Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் : ரொபட் பிளேக்

Featured Replies

[size=4]வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவது துரிதப்படுத்தப்படவேண்டுமெனவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் கூறியுள்ளார்.

யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், முக்கியமான மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பான நேர்மையான தேடுதல்கள், விசாரணைகள், வழக்குகள் நடந்திருக்க முடியும். காணாமல் போனவர்கள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமென கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

வடமாகாணத்தில் தேர்தல் நடைபெற வேண்டுமெனவும் அவர் கூறினார். 2013 செப்டெம்பரில் இத்தேர்தல் நடைபெறுமென தனக்கு கூறப்பட்டதாகவும் ஆனால் அதற்குமுன் விரைவாக அத்தேர்தல் நடைபெறுமென தான் நம்புவதாகவும், இத்தேர்தலை விரைவாக நடத்த தான் வலியுறுத்தியதாகவும் பிளேக் கூறினார். வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுனெ அவர் கூறினார்.

வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் தான் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன்பேசும்போதும், மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக ஆவர்த்தன மதிப்பீட்டின்போதும் இந்த பிரச்சினைகளுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுக்கும் என அவர் கூறினார்.

காணாமல் போனவரக்ள் உட்பட மனித உரிமை பிரச்சினைகளிலும் ஊடக சுதந்திரத்திலும் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

எனவே, அனைத்துலக ஆவர்த்தன மதிப்பீட்டிலும் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளிலும் இவ்விடயங்கள் முன்னுரிமை பெறும் என அவர் கூறினார்.

அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்ததையிட்டு அவர் தனது கவலையை தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை மீண்டும் விரைவில் தொடங்குவதை நாம் ஊக்குவித்தோம் என அவர் கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பான வேலைத்திட்டத்தை விரைவில் செயற்படுத்த வேண்டுமென அவர் கோரினார். இதற்கு 5 வருட காலம் தேவை என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா என்பதுதொடர்பில் அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சிவில் சமூக அங்கத்தவர்களுடன் பரந்துபட்ட விடயங்கள் பற்றி ஆக்கபூர்வமான முறையில் பேசியுள்ளேன். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், அமைச்சர் சமரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்துடனும் சிறந்த முறையில் பேசியுள்ளேன் என அவர் தெரிவித்தார்.[/size]

[size=4]http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/48629-2012-09-14-12-41-35.html[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.thehindu.com/news/international/article3897165.ece

U.S. wants speedy progress in Sri Lanka reconciliation process

R. K. Radhakrishnan

Drawing a comparison between the North and the East, he said that elections to the Eastern Provincial council were held just a year after the East was free of Tamil Tigers. Three years after the war was won, North still did not have a provincial council. In his meetings with senior Sri Lankan government officials in Colombo, he urged that the Northern Provincial Council elections be held as soon as possible. He also “encouraged an early resumption of talks between the TNA and the government to agree on powers to be devolved to the provinces.”

“On issues of accountability, it is our hope that three years after the end of the conflict, there can be a credible and transparent accounting, investigation and prosecution of some of the outstanding and serious allegations of human rights violations, as well as progress on the missing,” he said, and added that accountability is a “very important part of the reconciliation process.”

எனவே, அனைத்துலக ஆவர்த்தன மதிப்பீட்டிலும் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளிலும் இவ்விடயங்கள் முன்னுரிமை பெறும் என அவர் கூறினார்.

இதில் இந்தியா இருப்பதால் அறிக்கை(அனைத்துலக ஆவர்த்தன மதிப்பீடு) வெளியே வந்த பின்னர்தான் பிளேக்கின் இந்த நிலைப்பாட்டால் எதாவது பிரயோசனமா என்று தெரியும்.

[size=4]அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்ததையிட்டு அவர் தனது கவலையை தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை மீண்டும் விரைவில் தொடங்குவதை நாம் ஊக்குவித்தோம் என அவர் கூறினார்.[/size]
பிளேக் இதில் மட்டும் மாறவில்லை. சில இணைய ஊடகங்களின் பிளேக் தெரிவு குழுவுக்கு கூட்டமைப்பை துரத்துவதாக காட்ட முயலும் செய்திகளை இது ஊர்ஜிதப்படுதவில்லை.

பிளேக் சண்டை முடிந்தவுடன் கூட்டமைப்பு தீர்வை விரும்புகிறார்கள் என்றவர். (உண்மையின் படி இவர் இதை தனது முடிவாக வைத்துதான் அரசுக்கு போர்கால உதவிகளை செய்தார்- அதாவது போரின் பின் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள்- இது இவரின் தனிப்பட்ட முடிவு. இதற்கு அவர் அரசின் பொய்வாக்குறுதிகளில் தங்கினார். கூட்டமைப்புடன் இவர் அப்போது நல்லாக இல்லை. எனவே கூட்டமைப்பு இந்த தீர்மானத்தில் இல்லை). எனவே அவர் அந்த கொள்கையிலிருந்து மாறவில்லை என்பதைதான் இந்த வசனம் காட்டுகிறது. ஆதாவது கூட்டமைப்பு பேசி பெற்றுகொள்ளும் தீர்ப்பை இன்னமும் வரவேற்கிறார் என்பதுதான் இந்த வசனத்தில் அவர் சொல்வது. எனவே கூட்டமைப்பு இவரின் காலத்தில் பேச்சுவார்த்தையை அரசு ஏற்கத்தாயாரில்லை என்பதையும், தெரிவு குழு மூலம் தான் கொடுப்பதைத்தான் கூட்டமைப்பு பெறவேண்டடும் என்பதும்தான் மகிந்தாவின் பதில் என்பதை தெளியவக்க வேண்டும். அவ்வாறாயின் இதன் பின் வரும் அமெரிக்க அதிகாரிகள் திரும்ப பேச்சு வார்த்தையில் தொடங்கமாட்டாரகள். மேலும் கிழக்கு தேர்தலின் பின்னர் ரம்புக்கவெல வெளிநாட்டு ஊடகங்களுக்கு கொடுத்த துண்டு பிரசுரத்தில் கிழக்குமாகாண மக்கள் தீர்வை நிராகரித்து விட்டார்கள் என்றும், அபிவிருத்தியை ஏற்றுகொண்டுவிட்டார்கள் என்றும்தான் சொல்லியிருக்கிறார். இது அரசாங்கத்தின் தெரிவுகுழுவின் நோக்கத்தை தெளிவாக படம்போட்டு காட்டுகிறது. பிளேக் பேச்சுவார்த்தை தொடர வேண்டும் எனபது, தெளிவாக, உள்ளநாட்டு தரவுகளை ரம்புகவெல போன்றோர் திரிக்கும் பொது தான் வெளிநாட்டு தரவுகளில்தான் தங்க வேண்டும் என்பதையும் காட்டியிருக்கிறார். இது மேலும், வெளியே ராஜதந்திர முறைகளை மட்டுமே தான் கடைப்பிடிப்பதாக காட்டிக்கொள்ள முயன்றாலும், தன்னை போர்க்காலத்தில் இ்ங்கைகை அரசு ஏமாற்றியிருப்பதை உணர்வுபூர்வமாக உள்ளே வைத்திருக்கிறார் என்பதையும் காட்டுகிறது.

இது சர்வதேச தீர்வில் இன்னமும் ஒரு தெளிவான அரசியல் பதையை அமைத்தால் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதைதான் காட்டுகிறது. கூட்டமைப்பும் புலம் பெயர் அமைப்புக்களும் இதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருட தொடக்கத்தில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் - அமெரிக்கா எச்சரிக்கை!

சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்துள்ளபடி பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகி இலங்கை அரசு தொடர்ந்து இதே கொள்கையில் சென்றுகொண்டிருந்தால் அடுத்த வருட முற்பகுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிவருமென அமெரிக்கா நேற்று முன்னெச் சரிக்கை விடுத்திருக்கிறது.

கொழும்பில் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்தை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை றொபேட் ஓ பிளேக் நேற்றுக்காலை கொழும்பு ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் சந்தித்தார். இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிஸெனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

மீள்குடியேற்றம், தேசிய நல்லிணக்கம் மற்றும் நிரந்தர அமைதித் தீர்வொன்றை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு அக்கறையின்றி இருப்பதாகவும், இதனால் தமிழ் மக்கள் மிகவும் நம்பிக்கையிழந்து விரக்தியான நிலைக்குச் சென்றிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பேச்சுமேசைக்கு வருவதற்கு கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றபோதிலும், அரசுக்கு அதில் போதிய ஆர்வமில்லாமல் இருப்பதை அவர்களின் செயற்பாடுகளிலிருந்து அறியமுடிகின்றதென்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் மேலும் இங்கு எடுத்துக்கூறியிருக்கின்றனரெனத் தெரிகிறது.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ரொபர்ட் ஓ பிளேக், இலங்கையின் மனித உரிமை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் அமைதி முயற்சிகள் பற்றியும் அமெரிக்கா உன்னிப்புடன் அவதானித்துவருவதாகவும், இந்த நிலைமை தொடருமாயின் அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படுமென்றும் தெரிவித்திருக்கிறாரென அறியமுடிகின்றது.

http://tamilleader.c...4-04-38-59.html

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(video of Robert Blake's statement)

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82949/language/ta-IN/article.aspx

இராணுவ பிரசன்னம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, மனித உரிமை மீறல் - US இலங்கை மீது அழுத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://srilanka.usembassy.gov/sp-14sep12.html

We are also important trading partners. As you know, the United States is the largest single export destination for Sri Lankan goods, with over 20% of your exports. This year, we resolved a GSP case with Sri Lanka, preserving valuable trade opportunities for Sri Lankan exporters. The United States actually has a large trade deficit with Sri Lanka, as we imported over 2 billion dollars in goods last year while exporting only $300 million dollars worth of goods to Sri Lanka. That’s a balance of $1.7 billion dollars every year in Sri Lanka’s favor!

Sustained economic growth requires greater foreign direct investment and continued expansion of the export sector. We are continuing our Trade and Investment Framework Agreement, or TIFA, talks, which can open and encourage foreign direct investment in Sri Lanka. The new TIFA Labor Sub-Committee will help ensure that any labor concerns are resolved quickly, hopefully avoiding future GSP problems.

But in the three years since the end of the conflict, to be frank, we have not seen very many new U.S. companies come to invest in Sri Lanka. It’s not for lack of trying, but our investors, and investors from many other countries as well, face an uphill battle in Sri Lanka’s marketplace. The barriers include confusing and opaque rules on bidding for contracts, unpredictable government regulations such as the recent so-called Under-utilized Assets bill, and corruption. Sri Lanka moved up the World Bank’s Ease of Doing Business rankings from 98 to 89 in 2012, but actually lost ground in several key categories, including the ease of starting a business, dealing with construction permits, and registering property.

இது ஏதோ அமெரிக்காவின் அடுத்த ராஜதந்திர நகர்வின் ஆரம்ப வரிகள் என்றே நினைக்கிறேன்.

  • பிளேக்கின் ராணுவ குறைப்பு அறிக்கை
  • அமெரிக்க நாடாளுமன்றில் போர் குற்ற விசாரணை மனு
  • ஐ. நா. குழுவின் தலைவரான ஹெனீமெகாலியின் இலங்கை வருகை

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ அமெரிக்காவின் அடுத்த ராஜதந்திர நகர்வின் ஆரம்ப வரிகள் என்றே நினைக்கிறேன்.

  • பிளேக்கின் ராணுவ குறைப்பு அறிக்கை
  • அமெரிக்க நாடாளுமன்றில் போர் குற்ற விசாரணை மனு
  • ஐ. நா. குழுவின் தலைவரான ஹெனீமெகாலியின் இலங்கை வருகை

அப்படி இருந்தால் நல்ல இருக்கும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.