Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம்! மேட்டுக்குடி!! தலித்தியம்!!!

Featured Replies

[size=3][size=3]Barathy.jpg

[size=4]ண்மைக்காலமாக அதுவும் புலம்பெயர்ந்து எழுதிவரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை பார்த்தீர்களேயானால் யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பை விமர்சிக்கும் எழுத்துக்கள், குறிப்பாக தலித்திய எழுத்துக்கள் என்ற வரையறைககுள் நின்று பலர் மத்தியில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், மேட்டுக்குடியினர் என்று பரவலாக வசைபாடும் தன்மையினையும், பல வரலாற்று ஆதாரங்களை சான்றுகளாக முன்வைக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

சாதிகள் இல்லையடிபாப்பா.. என்ற பாரதியாரின் வாக்குக்கு என்னிடமும் எதிர்கருத்துக்கள் கிடையாது. “சாதிகள் எங்கே வரையறுக்கப்படுகின்றதோ அங்கே மனிதம் செத்துவிட்டது” என்ற கருத்து என் மனதில் அசைக்கமுடியாத நம்பிக்கை.

ஆனால் சாதியத்தை எதிர்க்கின்றோம் வெறுக்கின்றோம் என்ற போர்வையில் குறிப்பட்ட ஒரு சாதியினரை தாக்குவதும், பழைய நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் தோண்டி எடுத்து தமது எழுத்துக்களில் சொருகுவதும் ஒருபோதும் ஆரோக்கியமானதாக அமையப்போவதில்லை என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.

கடந்த 35வருட இருண்ட நாட்களில் தலைகளில் வந்து விழுந்த ஷெல்கள் சாதிபார்த்து பிரித்துவந்து விழவில்லை. அதேபோல இழப்புக்களும், ஆற்றமுடியாத மனவடுக்களும் சாதிகள் பார்த்து வரவும் இல்லை.

இன்றைய நிலையில் ஒட்டுமொத்த தமிழர்களும் எமது எதிர்காலத்தை வலுவாக நிர்ணயிக்கவேண்டியுள்ளகாலத்தில், அதேவேளை நவீனத்துவமாக கால ஓட்டத்துடன் எமது சமுதாயமும், வெளிவந்து உலகத்தை உற்றுநோக்கிவரும் காலத்தில், இந்த சாதி, வர்க்க, பிரதேச வாத அடிப்படைகள் தன்பாட்டிற்கு அடிபட்டுபோய் இல்லாமல்போய்விடும் நிலையில்.

ஏதோ எழுதுகின்றோம் என்ற போர்வையில் யாழ்ப்பாண சாதி அமைப்பை விமர்சிப்பதும், தலித்தியம் என்றால் என்ன? என்று புரியாதவர்கள் சிலர்கூட தலித்தியம் கதைக்கின்றோம் என்று எப்போது பார்த்தாலும் மேட்டுக்குடி வர்க்கத்தின், மேட்டுக்குடி சிந்தனைகள் என்று ஒரே பல்லவி பாடுவதும் ஆரோக்கியமாக அமையாது என்பதே உண்மை.

தான் ஒரு தலித் என்று கூறி எழுதுவதன்மூலமும், அல்லது பேசுவதன்மூலமும், இந்தப்பிரிவில் தான் ஒரு இலக்கியவாதி அல்லது பேச்சாளனாக மற்றவர்கள் கவனிக்கும் ஒருவனாக வரவேண்டும் என்ற எண்ணம் எழுதும் பலரின் அடிமனதில் உள்ளது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றாலும் அதுவும் ஒரு ஆழ்மனத்தில் உள்ள காரணம் என்பது உண்மையே.

அதேவேளை தலித்துக்கள் இல்லாதவர்கள்கூட சாதிபேசதங்கள் இல்லை, அனைவரும் ஒருவரே என்று எழுதியும்பேசியும் வருகின்றனர். இது வரவேற்கக்கூடிய ஒன்றே என்றாலும், நான் அறிந்தவர்கள் உட்பட அனைவரும் வாய்ச்சொல்லில் வீரர்களாகவே உள்னர். வெளிப்படையாக சொல்வதென்றால், என்னதான், அவர்கள் சாதிகள் இல்லை என பேனாக்கள் எழுதினாலும், மேடைகளில் முழங்கினாலும் திருமணம்மூலம் கலந்துபோகவோ, அல்லது தம்குடும்பங்கள் கலந்துபோவதையோ ஒருபோதும் விரும்பாதவர்களாக “ஊருக்கு உபதேசமடி கண்ணே நமக்கு இல்லை” என்ற அடிப்படையிலேயே உள்ளனர்.

இவ்வாறான எழுத்துக்களை பார்த்து மனம் நொந்து எதுவும் பேசமால் போனவர்களில் ஒருவனாகவே நானும் இருந்தேன். ஆனால் அண்மையில் பலரது பதிவுகள், நல்லூர் மேட்டுக்குடி வர்க்கத்தினர் என, ஒரு ஊர்சமுதாயத்தைப்பற்றியும், திரிபுபடுத்திய பல தகவல்களையும் எழுதுவதாலேயே

இவர்களின் தலித்தியம் என்ற எழுத்துக்கள் ஆரோக்கியமாக அல்லாமல் வெறும் சாதியத்தையும் தனிமனித வெறுப்புக்களையும் கொட்ட ஆரம்பித்துள்ள நிலையிலுமே என்னையும் சற்று எழுத வைக்கின்றது.

நல்லூர் மேட்டுக்குடி வர்க்கம் அபாயகரமானது, ஆறுமுகநாவலரில்தொடங்கி அவர்பற்றி விமர்சித்துச்சென்று, போராட்டத்திற்கு என்றும் அவர்கள் ஆதரவு வழங்கியதில்லை என்பதுமட்டுமன்றி பல திரிபுச்செய்திகள் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் பலரது எழுத்துக்களில் அடுக்கப்பட்டதை பார்த்தேன்.

60களின் முற்பட்ட காலத்தில் தீண்டாமை, கீழ்ச்சாதியினர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமை என்பன இருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மைதான்.

அதேபோல சாதிக்கட்டமைப்பு உச்சத்தில் நின்று கரணம்போட்ட நடவடிக்கைகள் வருத்தமானவை என்பதுடன், மனிதம் அங்கு செத்துக்கொண்டிருந்தது என்பதையும் நிரூபிக்கின்றது.

ஆனால் இன்று நல்லூரில் நிலை அப்படி அல்ல. சாதிபேதங்களை யாரும் பார்ப்பது கிடையாது என்பதே உண்மை. இன்று வளர்ந்துவரும் சந்ததிகள் சாதிகள் என்றால் என்ன? என்று கேட்கும் நிலை உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சில பெருசுகள் இன்றும் தமது அடிமனதில் தமது சாதி வக்கிரகங்களை அவர்கள் மீதும் திணிக்க எத்தனித்தாலும், நடுவயதை உடையவர்கள் அவற்றை தவறு எனச்சுட்டிக்காட்டும் சம்பவங்களை பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவே பார்த்திருக்கின்றேன்.

புலம்பெயர் யாழ்ப்பாண தலித்திய எழுத்தாளர்கள் இன்று நல்லூர் மேட்டுக்குடியினர் என்பவர்கள்மீது சாட்டிய குற்றங்களையும், தற்போதைய நிலையையும் பார்ப்போம்.

கோவிலுக்குள் அன்று கீழ்சாதியினர் அனுமதிக்கப்படவில்லை. உண்மைதான் மறுக்கமுடியாது. ஆனால் இன்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலயத்திலேயே, சொந்த ஊர்காரர்களைவிட முகம் தெரியாத பலரே வந்து தொண்டுகளை செய்கின்றார்கள், சுவாமி காவுகின்றார்கள், திருவிழா செய்கின்றார்கள், இதை எழுதும் நான் உட்பட ஊர்க்காரர்கள் ஒதுங்கிநின்று வேடிக்கையே பார்க்கின்றோம்.

அன்று நல்லூர் வீரமாகாளி அம்பாள் ஆலயத்தில் சமபந்தி போசனம் என்று அறிவித்துவிட்டு அதில் அமர்ந்து சாப்பிட அமிர்தலிங்கமே தங்கி நின்றார்.

உண்மைதான் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இன்றும் அந்த நிலை இல்லை. ஒரு கோவில் அன்னதானம் என்றால் சகலரும் இறைவன் முன்சமன் என்ற நிலை காணப்படுகின்றது.

மேட்டுக்குடியினர் தாமே மேலோங்கிநின்றனர், போராட்டத்திற்குக்கூட ஆதரவு தரவில்லை என்ற குற்றச்சாட்டு.

பொதுவாக இவர்கள் குறிப்பிடும் மேட்டுக்குடியினர், பரம்பரையாக வந்த சொத்து, திருமணத்தின் பயனாக உள்வாங்கப்படும் சீதனச்சொத்து, தனக்கான ஒருவீடு, ஊதியத்திற்கான வயற்காணிகள், தமக்கான கௌரவமான ஒரு அரச தொழிலோ அல்லது அதற்கு சமமான தொழில் என்ற வரையறைக்குள் வாழ்ந்தவர்கள். அந்த வாழ்க்கை முறையிலேயே பழக்கப்பட்டவர்கள். தமது சொத்துக்களே போனாலும் சரி தமது குழந்தைகள் கல்விகற்று உயர்நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தைக்கொண்டு செயற்பட்டவர்கள். இந்த நிலையில் யுத்தம் ஒன்று திணிக்கப்பட்டு இந்த கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டவேளைகளில் செய்வதறியாது திகைத்து நின்றதே உண்மை. மாறிவரும் உலக நியதிற்கேற்ப தனியே ஆயுதப்போராட்டத்தால் உரிய பயனை அடைந்துவிடமுடியாது என்பதை அறிந்தவரர்களாகக்கூட இருந்திருக்கலாம்.

ஆனால் போராட்டத்திற்கு எந்தவொரு ஆதரவையும் அவர்கள் வழங்கவில்லை என்பது ஒரே அடியாக ஏற்கமுடியாத குற்றச்சாட்டு.

1960 களின் பின்னர் கொமினிஸ சிந்தனைகள் இலங்கையிலும், யாழ்ப்பாணத்திலேயும்கூட வலுப்பெற்று வந்தவேளையில்க்கூட அந்த சிந்தனைகளை நல்லூர் மேட்டுக்குடியினர் ஏற்கவில்லை எனவும் அவர்கள் எப்போதும் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பின்னால்த்தான் நின்றார்கள் என்றும் இவர்களால் கூறப்படுகின்றது. மிகத்திறமையானவரின் பின்னால் படித்தவர்க்கம் செல்வதை சாதிப்பார்வையில் பார்ப்பதே விரோதமானது என்று நினைக்கின்றேன். அதேவேளை கொமினிஸ சிந்தனைகள் அரசடியையும், ஆனைக்கோட்டையையும் மட்டுமே சுற்றி நின்றதை இவர்கள் மறுப்பார்களா? காரணம் அங்கு ஒரு குழு மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதே அதன்காரணம்.

பழைய கதைகள், சாதியங்கள் என்பவற்றை குழிதோண்டி புதைக்கக்கூடாது ஏனென்றால் எப்போதுவேண்டும் என்றாலும் அது மீள எழுந்துவிடலாம். அவற்றை பெற்றோல் ஊற்றி எரித்துவிடவேண்டும். சாதியத்திற்கு எதிராக எழுதுகின்றோம் என்று மேட்டுக்குடி என்று ஒரு வர்க்கத்தினரை தொடர்ந்தும் விமர்ச்சித்துப்போவதும் சாதிய எழுத்துக்களே. தலித்திய எழுத்துக்கள் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டு ஆரோக்கியமான பாதையில் இதுபோன்று எழுதுபவர்கள்பயணிக்கவேண்டும். சாதிகள் இல்லாமல்போவதற்கான ஆவனவற்றை செய்யவேண்டும். இனிவரும் சமுகம் சாதிகள், வர்க்க, பிரதேசவாதங்கள் அற்ற ஒரு சமுதாயமாக வரவேண்டும்.

இவற்றின்மூலமாகவே நாம் எமக்கான பிரதான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளமுடியுமே தவிர, மீண்டும் மீண்டும் ஒரே குட்டைக்குள் நின்று பழய கதைகளை பேசவும், பழிதீர்க்கவும் உரிய காலம் இதுவல்ல.

http://janavin.blogs...og-post_10.html[/size][/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தான் ஒரு தலித் என்று கூறி எழுதுவதன்மூலமும், அல்லது பேசுவதன்மூலமும், இந்தப்பிரிவில் தான் ஒரு இலக்கியவாதி அல்லது பேச்சாளனாக மற்றவர்கள் கவனிக்கும் ஒருவனாக வரவேண்டும் என்ற எண்ணம் எழுதும் பலரின் அடிமனதில் உள்ளது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றாலும் அதுவும் ஒரு ஆழ்மனத்தில் உள்ள காரணம் என்பது உண்மையே.

அதேவேளை தலித்துக்கள் இல்லாதவர்கள்கூட சாதிபேசதங்கள் இல்லை, அனைவரும் ஒருவரே என்று எழுதியும்பேசியும் வருகின்றனர். இது வரவேற்கக்கூடிய ஒன்றே என்றாலும், நான் அறிந்தவர்கள் உட்பட அனைவரும் வாய்ச்சொல்லில் வீரர்களாகவே உள்னர். வெளிப்படையாக சொல்வதென்றால், என்னதான், அவர்கள் சாதிகள் இல்லை என பேனாக்கள் எழுதினாலும், மேடைகளில் முழங்கினாலும் திருமணம்மூலம் கலந்துபோகவோ, அல்லது தம்குடும்பங்கள் கலந்துபோவதையோ ஒருபோதும் விரும்பாதவர்களாக “ஊருக்கு உபதேசமடி கண்ணே நமக்கு இல்லை” என்ற அடிப்படையிலேயே உள்ளனர்.

மொத்தத்தில் என்ன கூறவருகிறீர்கள்..? உங்கள் மனதில் உள்ள உங்கள் ஊர்ப்பற்றை,சாதியத்தை மற்றவர்கள் தாக்குவதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் அதை நியாயப் படுத்த ஒரு கட்டுரை எழுதவேண்டும்..அதேநேரம் உங்களை ஒரு சாதிவிரும்பியாக வெளிப்படையாக காட்டிகொள்ளவும்கூடாது என்ற அவா உங்கள் எழுத்தில் தெரிகிறது...

புலம்பெயர் யாழ்ப்பாண தலித்திய எழுத்தாளர்கள் இன்று நல்லூர் மேட்டுக்குடியினர் என்பவர்கள்மீது சாட்டிய குற்றங்களையும், தற்போதைய நிலையையும் பார்ப்போம்.

கோவிலுக்குள் அன்று கீழ்சாதியினர் அனுமதிக்கப்படவில்லை. உண்மைதான் மறுக்கமுடியாது. ஆனால் இன்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலயத்திலேயே, சொந்த ஊர்காரர்களைவிட முகம் தெரியாத பலரே வந்து தொண்டுகளை செய்கின்றார்கள், சுவாமி காவுகின்றார்கள், திருவிழா செய்கின்றார்கள், இதை எழுதும் நான் உட்பட ஊர்க்காரர்கள் ஒதுங்கிநின்று வேடிக்கையே பார்க்கின்றோம்.

அன்று நல்லூர் வீரமாகாளி அம்பாள் ஆலயத்தில் சமபந்தி போசனம் என்று அறிவித்துவிட்டு அதில் அமர்ந்து சாப்பிட அமிர்தலிங்கமே தங்கி நின்றார்.

உண்மைதான் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இன்றும் அந்த நிலை இல்லை. ஒரு கோவில் அன்னதானம் என்றால் சகலரும் இறைவன் முன்சமன் என்ற நிலை காணப்படுகின்றது.

ம்ம்ம்..இதை எழுதியவர் முகம் இதுதான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம்காலமாக சாதியப்பாகுபாட்டின் அடிப்படையில் புறமாகவும் அகமாகவும் வஞ்சிக்கப்பட்ட சமூகம் அதனை வெளிச்சொல்வதனையும் பதிவதனையும் யாரும் தடுக்க முடியாது. ஏன் நடந்தவற்றை கிளறுகிறீர்கள் என்று சிங்களவனும்தான் சொல்கிறான்.

மற்றது.. ஆதிக்கசாதியை எழுத்துக்களில் தாக்கும்போது யாரொருவருக்கு நெருடல் ஏற்படுகிறதோ - அவர் தன்னை இன்னமும் அந்தச் சாதிமானாகவே உணர்கிறார் என்று அர்த்தப்படும்.

அன்பின் தம்பி தமிழீழனுக்கு

இன்றைக்கு மகிந்த என்ன சொல்கிறார்.

இப்ப தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையாம். அவர்கள் சுதந்திரக்காற்றை சுவாசிகிக்கிறார்களாம்.அவர்கள் விரும்பிவர்களுக்கு வாக்களிக்கலாமாம்.விரும்பிய பிரதிநிதிகளை தெரிவு செய்யலாமாம்.விரும்பிய பொரட்களை வாங்கலாமாம். யாழ்ப்பாணத்திலையும் வன்னியிலையும் இப்ப தேனும் பாலும் ஓடுதாம்.தமிழர்கள் கதிர்காமத்துக்கு பயமில்லாமல் போகலாமாம்.ஆனால் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று சொல்லக் கூடாதாம் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று சொல்லக் கூடாதாம் ஏனென்றால் அது பயங்கரவாதமாம்.

சிங்களவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் 5 இலட்சம் தமிழர்கள் கொழும்பில் சுதந்திரமாக வாழ்கிறார்களாம்.பெரிய பெரிய உத்தியோகத்தில் எல்லாம் அவர்கள் இருக்கிறார்களாம்.கொழும்பிலும் தென்பகுதியிலும் பெரிய பெரிய வியாபார நிறுவனங்களை நடத்துகிறார்களாம். தமிழர்களுடைய இந்துக் கோவில்கள் எல்லாம் தெற்கில் இருக்கிறதாம்;அங்குள்ள தமிழர்கள்எல்லாம் சந்தோசமாக சுபிட்சத்துடன் சிங்களவாகளொடு இணைந்து வாழ்கிறார்களாம்.பிரச்சனை வடக்கு கிழக்கில் தமிழீழம் கேட்கும் பயங்கரவாதிகள் தானாம்.

நீங்கள் சொன்ன கருத்தை இந்தச் சிங்களப் பார்வையுடன் இணைத்துப் பாருங்கள் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.

சாதியம் என்பது தமிழ் சமூகத்தின் அடிப்படை முரண்பாடாகும்.பிரதான முரண்பாடான இன முரண்பாடு கூர்மையடைந்த போது இந்த அடிப்படை முரண்பாடு பின்தள்ளப்பட்டது உண்மை.அதற்காக அது ஒழிந்துவிட்டது என்று கூறக்கூhடாது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தமிழனே இருக்க முடியாமல் போகப்போகுது என்ற கவலையில் இருக்கும் பொழுது மேட்டுக்குடியும் மோட்டு குடியைப்பற்றி யார் கவலைப்படபோகின்றார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தமிழனே இருக்க முடியாமல் போகப்போகுது என்ற கவலையில் இருக்கும் பொழுது மேட்டுக்குடியும் மோட்டு குடியைப்பற்றி யார் கவலைப்படபோகின்றார்கள் ?

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலித் (இந்த வார்த்தை எப்போது யாழ்ப்பாணத்தில் வந்தது )கவலைப் படுகுதோ இல்லையோ மேட்டுக்குடி ரொம்ப கவலைப்படுகுது :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியின் பெயரினால் நடாத்தப்பட்ட கொடுமைகளை கண்முன்னே கண்டு நெஞ்சம் வெதும்பிய நாட்கள் நெடுந்தூரம் போகவில்லை. சாதியம் முற்றாக அழிக்கப்படவேண்டுமாயின் அவற்றால் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகள் மீள மீள கொண்டு வரப்படுதல் வேண்டும். அது சாதியத்திற்கு சாவு மணி அடிக்க உதவலாம்..........

[size=5]தலித், மேட்டுக்குடி இந்தச் சொற்களை நான் கேள்விப்படவேயில்லை, யாராவது விளங்கப்படுத்துவீர்களா?[/size]

[size=5]சாதி இல்லாமல் போகும் 1 அல்லது 2 தலைமுறைக்குப் பிறகு!! அது வரை பொறுத்திருங்கள்!!! ஏன் சாதியைப் பற்றி இவ்வளவு கஸ்டப்படுவான்? [/size]

Edited by அலைமகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.