Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூட்டினுக்கு எதிராக பாடிய 3 பெண்களுக்கு சிறை தண்டனை

Featured Replies

[size=2][size=4]ரஷியாவின் அதிபராக விளாடிமி புதின் பதவி வகிக்கிறார். கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது தடவையாக அதிபராகி உள்ளார். இதற்கு ரஷியாவின் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.[/size][/size]

[size=2][size=4]இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது அதிபர் புதினுக்கு எதிராக பாடல் பாடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து அந்த பாடலை பாடிய பாடகர் குழுவை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.[/size][/size]

[size=2][size=4]அதிபர் புதினுக்கு எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்புவதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மரினாசிரோவா குற்றம் சாட்டப்பட்ட 3 பெண்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.[/size][/size]

[size=2][size=4]இதற்கு ஐரோப்பிய வெளியுறவு தலைவர் காத்ரீன் ஆஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதவிர ரஷியாவில் நூற்றுக்கணக்கானோர் கண்டன பேரணியும் நடத்தினார்கள்.[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=111932[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4] இந்த பெண்களில் ஒருவர் கனேடிய நிரந்தர உரிமை மேற்றவர். அதனால் இதில் 'மேற்குலகமும்' சம்பந்தட்டுள்ளது. எனவே உருசியா இதை 'சதி' என்கிறது. [/size]

[size=4]உலகம் முழுவதும் இவர்களுக்கு ஆதரவாக உருசியா நாட்டின் தூதுவராலயங்கள் முன்னர் ஆர்ப்பாட்டங்கள் நடக்க உத்தேசிக்கப்படுள்ளது.[/size]

[size=4]பல 'ஹாலிவூட்' பிரபல்யங்களும் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். [/size]

[size=5]Pussy Riot draws international support after guilty verdict[/size]

http://www.theglobeandmail.com/news/world/pussy-riot-draws-international-support-after-guilty-verdict/article4487711/?cmpid=rss1

  • கருத்துக்கள உறவுகள்

பூட்டின் - அஹமதினஜாட் - ஆசாத் - மகிந்த நல்ல கூட்டணி..

பூட்டின் கெட்டிக்காரன். யெல்சன் காலத்திற்கு பின்னர், மக்கள் ஒருநேர சாப்பாடுக்கே கஸ்டப்பட்டபோது ரஸ்சியாவை BRIC நாடுகளில் ஒன்றாகக் கொண்டுவந்து இணைத்தவர். ரூசியாவை கட்டி எழுப்பியவர். ரஸ்சியாவை கவனமாக வியாபார வழி கொண்டு செல்கிறவர். வழமையான கம்யூனிச தோய்ப்பு இருப்பதால் மிடுக்காக நடந்து கொள்கிறார். ஆனால் கிட்லர் போல ரஸ்சியாவை வளர்த்துவிட்டு அழிக்க மாட்டார். மேற்குநாடுகளில் சமகாலத்தில் இதுவரை இவர் மாதிரி தலைவர் வரவில்லை. (ஓபாமா ஜெனநாயக அதிபர் என்பதால் புட்டினுடன் ஒப்பிடப்பட முடியாதவர். ஒபாமா அமெரிக்கவின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பவது மக்களுக்கு நோவில்லாமல் செய்ய வேண்டும். புட்டின் பதிவி எடுத்த போது ரஸ்சியர் படவேண்டி நேர்ந்த கஸ்டங்களை அமெரிக்கர் கிட்டவும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே ஆறுதலாகத்தால் அமெரிக்கா வழமைக்கு திரும்பமுடியும்.) இவரின் அடுத்த 2 தவணையும் முடிய ரஸ்சியா மிகப்பலமுள்ள நாடாக வளர்ந்து விடும். பொருளாதாரத்தில் யேர்மனியை தாண்டினால். அல்லது கிட்ட வந்தால், EU தன்னுடன் அணைத்துக் கொள்ளவும் பார்க்கும்.

பின் இணைப்பு: விக்கிபீடியா

Putin has been widely credited for overseeing a return of political stability and economic progress to Russia, ending the crisis of the 1990s. During Putin's first premiership and presidency (1999–2008), real incomes increased by a factor of 2.5, real wages more than tripled; unemployment and poverty more than halved and the Russians' self-assessed life satisfaction rose significantly. Putin's first presidency was marked by high economic growth: the Russian economy grew for eight straight years, seeing GDP increase by 72% in PPP (sixfold in nominal). These achievements have been ascribed by analysts to good macroeconomic management, important fiscal reforms, increasing capital inflows, access to low-cost external financing and a five-fold increase in the price of oil and gas which constitute the majority of Russian exports.

As Russia's president, Putin passed into law a flat income tax of 13%, a reduced profits tax, and new land and legal codes. As Prime Minister, Putin oversaw large scale military reform and police reform. His energy policy has affirmed Russia's position as an energy superpower. Putin supported high-tech industries such as the nuclear and defence industries. A rise in foreign investment contributed to a boom in such sectors as the automotive industry. Development under Putin has included the construction of pipelines, the restoration of the satellite navigation system GLONASS, and the building of infrastructure for international events.

In Russia, Putin's leadership has mostly enjoyed considerable popularity, with generally high approval ratings. However, many of his actions have been characterised by the domestic opposition as undemocratic

கம்யூனிசத்தின் முரட்டுத்தன்மை இவரிடம் காணப்படுவதால் இவரை நமது கோமாளிகளுடன் சேர்க்க முடியாது. இவர் பிறக்கும் போது நாடு ஜனநாயக நாடாக இருந்திருந்தால் இவர் ஒரு நல்ல சோசலிஸ்டாக இருந்திருக்க சந்தர்ப்பம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூட்டின் செய்தது சரியெனவே எனக்குப்படுகின்றது.

  • தொடங்கியவர்

[size=4]

EU தன்னுடன் அணைத்துக் கொள்ளவும் பார்க்கும்.
[/size]

[size=4]ஆனால் நேட்டோ அதை விரும்புமா? [/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]பொருளாதார ரீதியாக உருசியா மிகவும் பலமான நாடு. ஆனால் அது 'திட்டமிட்ட' சோஷலிச பொருளாதார கொள்கையில் இருந்து 'திறந்த பொருளாதார' கொள்கைக்குள் செல்ல பயப்படுகின்றது. காரணம், மேற்குலக மாயைக்குள் மக்கள் மாட்டுப்பட்டு விடுவார்கள். பயன்பெறுவது மேற்குலக நிறுவனங்கள்.[/size]

[size=1][size=4]எனவேதான் அது [/size][size=5]BRIC [/size][size=4]இல் உள்ளது. இங்கேயும் அது சீனா முன்னணியில் நிற்பதை விரும்பவில்லை. [/size][/size]

[size=1][size=4]விளைவு, ஒரு இரண்டுங்கெட்டான் நிலைமை. [/size][/size]

Edited by akootha

ரஸ்சியா எந்த பக்கம் போக வேணும் என்பது மேற்கிற்கும் தெரியாது ரஸ்யாவுக்கும் தெரியாது. நேட்டோ சோவியத்திற்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அதை ரஸ்சியாவுக்கு எதிராக கிளின்ரனோ ஒபமாவோ அவசரப்பட்டு பயன்படுத்துவதில்லை. புஸ் தோற்பது நிச்சயம் என்றும், அவர் அமெரிக்க சரித்திரத்தில் மிகக் குறந்த இடம் எடுக்கப் போகிறார் என்றதும் தெரிந்தவுடன் கொண்டிடிலீசா ஜோஜியாவுக்கு சென்று போரை ஆரம்பிக்கும் படி கேட்டா. அவவின் எதிர் பார்ப்பு அதி பாதளத்தில் இருந்த பொருளாதாரத்துடன் ரஸ்சியாவுக்கெதிரான சணடை ஒன்றை ஆரம்பித்தால் அது பெரிய கஸ்டத்தை புதிய அரசாங்கத்திற்கு கொடுக்கும் என்பதுதான். ஆனால் ரஸ்சியா போரை ஒருகிழமைக்குள் முடித்துவிட்டது. அது புஸ்சின் அரசாங்கத்திற்கு பெரிய ஏமாற்றம். அதுமட்டுமல்ல போலந்தில் மிஸ்செயில் காப்பு ஓபாமாவுக்கு பெரிய இடைஞ்சல். தேர்தல் நேரம் தான் அதை இல்லாதொழிப்பன் என்றவர். ஆனால் ஈரானின் பிரச்சனை கூடிக்கொண்டு போவதால் அது இழுபறிப்படுகிறது.

அந்த நேரத்தில் ரஸ்சியா தான் மேற்கு ஐரோப்பவின் பாதுகாப்பில் பிரதான பங்கெடுக்க கேட்டது. அது புஸ்சுக்கு மட்டுமல்ல ஒபாமாவுக்குமே அது கூடிய விரைவு. ரஸ்சியா சீனாவுடன் பொருளாதர உறவுக்கு மேல் போகாது. அமெரிக்காவையும், மேற்கு ஐரோப்பவையும் தன்னை pet பண்ணாவிடில் சீனாவுடன் சேர போவதாக மிரட்டும். உண்மையில் சேராது. சீனா, இந்தியா பொருளாதார எழுச்சி பூரணமான பிறகு மேற்குநாடுகளுக்கு தமது பொருளாதாத்திற்கு நல்ல கூட்டு தேவை. ரஸ்சியாவுக்கு ஒருவரும் இல்லை. EU தவ்விக்கொண்டிருக்கு. அமெரிக்காவின் NT மேலே போக இயலாமல் இருக்கு. கிளின்ரன் தென்னமெரிக்க நாடுகளை வளைக்க போக அவை ஒரே அடியாக அடித்து துரத்திவிட்டன. இடையில் பூஸ்சின் ரவுடித்தனத்தால் அமெரிக்காவை தென்அமெரிக்க நாடுகள் இப்போதைக்கு நம்பா.

கொரியா, யப்பான் அவுஸ்திரேலிய நாடுகள் என்ன செய்ய இருக்கிறாகளோ தெரியாது.

பொருளாதாரம் தலை தூக்க NATO மெல்ல மெல்ல படி இறங்கும். அப்போது ஐரோப்பாவில் ரஸ்சியாவுக்கான இடம் கிடைக்கும். 30-40 வருடங்களுக்கு பின்னர் அமமெரிக்காவுக்கு தென் அமெரிக்க நாடுகள் கிடைக்கும்.

இனிமேலைய காலத்தில் Unionகள் பொருளாதாரத்தை வைத்து முன் செல்லும். பழைய Cold War காலம் மாதிரி பாதுகாப்பை நம்பி செல்லமாட்டா. சீனாவும் ரஸ்சியாவும் தங்கள் நண்பர்களை கைகளுவிவிட்டது போலவே, ஜோஜியா நேரம் பிரான்சு, ஜேர்மனி ஜோஜியாவிற்கு கை கொடுக்க ஓடவில்லை. பிரான்சு ஒரு படி மேலே சென்று ஜோஜியாவை பின்வாங்க வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தது. NATO தனது கோடியில் நடந்த சணடையை கண்டும் காணததுமாக இருந்துவிட்டது.

இலங்கை சீனாவை நம்பி செய்யும் சண்டித்தனங்கள் எங்கே போகுமோ தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.