Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

Kari123_23718_435.jpg

கரிகாலன் யாழ் பல்கலைக்கழக மாணவர் மத்தியில்...!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கரிகாலன் விளக்கம்

ஒரு மூன்றாவது சக்தியின்றி, கருணா இவ்வாறு துரோகமிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கரிகாலன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மக்கள் இப்போது கருணாவின் துரோகத்தனத்தை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ள கரிகாலன், தமிழீழ மக்களின் விடுதலையையும் சுதந்திரத்தையும் விரும்பாத ஒரு மூன்றாவது சக்தி, கருணாவை மனச்சலவை செய்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, கரிகாலன், கௌசல்யன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

எமது தேசியத் தலைவர், கருணாவின் மேல் அளவு கடந்த மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார். நாங்கள் கருணா குறித்து எந்தவொரு விடயத்தைச் சொன்னாலும், தலைவர் அதை நம்பத் தயாராக இருக்கவில்லை. அவ்வளவு தூரம் தலைவர் கருணா மேல் நம்பிக்கை வைத்திருந்தார்.

நாம் கருணாவுடன், பலதடவை அவரது செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த முயன்றோம். அவர் செய்யவிருப்பது தவறு என்றும், அது தமிழீழ மண்ணையும் மக்களையும் முற்றாகப் பாதித்து விடும் என்றும் தெளிவாக விளக்கம் கொடுத்தும் கருணா அதற்கு செவிமடுக்கத் தயாராக இருக்கவில்லை. இறுதிவரை நாம் கருணாவை இம்முடிவை எடுக்கவேண்டாமெனத் தடுக்க கடும்முயற்சிகளை எடுத்தோம், ஆனாலும், கருணா திடீரென தனது முடிவை அறிவித்து விட்டார்.

வேறு எந்தவொரு தளபதிக்கோ அதிகாரிக்கோ கொடுக்கப்படாத அத்தனை பதவிகளும் உரிமைகளும் கருணாவுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன. அவ்வளவு தூரம் தலைவர் கருணாவை நம்பியிருந்தார். வேறு எந்தவொரு பிரதேசத் தளபதிக்கும் இவ்வளவு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தின் அத்தனை பகுதிகளும் கருணாவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வழங்கப்பட்டதற்கும், தேசியத் தலைவர், கருணாமேல் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கையே காரணம்.

கிழக்கின் மக்களும் போராளிகளும் அளப்பரிய தியாகங்களைச் செய்துள்ளமை மிகவும் உண்மையானது. ஆனால், இந்த உண்மையை கருணா தனது சுயநலம் கருதி, பிரதேசவாதமாக மாற்ற முற்பட்டுள்ளமை மிகப்பெரிய துரோகச் செயலே, என்று கரிகாலன் தெளிவாக விளக்கமளித்தார்.

கௌசல்யன் உரையாற்றுகையில், கருணா தற்போது உறுதியற்ற நிலையிலிருப்பதால், தங்களை மிகுந்த அவதானத்துடன் கிழக்கு விடயங்களைக் கையாளும் படியும், கிழக்கு வாழ் மக்களுக்கோ போராளிகளுக்கே எதுவித இழப்புமின்றி, நிதானத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்டும்படியும் தேசியத் தலைவர் தங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக எடுத்துக் கூறினார்.

யாழ். அரசியற் பொறுப்பாளர் எஸ்.இளம்பரிதி, புலிகளின் குரல் வானொலிப் பொறுப்பாளர் எஸ்.தமிழன்பன் ஆகியோரும் இக்கூட்டத்திற் கலந்து கொண்டார்கள். யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் திரு.வீ.பகீரதன் இக்கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்.நன்றி: Tamilnet and puthinam...!

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply

இத்தாள் சொல்லப்படுவது யாதெனில் எதற்கும் எங்கும் ஒரு எல்லைதான் உண்டு அதைத்தாண்டினால் மிருகம் கூட சும்மாவிடாது என்பதுதான்....!

உங்கள் பாட்டில் போனால் பாம்பும் தீண்டாது....அதோடு சொறிஞ்சால் தீண்டத்தான் செய்யும்....!

உங்களுக்கு அதனுடன் சொறிய எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு உரிமை அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அளிக்கப்பட்டுள்ளது..என்பதை மறவாதீர்கள்...எங்கும் எப்போதும்...!

:twisted: :P :idea:

பாம்பு என்றியல்... சொறீரது...என்றியல்

உன்ணான உதுவும் ஒரு கதை எண்டு கதைக்கிறியல்.....

உங்கை ஐரோப்பாவில பக்கத்து வீட்டுக்காரன் உங்களை பாத்து சொறித்தனமா ''கறுப்பு நாயே'' எண்டால் நீங்கள் வீட்டுக்குள்ளை ஒடிப்போய் துவக்கை தூக்கிவந்து வைப்பியலாம்......வெடியை

என்ன புலுடாவோ விர்றியல்

பாப்பம் பாப்பம் ஒருநாள் கறுப்பர்களுக்கு எதிராய் கலவரம் வரும்......ஐரோப்பாவில்.....

அண்டைக்கு தெரியும்....உங்கடை கோவம் ......எவ்வளவு நீளம் எண்டு

பாம்பு என்றியல்... சொறீரது...என்றியல்

உன்ணான உதுவும் ஒரு கதை எண்டு கதைக்கிறியல்.....

உங்கை ஐரோப்பாவில பக்கத்து வீட்டுக்காரன் உங்களை பாத்து சொறித்தனமா ''கறுப்பு நாயே'' எண்டால் நீங்கள் வீட்டுக்குள்ளை ஒடிப்போய் துவக்கை தூக்கிவந்து வைப்பியலாம்......வெடியை

என்ன புலுடாவோ விர்றியல்

பாப்பம் பாப்பம் ஒருநாள் கறுப்பர்களுக்கு எதிராய் கலவரம் வரும்......ஐரோப்பாவில்.....

அண்டைக்கு தெரியும்....உங்கடை கோவம் ......எவ்வளவு நீளம் எண்டு

உதுகளக் உற்பத்தி செய்யுறதும் காட்டிப் பிழைக்கிறதும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் தான் மறந்திடாதேங்கோ....!

இருந்தாலும் இங்க கறுப்பு வெள்ளை என்று பாகுபாடு காட்டினால் உள்ளுக்கதான்...பிரதேசவாதம் மனிதாபிமானத்துக்கு முன்னால மண்டியிடுது....உங்கட தேசம் அந்தப் பிரதேசவாதத்தில வாழ்ந்து கொண்டு மனிதாபிமானத்தைப் புதைக்கு....அதை நிப்பாட்டுங்கோ...!

ஏன் படத்துக்கெல்லாம் பயப்படுறியள் மடியில கனமோ....???! :lol:

:twisted: :P :D :roll:

பிரபாகரன் - கருணா பிரச்சினை: கொழும்பு தமிழர்களை பாதிக்கவில்லை

கே.எம். சந்திரசேகரன்

கொழும்பு, மார்ச் 16: விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஓரிரு வாரங்களில் தீர்ந்துவிடும் என கொழும்பு நகரில் உள்ள தமிழர்கள் நம்புகின்றனர்.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டகளப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான தளபதியாக இருந்த கர்ணா தனித்துச் செயல்படப் போவதாக கடந்த 3-ம் தேதி அறிவித்தார். கிழக்குப் பகுதியைச் சேர்ந்த போராளிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவர் புகார் கூறினார்.

நிதி மோசடியில் ஈடுபட்டதால் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கர்ணா நீக்கப்படுவதாக அதன் தலைவர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

பொதுமன்னிப்பு வழங்கத் தயாராக இருப்பதாக பிரபாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை கருணா நிராகரித்துவிட்டார்.

தம்மிடம் 6 ஆயிரம் போராளிகள் உள்ளதாகவும், எந்த நாடு அல்லது எந்த அமைப்பின் உதவியும் இல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தனித்துச் செயல்படத் தேவையான நிதி வசதி இருப்பதாகவும் கர்ணா கூறியுள்ளார்.

உள்ளூர் விலைவாசியில் ஒரு போராளிக்குத் தினமும் குறைந்தது ரூ. 200 செலவிடுவதாகக் கணக்கிட்டாலும் 6 ஆயிரம் பேருக்கு ரூ. 12 லட்சம் ஆகும். போக்குவரத்து, ஆயுதங்கள் பராமரிப்பு, அலுவலகம் உள்ளிட்ட செலவுகளுக்குத் தினம் ரூ. 3 லட்சம் தேவைப்படும். எனவே, மாதத்துக்கு ரூ. 4.5 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும் என இலங்கை பொருளாதார நிபுணர்கள் கணக்கிடுகின்றனர்.

இந்தப் பணம் எங்கிருந்து வரும் என்பது தெரியவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கப் பணத்தில் செய்துள்ள முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டியைக் கொண்டு கருணா செலவு செய்யக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

பிரபாகரனுடன் கருணாவுக்கு ஏற்பட்டுள்ள மோதலை கொழும்பு நகரில் உள்ள தமிழர்கள் பெரிதாகக் கருதுவதாகத் தெரியவில்லை.

இது தாற்காலிகப் பின்னடைவுதான். ஓரிரு வாரங்களில் இப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடும் என அவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை தீர்வு ஏதும் ஏற்படாமல் போய் பிரபாகரன் -கருணா இடையே ஆயுதச் சண்டை ஏற்படுமானால், தங்கள் நிலை மோசமாகிவிடும் என கொழும்பில் வசிக்கும் தமிழர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு, விடுதலைப் புலிகள் மீது ஆட்சியாளர்களுக்கு உள்ள அச்சமே காரணம் என்று கருதப்படுகிறது.

இப்போது கருணா பிரச்சினை வெளியில் தெரிந்ததும் சில பகுதிகளில் தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று சொத்துகளை விட்டுவிட்டு வெளியேறத் தயாராக இருக்குமாறு ஜனதா விமுக்தி பெரமுன என்ற சிங்களக் கட்சியினர் கூறியதாகத் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். வரவிருக்கும் தேர்தலில், அந்த அமைப்பினர் ஆதரவு பெற்ற அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் இலங்கை சுதந்திரக் கட்சி கூட்டணி வென்றால் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும் என்ற அச்சம் உள்ளது.

இச் சூழ்நிலையில் பிரபாகரன் மீதான அரசின் அச்சம் நீங்கிவிட்டால் தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளின் வேகமும் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

கருணாவைவிட பிரபாகரனையே கொழும்புவாழ் தமிழர்கள் அதிகம் நம்புகின்றனர். 20 ஆண்டு காலம் போராடியதன் பலன் இத் தேர்தலில் கிடைக்க உள்ள நிலையில், கருணா மூலமாக இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கக் கூடாது என்ற வருத்தம் மட்டும் அவர்களிடம் உள்ளது.

ரத்தம் சிந்தாமல் கிழக்குப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வதாக புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்பி. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பகுதியில் இருந்து போராளிகள் படிப்படியாக புலிகள் அமைப்புக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிரிழப்பு ஏதும் இல்லாமல் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று கொழும்பு தமிழர்கள் விரும்புகின்றனர்.

நன்றி: தினமணி

பிரபாகரன் - கருணா பிரச்சினை: கொழும்பு தமிழர்களை பாதிக்கவில்லை

கே.எம். சந்திரசேகரன்

கொழும்பு, மார்ச் 16: விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஓரிரு வாரங்களில் தீர்ந்துவிடும் என கொழும்பு நகரில் உள்ள தமிழர்கள் நம்புகின்றனர்.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டகளப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான தளபதியாக இருந்த கர்ணா தனித்துச் செயல்படப் போவதாக கடந்த 3-ம் தேதி அறிவித்தார். கிழக்குப் பகுதியைச் சேர்ந்த போராளிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவர் புகார் கூறினார்.

நிதி மோசடியில் ஈடுபட்டதால் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கர்ணா நீக்கப்படுவதாக அதன் தலைவர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

பொதுமன்னிப்பு வழங்கத் தயாராக இருப்பதாக பிரபாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை கருணா நிராகரித்துவிட்டார்.

தம்மிடம் 6 ஆயிரம் போராளிகள் உள்ளதாகவும், எந்த நாடு அல்லது எந்த அமைப்பின் உதவியும் இல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தனித்துச் செயல்படத் தேவையான நிதி வசதி இருப்பதாகவும் கர்ணா கூறியுள்ளார்.

உள்ளூர் விலைவாசியில் ஒரு போராளிக்குத் தினமும் குறைந்தது ரூ. 200 செலவிடுவதாகக் கணக்கிட்டாலும் 6 ஆயிரம் பேருக்கு ரூ. 12 லட்சம் ஆகும். போக்குவரத்து, ஆயுதங்கள் பராமரிப்பு, அலுவலகம் உள்ளிட்ட செலவுகளுக்குத் தினம் ரூ. 3 லட்சம் தேவைப்படும். எனவே, மாதத்துக்கு ரூ. 4.5 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும் என இலங்கை பொருளாதார நிபுணர்கள் கணக்கிடுகின்றனர்.

இந்தப் பணம் எங்கிருந்து வரும் என்பது தெரியவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கப் பணத்தில் செய்துள்ள முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டியைக் கொண்டு கருணா செலவு செய்யக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

பிரபாகரனுடன் கருணாவுக்கு ஏற்பட்டுள்ள மோதலை கொழும்பு நகரில் உள்ள தமிழர்கள் பெரிதாகக் கருதுவதாகத் தெரியவில்லை.

இது தாற்காலிகப் பின்னடைவுதான். ஓரிரு வாரங்களில் இப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடும் என அவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை தீர்வு ஏதும் ஏற்படாமல் போய் பிரபாகரன் -கருணா இடையே ஆயுதச் சண்டை ஏற்படுமானால், தங்கள் நிலை மோசமாகிவிடும் என கொழும்பில் வசிக்கும் தமிழர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு, விடுதலைப் புலிகள் மீது ஆட்சியாளர்களுக்கு உள்ள அச்சமே காரணம் என்று கருதப்படுகிறது.

இப்போது கருணா பிரச்சினை வெளியில் தெரிந்ததும் சில பகுதிகளில் தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று சொத்துகளை விட்டுவிட்டு வெளியேறத் தயாராக இருக்குமாறு ஜனதா விமுக்தி பெரமுன என்ற சிங்களக் கட்சியினர் கூறியதாகத் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். வரவிருக்கும் தேர்தலில், அந்த அமைப்பினர் ஆதரவு பெற்ற அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் இலங்கை சுதந்திரக் கட்சி கூட்டணி வென்றால் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும் என்ற அச்சம் உள்ளது.

இச் சூழ்நிலையில் பிரபாகரன் மீதான அரசின் அச்சம் நீங்கிவிட்டால் தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளின் வேகமும் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

கருணாவைவிட பிரபாகரனையே கொழும்புவாழ் தமிழர்கள் அதிகம் நம்புகின்றனர். 20 ஆண்டு காலம் போராடியதன் பலன் இத் தேர்தலில் கிடைக்க உள்ள நிலையில், கருணா மூலமாக இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கக் கூடாது என்ற வருத்தம் மட்டும் அவர்களிடம் உள்ளது.

ரத்தம் சிந்தாமல் கிழக்குப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்வதாக புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்பி. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பகுதியில் இருந்து போராளிகள் படிப்படியாக புலிகள் அமைப்புக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிரிழப்பு ஏதும் இல்லாமல் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று கொழும்பு தமிழர்கள் விரும்புகின்றனர்.

நன்றி: தினமணி

  • தொடங்கியவர்

எல்லாம் சுயநலம் தான், தமக்கு அடி விழுமோ என்ற பயம் தான்.

:lol::D:D

  • தொடங்கியவர்

PM assures separate Muslim delegation at future peace talks

Alladin Hussein in Colombo, March 15, 2004, 8.44 pm. Despite their failure to ensure a separate Independent Muslim Delegation at the peace talks during the last two years, the United National Front (UNF) party has given strong declaration that they will ensure the separate Muslim Delegation as soon as peace talks commence with the LTTE under a UNF government, after the April 2 General Election.

This assurance was given by Prime Minister and UNF Leader Ranil Wickremesinghe during the presentation ceremony of the partys election manifesto. However political analysts point out that during the last two years since the signing of the Ceasefire Agreement in February 2002 and the commencing of peace talks, the UNF merely resorted to verbal assurance of the participation of a separate Muslim delegation at the talks, despite the continuous request from the Muslim community, who has been a silent sufferer during the two decade long conflict. Hopefully the same scenario will not occur once again with them, the analysts said.

  • தொடங்கியவர்

"Denial of franchise will damage peace process"- TNA

Mar 15, 2004, 17:34 [TamilNet]

"Denial of franchise to Tamil voters residing in the Liberation Tigers held areas in the northeast province in the forthcoming general election will have serious impact on the current peace process," Mr.R.Sampanthan, leader of the Tamil National Alliance (TNA) and Secretary General of the Tamil United Liberation Front (TULF) told the Norwegian special peace envoy Mr. Erik Solheim during a discussion with the latter at the Norwegian embassy Monday morning, sources said.

The discussion which lasted for about forty five minutes between Mr.Sampanthan and Mr.Solheim centred on two matters, one was the question of allowing LTTE held area voters to exercise their franchise without any interruption by the security forces and the second was the Karuna affair in the east, sources said.

Norwegian ambassador Mr. Hans Bragattskar also participated in the discussion, sources said.

Tamil voters residing in the Liberation Tigers held areas in the northeast province should be allowed to freely, and without any restriction, exercise their franchise in the forthcoming general election, Mr.Sampanthan told the peace envoy.

According to election department sources, about 84 thousand voters reside in LTTE held areas in Vanni district, about 45 thousand in Batticaloa district and about 15 thousand in Trincomalee district.

However some understanding had been reached regarding the location of polling stations for voters in LTTE head areas in the districts of Trincomalee and Batticaloa. Authorities concerned have agreed to locate clustered polling stations in no man zones in Trincomalee and Batticaloa districts for LTTE held area voters.

"But uncertainty still prevails in regard to voters in LTTE held areas in the districts of Jaffna and Vanni," Mr.Sampanthan pointed out to Mr.Solheim, sources said.

Locating clustered polling stations in the army controlled area close to LTTE held area borders and subjecting the voters to body checks and other examinations would seriously interrupt the smooth polling and also would reduce the number of people who will be able to poll, Mr.Sampanthan pointed out.

Mr.Sampanthan said each clustered polling station should be provided with a European Union monitor and a local one on the polling day to ensure fair and free polling by LTTE held area voters.

Mr.Solheim replied that he would take up the matter with the authorities concerned and expressed confidence the problem could be sorted out in an amicable way

  • தொடங்கியவர்

santhi.jpg

பதவிக்கு வந்ததும், பஸ், ரயில் கட்டணம் குறைக்கப்படும். குழந்தைகளின் பால் மாக்களின் விலை குறைக்கப்படும். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் பிரசாரம் செய்கிறார்கள். இது சாத்தியமா?

சலீம்நானா: சாத்தியம் என்பதனால் தானே இப்படி வாக்குறுதிகள் தருகிறார்கள். மெத்திப் போயிருக்கும் ஊழல் மோசடிகளை குறைத்தால், எவ்வளவோ குறைப்புகளை செய்யலாம். ரொக்கெட் யுகத்தில் ஏறிச்செல்லும் வாழ்க்கைச்செலவை குறைக்க நாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

பண்டா ஐயா: பாண் விலை, மாவிலை குறைப்புபற்றி எதுவும் சொல்லவில்லையே? இது ஏன்?

சலீம்நானா: விவசாயத்துக்கு ஊக்கமளிக்குமுகமாக உரவிலையை சரிபாதிக்கு மேலாக குறைக்கப்போவதாக வாக்குறுதி தந்திருக்கிறோம். நெல்,கிழங்கு மற்றும் மரக்கரி விலைகள் குறையும்போது வாழ்க்கைச் செலவு மேலும் குறையும். இதற்கு மூன்று மாதங்கள் பிடிக்குமா?இதனால்தான்.மாவு, பாண் விலை குறைப்புபற்றி எதுவும் சொல்லவில்லை.உலக சந்தைக்கு நிலைவரங்களுக்கு ஏற்பவேமாவை இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது.

பண்டாஐயா: எரிபொருட்களும் உலக சந்தை நிலைவரப்படிதானே இறக்குமதியாகின்றன. இந்த நிலையில் எப்படி பஸ்,ரயில் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பீர்கள்.

சலீம்நானா: இந்த துறைகளில் நிலவும் ஊழல் மோசடிகளை குறைப்பதன் மூலம் போக்குவரத்து கட்டணங்களைகுறைக்க முடியும் என்ற நம்பிக்கை எங்கள்தலைவர்களுக்கு உண்டு.

பறுவதம் பாட்டி: எந்த அரசு பதவிக்கு வந்தாலும் வாழ்க்கைச் செலவையும் குறைக்க முடியாது.வேலை இல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. இது அனுபவ உண்மை. அது சரி? பதவிக்குவந்ததும் அரசியலமைப்பை மாற்றுவோம். எனவே அதற்கும் ஆணை தாருங்கள் என்று உங்கள் கட்சி வாக்காளர்களை கேட்டு நிற்கிறதே! அரசியலமைப்பை மாற்றமூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா? கிடைப்பது அசாத்தியம்.

சலீம்நானா: இந்த தேர்தலில் அரசியலமைப்பை மாற்றுவதற்கு எங்களை பதவியில் ஏற்றுவதன்மூலம் மக்கள் ஆணை தருவார்கள்.எனவே சிம்பிள் மஜோரிட்டி கிடைத்தால்போதும். அரசியலமைப்பை பழைய பாராளுமன்றஆட்சி முறைக்கு மாற்றி விடலாம். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய அரசிலமைவை தயாரித்து அந்த சிம்பிள் மஜோரிட்டி மூலம் இதனை சாதிப்போம்.

பறுவதம் பாட்டி: யாருக்கும் சிம்பிள்மஜோரிட்டி கிடைக்காது. எந்தக்கட்சியை பதவியில் இருத்துவது என்பதை நாமே தீர்மானிப்போம் என ஒருபுறம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஹாஜியார் சூளுரைக்கிறார். மறுபுறம் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வீர வசனம்பேசுகிறர்.தமிழ்தேசிய கூட்டமைப்பினரும் எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று மார் தட்டுகிறார்கள். அரசியலமைப்பை மாற்றுவதற்கு இவர்கள் யாரும் இணங்கமாட்டார்களே! எனவே தேர்தல் நடப்புகளை பார்க்கும் பொழுதுஇதுவும் சாத்தியப்படாது. இதனை நினைவில் வைத்திருங்கள்.

சலீம்நானா: எங்கள் தலைவி ஹக்கீம் ஹாஜியாரைஆட்சி அமைக்க நாடமாட்டார். அப்படி நாடினாலும் பேரியல் மேடம் விடமாட்டார். ஆறுமுகன் தொண்டமானுக்குத்தான் ""சான்ஸ்'' இருக்கிறது.

பறுவதம்பாட்டி: டி.என்.ஏ?

சலீம்நானா:பிரபாகருணா பிளவு நீடிக்குமானால் கருணாவை கைக்குள் போட்டு, எங்கள் தலைவி, அவர் மூலமாக கிழக்கு மாகாண டி.என்.ஏ.எம்.பிக்களின் ஆதரவை தேடினால் என்ன? இதற்கான சாத்தியமும் இருக்கிறது.

பறுவதம் பாட்டி:பிரித்தாளும் தந்திரத்தில்வெள்ளைக்காரர்த

  • தொடங்கியவர்

பேரினவாதக் கட்சிகளின் முன்னாள் எம்.பி.க்கள் சிறுபான்மைக் கட்சிக் கூட்டுக்குள் அடைக்கலம்

நடைபெறவிருக்கும் 13 ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் இப்பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது. தமிழரே புலிகள்; புலிகளே தமிழர், விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற கோஷங்களுடன் தமிழர் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியணி தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

திருமலை மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் 10 அரசியல் கட்சிகளும் 6 சுயேச்சைக் குழுக்களுமாக 112 பேர், 4 நாடாளுமன்ற ஆசனங்களுக்கு போட்டியிடுகின்றார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) நீண்டகால அனுபவம் உள்ள அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முதன்மை வேட்பாளர் இரா.சம்பந்தன் உட்பட 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்; இவர்களில் பலர் பழைய முகங்களே.

வேட்பாளர் தெரிவின்போது கட்சிக்கிளைகளின் ஆதரவுடனும், விடுதலைபுலிகளின் அனுசரணையுடனும் தொகுதிவாரியாக, சிறந்த இளம் வேட்பாளர்களை உள்ளடக்கியிருந்தால் வரவேற்கக் கூடியதாக அமைந்திருக்கும் என பலர் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்கள். இதற்கு முன்மாதிரியாக மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தெரிவு நடைபெற்றமையைக் குறிப்பிடலாம். மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தெரிவில் தலைமை வேட்பாளரைத் தவிர ஏனைய 7 பேரும் புதுமுகங்கள். இவை கட்சியின் அடிப்படையில், தொகுதிரீதியாக (மட்டக்களப்பு, கற்குடா, பட்டிருப்பு) முறையே 4, 2, 2 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தேசிய கூட்டமைப்பை முழுமையான சக்தியைக் கொண்டு களமிறங்கியது ஒரு சாணக்கியமான செயல் எனலாம்.

திருமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளர் களம் இறங்கினாலும், அவரால் முஸ்லிம் வாக்குகளைப் பெறுவது என்பது கஷ்டமானதொரு காரியமாகும். அதற்காகத் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை தனக்கு அளிக்குமாறு கோரப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். முஸ்லிம் வாக்குகளை கூடிய அளவு தமிழ் தேசிய கூட்டமைப்பு பெறமுடியாத நிலையே தென்படுகின்றது. இதற்குப் பதிலாக தமிழ்தேசிய கூட்டமைப்புக்குச் செல்லவிருக்கின்ற தமிழ் வாக்குகளை முஸ்லிம் வேட்பாளர்கள் பகிர்ந்து கொள்ள முனைப்பாக இருப்பதால் பாரிய வாக்கு அதிகரிப்பு ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை. குறிப்பாக, இலங்கையில் விகிதாசார தேர்தல் முறை அமுலுக்கு வந்த காலந்தொட்டு, கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் வரை ஆட்சியமைத்து வந்த பேரினவாதக் கட்சிகளில் தெரிவு செய்யப்பட்ட திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக்கட்சி பேதங்களைக் கைவிட்டுவிட்டு முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கீழ் இம்முறை தேர்தலில் களமிறங்கியமை கருத்திற் கொள்ளப்படவேண்டியதொன்றாகும். இக்கூட்டமைப்பு மூலம் திருமலை மாவட்டத்தில் முஸ்லிம் வாக்குகளைச் சிதறடிக்காமல் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கடந்த பொதுத்தேர்தல்களில் நாடாளுமன்றப் பிரதிநிதிகளாக அங்கம் வகித்த ஏ.எம்.எம்.மஃ×ப் (ஐக்கிய தேசியக் கட்சி), நஜீப் அப்துல் மஜீத் (பொதுஜன ஐக்கிய முன்னணி), கே.எம்.தௌபீக், எஸ்.எம்.தௌபீக் ஆகியோர் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இம்முறையில் களமிறங்கியது. கூடிய இரு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்; பேரினவாதிகளின் வாக்குபலம் குறையும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பில் இரண்டு பிரதிநிதித்துவத்தைப் பெறுவதாக இருந்தால், கடந்த

பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் அளித்த பழுதடைந்ததாகக் கருதப்படும் ஆறாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஈடுசெய்வது, வேட்பாளர்கள் தனித்தனியே வாக்குவேட்டையிடுவதைத் தவிர்ப்பது, கூட்டமைப்புச் சின்னமாகிய வீட்டுக்கு மட்டும் வாக்குகளை அளிப்பது ஆகியவை உறுதிப்படுத்தப்படவேண்டும்.

பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜே.வி.பி.யும் அமைத்துக் கொண்ட கூட்டு தென்பகுதியில் பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தினாலும், இம்மாவட்டத்திலுள்ள சிங்களப் பெரும்பான்மை மக்கள் அதை இதயபூர்வமாக ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. மொத்த சிங்கள வாக்குகள் பல கட்சிகளுக்கு பிரிவடைந்தால் வெற்றி வாய்ப்பு குறையலாம் என அவதானிகள் கூறுகின்றனர்.திருமலை மாவட்டத்தில் இன ரீதியாக இனம் சார்ந்த கட்சிகளுக்கு வாக்களித்துப் பழகிய மக்கள் இத்தேர்தலிலும் மாற்றமடையப் போவதில்லை.

தற்போதைய நிலையில், திருமலை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கூட்டமைப்புக்கும் இடையில்தான் இத்தேர்தல் பலப்பரீட்சையாக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஆனால், இம்முறை தமிழரசுக் கட்சிக்கும் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) வாக்களிக்குமாறும், தமிழர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழல் வேண்டும். இன்றேல் பயங்கரவிளைவு தோன்றும் என்று புலிகள் கூறுவதன் மூலம் தமிழர் கூட்டமைப்பு செல்வாக்குள்ளதாகிவிட்டது.

திருமலை மாவட்டத்தில் இம்முறை 2 இலட்சத்து 24 ஆயிரத்து 307 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். திருமலை தொகுதியிலிருந்து 86 ஆயிரத்து 277 பேரும், மூதூர் தொகுதியிலிருந்து 74 ஆயிரத்து 867 பேரும், சேருவில தொகுதியிலிருந்து 63 ஆயிரத்து 161 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். திருமலை மாவட்டத்தில் கட்சியின் சார்பில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் மிகப் பலம் பொருந்தியதாகவுள்ளன ஏனைய கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய முஸ்லிம் கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உறுமய, ருஹுனு ஜனதா பக்ஷய, புதிய இடதுசாரி முன்னணி, சிங்ஹளயே மகாசம்மத பூமிபுத்ர பக்ஷய ஆகிய கட்சிகளும் ஆறு சுயேச்சைக் குழுக்களும் இத்தேர்தல் களத்தில் களம் இறங்கியிருந்தாலும் தேர்தலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தாது.

தமிழ் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களைப் பெறுவதற்கும் பலத்த முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காகப் பல சவால்கள் காத்திருக்கின்றன. இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசத்திலிருந்து வாக்களிக்க வருவோர்க்கு இடைஞ்சல்கள் இல்லாது வாக்களிக்கும் சந்தர்ப்பமளித்தால் எதிர்பார்த்த முடிவு அமையலாம்.

திருமலை மாவட்ட வாக்காளர் வீதாசாரப்படி தமிழ் மக்கள் இரு ஆசனங்களையும், முஸ்லிம் மக்கள் ஒரு ஆசனத்தையும் சிங்கள மக்கள் ஒரு ஆசனத்தையும் பெற வேண்டும். ஆனால், கடந்த முறை நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி ஒரு ஆசனத்தையும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஒரு ஆசனத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிட்டு அவை இரு ஆசனங்களையும் பெற்றன. கடந்த பொதுத்தேர்தல்களில் தமிழ் வாக்குகள் திட்டமிட்டு சிதறடிக்கப்பட்டமை, வாக்களிப்பில் தமிழ் மக்கள் அக்கறை காட்டாமை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருக்கும் வாக்காளர்கள் தடுக்கப்பட்டமை ஆகியவை தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதற்கு முக்கிய காரணங்களாகும்.

தமிழ் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் 60 வீதமானவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்

பகுதியிலும் 40 வீதமானவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான ஈச்சிலம்பற்று பிரதேசத்திலுள்ள 21 கிராமங்களிலும், மூதூர் கிழக்கு மேற்குப் பிரதேசங்களிலுள்ள 18 கிராமங்களிலும் குச்சவெளி, தம்பலகாமம், கன்னியா, பன்குளம் போன்ற பிரதேச செயலகப்பிரிவுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். கடந்தகால தேர்தல்களில் தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பு 60 65 வீதமும் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்களிப்பு 85 90 வீதமும், சிங்கள வாக்காளர்களின் வாக்களிப்பு 65 70 வீதமும் அமைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதத்தை 90 வீதமாகக் கூட்டுவதும் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச தமிழ் வாக்காளர்களை முழுமையாக வாக்களிக்கச் செய்வதிலும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச வாக்காளர்களைக் கொத்தணி வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து வந்து வாக்களிக்கச் செய்வதன் மூலமும் இதனைச் சாத்தியமாக்கலாம். இம்முறை புலிகளின் நேரடிப்பார்வை படுவதால் வேட்பாளர்களிடையே குரோத மனப்பாங்கோ, குத்து வெட்டு மோதல்களோ, ஆடம்பரச் செலவுகளோ ஏற்படாது என செய்திகளிலிருந்து தெரியவருகின்றது.

முறையாக 95 வீதம் வாக்களித்தால் மூன்று தமிழ் பிரதிநிதிகளைக் கூடப் பெறமுடியும் என்று முதன்மை வேட்பாளர் இரõ.சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி -வீரகேசரி

  • தொடங்கியவர்

நெருக்கடி நீடிப்பு சமாதான முயற்சிகளை நலிவடையச் செய்யும்

தேக்கநிலை அடைந்திருக்கும் சமாதான முயற்சிகள் புலிகளின் உள்வீட்டு நெருக்கடி காரணமாக மேலும் நலிவு அடைந்துள்ளதாக இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அரசியல் ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கிடையிலான பிரிவு தென்னிலங்கையில் மகிழ்ச்சி கொடுக்கும் செய்தியாகக்கூட ஒரு வேளை இருக்கக்கூடும் ஆனாலும் யுத்தநிறுத்த

உடன்படிக்கைக்கு பாதகமாக அமையும் ஆபத்தும் உண்டு யுத்த பீதியை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு தலைமைத்துவத்தின் கீழ் புலிகள் இயக்கம் பலம் வாய்ந்த இயக்கமாக இதுவரை காலமும் இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு நிலையால் புலிகள் இயக்கம் இரு அணிகளாக உடைந்து விட்டது. இது ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

தென்னிலங்கை அரசியற் சக்திகள் புலிகளின் உள்வீட்டு விவகாரத்தில் தலையிடாதிருப்பது நன்மை பயக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.

நன்றி -வீரகேசரி

  • தொடங்கியவர்

Peace process can give solution to eastern crisis

The open split of the LTTE into northern and eastern wings continues into its second week. But the split is not yet an accomplished fact as it goes against the strong ideological unity of the LTTE organisation and of the larger Tamil nationalist movement.

Although the breakaway leadership led by Mr Karuna appears confident, they will also be aware of the dangerous course they have taken. On the one hand there is the constant risk of political assassination at which the LTTE has specialist skills. On the other hand, there is the risk of alienating the people. So far the eastern people appear to be supportive of the breakaway leadership. But the question is for how long.

At the present time, Karuna's position in the east appears secure, even though his top ranking deputies have left him for the LTTE. His cadres whom he has trained and whose leader he has been continue to be loyal to him. But they would also be deeply troubled by their leader's rebellion against all they stood for in the past two decades. When Karuna decided to renounce his allegiance to LTTE leader Prabhakaran, he took on an enormous challenge with regard to his own cadres. What will continue to keep his cadres loyal to him would be the continuing support of the civilian population.

In explaining his decision to break away from the LTTE, Karuna has said it was primarily due to the inequitable treatment of the east, both in terms of economic development and the allocation of material and human resources.

This claim has struck a sympathetic chord in the Tamil people of the east. However, in more recent days, Karuna appears to be broadening the line of his ideological attack on his former organisation. Initially, he paid deference to LTTE leader Velupillai Prabhakaran, likening him to a god to whom he remained obedient. However, he is now speaking harshly about the leader himself, and casting doubts as to the achievements of the entire Tamil militant struggle.

It is one thing to articulate eastern grievances on the ground. It is quite another to question the rationale of the Tamil militancy, in which he himself has played an important part. From a Tamil nationalist perspective it makes more sense for the Tamil people to be united under a single leadership rather than to be divided. In fact, all those Tamil nationalists who do not have to bear the brunt of living under the LTTE's direct rule, whether in Colombo or abroad, would wish the LTTE to be strong and undivided. It is the Tamil people of the east alone, who bore the brunt of the LTTE's north-centric rule, who would wish to take up a different position.

Military solution

The LTTE's initial reaction to Karuna's act of rebellion was to dismiss him from the organisation, call him a traitor and to order his replacement to take charge of the LTTE's eastern command. Such a strong reaction was in keeping with the LTTE's past practices of dealing with dissent in its own ranks and also within the larger Tamil community. Such persons were either physically eliminated or severely demoted. Perhaps, the LTTE calculated that a strong initial reaction would cause Karuna's support to evaporate. But so far it has not.

The LTTE's confrontational attitude has been supplemented by the disappointment of the larger Tamil community at the sudden turn of events when the Tamil nationalist cause seemed to be going from strength to strength along with the peace process. Sections of the Tamil mainstream media and Tamil expatriates have made common cause with the LTTE against

Karuna and the breakaway group. They see a possible fatal weakening of the Tamil nationalist cause occurring as a result of the present rift. This raises the temptation for that perennial quick fix solution of Sinhalese nationalists, and even of the state apparatus, which is the military solution.

But if two decades of ethnic war are to teach any lessons to the people living in Sri Lanka, it is that military force and propaganda do not suffice to guarantee victory over groups that champion an ethnic or nationalist cause. The LTTE itself was once a very small group. Karuna controls a very large group, numbering as many as 6000 fighters. The LTTE could not be suppressed by either military force or by propaganda. Neither is it likely that Karuna can be suppressed, so long as he keeps the support of the eastern Tamil people. In the event of his being able to maintain his support base amongst the Tamil people, the main threat to him would be the possibility of assassination.

Although the LTTE has been described as one of the most deadly and powerful militant organisations in the world, this has been in terms of its opposition to the Sri Lankan state. On the other hand, if the LTTE were to seek to use its military strength against the breakaway group in the east, it is likely to get bogged down in the quagmire of protracted war. The absence of contiguous Tamil territory that joins the north and east, will make the LTTE's task of keeping its supply lines intact formidable.

Best option

There is a temptation to see a hidden hand, possibly emanating from India, as being behind the breakaway group. While there may have been external support extended to the Karuna group, the reality of eastern grievances cannot be glossed over. The best option for the LTTE at this time is to act in the spirit of the present peace process, which demands that they take on the characteristics of a political organisation that copes peacefully with pluralism. An acknowledgement of the genuine grievances of the eastern LTTE cadre and the eastern Tamil population would be a constructive first step. Some of the grievances that have been very well articulated by Karuna have their origins in the pre-LTTE period. There needs to be a dialogue on these, rather than a cover up, by both the LTTE and Tamil opinion formers.

Those who are concerned with the Tamil nationalist cause would wish to repair the split in the LTTE. But it is important that the rift be healed through dialogue and compromise that recognises the genuine grievances of the eastern people, and seeks a just solution to them. If violence is used, for whatever purpose, it can cause irreparable damage to the peace process. An LTTE that seeks to resort to a military solution to re-unite itself will send a wrong message to its own cadres about their sincerity to take the peace process with the government forward. It will also frighten the rest of the country about the LTTE's lack of sincerity in solving problems through negotiations and the compromise that negotiations necessarily entail.

During the past two decades civil society groups engaged in a great deal of educational work on the pluralism in Sri Lankan society as a whole, and the need for political restructuring on the lines of a federal solution. At the present juncture civil society groups will have an important role to play in promoting a greater dialogue in the wider society on the pluralism within the north east that needs to find expression in appropriate political structures. They should increase their level of engagement with the actors in Tamil society, including the LTTE and the Karuna group.

Obtaining consensus in plural societies is a rare occurrence and requires wise and patient leadership, such as demonstrated by Nelson Mandela in South Africa. The most appropriate feature of political life in a plural and multi ethnic society is dialogue and compromise. This feature will become more pronounced in Sri Lankan society after the April 2 general election. The most likely result will be a hung Parliament, in which neither of the two main parties obtains a clear majority by itself. The post election scenario is one of multiple parties, including the LTTE and breakaway Karuna group, needing to work with each other to take forward the peace process.

நன்றி - டெய்லி மிரர்

  • தொடங்கியவர்

ISGA not for separation: Prabha

The proposals for an Interim Administrative structure forwarded by the LTTE were not aimed at a separate state but only at an interim arrangement, said its leader V. Prabhakaran in a statement to the LTTE's Sinhala paper Dedunne.

"The accusations that our proposals are aimed at a separate Tamil state and the first step for secession are not correct. They do not contain proposals for a framework towards a final solution. They are for interim preparations. Without such an organization the displaced cannot be rehabilitated nor development projects implemented. Maintenance of law and order, distribution of land and allocation of funds for provincial administration cannot be done without such a body.

At present we effectively administer the North and East efficiently. I wish to point out this reality with facts," the Tiger leader said.

நன்றி - டெய்லி மிரர்

நன்றி நளாயினி.. ஏற்கெனவே மேலே கருத்துக்கு வந்த செய்தி..

நிற்க.. டெய்லி மிரர் பத்திரிகையில் (16-3-04) மட்டக்களப்பு நடப்புகளைப்பற்றிய செய்தி இன்றும் வந்திருக்கிறது..

தமிழ்நாதம்.. ஈழநாதம் பத்திரிகைகளில் பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்து மட்டக்களப்புநடப்புகள் பற்றிய செய்திகள் வெளிவரவில்லை.. ஏன்..?

பேட்டிக்காக அலைந்த பத்திரிகை ஊடகவியளாளர் கண்களுக்கு அங்கத்தைய நிலமை கண்களுக்குப் புலப்படாதது ஏன்..?

இது மிகச் சிறிய பிரச்சனை.. இலகுவாக தீர்த்துவிடலாம் என்ற வரட்டுக்கௌரவமா..?

:?: :?: :?:

  • தொடங்கியவர்

கருணாவிற்கு ஆதவாக செயல்பட்ட பாடுமீன் தளத்தை வேறு சிலர் ஹக் (Hack) பண்ணிவிட்டதாகவும் தளம் இப்போது இயங்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது.

இந்த தகவல் உண்மை தான், அது மீண்டும் கருணாவிற்கு ஆதரவாக இயங்குவதாகவும் கூறப்படுகின்றது. கருணாவிற்கு எதிராக வந்த அறிக்கைகள் தங்களுடையது அல்ல என்றும் சொல்லியிருக்கின்றார்களாம்.

இன்றைய டெய்லி மிரர் காட்டூன்

cartoonl.gif

தற்போதய வன்னி-மட்டக்களப்பு நிலைமையை தத்ரூபமாக எடுத்துக்காட்டுகிறது..

வெற்றி யாரை சேர்ந்தாலும்.. கொடுத்த பட்டம் மீளப்பெறப்பட்டு.. இயக்கம் கிழக்கு அபிவிருத்திக்கு உதவிசெய்தால் தவிர.. நிலைமை பழைய நிலைக்கு ஒருபொழுதும் திரும்பாது..

ஓரளவு சுமூக நிலைக்கு வருவதற்கே 10-15 வருடங்கள் பிடிக்கும்.

இன்றைய டெய்லி மிரர் காட்டூன்

cartoonl.gif

இதை பாத்தால் ''சன நாய்'' யகத்தை பிறக்ரிஸ் பண்ணி பாக்கினம்.........

தெற்கில இருக்கிற சிங்கள அரசியல்வாதிகள் போல..........

  • தொடங்கியவர்

கந்தர் உங்க கருத்தை பார்த்தா நீங்க புது ஆள் போல தெரியேல்ல. சன் நாய் அகத்தை பத்தி எல்லாம் பேசுறீங்க?

கந்தர் உங்க கருத்தை பார்த்தா நீங்க புது ஆள் போல தெரியேல்ல. சன் நாய் அகத்தை பத்தி எல்லாம் பேசுறீங்க?

சொன்னால் நம்பமாட்டியல் கனகாலமாய் களத்தை வாசிச்செறிஞ்சனான்.

இப்பதான் களத்தில் காலை வைக்கிறன்............

வேண்டாம் எண்டால் சொல்லுங்கோ..........

வேறை அலுவல் பாக்கிறன்............

  • தொடங்கியவர்

சொன்னால் நம்பமாட்டியல் கனகாலமாய் களத்தை வாசிச்செறிஞ்சனான்.

இப்பதான் களத்தில் காலை வைக்கிறன்............

வேண்டாம் எண்டால் சொல்லுங்கோ..........

வேறை அலுவல் பாக்கிறன்............

ம் சரி. உங்களை வேண்டாம் என்று சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை. அப்படி சொன்னால் அது அடக்குமுறையாகிவிடும், உங்கள் கருத்தை தாராளமாக எழுதுங்கள். உங்களது எழுத்து நடையை பார்த்து சந்தேகமாக இருந்தது அதனால் கேட்டேன்.

ம் சரி. உங்களை வேண்டாம் என்று சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை. அப்படி சொன்னால் அது அடக்குமுறையாகிவிடும், உங்கள் கருத்தை தாராளமாக எழுதுங்கள். உங்களது எழுத்து நடையை பார்த்து சந்தேகமாக

நான் அதை சந்தோசமாக எண்டு வாசிச்சுபோட்டன்......

அது சரி என்ன சந்தேகம் சொன்னால்தானே மற்றவையும் அறிவினம்...

  • தொடங்கியவர்

எல்லாம் இந்த சன நாய் அகம் என்றதை நீங்க உபயோகித்ததால வந்தது தான். சரி அதை விடுங்க, உங்ளிடம் சில கேள்விகள் கேட்ப்போம். இந்த கிழக்கு பிரைச்சனை பற்றி உங்க கருத்து என்ன? அதை எப்படி தீர்க்கலாம்?

ம்... எப்படித் தீர்க்கலாம்?! ஆ... கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்ற சொற்களை தமிழ்லை இருந்து எடுத்துவிட்டால் தீர்க்கலாம். :lol:

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.