Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடா

Featured Replies

இலங்கையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டுமென்பதிலும், சிவில் நிர்வாகம் முழுமையாக வடகிழக்குப் பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலும், கனடிய அரசு மிகத் தெளிவாக இருப்பதாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்தார்.

அஜெக்ஸ் தொகுதிக்கான கனடிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிய நாடுகளுக்கான வெளிநாட்டு அமைச்சின் ஆலோசகரும், மக்கள் செல்வாக்குள்ள இராஜதந்திரியுமான கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சாண்டரர் உடனான மக்கள் சந்திப்பொன்று, ரொறன்ரோ பெரும்பாகத்தில் வாழும் தமிழ் மக்களால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 7 மணியளவில் மார்க்கம் நகரிலுள்ள, முன்னாள் படைவீரரின் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் மண்டபத்தை நிறைத்திருக்க, மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலும் கருத்துப் பரிமாற்றமும் சிறப்பாக இடம்பெற்றது.

கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் தமது ஆரம்ப உரையில்,

தமிழ் மக்களின் மனித உரிமை மீறல்கள் விடயத்திலும், தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் கனேடிய அரசாங்கம் மிக உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

கனடியப் பிரதமர் திரு.ஸ்ரீபன் ஹார்ப்பர் அவர்கள் ஏற்கனவே உறுதி கூறியபடி, இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றத்தை நடைமுறைப்படுத்தாவிடின், இலங்கையில் 2013ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளுக்கான மாநாட்டில் பங்குபற்றுவது பற்றிய நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லையென்றும், அம் மாநாட்டில் கலந்து கொள்வது சாத்தியப்படாதென்றும் கூறினார்.

அத்துடன் இப்பொழுது கனடா மட்டுமே உலக அரங்கில் ஊக்கமெடுத்து குரல் எழுப்புகிறதென்றும், இந்த அறிவுறுத்தலுக்கு இலங்கை செவிசாய்க்காவிடின் இன்னும் பல நாடுகள் கனடாவுடன் இணைந்தால், இலங்கையில் ஒரு சிக்கலான சூழ்நிலையே உருவாகும் எனவும் எச்சரித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில்,

அண்மையில், தனது குழுவினருடன் தான் இலங்கை சென்றிருந்த போது, தாங்கள் நேரில் கண்டறிந்த அனுபவங்களையும், பல தரப்பட்ட சமயத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடி, அவர்களிடம் கேட்டறிந்த உண்மை நிலவரங்களையும், தமது பயணம் தொடர்பான விரிவான அறிக்கையையும், தங்களது பிரத்தியேக பரிந்துரைகளையும், கனடிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ ஜோண் பெயார்ட் அவர்களிடம் கையளித்ததாகவும் கூறினார்.

கனடிய வெளிநாட்டமைச்சர், ஏற்கனவே இலங்கை விடயத்தில் அதீத அக்கறை கொண்டிருப்பதையும்,பேச்சளவில் மட்டுமன்றி, நேரடியாக பல்வேறு நடவடிக்கைகளை செயற்படுத்தி இருப்பதையும் உதாரணங்களோடு தெளிவு படுத்தினார்.

தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டுமென்பதிலும், சிவில் நிர்வாகம் முழமையாக வடகிழக்குப் பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலும், கனடிய அரசு மிகத் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவரது உரையினைத் தொடர்ந்து நிகழ்வில் பங்குபற்றிய மக்கள் எழுப்பிய வினாக்களுக்கு, குறிப்பாக, கனடாவில் வெளிநாட்டு முதலீடுகள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து விடயங்களுக்கும், திரு.கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் மிகத் தெளிவான பதிலளித்தார்.

இதனால் மக்கள் தங்கள் திருப்தியையும் நன்றியையும் வெளிக்காட்டினர்.

இறுதியாக திரு.கிறிஸ் அவர்கள் தனது முடிவுரையில், கனடாவிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அபிவிருத்திகளில் உதவ வேண்டுமென்றும், இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் Canadian Tamil Economic Forum தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வு, மிகவெற்றியுடன் நடைபெறுவதற்கு உதவிய அனைவருக்கும், குறிப்பாக கனேடிய தமிழ் குழுமத்திற்கும் கலந்துகொண்ட மக்கள் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து விடைபெற்றனர்.

Chris-Markham-photo-1.jpgChris-Markham-photo-3.jpg

http://thaaitamil.com/?p=30558

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லிக்கிட்டு இருந்தா எதுவும் வேலைக்காகாது. தமிழ் மக்களுக்கு ஒன்னு சொல்லுறது.. பிறகு கொழும்பில தூதரகத்தில இருந்து சிங்களவனுக்கு இன்னொரு அறிக்கை கொடுக்கிறது.. இந்த விளையாட்டுக்களை எல்லாம் விட்டிட்டு மேற்கு நாடுகள்.. எந்தத் தீர்வாக இருந்தாலும்.. தீர்மானமாக இருந்தாலும் அதை ஐநாவுக்குள்ளால கொண்டு வந்து தமிழ் மக்களின் அபிப்பிராயம் பெற்று அதை அமுல்படுத்த சிங்கள அரசுக்கு அழுத்தம் தரனும். அதைவிட்டிட்டு.. ஆளுக்கொரு அறிக்கை கொடுத்து தமிழ் மக்களையும் மனித உரிமை அமைப்புக்களையும் சும்மா திருப்திப்படுத்திக்கிட்டு சிங்கள அரசோடு கைகோர்த்து செயற்படும்.. ரகசிய வேலைகளை கனடா உட்பட.. மேற்கு நாடுகள் கைவிடனும்..!

நீங்க என்னதாம் சிறீலங்காவிற்காக உருகினாலும் சிங்களவன் உங்க பணத்தை வாங்கிட்டு சீனாக்குத் தான்.. செல்லப்பிள்ளையா இருக்கப் போறான். அதில உங்களுக்கு ஒரு தெளிவு வராத வரை.. நீங்களும் உருப்படப் போறதில்ல.. தமிழர்களையும் உருப்பட விடமாட்டீங்க போலவே இருக்குது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் சிறிலங்காவிலை வைச்ச காலை இலகுவில் திருப்பி எடுக்க மாட்டான்.அமெரிக்காவுக்கும் அதன் நேச சக்திகளுக்கும் இந்துசமுத்திரப் பிராந்தியத்திற்குள் ஒரு வலுவான தளம் வேண்டமாயின் தமிழீழத்தை அமைக்க உதவுவதன் மூலமே சாத்தியப்படும்.அதவும் காலந்தாழ்தாது உடனடியாகச் செய்ய வேண்டும்.இல்லையெனில் சீனா வேகமாகவும் ஆழமாகவும் கால் பதித்துவிடும்.சும்மா சிறிலங்காவுக்கு மனித உரிமை சம்பந்தமாகவும் பொரளாதார கட்டுப்பாடு போன்ற அழுத்தங்களைக் கொடுத்து சீனாவுடனான உறவை பிரித்து விடலாம் என நினைப்பது இலவுகாத்த கிளியின் கதையாக முடியும்.அமெரிக்கா இந்த விடயத்தில் இந்தியாவை மீறி முடிவை எடுக்க வேண்டும்.இந்தியா தானும் செய்யாது செய்யிறவனையம் செய்ய விடாது.

[size=4]இந்த ஆளும் கட்சி உறுப்பினர் வருங்கால கனேடிய பிரதமர் ஆகும் சாத்தியங்களும் உள்ளன. இவர் இந்த சீன விவகாரத்தை புரிந்த இளைய அரசியல்வாதி. [/size]

[size=1][size=4]பி.கு. புலம்பெயர் தேசியவாதிகளுக்கு நன்றிகள் [/size][/size]

Edited by akootha

கனடாவின் அண்மைய வெளியுறவு கொள்கைகளில் சில மாற்றங்கள் தெரிகின்றன. அவற்றை நாங்கள் சாதகமாக பயன்படுத்த வேண்டும்.

இதில் ராதிகாவின் பங்கும் இருக்கலாம்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

How the SLA intends to justify military presence in the North and East“Bring Back the Army Camp”, Karaveddy People Request Jaffna Commander

http://cimicjaffna.com/Cimicnews_2012_08_19.php

[size="2"]2012_08_18_2_3.jpgA group of civilians from Karaveddy on Saturday (18) morning submitted a communiqué to the Army requesting re-establishment of the Kallikai Army point that was removed from the area recently.[/size]

[size="2"]Around 50 civilians representing the villagers walked holding placards to a place close to the Vadamarachchi South Pradeshiya Sabha office and handed the document signed by around 200 civilians over to the Commander 521 Brigade Colonel Tikiri Dissanayake. They requested the Brigade Commander to deliver one copy to the Commander Security Forces - Jaffna (SF-J) for early action in this regard.[/size]

[size="2"]This Kallikai camp was removed on 07th August 2012 sequel to reduction of military presence in the peninsula.[/size]

[size="2"]English translation of the Tamil letter addressed to the Commander SF-J follows;[/size] [size="2"]Civilians of Karaveddy

Nelliady

07.08.2012[/size]

[size="2"]Major General Mahinda Hathurusinghe

Commander Security Forces – Jaffna[/size]

[size="2"]WITHDRAWAL OF KALLIKAI ARMY CAMP[/size]

[size="2"]We, the people of Karaveddy have faced inconveniences due to withdrawal of the Kallikai Army camp. Thefts, sexual abuses on school children, anti social behaviouir of drunkards and stealing of animals in the area have increased after the camp was removed. Occurrence of those incidents was rare during the presence of the camp. Therefore, we kindly request you, as the Jaffna Commander to re-establish the Kallikai Army camp and help us protect our people in Karaveddy. We, the people of Karaveddy sign underneath.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.