Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழ்நாடு' எல்லைப் போராட்டம் - சோக வரலாறு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ma.po.si..jpg

[size=3]ம.பொ.சிவஞானம்(ம.பொ.சி)[/size]

'தமிழ்நாடு எல்லைப் போராட்டம்' என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அதுபற்றிய சில உண்மைகள் உண்டு.

வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதரங்கள் உண்டு.

தமிழகத்தின் வரலாறு என்பது, மொழி வழியாக மாநிலம் அமைந்தது என்பது மிகப்பெரிய பின்னணியைக் கொண்டது. எல்லைப்போராட்டம் நடந்தபோது அன்றைக்கு ம.பொ.சி மட்டுமே குரல் கொடுத்தார். வடக்கெல்லைப் போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் முன்னின்று நடத்தியது. அவருடன், தளபதி விநாயகம், மங்களம்கிழார், ரஷத் போன்றவர்களெல்லாம் வெகுண்டெழுந்து போராடினார்கள். ஏராளமான தமிழரசுக் கழகத் தோழர்கள் சிறைப்பட்டார்கள். இரண்டு பேர் உயிர் இழந்தார்கள். அது ஒரு நெடிய வரலாறு.

"யானை வாயில் போன கரும்பு திரும்பி வருமா...?" என்றால், "வராது" என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் வந்தது.

திருத்தணியும் சேர்ந்து ஆந்திராவிற்கு போய்விட்டது. மொழி வாரி ஆணையம், சர்தார் கே.எம்.பனிக்கர் தலைமையிலே மத்திய அரசு அமைத்த ஆணையம், சித்தூர் மாவட்டம் முழுவதையுமே ஆந்திராவிற்கு கொடுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட காலகட்டத்தில் ம.பொ.சி மட்டும் அதை ஏற்கவில்லை.

அவர் சொன்னார், "மாலவன் குன்றம் போனால் என்ன..? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டுமென்று". அதற்காக போராடினார். பெரும் போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டு அது கடைசியாக திருத்தணி தாலுகாவை தமிழ்நாட்டிற்குத் திருப்பிக்கொடுத்தது. யானைவாயில் போன கரும்பை மீட்டு வந்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி என்றால் அது மிகையாகாது. அவர் பேராடியிருக்காவிட்டால் திருத்தணி இன்று நம்மோடு இல்லை.ஆந்திராவோடுதான் இருந்திருக்கும்.

சோகவடிவமான தெற்கெல்லைப் போராட்டம்:

அதேபோல், தெற்கெல்லையில் நடந்த போராட்டமென்பது மிகவும் சோகவடிவமானது. நேசமணி, நத்தானியல் பி.எல்.மணி, காந்திராமன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து போராடினார்கள்.

"திருவிதாங்கூர்" சமஸ்தானத்தில் இருந்த நாஞ்சில் நாட்டுப் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்று அவர்கள் போராடினார்களே தவிர, தமிழ் நாட்டுத் தலைவர்கள் யாரும் அதற்காக போராடவில்லை. ஏறத்தாழ 12 பேருக்கும் மேலே அன்றைக்கு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளை, பிரஜா சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர். அவரும் காங்கிரசும் சேர்ந்து அங்கே ஆட்சியமைத்தார்கள். குமரி மாவட்டத் தமிழர்கள், நாங்கள் தமிழ்நாட்டோடுதான் இருப்போம் என்று போராடியபோது, பட்டம் தாணுப் பிள்ளை போராடியவர்களை சுட்டுத்தள்ளச் சொல்லி வெறித்தனமாக உத்தரவிட்டார். ஆனால் அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த டாக்டர் லோகியா கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டார்.

ஒரு சோசலிஸ்ட்டு ஆட்சியில், ஜனநாயக முறையில் போராடிய மக்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். அதைவிட மோசம், கொடுமை அங்கே 12 உயிர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்காக பட்டம் தாணுப் பிள்ளை தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இவ்வாறு டாக்டர் லோகியா அறிக்கை வெளியிட்டார். இதெல்லாம் வரலாறு.

நேசமணி போன்றவர்கள் போராடியதன் விளைவாக குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியாவது நம்மோடு சேர்ந்தது. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை ஆகியன எல்லாம் பறிபோனாலும் குமரி மாவட்டம் நம்மோடு சேர்ந்தது. இதற்கு குமரி மாவட்ட மக்களின் போராட்டமும், தியாகமும்தான் காரணம். அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நேசமணி, ம.பொ.சி போன்றவர்களுக்கு ஆதரவு கொடுத்திருந்தால் இந்த பகுதிகளை எல்லாம் இழந்திருக்கமாட்டோம்.

‘மதராஸ் மனதே’ ஆந்திரர்களின் ஒற்றுமை - முறியடித்த ம.பொ.சி :

‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் போராடினார்கள். ஆந்திரர்களின் ஒற்றுமைக்குக் காரணம் என்ன?

ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும், அதாவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிரஜா, சோசலிஸ்ட் என எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் "ஆந்திர மகாசபை" என்ற குடையின் கீழ் ஒன்றாக நிற்கிறார்கள். விசால ஆந்திராவில் எந்தெந்தப் பகுதிகள் இருக்கவேண்டும் என்பதை அவர்கள் கட்சி சார்பில் போராடவில்லை. ஆந்திரர் என்ற ஒரே உணர்வுடன் ஆந்திர மகாசபையை அமைத்துப் போராடினார்கள். ஆனால், தமிழகத்தில் அப்படி ஒரு குடையின் கீழ் இணைந்து போராடவில்லை என்று ம.பொ.சி தனது நூலில் மிகவும் துயரத்துடன் எழுதியுள்ளார்.

ஆந்திரர்கள் எந்த அளவிற்கு ஒன்றுபட்டிருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராக இருந்த அனந்த சயனம் ஐயங்காரும் விசால ஆந்திராவிற்கு ஆதரவு கொடுத்ததை கூறலாம். இவர்களின் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவிகள். ஆனால், ராதாகிருஷ்ணனும், அனந்த சயனமும் மத்திய அரசியலில் அங்கம் வகித்த ஆந்திரர்களுடன் ஒன்று சேர்ந்து விசால ஆந்திரத்தில் சித்தூரும், சென்னையும் சேர்க்கப்படவேண்டும் என்று பிரதமர் நேருவுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்தனர்.

இந்தக் காலகட்டத்தில் ம.பொ.சி சென்னை நகரசபையில் ஆல்டர் மேனாக இருக்கிறார். சென்னை மேயராக இருந்தவர் செல்வராயன். அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ம.பொ.சியும், செல்வராயனும் சேர்ந்து, உறுப்பினர்களின் ஆதரவையெல்லாம் ஒன்று திரட்டி, சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமென்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்தார்கள். மிகப் பெரும்பான்மையான ஆதரவுடன் தீர்மானத்தை கொண்டுவந்தார்கள் அந்தத் தீர்மானம்தான் அன்றைக்கு நேரு மனதை மாற்றியது.

அதற்குமுன் நேரு என்ன செய்தார்... ? ஆந்திரர்கள் 'மதராஸ் மனதே' என்கிறார்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன், அனந்த சயனம் ஐயங்கார் போன்றவர்களும் வற்புறுத்துகிறார்கள், ஆகவே நேரு ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்திற்கு ஆளாகி, அவர் என்ன சொன்னார் என்றால்... இரண்டு மாநிலங்களுக்கும் சேர்ந்து சென்னை பொதுத் தலைநகரமாக இருக்கும் என்று சொன்னார். பஞ்சாப்பிற்கும், ஹரியானாவிற்கும் பொதுத் தலைநகரமாக சட்டீஸ்கர் இருப்பதைப் போல். சட்டீஸ்கர் யாருக்கு சொந்தமென்று அன்றைக்கு முடிவு செய்யாத காரணத்தால் இன்றைக்கும் சண்டை நடக்கிறது. இதைப்போல நேரு ஒரு முடிவு சொன்னார். அப்போது ம.பொ.சி வெகுண்டெழுந்து செல்வராயன் துணையுடன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

அதுமட்டுமல்ல, அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு, காமராசர் தலைமையில் கூடி சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமானது என்று தீர்மானம் போட்டு டெல்லிக்கு அனுப்பியது. அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி நேருவுக்கு கடிதம் எழுதினார்.

சென்னை நகரம், தமிழர்களுக்கு சொந்தமானது. ஆந்திரர்கள் தனி மாநிலம் வேண்டுமென்று கேட்டப்பிறகு அவர்கள் பிரிந்துபோய் தனித் தலைநகரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டுமே அல்லாமல், சென்னை நகரத்தை உரிமைக்கொண்டாட அவர்களுக்கு உரிமை கிடையாது. சென்னை நகரம் தமிழர்களுக்கு சொந்தமானது. ஆனால் சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகரமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் முடிவு சொல்வீர்களேயானால், இந்தக் கடித்தத்தையே எனது ராஜினாமாவாக எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதியிருந்தார். அப்படி எழுதுவதற்கான துணிவு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு இருந்தது. அதன் பின்னணியில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி இருந்தார் என்பது மறுக்கமுடியாத வரலாறு.

அதேபோல், ஐக்கிய கேரளம் வேண்டுமென்று கேரளர்கள் போராடிக்கொண்டிருந்த போது, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஏ.கே.கோபாலன் தேவி குளம், பீர்மேடு எங்களுக்குதான் சொந்தமென்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ஜீவானந்தம் கொதித்தெழுந்தார்.

உண்மையான கம்யூனிஸ்ட்டு இப்படி பேசமாட்டான். ஏ.கே.கோபாலனின் இந்த அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். தேவிகுளம், பீர்மேடு சர்ச்சைக்குரிய பகுதி. எங்களுக்கும் அதிலே உரிமையிருக்கிறது ஆகவே, ஏ.கே.கோபாலன் கருத்தை தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லும் துணிவு ஜீவானந்தத்திற்கு இருந்தது. அதன் காரணமாக அவர் கட்சிக்குள்ளே பிரச்சனைகள் எல்லாம் வந்தன. ஜீவானந்தம் அதையெல்லாம் சந்தித்தார்.

இப்படி தமிழ் நாட்டு எல்லைப் பகுதிக்காக இவர்கள் எல்லோரும் போராடினார்கள்.

[size=4]-பழ.நெடுமாறன்[/size],நக்கீரன் இதழில்.

[size=4][size=3]http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=102 [/size][/size]

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]'மதராஸ் மனதே' கோஷமும், தமிழர் தலைநகர் மீட்பு போராட்டமும்![/size]

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி 'மெட்ராஸ் பிரசிடென்சி' செயல்பட்டு வந்தது. 1956ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி, மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய "மெட்ராஸ் ஸ்டேட்" உருவானது.

துவக்கத்தில், மெட்ராஸ் ஸ்டேட், கேரளா ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. பின்னர்தான் தற்போதைய பெயர்கள் இடப்பட்டன. 1968ல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப்பட்டது.

முன்னதாக, பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் மதராசைத் தலைமையிடமாகக் கொண்டு, ஆந்திரப் பிரிவினையைக் கோரினார். 1952 அக்டோபர் 14ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார். ஆந்திரத் தலைவர்கள் பிரகாசம், சாம்பமூர்த்தி ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். 'மதராஸ் மனதே' என்ற கோஷத்துடன் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவை, ம.பொ.சிவஞானம் சந்தித்தார். அப்போது, பிரகாசம், ம.பொ.சி.,யிடம், "ராமுலுவின் உயிரைக்காக்க உதவுங்கள்' எனக்கோரிக்கை விடுத்தார்.

ஆனால், மெட்ராசை விட்டு விட்டு, ஆந்திராவை மட்டும் பிரிக்கக் கோரினால் தாமும், தமிழரசுக் கழகமும் உதவுவதாக மா.பொ.சி., உறுதியாகத் தெரிவித்து விட்டார். "ஆந்திர அரசு தற்காலிகமாக சென்னையில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும், விசால ஆந்திரம் அமையும் போது, ஹைதராபாத் கிடைத்து விட்டால் அங்கு போய்விடுவோம். நீங்கள் சம்மதித்தால் மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்' என்று அவர்கள் தந்திரமாகக் கேட்ட போதும், ம.பொ.சி., தன் நிலையில் இருந்து பின்வாங்கவில்லை.

1952, டிசம்பர் 15ல் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதத்தின் போதே உயிர் துறந்தார். ஆந்திராவில் கலவரம் வெடித்து, மூன்று நாட்கள் நீடித்தது. நேரு, ஆந்திர மாநிலத்தைப் பிரிக்க சம்மதித்து வெளியிட்ட தன் அறிக்கையில், "சென்னை நகரம் அல்லாத, தகராறுக்கு இடமல்லாத, தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமையும். தலைநகர் பின்னர் அறிவிக்கப்படும்' எனக் குறிப்பிட்டார்.

சித்தூர் மாவட்டத்தின் தென் பகுதிகள் தமிழகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழரசுக் கழகம் வலியுறுத்தி வந்தது. இதனால், ஆந்திராவுடன் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியது.

"கூவத்தை அடிப்படையாகக் கொண்டு, தென்சென்னை தமிழகத்தின் தலைநகராகவும், வட சென்னை ஆந்திராவின் தலைநகராகவும் செயல்படலாம். அல்லது சென்னை நகரம் இரு மாநிலங்களுக்கும் பொதுநகராக இருக்க வேண்டும்', என்ற கோரிக்கையை பிரகாசம் வலுவாக முன்வைத்தார்.

அப்போது சென்னை மாநகராட்சியின் ஆல்டர்மேனாக இருந்த ம.பொ.சி., இதற்குச் சம்மதிக்காததோடு, கடும் எதிர்ப்பையும் தெரிவித்தார். "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் போராட்டத்தைத் துவக்கினார். அப்போதைய மேயர் செங்கல்வராயனின் உதவியுடனும், முதல்வர் ராஜாஜியின் ஆதரவுடனும், திருவல்லிக்கேணி கடற்கரையில், எஸ்.எஸ்.,கரையாளர், பக்தவத்சலம், ராஜாஜி, ஈ.வே.ரா., போன்ற தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினார்.இவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, "ஆந்திர தலைநகர், ஆந்திராவுக்குள்ளேயே இருக்கும்" என, நேரு அறிவித்தார்.

ம.பொ.சி., ஆல்டர்மேனாக இருந்த போதுதான், ஆங்கிலேயேர்கள் சென்னை மாநகராட்சிக்கு வடிவமைத்திருந்த கொடியை மாற்றி, மூவேந்தர்களின் வில், புலி, மீன் சின்னங்களுடன் கூடிய தற்போதைய இலச்சினையைப் பொறித்தார். மாநகராட்சியின் வரவு செலவுக் கணக்கை முதன்முதலில் தமிழிலேயே தாக்கல் செய்தார்.

'மதராஸ் மனதே' கோஷத்தை முன்வைத்து பொட்டி ஸ்ரீராமுலு நடத்திய "மிஷன் மெட்ராஸ்" படுதோல்வி அடையக் காரணம் ம.பொ.சி.,யும், ராஜாஜியும்தான். ராஜாஜிக்கு எதிராக தெலுங்கர்கள் "ராஜாஜி சாவாலி, ஆந்திர ராஷ்ட்ரம் ராவாலி" எனக் கோஷம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

" உரிமைக்கு எல்லை, வேங்கடம்(திருப்பதி), உறவுக்கு எல்லை இமயம்' என, ம.பொ.சி., எல்லைப் போராட்டம் திருப்பதியை மீட்டுத்தர இயலாவிட்டாலும், திருத்தணியைத் தக்கவைக்க உதவியது.

முதலில், 1953ல் கர்நூலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. 1956ல் தெலங்கானா ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட பின்னரே, ஹைதராபாத் தலைநகராக மாற்றப்பட்டது.

[size=3]மூலம்: தினமலரில் "சென்னை நாள்" மலர்.[/size]

.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது பெருந்தன்மையாலேயே அடுத்தவனுக்கு விட்டுக்கொடுத்து தானே அழிந்தவன் தமிழன்.

1950-களில், மொழிவழி மாநிலப் பிரிவினை சமயத்தில், தேவிகுளமும் பீர்மேடும் தமிழகத்துடன்தான் இணைக்கப்படவேண்டும் என்று ம.பொ.சிவஞானம். குரல்கொடுத்தார். ஆனால், "குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவுக்குள்ளதானே இருக்குண்ணேன்" என்று நக்கலாக பெருந்தன்மையோடு(?) பேசியுள்ளார் காமராஜர்.

"அங்கு மலையாளிகள்தான் அதிகம், கேரளத்தோடுதான் சேர்க்கணும்னு பணிக்கர் சொன்னார். சரின்னுட்டேன்'" என்று விட்டுக்கொடுத்துள்ளார் பெரியார்.

மொழி வழி மாநிலம் கோரும் கிளர்ச்சிகள் இந்தியத் துணைக் கண்டம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்த பொழுது, "ஜஸ்டிஸ் சையத் பசல் அலி" என்பவர் தலைமையில் மாநில மறுசீரமைப்புக் கமிஷனை அமைத்தார் நேரு. இக்குழுவில் "சர்தார் கே.எம்.பணிக்கர்" மற்றும் "பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு" ஆகியோர் உறுப்பினர்கள்.

தம் மாநிலமான பீகார் (பீகாருக்கும் மேற்கு வங்கம், ஒரிசாவுக்குமான எல்லைகள்) தொடர்பான விவாதங்களின் போது, நடுவர் நிலையில் இருக்கும் தான் இதில் கலந்துகொள்வது தார்மீக நியாயம் இல்லை என்று நகர்ந்தார் பசல் அலி. ஆனால், தமிழக-கேரள எல்லைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்றதோடு அல்லாமல், தேவிகுளம், பீர்மேடு வட்டங்களைக் கேரளத்துடன்தான் இணைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார் பணிக்கர்.

kmpanikkar.jpg

[size=3]மலையாளி கே.எம்.பணிக்கர்[/size]

ம.பொ.சி. "எனது போராட்டம்" என்ற தம் நூலில் பின்வரும் நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளார்:

"நான் பசல் அலி கமிஷனைப் பேட்டி கண்ட போது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார், இல்லை, திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் வாய்ச் சண்டை நடத்தினார். தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாயமென்றும், கமிஷன் அதனை ஏற்கமுடியாது என்றும் ஆவேசமாகக் கூறினார். அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது.

அதனால், நான் "தாங்கள் மலையாளிகள் சார்பில் என்னுடன் வழக்காடுகிறீர்களா? அல்லது கமிஷன் உறுப்பினர் என்ற வகையில் என்னை விசாரணை நடத்துகிறீர்களா?" என்று கேட்டேன். இதன் பின்னர் பணிக்கரின் ஆவேசம் தணிந்தது.

தமக்கு ஏற்பட்ட ஆவேசத்திலே தம்மை மறந்தவராகி, தேவிகுளம்,பீர்மேடு பகுதியிலே தமக்குச் சொந்தமான தோட்டங்கள் இருப்பதாகவும் பணிக்கர் கூறினார். அதை நான் எப்படி தமிழ்நாட்டிடம் விட்டுவிட முடியும்? என்றும் கேட்டார்.

அத்துடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவுக்காகவும் பணிக்கர் என்னுடன் வாதாடினார். "

[size=3]மூலம்:http://maposi.blogspot.com/[/size]

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1917ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சி மொழிவாரி மாநில காங்கிரஸ் அமைக்க ஒப்புக் கொண்டுவிட்டது என்பதுதான், மொழிவழி மாநிலம் பிறந்ததற்கு ‘கரு’ப்பருவம். மொழிவாரி காங்கிரஸ் சீரமைப்பை அண்ணல் காந்தி ஊக்குவித்தார், ஆதரித்தார்.

1937ல் நேருவின் கருத்தும் இதுவாகத்தான் இருந்தது. ஆனால் 1947ல்அவர் வேறு சிந்தனை கொண்டிருந்தார். நாடு அப்போதுதான் இந்தியா-பாகிஸ்தான் என மத அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருந்தது. மேலும், அதை மொழிவாரியாகப் பிரிப்பது, இந்திய யூனியன் சிதறுவதை ஊக்குவிப்பதாகாதா? என்று நேரு அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

1947 நவம்பரில் “மொழிவாரி மாநில சீரமைப்பு ஒத்திப் போடப்படுவது தற்போது உள்ள சூழ்நிலையில் ஓரளவு நியாயமானதே” என்று அண்ணல் காந்தியடிகளும் நேருவின் கருத்தை வழிமொழிந்து எழுதினார். தற்காலிகமாக மொழிவாரி மாநிலப் பிரிவினை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு மராத்திய மொழி பேசும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தனி மராத்திய மாநிலத்தை வற்புறுத்தினர். குஜராத்தியைத் தாய்மொழியாகக்கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், அதேபோல அவர்களுக்கு ஒரு சொந்த மாநிலம் கோரினர். தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது ஒரியா மொழி பேசுபவர்களின் லட்சியமும் அவ்வாறே இருந்தது.

இக்கூக்குரலை அமைதிப்படுத்த ஒரு புதிய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் பிரதமராக இருந்த நேரு, உள்துறை அமைச்சராக இருந்த வல்லபபாய் படேல், காங்கிரஸ் கட்சியின் வரலாறு எழுதிவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான பட்டாபி சீதாராமைய்யா மூவரும் இருந்தனர். இதை ஜே.வி.பி. குழு என்று அழைக்கப்பட்டது.

இக்குழு மொழிவாரி மாநிலக் கொள்கைக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தது. “மொழி ஒன்றிணைக்கும் சக்தி மட்டுமல்ல, பிரிக்கும் சக்தியும்கூட” என்று வாதிட்டது. ஆனால் காலம் ஜே.வி.பி. குழுவின் கருத்தை நிராகரித்தது.

1952ல் ஆந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திர மாநிலப் பிரிவினைக்காக உண்ணாவிரதம் இருந்தார். 58 நாள் உண்ணாவிரதத்தில் பொட்டி ஸ்ரீராமுலு டிசம்பர் 15ம் நாள் இறந்தார். அவருடைய மரணச்செய்தி கலவரத்தை விளைத்தது. இதனால் மேலும் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியாத கிளர்ச்சிகள் ஏற்படலாம் என்ற அச்சத்தால் நேருவும் வழிக்கு வந்தார். ஸ்ரீராமுலு மறைவுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு “ஆந்திர மாநிலம் அமையும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆந்திரப் பிரதேசம் பிரதமர் நேருவின் விருப்பமின்றியே உருவானது.

மொழிவாரி மாநில கோரிக்கைகள் வலுவடைந்தது. இந்த மொழிவாரி சிக்கலைத் தீர்ப்பதற்கான பரவலான கொள்கை குறித்து பரிந்துரை செய்ய, “மாநிலச் சீரமைப்பு ஆணையம்” ஒன்றை அமைத்தது மத்திய அரசு. அந்தக் குழுவில் நீதிபதியான எஸ். பசல் அலி தலைவராகவும், வரலாற்றாசிரியரும், ஐ.சி.எஸ். அதிகாரியுமான கே.எம்.பணிக்கர் மற்றும் சமூகத் தொண்டர் எச்.என்.குன்ஸ்ரு இருவரும் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்த ஆணையம் 1954, 1955 ஆண்டுகளில் இந்தியா எங்கும் பயணம் செய்தது. பதினெட்டு மாதக் கடுமையான பயிற்சிக்குப் பிறகு 1955 அக்டோபர் மாதம் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். 1956 நவம்பர் முதல் தேதியன்று 21 மொழி வாரி மாநிலங்கள் நடைமுறைக்கு வந்தன.

ஆந்திரப் பிரிவினையின்போதே, "சென்னை நகரம்" ஆந்திராவிற்கு இல்லை, சென்னை மாகாணத்திற்கே என முடிவாகிவிட்டது. வடக்கு எல்லை கிளர்ச்சியின்போது, அதுபற்றி விசாரணை நடத்தத் தனியாக எல்லைக் கமிஷன் நியமிப்பதாக பிரதமர் நேரு உறுதி கூறிவிட்டதால், அந்தப் பிரச்சினையும் பசல் அலி கமிஷன் விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

ஆகவே அகில இந்திய ரீதியில் மொழிவாரி மாகாணங்கள் அமைப்பது பற்றியும், தமிழக அளவில் திருவாங்கூர் – கொச்சி சமஸ்தானங்களிலுள்ள தமிழ் தாலுக்காக்கள் பற்றியுமே பசல் அலி கமிஷன் சென்னையில் விசாரணை நடத்தியது.

திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தில் உள்ள கொச்சின், சித்தூர், தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை, நெய்யாற்றின் கரை, விளவங்கோடு, கல்குளம், அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய ஒன்பது தாலுக்காக்களை தமிழ் மாநிலத்தில் அதாவது சென்னை மாகாணத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை மாகாண அரசு கோரியது.

ஆனால், கேரள அரசு வேறு மாதிரியான கோரிக்கையை வலியுறுத்தியது. "சென்னை மாகாண அரசு சொல்வதுபோல செய்தால், கேரள ராஜ்யத்திற்குப் பெரும் கேடு (?) ஏற்படும். அந்தத் தாலுக்காக்களில் வாழும் மக்களின் நலன்களுக்குத் தீங்கு ஏற்படும். இதற்கு மொழி ஒரு ஆதாரமாக இருந்தாலும், அதையே ஒரே ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. பூகோள, சரித்திர, நிர்வாக, பொருளாதாரக் காரணங்களும், புதிய மாநிலங்கள் அமைக்கும் விஷயத்திலும் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டும். இந்த நிலைகளைக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால், தமிழ்த் தாலுக்காக்களைத் திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தில் இருந்து பிரிப்பதற்குக் காரணமே இராது. எனவே அவை கேரள மாநிலத்திலேயே இருக்க வேண்டும்.”

“தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களில் தோட்டத் தொழிலே அதிகம். இந்தத் தாலுக்காக்களில் நிலையான குடிமக்கள் கிடையாது. தோட்டக் காடுகளில் ஒரு வாரத்திற்கு வேலை இல்லையென்றால், இந்தப் பகுதியில் 100க்கு ஒருவர்கூட தங்கியிருக்க மாட்டார்கள். பீர்மேடு, தேவிகுளம் தாலுக்காக்களில் தமிழ் பேசுகிறவர்களும் மலையாளம் பேசுகிறவர்களும் சரிசமமான எண்ணிக்கையில் இருக்கிறார். (இது கேரள அரசு தந்த தவறான தகவல். அப்போது, இந்தத் தாலுக்காக்களில் தமிழர்கள் 82 சதவிகிதம் பேர் இருந்தனர்.) தேவிகுளம், பீர்மேடும்தான் கேரள மாநிலத்திற்கு மலைவாசப் பகுதிகளை அளிக்கவல்லன. மாநிலத்தின் எல்லா முக்கிய நதிகளும் இவ்விரு தாலுக்காக்களில்தான் உற்பத்தி ஆகின்றன. இவற்றில்தான் இந்த மாநிலத்தின் ஹைடிரோ மின்சார அலுவலகமும் பவர் ஸ்டேஷன்களும் இருக்கின்றன.”

“தோவாளை, அகஸ்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு தமிழ்த் தாலுக்காக்களும் மிகவும் செல்வம் பொருந்திய பகுதிகளாதலால் இவை கேரளத்திற்குத் தேவைப்படுகின்றன. மேலும், இவைகள் மீன்பிடிக்கும் இடங்களைக் கொண்டிருக்கின்றன. இங்கே முக்கியமான உலோகங்களும், நெல் வயல்களும் உள்ளன.”

கேரளத்தவர்கள் தமிழகத்திலிருந்து கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், உதகமண்டலம் (ஊட்டி) ஆகியவற்றைப் பிரித்தெடுத்து, ஐக்கிய கேரளத்துடன் இணைக்கவேண்டும் என்று விண்ணப்பித்தனர். திருவாங்கூர், கொச்சி ராஜ்யத்தில் உள்ள ஒன்பது தாலுக்காக்களையும் ஐக்கிய கேரளத்திற்கே உரிமையாக்கிவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பு வெறியை அன்றைக்கே கேரளத்தினர் வெளிப்படுத்தினர்.

சுருங்கச் சொன்னால், “மலையாள மொழி வழங்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு அங்குலம் விடாமல் – மலையாளிகளுக்கே! இது மொழி அடிப்படையில்! இத்துடன் மலையாள மொழி வழங்கும் கேரள நாட்டின் எல்லையில் உள்ள தமிழ்த் தாலுக்காக்களும் மலையாளிகளுக்கே! இது தேவையின் அடிப்படையில்!” என்பதே கேரளாவின் கோரிக்கையாக இருந்தது.

இவர்கள் இப்படி கேட்கும் அளவிற்குத் துணிவு வந்ததற்குக் காரணம், மலையாளியான கே.எம்.பணிக்கர் குழுவில் அங்கம் வகித்ததாகும். மலையாளி எங்கிருந்தாலும் மலையாளிதானே!

பசல்அலி கமிஷன் (மொழிவாரி மாநிலச் சீரமைப்புக் கமிஷன்) தென்னிந்தியா வந்து விசாரணை நடத்தியபோது மலையாளிகளின் மனப்போக்கு எப்படி இருந்தது? என்பதற்கு, பிரபல கேரள வழக்கறிஞர் மன்னார் திரு. கோவிந்தப்பிள்ளை என்ற மலையாளி "கொல்ல கொளத்தூர்" என்ற ஊரில் கூடிய நாயர் சமுதாய சங்கக் கூட்டத்தில் பேசிய பேச்சுதான் உதாரணம்.

“இந்தியாவில் எங்கெங்கும் மலையாளிகள் செல்வாக்குப் பெற்றுள்ள காலம் இது. சர்தார் கே.எம்.பணிக்கர் கூறுவதுதான் பிரதமர் நேருவுக்கு வேதவாக்காகும். பணிக்கரும் அவரது கூட்டத்தினரும் நினைத்தது போலவே காரியங்கள் நடக்கின்றன.”

“சர்வதேச நெருக்கடிகளுக்குப் பரிகாரம் காணும் அதிகாரப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பவர் ஒரு மலையாளி.”

“பிரதமரின் வெளிநாட்டுக் கொள்கைகளை அமலாக்குபவர் ஒரு மலையாளி.”

“பீஜிங்கிலும், மாஸ்கோவிலும், வாஷிங்டனிலும், இன்று பாரத நாட்டின் சார்பில் பிரதிநிதித்துவம் வகிப்பவர்கள் மலையாளிகளே.”

இந்திய ஜனாதிபதியின் மூன்று மெய்க்காப்பாளர்களில் இருவர் மலையாளிகளே.”

“நேருவின் அந்தரங்கச் செயலாளரும் ஒரு மலையாளிதானே!”

- (தினமலர் – 15-9-1955)

இந்தப் பின்னணி பலத்தால்தான் கேரளத்தவர்கள் ‘ஐக்கிய கேரளம்’ என்ற பெயரில் தமிழகத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு ‘ஆதிக்க கேரளம்’ அமைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பசல் அலி கமிஷன் (மொழிவாரி மாநிலச் சீர்திருத்த கமிஷன்) பரிந்துரை வருமாறு :

“சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னட மாவட்டத்தை கன்னடத்தோடும் சேர்த்துவிட வேண்டும்.”

“திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தில் உள்ள கல்குளம், விளவங்கோடு, அகஸ்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் வழங்கும் தாலுக்காக்களைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து தனி ராஜ்யம் அமைக்க வேண்டும். அதன் பெயர் ‘சென்னை ராஜ்யம்’ என்றே இருக்க வேண்டும்.”

“சென்னை நகரம் தமிழ் மாநிலத்திற்குரியதாய் அதன் தலைநகரமாகச் செய்யப்பட வேண்டும்.”

“சென்னை மாநில - ஆந்திர மாநில எல்லைச் சிக்கலை அதற்கென நியமிக்கப்படவிருக்கும் ‘எல்லைக் கமிஷன்’ கிராம அடிப்படையில் திருத்தி அமைப்பதை கமிஷன் ஏற்றுக்கொள்கிறது.”

இதுதான் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பசல் அலி கமிஷன் தீர்ப்பாக இருந்தது.

தேவிகுளம் - பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்திற்குத் தரமுடியாது என்பதற்கு கமிஷன் கூறியிருந்த காரணங்கள் எல்லாம் போலித்தனமானவை. ஒருதலைபட்சமானவை. நடுவு நிலையில் இருந்து பிறழ்ந்தவை. மாநிலங்களை மொழி அடிப்படையில் திருத்தி அமைக்க ஒப்புக்கொண்ட பசல் அலி கமிஷன் தமிழக – கேரள எல்லைகளைத் திருத்தி அமைப்பதில் மொழி அடிப்படையை ஏற்க மறுத்திவிட்டது.

“தேவிகுளம் – பீர்மேடு தாலுக்காக்கள் விஷயத்தில் மொழிவாரி கொள்கையை கமிஷன் முக்கியமாகக் கருதமுடியாது.”

“பல்வேறு பொருளாதார காரணங்களையும், மற்ற காரணங்களையும் உத்தேசித்து தேவிகுளம் – பீர்மேடு தாலுக்காக்கள் திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்திற்குத் தேவையானவை.” என்பது கமிஷனின் வாதமாக இருந்தது.

தேவிகுளம் – பீர்மேடு போன்ற தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் கொள்ளைபோனது மட்டுமின்றி ‘தமிழ்நாடு’ என்கிற தன்மானப் பெயர் கோரிக்கையை ஏற்க மறுத்து ‘சென்னை ராஜ்யம்’ என்று அன்னியர் வைத்த அவமானப் பெயரே நீடிக்க வேண்டுமென்று கமிஷன் தந்த பரிந்துரையை இந்திய அரசும் தனது பிரகடனத்திலே உறுதிப்படுத்தியது.

இந்த நேரத்தில் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப் பிள்ளை, ஒரு காரியம் செய்தார்.

  • தேவிகுளம், பீர்மேடு பகுதியில் தமிழர்களின் பெரும்பான்மையைக் குறைக்க புதிதாக மலையாளிகளைக் குடியேற்றினார். கொச்சின் – திருவாங்கூர் சிறைச்சாலைகளில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளையும், மற்ற கைதிகளையும் விடுதலை செய்தார்.

  • அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஏக்கர் விவசாய நிலம், கூட்டுறவுக் கடன் வசதி, ரொக்கப்பணமாக 5000 ரூபாய் கொடுத்து, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் குடியேறச் செய்தார்.

  • அப்படிக் குடியேறிய பகுதிகள்தான் இப்போது கேரளாவில் இருக்கிற கம்பம்மெட்டு, தூக்குப்பாலம், ஆனவிலாசம், உடும்பன்சோலை, பாரத்தோடு போன்ற பகுதிகள்.

மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கு மாறாக நேரு அவர்கள் திடீர் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். இந்தியாவை ஐந்து ராஜ்யங்களாகச் செய்யும் ‘தட்சிண ராஜ்யம்’ என்பது அது.

அவை தட்சிண (தெற்கு) ராஜ்யம், உத்திர (வடக்கு) ராஜ்யம், மேற்கு ராஜ்யம், கிழக்கு ராஜ்யம், மத்திய ராஜ்யம் என்பனவாகும்.

தட்சிண ராஜ்யம் என்பது தமிழகத்தின் எல்லைப் பகுதிகளை இழந்திருந்த தமிழகத்திற்கு, தீப்பிடித்த வீட்டில் இடியும் விழுந்ததைப் போன்று வேதனையைத் தந்தது.

தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள், கிளர்ச்சிகள், கடையடைப்புகள், பந்த் போன்ற போராட்டங்கள் வெடித்தன.போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அரசியல் கட்சியினர் கூடிப்பேசி, கூட்டணி கண்டனர். 27-1-1956ம் நாளன்று சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள திரு. ஜி. உமாபதி என்பவரது இல்லத்தில் கூட்டம் நடந்தது.

ஆளும் காங்கிரஸ் சார்பில் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தி.மு.கழகம் சார்பில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஜஸ்டிஸ் கட்சி சார்பில் சர் பி.டி.ராஜன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப.ஜீவானந்தம், மணலி கந்தசாமி, தமிழரசு கழகம் சார்பில் ம.பொ.சிவஞானம், ஜி. உமாபதி, தி.க.சண்முகம், மேலும் பாவேந்தர் பாரதிதாசன், சி.பா.ஆதித்தனார், நாரண.துரைக்கண்ணன், பன்மொழிப்புலவர் க. அப்பாதுரை மற்றும் சில சிறிய அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். போராட்டக் குழுவிற்குத் தலைவராக பி.டி.ராஜன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

ஹர்த்தால் போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. ஹர்த்தால் வெற்றிபெற பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அண்ணா அவர்கள் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் பேசி மக்கள் ஆதரவைத் திரட்டினார். சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டியிலும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சியிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுவிட்டது.

நேரு கொண்டுவந்த தட்சிணப் பிரதேசத் திட்டம் அவராலேயே திரும்பப் பெறப்பட்டது. தமிழ் மாநிலம் அமைவது உறுதியாகிவிட்டது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழகத்திற்குப் பெறமுடியாமலேயே போய்விட்டது.

தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்ததன் வலியை முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் இப்போது அனுபவிக்கிறோம். முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாட்டில் சேர்ந்திருந்தால் முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டில் இருந்திருக்கும். இடுக்கி அணையும் தமிழ்நாட்டில் இருந்திருக்கும்.

[size=3]நன்றி : முரசொலி (20-1-2012) நாளிதழ்.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாராவது உம் கொட்டுங்கப்பா... :)

"ஈழ வரலாறே படுசோகம்..இதில் தமிழர்நாட்டு மறக்கப்பட்ட சோகமுமா?" எனக் கேட்பீர்கள்...அப்படித்தானே? :lol:

[size=4]ம.பொ.சி [/size]சிறந்த மனிதர் போல.

[size=4]“இந்தியாவில் எங்கெங்கும் மலையாளிகள் செல்வாக்குப் பெற்றுள்ள காலம் இது. சர்தார் கே.எம்.பணிக்கர் கூறுவதுதான் பிரதமர் நேருவுக்கு வேதவாக்காகும். பணிக்கரும் அவரது கூட்டத்தினரும் நினைத்தது போலவே காரியங்கள் நடக்கின்றன.”[/size]

[size=4]“சர்வதேச நெருக்கடிகளுக்குப் பரிகாரம் காணும் அதிகாரப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பவர் ஒரு மலையாளி.”[/size]

[size=4]“பிரதமரின் வெளிநாட்டுக் கொள்கைகளை அமலாக்குபவர் ஒரு மலையாளி.”[/size]

[size=4]“பீஜிங்கிலும், மாஸ்கோவிலும், வாஷிங்டனிலும், இன்று பாரத நாட்டின் சார்பில் பிரதிநிதித்துவம் வகிப்பவர்கள் மலையாளிகளே.”[/size]

[size=4]இந்திய ஜனாதிபதியின் மூன்று மெய்க்காப்பாளர்களில் இருவர் மலையாளிகளே.”

“நேருவின் அந்தரங்கச் செயலாளரும் ஒரு மலையாளிதானே!” [/size][size=4]

[/size]

இப்பவும் என்னவாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் சோகம் என்னவெனில் பக்கத்து மாநிலத்தவ்ன் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன், இன உணர்வோடு தங்கள் மாநிலத்திற்கு சார்பாக போராடுகையில், அது அநியாயமாகவே இருந்தாலும், தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாய் காலத்தில் போராடாமல் தங்களை தாங்களே பெரும் மன்னர்கள் என்ற மனப்பான்மையில் அடுத்தவனிடம் ஏமாந்து போய் நிற்பது இன்றளவும் தொடர்கிறது... :o

ஈழத்தில் நிலைமை இதைவிட மோசம் போல... :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் படம் போட்டால் தான் பார்ப்பம்.. :rolleyes::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பதி கோவிலின் கல்வெட்டுக்கள் தமிழிலேயெ இருக்கின்றதாம்.

தமிழகத்தின் நிலத்தை மட்டுமின்றி இயற்கை வளங்களையும்

பங்கு போட்டவர்களே தமிழகத்திற்குத் தண்ணி காட்டுவது தான் வேடிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய்யா வயித்தெரிச்சலைக் கிளப்புறீங்க? :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனே ஆண்ட இந்தியாவில் தமிழனுக்கு எல்லையா ?????

ஒற்றுமை இன்மையால் தமிழன் இழந்தது அதிகம்.

இதில் சோகம் என்னவெனில் பக்கத்து மாநிலத்தவ்ன் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன், இன உணர்வோடு தங்கள் மாநிலத்திற்கு சார்பாக போராடுகையில், அது அநியாயமாகவே இருந்தாலும், தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாய் காலத்தில் போராடாமல் தங்களை தாங்களே பெரும் மன்னர்கள் என்ற மனப்பான்மையில் அடுத்தவனிடம் ஏமாந்து போய் நிற்பது இன்றளவும் தொடர்கிறது... :o

ஈழத்தில் நிலைமை இதைவிட மோசம் போல... :wub:

நீங்களாவது பரவாயில்லை. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக் கொன்று கொண்டே தனிநாடு கேட்டுப் போராடியது பெரும் சோகம். :(

நானும் இந்த துன்பக் கதைகளை நெடுமாறன் ஐயா எழுதிய தமிழன் இழந்த மண் என்ற புத்தகத்தில் வாசித்திருக்குறேன். தமிழன் என்றாலே இளிச்ச வாயன் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.