Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறுக......

Featured Replies

Delhi12.jpg

ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள தமிழர்கள்

தற்போது சிறீலங்காவில் அல்லது தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்தால் 28.04.2006 ம் திகதிக்கு முன்னர்

சிறீலங்காவை விட்டு வெளியேறுமாறு IBC அறிவிப்பொன்று கூறுகிறது................

பயண தேவைகளுக்காக குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள நாட்டுத் தூதரங்களுடன் தொடர்பு கொள்க.

இதுபற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணையுங்கள்.

நன்றி: http://www.ibctamil.co.uk/

  • தொடங்கியவர்

நேற்று இரவு இணைய வழி வானோலி கேட்டுக் கொண்டிருக்கும் போது

இந்த அறிவித்தலைக் கேட்டேன்.

அதன் பின் எந்த சலனமுமில்லை...........

ஏன் ?

வியப்பே மேலிடுகிறது! :wink:

அஜீவன் உங்கடை வீட்டிலை IBC கேட்டால் வாண வேடிக்கை காட்டிற Destroyer இன்ரை படம் எல்லாம் தெரியுமோ?

பரபரப்பு ரிசி "வெடிச்சுத்து சிதறியது கார்" என்று சிவப்பிலை தலையங்கம் போட்டு குண்டு வெடிச்ச இடத்திலேயே முழுசா நிக்கிற காரின்ரை படத்தை போட்ட மாதிரி கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் உங்கடை வீட்டிலை IBC கேட்டால் வாண வேடிக்கை காட்டிற Destroyer இன்ரை படம் எல்லாம் தெரியுமோ?

பரபரப்பு ரிசி "வெடிச்சுத்து சிதறியது கார்" என்று சிவப்பிலை தலையங்கம் போட்டு குண்டு வெடிச்ச இடத்திலேயே முழுசா நிக்கிற காரின்ரை படத்தை போட்ட மாதிரி கிடக்கு.

:lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

அஜீவன் உங்கடை வீட்டிலை IBC கேட்டால் வாண வேடிக்கை காட்டிற Destroyer இன்ரை படம் எல்லாம் தெரியுமோ?

பரபரப்பு ரிசி "வெடிச்சுத்து சிதறியது கார்" என்று சிவப்பிலை தலையங்கம் போட்டு குண்டு வெடிச்ச இடத்திலேயே முழுசா நிக்கிற காரின்ரை படத்தை போட்ட மாதிரி கிடக்கு.

இதை ஒருக்கா 27.04.06 ம் திகதி இரவு முக்கிய அறிவித்தல் என்று கூறிய வானோலிக்குத்தான் சொல்ல வேண்டும்.

இனி இந்த வானோலிகளில பாட்டுக் கேட்கிறதோட சரி........

இவர்கள் விடுற வெடிகளை நாம தொடப் போய்

நம்ம கையை சுட்டுக் கொண்டு

உங்கள் மாதிரி ஆக்கள் கிட்ட மாட்டி

முழிக்கக் கூடாது பாருங்கோ :lol::lol: :P

20051222Get.gif

  • தொடங்கியவர்

ரொம்ப பயமா இருக்கிறேன்.

muppets.jpg

நேற்று (29.04.06) இரவு ஒரு நண்பரின் வீட்டுக்கு போய்

வீடு திரும்ப (30.04.06)அதிகாலை 1.00மணிக்கு மேலாகிவிட்டது.

எனவே வந்ததும் தூங்கி விட்டேன்.................

காலையிலேயே எழுந்ததும் வேலைக்கு போய் விட்டேன்.

ஒரு சின்ன இடைவேளை கிடைத்த போது என் தொலைபேசியை பார்த்தால் சில மிஸ் தொலைபேசி அழைப்புகள்...................வந்திருந்த

ஐபிசி வானொலியில் வந்த அந்த விசேட அறிவித்தல் சுவிஸ் லுசேர்ன் நகரிலுள்ள ஒருவர் தற்போதைய இலங்கை நிலவரத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி பணம் பண்ணப் பார்த்துள்ளார். அவருடன் தொடர்பு கொண்டு கதைத்தவர்களிடம் தலைக்கு 480 சுவிஸ்பிராங்குகள் கொமிசன் கேட்டுள்ளார். இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தேசிய வானொலியும் அறவிட்டு அவரின் நடவடிக்கைக்கு துணை போயுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை வைத்து பணம் பண்ணலாமா? எப்பிடி? விழக்கமா சொல்லுங்கய்யா நானும் சம்பாத்திக்கவேணுமல்லோ.மற்றத

சாத்திரி இப்ப நீரும் இதைத் தானே செய்கின்றீர் என ஓரு பேப்பர் :roll: :(

மேலே நான் குறிப்பிட்ட விடயத்தில் சம்பந்தப் பட்டவர் செய்தியை வைத்து பணம் பார்க்கவில்லை. ஒரு விசேட அறிவித்தல் ஒன்றைக் கொடுத்தே பணம் பார்த்துள்ளார். உமக்கு நான் சொல்லி தெளிவு படுத்துவதை விட இங்கு குலம் அவர்களைத் தொடர்பு கொண்டீரானால் அவர் உமக்கு சொல்வார். உமக்கும் அப்போது தானே திருப்தி கிடைக்கும். :lol::lol:

  • தொடங்கியவர்
செய்தியை வைத்து பணம் பண்ணலாமா? எப்பிடி? விழக்கமா சொல்லுங்கய்யா நானும் சம்பாத்திக்கவேணுமல்லோ.மற்றத

அஜிவன்

நம்மவர்கள் சம்பந்தப்பட்டவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து போகாமல் இருக்கவே இவ்விடயத்தை இங்கே தந்தேன். சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட விபரங்களை இங்கே வெளியிடுவது கள விதிமுறைகளுக்கு பொருத்தமற்றது என்பதால் அதனை இங்கே தருவதைத் தவிர்க்கின்றேன். சிறு உதவியாக அந்த விசேட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்ட கைத்தொலைபேசி இலக்கம் குறிப்பிட்ட நபரினது கைத்தொலைபேசி இலக்கமே.

  • தொடங்கியவர்

அப்போ அந்த வானோலியை அவர் தனக்கு சாதகமான விதத்தில் தந்திரோபயமாக பயன் படுத்தினாரா?

பெரிய ஆள்தான்? :evil:

இதற்கு யார் உடந்தையாக செயல் பட்டதோ தெரியாது? :roll:

முடிந்தால் தயவு செய்து அந்த தொலைபேசி இலக்கத்தை தனி மடலில் எனக்கு அனுப்புங்கள்.

என்ன செய்யலாம் என்று பார்க்கிறேன்.

இது பற்றி சிலரிடம் பேசியுள்ளேன்.

இவரது இந்த சிலுமிசத்தை ஊர்ஜிதப்படுத்த முடிந்தால்

இவரே கூடிய விரைவில் நேராக ஊருக்கு போய்

ஆக்களை ஐரோப்பாவுக்கு அனுப்பி வைக்கலாம்.

பாவம் அவரால்தான் திரும்பி வர முடியாது! :P

இப்படியான விடயங்களுக்கு அந்த வானொலி அடிக்கடி துணை போகின்றது. சென்ற வருடமும் பிரித்தானியாவிலுள்ள தமிழர் ஒருவர் தான் ஒரு முதலீட்டு நிறுவனம் தொடங்கியிருப்பதாகவும் அதில் 1100 பிரித்தானியப்பவுண்டுகள் முதலீடு செய்தால் 3 வருடங்களில் 27000 பிரித்தானியப்பவுண்டுகளை மீளப் பெறலாம் என ஒரு விளம்பரம் செய்தார். இதனை அவ்வானொலி அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் சேர்ந்து இத்திட்டம் முற்றிலும் உண்மையானதென்றும் நீங்கள் எவ்வித தயக்கமுமின்றி முதலிடலாம் என்று வக்காலத்து வாங்கினார்கள். தற்பேர்து என்ன நடந்தது. எல்லாம் பணம் படுத்தும் பாடு.

  • தொடங்கியவர்

உங்கள் தகவலுக்கு நன்றி வசம்பு.

மேற்குறிப்பிட்ட நிகழ்வு பற்றி

முக்கியமான சிலரிடம் பேச வாய்ப்புக் கிடைத்தது.

அத்தோடு சில நெருங்கிய நண்பர்களும் இது பற்றி

என்னோடு பேசினார்கள்.

இங்கே ஒரு சிலர் ஏமாற்றப்பட்டிருப்பதாக அறிகிறேன்.

ஆனால் இதில் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை

என்னால் உறுதி செய்ய முடியவில்லை.

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

அதாவது இதனால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது

இப்படியான விளம்பரத்தினூடாக ஏமாற்றப்பட்டிருந்தாலோ

நிச்சயம் உங்கள் நாட்டு போலீசில் நேரடியாகவோ அல்லது

ஒரு உதவி நிறுவனம் மூலமாகவோ அல்லது

Privat-Rechtsschutz (Private law protection) மூலமாகவோ

அல்லது வழக்கறிஞர் ஒருவர் மூலமாகவோ ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்.

ஆனால் அதற்கான சாட்சிகள் மற்றும் அத்தாட்சிகளை

முன்னிறுத்த வேண்டும்.

அது பாதிக்கப்பட்டோர் கரங்களிலேயே உண்டு.

அடுத்து

இதனால் இந்த அறிவித்தலை ஒலிபரப்பிய ஊடகத்தை ஒன்றும் செய்ய முடியாது.

அவர்களிடம் அந்த விளம்பரம் பற்றிய அல்லது அது குறித்த

மேலதிக தகவல்களை போலீசார் கேட்கலாம்.

அவர்களுக்கு உதவுவது அந்த ஊடகத்தின் கடமையாகும்.

இதனால் அந்த ஊடகத்துக்கு பாதிப்பில்லை.

இதே விளம்பரத்தை ஒருவர் பணம் செலுத்தினால்

சுவிஸ் நாட்டு ஊடகம் கூட அதையே செய்யும்.

இதற்காக அவர்கள் மேல் பழி போட முடியாது.

காரணம் வானோலி - தொலைக்காட்சி -மற்றும் பத்திரிகைகள் போன்ற ஊடகங்கள்

தமது ஊடகங்களை நடாத்த பெரும்பாலும் விளம்பரங்களையே நம்பியிருக்கிறது.

இது உலக ஊடகங்களின் பொதுவான நிலை.

தமக்குக் கிடைக்கும் விளம்பரங்கள் அனைத்தையும்

ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதென்பது தர்கரீதியாக (லொஜிக்)

நடை முறைப்படுத்த முடியவே முடியாத ஒன்றாகும்.

எனவே இதில் எந்தவொரு ஊடகத்தையும் தண்டிக்க முடியாது.

இருந்த போதிலும்

மேலே நாம் பேசும் விளம்பரத்தை சம்பந்தப்பட்ட நபர்

மிகவும் புத்திசாலித்தனமாக ஒரு முக்கிய அறிவித்தல் என்ற தலைப்பிலே கொடுத்ததும்

இதற்கு வேறு சில பெயர்களையும் நாடுகளையும் இணைத்துக் கொண்டதையும்

பார்க்கும் போது இவரது ஏமாற்றுத் திறமையின்

உச்சத்தை நாமே பார்த்து வியக்க வேண்டியதாக உள்ளது.

இப்படியான விளம்பரங்கள் வரும் சமயங்களில்

சிறிது உன்னிப்பாக அதுபற்றி நமது ஊடகங்கள்

விழிப்பாய் இருத்தல் அவசியம்.

காரணம் நமது மக்களுக்காக சேவை செய்ய விரும்பும்

நாமே

நமது மக்களை ஏமாற்ற எம்மை அறியாமலே துணை போவது

எம்மையே வருத்திக் கொள்வதற்கு இணையாகிவிடும்.

இது பற்றி யாழ் போன்ற இணையம் ஒன்றின் கருத்துக்களமொன்றில் (forum)

எழுத யாரும் அஞ்ச வேண்டியதில்லை.

forum என்பது நமக்கு தெரிந்த அல்லது சந்தேகமான

ஒரு விடயத்தை அது குறித்த மக்களோடு சம்பாசிக்க அல்லது வாதிட தளம் அமைத்துக் கொடுக்கும்

ஒரு வட்ட மாநாட்டு மேசையே.............

இங்கே யாரும் தலைவர்களாகவோ ஊழியர்களாகவோ இருப்பதில்லை.

நல்லது கெட்டதை மட்டுமல்ல காதில் - நேரில் கேட்டதையும்

பார்த்ததையும் பகிர்ந்து கொள்கிறோம்.

உண்மையாக நியாயமாக படுவதை ஏற்றுக் கொள்வதும்

ஏற்றுக் கோள்ளாமல் விடுவதும் அவரவர் விருப்பம்.

மு.குறிப்பு:-முக்கியமாக ஒரு விடயத்தைப் பற்றி பேசும் போது

அதைத் தவிர்த்து சபை குழப்பிளாக இருக்காமல் எப்போதும்

தலைப்புக் கீழே கருத்துகள் இருந்தால் பதிவது

உங்களை நாகரீகமான கருத்தாளராக்கும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் போடுங்கோ அஜீவன் அண்ணா!

அதை விட்டுவிட்டு வயிற்றெரிச்சலில் வானொலியைத் திட்ட வேணும் என்று திரிபவர்கள், சந்தர்ப்பங்களை தமக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளமுனைவது தான் வேதனை!!

வானொலியோ தொலைக்காட்சியோ "ஒரு முக்கிய அறிவித்தல்" என்று செய்து போட்டு பிறகு அது விளம்பரம் என்று குத்துக்கரணம் அடிக்க முடியாது.

வெளிநாடுகளில் தொலைக்காட்சிகளில் வரும் சில விளம்பரங்கள் ஒரு குறு விபரணமளவிற்கு நீண்டிருக்கும். அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னர் இது பணம் செலுத்தப்பட்ட விளம்பர விபரணம் என்று அறிவித்து விட்டுத்தான் போடுவார்கள். அந்த விளம்பரத்தின் வசன நடைகள் காட்சிகள் எல்லாம் ஒரு விபரண பாணியில் தான் இருக்கும். அந்த நிகழ்ச்சியின் இடையிடையேயும் இது ஒரு பணம் செலுத்தப்பட்ட விளம்பர விபரணம் என்று எழுத்தோட்டங்கள் வந்து கொண்டிருக்கும் பார்வையாளர்களை குழப்பாது இருக்க. இவைகள் பொறுப்புள் ஊடகங்களின் தார்மீக கடமை என்பது மாத்திரமல்ல இவற்றிற்கு சட்ட விதமுறைகளும் இருக்கு. இதை மீறி செயற்படும் ஊடகங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

அஜிவன் எழுதியது:

மு.குறிப்பு:-முக்கியமாக ஒரு விடயத்தைப் பற்றி பேசும் போது

அதைத் தவிர்த்து சபை குழப்பிளாக இருக்காமல் எப்போதும்

தலைப்புக் கீழே கருத்துகள் இருந்தால் பதிவது

உங்களை நாகரீகமான கருத்தாளராக்கும். நன்றி.

அஜிவன்

நீங்கள் சிலவற்றை எழுதும் போது சிலர் அது புரியாமல் உடனேயே மீண்டும் அதே தவறைச் செய்து விட்டுச் செல்கின்றார்கள். தயவு செய்து எனிமேல் எழுதும் போது வாழைப்பழத்தை உரித்து ஊட்டி விடுவது போல் எழுதுங்கள். சில வேளை புரிந்தாலும் புரிந்து கொள்வார்கள்.

மேலும் சம்பந்தப்பட்டவரின் விளம்பரத்தை வானொலிதான் அறிவித்தலாக்கியது. காரணம் விளம்பரமாகச் சொல்லியிருந்தால் எதிர் பார்த்த பரபரப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால் முக்கிய அறிவித்தல் என்று சொல்லும் போது பலர் பதட்டத்துடன் சம்பந்தப்பட்டவரை அணுகுவார்கள்.

மேலும் இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்க முயலும் போது போதிய ஆதாரங்களைச் சமர்பிக்க வேண்டும். அத்துடன் வக்கீலுக்கு ஆயிரக்கணக்கில் செலுத்த வேண்டும். இவற்றையெல்லாம் எண்ணி பலர் பேசாமல் இருந்து விடுவார்கள்.

  • தொடங்கியவர்

வானொலியோ தொலைக்காட்சியோ "ஒரு முக்கிய அறிவித்தல்" என்று செய்து போட்டு பிறகு அது விளம்பரம் என்று குத்துக்கரணம் அடிக்க முடியாது.

வெளிநாடுகளில் தொலைக்காட்சிகளில் வரும் சில விளம்பரங்கள் ஒரு குறு விபரணமளவிற்கு நீண்டிருக்கும். அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னர் இது பணம் செலுத்தப்பட்ட விளம்பர விபரணம் என்று அறிவித்து விட்டுத்தான் போடுவார்கள். அந்த விளம்பரத்தின் வசன நடைகள் காட்சிகள் எல்லாம் ஒரு விபரண பாணியில் தான் இருக்கும். அந்த நிகழ்ச்சியின் இடையிடையேயும் இது ஒரு பணம் செலுத்தப்பட்ட விளம்பர விபரணம் என்று எழுத்தோட்டங்கள் வந்து கொண்டிருக்கும் பார்வையாளர்களை குழப்பாது இருக்க. இவைகள் பொறுப்புள் ஊடகங்களின் தார்மீக கடமை என்பது மாத்திரமல்ல இவற்றிற்கு சட்ட விதமுறைகளும் இருக்கு. இதை மீறி செயற்படும் ஊடகங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

நீங்கள் சொல்வது சரி குறுக்ஸ்.

அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

உள்ளே உள்ள பிரச்சனைகள் பலருக்குத் தெரியாது..............

புலம் பெயர் தமிழ் ஊடகங்களில்

ஆரம்ப காலங்களில் நல்ல நோக்கங்கங்களோடு பணிபுரிந்துள்ளேன்.

காலப் போக்கில் அவை எனக்கு அலர்ஜியானது.

அப்போது நான் பெற்ற அனுபவத்தை நான் அதற்கு முன் பணிபுரிந்த நாடுகளில் பெற்றதேயில்லை.

பெறவும் முடியாது.

இவ்வூடகங்களில் நான் கண்டது

ஊடகத் தகுதி கொண்டவர்களை பணிக்கு அமர்த்துவதை விட

தெரிந்தவர்கள் என்றோ

குரல் வளம் மிக்கவர்கள் என்றோ

அடிமைகளாக எதற்கும் தலையாட்டக் கூடியவர்கள் என்றோ உள்ளவர்களை

பணிக்கு அமர்த்தி இருப்பதே..............

இவர்களில் ஒரு சிலரைத் தவிர

பெரும்பாலானவர்கள் ஊடகவியல் பற்றிய

கல்வி மற்றும் பயிற்சி அறிவு சிறிதும் அற்றவர்கள் என்பதே.

இவற்றை விடப் பெரிய கொடுமை

இவ்வூடகங்களின் தலைமைப் பொறுப்பில் அல்லது முதலாளிகளாய் உள்ளவர்களுக்கு

ஊடகம் என்றாலே என்ன வென்றே தெரியாத போது

ஊடகவியல் சட்டங்கள் பற்றி என்ன தெரிய வேண்டியுள்ளது?

இவர்களிடமிருப்பது ஆர்வக் கோளாறு மட்டுமே!

அல்லது

அந்த நாட்டு மானியம் பெற - வரிவிலக்கு பெற

ஒரு பொருட்டாய் ஊடகம் நடத்துவது.

இதுவே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அடிப்படை.

இவை திருத்தப்படாத வரைக்கும்

தவறுகள் இடம் பெறுவதை தவிர்க்க முடியாது என்பது மட்டுமல்ல

முன்னேற்றங்களை நோக்கியும் செல்ல முடியாமலேயிருக்கும்.

புலம் பெயர் நாடுகளில் தமிழ் மொழியை

ஏனைய மொழி பேசுபவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது ஒரு சாதகம்.

எனவே எங்குமே தப்புவதற்கு சட்டத்தின் ஓட்டைகள்

இருக்கும்.

புலம் பெயர் நாடுகளில் உள்ள ஊடகங்களை நேசிப்பவர்களே

அந்த ஊடகங்களை பார்ப்பவர்களாயும் - கேட்பவர்களாயும்

இருக்கிறார்கள்.

இதனால் இவர்கள் சொல்வதை தேவவாக்காக வேறு எடுத்துக் கொள்கிறார்கள்.

இதை யாரும் மறுக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

ஊரில் மாபெரும் பாதகர்களாக இருப்போர் கூட

ஊடகங்களில் நேயர்களாக பங்கு பற்றும் போது அகிம்சாவாதிகளாக

தம்மைக் காட்டிக் கொள்வதோடு

தமது சுயநல காரியங்களை செய்வதற்கும் கேட்போரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இவற்றைப் பற்றி விவாதித்தால்

அதை புரட்டிப் பேசி சமாளித்து விடுவர்.

தமிழ் மொழி ஆளுமை கொண்டவர்கள் எதையும்

புரட்டிப் பேசும் வார்த்தை ஜாலங்களால்

நம்மையே குற்றவாளியாக்கி விடுவர்!

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது"

என்று பட்டுக்கோட்டையார் சொன்னது போல

அவர்களாக திருந்தினால் ஒழிய................ :P

  • தொடங்கியவர்

மேலும் சம்பந்தப்பட்டவரின் விளம்பரத்தை வானொலிதான் அறிவித்தலாக்கியது. காரணம் விளம்பரமாகச் சொல்லியிருந்தால் எதிர் பார்த்த பரபரப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால் முக்கிய அறிவித்தல் என்று சொல்லும் போது பலர் பதட்டத்துடன் சம்பந்தப்பட்டவரை அணுகுவார்கள்.

இங்கே சில நடைமுறைச் சிக்கல்களை வசம்புவுக்கு நானும் ஒரு ஊடகவியளாளன் என்பதால்

என் கருத்தாக விளக்க வேண்டியிருக்கிறது.

சில விளம்பரங்கள் ஒரு மாதத்துக்கு அல்லது வருடத்துக்கு அல்லது சில வாரங்களுக்கு என்று வந்தால்

நிச்சயம் அதை தனி விளம்பரமாக இசை சேர்த்து அல்லது

இருவரது குரல்களில் அல்லது விளம்பரத்துக்கு

ஏற்ற விதத்தில் தயாரித்து ஒலிபரப்புவதுண்டு.

ஆனால் 1 அல்லது 2 நாட்களுக்கு என்று ஒரு விளம்பரத்தை

கொடுத்தால் அவர்கள் ஒலிபரப்பச் சொல்லிக் கேட்கும் நேரத்தில்

அப்போது இருக்கும் ஒலிபரப்பாளர்

அந்த பேப்பரை (தாளை) பார்த்து வாசித்து விடுவார்.

இதற்காக அனாவசியமாக கால -நேரம் யாரும் எடுப்பதில்லை.

(உதாரணமாக : மரண அறிவித்தல்கள் போன்றவை.........

இந் நிலையிலே இது நடந்திருக்கலாம் என்பது எனது ஊகம்................)

நீங்கள் சொல்வது போல் செயலாற்ற

பணியாளர்களும் நம்மவர் கலையகங்களில் இல்லை.

ஒலிபரப்பாளரே பாடல் தேடுபவராயும்

அறிவிப்பவராயும்

பாடல்களை போடுபவராயுமிருக்கிறார்.

அதை விட சிலரது தொல்லை பேசிகளுக்கு பதில் பேச வேண்டிய அப்பாவியாயுமிருக்கிறார்.

வானோலிகளில் சிரித்து பேசி மகிழும்

அந்த கலைஞர்கள் நிலை

ஆப்பிழுத்த . :twisted: .................நிலைதான்!

இதையெல்லாம் யாரும் சொல்வதில்லை.

அனுபவிச்வனுக்குதான் மரண அடி என்றால் என்ன என்பது போல விழங்கும் சாமி :lol:

மேலும் இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்க முயலும் போது போதிய ஆதாரங்களைச் சமர்பிக்க வேண்டும். அத்துடன் வக்கீலுக்கு ஆயிரக்கணக்கில் செலுத்த வேண்டும். இவற்றையெல்லாம் எண்ணி பலர் பேசாமல் இருந்து விடுவார்கள்.

அஜிவன்

நன்றி உங்கள் பதிலிற்கு. ஒரு வானொலியில் விளம்பரமொன்றைச் சொல்லும் போது அதை விசேட அறிவித்தல் என்றோ அல்லது முக்கிய அறிவித்தல் என்றோ சொல்வதில்லை. அப்படி ஒரு விளம்பரத்தை விளம்பரமாகத் தயாரிக்காமல் அதனைச் செய்தியாக சொல்ல நேரிட்டாலும் அதனை இன்னார் தந்ததாகக் குறிப்பிட்டே சொல்வார்கள். ஒரு அவசரச் செய்தியைச் சொல்லும் போது தான் விசேட அறிவித்தல் அல்லது முக்கிய அறிவித்தல் என்று அறிவிப்பார்கள். இது விடயத்தில் எனக்கு நிறைய முன்னனுபவங்கள் உண்டு. காரணம் முன்பு சில வருடங்கள் நானும் விளம்பர முகவராகக் கடைமையாற்றியவன்.

அதுபோல் Rechtsschutz இல் ஒரு அங்கத்தவராக நீங்கள் சேர்ந்தால் தற்போதைய நடைமுறைப்படி குறைந்தது 5 வருடங்களுக்கு அந்கத்துவப் பணம் செலுத்தியே ஆக வேண்டும். அதுவும் வருட அங்கத்துவப்பணம் தற்போது 300 பிராங்குகளுக்கு மேல். அவர்களுக்கும் சரியான ஆதாரங்களைச் சமர்பித்தாலேயே வழக்கை நடத்த முன்வருவார்கள். அடிக்கடி சட்டப் பிரைச்சினையில் மாட்டிக் கொள்வோருக்கு பறுவாயில்லை. எப்போதாவது ஒரு பிரைச்சினையைச் சந்திப்போர் அப்போது மட்டுமே வழக்கறிஞரை நாடுவது இலாபமானது. .

  • தொடங்கியவர்

அஜிவன்

ஒரு வானொலியில் விளம்பரமொன்றைச் சொல்லும் போது அதை விசேட அறிவித்தல் என்றோ அல்லது முக்கிய அறிவித்தல் என்றோ சொல்வதில்லை. அப்படி ஒரு விளம்பரத்தை விளம்பரமாகத் தயாரிக்காமல் அதனைச் செய்தியாக சொல்ல நேரிட்டாலும் அதனை இன்னார் தந்ததாகக் குறிப்பிட்டே சொல்வார்கள். ஒரு அவசரச் செய்தியைச் சொல்லும் போது தான் விசேட அறிவித்தல் அல்லது முக்கிய அறிவித்தல் என்று அறிவிப்பார்கள். இது விடயத்தில் எனக்கு நிறைய முன்னனுபவங்கள் உண்டு. காரணம் முன்பு சில வருடங்கள் நானும் விளம்பர முகவராகக் கடைமையாற்றியவன்.  

ஏதோ நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இங்கே கருத்தாடுவதால் செத்தவனை எழுப்ப முடியாது

இது ஒரு போஸ்மோட்டம் போல............

நோயை அறிய முனைவதாக நினைப்போம்.

அடுத்து இதே நிலை உருவாகாமல் இருக்க

அல்லது

இப்படியான அறிவித்தல்களில் அவதானமாக இருக்க

இதை வாசிப்போருக்கு உதவும்.

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும்

ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள்.

என் ஆரம்ப நாட்களில் நடந்த ஒரு நிகழ்வு

நினைவுக்கு வந்தது.

பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் சிங்கள வர்த்தக சேவையில் பணியாற்றிய ஆரம்ப காலம் அது......

ஒரு நிறுவனத்துக்கு விளம்பரம் ஒன்றை செய்யும் படி எமக்கு பணிக்கப் பட்டு எழுத்துருவில் (டெக்ஸ்) என்ன வார்தைகள் வர வேண்டுமென்று தரப்பட்டது.

மாஜரின் (பட்டர்) என்ற பொருள் விற்பனைக்கான வர்த்தக விளம்பரம் அது.

"மாஜரின் புட்டிகளுக்குள் தங்க நாணய அதிஸ்டங்கள்.

வாங்குவோர் அதிஸ்டசாலிகளாய் இருந்தால்.........

புட்டிக்குள்(டின்) இருக்கும் தங்க நாணயங்களை பெறுவீர்கள்........"

இந்த விளம்பரத்துக்கு எதிராக "மனித ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று...."

பத்திரிகைகளில் பல பெரியோர்கள் எழுதியதன் விளைவாக

சுகாதார அமைச்சு இதற்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடர முயன்றது.

அடுத்த வாரமே விளம்பர வார்த்தைகள் மாறின....

"ஒரு சில மாஜரின் புட்டிகளுக்குள் தவறுதலாக

ஒரு சில தங்க நாணயங்கள் விழுந்து விட்டன.

அது சுகாதார கேடு என அறிய வருகிறது.

அப்படியான புட்டிகளை

தங்க நாணயங்களோடு திருப்பித் தருவோருக்கு

சன்மானம் வழங்கப்படும்." :wink:

எப்படியோ மாஜரின் விற்பனையானது.

அதுபோல் Rechtsschutz இல் ஒரு அங்கத்தவராக நீங்கள் சேர்ந்தால் தற்போதைய நடைமுறைப்படி குறைந்தது 5 வருடங்களுக்கு அந்கத்துவப் பணம் செலுத்தியே ஆக வேண்டும். அதுவும் வருட அங்கத்துவப்பணம் தற்போது 300 பிராங்குகளுக்கு மேல். அவர்களுக்கும் சரியான ஆதாரங்களைச் சமர்பித்தாலேயே வழக்கை நடத்த முன்வருவார்கள். அடிக்கடி சட்டப் பிரைச்சினையில் மாட்டிக் கொள்வோருக்கு பறுவாயில்லை. எப்போதாவது ஒரு பிரைச்சினையைச் சந்திப்போர் அப்போது மட்டுமே வழக்கறிஞரை நாடுவது இலாபமானது.

நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.