Jump to content

செட்டிநாடு இறால் குழம்பு!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

09-prawn-curry-300.jpg

[size=4]விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது ஏதேனும் வித்தியாசமான வகையில் சாப்பிடவில்லை என்றால், அந்த நாளே வேஸ்ட் என்பது போல் இருக்கும். ஆகவே அப்போது வீட்டில் ஏதேனும் தமிழ்நாட்டு செட்டிநாடு ரெசிபியில் ஒன்றான செட்டிநாடு இறாலை செய்து சாப்பிடலாம். இப்போது அந்த செட்டிநாடு இறால் குழம்பை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!![/size]

[size=4]தேவையான பொருட்கள்:[/size]

[size=4]இறால் - 400 கிராம்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

பூண்டு - 5 பல் (அரைத்தது)

பச்சை மிளகாய் - 5

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தேங்காய் - 1/2 கப் (துருவியது)

எண்ணெய் - தேவையான அளவு[/size]

[size=4]செய்முறை:[/size]

[size=4]முதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.[/size]

[size=4]பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.[/size]

[size=4]பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும்.[/size]

[size=4]பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.[/size]

[size=4]பின் அதனை எடுத்து ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.[/size]

[size=4]தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும்.[/size]

[size=4]தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.[/size]

[size=4]பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.[/size]

[size=4]இப்போது சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.[/size]

[size=4]http://tamil.boldsky...rry-001961.html[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச கசா என்பது, சர்பத்துக்குள் பாயாசம் மாதிரி... வழுக்கு, வழுக்கு என்று இருக்கும் பொருள்தானே... தமிழரசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இறால் பொரித்து சாப்பிடத் தான் விருப்பம் ஆனால் இந்த முறையில் செய்து பார்க்கத் தான் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச கசா என்பது, சர்பத்துக்குள் பாயாசம் மாதிரி... வழுக்கு, வழுக்கு என்று இருக்கும் பொருள்தானே... தமிழரசு.

இல்லை சிறி

83072448pavot-blanc-jpg.jpg

இது இப்படித்தான் இருக்கும் இந்திய பொருட்கள் விற்கும் கடைகளில் கேட்டால் தருவார்கள்

தமிழ்நாட்டில் பல உணவுவகைகளுக்கு இதனை சேர்ப்பதுண்டு இது நல்ல வாசனையையும் சுவையும் தரும் அத்தோடு இது உடலுக்கு நல்ல குளிர்மையை கொடுக்குமாம் சமைத்து சாப்பிட்டுப்பாருங்கள் நல்லாய் இருந்தால் சொல்லுங்கள் இல்லையென்றால் திட்டாதீர்கள் :D

எனக்கு இறால் பொரித்து சாப்பிடத் தான் விருப்பம் ஆனால் இந்த முறையில் செய்து பார்க்கத் தான் வேண்டும்

சமைத்து சாப்பிட்டுப்பாருங்கள் நன்றாக இருந்தால் சொல்லுங்கள் இல்லையென்றால் என்னை திட்டாதீர்கள் :D

பகிர்விற்கு நன்றி ரதி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள் ஒரு போதைப் பொருளாகும். இதைப் பற்றிய விளக்கத்தை பார்ப்போம்.

கசகசா வை ஆங்கிலத்தில் Opium Pappy என்று சொல்லப்படும்.

இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

ஆனால் விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது அந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்

அதுதான் ஓபியம் என்ற போதைப் பொருள்.

PAPAI-300x150.jpgஇந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார், குவைத், ஓமான், சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளில் இந்த கசகசா போதை பொருள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம்.

கசகசா தொடர்பாக புதிய தலைமுறை என்ற தமிழக வாரப் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியை பாருங்கள்.

சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தந்த விளக்கம் : ”வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை!

இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது.

கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக ‘கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை’ என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்

அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார்.

அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட… எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர்.

கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன.

இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க… உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!

இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார்.

இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார்.

கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது.

இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், ‘உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள். நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம்

Rasminnics .com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றால் குழம்பு எனக்கூறி அதற்குள் கசகசாவையும் சேர்த்து எங்களை போதைக்கு அடிமையாக்க

முயற்சி நடக்கின்றதா?? :D:lol: :lol:

Link to comment
Share on other sites

கச கசா என்பது, சர்பத்துக்குள் பாயாசம் மாதிரி... வழுக்கு, வழுக்கு என்று இருக்கும் பொருள்தானே... தமிழரசு.

இவ்வளவு நாளும் நானும் இதைத்தானே நினைச்சுக்கொண்டு இருந்தனான்...

(இந்தியாவில் கசகசா போட்டுத் தான் சர்பத்/ ரோஸ் மில்க் செய்து தருவார்கள்..

கடுகு போல கருப்பா சின்னதாக இருக்கும், அதனை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கும் போது வளவளப்புத் தன்மையோடு இருக்கும்..)

வாத்தியார், போப்பி விதையை இங்கும் பாண், கேக் போன்றவற்றுக்கு மேல் போடுவார்கள் தானே? இதுவா அது??

றால் குழம்பு எனக்கூறி அதற்குள் கசகசாவையும் சேர்த்து எங்களை போதைக்கு அடிமையாக்க

முயற்சி நடக்கின்றதா?? :D:lol: :lol:

:lol::D :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.