Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

cartoonl.gif

நன்றி - டெய்லி மிரர்

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply

..... மட்டுமே ...... முடியும்.

கருணாவின் துரோகத்தனத்தால் மட்டு-அம்பாறைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்து தமிழ்த் தேசிய விசுவாத்தை சொற்ப காலத்திலேயே அம்மக்கள் நிரூபிப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பிராந்திய மூத்த உறுப்பினரும், முன்னாள் மட்டு-அம்பாறை அரசியல்த்துறைப் பொறுப்பாளருமான கரிகாலன் அவர்கள் இலண்டன் ஐபிசி வானொலிக்கு இன்று அளித்த நேர்காணலில் உறுதியளித்துள்ளார்.

நேர்காணலின் முழுமையான விபரம் பின்வருமாறு:

கேள்வி: கருணா எடுத்த முடிவு தன்னிச்;சையான முடிவு என்று சொன்னீர்கள். அது குறித்து..?

பதில்: ஆம். கருணா இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் எமது மாவட்டத்தில் இருக்கின்ற தளபதிகளையோ பொறுப்பாளர்களையோ கலந்து ஆலோசிக்கவில்லை.

தலைவர் இட்ட கட்டளையை தானாகவே ஏற்றுக்கொள்ளாது அந்தக் கட்டளையை மீறுவதாக எங்களிடம் தெரிவித்திருந்தார்.

எனது போரட்ட வாழ்க்கையில் இன்றைக்குத்தான் தலைவரது கட்டளையை மீறிப் போகிறேன் என்று கூறிக்கொண்டு தலைவரது கட்டளைக்கு எதிரான ஒரு முடிவை அவர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நாங்கள் பலதடவைகள் பல தளபதிகளும் பல பொறுப்பாளர்களும் அவருக்கு எடுத்து விளக்கினோம். ஆனால் அவர் எந்த ஒரு ஆலோசனைக்கும் செவி சாய்க்கவில்லை.

அப்போது, நாங்கள் கூறிய ஆலோசனைகள் எல்லாம் ஒரு போலித்தனமான ஆலோசனையாகவோ ஒரு கையாலாகத்தனமான ஒரு முடிவுகளாகவும்தான் அவர் பார்த்துக்கொண்டாரே தவிர யதார்த்த புூர்வமாக ஒரு பிரச்;சினைக்குத் தீர்வு காண்கிற அணுகுமுறைகள் அவரிடம் இருக்கவில்லை.

தலைவருடையை கட்டடளையை ஏற்று அதற்கேற்றவாறு பிரச்;சினைகளுக்குத் தீர்வு காணுகிற மனோநிலையிலும் அவர் இருக்கவில்லை.

ஆகவே எங்களுடைய தளபதிகளுடையைதும், பொறுப்பாளர்களுடையதும் கருத்துகளைக் கேட்காமல் தானே ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதை எமது போராளிகள், தளபதிகள், எமது மாவட்ட மக்கள் மீதும் திணித்து இருக்கின்றார்.

இதன்மூலம் அவர் ஒரு தன்னிச்;சையான முடிவை எடுத்து அதை இன்று நடைமுறைப்படுத்த விழைகிறார் என்று நாங்கள் கருதுகிறோம்.

கேள்வி: கருணா தன்னிசையாக முடிவு எடுக்க என்ன காரணம்?

பதில்: அவர் எங்களுடைய ஆலோசனைகளை எல்லாம் கேட்காது தலைவரது கட்டளைகளை நிறைவேற்ற விரும்பாது தானே ஒரு குழப்பமான முடிவை எடுப்பதற்கு பின்னணியில் நின்று ஏதோ ஒரு சக்தி செயல்படுவதாக அனுமானிக்கிறோம்.

அது எத்தகைய சக்தி என்பதை விரைவிலே காலம் உணர்த்தும் என்று நம்புகிறோம்.

கேள்வி: கருணா பிரச்;சினையை சுமூகமாகத் தீர்த்து கொள்ள முடியாது என்று கருதுகிறீர்களா?

பதில்: இந்தப் பிரச்;சினையை சுமூகமாகத் தீர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவருடன் பேசிப் போராடிப் பார்த்தேன்.

என்னையும் இந்தப் பிரச்;சினை ஆரம்பமானவுடனேயே தலைவர் இங்கு வருமாறு அறிவித்தல் விடுத்தார். ஆனாலும் நான் இங்கு வருவதன் மூலம் பிரச்;சினையைத் தீர்க்க முடியாது இறுதி வரைக்கும் இப்பிரச்;சினைக்கு சுமூகத் தீர்வு கண்டு தேசியத் தலைமையின் கீழ் செயற்படுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கருணாவுடன் அடிக்கடி கதைத்தேன்.

இறுதியாகக் கூட தமிழீழ நிர்வாகத்தை கைவிட்டாலும் கூட தேசியத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறேன். அதற்கும் கருணா செவிசாய்க்காது தானே தன்னிச்;சையாக நின்று சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்கிறோம் என்று ஒரு அறிவிப்பைக் கொடுத்திருந்தார்.

இதன் பின்னர் அவரோடு சமரசம் பேசுவதிலோ அல்லது அவருக்கு மன்னிப்பு கொடுத்து ஒரு சுமூகத் தீர்வை காண்பதிலோ தலைமைப்பீடம் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. அதனால்தான் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை விடுதலைப் புலிகள் அமைப்ப்பிலிருந்து நீக்கியுள்ளது.

எமது கட்டமைப்பின் படி ஒரு தளபதி நீக்கப்பட்டால் அடுத்த தளபதி பொறுப்பேற்று மாவட்டத்தின் போராளிகளையும் மக்களையும் வழிநடத்துகிற செயல்பாடுதான் இருந்து வருகிறது. அதன்படி துணைத் தளபதியாக செயல்பட்ட ரமேஷ் இப்போது தளபதியாக பொறுப்பேற்று மீதமுள்ள போராளிகளையும் பொறுப்பாளர்களையும் வழி நடத்துவதற்கான ஒரு செயற்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

அதன் மூலம் ஒரு சுமூகத் தீர்வை காண முடியுமே தவிர கருணாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதன் மூலமோ கருணாவிற்கு மன்னிப்பு அளிப்பதன் மூலமோ சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.

கேள்வி: கருணாவின் தரப்பில் பலதரப்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றனவே..இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பதில்: கருணா தெரிவித்துள்ள கருத்துகள் எல்லாம் ஒரு வறட்டுத்தனமான ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளாக இருக்கின்றன.

நான் இறுதியாகக் கூட சந்தித்த போது இந்த தமிழீழப் பொறுப்பாளர்கள் மட்டு-அம்பாறை மாவட்டத்தைச்; சேர்ந்தவர்கள் எவருமே இல்லை என்ற கட்டமைப்பை வெளிப்படுத்தி அதனை மக்களுக்கும் விநியோகித்து எல்லா செய்தி ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தி ஒரு பிரதேசவாதத்தை கிளப்பி தன்னை நியாயப்படுத்த துணிந்திருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.

இந்த விடுதலைப் போராட்ட காலத்திலே நாங்களும் பல இடங்களில் கடுமையாக சண்டையிட்டுள்ளோம்.

தகுத்திக்கேற்ப தலைமைப்பீடம் பல பொறுப்புகளைக் கொடுத்து வைத்து இருக்கிறது.

போராளிகளும் பல யுத்த களங்களிலே நின்று போரிட்டு எல்லா மக்களது நட்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறார்கள்.

இது இன்று நேற்று ஏற்பட்ட சூழல் அல்ல. நீண்ட காலமாகவே அவர் மனதில் குடிகொண்டிருந்த குரோத மனப்பான்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த வெளிப்பாடு தான் செய்த குற்றச்;செயலை மறைப்பதற்காக தன்னை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறான குற்றச்;சாட்டை சுமத்துவதன் மூலம் தான் ஒரு சிறந்த தளபதி - தன் மீது ஒரு அபாண்டமான குற்றச்;சாட்டை எமது மாவட்டத்தை, மாவட்ட மக்களை புறக்கணிப்பதாக ஒரு தோற்றப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி தான் ஒரு நிரபராதி; ஆனால் தலைமைப்பீடம்தான் எதிராக இருக்கிறது என்ற கருத்தை மக்கள் மீது திணிக்க முற்பட்டு இருக்கிறார்.

இதன் மூலம் தான் ஒரு பிரதேச விசுவாசி என்பதை காட்ட முனைகிறார்.

இதில் பலதரப்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும் உண்மை இதுதான்.

கேள்வி: இந்த முரண்பாட்டை தீய சக்திகள் பயன்படுத்த முயற்சிப்பது வரலாற்று உண்மை. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?.

பதில்: எமது விடுதலைப் போராட்டத்திலே உலகம் முழுவதும் பரந்து வாழ்கிற தமிழர்கள் மிகுந்த பற்றுறுதியோடும் விசுவாசத்தோடும் நன்றியுணர்வோடும் விடுதலைப் போராட்டத்தை வெற்றி பெறச்; செய்வதற்கு அரும்பாடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் கட்டி வளர்த்த இந்த விடுதலைப் போராட்டத்தை சிதைத்து விடுவதற்காக அந்த தீய சக்திகள் முனைவதாக இருந்தால் அதற்கு பலியாவதாக இருந்தால் அது ஒரு மாபெரும் தேசத் துரோகமாகவே கருதப்படும்.

அந்தத் தேசத் துரோக நடவடிக்கையாகத்தான் இன்று அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்களிடமிருந்தும் போராளிகளிடமிருந்தும் அப்புறப்படுத்தப்பட்டு அடுத்த தளபதி பொறுப்பேற்று அந்த தீயசக்திகளின் முயற்சியை முறியடித்து நிச்;சயமாக மட்டக்களப்பு அம்பாறைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்து மீண்டும் தேசியத் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட அமைப்பாக இயங்குவதற்கு எமது தளபதிகளும் பொறுப்பாளர்களும் உறுதியோடு செயல்பட உறுதி புூண்டிருக்கிறார்கள்.

நிச்;சயமாக இன்னும் சொற்பகாலத்தில் அதை தலைமைப்பீடத்திற்கு காட்டுவோம் என்பதை சர்வதேச உலக மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

கேள்வி: கருணா நீக்கம் தொடர்பாக சமாதான முன்னெடுப்புகளில் பாதிப்பு ஏற்படுமா?

பதில்: எமது தேசிய விடுதலைப் போராட்டம் எமது தேசியத் தலைவரின் கீழ் அணிதிரண்டு அனைத்து போராளிகளும் பொறுப்பாளர்களும் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

தனியொரு மனிதனுக்கு தவறிழைத்தமைக்காக ஒரு ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் அவரது பதவி நிலை பறிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்தமாக எமது விடுதலைப் போராட்ட அமைப்பின் செயற்பாடுகளுக்கு எந்தவிதமான குந்தகத்தையும் ஏற்படுத்த முடியாது.

சர்வதேச நாடுகளுக்கு எல்லாம் இந்த பேச்;சுவார்த்தைக்காக சென்று வந்த கருணா அவர்கள் பல உறுதி மொழிகளையும் எமது தேசியத் தலைமையை-தேசிய விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மக்களுக்குத் தெளிவுபடுத்தியவர்.

தெளிவுபடுத்திய சொற்ப காலத்திற்குள்ளேயே எமது விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கு அவர் உறுதிபுூண்டிருக்கிறார் என்றால் அவரது கொள்கைப் பற்றும் அவருடைய உறுதிமொழிகளும் நிச்;சயமாக ஒரு உள்நோக்கத்தை வைத்து அவர் போலியாக நடித்திருக்கின்றார் என்ற உண்மையைத்தான் புலப்படுத்தி இருக்கிறது.

ஆகவே அவருடைய செயற்பாடு நிச்;சயமாக வெற்றியளிக்கமாட்டாது. எமது விடுதலைப் போராட்டத்திலே ஒரு மாபெரும் சக்தியாக எமது மக்களும் போராளிகளும் இருக்கிறார்கள்.

ஒரு பொறுப்பாளரையோ ஒரு தளபதியையோ நம்பி இந்த விடுதலைப் போராட்டம் இல்லை.

ஆதலால் ஒட்டுமொத்தமான-பேச்;சுவார்த்தை மூலம் நிரந்தரமான தீர்வை எமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நடத்தப்படுகிற இந்த பேச்;சுவார்த்தைகள் தனிமனிதன் ஒருவருடைய செயற்பாடும் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும் எந்த விதத்திலுமே பாதிக்காது.

கேள்வி: கிழக்கில் இருந்து பொறுப்பாளர்கள் வன்னிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?

பதில்: மட்டக்களப்பு-அம்பாறையில் செயற்பட்டு வந்த முக்கியமான தளபதிகள், துணைத் தளபதி, அரசியல் பொறுப்பாளர், இராணுவப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளார், நிர்வாகப் பொறுப்பாளர் இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.

அவர்கள் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பொறுப்புகளை ஏற்று தொடர்ந்தும் செயற்பட ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த கட்டமைப்பின் கீழ் அவர்கள் செயற்பட தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். மட்டக்களப்பு அம்பாறை மக்களும் அதை ஏற்று செயல்பட தயாராக இருக்கின்றார்கள்.

இன்று மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டம் ஒரு மிகுந்த சோக நிலையில் இருந்துகொண்டு இருக்கிறது.

தனது விசுவமான ஆட்களை வைத்து கருணா பலவிதமான பிரதேச உணர்வுகளை கிளறிவிடக் கூடிய நடவடிக்கையில் இறங்கிக் கொண்டு இருக்கிறார்.

குறிப்பாக வடக்கு கிழக்கு என்ற பேதத்தை மக்கள் மனதிலே ஏற்படுத்தி மாபெரும் பிரிவினை தோற்றத்தை உருவாக்கும் செயலிலே இறங்கியிருக்கிறார். அதற்கு மக்கள் எவருமே சுயமாக ஆதரவு அளிக்கத் தயாராக இல்லை.

கடந்த 30 ஆண்டு காலமாக இரத்தம் சிந்தி கண்ணீர் சிந்தி வளர்த்தெடுத்த இந்த விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட்டு தனது சுயலாபத்தை அடைய முற்படுகிற இந்த நடவடிக்கைக்கு எமது மக்கள் ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டார்கள். அதற்கு விலைபோகவும் மாட்டார்கள்.

அந்த மக்கள் விரும்புவதெல்லாம் இந்த பிரச்;சினைகளுக்கு நிரந்தத் தீர்வு காணப்பட்டு மீண்டும் எமது தேசியத் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட அமைப்பாக செயல்பட வேண்டும் என்பதே.

என்னிடம் பலர் கண்ணீர்விட்டு அழுதனர். இந்த நிலைமை எமது மாவட்டத்திற்கு ஏன் ஏற்பட்டது?. இந்த நிலைமையை ஒரு முடிவுக்கு கொண்டுவாருங்கள் என்று கெஞ்சிக் கேட்டார்கள்.

இன்று மக்கள் எப்போதும்போல் எம்முடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் இங்கு வந்து எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு எமது போராளிகளும் பக்கபலமாக நிச்;சயமாக இருப்பார்கள்.

கருணாவின் தவறான செயல்களுக்கு ஒத்துழைக்காது அவரை ஓரங்கட்டி எம்மோடு இணைந்து கலந்துவிட்ட விடுதலைப் போராட்டத்தை வழிநடாத்துவதற்கு எமது மக்கள் நிச்;சயமாக உழைப்பார்கள். பெரும் நம்பிக்கை இருக்கிறது.

அண்மையிலே நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்விலே ஆயிரக்கணக்கான மக்கள் எமது தேசியத் தலைவர் உருவப்படத்தை தாங்கிக் கொண்டு புலிகளே தமிழர்! தமிழரே புலிகள்!! என்ற கோஷத்தை எழுப்பி வந்தமை அவர்களது உணர்ச்;சியையும் உத்வேகத்தையும் வெளிக்காட்டக் கூடியதாக இருந்தது.

இந்த உணர்ச்;சியையும், உத்வேகத்தையும் ஒரு சிலநாட்களில் ஒரு கருணாவின் சுயநலத்துக்காக பயன்படுத்துவதை எந்தவொரு மக்களும் அனுமதிக்கப் போவதில்லை. அதற்கு அவர்கள் உடன்படவும் மாட்டார்கள்.

இந்த 30 ஆண்டுகாலம் தேசிய உணர்வையும் தேசியத் தலைமை விசுவாசத்தையும் காட்டிவிட்டு ஓரிரு நாட்களிலே அதனை து}க்கி எறிந்துவிட்டு அதற்கு எதிராக செயற்படுங்கள் என்று கோசமிடுவது நகைப்பிற்கிடமானது. கேலிக்கூத்தானது. போலித்தனமானது. இதற்கு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் செவிசாய்க்கமாட்டார்கள்.

இதற்கு நிச்;சயமாக ஒரு பதிலடி கொடுத்து தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர்களோடு செயற்படுவதற்கு உறுதிபுூணுவார்கள் என்பதை நிச்;சயமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி: தேர்தல் தொடர்பாக..?

பதில்: தமிழ்த் தேசியத்தையும் விடுதலைப் புலிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டையும் நியாயப்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளை முழு தமிழ் உலகமே ஏற்றுக்கொள்வதற்கான மீண்டும் ஒரு தீர்வை உறுதிப்படுத்துக்கிற தேர்தல் இது.

புலிகள் தான் மக்கள்- மக்கள்தான் புலிகள் என்று மட்டக்களப்பிலே போட்டியிடுகிற ஒவ்வொரு வேட்பாளர்களும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த கொள்கைக்கே வாக்களிக்க எம்மக்களும் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளையே ஏகப்பிரதிநிதிகளாக ஏற்க வேண்டும்; தமிழ்த் தேசியத்தை நாங்கள் மீண்டும் ஒருமுறை உணர்த்திக் காட்ட வேண்டும் என்ற உறுதியோடு மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர்.

இன்று இடம்பெற்றுள்ள சலசலப்புச்; சூழல் எமது மக்களின் உணர்வலைகளை எந்த விதத்திலும் பாதிக்காது.

தேர்தலிலும் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

நிச்;சயமாக தேர்தலில் மக்கள் எமது தமிழ்த் தேசியத்தையும் விடுதலைப் புலிகளே ஏகப்பிரதிநிதிகள் என்பதையும் வெளிப்படுத்துகிற முடிவை அவர்கள் அறிவித்து மிகப்பெரிய வெற்றியை அளிக்க உறுதிபுூணுவார்கள்.

இக்கட்டான சூழலில் விடுதலைப் புலிகளின் பலத்தை நிரூபிக்க ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் உறுதியோடு செயல்படுவார்கள் என்று நாம் நம்புகிறோம். தேர்தல் முடிவு மூலம் அவர்கள் நிரூபிப்பார்கள்.

கேள்வி: தேசியத் தலைவர் அவர்கள் தன்னை கொல்லத் திட்டமிட்டுள்ளார் என்று மேற்கத்திய ஊடகங்களிடம் கருணா கூறியுள்ளாரே?

பதில்: இது தன்னுடைய பலவீனத்தை நியாயப்படுத்துவதற்கான குற்றச்;சாட்டு. தான் செய்த தவறு அம்பலப்படுத்தப்பட்டு உலக மக்களால் அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அவர் ஒரு குற்றவாளியாக்கப்படுவிடுவார

சிறீலங்காவின் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடையே மீண்டும் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக, நேற்று சுமார் 20 கைதிகளும், நான்கு சிறைச்சாலை அதிகாரிகளும் காயங்களுக்குள்ளாகியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்குள் நேற்று நீர் வழங்குவதில் ஏற்பட்ட ஒரு முரண்பாடு காரணமாக சிறைச்சாலைக் கைதிகளின் இரு குழுவினருக்கும் இடையே மோதலொன்று வெடித்தது.

இந்த மோதலில் 30 க்கும் மேற்பட்ட கைதிகள் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இதன்பின், சிறீலங்காவின் கலகம் அடக்கும் காவல்த்துறைப் பிரிவினர் சிறைச்சாலைக்கு அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

கலகம் அடக்கும் காவல்த்துறைப் பிரிவினர் நேற்று சிறைச்சாலையிருந்து சென்ற பின்னர் மீண்டும் அங்கு மோதல்கள் வெடித்ததாகவும், தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கலகம் அடக்கும் காவல்த்துறைப் பிரிவினர் நிரந்தரமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சின் செயலாளர் யுனைட் தெரிவித்துள்ளார்.

நன்றி : புதினம்

"Karuna will be seen as a Pol Pot if he continues to act irresponsibly towards our people", said Mr. Sivagnanam Karikalan, one of the senior leaders in the East to arrive in Kilinochchi Sunday morning for discussions with his leadership about the situation in Batticaloa. Mr. Karikalan is a close confidante of Mr. Karuna, the eastern LTTE leader who was sacked from the Liberation Tigers Saturday on charges of treason.

Several heads of divisions and commanders of the LTTE troops in the Batticaloa-Ampara district also arrived in Kilinochchi Sunday for consultations with the leader of the Liberation Tigers.

Mr. Karikalan met the press briefly at the LTTE media coordinating office sunday noon. He charged that there were outside elements behind Mr. Karuna's decision to act traitorously.

"Karuna's decision to betray us was a decision that he took on his own without consulting any of his colleagues and senior staff. He is trying to compell commanders and heads of divisions in the Batticaloa-Ampara district to accept his decision. He won't succeed.

"Today none of the people in the Batticaloa-Amapara district are prepared to reject our national leader. I want to reiterate this point. Even at the recent Pongu Thamil festival in Batticaloa, thousands of our people carried photos of our national leader with the slogan 'Tamils are tigers. Tigers are Tamils', expressing their commitment to the Tamil national cause and to our national leadership" said Mr. Karikalan.

நாங்கள் தமிழினத்துரோகியல்ல..

தலைவருக்கு 3 கோரிக்கைகள்.

பிபிசியில் கருணாவின் செவ்வி

நாங்கள் தமிழினத்துரோகியல்ல..

தலைவருக்கு 3 கோரிக்கைகள்.

பிபிசியில் கருணாவின் செவ்வி

http://www.suratha.com/suratha.com.ram

தமிழ் மக்களுக்கு எதிராக பொறுப்பற்ற தன்மையில் போல் பாட்டாக கோர வடிவம் எடுக்கிறார் கருணா என்று கிழக்குப் பிராந்திய மூத்த தளபதி கரிகாலன் சாடியுள்ளார். வன்னியில் இன்று ஊடவியலாளர்கள் முன்னிலையில் பேசிய கரிகாலன் இதனைத் தெரிவித்தார்.

கிழக்குப் பகுதியிலிருந்து இன்று காலை கிளிநொச்;சி வந்தடைந்த கரிகாலன் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:

கருணாவின் இந்த முடிவுக்குப் பின்னால் சில தீய துரோக சக்திகள் உள்ளன. கிழக்குப் பிராந்திய மூத்த தளபதிகளுடனோ, படையணியினருடனோ கலந்து ஆலோசிக்காமல் கருணா தனிப்பட்ட முறையில் இயக்கத்திலிருந்து விலகி தனித்து செயல்பட முடிவு செய்துள்ளார்.

மட்டக்களப்பு-அம்பாறை தளபதிகளையும் பொறுப்பாளர்களையும் தனது முடிவுக்கு கட்டுப்பாடுமாறு கருணா வற்புறுத்தி வருகிறார். அவரால் இந்த விடயத்தில் வெற்றி பெற முடியாது.

மட்டக்களப்பு-அம்பாறை மக்கள் அனைவரும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களையே ஏற்றுள்ளனர். தேசியத் தலைவரை நிராகரிப்பதை ஒருபோதும் அந்த மக்கள் ஏற்க மாட்டார்கள். அண்மையில் மட்டக்களப்பில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வில், தேசியத் தலைவரின் படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்திய தமிழ் மக்கள், தமிழர்களே புலிகள்! புலிகளே தமிழர்கள்!! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்த் தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத் தலைமைக்குமான தங்கள் கடமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

கரிகாலனுடன் இயக்கத்தின் மட்டு-அம்பாறை பொறுப்பாளர்கள் பலரும் இன்று காலை மேலதிக ஆலோசனைக்காக கிளிநொச்;சி வந்தடைந்துள்ளனர்.

நன்றி : புதினம்

ஏனப்பா கஸ்டப்படுறீங்கள். துரோகியளின் பேச்சையெல்லாம் கேக்க டைம் இல்லை. பிறகு டைம் இருந்தா கேப்பம். :lol: :P :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூடுதலாக மற்றய இணையத்தள செய்திகளும் தகவல்களுமே இப்பகுதியில் இடம் பெறுவதால். Breaking News என்ற இப்பகுதி. செய்திகள் தகவல்கள் பகுதிக்கு இடம்மாற்றப்பட்டுள்ளது.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

ஓ பொட்டம்மான்.தமிழ்.நடேசன்......

சரி சரி வேற யாரை எல்லாம் பொறுத்த தலை 3 வெளியில போடு நான் வாறன்

வந்து நான் ஒழுங்கா இருப்பனோ சந்தேகம் தான்

சரி 20 வருசமா ஒண்டா......

[scroll:d1d3ccfe82]20 வருடமா தோளோடு தோள் நின்ற கடவுளே !!!!!!!! அம்மான் திருப்பியும் கேக்கிறன் நீங்களா இப்படி??????????

:oops: :oops: :oops: :oops: [/scroll:d1d3ccfe82]

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தமிழினத்துரோகியல்ல..

தலைவருக்கு 3 கோரிக்கைகள்.

பிபிசியில் கருணாவின் செவ்வி

நாங்கள் தமிழினத்துரோகியல்ல..

தலைவருக்கு 3 கோரிக்கைகள்.

பிபிசியில் கருணாவின் செவ்வி

http://www.suratha.com/suratha.com.ram

:idea: :idea: :idea: :idea: :idea: :idea: :idea:

எமது மீட்புக்கு உதவுங்கள்.

கருணாவின் தான்தோன்றித்தனமான செயலினால் அவரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற போராளிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளினாலேயே அவர்கள் தலைவரின் புகைப்படங்களை கிழித்தெறியும்படி கட்டளையிடப்பட்டுப் படங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளது. அவர்கள் கண்ணீருடன் இதனைச் செய்துள்ளார்கள். கருணாவினால் 80 புலனாய்வுப்பிரிவுப் போராளிகள் ஆதரவாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் மூத்த புலனாய்வுத்துறை உறுப்பினர் நீலன் அண்ணா உட்பட 80பேர் இருக்கின்றார்கள். இவர்கள் யாவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களே. கருணாவின் விலைபோன துரோகத்தனத்தை மறைப்பதற்காக புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் மீது குற்றம் சுமத்தியுள்ளதோடு புலனாய்வுப்பிரிவுப் போராளிகள் ஆதரவாளர்கள் 80பேரையும் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருகிறார்.

இங்கு துன்புறும் போராளிகள் புலனாய்வுப்பிரிவினர் என்ற ஒரே பார்வையிலேயே கருணாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் , தாக்கப்பட்டு வருகிறார்கள். தனது மக்களுக்காக , தனது மாவட்டத்துக்காகப் போராடுகிறேன். அவர்கள் காலடியிலேயே சாகவிரும்புகிறேன் என்று கூறிக்கொண்டு தனது மாவட்டப் போராளிகளையே துன்புறுத்துவது எந்த வகையில் நீதியாகும் ? இவர்கள் மட்டுமல்ல வன்னிக்குச் செல்ல விரும்புகின்ற போராளிகளை ஆயுதத்தால் மிரட்டித்தன் பிடியில் வைத்திருக்கிறார்.

அத்துடன் கல்லடி , வாழைச்சேனை பகுதிகளில் வாழ்கின்ற பிறமாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளார்கள். கருணாவின் விசுவாசிகளால் இந்த மிரட்டல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்களை மிரட்டித் தனக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் தனது விசுவாசிகளை ஏவிவிட்டுள்ளார். இங்குள்ள போராளிகள் , மக்கள் கருணாவிற்குப் பயந்தே அமைதியாக இருக்கின்றார்கள். அவர்களது குரலை வெளியிடுவதற்கு உரிமையின்றியே உள்ளார்கள்.

அன்னியசக்திகளிடம் விலைபோயிருக்கும் கருணா அவர்கள் தன்னையும் , தனது சுயநலத்தையும் கருத்திற்கொண்டே இவற்றைச்செய்து வருகிறார் என்பது உண்மையே. விரைவில் இவர் தனது சுகபோக வாழ்வை அன்னிய நாடொன்றில் வாழ்வதற்காகப் போய்விடப்போகிறார். இந்தச்சுயநலக்காரனின் நடிப்பினை நம்பி ஏமாறும் சில மக்களும் , அவர் சார்ந்த போராளிகளும் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவரை நம்பியிருக்கும் சிலரையே தனக்குப்பாதுகாப்பாக வைத்து இத்தேசியத்துரோகத்தில் ஈடுபட்டிருப்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

தேசியத்துரோகத்தை மேற்கொண்டிருக்கும் கருணாவின் இந்தத் துரோகத்தனத்தை உலகத்தமிழினம் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். இவர் தடுப்பில் இருக்கின்ற போராளிகள் ஆதரவாளர்களை உலகத்தமிழினம் மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான்கூட நாளை கொல்லப்படலாம். அல்லது என் குரல்கூட இல்லாது செய்யப்படலாம். உலகத்தமிழ் ஊடகங்கள் , தமிழர்கள் இந்த நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு உலகுக்கு எமது நிலமைகளைத் தெரிவித்து எமது மீட்புக்கு உதவுமாறு கோருகிறோம்.

- முகுந்தன் - (போராளி) (06.03.04)

:cry: :cry: :cry:

எமது மீட்புக்கு உதவுங்கள்.

கருணாவின் தான்தோன்றித்தனமான செயலினால் அவரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற போராளிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளினாலேயே அவர்கள் தலைவரின் புகைப்படங்களை கிழித்தெறியும்படி கட்டளையிடப்பட்டுப் படங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளது. அவர்கள் கண்ணீருடன் இதனைச் செய்துள்ளார்கள். கருணாவினால் 80 புலனாய்வுப்பிரிவுப் போராளிகள் ஆதரவாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் மூத்த புலனாய்வுத்துறை உறுப்பினர் நீலன் அண்ணா உட்பட 80பேர் இருக்கின்றார்கள். இவர்கள் யாவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களே. கருணாவின் விலைபோன துரோகத்தனத்தை மறைப்பதற்காக புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் மீது குற்றம் சுமத்தியுள்ளதோடு புலனாய்வுப்பிரிவுப் போராளிகள் ஆதரவாளர்கள் 80பேரையும் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருகிறார்.

இங்கு துன்புறும் போராளிகள் புலனாய்வுப்பிரிவினர் என்ற ஒரே பார்வையிலேயே கருணாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் , தாக்கப்பட்டு வருகிறார்கள். தனது மக்களுக்காக , தனது மாவட்டத்துக்காகப் போராடுகிறேன். அவர்கள் காலடியிலேயே சாகவிரும்புகிறேன் என்று கூறிக்கொண்டு தனது மாவட்டப் போராளிகளையே துன்புறுத்துவது எந்த வகையில் நீதியாகும் ? இவர்கள் மட்டுமல்ல வன்னிக்குச் செல்ல விரும்புகின்ற போராளிகளை ஆயுதத்தால் மிரட்டித்தன் பிடியில் வைத்திருக்கிறார்.

அத்துடன் கல்லடி , வாழைச்சேனை பகுதிகளில் வாழ்கின்ற பிறமாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளார்கள். கருணாவின் விசுவாசிகளால் இந்த மிரட்டல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்களை மிரட்டித் தனக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் தனது விசுவாசிகளை ஏவிவிட்டுள்ளார். இங்குள்ள போராளிகள் , மக்கள் கருணாவிற்குப் பயந்தே அமைதியாக இருக்கின்றார்கள். அவர்களது குரலை வெளியிடுவதற்கு உரிமையின்றியே உள்ளார்கள்.

அன்னியசக்திகளிடம் விலைபோயிருக்கும் கருணா அவர்கள் தன்னையும் , தனது சுயநலத்தையும் கருத்திற்கொண்டே இவற்றைச்செய்து வருகிறார் என்பது உண்மையே. விரைவில் இவர் தனது சுகபோக வாழ்வை அன்னிய நாடொன்றில் வாழ்வதற்காகப் போய்விடப்போகிறார். இந்தச்சுயநலக்காரனின் நடிப்பினை நம்பி ஏமாறும் சில மக்களும் , அவர் சார்ந்த போராளிகளும் இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவரை நம்பியிருக்கும் சிலரையே தனக்குப்பாதுகாப்பாக வைத்து இத்தேசியத்துரோகத்தில் ஈடுபட்டிருப்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

தேசியத்துரோகத்தை மேற்கொண்டிருக்கும் கருணாவின் இந்தத் துரோகத்தனத்தை உலகத்தமிழினம் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். இவர் தடுப்பில் இருக்கின்ற போராளிகள் ஆதரவாளர்களை உலகத்தமிழினம் மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான்கூட நாளை கொல்லப்படலாம். அல்லது என் குரல்கூட இல்லாது செய்யப்படலாம். உலகத்தமிழ் ஊடகங்கள் , தமிழர்கள் இந்த நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு உலகுக்கு எமது நிலமைகளைத் தெரிவித்து எமது மீட்புக்கு உதவுமாறு கோருகிறோம்.

- முகுந்தன் - (போராளி) (06.03.04)

செய்திகளுக்கு நன்றி சாந்தி அக்கா.

தகவலுக்கு நன்றி சாந்தி அக்கா.

:lol:

Balance of forces tilt against rebels in LTTE

PK Balachanddran

Colombo, March 5

The split in the LTTE is for real, despite public statements to the contrary from the eastern rebel leader Col Karuna and the head of the LTTE's political wing, SP Tamilselvan. And as of now, the balance of forces is tilted against the rebels and in favour of the north-dominated, Wanni-based leadership of the militant organization, presided over by the redoubtable Velupillai Prabhakaran.

It is not yet clear if Karuna has the support of the entirety of the Batticalao-Amparai (BA) district unit, which he claims to represent. Nor is it certain if he has the support of the people of BA district, whose grievances he has highlighted.

But forces outside are clearly not on Karuna's side. The Sri Lankan government has refused to entertain Karuna's request to enter into a separate ceasefire agreement (CFA) with the BA district unit as represented by him. The government, meaning the President and the Prime Minister, have both said that the CFA with Prabhakaran will stand. The Sri Lankan armed forces have refused to stop Karuna's rivals from moving from the east to the safety of the north, or to allow his cadres to cross over from the hostile north to the safety of the east. The armed forces have thus sided with Prabhakaran.

The armed forces also gave Karuna a choice which he could not accept without loss of face and prestige. They said that protection would be give to him and his men, if they surrendered to the forces!

Though Karuna is trying to give the impression that he is opposing only the north-dominated "Wanni leadership" of the LTTE and not Supremo Prabhakaran himself, it is apparent that he is taking on Prabhakaran also, because nothing is done in the monolithic LTTE without the express sanction of the Supremo himself.

Karuna's drawbacks

One of the main drawbacks for Karuna is the fact that many senior political and military leaders of the BA unit have left him and moved with their families to the Wanni to be with Prabhakaran.

Though he is said to have 6,000 military cadres under him, it is not certain how many are battle worthy and how many will opt to be with him when the chips are down. One informed Batticalao source told Hindustan Times that quite a few of his cadres were kids with little or no intensive training. People in Batticaloa also wonder Karuna has the kind of money that the northern group has, though the BA unit has also been collecting taxes and extorting money. The BA units' ability to garner money from the Diaspora is limited because the typical well-heeled Sri Lankan Tamil member of the Diaspora is from the north, particularly, Jaffna, which is the stronghold of Prabhakaran.

Many wonder if, after fighting for a united Tamil cause for two decades, shedding so much blood and taking so many deprivations for its sake, the people of BA would abandon the movement led by Prabhakaran and plumb for a Karuna, who after all, cannot hold a candle to Prabhakaran whether in the military or political field.

The other question in peoples' minds is: Would they do this when the Prabhakaran-led movement has the respect and support of the international community and the Sri Lankan government?

Karuna's strengths

However, Karuna does have is a cause the legitimate cause of the BA or Eastern Tamils who have, for long, felt discriminated against by the Northern Jaffna-led Tamils.The Jaffna Tamils not only dominate the Sri Lankan Tamil social structure but the LTTE too. For the sake of the liberation of the Tamils from the Sri Lankan state and Sinhala majoritarian subjugation and Muslim encroachment, the BA and other eastern Tamils sunk their differences with the North and wholeheartedly supported the independent Tamil Eelam or autonomous Tamil Homeland cause two decades ago. But as it turned out, even in the LTTE, the northern or Jaffna Tamils began to rule the roost.

So long as there was war, the east-north conflict did not surface. But the two years of peace since February 2002, has brought it out. Grievances began to be felt and aired. And rebellion followed when complaints fell on deaf ears.

The BA political unit on Thursday distributed a one page pamphlet listing the grievances of the BA unit as well as well that of the BA people.

Entitled "Betrayal of the Batticaloa-Amparai Leadership" it says that more 4,550 fighting cadres from the BA have so far laid down their lives in the battlefield for the liberation of the Tamil Homeland and the protection of the Tamil National Leadership (meaning Tiger chietain Prabhakaran) and yet the BA area remains economically undeveloped and poor.

Even now, over 600 cadres from BA are in the north sweating it out in the bunkers and the forward defence lines while cadres from the north are utilizing the peace for their advancement both at home and abroad. Some are going on pleasure trips abroad.

Not a single person from the BA area is in the top slot of the 30-odd divisions of the LTTE administration. But over 30 cadres from the BA are providing protection to the Northern leaders so that they could move about unafraid in their posh vehicles.

The pamphlet said that parents in the BA district gave their boys and girls to the LTTE's fighting forces on the understanding that they would be used for the defence of the district and its economic development. But this was not done, and that was why, the BA leadership recently refused to obey the northern leadership's order to send thousands of fighting cadres to the north.

The pamphlet accused the Northern leadership of preparing for war, and encouraging the Intelligence Wing led by Pottu Amman to indulge in hijacking of vehicles and killing rival electoral candidates. When complaints were lodged with the "Wanni leadership" no action was taken, the pamphlet charged. It then went on to appeal to the people of the BA district to be conscious of the malevolent activities of the Wanni leadership and act accordingly.

At the cross roads

The people of BA and the members of the BA LTTE unit are now at the cross roads. They have to choose between the larger interest of safeguarding the Tamil struggle led by Velupillai Prabhakaran, which has reached a crucial stage, and their regional interest. They would have to ponder whether their long term interests will be served by going with Prabhakaran or Karuna.

They have to decide on who has the clout in the current Sri Lankan and world political environment, Prabhakaran or Karuna?.

Since the Norwegian peace facilitators have refused to mediate between the two warring factions, intellectuals and teachers of the Eastern University at Batticalao are attempting to bring about a rapprochement between Karuna and Prabhakaran.

But there are doubts if such efforts will succeed because the rift is apparently too wide for Prabhakaran to forget and forgive. He is facing a major challenge to his supremacy not only in his organization but in society as well, since he has pitched for the high status of "Sole Representative of the Tamils." The critical factor is that Karuna has a claim to a territorial and population base and the BA district is too important to be left to a rebel or a person of doubtful loyalty. Political observers do not rule out a short term papering over of differences, but seriously doubt if the arrangement will last.

Thanx: Hindustan Times

பிபிசி

நீங்கள் எங்குதான் தேடி எடுக்கிறீர்களோ தெரியாது

இந்தக் கட்டுரையைப் பார்த்தால் கருணா ஏதோ வெறுத்துப் போய்த்தான் முடிவு எடுத்திருப்பது மாதிரி தெரிகிறது. அத்துடன் பாரிய பாகுபாடும் நடந்திருப்பது மாதிரி தெரிகிறது. இது நியாமில்லைதானே. மொத்தத்தில் வட கிழக்கு என்ற பாகுபாட்டை உருவாக்கி விட்டார்கள் என்பது தெரிகிறது.

மன்னிக்கவும் தாத்தா நாங்கள் யாரையும் காட்டிக்குடுத்திட்டோ இல்லை தமிழ்மண்ணுக்கு துரோகம் செய்திட்டோ இங்க வரவில்லை இல்லை மனைவியை அனுப்பவில்லை!!!

உயிரோடு வாழும் உரிமை எல்லாருக்கும் உண்டு ஆணால் துரோகிக்கு இல்லை அது நான் என்டாலும் சரி நீங்கள் எண்டாலும் சரி கருணா அம்மான் என்டாலும் சரி!!!!!!!!

தாத்தா உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கனும்!!

எவ்வளவோ உயிர்தியாகங்களால் நாம் இவ்வளவோ வளர்ந்து உள்ளோம் !!!!

அது சரி இத போய் உங்களுக்கு ம் தேவையா????

:P :lol::D

ஏன்ராப்பா சுவிஸ்ரெஜி.. இப்ப போன இரண்டாந்திகதி வரைக்கும் துரோகியில்லை.. 3 ஆம் திகதியிலையிருந்துதான் துரொகியாக்கும்.. அந்தப் பிள்ளையை அனுப்பினது துரொகமெண்டால் நீங்கள் வந்ததும் துரோகம்தான்.. அதிலை மாற்றுக்கருத்து இல்லை..

உயிர்த்தியாகங்கள் நீங்கள் செய்திருந்தால் அப்ப என்ன ஆவியோ எனக்கு பதில்க்கருத்து எழுதிது..

:lol: :P :D

தமிழினத்துக்கு ஒற்றுமையே இன்றைய தேவை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கிடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முரண்பாடானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்திவிட்ட செய்தியாக அமைந்துவிட்டது.

தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தேசியத் தலைவர் வே.பிரபாகரனையும் வெறுமனே ஒரு இயக்கமாகவோ அல்லது அதன் தலைவரை தனி நபராகவோ பார்க்காததன் விளைவே மேற்கூறிய உணர்வலைகள் தமிழ் மக்கள் மத்தியில் எழக்காரணமாகியது.

தமிழ் மக்களின் பாதுகாப்பு, இருப்பு என்பன மாத்திரமல்ல, கூனிக் குறுகிக்கிடந்த தமிழினத்தை இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தலைநிமிரச் செய்வதற்கும், தமிழ் மக்களின் சுயகௌரவத்தை நிலை­நிறுத்துவதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்பு அளப்பரியது என்பதில் இரு கருத்துக்களுக்கிடமில்லை.

எனவேதான் விடுதலைப் புலிகளுடன் முரண்படும் மாற்றுக் கருத்து­களைக் கொண்ட தமிழ்க் குழுக்கள் கூட புலிகளுக்கிடையிலான முரண்பாடு குறித்து தமது கருத்தையும் கவலையையும் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கின்றன.

அந்தளவுக்கு தமிழர் தொடர்பான வரலாற்றில் விடுதலைப் புலிகளின் பிரசன்னத்தின் தேவை ஆழமாக உணரப்பட்டதின் வெளிப்பாடாகவே இவை அனைத்தும் அமைந்துள்ளன.

அத்துடன் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய முரண்பாடுகள், பூசல்கள் தேவையற்றது. அது தமிழ் மக்களை சகல வழிகளிலும் பலவீனப்படுத்தி தமிழ் மக்களை மோசமான பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்பதுமட்டுமல்ல தீர்மானிக்கப்பட உள்ள தமிழரின் தலைவிதி திசைமாறிப்போய்விடும் என்ற பயபீதியின் வெளிப்பாடாகவும் தமிழ் மக்களினதும் மற்றும் தரப்பினரதும் உள்ளுணர்வுகள் அமைந்துள்ளன.

தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி இன்று சகல தரப்பினரும் அதீத அக்கறைகாட்டி வருகின்றனர்.

கடந்த 20 வருடகாலப் போர் தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக் குறியாக்கியதுடன் உயிர், உடைமை அழிவுக்கும் வழி வகுத்ததுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இரு வருடங்களுக்குமுன் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு நாட்டில் அமைதிச் சூழலை உருவாக்கி மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடைநடுவில் நின்றுவிட்ட போதும் இன்றைய அமைதிச் சூழல் தொடர்வதன் மூலமே அது மீண்டும் தொடர்வது சாத்தியமாகும்.

இந்நிலையில் பிரதேசவாதம், தனிநபர் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு சமாதானச்சூழல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சமாதான பேச்சுவார்த்தை என்பன பலிக்கடா ஆக வேண்டுமா என்பதே கேள்வியாகும்.

போர் நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுத்து சமாதானச் சூழலை நிலைபெறச் செய்வதிலும், எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெரும் பொறுப்பும், பங்கும் உள்ளதென்றவகையில் முரண்பாடுகளுக்கும், பூசல்களுக்கும் இடம்கொடுக்காது முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.

எனவே தனிநபர் பிரச்சினைகள், பிரதேச ஏற்றத்தாழ்வுகள் என்பனவற்றை உள்வீட்டுப் பிரச்சினையாகக் கருதி தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்.

வடக்கு கிழக்கு என்ற பேதம் காரணமாகக் கூடுதலான பாதிப்பினை, சுமையினை சுமக்கப்போவது கிழக்கு மாகாணமாகவே இருக்கும்.

கிழக்கு மாகாணத்தின் மொத்த ஜனத்தொகையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர்.

பல இன, மதங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது பிரதேசவாதத்தால் ஏற்படும் பிரிவினால் பல்வேறுதாக்கங்கள் ஏற்படும் என்பதையும் கருத்திற்கொண்டும் தமிழினத்தின் நிகழ்கால, எதிர்கால நலனைக்கருத்திற் கொண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரதேசவாதம் மற்றும் பிளவுகள், முரண்பாடுகளுக்கும் இடம்கொடுக்கக்கூடாது என்பதில் தமிழ் மக்களும் அவர்கள் சார்ந்த தலைமைகளும் அதிக கரிசனை எடுத்துச்செயற்பட வேண்டும். இது தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் போக்குக்கு வலு சேர்ப்பதாக அமையும்.

நன்றி - வீரகேசரி

உண்மை.....

ஏதோ எல்லாம் சுபமானால் சரி...இனி இழக்க எங்களட்ட ஒன்றும் இல்லை....! அகதி அந்தஸ்தை தவிர....!

:P :twisted:

உண்மையோ, உண்மை குருவிகளே. மழை பெய்ந்து நின்றாலும் தூவாணம் விட்ட பாடில்லையடா ராசா..

A delegation of religious and civil society leaders of Batticaloa, led by Bishop Rt. Rev. Kingsley Swampillai and Vice Chancellor of the Eastern University, Dr. S. Raveendranath, will leave for Vanni Monday to hold discussions with the Liberation Tigers' leadership to peacefully handle the problem of renegade LTTE commander, Mr. Karuna, a senior LTTE official in Batticaloa told TamilNet Sunday night.

TamilNet Library PhotoRev.Fr.Kingsley Swampillai lighting the ceremonial lamp

A meeting of religious and civil society leaders, academics and leading Tamil National Alliance polticians was convened in Batticaloa town Sunday evening to explore ways to peacefully settle the crisis precipitated by Mr. Karuna's decision to act independently of his leadership, an LTTE official in the eastern town told TamilNet.

"The people of Batticaloa are very eager that this problem should be resolved peacefully. We are very keen that the LTTE leader should reconsider his decision regarding Karuna," the LTTE official said.

"We hope that our national leader would consider the representations of the Batticaloa peace delegation in a favourable light," he said.

Mr. Senathirajah Jeyanandamoorthy, one of the Batticaloa TNA candidates who took part in the meeting said: "We are very hopeful Karuna will settle his differences with his leadership in the best interests of the Tamil people. Our chief concern is that the crisis should not be allowed to affect the outcome of the elections here."

Meanwhile, in a move widely scene as signalling compromise, Karuna told the BBC Tamil service that he is loyal to the LTTE leader, has never spoken against him and that his Batticaloa-Amparai group will never do anything traitorous that will endanger the progress of Tamil national struggle.

ஏன்ராப்பா சுவிஸ்ரெஜி.. இப்ப போன இரண்டாந்திகதி வரைக்கும் துரோகியில்லை.. 3 ஆம் திகதியிலையிருந்துதான் துரொகியாக்கும்.. அந்தப் பிள்ளையை அனுப்பினது துரொகமெண்டால் நீங்கள் வந்ததும் துரோகம்தான்.. அதிலை மாற்றுக்கருத்து இல்லை..

உயிர்த்தியாகங்கள் நீங்கள் செய்திருந்தால் அப்ப என்ன ஆவியோ எனக்கு பதில்க்கருத்து எழுதிது..

முதல்லை சொன்னது விளங்கினதோ அதெங்க விளங்கபோகுது அறளைபேந்த மண்டையில!!!! :P

ஏனப்பு இவ்வளவு கதைப்பவர் இவ்வளவு மக்கள் பலம் இருக்கென்டு சொல்லுரவர் ஏனப்பு மனைவியை அனுப்பனும் அங்க வச்சிருக்க வேண்டியது தானே

அப்பு இப்ப போன இரண்டாந்திகதி வரைக்கும் துரோகியில்லை. என்டு யாரப்பு சொன்னது அதுக்கு முன்னம் இருந்தே துரோகி தான்

(அதுவும் அதிஉயர்ந்த தளபதி வேடத்தில்)ஆணால் நம்பியது வன்னித்தலைமை குடுத்திட்டார் Game ஐ!!! நல்லதுக்கில்லை

தாத்தா உங்கட அறிவுக்கு நாங்கள் பதில் எழுத ஏலாது ஆவிதான் எழுதனும் (ஏன் இப்ப பாட்டியின் life ம் கிட்டமுட்ட ஆவிமாதிரிதான்

ஏனென்டால் உங்களோட வாழுறாவே?? :wink: )

இப்படியே எல்லோரையும் துரோகி துரோகி என விரலும் நாவும் சுட்டிச்சொல்லிக்கொண்டே போனால் இழந்த மக்களின் உயிரும் இழந்த பல சொத்தும் பல ஆயிரம் போராளிகளின் உயிரிழப்பும் என்னாவது? தமது உயிரைக்கொடுத்து உதிரம் சிந்திய போராளிகளின் கனவு என்னாவது? யாவும் கானல் நீரா? சகல ஈழத்தமிழருக்குமான விடுதலை தான் பிறகென்ன அது முத்திரை குத்தி கேவலப்படுத்துவது? எதையும் பேசி தீற்பது தான் சாலச்சிறந்தது.

ஈpழ் மலரும் போது சாதிப்பிரிவினை இருக்கோ இல்லாமல் போகுதோ தெரியேலை ஆனால் இந்த துரோகி தேசப்பற்றாளன் எண்ட சாதி மட்டும் புதிதாய் பிறப்பெடுக்கும் போல் அல்லவா தெரிகிறது. :lol::lol::D

அக்கா மண்ணிக்கவும் என்னைப்பொறுத்தமட்டில அவர் இன்றும் கருணாஅம்மான் தான் எம்நாடு எமக்கு தந்த ஓரு மாபெரும் தளபதி!!

தேசியத்தலைவரின் வலது கரம் !! ஆணால் அம்மான் இப்பவும் தேவையில்லாமல் தானே அறிகைள் விடுறார் ஏனக்கா?? பிளையில்லை தவறில்லை நியாயமானவர் எண்டால் நேரடியாக தலைவருடன் கதைக்கட்டுமே !!! 20 வருடங்கள் தோழோடு தோழ் நின்டவர் தானே!!!

அதை விட்டுட்டு அவனை வெளியேற்று இவனை வெளியேற்று

அக்கா இவர் வெளியேற்ற சொன்னவர்கள் இவர் தரத்தில் உள்ள தளபதிகள்!!

(திருப்பியும் சொல்லுறன் அக்கா என்னைப்பொறுத்தவரை அவர் கருணா அல்ல கருணாஅம்மான் இப்பவும் TIME late இல்லை அதே பழைய எம் இனிய கருணாஅம்மான் ஆவதற்க்கு!!!!!)

  • தொடங்கியவர்

எல்லாம் றாயதந்திரம் பாருங்கோ யாழ்களத்திலை நீங்கள் இந்த தலைப்பை முhடுங்கோ அதுக்குத்தான் சேது வேனும் என்டுறது.

சிவாஜினி சேதுவோட கோரிக்கையை தொடர்ந்து ...

கூடுதலாக மற்றய இணையத்தள செய்திகளும் தகவல்களுமே இப்பகுதியில் இடம் பெறுவதால். Breaking News என்ற இப்பகுதி. செய்திகள் தகவல்கள் பகுதிக்கு இடம்மாற்றப்பட்டுள்ளது.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்

ஒற்றுமை குலைந்தால்அனைவர்க்கும் தாழ்வே!

வன்முறையற்ற ஜனநாயக அரசியற் பண்பாட்டை ஒரு மருந்துக்குக் கூýடக் காண முடிýயாத வகையிலே தேர்தல் பிரசாரங்கள் நாட்டிýன் சகல மூýலைகளிலிருந்தும் வெளிப்படுகின்றன. அடாவடிýத்தனங்களும் அராஜகமும் தலைவிரித்தாடிýக் கொண்டிýருக்கும் நாட்டிýல் மக்களையோ நாட்டிýன் எதிர்காலத்தைப் பற்றியோ அக்கறையில்லாத வகையில் அரசியல் சக்திகள் மனம்போன போக்கிலே செயற்படுகின்றன.

அமைதியையும் சமாதானத்தையும் நோக்கிய பயணங்களைக் 'குடை சாய்ந்து" போக விடக்கூýடாது. இப்பொழுது முன்னணியில் நிற்கும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தங்களின் கடந்த காலக் குளறுபடிý அரசியலிலே மூýழ்கியபடிýயும் தமது தவறுகளை மூýடிý மறைத்தபடிýயும் தேசிய அரசியலிலே முன்னணிக்கு வரத் தெண்டிýக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளும் ஏட்டிýக்குப் போட்டிýயாக வன்முறைகளையும் இனவாதத்தையும் மூýச்சாகக் கொண்டு செயற்பட்ட கட்சிகள்தான்!!

இனவாத விய10கங்களுடன் தென்னிலங்கை அரசியலிலே நிமிர முற்படும் மக்கள் விடுதலை முன்னணி தனது இனவாத ஆரவாரங்களில் இருந்து சிறிதளவும் இறங்கவில்லை. }லங்கா சுதந்திரக் கட்சியின் தோள்களில் கையைப் போட்டபடிý வெளிப்படுத்தியுள்ள கூýட்டாளித்தனங்களை எல்லாம் ""மேவியபடிý'' பிடிý தளராத இனவாதமும் இறுக்கமும் வெளிப்படுவதை ஜனாதிபதி தரப்புத் தலைமைகள் கண்டும் காணாமல் இருக்க முற்படுகின்றன.

இப்பொழுது மக்கள் விடுதலை முன்னணியினர் கறைபடிýந்த தமது அரசியல் நடமாட்டங்களின் வளர்ச்சியும் தொடர்ச்சியுமாக 'ஜனநாயகம்" என்றும் வன்முறையில்லாத அரசியல் பண்பாடு பற்றியும் பேசுவது கூýட பிரசாரத் தந்திரமாக மாறியுள்ளது.

விடுதலைப் புலிகள் தீர்க்கமான ஆலோசனைகளின் பின்னர் வெளிப்படுத்திய இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு ஆலோசனைகள் தேர்தல் பிரசாரங்களின் மத்தியில் அமுங்கிப் போயுள்ளன. இந்த இடைக்கால ஆலோசனையை மூýர்க்கத்தனமாக எதிர்த்த }லங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் பிடிý தளராத நிலைமையில்தான் இருக்கின்றன.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையிலே இரண்டு பிரதான கட்சிகளில் எது முன்னுக்கு வந்தாலும் பேசுவது என்ற நிலைமையில் இருந்து விலகப் போவதில்லை. ஆனால் தென்னிலங்கை அரசியலில் வெளிப்பட்டுள்ள அரசியல் கால நிலைமையின் பிரகாரமாக பேரினவாத அரசியல் புயல் மையம் கொள்ள முற்படும் நிலைமையிலே தேர்தல் முடிýவுகளின் பின்னர் எந்த விதமான பாதை துலங்கும் என்பதை அவ்வளவு சுலபமாக அனுமானிக்க முடிýயாது. மொத்தத்திலே பேரினவாத மூýச்சுகள்தான் பறியப் போகின்றன.

இரண்டு வருட காலமாகப் பேச்சுவார்த்தை சமாதானம் என்றபடிý சர்வதேச சமூýகத்தின் மத்தியில் ஓடிýப்பிடிýத்து விளையாடிýய ஐக்கிய தேசிய முன்னணியினர் தேர்தல் காலத்தில் வெளிப்படும் பிரசாரங்களின் மத்தியிலே நழுவல் தனங்களுடன் நகர முற்படுவது புதியதொன்றல்ல.

இடைக்கால நிர்வாகம் மற்றைய நிரந்த அரசியல் தீர்வு பற்றிய தென்னிலங்கை அரசியல் நிலைப்பாடுகள் எவையும் சரிவர இப்போதைய பிரசாரங்களின் மத்தியில் வெளிவருவதாக இல்லை. ஐக்கிய தேசிய முன்னணி அல்லது ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை வெளிப்படுத்திய நசியல் தனமான அரசியலையே தொடர முற்படுவதைத் தமிழ்த் தலைமைகள் இரண்டாந்தரமாகக் கருத முடிýயாது.

தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் தலைமைகளும் வழமையான பாணியிலே தமது அரசியல் இருப்புகளைத் தேடிýய படிýயும் பலப்படுத்த முற்படும் வகையிலும் நகர முற்படும் தருணத்திலே தமிழ்த் தலைமைகள் தம்மிடையே குளறுபடிýகளையும் அரசியல் விரிசல்களையும் தோற்றுவிக்க முற்படக் கூýடாது.

தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு விரிசல்கள் முரண்பாடுகளை எல்லாம் பார்த்து 'மலைப்படைந்திருந்த" நிலைமையிலே விடுதலைப் புலிகளின் மத்தியிலே மட்டக்களப்பை மையமாகக் கொண்டு வெளிப்பட்ட நெருக்கடிý அல்லது பிணக்கு சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் தீர்க்கமான தீர்மானங்களை எடுத்துள்ளமை பரபரப்புகளைத் தணிய வைத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் மத்தியிலே திடPரென வெடிýத்த இந்த விரிசல் சமாதான அரசியல் நகர்வுகளின் மத்தியில் ஒரு பாரிய பேரிடிýயாக வந்துள்ளது. இது தொடரக்கூýடாது என்பது மறை மாவட்ட ஆயர்களின் வேண்டுகோளாக வெளிப்பட்டுள்ளது.

கடந்த காலத்து ஆயுதப் போராட்டப் பாதையிலும் அரசியல் போராட்டப் பாதையிலும் தமிழ்த் தலைமைகள் தொடர்ச்சியாகவே 'மேடுகளையும் பள்ளங்களையும்" சந்தித்து வந்துள்ளமை புதியதல்ல. இப்பொழுது வெளிப்பட்ட 'கீறல்" சர்வதேச சமூýகத்தின் கண்களிலே அதிர்ச்சி தரும் விடயமாகி விட்டது. 'ஒற்றுமை குலைந்தால் அனைவர்க்கும் தாழ்வு" என்பதை நினைவு படுத்துவது அவசியமானது.

முரண்பாடுகள் இனிவரும் காலத்தில் ஒரு பொழுதும் மோதல்களாகப் போய் முடிýயக் கூýடாது. வெறும் அற்பத்தனங்களால்தான் கடந்த கால அரசியல் சீரழிந்த பாதையில் சென்றது என்பதை சகல தமிழ்த் தலைமைகளும் உணர வேண்டிýய தருணம் இது!

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.