Jump to content

கூடங்குள மின்சாரம் முழுவதும் வேண்டும்: ஜெ


akootha

Recommended Posts

[size=4]கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் இந்த கோரிக்கை ஏற்கப்படுமானால், மின் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழகத்திற்கு, ஓரளவு விடிவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.[/size]

[size=4]இந்திய - ரஷ்ய கூட்டு ஒப்பந்தத்தில், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு மின் உலைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், முதலாவது அணு உலையில் மின் உற்பத்திக்கான அனைத்து முதற்கட்டப் பணிகளும் முடிந்து விட்டன.எரிபொருளான யுரேனியம் நிரப்புவதற்கு முன்,டம்மி பியூல் எனப்படும் மாதிரி எரிபொருள் நிரப்பி, பின் அவற்றை அகற்றி, அனைத்து கட்ட சோதனைகளும் முடிந்து விட்டன. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலையில், யுரேனியம் எரிபொருள் நிரப்ப, இந்திய அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம், அனுமதியும் வழங்கியுள்ளது.[/size]

[size=4]மூன்றாவது முறை:

இதையடுத்து, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள், அடுத்த சில நாட்களில் நிரப்பும் பணி துவக்கப்பட இருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா[/size]

[size=4]இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, மீண்டும் அதை வலியுறுத்தும் வகையில் மூன்றாவது முறையாக நேற்றுகடிதம் எழுதியுள்ளார்.[/size]

[size=4]அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 1000 மெகாவாட் திறன் கொண்ட முதல் யூனிட்டில் இருந்து உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க தாங்கள் உதவ வேண்டும் எனக் கோரி, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 25 ஆகிய தேதிகளில் தங்களுக்கு நான் கடிதம் எழுதி இருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த கடிதங்களுக்கு தங்களிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை. கூடங்குளம் அணு மின் நிலைய முதல் யூனிட்டில், அடுத்த சில தினங்களில் எரிபொருள் நிரப்பும் பணி துவங்க இருப்பதாக நான் அறிகிறேன்.இந்த சந்தர்ப்பத்தில் என் முந்தைய வேண்டுகோளை தங்களுக்கு நினைவுபடுத்தி, விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன். இந்த விஷயத்தில், தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்பீர்கள் என்று நான் நம்புகிறேன். தங்களின் விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அந்தகடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்

கோடைக்காலம் முடிவுக்கு வந்துள்ளதால், தமிழகத்தில் தற்போது மின் பயன்பாடு சற்று குறைந்துள்ளது. இருப்பினும், தேவைக்கேற்ப மின் வினியோகத்தை வழங்குவதில், மின் வாரியம் தடுமாறி வருகிறது. இந்நிலையில், கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய தமிழகத்தின் அவசரத் தேவையை புரிந்து கொண்டு, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.[/size]

http://tamil.yahoo.com/க-டங்க-ள-்-ல்-191400282.html;_ylt=Ak6yrN1iNLXqi_Igv4jpoyuZBtx_;_ylu=X3oDMTQxdW9tYXF0BG1pdANNZWdhdHJvbiBUYW1pbCBOZXdzIEhvbWUEcGtnAzkxZTFlYzlhLWZmZjctM2VjMi05YjA5LTg2MzMyYmJlOGY1OQRwb3MDMwRzZWMDbWVnYXRyb24EdmVyAzBlMWEyYzU4LWVhMzgtMTFlMS05YmYzLTJmZWUzNjgwY2FkMg--;_ylg=X3oDMTI5YnQ5N2Y1BGludGwDaW4EbGFuZwN0YS1pbgRwc3RhaWQDBHBzdGNhdAPgrprgr4bgrq_gr43grqTgrr_grpXgrrPgr40EcHQDc2VjdGlvbnM-;_ylv=3

Link to comment
Share on other sites

ஏனைய மாநிலங்கள் மின்சாரம் தங்களுக்கு வேண்டுமெனில் சொந்தமாக ஒரு அணுமின் நிலையத்தை அமைத்து மின்சாரத்தை

பெறவேண்டியது தானே.

தமிழகத்துக்கே மின்சாரம் போதாத போது ஏன் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும்?

தண்ணீரை அதிகமாக வைத்திருக்கும் கேரள மாநிலம் தமிழ் நாட்டுக்கு கொடுக்க முன் வரவில்லையே!!!

Link to comment
Share on other sites

[size=4]தமிழகம் பொருளாதார ரீதியாக முன்னேற மலிவான மின்சாரம் தேவை.[/size]

[size=4]அதற்குபிறகே தானம் செய்ய வேண்டும் ( [/size][size=4]காவிரி பிரச்சனையில் படித்த பாடம்[/size][size=4]) .[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசைப் பொறுத்தளவில் தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களுக்கு நல்லது நடப்பதே மிகவும் விரும்பும் தமிழ்நாட்டில் உள்ள வளங்கள் மற்றைய மாநிலங்களுடன் பயிரவேண்டும் மற்றைய மாநிலங்களில் உள்ள நீர் உட்பட எந்த வளங்களையும் பகுந்தளிக்க மத்திய அரசுக்கு ஒருபோதும் மனம் வந்தது கிடையாது

வாழ்க உங்கள் தேசியப்பற்று வந்தே மாதரம் ஜே கிந் என்று கத்தி கொண்டு இருங்கோ ..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய மாநிலங்கள் மின்சாரம் தங்களுக்கு வேண்டுமெனில் சொந்தமாக ஒரு அணுமின் நிலையத்தை அமைத்து மின்சாரத்தை

பெறவேண்டியது தானே.

தமிழகத்துக்கே மின்சாரம் போதாத போது ஏன் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும்?

தண்ணீரை அதிகமாக வைத்திருக்கும் கேரள மாநிலம் தமிழ் நாட்டுக்கு கொடுக்க முன் வரவில்லையே!!!

தோழர் நுணாவிலான் எப்பயுமே டமாஸ் தான் :) :) அந்த மின்சாரம் முழுவதும் தங்களுக்கே வரணும் எண்று கேரள முதல்வர் தெரித்துவித்து இருக்கார் :lol: :lol:

டிஸ்கி:

இளிச்சவாயன் பொண்டாட்டி ஊருக்கெல்லாம் வெப்பாட்டி இதற்கு எதாவது மாற்று கருத்து இருக்கா...? :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

மோடிதானே மின்சாரம் விற்க திரிகிறார். அங்கே மிஞ்சியிருக்கும் மின்சாரத்தையும் மிஸ்டர் சிங் தமிழ் நாட்டுக்கு பெற்றுத்தந்தால் என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கான வெற்றிப்படிகள் இப்போதே கண் முன் தெரிகின்றது....விலகி நின்று வேடிக்கை பார்க்கவும்  😎 
    • "நட்பு என்பது நடிப்பு அல்ல"     "நட்பு என்பது நடிப்பு அல்ல நடனம் ஆடும் மேடை அல்ல நயமாக பேசும் பொய்யும் அல்ல நலம் வாழ என்னும் பாசமே!"   "வடிவு என்பது உடல் அல்ல வட்டம் இடும் கண்ணும் அல்ல வளைந்து பொங்கும் மார்பும் அல்ல வளையாமல் நிமிர்ந்து நிற்கும் உள்ளமே!"   "காதல் என்பது பொழுதுபோக்கு அல்ல காது குளிர பேசுவது அல்ல காமம் கொடுத்து மயக்குவது அல்ல காலம் முழுவதும் உண்மையாக இருப்பதே!"   "அன்பு என்பது கடமை அல்ல அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பது அல்ல அற்பம் சொற்பம் தருவது அல்ல அறிவுடன் உணர்ந்து பாசமாக நேசிப்பதே!"   "முகநூல் நட்பு தேடுவது அல்ல முகர்ந்து பார்க்க அலைவது அல்ல முகத்தை மாற்றி ஏமாற்றுவது அல்ல முழுதாய் சொல்லி அறிவாய் நடப்பதே!"   "பொறுப்பு என்பது வீட்டில் இருப்பது அல்ல பொது நண்பர்களுடன் சுற்றுவது அல்ல பொய்கள் பேசி திரிவது அல்ல பொருள் தேடி குடும்பத்தை காப்பதே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • சும்மா இருந்த‌ சாமி தாத்தாவை சீண்டி பார்த்து விட்டீங்க‌ள் இனி ம‌னுஷ‌ன் இர‌வு பூரா இதுக்கை இருந்து எழுத‌க் கூடும்    சிறுத்தையை சீண்டி பார்ப்ப‌தில் உங்க‌ளுக்கு ஏதோ ஒரு இன்ப‌ம் ஹா ஹா🤣😁😂.............................................................
    • 👍....... நான் தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஷைத் தான் தெரிவு செய்தனான். என் வீட்டு எறும்புக்கு கிரிக்கட் கொஞ்சம் தெரிந்திருக்குது. அது ஏதோ சும்மா ஓடுது என்று தான் நான் அப்ப நினைத்தனான்..........🤣 
    • அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ? முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் . கொஞ்சநாள் வராவிட்டால்  தொடங்கிடுவான்கள் மதமாற்றம் .  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.