Jump to content

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் ( இறுதிப்பாகம் )


Recommended Posts

வணக்கம் வாசகர்களே ! கள உறவுகளே!!

இதுவரையில் ஏறத்தாள 40க்கு மேற்பட்ட குருவிகளையும் , ஒருசில அழியும் தறுவாயிலுள்ள பறவையினங்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன் . இவ்வளவு நாளும் எனது குருவிகள் எல்லாம் உங்கள் அன்பிலும் , பராமரிப்பிலும் திக்குமுக்காடினார்கள் . எனது குருவிகள் எல்லோரும் வலசை போகவிருப்பம் தெருவித்தமையால் இன்றுமுதல் இந்தக்குருவிக் கூட்டைக் கலைத்து வானத்தில் பறக்கவிடுகின்றேன் . இதுவரைகாலத்தில் இந்தக்குருவிகளை கண்டுபிடிக்க ஆர்வமாகப் பங்குபற்றய உங்களுக்கு வழங்கிய பரிசில்களில் ஏதாவது குறைகள் இருப்பின் குருவிகள் சார்பில் மன்னிப்பு கேட்கின்றேன் .

நேசமுடன் கோமகன்

************************************************************************************************************************

[size=5]42 காரோதிமம் ( கறுப்பு அன்னம் , Cygnus atratus )[/size]

Cygnus_atratus_Running.jpg

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b2/Cygnus_atratus_Running.jpg/512px-Cygnus_atratus_Running.jpg

காரோதிமம் என்பது பிரதானமாக அவுசுதிரேலியாவின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் வாழும் அளவிற் பெரிதான நீர்ப்பறவை இனமாகும். நியூசிலாந்து நாட்டில் இவ்வினம் கிட்டத்தட்ட முற்றாக அழியும் அளவிற்கே வேட்டையாடப்பட்ட போதிலும் பிற்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அவுசுதிரேலியாவில் இது காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இடம் பெயரும் ஓருயிரனமாகவே காணப்படுகின்றது. கறுப்பு அன்னம் உடல் முழுவதும் கருமையாயும் சொண்டு சிவப்பாயுமுள்ள பெரிய பறவைகளுள் ஒன்றாகும்.

கறுப்பு அன்னத்தை முதன் முதலில் 1790 ஆம் ஆண்டு விஞ்ஞான ரீதியில் விளக்கியவர் ஆங்கிலேய இயற்கையியலாளரான ஜோன் லதாம் ஆவார். கறுப்பு அன்னங்கள் தனியாகவோ அல்லது சிறு சிறு கூட்டங்களாகவோ காணப்படும். சில வேளைகளில் அவை நூற்றுக் கணக்கில் அல்லது ஆயிரக் கணக்கில் சேர்ந்திருக்கும். கறுப்பு அன்னங்கள் விலங்கியற் பூங்காக்களிலும், பறவையினச் சேகரிப்பு நிலையங்களிலும் பிரபலமானவையாகும். சில வேளைகளில் அவை காப்பகங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதால் அவற்றின் இயற்கை வாழிடத்துக்கு அப்பாற்பட்ட இடங்களிலும் காணப்படுவதுண்டு.

கறுப்பு அன்னம் பொதுவாக கரு நிற இறகுகளையும் வெண்ணிற பறத்தல் இறகுகளையும் கொண்ட பறவையாகும். அதன் சொண்டு பளிச்சென்ற செந்நிறத்திலமைந்திருப்பினும் சொண்டின் ஓரங்களும் முன் பகுதியும் வெளிறியதாகவே இருக்கும். அதன் கால்களும் பாதங்களும் சாம்பல் நிறம் கலந்த கறுப்பாகவே அமைந்திருக்கும். கறுப்பு அன்னங்களின் ஆண் பறவைகள் அவற்றின் பெண் பறவைகளை விட ஓரளவு பெரியவையும் ஒப்பீட்டளவில் நீண்டு நேரான சொண்டுகளையும் கொண்டிருக்கும். அவற்றின் குஞ்சுகள் சாம்பல் கலந்த கபில நிறத்தில் காணப்படுவதோடு ஓரங்கள் வெளிறிய இறகுகளைக் கொண்டிருக்கும்.

வளர்ந்த கறுப்பு அன்னமொன்று 110-142 ச.மீ. (43–56 அங்குலம்) நீளமும் 3.7–9 கி.கி. (8.1-20 இறாத்தல்) நிறையும் கொண்டிருக்கும். அதன் இறக்கைகளை விரிப்பதால் பெறப்படும் நீளம் 1.6-2 மீற்றராகும் (5.3-6.5 அடி). கறுப்பு அன்னத்தின் கழுத்து ஏனைய அன்னங்களின் கழுத்தின் நீளத்தை விடவும் மிக நீண்டது என்பதுடன் "S" வடிவத்தில் வளைந்து காணப்படும்.

கறுப்பு அன்னத்தின் ஒலி நீண்ட தூரம் கேட்கக் கூடியதும் மெல்லிசை போன்றும் இருக்கும். அத்துடன், அது இரை தேடும் வேளைகளிலோ அடையும் வேளைகளிலோ ஏதும் குழப்பமுறக் காணின் சீட்டியடிக்கக் கூடியதாகும்.

நீந்தும் வேளைகளில் கறுப்பு அன்னம் தன் கழுத்தை நன்கு வளைத்தோ அல்லது நன்கு நேராகவோ வைத்திருக்கக் கூடியதாகும் என்பதுடன் அதன் இறகுகளை அல்லது சிறகுகளை மூர்க்கமாகத் தோன்றும் வண்ணம் மேல் நோக்கி வைத்திருக்கும். கூட்டமாகப் பறக்கும் போது கறுப்பு அன்னங்கள் நேர் கோட்டிலோ அல்லது V வடிவத்திலோ பறக்கும் தன்மையுள்ளன. அக்கூட்டத்தில் பறக்கும் ஒவ்வொரு பறவையும் பல்வேறு வகையிலான ஒலிகளை எழுப்பிக் கொண்டும் சிறகுகளினால் அசைவுகளைக் காட்டிக் கொண்டும் பறக்கும் தன்மையுள்ளதாகும்.

பண்டைத் தமிழிலக்கியங்களிலும் (சிலப்பதிகாரத்தில்), உரையாசிரியர்களாலும் காரோதிமம் எனும் பெயரில் கறுப்பு அன்னம் குறிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வகை அன்னமானது, 18 ஆம் நூற்றாண்டு வரை எந்தவொரு மேற்கத்தேய நூல்களிலும் காணப்படவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கறுப்பு அன்னமானது அவுசுதிரேலியாவின் தென்மேற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களிலும் அவற்றை அண்டிய கரையோரச் சிறு தீவுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றது. அத்துடன் அவை தஸ்மானியாவிலும் முரே டார்லிங் படுகையிலும் மிகப் பரவலாகக் காணப்படுகின்றன. எனினும் கறுப்பு அன்னங்கள் அவுசுதிரேலியாவின் வட பகுதியிலோ நடுப் பகுதியிலோ பொதுவாகக் காணப்படுவதில்லை.

கறுப்பு அன்னம் 1979 ஆம் ஆண்டின் அவுசுதிரேலிய தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் சட்டம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அது மிகக் குறைந்த தீவாய்ப்புள்ள இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்படக்கூடாது .நிதானமா நிண்டு இருந்து யோசிச்சதில இந்தப்பறவை என்ன எண்டே தெரியல :)

Link to comment
Share on other sites

அவசரப்படக்கூடாது .நிதானமா நிண்டு இருந்து யோசிச்சதில இந்தப்பறவை என்ன எண்டே தெரியல :)

360 பாகையில சுழண்டடிச்சு பாருங்கோ சிலநேரம் வெளிக்கும் :lol: :lol: :D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் கோழி நந்து அண்ணா:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இது கோழி தான் ஆபிரிக்கால இருக்கு நீங்க பாத்திருக்க மாட்டிங்க :D

Link to comment
Share on other sites

கறுப்பு அன்னம்..

[size=4]Cygnus atratus / black swan என்றும் சொல்வார்கள். [/size]

Link to comment
Share on other sites

கோமகன் உங்களின் இந்த முயற்சி அருமை. பல பறவைகளின் பெயர்களை அறிந்து கொண்டோம். நன்றி. உங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள் நீங்கள் இணைத்த இந்த எல்லா பறவைகளுடைய பெயரையும்,படங்களையும் ஒரு புகைப்படமாக இணைத்தால் ஞாபகப்படுத்துவது இலகுவாக இருக்கும். தேவைப்படுவர்களும் தரவிறக்கி பயன்படுத்தமுடியும்.

பறவைகள் சரி, விலங்குகள் எப்போது?

Link to comment
Share on other sites

கோமகன் உங்களின் இந்த முயற்சி அருமை. பல பறவைகளின் பெயர்களை அறிந்து கொண்டோம். நன்றி. உங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள் நீங்கள் இணைத்த இந்த எல்லா பறவைகளுடைய பெயரையும்,படங்களையும் ஒரு புகைப்படமாக இணைத்தால் ஞாபகப்படுத்துவது இலகுவாக இருக்கும். தேவைப்படுவர்களும் தரவிறக்கி பயன்படுத்தமுடியும்.

பறவைகள் சரி, விலங்குகள் எப்போது?

மிக்க நன்றிகள் கிசோன் உங்கள் கருத்துக்கழுக்கு . உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகின்றேன் . ஆனால் நிறைவேற்ற சிறிது காலம் எடுக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் கோழி நந்து அண்ணா :D

ஊரில எத்தனை கோழிபிடிச்சிருக்கோம் . ஒண்ணுகூட இந்த சைஸ் இல்லையே :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில எத்தனை கோழிபிடிச்சிருக்கோம் . ஒண்ணுகூட இந்த சைஸ் இல்லையே :(

:D

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பதிந்த நந்தன் 26 , யாயினி , அகூதா , சுண்டல் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் . இன்னும் சிறிது நேரத்தில் இந்க் குருவிக்கான தூயதமிழைத் தருகின்றேன் . அதுவரையில் கூடு உங்களுக்காகவே திறந்துள்ளது .

Link to comment
Share on other sites

படம் நாற்பத்தி இரண்டிற்கான தூயதமிழ் கரோதிமம் ஆகும் . இதை கறுப்பு அன்னம் என்றே பலரும் அறிந்து வைத்திருக்கின்றனர் . ஆறுதல் பரிசில்களை யாயினியும் அகூதாவும் பெறுகின்றனர் .

யாயினி

1219062697fa55cd47fdf18527cd1946.jpg

http://2media.nowpublic.net/images//12/19/1219062697fa55cd47fdf18527cd1946.jpg

அகூதா

Bill-500-Euro-1287399000_96.jpg

http://www.torange-fr.com/photo/7/12/Bill-500-Euro-1287399000_96.jpg

பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும், சளைக்காமல் பறவைகளை, யாழ் களத்துக்கு, அழைத்து வந்த கோமகனுக்கு, மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின், மாநிலப் பறவைகளாக மிளிரும், இரண்டு அழகிய கருநிற அன்னங்களை, பரிசாக அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!

swans101.jpg

Link to comment
Share on other sites

இவ்வளவு காலமும், சளைக்காமல் பறவைகளை, யாழ் களத்துக்கு, அழைத்து வந்த கோமகனுக்கு, மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின், மாநிலப் பறவைகளாக மிளிரும், இரண்டு அழகிய கருநிற அன்னங்களை, பரிசாக அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!

swans101.jpg

உங்கடை பாசம் இப்பிடியாய் வருமெண்டு நான் நினைக்கேலை புங்கை . மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.