Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வெளியிட்ட பிரெஞ்சு பத்திரிக்கை: தூதரகங்களை மூடிய பிரான்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]பாரீஸ்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள அமெரி்க்க திரைப்படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடித்திக் கொண்டிருக்கையில் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று நபிகள் பற்றிய கேலிச் சி்த்திரங்களை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று நபிகள் நாயகத்தின் கேலிச் சித்தரங்களை வெளியிட்டுள்ளது. இது முஸ்லிம்களை கொதிப்படையச் செய்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]இந்த கேலிச் சித்திரங்கள் வெளியானதையடுத்து பிரான்ஸ் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தனது தூதரகங்கள், பள்ளிகளை இன்று மூடியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கேலிச் சித்திரங்களைக் கண்டித்து போராட்டம் நடந்தது. பிரான்ஸிலும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]பாகிஸ்தானில் உள்ள தூரகத்தை மூடிய ஆஸ்திரேலியா:[/size][/size]

[size=3][size=4]நபிகள் நாயகத்திற்கு எதிரான படத்தைக் கண்டித்து நடந்து வரும் போராட்டங்களையடுத்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றுபவர்கள் இன்று வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படம், பிரான்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள நபிகளைப் பற்றிய கேலிச் சித்திரங்களைக் கண்டித்து இன்று பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அமைதியான வழியில் போராட வேண்டும் என்று அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]பாகிஸ்தானில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் ஆகியவை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் அங்குள்ள அமெரிக்க தூதரகத்திற்கு செல்ல முயன்ற 5,000 போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் கண்ணீர்ப் புகைகுண்டுகள் வீசினர். இதில் 50 பேர் காயமடைந்தனர். 12க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளும் காயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் போலீஸ் சோதனைச்சாவடிக்கு தீ வைத்தனர். இதையடுத்து ராணுவம் வந்து அவர்களை கலைந்து போகச் செய்தது.[/size][/size]

[size=3][size=4]இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தைக் கண்டித்து இதுவரை 20 நாடுகளில் நடந்த போராட்டங்களில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அமெரிக்கர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]http://tamil.oneindi...mad-161854.html[/size][/size]

இந்தப் போராட்டங்களைக் கவனித்தீர்கள் என்றால் பெரும்பான்மையான அராபிய முஸ்லீம்கள் (சவூதி அரேபிய,குவைத்,கட்டார்,ஓமான்) வாழும் நாடுகளில் போராட்டங்கள் பெரிய அளவில் எடுக்கப்படவில்லை. எகிப்தைத்தவிர அராபியரல்லாத மிகவும் பிற்பட்ட காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய பாகிஸ்தான் இலங்கை பங்களாதேசம் இந்தியா இந்தோனேசியா போன்ற நாடுகளிலுள்ளவர்களே போராட்டங்களை முன்னெடுப்பதுடன் கலவரங்களிலும் ஈடுபடுகின்றார்கள்.

இது ஏன்?

இந்நாடுகளில் வன் முறைக் கலாச்சாரத்திற்கு அங்கீகாரம் இருப்பதாலா? அல்லது

உண்மையாகவே மதத்தின் மேல் கொண்ட அபிமானத்தாலா?அல்லது

மேலைத் தேயத்தவர்கள் கருதுவதைப்போல் இலகுவில் உணர்ச்சிவசப்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பதாலா? அல்லது

சட்டம் ஒழுங்கு பற்றி எதுவித பிரக்ஞையும் இல்லாதவர்களாக இருப்பதாலா?

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய முஸ்லீம் மதத்தீவிரவாதிகளுக்கு எதிரான எல்லா செயற்பாடுகளையும் மனிதத்தின் பெயரால் உலகம் ஆதரிக்க வேண்டும். மனிதத்தை சகோதரத்துவத்தை விரும்பும் முஸ்லீம்கள் இஸ்லாமிய மதத்தீவிரவாதிகளிடம் இருந்து தங்களை தூர விலக்கி வைத்துக் கொள்வது நன்று..!

மற்றும்படி.. உலக மக்கள் இஸ்லாமிய மனித இனத்துக்கு எதிரான நிலைப்பாடுகளை திரைப்படம் மற்றும் காட்டூன்கள் மூலமாக வெளியிட உரிமையைக் கொண்டுள்ளனர் என்பதை முஸ்லீம்கள் உள்வாங்கிக் கொள்வதோடு.. தமது மதவெறியைக் கைவிட்டு.. காட்டுமிராண்டித்தனமான வன்செயல்கள் மூலம் மனித உயிர்களைப் பறிப்பதைத் தவிர்த்து.. மதச் சீர்திருத்தம் நோக்கி சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். :icon_idea:

Pakistan film protests: 19 die in Karachi and Peshawar

http://www.bbc.co.uk...d-asia-19678412

பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம் என்றால் காத்தான் குடியிலும் அது நிகழுகிறது..! ஆர்ப்பாட்டங்களை கொலைவேறியை நபியின் பெயரால் முன்னிறுத்த முதல்.. மதச் சீரமைப்புக் குறித்து இஸ்லாமிய மதத்தலைமைகள் இதய சுத்தியோடு சிந்திக்க முன்வருவதோடு.. இஸ்லாமியர்களை அதனை நோக்கி சீரிய வழிப்படுத்தி உலக அமைதிக்கும் சுமூக வாழ்விற்கும் உதவ வேண்டும். இன்றேல்.. இவர்களின் இந்த தீவிர மதவெறியே இவர்களை மனிதர்கள் என்ற நிலையில் இருந்து கீழுறக்கி... அழிக்கும் கருவியாவது தவிர்க்க முடியாததாக இருக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

எதனை விரும்பி யூதர்கள் சினிமா எடுக்க உதவி புரிந்தார்களோ, அதனையே முஸ்லிம்களும் செய்கின்றனர். உலகம் பூராவும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அலையை ஏற்படுத்தி முக்கியமாக அமெரிக்காவில் ஏற்படுத்தி ஒபாமாவுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் ஈரானின் மீது தாக்குதலை தொடுக்கத் தான் இந்த சினிமாவை எடுத்தனர். முஸ்லிம்களின் மத வெறியின் ஆழத்தை கச்சிதமாக யூதர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இன்று உலகளவில் முஸ்லிம்களுக்கு எதிரான அலையை முஸ்லிம்களே ஏற்படுத்தி வருகின்றனர். இதன் பெறுபேறாக ஈரானின் அழிவு இடம்பெறப் போகின்றது.

எதனை விரும்பி யூதர்கள் சினிமா எடுக்க உதவி புரிந்தார்களோ, அதனையே முஸ்லிம்களும் செய்கின்றனர். உலகம் பூராவும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அலையை ஏற்படுத்தி முக்கியமாக அமெரிக்காவில் ஏற்படுத்தி ஒபாமாவுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் ஈரானின் மீது தாக்குதலை தொடுக்கத் தான் இந்த சினிமாவை எடுத்தனர். முஸ்லிம்களின் மத வெறியின் ஆழத்தை கச்சிதமாக யூதர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இன்று உலகளவில் முஸ்லிம்களுக்கு எதிரான அலையை முஸ்லிம்களே ஏற்படுத்தி வருகின்றனர். இதன் பெறுபேறாக ஈரானின் அழிவு இடம்பெறப் போகின்றது.

ஈரானிலுமா ஆர்ப்பாட்டம்?

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் அழிக்கப்படணும் என்ற வார்த்தையை நரித்தனமாகக்கையாண்ட சிங்களம்

முள்ளி வாய்க்காலில் அதை முடித்திருந்தது.

ஈரானை அழிக்கணும் என்பதற்காக யூதர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அடுத்த வலையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தக்கலவரம் ஊடாக சேர்ந்து விட்டன. பிரான்சிலிருந்தும் ஒரு எழுத்தாளர் தன் பங்குக்கு ஊதிவிட்டுள்ளார்.

இனி ஈரான் ஏன் ஆர்ப்பாட்டங்களை நடாத்தாது மௌனம் கொண்டுள்ளதுடன் வார்த்தைகளால் மட்டும் கோபம் கொள்கின்றது என்பதன் பொருள் இதனை ஈரானும் ஊகித்துள்ளது என்பதே.

எதனை விரும்பி யூதர்கள் சினிமா எடுக்க உதவி புரிந்தார்களோ, அதனையே முஸ்லிம்களும் செய்கின்றனர். உலகம் பூராவும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அலையை ஏற்படுத்தி முக்கியமாக அமெரிக்காவில் ஏற்படுத்தி ஒபாமாவுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் ஈரானின் மீது தாக்குதலை தொடுக்கத் தான் இந்த சினிமாவை எடுத்தனர். முஸ்லிம்களின் மத வெறியின் ஆழத்தை கச்சிதமாக யூதர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இன்று உலகளவில் முஸ்லிம்களுக்கு எதிரான அலையை முஸ்லிம்களே ஏற்படுத்தி வருகின்றனர். இதன் பெறுபேறாக ஈரானின் அழிவு இடம்பெறப் போகின்றது.

உலகலாவிய அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலை பின் தள்ளத்தான் செய்யுமே தவிர முன்னுக்குக் கொண்டுவராது.

இந்த படத்துக்குப் பின்னால இஸ்ரேல் இருக்கிற மாதிரித்தெரியேல்ல.

மக்கள் எழுச்சிக்குப் பிறகு எகிப்தில் இஸ்லாமிய உணர்வு உருவேறி இருக்கிறது. இதனால் அங்குள்ள கிறீஸ்தவ அரபுக்கள் அழுத்தப் படுகிறார்கள். இந்த துன்பம் ( frustration ) காரணமாக படம் வெளிப்பட்டிருக்கலாம்.

[size=5]Report: Iran mulls 'pre-emptive attack' against Israel; commander warns of 'World War III'[/size]

By NBC News wire services

Updated at 4:46 a.m. ET: Iran could launch a pre-emptive strike on Israel if it was sure the Jewish state were preparing to attack it, a senior commander of its elite Revolutionary Guards was quoted as saying on Sunday.

Amir Ali Hajizadeh, a brigadier general in the Islamic Revolutionary Guard Corps, made the comments to Iran's state-run Arabic language Al-Alam television, according to a report on the network's website.

"Iran will not start any war but it could launch a pre-emptive attack if it was sure that the enemies are putting the final touches to attack it," Al-Alam said, paraphrasing the military commander.

http://worldnews.nbcnews.com/_news/2012/09/24/14059635-report-iran-mulls-pre-emptive-attack-against-israel-commander-warns-of-world-war-iii?lite

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.