட்டாரத்தில் அதிர்ச்சியையும், தமிழக காவல்துறை வட்டாரத்தில் உற்சாகத்தையும் அளித்தது. இந்த சூழ்நிலையில் தான், நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரவு தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் என்று சொல்லி மாநாட்டிற்கு அனுமதி மறுத்தது. உடனே நேற்று திமுக சென்னை உயர்நீதிமன்றத்தை நோக்கி ஓடியது. இரண்டு நீதிபதிகள் விசாரித்து இன்று ஞாயிறு நண்பகல் வரை ஒத்திப்போட்டார்கள்.

ஏற்பாடுகளை முன்னின்று செய்யும் திமுக தலைவர் கருணாநிதிக்கு இது ஒரு சவாலாக போய்விட்டதால், மாநாட்டை நிறுத்துவதாக இல்லை என்று அறிவித்து, உற்சாகமிழந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தி, மாநாட்டு முந்தைய ஆய்வரங்கம் சென்னையில் ஒரு ஓட்டலிலும், மாநாடு திமுக தலைமை நிலையத்திலும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி ஆய்வரங்கம் தொடங்கப்paபட்டு நடந்துகொண்டிருக்கும் வேளையில் உயர்நீதிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்ற தீர்ப்பு தேனாய் பாய்ந்தது. தீர்ப்பை அடுத்து ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மிக உற்சாகமாய் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஒரு மாநாட்டிற்கு அனுமதி மறுப்பது என்பதும், தடை செய்வது என்பதும் கருத்துரிமைக்கு எதிரானது. கருத்து சொல்லும் உரிமையை பறிப்பதாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் இதை ஏற்கமாட்டார்கள்.

அதே சமயம் திமுக தலைவர் கருணாநிதியும், திமுகவினரும், ''டெசோ'' மாநாடு நடத்துபவர்களும் கடந்த காலங்களை பின்னோக்கிப்பார்க்க வேண்டும்.

கடந்த 1990 - ஆம் ஆண்டு ஜூன் பழ.நெடுமாறன் ''தமிழர் தன்னுரிமை மாநாடு என்ற ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தார். ஆனால் அந்த மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு அன்றைக்கு ஆட்சியில் இருந்த இதே முன்னாள் முதல்வர் தான் என்பதை யாரும் மறந்துவிடமுடியாது. அதுமட்டுமல்ல, அந்த

மாநாடு தொடர்புடைய சாலை.இளந்திரையன் உள்ளிட்ட பலரையும் தமிழக போலீசார் கைது செய்தனர்.

மீண்டும் 1996 - ஆம் ஆண்டும் இதே முன்னாள் முதல்வர் அதிகாரத்திலிருந்த போது பா. ம. க. நடத்திய மாநாட்டில் ஈழம் குறித்து பேசியதற்காக இப்போது கருணாநிதியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பதையும் யாரும் மறந்திருக்க முடியாது.

சென்ற திமுக lஆட்சியில் இன்றைக்கு தி.மு.க., கூட்டணியில் இருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில், 2008 - ஆம் ஆண்டு டிசmம்பர் மாதம் 27 - ஆம் தேதி, "ஈழ உலக அங்கீகார மாநாடு' நடத்தினார். அப்போது செய்யப்பட்ட விளம்பரங்களில் "ஈழம்'' என்ற வார்த்தையை போஸ்டர் ஒட்டியும், பெயின்ட் அடித்தும் போலீசார் மறைத்தனர். அப்போதும் தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி தான் என்பதும் யாராலும் மறந்திருக்க முடியாது.

இப்படியாக ''ஈழம்'' குறித்து பேசியவர்கள் மற்றும் மாநாடு நடத்தியவர்கள் மீது தன் ஆட்சிக் காலத்தில் தான் எய்த அம்பு தான் இப்போது தன் மீது பாய்கிறது என்பதை கருணாநிதியால் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

http://puduvairamji.blogspot.com.au/2012/08/blog-post_12.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.