Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் போலி சிகரட்டில் மலக்கழிவு- இங்கிலாந்தில் அதிர்ச்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

cigarete-12912-150.jpg

[size=4]இங்கிலாந்து மக்கள் விரும்பி புகைக்கும் சிகரெட்களில் மனித மலம், இறந்த பூச்சிகள், புழுதி மண் போன்றவை கலக்கப்பட்டிருக்கும் பகீர் தகவல் சோதனையில் தெரியவந்துள்ளது. இதுபோல தரக்குறைவான, ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும் போலி சிகரெட்கள் சீனாவில் தயாராகி முறைகேடான வகையில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமானது.[/size]

[size=4]இங்கிலாந்தில் போலி சிகரெட் புழக்கம் பற்றி அறிய பர்மிங்காம் நகரில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த எம்.எஸ். இன்டலிஜென்ஸ் நிறுவனம் சமீபத்தில் சர்வே நடத்தியது. இதில் 30.9 சதவீத சிகரெட்கள் போலி மற்றும் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக எடுத்து வரப்படுகின்றன என தெரியவந்தது. கடந்த ஆண்டில் இது 14.1 சதவீதம் மட்டுமே இருந்தது. ஒரே ஆண்டில் இரட்டிப்பாக உயர்ந்தது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.[/size]

[size=4]இதையடுத்து, தீவிர சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் மே வரை 13 ஆயிரம் போலி சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை சீனாவில் தயாராகி முறைகேடான வகையில், இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டவை ஆகும். அச்சு அசலாக ஒரிஜினல் சிகரெட் பாக்கெட் போலவே மிக நேர்த்தியாக இந்த போலி பாக்கெட்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பல ஆண்டுகள் புகைப்பவர்களால்கூட வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவை இருந்தன.[/size]

[size=4]இதற்கிடையில், டெர்பிஷயர் உள்பட சில இடங்களில் கைப்பற்றப்பட்ட போலி, வெளிநாட்டு சிகரெட்களை இங்கிலாந்து எல்லை பாதுகாப்பு மற்றும் குடியேற்ற துறையான பார்டர் ஏஜென்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் ரசாயன பொருள், புழுதி மண், மனித மலம், இறந்த பூச்சிகள் போன்ற கழிவுகள் அந்த சிகரெட்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொது இடத்தில் அள்ளிய குப்பையை புகையிலையுடன் கலந்து சிகரெட்களை உருவாக்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.[/size]

[size=4]சீனா உள்ளிட்ட கிழக்கு நாடுகளில் இருந்து போலி சிகரெட்கள் அதிகளவில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. கண்ட பொருட்களையும் கொண்டு தயாரிக்கப்படும் போலி சிகரெட்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல்நலத்தை கெடுக்கும். உயிருக்கு ஆபத்தாக முடியும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று சுகாதார துறை அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.[/size]

[size=4]தரக்குறைவான வெளிநாட்டு சிகரெட், போலி சிகரெட்கள் நாட்டுக்குள் கடத்தப்படுகிறதா என்று கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்பட சகலமானவற்றையும் ஜெராக்ஸ் எடுத்ததுபோல போலி தயாரிப்புகளை உற்பத்தி செய்வது சீனாவுக்கு கைவந்த கலை.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்பனையாகும் உணவுச்சுவையூட்டியான சோயாசோஸ்சில் மனிதர்களின் தலைமுடி முக்கியபங்கு வகிப்பதாக ஒரு ஜேர்மன்பத்திரிகையில் பலவருடங்களுக்கு முன் வாசித்த ஞாபகம் :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரங்களின் எந்தப்பொருளையும் நம்பி வாங்கி உபயோகிக்க முடியாது எல்லாத்திலும் கலப்படம் நோ உத்தரவாதம்.

சீனாக்காரர், கலப்பட அரிசியில் ஒரு வகை பிளாஸ்டிக்கையும் பாவிப்பதாக சென்ற வருடம் செய்தி வந்தது. அதனுடன் ஒப்பிடும் பொழுது இது பரவாயில்லை. சிகரெட் புகையாகப் போய்விடும். :lol:

(NaturalNews) The Chinese food contamination freak show is back in full swing with new reports out of Singapore indicating that certain Chinese companies are now mass producing and selling fake rice to unwitting villagers. According to a report in the Korean-language Weekly Hong Kong, the manufacturers are blending potatoes, sweet potatoes, and plastic industrial resin to produce the imitation rice.

Learn more: http://www.naturalnews.com/031344_plastic_rice.html#ixzz26LC1JZR9

சிறிலங்காவின் நன்பண்டா அவன் ...........விட்டிடுவானா :D

  • கருத்துக்கள உறவுகள்

சீக் சிகரெட்டே கூடாது அதுக்குள்ள போலி சிகரெட் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.