Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிலிருந்து இறக்குமதியான கொள்கலனில் கதிர்வீச்சு கொண்ட பொருட்கள் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]nuc_60(1)(1).jpg[/size]

[size=2][size=4]இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட கொள்கலனில் செயற்கை கதிர்வீச்சு பதார்த்தங்கள் இருப்பது கொழும்பு துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவித்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

125 தொகுதி துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட இக்கொள்கலனில் கோபால்; -60 எனும் மிக ஆபத்தான செயற்கை கதிர்வீச்சு பதார்த்தம் காணப்பட்டதாக இலங்கை அணுசக்தி அதிகார சபையின்தலைவர் கலாநதி ஆர்.எல். விஜேவர்தன, டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.

இது தொடர்பாக சபையின் கதிர்வீச்சு பாதுகாப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்பின் இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவிப்பதை நிறுத்திவைப்பதற்கு தீர்மானித்தாக அவர் கூறினார்.

"மேற்படி இந்திய நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நாம் இன்னும் ஆராயவில்லை. ஆனால் அப்பொருட்களை இந்தியாவுககு திருப்பி அனுப்புவதற்கும் இந்திய அணுசக்தி ஆணைக்குழு மற்றும் சரவ்தேச அணுசக்தி முகவரகம் ஆகியவற்றுக்கு இப்பொருட்கள் குறித்து அறிவிப்பதற்கும் இலங்கை சுங்கத் திணைக்களத்தை அறிவுறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது" என கலாநிதி விஜேவர்தன கூறினார்.[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...5-09-31-56.html[/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இதில எதோ ஒரு உள்நோக்கம் உள்ளதுபோல தெரிகின்றது :rolleyes: [/size]

இது தற்சமயம் நிகழ்ந்ததாக இருக்கலாம். இந்த உலோகம் பலதடவைகளில் பழைய உலோக இடங்களில் விற்கப்பட்டு கவனமில்லாத உருக்காலைகளால் வீட்டு பாவனை பொருள்களில் சேர்த்து கலப்பு உலோகமாக செய்யப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா உலகிலுள்ள மிச்சசொச்ச இரும்புகளை வாங்கி மறு உருவேற்றி...பாவனைப்பொருளாக விற்கும் நாடு....அவர்களுக்கு பணம் மட்டுமே முக்கியம்......அதாவது அம்பானிக்கு.......இன்று உலகின் இரும்பு வியாபாரத்தில் விலையை நிர்மாணிப்பதில் அம்பானியின் பங்கு மிகமிக உச்சம்......சொல்கிறார்கள்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

http://www.arcelormittal.com/corp/

இந்த மிட்டலின் பெயர் லக்ஷ்மி மிட்டல்.. இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து Arcelor Mittal ஆகிவிட்டது.. இரும்பு வியாபாரத்தில் முன்னணியில் உள்ள நிறுவனம்.. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அம்பானி இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அம்பானி இல்லையா?

அம்பானி வாங்கி விற்கும் வர்த்தகத்தில் பெரிய அதிபராக இருக்கலாம்.. சரியாகத் தெரியவில்லை.. மிட்டல் என்பவர் இரும்பை உருக்கி விற்பனை செய்யும் தொழிலில் உள்ளவர்..

  • கருத்துக்கள உறவுகள்

மேலை நாடுகளின், அணு சக்தியால் இயங்கும் போர்க்கப்பல்களின், முதலாவது தலைமுறை, மண்டையைப் போடுமிடம், கல்கத்தாவில் உள்ளது! இந்து மதத்தினர், காசியில் மண்டையைப் போட்டால், கைலாயம் போகலாம் என்று நம்புவது போல, இந்தியாவும், இந்த கப்பல்களை உருக்கி விற்பதன் மூலம், பொருளாதாரத்தை நிமிர்த்தலாம் என்று நம்புகின்றது!

ஒரு விதப் பாதுகாப்புமில்லாமல், இதை வெட்டி உருக்கும், சாதாரண இந்தியக் குடிமகனை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்!

u1_ship_breaking.jpeg

[size=4]ஆம், உலகத்தில் அணு ஆயுத கப்பல்களை மீள் சுத்திகரிக்கும் இல்லை அவற்றை அகற்றும் பணியில் முன்னிலை வகிப்பது இந்திய தேசம். [/size]

[size=4]அவ்வாறான உலோகம் இலங்கை வந்திருக்கலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல கனிமவளத்துறையில் உலோகங்களை எடுத்த பின் மீதம் உள்ள இரசாயனங்களை முன்பு வறிய ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்றி அனுப்பினார்கள்..! :unsure:

கோபோல்ட்-60 கப்பல்களில் ஆயுதங்களாகவோ அல்லது விசைச்சில்லு இயக்க நீராவி தாயாரிக்கும் இடத்திலோ பாவித்திருக்க சந்தர்ப்பம் இல்லை. இது தவறுதலாக சிறிய கழிவு பொருள்களுடன் கலந்து வந்திருக்கும். உருக்குக்கு தேவையான கோபோல்ற்றுடன் இவர்கள் இந்த பிழையானதையும் சேர்த்து பாவித்திருக்கிறார்கள். சில சமயம், சட்டப்படி, குறித்த காலத்தின் பின்னர் தான் இதை எஃகுடன் கலக்கலாம் என்றிருந்திருக்கும். இது தனிய பொருள்களை உற்பத்தி செய்த ஆலையுடன் பேசித்தீர்த்திருக்க கூடைய விடையம். இலங்கை படம் எடுப்பது இந்தியாவை பழிவாங்கலாம் என்று நினைத்து கொண்டு. ஆனால் சர்வதேசமுறையில் கோபோல்ட்-60க்கு இவ்வளவு நடவடிக்கை தேவை படுகிறதா என்பது தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.