Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தல் மரண ஓட்டம் ஆரம்பம்

Featured Replies

[size=4]அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மேலும் 69 தினங்களே இருக்கும் நிலையில் அதிபர் ஒபாமாவும், மிற் றொம்னியும் வெற்றிக்கனி பறிப்பதற்காக மரண ஓட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.[/size]

[size=4]மெதுவாக வேகமெடுத்து இறுதியில் விரைவெடுக்காமல் ஆரம்பத்திலேயே ஈரல்குலை தெறிக்க நுரை கக்கியபடி இருவரும் ஓட ஆரம்பித்துள்ளார்கள்.[/size]

[size=4]கடந்த இரண்டு தினங்களாக மிற் றொம்னி அவருடைய மனைவி உபஅதிபர் வேட்பாளர் போவுல் றயின் ஆகியோரே உலக ஊடகங்களில் அதிக முக்கியம் பெற்றுள்ளார்கள்.[/size]

[size=4]கருத்துக் கணிப்பில் அதிபர் ஒபாமா 2 முதல் 4 வீதம் முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறார், ஆனால் இறுதியில் யார் வெல்வார்கள் என்பது தெரியாத நிலையில் ஓட்டம் ஆரம்பித்துள்ளது.[/size]

[size=4]சுனாமிக்குள் அகப்பட்ட நாய் திசையை தீர்மானிக்க முடியாது, உயிர் தப்ப கால்களை அடிக்கலாம் என்பது போல வாய்ப்புள்ள திசையில் இருவரும் நீந்துகிறார்கள், தேர்தல் சுனாமிக்குள் சிக்குப்பட்ட இருவரில் கரையேறப் போவது யார்.?[/size]

[size=4]இந்தக் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றிபெறப்போவது யார்..?

obama4.jpg[/size]

[size=4]http://www.alaikal.com/news/?p=112547[/size]

[size=5]தொடர்புபட்ட திரி : [/size][size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=96388[/size]

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, நாடு கடந்த தமிழீழ அரசை சேர்ந்தவர்கள், இந்த தேர்தல் வாய்ப்பினை பயன்படுத்தினால் நல்லது.

தேர்தல் பிரச்சாரத்தோடு தமிழின் பிரச்சனைகளையும் முன்வைத்து ஒரு பிரச்சார திட்ட முன்னெடுப்பு தொடர்பாக, இரு அமைப்புகளும் எதிர் எதிர் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், இப்போது அமெரிக்காவின் ஊடககங்களில் எடுபடலாம். அத்துடன் எதிர்கால முன்னெடுப்புகளுக்கும் உதவும்.

  • தொடங்கியவர்

[size=5]அமெரிக்காவின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவேன்! - போல் றையன்[/size]

[size=4]அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவுள்ளதாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் போல் றையன் தெரிவித்தார்.

ஃபுளோரிடாவில் இடம்பெறும் கட்சியின் தேசிய மகாநாட்டில் நேற்றிரவு அவர் உரையாற்றினார்.

தாமும், மிட் றொம்னியும், பிரச்சினைகளைக் கண்டு ஒளிக்கப்போவதில்லையென அவர் வலியுறுத்தினார்.

தமது பதவிக்காலத்தில் 12 மில்லியன் வேலைவாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமா, சிரிய மக்களைக் கைவிட்டுள்ளதாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் முக்கிய செனற்றர்களில் ஒருவரான ஜோன் மக்கெய்ன் அவரது உரையில் குறிப்பிட்டார்.

மிட் றொம்னி, இன்று அவரது ஏற்புரையை நிகழ்த்துவார்.[/size]

[size=4]http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12707[/size]

  • தொடங்கியவர்

[size=5]Paul Ryan’s Speech Was Filled With Economic Inaccuracies: Yahoo!’s Jeff Greenfield[/size]

[size=5]There was once a time when lying in a political speech--and getting called out on it by the media--was shameful or embarrassing.[/size]

[size=5] [/size]

[size=5]Not anymore.[/size]

[size=5] [/size]

[size=5]Now, says Jeff Greenfield, the veteran political analyst and Yahoo! News columnist, the media is held in such low regard by Americans that getting called out for lying merely serves to confirm a widespread belief that the "liberal media" has an axe to grind against conservative politicians.[/size]

[size=5] [/size]

[size=5]As a result, the whoppers that dominated Republican VP candidate Paul Ryan's convention speech last night will likely not hurt the candidate's standing with Republican voters, says Greenfield. Rather, they'll reinforce the right-wing view that the media is "in the tank" for President Obama.[/size]

[size=5] [/size]

[size=5]What facts in particular were observers and fact-checkers up in arms about?[/size]

[size=5] [/size]

[size=5]Well, for starters, there were once again the claims that Obamacare cuts $716 billion of benefits from Medicare and that Paul Ryan wants to preserve Medicare. The truth is that Obamacare reduces payments to hospitals and doctors by $716 billion, not benefits. Also, far from preserving Medicare, after a 10-year grace period, Romney and Ryan want to radically change it.[/size]

[size=3]http://finance.yahoo.com/blogs/daily-ticker/paul-ryan-speech-filled-economic-inaccuracies-yahoo-jeff-150011000.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சுனாமிக்குள் அகப்பட்ட நாய் திசையை தீர்மானிக்க முடியாது![/size]

[size=4]அகூதா, நீங்கள் ஒரு நடமாடும் தத்துவ ஞானி![/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்கள் இரண்டுபேரிலையும் ஆர் வந்தால் எங்கடை சனத்துக்கு நல்லது? :rolleyes:

  • தொடங்கியவர்

உவங்கள் இரண்டுபேரிலையும் ஆர் வந்தால் எங்கடை சனத்துக்கு நல்லது? :rolleyes:

[size=4]ஒபாமா இதுவரை நாலு வருடம் நாட்டின் சனாதிபதியாக இருந்தவர். ரொம்னி ஒரு மாநில ஆளுநராக இருந்தவர். [/size]

[size=1]

[size=4]ஒபாமா நாட்டுக்குள் செய்தவையை விட உலக அளவில் செய்தது செய்யாதது என பார்த்தால் ' அரபு வசந்தம்' பற்றி குறிப்பிடலாம். குறிப்பாக வருடத்திற்கு பத்து பில்லியன்களை கொடுத்து நண்பனாக இருந்து வந்த எகிப்து மக்கள் புரட்சியை சந்தித்தபொழுது இஸ்ரேல் ஆதரவாளர்களையும் மீறி தனது பெண் ஆலோசகர்களின் ( ஹிலரி / ரைஸ் / பொக்ஸ்) சொல்லை கேட்டதாக கூறப்படுகின்றது. இதுவரை இஸ்ரேலின் அழுத்தத்தையும் மீறி ஈரான் மீது தாக்குதலை செய்யாதது அடுத்தது. இறுதியாக அவுஸ்திரேலியாவில் அமெரிக்க தளத்தை திறந்து ஆசியா தான் உலகின் அடுத்த களமாக இருக்கும் என்று கூறியது. [/size][/size]

[size=1]

[size=4]ரொம்னி ஒரு பெரிய பணக்காரன். இவரின் தனிப்பட்ட சொத்து இருநூறு மில்லியன்களையும் தாண்டியது. இவர் வென்றால் அதிகளவில் முன்னைய புஸ் (மகன்) போன்ற ஒரு வெளிவிவகார கொள்கையை, அதாவது போர் தான் எதற்கும் விடை, என்ற வகையில் முன்னெடுக்கலாம். இவரின் அண்மைய (ஒலிம்பிக் காலத்தில்) சர்வதேச பயணத்தின் போதும் இவரது பதில்கள் பலரினதும் நகைப்பிற்கு இடமானது. [/size][/size]

[size=1]

[size=4]எனவே ஒபாமா வருவது மூலம் ஒரு தொடர்ச்சியை காண முடியும். எமது விடயத்திலும் ஐ.நா. ஊடாக இந்தியாவுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்கலாம். சமந்தா பொக்சும் சூசன் ரைசும் தொடர்ந்தும் இருந்தால், எமக்கு நல்லம். இருவரும் மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் பற்றிய நீதியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். [/size][/size]

இன்று 11:14 Pm நியுயோர் நேரத்திற்கு ரோமினி தனது வேட்பாளர் ஏற்பு பேச்சை முடித்திருந்தார்.

பேச்சின் சில சாரங்கள்:

மத்திய வகுப்பினருக்கு வரி உயர்வு இல்லை என்றார். இதை கூறிய விதம் புஸ் சீனியர் "Read my lips No more tax" என்பதுடன் ஒப்பிடத்தக்க விதமாக இருந்தது.

ஒபாமாவின் ஈரானிய கொள்கைகள் தோல்வி என்றும் அவர்களின் மையநீக்குவிசை கருவிகள் உறேனியத்தை தொடந்து சுத்திகரிக்கின்றன என்றார். அணுகுண்டு தயாரிப்பை பற்றி தெளிவாக கதைக்கவில்லை.

புட்கினுக்கு அதிகம் இடம் கொடுத்து நட்பு நாடுகளை ஒதுக்குவதாக குறை கூறினார். ஆனால் ரூசியாவுடன் திரும்பவும் முரண்பாட்டு கொள்கைகள் பின்பற்றுப்படுமா என்பதை விபரிக்கவில்லை. இது அமெரிக்கர் எதை கேட்க விரும்புவார்கள் என்பதை தேடி சொல்வது போலிருந்தது. ஆனால் தேர்தலுக்கான தெளிவான ஒரு கொள்ளை பின்பற்றுப்படுவதாக தெரியவில்லை.

போலந்து ஏவுகணை தடுப்பு வலையத்தை நிறுவாமல் போலாந்தை ஏமாற்றியதாக கூறினார்.

இவர் தான் தனது காலங்களில் பல பெண்களுக்கு வேலை கொடுத்தாக கூறினார். அதை விபரமாக எடுத்து கூறியிருந்தார். இது இவர் மீது பெண்களுக்கு இருக்கும் அதிருப்தியை தணிக்க என்பது தெளிவாகாக் காட்டியது. பெண்கள் இதை நம்புவார்கள அல்லது தேர்தல் பிரசாரமாக தள்ளிவிடுவார்களா தெரியாது.

குடும்ப கட்டுக்கோப்பை பற்றி பேசினார். இது ஜனநாயக கட்சியினரின் இழப்பமான சங்கிலி மூட்டு. அவர்கள் ஒரின திருமணத்தை சட்ட பூர்வமானதாக ஆக்கி கொண்டுவருவது பல அமெரிக்கருக்கு பிடிப்பதில்லை.

நாடு நான்கு வருடத்திற்கு முன்னிருந்ததை விட கெட்டு நொந்து போய்விட்டதாக கூறினார். ஒபாமா புஸ்சை குறை கூறுவதை நிறுத்தவேண்டும் என்றார். குடியரசார் புஸ்சின் கொள்கைகளால் பொருளாதார சீரழிவுகள் வந்ததென்றால் கோபிக்கிறார்கள். ஆனால் றீகனின் பொருளாதாரக் கொள்கைகளை விதந்து பேச விரும்புகிறார்கள். அதை நிறுத்த தயாரில்லை.

சுகநல காப்புறுதி சட்டத்தை நீக்கபோவதாக கூரினார். இந்த இடம் நேரடி விவாதங்களில் பொறி பறக்க இருக்கும் இடம்.

12,000,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவேன் என்றார்.

வர்தக சட்டங்களை மீறுவோரை தண்டிக்க புதிய கடுமையான சட்டங்கள் கொண்டு வருவேன் என்றார்.

அமெரிக்காவின் இழந்த இராணுவ தலைமையை திரும்ப கட்டி எழுப்புவேன் என்றார். 4,000 படையினரை வேலையிருந்து நிறுத்தியது வேலை இழப்புக்களைக்கொண்டு வந்திருப்பதாக கூறினார்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4]நன்றி மல்லையூரான் இந்த தொகுப்பிற்கு. [/size]

[size=1]

[size=4]வரும் நாட்களில் செய்யப்படும் கருத்துக்கணிப்புக்கள் கூறும் இந்த பேச்சு அவருக்கு உதவியதா இல்லையா என்று. [/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]சுனாமிக்குள் அகப்பட்ட நாய் திசையை தீர்மானிக்க முடியாது![/size]

[size=4]அகூதா, நீங்கள் ஒரு நடமாடும் தத்துவ ஞானி![/size]

:D :D :D :D

301282_481548525196736_435737227_n.jpg

  • தொடங்கியவர்

[size=6]குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரானார் மிட் ரோம்னி[/size]

[size=5]அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக தான் தெரிவாகியிருப்பதை ஏற்றுக்கொண்டு ஃபுளோரிடாவில் நடந்த கட்சி மாநாட்டில் உரையாற்றியுள்ள மிட் ரோம்னி, "அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளைத் தான் காப்பாற்றுவேன்" என்று கூறியுள்ளார்.[/size]

[size=4]ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பராக் ஒபாமா, தான் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவருகிறார் என்று ரோம்னி குற்றம்சாட்டியுள்ளார்.[/size]

[size=4]அமெரிக்கா எரிசக்தித்துறையில் தன்னிறைவு காண்பதற்கும், நாட்டின் வரவு செலவுக் கணக்கில் துண்டு விழும் தொகையைக் குறைப்பதற்கும், வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கும் தான் வைத்துள்ள திட்டங்களை இவர் தனது உரையில் விளக்கினார்.[/size]

[size=4]தனது மொர்மோன் மத நம்பிக்கை குறித்தும் இவர் தனது உரையில் குறிப்பிட்டார்.[/size]

[size=4]வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.[/size]

[size=4]http://www.bbc.co.uk/tamil/global/2012/08/120831_mittromney.shtml[/size]

  • தொடங்கியவர்

[size=5]குடியரசு கட்சியி‌டம் ‌புதிய சிந்தனை இல்லை[/size]

[size=3][size=4]குடியரசு கட்சியிடம் புதிய ‌சிந்தனை இல்லை மாற்றாக கடந்த நூற்றாண்டு சிந்தனையாக கொண்டதாக அக்கட்சி உள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=3][size=4]அயேவா மகாணத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ஒபாமா கூறுகையில், குடியரசு கட்சியின் சிந்தனைகள் கடந்த நூற்றாண்டு சிந்தனைகள் என தெரிவித்தார். மேலும் குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் மிட் ரோம்னியிடமும் அவரது கட்சியின் ஆதரவாளர்களிடமும் புதிய யோசனைகளே இல்லை ‌என கடுமையாக விமர்சித்தார்.[/size][/size]

[size=3]http://tamil.yahoo.c...-013700856.html[/size]

Edited by akootha

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இரண்டு பேரும் ரிவியிலை புடுங்குப்பட வெளிக்கிட்டுட்டாங்கள்......ஏதோ இங்கிலிஸ் படம் பாத்தமாதிரி இருக்கு...... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபாமா வந்தா..இன்னும் கொஞ்சம் (கனடா) வைத்தியர்கள் போன மச்சான் திரும்பி வந்தாராம் என்கிற மாதிரி கனடாவுக்கு வருவினம்..

நாலு வருடங்களுக்கு முன்பு இருந்த ஒபாமாவை இன்று காணவில்லை .களைத்துவிட்டார் போலிருக்கு .

ரொம்னி இன்று கோல் அடித்துவிட்டார் .

ஒரு கிழமைக்கு முன்னர் குடியரசு கட்சியினர் இன்றைய முடிவை எதிர்வு கூறியிருந்தார்கள். இதன் பின்னாலான சதிகளை வரும் விவாதங்களில் ஜனநாயக கட்சியினர் ஆராய வேண்டி வரும். இன்று ஒபாமா தாக்குதலுக்கு முன்னிற்கவில்லை.

முதலாவது விடையம் இது வரையில் குடியரசுக்கட்சியனர் தம் பக்கம் இருந்த குறைகளை பதில்கள் கூறி மறைக்க முயன்றனர். உதாரணத்திற்கு மாசாசு செட் மாநிலத்தில் கல்வியின் பெருமைகளை ரோமினி தனது வெற்றியாக கூறினார். ஆனால் அந்த மானிலம் ரோமினி பிறக்கமுதல் கூட காவாட்டு, பொஸ்ரன் போன்ற கல்லூரிகளுடன் படிப்பில் சிறந்த மாநிலம். சுக நல் கப்புறுதியில் தனது திட்டம் மானிலத்திற்கானது என்றார். ஆனால் அது அவரின் திட்டம் அல்ல. அந்த மாநிலத்து ஜனநாயக அசெம்பிளியால் ஆக்க பட்டது. இவர் வேறு வழியின்றி கையெழுத்திட்டிருந்தார். அந்த இடத்தில் இதுவரையில் ஜ்னநாயக கட்சியினர் தமது கதைகளை மற்றி அது ரோமினியின் திட்டம் அல்ல என்பதை இனி வெளிக்கொணர வேண்டும்.

ரோமினி தான் பணகாரருக்கு வரி வெட்ட மாட்டேன் என்றார். ஆனால் காங்கிரஸ் வெட்ட வேண்டும் என்கிறது. ஓபாமவை தூக்கி வாரி போட்ட கதையானது இது வரையில் பணக்காரரை மேன்மை படுத்துவதால் தான் வேலை வாய்ப்பு வரும் என்றவர், றையனில் வரவு செலவு திட்டத்திலிருந்து விலகி தான் மத்திய வகுப்பைத்தான் கவனிப்பேன், அவர்களுக்கு வரி விலக்கு தருவேன், வருமானத்தை கூட்டுவேன் என்றார். இது குடியரசு கட்சிக்கு இது வரையில் இல்லாத கொள்கை. இதில் ரோமினி பெரிய "U" ரேன் அடித்து 18 மாதமகாக நடத்தி வந்த பிரச்சரங்களில் இருந்து விலகி போய்விட்டார்.

இந்த சாத்தியத்தை அவர் முயற்சித்தது தோல்வி. நிச்சயமான பின்னர் தான்.தான் அடிக்கும் "U" ரேனை மக்கள் ஏற்றல் வெற்றி, இல்லையேல் எப்படியும் தோல்விதானே என்று நடந்திருக்கிறார். இதை வெட்டி அவர் எடுத்திருக்கும் "U" ரேனை உடைத்துக் காட்டுவது வரவிருக்கு நாட்களில் ஜனநாயக கட்சியினருக்கு பெரிய சவாலாக இருக்க போகிறது. அவர்கள் ரோமினி மீது இருக்கும் மக்களின் அவ நம்பிக்கைத்தான் கூட்ட முயல வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.