Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் ஏன் எதனால் எப்படி பேசாப்பொருள்பற்றி பேசுவோம்.

Featured Replies

[size=2][size=3]யாழில் அண்மைக்காலமாக விபச்சாரம் கோலோச்சுவதாக பத்திரிகைகளும் இணையத்தளங்களும் செய்தி வெளியிடுகின்றன.[/size]

[size=3]pro2.jpg[/size][/size]

[size=2][size=3]உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த தொழில்களில் ஒன்று விபச்சாரம் எனப்படும் பாலியல் தொழில். எமது இலங்கை இந்தியாபோன்ற நாடுகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் 99% பாலியல் தொழில் என்றாலே பெண்களால் ஆண்களின் பாலியல் தேவைகளை நிவர்த்திசெய்ய நடத்தப்படுவதாகவே உள்ளது. ஆனால் மேற்குலகை பொறுத்தவரையில் பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய ஆண்களும் பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்து பலவருடங்கள் ஆகிறது.

இந்த இடத்தில் கட்டாயம் ஒருவிடயம் சொல்லவேணும். 1982- 83 ஆண்டு காலப்பகுதியிலேயே பாரிசில் வசித்த எனது நண்பர்கள் சிலர் மாலை வேளைகளில் குளித்து முழுகி அந்தமாதிரி ஸ்டைலாக வெளிக்கிட்டுக்கொண்டு சில பூங்காக்கள், வேறு சில குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வார்கள். என்ன விசயம் என்று கேட்டால் "மச்சான் அங்கை பிரஞ்சு மேடம்மாருகள் வருவாளுகள் எவளாவது ஒருத்தி மாட்டினாள் என்றால்..." என்று கூறுவார்கள். இவர்களில் எத்தனை பேருக்கு எத்தனை தடவை சீமாட்டிமார் மாட்டிச்சினம் எத்தனை சீமாட்டிமாரின்ரை ஆசையளை நிவர்த்திசெய்து எவ்வளவு சம்பாதிச்சினமோ தெரியாது. ஆனால் இந்த சம்பாசனைகள் நடந்தது உண்மை.

எதையோ எழுதத்தொடங்கி எங்கேயோ போகாமல் விசயத்திற்கு வருகிறேன். இந்த பாலியல்தொழில் ஆண்டாண்டு காலமாக நடந்ததுதானே, மேற்குலகிலெல்லாம் நடக்கிறதுதானே, என்று பாலியல் தொழிலுக்கு வக்காலத்து வாங்க வரவில்லை. ஆனால் எம்மவர்மத்தியிலும் இது எப்படி கலந்திருந்தது. இதில் எந்தவிதமாக என்ன மாற்ற்ங்களை கொண்டுவரலாம் என்பதை ஆராயவேண்டியது காலத்தின் கட்டயம்.

நாங்கள் உத்தமர்கள் எமது சமுதாயம் மிகவும் ஒழுக்கமானது என்று சொல்லிக்கொண்டு பின் கதவுவழியாக வேசை வீட்டிற்கு போய் வந்துகொண்டிருக்காமல் பேச தவிர்க்கும், பேச கூச்சப்படும், பேச பயப்படும் இந்த பேசாப்பொருள் பற்றிய திறந்த விவாதங்கள் இன்றையகாலத்தில் மிகவும் அவசியம்.

எழுபதாம் ஆண்டுகளின் இறுதியில் எனக்கும் மீசை அரும்பி, என்னுள்ளும் இதற்கான ஹோர்மோன்கள் சுரக்க ஆரம்பித்து, எனக்கும் ஆண்மை இருக்கோ, அதை எப்படி பரீட்சித்து பார்க்கலாம் என்று எண்ணத்தொடங்கிய காலத்தில் யாழ்நகர மையத்தை அண்டிய பகுதிகளில் சோடாமூடி என்ற பட்டப்பெயரில் அழைக்கப்பட்ட பெண்ணும் அவரது கூட்டளிகளும் பாலியல் தொழிலுக்கு மிகவும் பிரசித்தமானவர்கள். இவர்கள் யாழ் பஸ்நிலையத்திலும் அதற்கு எதிர்த்தாற்போல இருந்த மூத்திர ஒழுங்கை என அழைக்கப்படும் சந்திலும் சுற்றித்திரிவினம். கிட்ட வந்தாலே ஒருவித கெட்டவாடையும் அழுக்கும் வெற்றிலைக்காவிபடிந்த பற்களும் என ஒரு தரித்திரம்பிடித்த பிச்சைக்கார தோற்றத்தில் இருந்த இவர்களை பார்த்து எப்படி பல ஆண்களுக்கும் போய் காசைக்கொடுத்து இவர்களுடன் படுத்தார்கள் என்பதை இன்றுவரை என்னால் புரிந்துகொள்ளவும் ஜீரணிக்கவும் முடியவில்லை.

எங்களது ஊரின் எல்லையாக ஒரு குடும்பம் இருந்தது. ஆண்துணை இல்லாத வீடு தாய், மகள் மற்றும் ஒரு பெண். எமது பிரதேசத்தில் சுற்றிலும் இருந்த பல ஊர்களைச் சேர்ந்த பல ஆண்களும் இரகசியமக இந்தவீட்டுக்கதவை பலமுறை திறந்தனர். முதலீடு இல்லாத தொழிலொன்று அங்கே சிறப்புற நடந்தது.

எங்க ஊர் இரண்டு விடயங்களுக்கு பிரசித்திபெற்றது. வீட்டிற்கு ஒரு டாக்டர், பொறியியலாளராவது இருப்பார்கள் படித்தவர்கள் நிறைந்த பிரதேசம். எனது வீட்டிலும் டாக்டர், எஞ்சினியர் சகோதரங்கள் இருக்கிறார்கள் நான்மட்டும் விதிவிலக்காக தறுதலையாக...

அடுத்ததாக எங்க ஊரவர் பலரும் மலையகத்தின் பலபகுதிகள், மட்டக்களப்பு, திருகோணமலை என பல இடங்களிலும் பிரபல வியாபாரிகளாகவும் பெரும் பணக்காரர்களாகவும் இருந்தனர். முன்னையகாலத்தில் கண்டியின் பிரபல வியாபார நிறுவனங்கள் அமைந்திருந்த கொழும்புவீதி நம்மவர்களது நகைக்கடை, புத்தகக்கடை, எலக்ரோனிக்பொருள்கடை, மளிகைக்கடை, மொத்தவியாபார நிறுவனங்கள் என எம் ஊரவர் கடைகளால் நிறைந்திருந்தது. இப்படியாக பல ஊர்களில் தொழில் நடத்தினாலும் அவர்களது குடும்பங்கள் சொந்த ஊரிலேயே இருந்தது. இந்த முதலாளிமாரில் சிலர் தொழில்செய்யும் இடங்களில் நிரந்தரமாக சிங்கள, மலையக.... என அந்த அந்த ஊர்களைச் சேர்ந்த பெண்களை சின்னவீட்டாக வைத்திருந்தனர். சிலர் அப்பபோ தேவைப்படும்போது அதற்குரிய இடங்களுக்கு போய் வந்தனர்.

இப்படியே பல கதைகள் சொல்லிக்கொண்டுபோகலாம். ஆதலால் முன்னையகாலத்தில் எங்கள் சமுதாயம் ஒன்றும் 100% உத்தமர்களால் நிறைந்தது எனக்கூறமுடியாது.

pros.jpg

ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் உடலில் காம உணர்வுகளைத்தூண்டும் ஹோர்மோன் சுரப்பும் இருக்கும்வரை உலகிலிருந்து பாலியல்தொழிலையும் முற்றாக அழிக்கமுடியாது. இதை எப்படிக்குறைக்கலாம், எப்படி ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் என்பதே விவாதித்து தெளிவுபெறவேண்டியவிடயம்.

பெண்களிற்கு போதிய கல்வி அறிவும் அதிக வேலைவாய்ப்புக்களும் அதிகரித்தால் அவர்கள் வறுமையினால் இத்தொழிலிற்கு செல்வது குறையும்.

மேலை நாடுகளில் இருப்பதுபோல பெண்ணுரிமை அதிகமானால், ஒன்றாக சேர்ந்து வாழ்தல் பிடிக்காவிட்டால் விலகிக்கொள்வது, ஒருவரை விரும்பி அவருடன் இருந்தபின் வேறு ஒருவரை கட்டிக்கொள்வது போன்றவிடயங்கள் இருபாலாரினாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டாலும்கூட இந்த பாலியல் தொழிலை அழித்துவிடமுடியாது.

அப்படி முடியுமென்றால் ஐரோப்பாவிலும் அமெரிக்கவிலும்.... மற்றும் பல நாடுகளிலும் பாலியல்தொழில் என்றோ அழிந்திருக்கவேண்டும். ஆனால் இன்றும் இந்தநாடுகளில் பாலியல்தொழில் கோடிகள் புரளும் ஒரு தொழிலாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் எவ்வளவு விழிப்புணர்வு, கற்பு எனும் மாயக்கோட்பட்டு அழிதல் சேர்ந்து வாழ்தல் அதிகரித்தாலும் ஆணோ பெண்ணோ உலகத்தில் உள்ள அத்தனை வயதிற்கு வந்தவரிற்கும் அவரது காம உணர்வு உண்டாகும் கணங்களில் அதற்கு வடிகாலாக ஒரு துணை இருக்கமுடியாது. அப்பொழுது அவர்களில் சிலர் பாலியல் தொழிலாளரை நாடிச்செல்வதும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கும்.

இது எமது நாட்டிற்கும் பொருந்தும். ஆதலால் எமதுநாட்டிலும் இதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும். மக்கள்மத்தியில் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். அதைவிடுத்து நாங்கள் உத்தமர்கள் எம்மிடம் இந்த வழமைகள் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தால் வேசைவீட்டு, வைப்பாட்டிவீட்டு, சின்னவீட்டு கதவுகளை திறப்பது ரகசியமாக நடந்துகொண்டுதான் இருக்கும்.

இப்பொழுது நான் ஊதுற சங்கை ஊதிவிட்டிருக்கிறன் சமுதாய விழிப்புணர்விலும் சமுதாயமறுமலர்ச்சியிலும் அக்கறைகொண்டவர்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து ஆரோக்கியமான மாற்றங்களுக்கான வழியை தேட முன்வாருங்கள்.

http://ampalatharpak...st_17.html#more[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், எல்லோரும் இணைந்து, ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை முன்னெடுக்கும் வரை, ஊதுவதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை!

எமதினத்தைப் பொறுத்தமட்டில், குற்றவாளிகளே சங்கையும் ஊதுகின்றார்கள்! :wub:

இது எப்போது ஆரம்பமானது?

எப்போது வெளிக்கிளம்பியது?

எப்போது வியாபாரமாக்கப் பட்டது?

இது ஆழமானதும் நுணுக்கமானதுனான விடயம், சும்மா கொணர்ந்து கருத்துக் குப்பைகளை கொட்டுவதனால் நிலைமை ந்முன்னேர்ரம் அடையாது.

விரோதிகளின் பழக்கமும் வேசிகளின் பழக்கமும் விரைவில் விசமாக மாறிவிடும்.

திருட்டு கொலை போனறவையும் உலகம் பூராகவும் நடை பெறுகிறது அதற்காக நாம் அதை சமூக நலன் கருதி அங்கீகரிக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.