Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? 23 members have voted

  1. 1. நாடு கடந்த தமிழீழ அரசிடம் மக்கள் முதன்மையாக எதிர்பார்ப்பது என்ன?

    • தமிழீழம் சாத்தியமில்லாவிட்டாலும் பெயரளவிலாவது ஒரு தமிழீழ அரசாக இன்று போல் என்றும் இருக்க வேண்டும்.
    • புலம் பெயர்ந்த தமிழரின் பொருளாதார வளங்களை பயன்படுத்தி பல சிறிய நாடுகளுக்கு பெருமளவிலாக பொருளாதார உதவிகளை செய்து அவர்களின் ஆதரவை திரட்டி ஐ.நா. சபையில் தமிழீழத்துக்கு அங்கிகாரம் கேட்க வேண்டும்.
    • தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மதிக்க கூடிய சிங்கள அரசியல்வாதிகளை தமிழரின் பணபலத்தின் உதவியுடன் சிறிலங்காவில் ஆட்சி அமைக்க வைத்து அவர்களுடன் ஐரோப்பிய யுனியன் போன்ற ஏற்பாட்டை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
    • எதையும் எதிர்பார்க்கும் அளவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசு செயற்திறன் கொண்டதாக இல்லை.
    • இந்த அரசு உண்மையில் தமிழீழத்துக்கு ஆதரவான அரசு அல்ல.
    • மக்கள் முதன்மையாக எதிர்பார்ப்பது இவை எவையும் அல்ல.

Please sign in or register to vote in this poll.

Featured Replies

சில காலமாக யாழிலும் ... சிங்களத்தின் நில ஆக்கிரமிப்புகள்/படுகொலைகள்/மனித உரிமை மீறல்கள் என்று பலவற்றுக்கு எதிராக ... நாகதஅ ஆனது சமச்சீர்/செங்குத்து/முக்கோண போராட்டங்கள் என வெளுத்து வாங்கப்போவதாக ... நாதத்தில் நேரம் கிடைத்த போதெல்லாம் மயங்கு தமிழில் எழுதிப்போட்டதை ... வெட்டி இங்கும் ஒட்டினார்கள்!! ... நாமும் ஏதோ புலம்பெயர் தேசமெல்லாம் நாகதஅ இனால் அதிரப்போகின்றது என்று பார்த்தால் ... அதெல்லாம் புஸ்வானமாக சீறிப்போட்டு தலையை குத்தினது போலத்தான் முடிச்சுது!!!

... முன்னர் அனைத்துலக செயலத்தோடு ஒட்டியிருந்து வயிற்றை கழுவிய நாலு தமிழ் எழுதக்கூடியவர். பேசக்கூடியவர்களை ... இன்று நாகதஅ வாடகைக்கு அமர்ந்தியிருக்கிறது!! அதுகள் நாதமாக சமச்சீரும் செங்குத்துமாக வானவேட்டிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்!! ... வேரொன்றும் நடக்கவுமில்லை ... நடைபெறவும் போவதில்லை!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்,

ஏன் இந்த மக்கள் கருத்துக்கணிப்பை இங்கு நடத்துகிறீர்கள்???

உங்களுடைய கருத்து உலகறிந்தது. மற்றவர்களுடைய கருத்துகளை அறிவதற்காகவே இந்த வாக்கெடுப்பு.

75% வீதமும் 11% . விகிதத்தில் தமிழரால் இனிமேல் வரும் எந்த அரசியல் அமைப்பையும் நிரந்தரமாக்க முடியாது. மகிந்தாவை போர்க்குற்றத்தை காட்டி மிரட்டி சிறுபான்மையினர் பாதுகாப்புக்களை தேடினால், அதன் பின் வரவிருக்கும் பண்டாரநாயக்காக்கள் அதை விலக்குவதால்தான் இலங்கைக்கு விடிவுரும் என்றுதான் பிரசாரத்தை ஆரம்பிப்பார்கள். எந்த அரசியல் அமைப்பும் 2/3 அல்லது 3/4 ஆல்த்தன்னும் மற்றப்படவேண்டும். இல்லையேல் அது தனது மக்களை அடிமைகளாக்கிவிடும். எனவே இலங்கையில் சிங்களவரையும் தமிழரையும் சேர்த்து ஒரு அரசியல் அமைப்பும் எழுத இயலாது.

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் ஒரே நாட்டில் வாழ்ந்தாலும் இரு வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் அருகருவே வாழவேண்டிய விதியை மாற்ற முடியாதவர்கள். 75 வீதம் சிங்களவருக்கு பக்கத்தில் 11 வீதம் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக வாழவேண்டியது தவிர்க்க முடியாத புவியியல் நிலைப்பாடு.

ஒரு நாட்டிற்குள் வாழ்ந்தால் சட்டங்கள் மூலம் பெரும்பான்மை சிறுபான்மை இனத்தை ஆக்கிரமிக்கும் என்ற உண்மை இன்று வரையான அனுபவம். பிரிந்த நாடுகளாக வாழ்ந்தால் தனது நேச சக்திகளுடன் சேர்ந்து பெரும்பான்மை இனம் இராணுவ ஆக்கிரமிப்பை செய்யும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் ஒரு முன்னோடி.

ஆகவே ஒரே நாட்டுக்குள் வாழ்வதானாலும் இரு வேறு நாடுகளுக்குள் வாழ்வதனாலும் தமிழர்கள் அங்கு நிம்மதியாக வாழ பெரும்பான்மை அயலவரான சிங்களவருடன் சமாதானமாக வாழ வழி காண வேண்டியது மிகவும் அவசியமானது. இந்த நிலைப்பாட்டை நாங்கள் ஏற்றுக் கொண்டால் அடுத்த செயற்பாடு இவ்வாறாக சமாதானமாக வாழ்வது எப்படி என்று பார்ப்பதாகும்.

சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களின் நிலைபற்றி அக்கறையுள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களில் சிலருக்கு குறிப்பிடத்தக்களவு செல்வாக்கும் இருக்கிறது.

  • மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி நிமல்கா பெர்ணாண்டோ
  • சண்டே ரைம்ஸ் ஆசிரியர் பிரெட்றிகா ஜான்ஸ்
  • நவ சமசமாஜ கட்சி தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண
  • ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் அமைச்சர் கலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தன
  • இன்றைய அரசின் அமைச்சர் கலாநிதி திஸ்ஸ விதாரண
  • நா.க.த.அ. செனட் சபை உறுப்பினர் பிரயன் செனவிரட்ண போன்றவர்கள் இவர்களுள் சிலர்.

இவர்களில் பலர் தமிழர்கள் தனிநாடாக பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அதேவேளை பெரும்பாலானவர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை கொள்கையளவில் மதிக்க கூடும். ஆனால் முக்கியமாக இவர்கள் அனைவருமே தமிழர்களும் சிங்களவர்களும் இந்த தீவில் நீண்டகாலத்துக்கு நிம்மதியாக போரும் அழிவும் இல்லாமல் வாழ வேண்டும் என்ற நோக்கத்துக்காக செயற்படுவர்கள்.

இவர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆதரவளிப்பதன் மூலம், தமிழர்களும் சிங்களவர்களும் இந்த தீவில் நிம்மதியாக போரின்றி வாழ ஒரு வழியை அமைத்துக்கொள்ள முயற்சிக்க முயலவேண்டும். சிங்களவர்களால், அவர்களின் பெரும்பான்மையான வறிய மக்கள் தொகையில் உருவாகும் இராணுவ வலுவுடனும், சர்வதேச ஆதரவுடனும், தனி நாடு உருவாவதை சிங்களவர்கள் என்றும் எதிர்த்து வருவார்கள். தனிநாடு உருவான பின்னரும் நிரந்தரமான போர் தொடரும் சாத்தியமே இருக்கிறது. அழிவு பெருமளவில் தமிழர்களுக்கே இடம்பெறும். ஆகவே தனிநாடு சரியான தீர்வாக தெரியவில்லை.

[size=4]நன்றி ஜூட்உங்கள் கருத்துகளுக்கு [/size]

இவர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆதரவளிப்பதன் மூலம், தமிழர்களும் சிங்களவர்களும் இந்த தீவில் நிம்மதியாக போரின்றி வாழ ஒரு வழியை அமைத்துக்கொள்ள முயற்சிக்க முயலவேண்டும். சிங்களவர்களால், அவர்களின் பெரும்பான்மையான வறிய மக்கள் தொகையில் உருவாகும் இராணுவ வலுவுடனும், சர்வதேச ஆதரவுடனும், தனி நாடு உருவாவதை சிங்களவர்கள் என்றும் எதிர்த்து வருவார்கள். தனிநாடு உருவான பின்னரும் நிரந்தரமான போர் தொடரும் சாத்தியமே இருக்கிறது. அழிவு பெருமளவில் தமிழர்களுக்கே இடம்பெறும். ஆகவே தனிநாடு சரியான தீர்வாக தெரியவில்லை.

[size=4]இப்படித்தால் அன்று இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பொழுதும் பின்னர் கிழக்கு திமோர், கோசவா போன்ற நாடுகள் உருவான பொழுதும் கூறி இருப்பார்கள். பின்னர் கடைசியாக தென் சூடான் உருவான பொழுதும் கூட சூடானுடன் யுத்தம் நிகழும் என்றார்கள். [/size]

[size=1]

[size=4]நாடுகளுக்கு இடையில் முறுகல்நிலை இருந்தாலும் பெரியளவில் யுத்தம் நிகழவில்லை. காரணம் இவை யாவும் இறைமையுள்ள நாடுகள். [/size][/size]

[size=1]

[size=4]எம்மை பொறுத்தவரையில் பிரிந்த பின்னர் யுத்தம் நிகழலாம் என்ற நிலை இருந்தாலும் அணு அணுவாக சாவதை விட அந்த தெரிவை தாயக மக்கள் விரும்புவார்கள் என எண்ணுகிறேன். [/size][/size]

"ஆகவே ஒரே நாட்டுக்குள் வாழ்வதானாலும் இரு வேறு நாடுகளுக்குள் வாழ்வதனாலும் தமிழர்கள் அங்கு நிம்மதியாக வாழ பெரும்பான்மை அயலவரான சிங்களவருடன் சமாதானமாக வாழ வழி காண வேண்டியது மிகவும் அவசியமானது. இந்த நிலைப்பாட்டை நாங்கள் ஏற்றுக் கொண்டால் அடுத்த செயற்பாடு இவ்வாறாக சமாதானமாக வாழ்வது எப்படி என்று பார்ப்பதாகும்."

"நாங்கள் ஏற்றுக் கொண்டால்" - இதை தாண்டி நாம் அடைந்திருக்கும் அரசியல் பரிணாம வளர்ச்சியை நீங்கள் புறம் தள்ளி வைத்துவிட்டு சில்லை திரும்ப கண்டு பிடிக்க முயல்கிறீர்கள்.

காந்தி எவ்வளவு முயன்றும் பாகிஸ்த்தானை தக்க வைக்க முடியவில்லை.

ஒரு காலத்திலோ அல்லது பாகத்திலோ வாழும் நல்ல மனிதர்களில் ஜனநாயக அமைப்பு தங்குவதில்லை. அமெரிக்காவின் அரசியல் அமைப்பு 200 ஆண்டுகளாக தாக்கு பிடிப்பது, அது எழுத்தப்பட்டிருக்கும் மொழியிலும், அதன் ஆக்க இயல்பிலும் பார்க்க, அன்றே சமய கோரங்கள் தாண்டவமாடிய ஐரோப்பாவை விட்டு விட்டு குடியேற்ற வாசிகளாக வந்த அமெரிக்கரின் மனங்களுடன் சேர்ந்து வந்த விடுதலை உணர்வு இன்னமும் அவர்களின் மனங்களில் தங்கி இருப்பதனாலாகும்.

வரவிருக்கும் தேர்தலுக்கான அரசியலில், "பெண்களை வேதனைகளுக்கு உள்ளாக்கப்படும் போது கருதரிக்க தக்க சாதக நிலைகளை அவர்கள் இழந்து போகிறார்கள்" என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை மீசூரியின் வேட்பாளர் தனது சமய சார்பு தத்துவங்களுக்கு வளைக்க முயன்றதால் அவரை அமெரிக்கர்கள் தூக்கி எறிந்திருக்கிறார்கள். ஆனால் மத்திய கிழக்கில் பெண்களின் சுதந்திரத்தை பறித்தெடுக்க இப்படியான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஒன்றும் தேவை இல்லை. சிறந்த அரசியல் அமைப்பு அறிஞ்ஞனான சோல்பரியால் சிங்கள மக்களின் நன்மையை மட்டும் கவனத்தில் எடுத்து எழுதப்பட்ட நல்ல அரசியல் அமைப்பை எப்படி சிங்களவர், இனி ஒரு ஆயுதப்புரட்சி இல்லாமல் பாதை திரும்ப முடியாத சர்வாதிகாரமொன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள் எனபதை நாம் அவதானிக்க வேண்டும்.

இந்த சிங்களவரின் இயல்பை கவனத்தில் எடுத்துதான் தமிழரின் அரசியல் கோட்பாடுகள் தனது பரிணாம வளர்ச்சி அடைந்தது. அது, இராமாநாதமன் போன்றோர் காலத்திலிருந்து மிக விட்டுக்கொடுப்புகள் நிறைந்த தலைவர்கள் பலாரால் இலங்கையுடன் செய்ய முயன்ற சமரசங்கள் பல தோல்வி அடைந்த பின்னர் மெல்ல மெல்ல மாற்றபட்டுத்தான் 1976 ஆண்டு வட்டுக்கோட்டை பிரகடனமாக செய்து வைக்கப்பட்டது. அதிலிருந்து ஆயுதப்போராடம் வந்தது. இனி திரும்ப சோல்பரியின் பழைய நிலைமைக்கு தமிழர்களை இட்டு சென்று, இல்லாத இன்னொரு குரங்கை எமது அப்பத்தை எங்களுக்கும் சிங்களவருக்கும் இடையில் பங்கிட்டுத்தர தேடுவதில் பயன் இல்லை. மேலும் இந்தியா, நோர்வே, யப்பான், தென் ஆபிரிக்கா, போன்ற பல குரங்குகள் பங்கிட முயன்றும் தோற்றுவிட்டன.

எனவே இனி நாம் சில்லை புதிதாக கண்டு பிடிப்பதால் விஞ்ஞானம் வளராது. ஆயுதபோராடத்தின் முடிவை வைத்து நாம் அதிலிருந்து மேலே போவதல்லாமல் 1944 லிற்கு திரும்பி சென்று இன்னொரு அரசியல் அமைப்பை எழுத்திக்கொள்ள கூடாது. சம்பந்தர் "அரசியல் தீர்வுக்கு ஒரு புதிய சந்தர்ப்பம் இருக்கிறது" என்பதை அவதானிக்காமல் நாம் சமாதானம் பேச முயலக்கூடாது. DSக்கு பண்டாரநாயக்கா, சிறிமாவுக்கு JR, JR க்கு பிறேமதாச, சந்திரிக்காவுக்கு மகிந்தா என்று இவர்களின் தலைவர்களின் உயிர் அடுத்து வரும் தலைவரின் கையில் இருந்து ஊசலாவது வழமை. மேலும் முதல் தலைவரைவிட பின்வரும் தலைவர்கள், சர்வாதிகார குணத்திலும், மக்களை பொய்கள் சொல்லி ஏமாற்றுவதிலும் உயர்ந்த படிக்களில் தான் காணப்படுகிறார்கள். இதை அறியாமல் மகிந்தா இந்த அளவுக்கு தனது எதிரிகளை துவம்சம் பண்ணுகிறார் என்று நாம் நினைக்க கூடாது. மேலும் தனக்கு பின் வரப்போறவரை எப்படி சமாளிப்பது என்று அவர் சிந்திக்கவில்லை என்று நாம் எண்ணக்கூடாது. சாதாரண அனுமானங்களின் படி, இலங்கை அரசின் அதிகாரம், மகிதாவை விட பேராசைகள் பிடித்த ஒரு கொடூரத் தலைவரால் மகிந்தாவிடமிருந்து பறிக்கப்பட வேண்டும்: அல்லது சிங்கள மக்களின் ஆயுதப்புரட்சி வெடித்து அங்கே திரும்ப மக்களின் ஜனநாயகம் வரவேண்டும். அதாவது மகிந்தாவை அரசியலில் இருந்து எளிதாக இறக்கி, இருக்கும் ஒரிரு நல்ல சிங்களவர்களை பதவியில் இருத்திவிடலாம் என்பது உண்மையான அரசியல் யதார்த்தம் அல்ல, வெறும் ஆசைக்கனவு.

போரை பிழையாக விளங்க வைப்பதால் சில தத்துவங்களை ஏற்படுத்தலாம். அதில் பயன் இல்லை. "விடுதலை இயக்கம் போரில் தோற்றது; எனவே அயல் நாடான சிங்கள நாடு எமது நாட்டை தேவை ஏற்படும் போது அடித்து பிடித்து விடுவார்கள்" எனபது சரியல்ல. போரில் தமிழருக்கான தோல்வியில் பிரதான பாகம் வகித்தவை, 1. உலகப் பயங்கரவாதம், 2.காங்கிரசின் தனிப்பட்ட போர் தந்திரமாக i).சிங்களத்தை வாங்கி ii).சீனாவை வாங்கலாம் என்ற நப்பாசை.

இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தபின் கண்டறிந்த உண்மை இலங்கையை வாங்க முடியாது என்பது. இதிலும் கவனிக்க தக்கது, இன்றைய காங்கிரஸ் தலைவர்கள், இந்திரா காந்தி படித்திருந்த பாடத்தை அழித்துவிட்டு, தாம் சில்லை திரும்பக் கண்டு பிடிக்க முயன்று, இலங்கைக்கு சீனாவை மீஞ்ச, செல்ல கொடுப்புகள் கொடுத்து அணைக்க முயன்று ஏமாந்து போயிருப்பதுதான்.

பயங்கரவாதம் தணியும் சந்தர்ப்பத்தை உலகநாடுகள் பொறுப்பெடுத்து கொண்டுவர முயலும். நாம் அதில் பங்களிக்கவேண்டிதில்லை(முடியாதும்). காங்கிரஸ், இலங்கையில் இந்திரா காந்தி சந்தித்த மாதிரியே ராஜதந்திர தோல்வியயை சந்திக்கும்.

இவற்றை தவிர்த்துப் பார்த்தால், இ்லங்கை அரசு எந்த களத்திலும் போரில் வெல்லாமல், விடுதலை இயக்கத்திடம் விமான எதிர்ப்பு தளபாடங்கள் இல்லை என்று கண்டவுடன், உலக நாடுகளின் உதவியுடன் தமிழரின் நிலங்களை குண்டு வீசி எரித்ததாகும். உண்மையில் நாடு பிரிந்தால், எல்லா நாடுகளும் பயங்கரவாதம் என்ற நிலைப்பாட்டுடன் இதுவரையில் இ்லங்கையுடன் நின்றது மாதிரியில்லாமல் , தமது அரசியல், பூகோள பாதுகாப்புக்களுக்காக, நிச்சயமாக இலங்கையின் பக்கம் சில நாடுகளும், ஈழத்தின் பக்கம் சில நாடுகளும் சேர வேண்டிய தேவை இருந்துதான் தீரும். வர்த்தகம் தேவையாய் இருந்தால், ரூசியாவும்-மேற்குநாடுகளும், இந்தியாவும்-பாகிஸ்தானும் வர்த்தகத்தில் ஈடுபடுவது போல ஈழமும் இலங்கையும் (தமக்குள் பகமை இருந்தாலும்) வரத்தகத்தில் ஈடுபடமுடியும்

Edited by மல்லையூரான்

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் ஒரே நாட்டில் வாழ்ந்தாலும் இரு வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் அருகருவே வாழவேண்டிய விதியை மாற்ற முடியாதவர்கள். 75 வீதம் சிங்களவருக்கு பக்கத்தில் 11 வீதம் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக வாழவேண்டியது தவிர்க்க முடியாத புவியியல் நிலைப்பாடு.

ஒரு நாட்டிற்குள் வாழ்ந்தால் சட்டங்கள் மூலம் பெரும்பான்மை சிறுபான்மை இனத்தை ஆக்கிரமிக்கும் என்ற உண்மை இன்று வரையான அனுபவம். பிரிந்த நாடுகளாக வாழ்ந்தால் தனது நேச சக்திகளுடன் சேர்ந்து பெரும்பான்மை இனம் இராணுவ ஆக்கிரமிப்பை செய்யும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் ஒரு முன்னோடி.

ஆகவே ஒரே நாட்டுக்குள் வாழ்வதானாலும் இரு வேறு நாடுகளுக்குள் வாழ்வதனாலும் தமிழர்கள் அங்கு நிம்மதியாக வாழ பெரும்பான்மை அயலவரான சிங்களவருடன் சமாதானமாக வாழ வழி காண வேண்டியது மிகவும் அவசியமானது. இந்த நிலைப்பாட்டை நாங்கள் ஏற்றுக் கொண்டால் அடுத்த செயற்பாடு இவ்வாறாக சமாதானமாக வாழ்வது எப்படி என்று பார்ப்பதாகும்.

இருக்கிறது. அழிவு பெருமளவில் தமிழர்களுக்கே இடம்பெறும். ஆகவே தனிநாடு சரியான தீர்வாக தெரியவில்லை.

இந்தியாவில் இருந்து பிரிந்த பின்னர் சிறுபான்மை பாக்கிஸ்தானை பெரும்பான்மை இந்தியாவால் ஆக்கிரமிக்க முடிந்ததா .?

ஏன் இந்தியாவுக்கு பக்கத்தில் ஒரு சிறிய நாடு இலங்கை சீனாவுடன் கைகோத்து நிற்குது இந்தியாவால் என்ன புடுங்க முடிந்தது.

இதற்கெல்லாம் தேவை ஒரு இறையாண்மை உள்ள தனிநாடும் நல்ல ராஜதந்திரமும் தான். அதுக்காக இப்பவே சிங்களத்துடன் நட்பு பாராட்ட வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல . நீங்கள் சுட்டி காட்டும் சிங்கள புத்திஜீவிகள் சிங்கள பெரும்பான்மையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்கள் . இவர்களை வைத்து சிங்கள மக்களின் மனங்களை வெல்லலாம் என்று நீங்கள் கணக்கு போடுவது எனக்கு மீண்டும் அரிவரி பாடசாலையை தான் ஞாபகம் ஊட்டுகிறது.

Edited by பகலவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தால் அன்று இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பொழுதும்

பலஸ்தீனர்களுக்கும் இசுரேலியர்களுக்கும் இன்றுவரை போர் தொடர்கிறது அல்லவா? இசுரேலை உருவாக்கி ஆதரிக்கும் காரணத்தால் அமெரிக்காவுக்கு எதிரான இசுலாமிய உலகு திரண்டெழுந்து போர் புரிகிறதல்லவா? தமிழீழம் உருவாவதற்கு அமெரிக்கா முதல் இந்தியா வரை ஆதரவு தர மறுப்பதற்கு இசுரேலின் வரலாறும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

தென் சூடான் உருவான பொழுதும் கூட சூடானுடன் யுத்தம் நிகழும் என்றார்கள்.

வட சூடானும் தென் சூடானும் தொடர்ந்து போர் புரியாததற்கு காரணம் அந்த நாட்டு அரசுகள் தென் சூடான் பிரிவதற்காக செய்து கொண்ட உடன்பாடாகும். வட சூடான் தலைவர் தென் சூடான் மக்களை பெரும் தொகையில் படுகொலை செய்ததற்காக இராஜபக்ச போல போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்.

தென் சூடான் போராளிகள் இந்த போர்க்குற்றவாளியுடன் கலந்துரையாடி தாம் இரு பகுதியினரும் எப்படி போர் இல்லாமல் நிம்மதியாக வாழலாம் என ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். இந்த உடன்பாட்டின்படி தென் சூடானில் உள்ள எண்ணை வளங்களின் வருமானம் பங்கிடப்படவுள்ளது. இது தமிழீழ மக்களுக்கு சாத்தியமாக வேண்டுமானால் இராஜபக்சவுடன் பிரதமர் ருத்திரகுமாரன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமையும்.

[size=1][size=4]நாடுகளுக்கு இடையில் முறுகல்நிலை இருந்தாலும் பெரியளவில் யுத்தம் நிகழவில்லை. காரணம் இவை யாவும் இறைமையுள்ள நாடுகள்.

[/size][/size]

இறைமையுள்ள ஆப்கானிஸ்தானை அமெரிக்காவும் சோவியத் யூனியனும் தாக்கி கைப்பற்றி ஆண்டிருக்கின்றன. இறைமையுள்ள குவைத்தில் ஈராக் ஊடுருவியது. இறைமையுள்ள லிபியாவிற்கு எதிரான கிளர்ச்சியாளருக்கு அமெரிக்கா வான்படை உதவி வழங்கியது. இறைமையுள்ள பலஸ்தீனத்தை கைப்பற்றி அதனை இல்லாமல் செய்தது இசுரேல்.

[size=1][size=4]எம்மை பொறுத்தவரையில் பிரிந்த பின்னர் யுத்தம் நிகழலாம் என்ற நிலை இருந்தாலும் அணு அணுவாக சாவதை விட அந்த தெரிவை தாயக மக்கள் விரும்புவார்கள் என எண்ணுகிறேன். [/size][/size]

நீங்கள் இங்கு இரண்டு விதமான தெரிவுகளை காட்டுகிறீர்கள்:

  1. சிறிலங்காவின் அடக்குமுறை ஆட்சிக்குள் இருந்து அணு அணுவாக சாவது. நீங்கள் சொல்வது போல மக்கள் இதனை விரும்பவில்லை.
  2. நாடு பிரித்து வாழ்வது - முள்ளிவாய்க்கால் வரை 30 வருடங்கள் முயன்று முடியாமல் போய் சாத்தியமில்லாமல் போன வழி இது.

மூன்றாவது வழியும் இருக்கிறது. இது பாகிஸ்தானின் ஜின்னா, சிங்கப்பூரின் லீ குவான் யூ மற்றும் தென் சூடான் தலைவர்கள் பின்பற்றிய வழி - உங்கள் எதிரியான ஆக்கிரமிப்பாளருடன் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருவது. வாழு - வழவிடு என்ற அளவிலான ஒரு வழிமுறையை கண்டறிவது. முதலிரண்டு வழிகளும் பயனற்றவையான பிறகும் கூட தமிழீழ மக்கள் இந்த மூன்றாவது வழியை பின்பற்ற மறுப்பதற்கு காரணம் கீழே உள்ளது. ஆனால் அது இன்றும் பொருத்தமானதா என்பது மீளாய்வுக்குரியது.

இந்த சிங்களவரின் இயல்பை கவனத்தில் எடுத்துதான் தமிழரின் அரசியல் கோட்பாடுகள் தனது பரிணாம வளர்ச்சி அடைந்தது. அது, இராமாநாதமன் போன்றோர் காலத்திலிருந்து மிக விட்டுக்கொடுப்புகள் நிறைந்த தலைவர்கள் பலாரால் இலங்கையுடன் செய்ய முயன்ற சமரசங்கள் பல தோல்வி அடைந்த பின்னர் மெல்ல மெல்ல மாற்றபட்டுத்தான் 1976 ஆண்டு வட்டுக்கோட்டை பிரகடனமாக செய்து வைக்கப்பட்டது.

1976 ற்கு பின்னர் இந்த 35 வருடங்களில் உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. அன்றிருந்த சோவியத் யூனியன் இன்றில்லை. சீனா இன்னமும் ஒரு பொதுவுடமை நாடல்ல. இணையத்தளங்கள் உலக அறிவை கொள்கை வகுப்பாளர்களுக்கும், சாதாரண பொதுமக்களுக்கும் பெருமளவில் வழங்கி வருகின்றன. அன்றைய முடிவில் தலைவர்கள் எவ்வளவுக்கு சர்வதேச புவிசார் அரசியலை கணக்கில் எடுத்தார்கள் என்பது கேள்விக்குரியது. அப்படியே கணக்கில் எடுத்திருந்தாலும் இன்றைய புவிசார் அரசியல் மாற்றங்கள் கண்ட ஒன்றாக இருக்கிறது. தமிழீழத்துக்கு இன்றுவரை ஒரு நாடு கூட ஆதரவில்லை. 35 வருடங்களில் ஒரு நாட்டை கூட நம்மால் ஆதரிக்க வைக்கமுடியவில்லை. ஆனால் இன்னமும் அந்த முடிவு சரியானதென்று கொள்கிறோம். அதே வேளை பாகிஸ்தானின் ஜின்னா முதல் தென் சூடான் மற்றும் சிங்கப்பூர் வெற்றி பெற்ற பாதையான ஆக்கிரமிப்பாளருடன் பேசுவதென்ற பாதையை நாம் திரும்பிப்பார்க்க மறுக்கிறோம். இது அறிவார்ந்த நிலைப்பாடாக தெரியவில்லை.

பலஸ்தீனர்களுக்கும் இசுரேலியர்களுக்கும் இன்றுவரை போர் தொடர்கிறது அல்லவா? இசுரேலை உருவாக்கி ஆதரிக்கும் காரணத்தால் அமெரிக்காவுக்கு எதிரான இசுலாமிய உலகு திரண்டெழுந்து போர் புரிகிறதல்லவா? தமிழீழம் உருவாவதற்கு அமெரிக்கா முதல் இந்தியா வரை ஆதரவு தர மறுப்பதற்கு இசுரேலின் வரலாறும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

[size=4]அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து போர் புரியவில்லை. மாறாக அல்கைடா மட்டுமே, அதுவும் பலமிழந்து உள்ளது. [/size]

[size=4]மத்திய கிழக்கில் சீனா பலமாக இல்லை. ஆனால் ஆசியாவில் உள்ள நாடுகளில் சீனா தான் முதலாவது பிராந்திய வல்லரசு. எனவே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மத்தியகிழக்கில் இஸ்ரேலை போன்று தமிழீழமும் ஆதரவாக இருக்கும். [/size]

நீங்கள் இங்கு இரண்டு விதமான தெரிவுகளை காட்டுகிறீர்கள்:

  1. சிறிலங்காவின் அடக்குமுறை ஆட்சிக்குள் இருந்து அணு அணுவாக சாவது. நீங்கள் சொல்வது போல மக்கள் இதனை விரும்பவில்லை.
  2. நாடு பிரித்து வாழ்வது - முள்ளிவாய்க்கால் வரை 30 வருடங்கள் முயன்று முடியாமல் போய் சாத்தியமில்லாமல் போன வழி இது.

மூன்றாவது வழியும் இருக்கிறது. இது பாகிஸ்தானின் ஜின்னா, சிங்கப்பூரின் லீ குவான் யூ மற்றும் தென் சூடான் தலைவர்கள் பின்பற்றிய வழி - உங்கள் எதிரியான ஆக்கிரமிப்பாளருடன் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருவது. வாழு - வழவிடு என்ற அளவிலான ஒரு வழிமுறையை கண்டறிவது. முதலிரண்டு வழிகளும் பயனற்றவையான பிறகும் கூட தமிழீழ மக்கள் இந்த மூன்றாவது வழியை பின்பற்ற மறுப்பதற்கு காரணம் கீழே உள்ளது. ஆனால் அது இன்றும் பொருத்தமானதா என்பது மீளாய்வுக்குரியது.

1976 ற்கு பின்னர் இந்த 35 வருடங்களில் உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. அன்றிருந்த சோவியத் யூனியன் இன்றில்லை. சீனா இன்னமும் ஒரு பொதுவுடமை நாடல்ல. இணையத்தளங்கள் உலக அறிவை கொள்கை வகுப்பாளர்களுக்கும், சாதாரண பொதுமக்களுக்கும் பெருமளவில் வழங்கி வருகின்றன. அன்றைய முடிவில் தலைவர்கள் எவ்வளவுக்கு சர்வதேச புவிசார் அரசியலை கணக்கில் எடுத்தார்கள் என்பது கேள்விக்குரியது. அப்படியே கணக்கில் எடுத்திருந்தாலும் இன்றைய புவிசார் அரசியல் மாற்றங்கள் கண்ட ஒன்றாக இருக்கிறது. தமிழீழத்துக்கு இன்றுவரை ஒரு நாடு கூட ஆதரவில்லை. 35 வருடங்களில் ஒரு நாட்டை கூட நம்மால் ஆதரிக்க வைக்கமுடியவில்லை. ஆனால் இன்னமும் அந்த முடிவு சரியானதென்று கொள்கிறோம். அதே வேளை பாகிஸ்தானின் ஜின்னா முதல் தென் சூடான் மற்றும் சிங்கப்பூர் வெற்றி பெற்ற பாதையான ஆக்கிரமிப்பாளருடன் பேசுவதென்ற பாதையை நாம் திரும்பிப்பார்க்க மறுக்கிறோம். இது அறிவார்ந்த நிலைப்பாடாக தெரியவில்லை.

[size=4]எமது போராட்டம் எனது பார்வையில் இன்று மூன்றாம் கட்டத்தில் உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் சிங்களத்துடன் பேசப்பட்டது. இன்றும் கூட்டமைப்பு பேச தயாராக உள்ளது. [/size]

[size=1]

[size=4]இன்று எமது முன்னர் எப்போதும் இல்லாதளவிற்கு சர்வதேமயப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்ததிற்கு உதவிய பல நாடுகள் இன்று சிங்களத்திடம் இருந்து ஒரு தீர்வை பெற்றுத்தர சற்று ஆர்வத்துடன் உள்ளன. இன்று அகாசி அங்கு நிற்பதும் இந்தியா கடந்த மனித உரிமை தொடரில் சிங்களத்திற்கு எதிராக வாக்களித்ததும் ஜி.எஸ்.பி. சலுகை முற்றாக நிறுத்தப்பட்டதும், ஐ.நா. பிரதிநிதிகள் இருவர் நவநீதம் பிள்ளை அவர்களுக்கு முன்னர் வர இருப்பதும் நல்ல அறிகுறிகளாக நம்பிக்கை தருவனவாக உள்ளன. [/size][/size]

[size=4]"1976 ற்கு பின்னர் இந்த 35 வருடங்களில் உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. அன்றிருந்த சோவியத் யூனியன் இன்றில்லை. சீனா இன்னமும் ஒரு பொதுவுடமை நாடல்ல. இணையத்தளங்கள் உலக அறிவை கொள்கை வகுப்பாளர்களுக்கும், சாதாரண பொதுமக்களுக்கும் பெருமளவில் வழங்கி வருகின்றன. அன்றைய முடிவில் தலைவர்கள் எவ்வளவுக்கு சர்வதேச புவிசார் அரசியலை கணக்கில் எடுத்தார்கள் என்பது கேள்விக்குரியது. அப்படியே கணக்கில் எடுத்திருந்தாலும் இன்றைய புவிசார் அரசியல் மாற்றங்கள் கண்ட ஒன்றாக இருக்கிறது. தமிழீழத்துக்கு இன்றுவரை ஒரு நாடு கூட ஆதரவில்லை. 35 வருடங்களில் ஒரு நாட்டை கூட நம்மால் ஆதரிக்க வைக்கமுடியவில்லை. ஆனால் இன்னமும் அந்த முடிவு சரியானதென்று கொள்கிறோம். அதே வேளை பாகிஸ்தானின் ஜின்னா முதல் தென் சூடான் மற்றும் சிங்கப்பூர் வெற்றி பெற்ற பாதையான ஆக்கிரமிப்பாளருடன் பேசுவதென்ற பாதையை நாம் திரும்பிப்பார்க்க மறுக்கிறோம். இது அறிவார்ந்த நிலைப்பாடாக தெரியவில்லை"[/size]

புவிசார் அரசியல் என்ற கதை சோனியா காங்கிரசால் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது. புலிகள் கிழக்கு மாகாணத்தை இழந்த பின்னர் (2008) இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து புலிகள் மீது வஞ்சம் தீர்க்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இது காங்கிரசால் மேற்கு நாடுகள் மீதும் திணிக்கப் படுகிறதேயன்றி அவர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை.

அவர்கள் சொல்வது வன்முறையை பாவிக்கும் போது அது பயங்கரவாதம் என்பதாகும். அதன் முன்னர் தமிழ்நாடு ஒரு அரைகுறை விளக்கமாக காட்டப்பட்டது. அதற்கு முன்னர் எதுவும் இருக்கவில்லை. வரும் தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பின்னர் அது இருக்கவும் மாட்டாது. இந்திராகாந்தி 1980 கலில் புவிசார் அரசியல் கதைக்கவில்லை. JRக்கு ஒருபாடம் கற்பிக்க இலங்கையை பிரித்துவிட விரும்பினார். அவர் உயிரோடு இருந்திருந்தால் புவிசார் அரசியல் கதை என்றுமே வெளி வந்திருந்திருக்காது. ரஜீவ் இலங்கையை பிரிக்காமல் முழுதாக (கஸ்மீரை பிடித்தது போல்) பிடிக்கத்தான் திட்டம் போடடார். இன்றைய புவிசார் அரசியல் என்ற கற்பனாவாதம் முன்னமும் இருக்கவில்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை.

1963ல் இலங்கை, இந்திய -சீனா மத்தியஸ்த்தகராக விளங்கியது. வங்காளப்போரில் பாகிஸ்தானிய விமானகள் இலங்கையில் எண்ணை நிரப்பின. இந்தியா மேற்குநாடுகள், (பிரதானமாக அமெரிக்கா) இலங்கைக்கு வருவதை விரும்பவில்லை. அமெரிக்கா அமைத்த VOA கோபுரம் வேவுதளமாகத்தான் கணிக்கப்பட்டது. இந்திரா காந்தியை நோகச்செய்ய பிருதானியாவிடம் JR ஆயுத உதவி கேட்டபோது தட்சர் மறுத்ததுமன்றி இலங்கை ஆயுத உதவிகளுக்கு இந்தியாவை மட்டும்தான் நாடவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். முத்துமாலை தியறி சில(5) ஆண்டுகளுக்கு முன்னர்தான் அமெரிக்க ராணுவ ஆய்வாளர்களால் முன் வைக்கபட்டது. இரண்டு ஆண்டுகள் முன்னர் வரை இந்தியா அப்படி ஒன்று இருப்பதை மறுத்துத்தான் வந்தது. இவை சொல்வது இன்றைய, தெளிவாக வடிவமைக்கப்பட்ட இந்து சமுத்திர சீனா-இந்திய ஆயுதபோட்டி இருக்கவில்லை என்பதாகும்.

சீனா-இந்திய போட்டி 2008 ல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தான் ஏற்பட்டது. இலங்கையின் சர்வாதிகாரம் நிலைக்கும் வரைதான் அதுவும் இலங்கையில் நிலைக்கலாம்.

இந்தியா-இலங்கை இரண்டு பக்கத்திலுமிருந்து பார்த்தால் இலங்கையின் புவிசார் போட்டி செயற்கையானது. நிலைக்க முடியாது.

உண்மையில் இந்திய-மேற்கு நாடுகள் போட்டி இலங்கையில் காணப்பட்டால் அது கொஞ்சம் யதார்த்தமாக இருந்திருக்கலாம்.

நாடு பிரிந்தால் இலங்கையில் புத்தத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது. இரண்டு அரசும் ஒரு EU மாதிரி ஒரு வியாபார கூட்டுக்கு வரும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் அரசியல் வெற்றிடத்தை இப்போதைக்கு நிரப்புவதற்க்காவது இந்த நாடு கடந்த தமிழ் ஈழஅரசு வேண்டும்

இவர்களின் செயற்பாடு கேட்டால் எதுவும் இல்லை

இவர்கள் எதையாவது உருப்படியாக செய்யவேண்டும் என்று புலம்பெயர்மக்களும் தாயகத்துமக்களும் எதிர்பார்க்கின்றார்கள்

அதற்க்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா ? இதுவரைக்கும் கேள்விப்படவில்லை

இதுதான் இன்று இந்த நாடு கடந்த தமிழ் ஈழஅரசின் நிலைப்பாடு இந்த நிலைப்பாடு மாறுமா ? மாற்றப்படுமா ?? என்பதே இன்றைய கேள்விகள்.

[size=4]தமிழரசு, [/size]

[size=4]இருப்பதுகளை வைத்து பலப்படுத்துவோம். இல்லை இன்னொன்றை உருவாக்குவோம் :D [/size]

[size=4]ஆனால், புதியது இதைவிட நன்றாக செயல்படும் என உத்தரவாதம் இல்லை.[/size]

இவர்கள் எதையாவது உருப்படியாக செய்யவேண்டும் என்று புலம்பெயர்மக்களும் தாயகத்துமக்களும் எதிர்பார்க்கின்றார்கள்

அதற்க்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா ? இதுவரைக்கும் கேள்விப்படவில்லை

இதுதான் இன்று இந்த நாடு கடந்த தமிழ் ஈழஅரசின் நிலைப்பாடு இந்த நிலைப்பாடு மாறுமா ? மாற்றப்படுமா ?? என்பதே இன்றைய கேள்விகள்.

கேள்விகளை தலைமைகளிடம் எடுத்து செல்வதால் மட்டும்தான் அவர்களுக்கு செயல் படவேண்டிய அழுத்தம் ஏற்படும். இந்த கேள்விகளை உங்களுக்கு எட்டிய உயரம் வரை எடுத்து செல்ல வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புவிசார் அரசியல் என்ற கதை சோனியா காங்கிரசால் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது. புலிகள் கிழக்கு மாகாணத்தை இழந்த பின்னர் (2010) இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து புலிகள் மீது வஞ்சம் தீர்க்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இது காங்கிரசால் மேற்கு நாடுகள் மீதும் திணிக்கப் படுகிறதேயன்றி அவர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை.

புவிசார் அரசியல் துறை 1897 ல் ஜேர்மனிய புவியிலாளர் பிரட்றிக் ரட்சல் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. தனது பெயரை வெளியிடாமல் "இந்தியாவும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்" என்ற தலைப்பில் கலாநிதி திருநாவுக்கரசு 1986ல் வெளியிட்ட சிறிய வெளியீட்டுடன் தமிழீழம் பற்றிய புவிசார் அரசியல் ஆய்வு உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வெளியீடு கலாநிதி திருநாவுக்கரசின் தமிழீழ புவிசார் அரசியல் பற்றிய கலாநிதி பட்டத்துக்கான ஆய்வின் அடிப்படையிலானதாக அமைந்திருந்தது. அந்த காலகட்டத்தில் கலாநிதி திருநாவுக்கரசு பல போராளிகள் அமைப்புகளுக்கு ஆலோசகராக இருந்தார். இந்திய இராணுவத்தை எதிர்கொள்ளவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கலாநிதி திருநாவுக்கரசு விடுதலைப்புலிகளுக்கு ஆலோசகராக இருந்தார். நானும் அவரும் மதியம் உணவருந்தும் கடைக்கு அருகில் விடுதலைப்புலிகளின் தலைமச்செயலகம் இருந்தது. பேச்சுவார்ததை நடக்கும் நேரங்களில் அவர் உணவருந்தும் சந்தர்ப்பங்களில் கூட அவரிடம் ஆலோசனை கேட்க பிரதிநிதிகள் அனுப்பப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் வரை திருநா அங்கேதான் இருந்தார்.

புவியியல் நிலைகளுடன் சம்பந்தப்பட்ட அரசியல் அரங்கத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் புவிசார் அரசியல் துறைக்குள் அடங்குகின்றன. இலங்கைக்கு பக்கத்தில் இந்தியா இருப்பதால் உண்டான அரசியல் தாக்கங்கள் புவிசார் அரசியலாகும். அதே போல தமிழீழம் சிங்கள தேசத்துக்கு அயல்நாடாக அமைவதால் உருவாகக்கூடிய தாக்கங்கள் புவிசார் அரசியலாகும்.

தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு எதிரான திராவிட பார்ப்பனிய அரசியல் புவிசார் அரசியலாகாது. இதற்கு காரணம் இந்த அரசியலில் புவியியல் சம்பந்தப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்டிருப்பது பொருளாதாரமும் சமயமும் வரலாறும் சாதி இன முரண்பாடுகளுமாகும். இதே போல ஜே.வி.பி. யின் அரசியல் சிறிலங்காவில் புவிசார் அரசியல் அல்ல. ஆனால் கருணா பிள்ளையானின் அரசியல் புவிசார் அரசியலாக அமைகிறது.

1976ல் வட்டுக்கோட்டை தீர்மானம் செய்யப்பட்ட போதும் பின்னர் ஆயுதப்போராட்டம் 1980களில் ஆரம்பமான காலத்திலும் போதுமான புவிசார் அரசியல் பற்றிய அறிவு எமது தலைவர்களுக்கு இருக்கவில்லை. அன்றைய முடிவுகள் சரியான முடிவுகளா என்ற கேள்வி இன்றைய இழப்புகளுக்கு பின்னராவது தற்போதைய அறிவின் அடிப்படையிலும் கடந்த 35 வருடகால மாற்றங்களின் அடிப்படையிலும் கேட்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

Edited by Jude

இன்றைய விளக்கமான "இலங்கை பிரிந்தால் சிங்களத்தை சீனா பிடித்து தனது சாம்பிராச்சியத்துடன் ஒரு கொலனியாக இணைத்துவிடும். அதை வைத்து இந்தியாவையே சீனா பிடித்துவிடும். அதன் பின் இந்து சமுத்திரமெங்கும் சீனாவின் ஆட்டம் தான்" என்ற குறுகிய நோக்க அரசியல் விளக்கம் என்றும் இருக்காதது. இலங்கை இந்திய உறவுகளை அலசிப்பார்த்தல் இனிமேல் இருக்கப்போவதில்லாதது. பழைய விளக்கம், "தமிழீழம் பிரித்தபின் பிரபாகரன் தமிழ் நாட்டை பிரித்து அதனுடன் சேர்க்க முயலுவார் என்பது". இதைத்தான் நான் மேல் சென்ற கருத்தில் விளக்கியிருந்தேன்.

புவிசார் அரசியல் என்ற கதை சோனியா காங்கிரசால் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் நான் எழுதியிருப்பதை பிழையாக அர்த்தப்படுத்தி உலகத்திற்கு புவிசார் என்ற பதத்தை அறிமுகப்படுத்திய,இராணுவ, அரசியல் மேதை இந்திரா காந்தியாக நான் கூறி முடித்திருப்பதாக உருவகிப்பதால் ஒரு பியோசனமும் இல்லை. மேலும் உலகம் எங்கும் இருக்கும் நாடுகளுக்கு அண்மையில் நாடுகள் இருக்கும் என்பதால் புவிசார் அரசியல் இருக்கும், எனவேதான் தனிநாடு எந்த நாட்டுக்கும் உகந்தல்ல என்று யாரும் வாதிடுவதாக நானும் எடுத்துகொள்ள வில்லை. நான் எழுத வருவதை விளக்கம் தேவை இல்லாத இடங்களில் விளக்கம் கொடுத்து எழுதுவதானால் புத்கம் தான் எழுத வேண்டிவரும். தமிழீழம் பிரிவதில் இந்தியாவுக்கு தாக்கம் என்ன என்பதுதான் கேள்வி. காங்கிரஸ்- கருணாநிதி போன்றோர் அடுத்த தேர்தலில் பதவிக்கு வருவதற்கு இந்த தலைப்பை எப்படி உபயோகப்படுத்தி அரசியல் பிரசாரம் செய்வார்கள் என்பது எதிர்வு கூறமுடியாது.

ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிகறக்க வேண்டும். பாடிக்கறக்கிற மாட்டை பாடிக்கறக்க வேண்டும். இந்த அறிவு தனிப்பட்ட அனுபவத்தால் வருவது. இலங்கையுடன் பேசுவதை கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு நாட்டுடன் பேசுவதுடன் ஒப்பிடமுடியாது. இலங்கையுடன் பேச முடியாது என்பதை 1975 களில் SJV கூறி இனி தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றபின் இலங்கையுடன் பேச்சுவாத்தையை தமிழர் முயற்சிக்கவில்லை என்பது இலங்கையின் சரித்திரத்தை ஏற்க மறுக்கும் செயல். ஜின்னா பேச்சுவார்த்தையால் பாகிஸ்த்தான் பெற்றார் என்று ஐக்கிய இந்தியாவுக்கான பேச்சுவார்தைகளில் ஈடுபட மறுத்த ஜின்னாவை பேச்சுவார்த்தைகளின் உதாரணத்திற்க்கான கதாநாயகனாக காட்டி இந்திய சுதந்திரபோரின் போது ஜின்னா நடத்திய தில்லுமுல்லுகளை மறப்பதால் தமிழருக்கு ஒரு தீர்வு வரும் என்று எதிர்பார்க்க கூடாது.

புவியியல் நிலைகளுடன் சம்பந்தப்பட்ட அரசியல் அரங்கத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் புவிசார் அரசியல் துறைக்குள் அடங்குகின்றன. இலங்கைக்கு பக்கத்தில் இந்தியா இருப்பதால் உண்டான அரசியல் தாக்கங்கள் புவிசார் அரசியலாகும். அதே போல தமிழீழம் சிங்கள தேசத்துக்கு அயல்நாடாக அமைவதால் உருவாகக்கூடிய தாக்கங்கள் புவிசார் அரசியலாகும்
இந்த அரிவரித்தனமாக வரைவிலக்கணங்களை எழுத்தி திரும்பத்திரும்ப நாம் சில்லை கண்டிபிடித்து "கூறே" கூறுவதை விட்டுவிட்டு மேலே போக வேண்டும்.

நாம் நமது பிரச்சனையை எடுத்து (specificக்காக) புவிசார் அரசியலின் உண்மையான தாக்கம் என்ன என்று பார்க்க வேண்டும். தமிழீழம் பிரிவதால் இந்தியாவுக்கு நன்மையா, தீமையா என்ற விவாதமானது உண்மையான அரசியல் நன்மை-தீமைகளை வைத்து இந்திய "டெசோ"அரசியல் வாதிகளால் விவாதிக்கப்படவில்லை. (சீனா மீதான பயம் காரணமாக "சீனாவுடன் முரண்படாமை" என்ற கொள்கையை வைத்து தற்கால பாதுகாப்பு கொள்கைகளை வகுத்த,இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் சிவசங்கர் மேனனின் செயல், அமெரிக்காவின் ஆதிக்கம் இந்து சமுத்திரத்தில் தோன்ற ஆரம்பித்த பின், இந்தியா அணுஆயுத நாடுகளுக்கு 1998 வரைக்கும் தான் பயந்திருந்தது என்று தான் செய்தவற்றை மூடி மறைக்கும் போது இந்தியாவின் பாதுகாப்பு கொள்கைகளில் தனி மனித அரசியல் லாபங்கள் எவ்வளவு முக்கியத்துவதை அடைந்திருக்கின்றன என்பதைக்காட்டுகிறது. இந்தியாவின் ஸ்திரமில்லாத அரசுகளை வைத்து, "இந்திய பாதுகாப்பு கொள்கை", "இந்திய புவிசார் அரசியல்" என்று பேசுவது பொருள் இல்லாதது) நான் தமிழரின் விடுதலை போராடத்தில் இலங்கை-இந்திய உறவில் ஏற்பட்ட பல வெளிமாற்றங்களை மேல் காணப்பட்ட கருத்தில் தந்திருக்கிறேன். இது இந்திய அரசியலின் ஸ்திரமில்லாத் தன்மையை விளக்குகிறது. அதாவது தமிழீழமீதான இந்திய புவிசார அரசியல் தாக்கம் தூர நோக்கில் எதிர்வு கூறமுடியாதது. இதை யாரும் தான் எதிர்வு கூறிவிட்டதாகவும் இனி தமிழீழம் சாத்தியம் இல்லை என்பதிலும் பொருள் இல்லை.

சோனியா காந்தி புலிகளை மட்டும் தான் அழித்தார். இதை, "தமிழீழம் பிரிவதை இந்தியா சரித்திர பூர்வமாக எதிர்த்து வந்தது" என என்று அர்த்தப்படுத்திக்கொள்ள கூடாது. இந்தியா மட்டுமே தமிழீழ விடுதலை போரை ஆரம்பித்து வைத்தது. அமிர்தலிங்கம் போன்றோர் போர் இல்லாமல்த்தான் தனிநாட்டை இந்தியா மூல்ம் பெறப்பார்த்தார்கள். உண்மையான புவிசார் ஆராய்வின் மூலம் இந்தியா ஆராம்பிதத விடுதலைபோரின் காரணங்கள் பூர்த்திசெய்யப்படாத நிலையில் இந்தியா போரை திரும்ப எந்த வகையில் மாற்றியமைக்க போகிறதென்பதை தான் பார்க்க வேண்டும்.

பூமிசாத்திரத்தில் நாடுகள் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக பூட்டப்படிருக்கின்றன. புவிசார் அரசியலில் இருப்புகள் ஆறுத்தண்ணணீர் மாதிரி தொடந்து ஓடிக்கொண்டிருகின்றது. புவிசார் அரசியலை காரணம் காட்டி சிங்களம் தருவதை பெற்றுகொள்ளத் தயாராக இருக்கவேண்டும் எனபது ஒரு விவாதம் அல்ல. நமக்கு எது தேவை என்பதை ஆராய்ந்து அதை பெற்றுக்கொள்ள புவிசார் அரசியல் நிலைமைகளை மாற்றி அமைப்பதற்கு தான் புவிசார் அரசியல் ஆராய்ச்சி தேவை.

சுயநிர்ணயத்துடன் கூடிய அரசியல் அமைப்பென்பது 1970 களின் நிலைப்பாடு. அது கிடைத்தால் அதுவே ஒரு இறுக்கமான "யூனின்" கூட்டு என்பதால் அதன் பின் அங்கு EU போன்ற இலகுமுறைக்கூட்டுக்கு தேவை வராது. இதை சிங்கள அரசியல் மேதைகள் தரமுடியாது. அதை முயற்சிக்கும் அரசியல் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வேண்டும். இன்றைய யதார்த்தம் இதை மகிந்தாவை விட யாராவது நல்ல மனிதர் பெற வேண்டுமாயின் அவர் இலங்கையில் இருக்கும் தமிழர்களை பூண்டோடு அழித்துவிட்டு சிங்கள மக்கள் முன் போனாராயின்மட்டுமேதான் அவருக்கு அந்த மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை சிங்கள மக்கள் வழங்குவார்கள்.

நா.க.அ சம்பந்தருக்கு பேச்சுவார்தைகளால் இலங்கையுடன் தீர்வு ஏற்படாது என்பதை நிறுவ உதவிகள் வழங்க வேண்டும். அதே நேரம் வெளிநாடுகளை தனி நாட்டுக்கான மனநிலையை அடைய பிர்சாரம் செய்ய வேண்டும்.

ராஜபக்காக்களின் முடிவை எழுதாமல் சுயநிர்ணய அரசியல் அமைப்பற்றி பேசுவது, நளன் மாதிரி பானையில் தண்ணீர்விட்டு அடுப்பில் உலையேற்றாமல் சோறுவடிப்பது போன்ற யதார்த்தம் இல்லாத கதை.

Edited by மல்லையூரான்

[size=4]நல்ல கருத்துப்பரிமாற்றம். [/size]

  • 2 months later...

நாடு துறந்த தமிழீழ ஆரசு, மன்னிக்க வேண்டும் நாடு கடந்த தமிழீழ அரசானது, நாடு மறந்த அரசாகவே இருப்பது யாவரும் அறிந்தே.

இப்படியான ஒரு திட்டம் "முமு" (முள்ளி வாய்க்கால் முன்னர் ) ஆரம்பிக்கமுயன்ற போது அதற்கான அனுமதி மறுக்கப்பட்டு, "முபி" ( முள்ளி வாய்க்கால் பின்னர்) ஆரம்பித்த போது ஒரு கொள்கை , அல்லது திடமான ஒரு பாதைக்கான வழிகாட்டி, அல்லது ஒரு காத்திரமான செய்கைத்திட்டம் ஏதும் இல்லாமல், சந்தர்ப்ப வாதிகளாக, நாளுக்கு நாள் மாறு பட்ட கருத்துக்களை பிதற்றியவாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசு.. மன்னிக்கவும்.. ஆரம்பிக்கப்பட்ட இந்த "சிறு கும்பல்"... முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல இன்றுவரை கூனலாகவும் கோணலாகவே உள்ளது.

நாடுகடந்த அரசின் ஆலோசகர்கள் என தங்களை ஆரம்பத்தில் அடையாளம் காட்டிய அனைவரோடும் பலமுறை கலந்தாலோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது (தற்போது அலோசகர்களும் அரசியல் வாதிகள் ஆகிவிட்டார்கள்). அலோசகர்கள் மத்தியில் குழப்பம் அப்போதே இருந்தது, இரு தலை எறும்பு அல்ல, இருபது தலை எறும்பு... இவர்களோடு சுய இலாபம் தேடுபவர்களான அமைச்சர்கள் இணைந்தால் முடிவு? சேற்றினுள் சாக்கடை கலந்தமாதிரி தான். கலந்த பிறகு என்னதான் வத்திக்குச்சி ஏற்றினாலும், துர் நாற்றம் துர் நாற்றம் தான்.

தமிழர்களுக்கு நீங்கள் ஏதும் நன்மை செய்யாவிட்டாலும் ( உங்களால் செய்யவும் முடியாது ) தமிழர்களை உலகப் பரப்பில் கோமாளிகள் ஆக்காதீர்கள்.

Edited by இசை ஆர்வலன்

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.