Jump to content

எம் தாய் மொழி டமில் ..?


Recommended Posts

எந்த ஒரு மனிதனும் தன் தாய் அரவணைப்பிலே இருக்க, வளரவே விரும்புவான்.ஆனால் இது தமிழர்கள் விடயத்தில் முரண்படுவது ஏன்! இன்று அநேக தமிழர்கள் தன் "தாய்" மொழியை விடுத்து மாற்றான் மொழியை அரவணைக்கிறார்கள். அதையே அதிகமாக பேச விரும்புகிறார்கள்.அப்படி பேசுவதன் மூலம் தன்னை அருகில் இருப்பவர்களை விட சற்று உயர்த்தி காட்ட முற்படுகிறார்கள்!

semmozhi-steel-structure.png

2000 ம் ஆண்டுகளுக்குக்கு பிறகு இன்று இலங்கையிலே தமிழர்கள் மத்தியில் ஆங்கில மோகம் தலை விரித்தாடுகிறது. ஆங்கில மொழி மூல கல்வி பாடசாலைகளிலே புகுத்தப்பட்டுள்ளது. அநேகமான மாணவர்களும் அதையே விரும்பி நுழைகிறார்கள். இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணம். பக்கத்து வீட்டுக்காரி பிள்ளை ஆங்கில மொழியில் கல்வி கற்கிறதாம் என்பதற்காக தன் பிள்ளையையும் அதே ஆங்கில மொழியில் கல்வி கற்க அனுப்புவது. இது நான் அன்றாடம் பார்க்கும் சம்பவவங்கள்.

[size=4]ஆங்கிலம் கற்பதை தவறு என்று சொல்லவில்லை.ஆனால் நாம் கற்கும் கல்வியே ஆங்கில மொழி மூலம் கற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தோடு ஆங்கில மோகத்தில் தாய் மொழியில் மாற்றான் மொழியை கலந்து கதைப்பது அருவருக்கத்தக்கது. நீங்கள் சொல்லலாம் நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப இவ்வாறு மாறுவது தவறு இல்லை என்று.ஏற்றுக்கொள்கிறேன்! நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாறுவதில் தவறு இல்லை.ஆனால் நாகரிக மாற்றம் என்று சொல்லி நம் மொழியை கலப்படம் செய்ய நமக்கு என்ன உரிமை உள்ளது.[/size]

[size=4]உலகின் அழிந்துவரும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று ஐநாவின் தரவு கூறுகிறது. இது, கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் பிறந்த மூத்தகுடி நாம் ,உலகில் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று பெருமை பேசிக்கொள்ளும் நம்மை தலை குனிய வைக்கும் விடயம். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் மொழியை அழித்தாலே போதும், மெல்ல அந்த இனமும் அழிந்துவிடும் என்பது நீங்கள் அறிந்த விடயம். இன்று நம் இனத்தை அழிக்கும் காரியத்தை நாமே செவ்வன செய்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்![/size]

[size=4]நான் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எமக்கு கல்வி கற்ப்பிக்கும் ஆசிரியர் சொன்னார் "தன் குழந்தையை- அம்மாவை "மம்மி" என்றும் அப்பாவை "டாடி" என்றும் அழைக்குமாறு சொல்லிக்கொடுப்பதாகவும் நீங்களும் அப்படியே உங்கள் பெற்றோரை அழைக்க வேண்டும் என்றும். அப்பொழுது எனக்கு அவர் சொன்னது பெரிதாக படவில்லை. ஆனால் இப்பொழுது அவர் சொன்னதை நினைக்கும் போது மிகவும் கடுப்பாக உள்ளது, அந்த நேரத்தில் எழும்பி நாலு வார்த்தை கேக்கவில்லையே என்று தோன்றுகிறது. இவ்வாறு ஆசிரியர்களே ஆங்கில மோகத்தில் இருந்தால் மாணவர்கள் எங்கனம்.[/size]

key.gif

அதெப்படி, இங்கிலிசுகாரன் ஆங்கிலத்தில கதைக்கிறான்.பிரான்ஸ்காரன் பிரஞ்சில கதைக்கிறான்.சுவிஸ்காரன் ரொச்சில கதைக்கிறான்.ஏன் சிங்களவர் கூட சுத்த சிங்களத்தில தான் கதைக்கிறார்கள்.ஆனால் நான் தமிழன் என்று சொல்லி மார்பை தட்டிக்கொள்ளும் தமிழன் மட்டும் தன் தாய் மொழியில் கதைப்பதை பெருமையாக எண்ணுகிறான் இல்லை.

கரீபியன் தீவுகளிலே இந்திய வம்சாவளியினர் வாழ்வதாகவும் ஆனால் அவர்கள் தங்கள் அடையாளத்தை தொலைத்தே இன்று வாழ்ந்துகொண்டு இருப்பதாகவும் ஒரு தடவை இணையத்தில் படித்து இருக்கிறேன். அப்படி என்றால் நாளை புலம்பெயர்ந்துள்ள தமிழ் சந்ததியின் நிலையும் இது தானே..?

நம் எதிர்கால சந்ததிக்கு என்று விட்டு செல்ல மொழி என்ற ஒன்று மட்டுமே தமிழர்கள் வசம் உள்ளது.அதையாவது சிதைக்காமல் விட்டு செல்வது நமது கடமை.

http://www.eelavayal...og-post_29.html

Link to comment
Share on other sites

[size=4]புலம்பெயர் நாடுகளில் தமிழ் சினிமாவும், சாப்பாடுகளும், கலாச்சார நிகழ்வுகளும் கூட தமிழை வளர்க்க உதவுகின்றன. இருந்தும் தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்தால் மட்டுமே அது நீண்ட கால அடிப்படியில் சிறந்து நிற்கும். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழி அன்றுபோல் இன்றும் இன்னும் அழியாமல் இருப்பதற்கான காரணம்

நம் முன்னோர்கள் அதன்பால் அமைத்த இலக்கணம் தான்.

இன்னும் பலநூறு ஆண்டுகள் தமிழ்மொழி அழியாமற் காக்கப்படவேண்டுமாயின்

இலக்கணம் தவறாது தமிழ்மொழியைப் பின்பற்றவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இருந்தும் தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்தால் மட்டுமே அது நீண்ட கால அடிப்படியில் சிறந்து நிற்கும். [/size]

தமிழ் நாடு இருந்தும் ஆங்கிலமோகம் விடவில்லை.. ஆங்கிலத்தை தொழில்நுட்பத்திற்கு வைத்துக்கொண்டு அன்றாடம் பாவனைக்கு, பேச்சுக்கு தமிழை பயன்படுத்தினாலே தேவலை என்ற நிலை இப்பொழுது. தமிழ் நாடு தொல்லைக்காட்சி நிகழ்சிகளைப் பாருங்கள் புரியும்.

Link to comment
Share on other sites

உலகின் அழிந்துவரும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று ஐநாவின் தரவு கூறுகிறது.

ஐ.நா எந்த தரவின் அடிப்படையில் இக்கருத்தை கூறுகிறது.80 மில்லியன் தமிழர்கள் தமிழ் பேசுகிறார்கள்.எப்படி தமிழ் அழியும் என்று கூறுகிறார்கள்??

Link to comment
Share on other sites

தமிழ் நாடு இருந்தும் ஆங்கிலமோகம் விடவில்லை.. ஆங்கிலத்தை தொழில்நுட்பத்திற்கு வைத்துக்கொண்டு அன்றாடம் பாவனைக்கு, பேச்சுக்கு தமிழை பயன்படுத்தினாலே தேவலை என்ற நிலை இப்பொழுது. தமிழ் நாடு தொல்லைக்காட்சி நிகழ்சிகளைப் பாருங்கள் புரியும்.

[size=4]உண்மைதான். இருந்தாலும் தமிழை வளர்க்கும் தொலைக்காட்சி நிகழ்வுகளும் உள்ளன. [/size]

Link to comment
Share on other sites

[size=4]புலம்பெயர் நாடுகளில் தமிழ் சினிமாவும், சாப்பாடுகளும், கலாச்சார நிகழ்வுகளும் கூட தமிழை வளர்க்க உதவுகின்றன. இருந்தும் தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்தால் மட்டுமே அது நீண்ட கால அடிப்படியில் சிறந்து நிற்கும். [/size]

உண்மை அகூதா .............எமக்கொன்று ஒரு நாடு இருந்தால் மட்டுமே .........

நாம் ஆளுமை மிக்க ஓர் இனமாக வாழலாம் அதாவது ...........கலை,கலாச்சாரம்,கல்வி ,பொருளாதாரம் . வாழ்க்கைத்தரம், மருத்துவ வசதி போன்றவற்றில் உயர்ந்து எமக்கென்றொரு கட்டமைப்பை கட்டியமைக்க முடியும் ...........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.