Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் புதிய நகர்வில் விடுதலைப் புலிகள்: - கொழும்பு நாளேட்டில் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]LTTE%20%20logo.jpg[/size]

[size=4]ஜெனிவாவில் நவம்பர் மாதம் முதலாம் நாள் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ள நிலையில், அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் புதிய நகர்வு ஒன்றில் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.[/size]

[size=4]ஐ.நா நிபுணர்குழுவின் பரிந்துரைக்கு அமைய, அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி பிரித்தானியாவைத் தளமாக கொண்டியங்கும் உலகத்தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.[/size]

[size=4]அதேவேளை மற்றொரு விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பான அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழுவும், இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த அமைப்பு நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளது.[/size]

[size=4]அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அண்மையில் 31 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு கடிதம் எழுதியதன் பின்னணியிலும் இந்த அமைப்பே இருந்ததாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே, தென்னாபிரிக்கா மற்றும் சுவிற்சர்லாந்து அரசாங்கத் தரப்புகளுடன் உலகத் தமிழர் பேரவை பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size]

[size=4]கடந்த 23, 24ம் நாள்களில் இந்தச் சந்திப்புகள், இடம்பெற்றுள்ளன. வண. இமானுவல் அடிகளார் தலைமையிலான, உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு தென்னாபிரிக்க மற்றும் சுவிற்சர்லாந்து அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]இதன்போது, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்த ஆராயப்பட்டதாகவும், போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் தேடுவதற்கு அனைத்துலக போர்க்குற்ற விசாரணையே ஒரே வழி என்று வலியுறுத்தப்பட்டதாகவும் உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு தமிழன் என்றாலே புலி.. :unsure: அப்ப மாற்றுக் கருத்துக்காரரை எப்பிடி கூப்பிடுவான்? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]"The US Department of Defense would love to strengthen ties (which are already quite good) with the Sri Lankan military because the island nation is one piece of a bigger geostrategic puzzle that will become more important in the coming years. Accordingly, people should prepare themselves for the possibility that the US will, in the medium-term, ease diplomatic pressure on the Sri Lankan regime for its human rights record and its apathy toward national reconciliation.[/size]

[size=3]While advocacy is important and international assistance should be encouraged, Sri Lanka’s problems ultimately require Sri Lankan solutions. The way forward will not be easy, but that’s no reason for inaction. The administration in Colombo should show more leadership — continued prevarication is unhelpful.":[/size]

www.eastasiaforum.org/2012/09/28/human-rights-in-sri-lanka-between-the-un-and-the-us/

[size=4]

"The US Department of Defense would love to strengthen ties (which are already quite good) with the Sri Lankan military because the island nation is one piece of a bigger geostrategic puzzle that will become more important in the coming years. Accordingly, people should prepare themselves for the possibility that the US will, in the medium-term, ease diplomatic pressure on the Sri Lankan regime for its human rights record and its apathy toward national reconciliation.[/size]

[size=4]While advocacy is important and international assistance should be encouraged, Sri Lanka’s problems ultimately require Sri Lankan solutions. The way forward will not be easy, but that’s no reason for inaction. The administration in Colombo should show more leadership — continued prevarication is unhelpful.":[/size]

www.eastasiaforum.org/2012/09/28/human-rights-in-sri-lanka-between-the-un-and-the-us/

[size=4]இது கட்டுரையின் ஒரு பாகம். எனவே கட்டுரை முழுவதுடன் சேர்த்துதான் இதை பார்க்க வேண்டும்.

கட்டுரை பிரதானமாக அமெரிக்காவின் LLRC சம்பந்த மான பிரேரணையை சுற்றி வருகிறது. அதற்கு முடிவுரையாக இது சேர்க்கப்பட்டிருக்கு. முடிவாக அல்ல. முடிவாக Sri Lanka’s problems ultimately require Sri Lankan solutions. என்பதுதான் வைக்கப்படுகிறது.

தீர்வு விடையத்தில் இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கிவரும் பிளேக் கூறிவது இலங்கை அரசு தீர்வு ஒன்றை வைக்க வேண்டும் என்பதாகும். இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா விடுத்து Sri Lanka’s problems ultimately require Sri Lankan solutions. என்ற நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா போனால் அது தமிழருக்கு மிக மிக ஆபத்தான முடிவு. இந்த வசனம் மறைமுகமாக இலங்கை தருவதைதான் தமிழர் ஏற்கவேண்டுமரியோபதைத்தான் சொல்கிறது. இது போர் முடிந்தவுடன் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த கிருஸ்ணா பாவித்த வசனம். இது இந்தியாவின் "புலிகள் திரும்பிவருவார்கள், ஆகவே இலங்கை அரசு தமிழர்மீது ஒரு பிடி வைத்துகொள்வது சரிதான்" என்ற அனுமானத்திலிருந்து வருவது. பிளேக்கில் இருந்து அமெரிக்காவின் நிலைப்பாடு இலங்கையின் இனப் பிரச்சனையை அரசு தீர்த்துவைக்க வேண்டும் என்பதாகும். இந்த நிலையிலிருந்து அமெரிக்கா செயல் அளவில் இல்லாவிட்டாலும், கொள்கை அளவில் திரும்பி போகத்தக்க சந்தர்பம் குறைவு. இது குடியரசுக்கட்சி வந்தாலும் தொடர்ந்திருக்கும். இதையேதான் நாம் பழமை பேண் கட்சிகள் பதவிக்கு வந்த கனடா, பிரித்தானியாவில் பார்க்கிறோம். ஒபாமா வந்தால் செயல் அளவில் ஏதாவது தொடந்திருக்கும்.

"the island nation is one piece of a bigger geostrategic puzzle" இந்த பகுதி இலங்கையை எந்த சர்வதேச நாடும் மிரட்ட முடியாது என சொல்ல வருகிறது. ஆனல் இதானால் ஏற்கனவே இலனகை தனது சுதந்திரத்தை இழந்து போய்கொண்டிருப்பத்தை. தவறவிட்டுவிடுகிறது. இலங்கைத் தமிழர் இலங்கையில் இல்லாதிருந்தால் இன்று இலங்கை தான் விரும்பியபடி சீனாவுடன் இணைந்திருக்குமா என்ற ஒரு கேள்வி அதற்கான பதிலை தரும். இலங்கை அங்கு தமிழர் இல்லாதிருந்திருந்தால் நிச்சயாமாக இந்தியாவால் நன்றாக வஞ்சிக்கப்பட்டிருந்திருக்கும். தமிழர் இல்லாதிருந்த்திருந்தால் இந்தியா மலையகத்தமிழரை, முஸ்லீம்களை, கடைசி JVP தன்னும் தனக்கு உதவிக்கு பிடித்திருந்திருக்கும். சோனியாகாந்தி புலிகளை வஞ்சிக்க இலங்கை இராணுவத்தை பாவித்ததால் இன்று அந்த பாதையை திரும்ப முடியாமல் இந்தியா அவஸ்த்தைப்படுகிறது. இந்த கஸ்டம் இந்தியாவுக்கு மாற வேண்டுமாயின் காங்கிரசில் பெரிய மாற்றம் வேண்டும். சோனியா அதிகாரம் இழக்க வேண்டும். அது நடக்க சந்தர்பம் குறைவென்பதால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும் இந்தியா முழு மனத்துடன் தான் பாவித்த இலங்கை இராணுவ அரசை முற்று முழுதாக கைவிடாது. இதனால் இலங்கையின் நிலை திரிசங்கு நிலையில் இருக்கிறது. இந்தியா தனது கஸ்டத்திலிருந்து விடுபட்டால் இலங்கை தான் நினைத்தவை எல்லாவற்றையும் செய்யதக்க நிலையை இழக்கும். [/size]

Edited by மல்லையூரான்

சிங்களவனுக்கு தமிழன் என்றாலே புலி.. :unsure: அப்ப மாற்றுக் கருத்துக்காரரை எப்பிடி கூப்பிடுவான்? :rolleyes:

எலி எண்டு கூப்புடுவான்

Edited by Dash

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.