Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்குத் தெரியும் கிழக்கின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையா அல்லது கருணாவின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையா என்று

எது எப்படியிருப்பினும் கருணாவும் அவரது நண்பர்களும் இலாபமடைந்துவிட்டார்கள் அவர்களுக்குக் கொடுபடவேண்டியது கொடுக்கப்பட்டு விட்டது இன்றொ நாளையோ அவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடிவிடுவார்கள் புலிகளின் கையில் அகப்படப்போவதில்லை

ஆனால் தலைமைப் பீடத்திலிருந்து கிடைத்த ஆணை சரியாகப் போய்ச்சேராமால் தாம் தம் உயிரினும் மேலாக மதித்த தமிழ்த் தேசியத்துக்கும் தலைமைக்கும் எதிராகப் போராடுகின்றோம் என்று தெரியாமலேயே வீணர்களின் சுக வாழ்வுக்காய் உயிர்துறந்த அந்தப் போராளிகளும் எமது சகோதரர்களே அவர்களுக்கு எமது அஞ்சலிகள்

இன்று அவர்கள் விடயம் தெரியாமல் எதிர்த்துப் போராடி உயிர்துறந்தாலும் அவர்கள் தேசம் காப்பதற்காய் உயிரைத் துச்சமென மதித்து வந்தவர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது அவர்களின் அர்ப்பணிப்பிற்கு நாம் தலைவணங்குகின்றோம்

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply

30 பேர் இறந்ததாகவும் 300 பேர் வரை சரணடைந்ததாகவும் சன் டிவி தெரிவி;த்தது. கருணா மற்றும் அவரது அண்ணன் தப்பியோட்டம் என கூறப்படுகிறது.

மீட்பு அணி தொடர்ந்து முன்னேறுகிறது. கருணாவிற்கு நெருங்கிய தளபதிகள் தப்பியோட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீட்பு அணிகள் ஆரம்பித்த கிழக்கையும், மக்களையும் விடுவிக்கும் முயற்சியில் வாகரைப் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வாகரைப் பிரதேசத்திற்கான தளபதியாக கருணாவால் நியமிக்கப்பட்ட nஐயம் இத் தாக்குதலில் காயமடைந்துள்ளார். கருணாவிற்கு மிகவும் நெருங்கியவரும் பிற மாவட்ட மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் முன்னின்றவருமான பிள்ளையான் பயணம் செய்த வாகனம் கிளைமோர்த் தாக்குதலிற்கு உள்ளானதில் அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.

இதேவேளை இந்தப் பிராந்தியம் முழுவதற்குமான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த கருணாவின் சகோதரனான ரெஐp சண்டை ஆரம்பித்தவுடனேயே வாகரையை விட்டுத் பின் வாங்கியுள்ளார். போராளிகளை முன்னோக்கி நகருமாறு தொலைதொடர்புக் கருவிகளினூடாக கட்டளையிட்ட வண்ணம் கருணாவின் தளபதிகள் பின்வாங்கிய சம்பவம் அணித்தலைவர்களால் போராளிகளிற்குத் தெரிவிக்கப்பட்டு மீட்பு அணியிடம் சரணடையும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் முதற்கட்டமாக சுமார் 300ற்கும் மேற்பட்ட போராளிகள் மீட்பு அணியிடம் எந்தவித எதிர்ப்பும் இன்றி சரணடைந்தனர். இதேபோன்று சில அணிகளின் பொறுப்பாளர்களும் தங்களின் அணியை இவ்வாறு மீட்பு அணியிடம் கையளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை இடம்பெற்ற சண்டையில் கருணா அணி சார்ந்த ஒன்பது பேர் பலியாகியுள்ளதாகவும், 15ற்கு மேற்பட்டோர் வைத்தியசாலைகளிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிற்குள்ளும் மீட்பு அணியினர் பிரிதொரு முனையால் ஊடுருவியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன. கருணா இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட பின்பும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தன என்றும் எனினும் தேவையற்ற சண்டைகளைத் தவிர்ப்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்கான முன்னேற்றத்தை புலிகள் தவிர்த்து வந்தனர் என்பதே அம்மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமகனின் கருத்தாகவுள்ளது.

ஆதாரம்: புதினம்

'எங்களை முன்னுக்கு மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெயி அண்ணன் ஓடிற்றார்'

வாகரைப் பகுதியில் கருணாவை விட்டு விலகி ஓடிவரும் பல போராளிகள் சண்டை ஆரம்பமானபோது நடந்த விடயங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்திலிந்தபோது எறிகணைகள் விழுந்து வெடிக்கும் சத்தங்கள் கேட்டது. நாங்கள் தாக்குதல் தொடங்கி விட்டதை உணர்ந்து என்ன செய்வது என்று யோசித்தபோது எங்கள் முகாமுக்குப் பொறுப்பாக இருந்து நேசன் 'வந்துட்டானுகள் எழும்பி அடியுங்கடா' என்று சத்தமிட்டவாறு ஓடினார். நாங்களும் பின்னோக்கி ஓடி பாதுகாப்பான இடத்தில் கவர் எடுத்தோம்.

தொடர்ந்து தொலைத் தொடர்புக் கருவிகளில் 'அடியுங்கடா, அடியுங்கடா' என்று கொமாண்ட் வநது கொண்டே இருந்தது. நாங்கள் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை. ஏற்கனவே யோசிச்சிருந்தபடி மீட்பு அணிகளிடம் வந்து சேர்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.

எவ்விடத்திலும் தீவிரமாக தாக்குதல் இடம் பெறவேயில்லை. நாங்கள் மீட்பு அணியின் தாக்குதல் தணியும் வரை பாதுகாப்பான இடத்தில் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் நேசனும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார். 'எங்களை மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெயி அண்ணன் ஓடிற்றார்' என்று கூறினார்.

பின்னர் விடிகாலை நேரத்தில் மீட்பு அணியைச் சேர்ந்த, எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான ராகவன் அண்ணன் வந்து எங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்று கூறினார்.

இதே நேரம் விடுதலைப் புலிகளின் வேகமான முன்னேற்றம் கருணா அணியின் முன்னணி தளபதிகளுக்கு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. பனிச்ச கேணி, கட்டுமுறிவு போன்ற இடங்களைத் தவிர வாகரையின் பெரும்பகுதி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஓட்டுமடுப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் கருணா அணியைச் சேர்ந்த ஞானம் என்பவர் காயமடைந்துள்ளார்.

பிரபாகரன்-கருணா படைகள் மோதல்: கிழக்கு இலங்கையில் வெடித்தது சகோதரப் போர்; உஷார் நிலையில் ராணுவம்

கிழக்கு இலங்கை மட்டக்களப்பில் காட்டுப் பகுதியில் செய்தியாளரிடம் (வெள்ளிக்கிழமை) பேசுகிறார் புலிகள் போட்டிக் குழுத் தலைவர் கருணா என்ற வி. முரளீதரன்.

கொழும்பு, ஏப். 10: இலங்கை கிழக்குப் பகுதியில் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் கருணா தலைமையிலான கோஷ்டியினருக்கும் இடையில் வியாழக்கிழமை இரவு மோதல் வெடித்தது.

இரு தரப்புகளையும் சேர்ந்த 8 போராளிகளும் மீட்புப் பணியில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் இறந்தனர் எனத் தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையில், கருணா ஆதரவு போராளிகள் 300 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் சரணடைந்துவிட்டனர் என்று புலிகள் ஆதரவு இணையதளம் "தமிழ்நெட்' தெரிவிக்கிறது.

புலிகளின் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதால், இலங்கை கிழக்குப் பகுதியில் ராணுவம், போலீஸ் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வடக்குப் பகுதியைச் சேர்ந்த விடுதலைப் புலிகள், கிழக்குப் பகுதியில் திரிகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைப் பிரிக்கும் வெருகல் நதியைக் கடந்துவந்து வியாழன் இரவில் தாக்குதல் நடத்தினர்.

அப்போது புலிகள் சிறிய பீரங்கிகள், துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினர் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

கதிரைவெளி என்ற இடத்தில் காயமடைந்து விழுந்த போராளிகளை எடுத்து வரச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரும் கண்ணிவெடியில் சிக்கி இறந்தார்.

ஆம்புலன்ஸ் டிரைவரின் உடலை மீட்க உதவும்படி கருணா கோஷ்டியினர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைக் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், இரு தரப்பினரிடமிருந்தும் உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், இறந்தவர் உடலை எடுத்து வர இயலாது என்று செஞ்சிலுவைச் சங்கம் மறுத்துவிட்டது.

பொதுமக்கள் காயம்: திடீரென்று மோதல் வெடித்ததால், இடைப்பட்ட பகுதிகளில் சிக்கிய பொதுமக்களில் பலர் காயமடைந்தனர்.

பஸ்ஸில் சென்று கொண்டிருந்த மூன்று பயணிகள் காயமடைந்தனர். மூன்று கார்களும் தாக்குதலுக்கு உள்ளாயின.

காயமடைந்த 8 விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் நிலை மோசமாக இருக்கிறது.

இதைப் போல் காயமடைந்த 6 போராளிகள் வெள்ளச்சேனை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு இரு பெண் போராளிகள் இறந்தனர்.

""வெருகல் ஆற்றின் தென் கரையில் மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த கருணா ஆதரவினர் 300 பேர் ஆரம்பத்தில் எதிர்த்தனர். ஆனால், தொடர் தாக்குதலை அடுத்து, அவர்கள் சரணடைந்துவிட்டனர்'' என்று "தமிழ்நெட்' தெரிவிக்கிறது.

மோதல் குறித்தும், சாவு குறித்தும் கருணா இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், "புலிகளின் மேலிடத் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டது' என்று கருணா ஆதரவாளரான வரதன் தெரிவித்தார்.

தங்களது 500 போராளிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதாக கருணா தரப்பினர் தெரிவித்தனர். வெருகல் ஆற்றின் இரு கரைகளிலும் இரு கோஷ்டிகளையும் சேர்ந்த ஆயிரம் போராளிகள் கடந்த சில வாரங்களாகவே குவிக்கப்பட்டிருந்தனர். எந்நேரமும் மோதல் வெடிக்கும் அபாயம் இருந்தபோதும் தேர்தல் காரணமாக மோதல் ஒத்தி வைக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் மண்ணில் ராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இருபது ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர் நார்வேயின் முயற்சியால் நிறுத்தப்பட்டு 2002 மார்ச் மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

அதையடுத்து, தமிழர் பகுதிகளில் ஓரிரு துப்பாக்கிச் சூடுகளைத் தவிர பெரிய மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை.

புலிகளின் தலைமைக்கு எதிராக அந்த இயக்கத்தின் மட்டக்களப்பு -அம்பாறை கமாண்டர் கருணா என்ற முரளீதரன் கடந்த மார்ச் மாதம் போர்க்கொடி எழுப்பியிருந்தார். இயக்கத்தில் இலங்கையின் வடக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கிழக்குப் பகுதியினருக்குக் கிடைப்பதில்லை என்று அவர் புகார் கூறிவந்தார். அதையடுத்து, அவர் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.

www.dinmani.com

வாகரை மீட்பு: nஐயந்தன் படையணிப் பிரிவுகளே முன்னெடுத்தன.

ஜ தமிழ்நெற் செய்தியைத் தழுவி ஸ ஜ சனிக்கிழமை, 10 ஏப்பிரல் 2004, 3:41 ஈழம் ஸ

nஐயந்தனின் படையணிப்பிரிவுகளே மட்டு-அம்பாறை மீட்புத் தாக்குதலின் முதற்கட்டமான வாகரை நோக்கிய பலமுனைத் தாக்குதலைத் தொடுத்தன. தற்போது கண்டலடி என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புலிகளின் முன்னணி நிலைகள் மீது கருணாவின் துணையாளர்களான ~ஐpம்கெலி தாத்தா| தலைமையில் ஒரு தாக்குதலும், ~றொபேர்ட்| தலைமையில் ஒரு தாக்குதலும் இடம்பெற்ற போதும் இரு தாக்குதலும் முறியடிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பிலிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருணாவின் அணியினர் மீதான இத்தாக்குதல்களை மட்டு-அம்பாறை மாவட்டங்களிற்கான விசேட தளபதியான ரமேஸ் அவர்களும், nஐயந்தன் படையணியின் விசேட தளபதியான nஐகத்தானும் வழிநடத்திச் சென்றனர். nஐயந்தன் படையணியான மட்டு-அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை nஐயந்தன் படையணியின் சுற்றிவளைப்பிற்குள்ளான கருணாவின் அணிகள் 120 மி.மீ மோட்டார்கள்-8 உள்ளிட்ட ஆயுதங்களை விடுதலைப்புலிகளிடம் கையளித்துள்ளன.

முன்னர் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவரான தளபதி பிரபா தற்போது கருணா அணியினர் மீதான நடவடிக்கைக்கான தாக்குதலை ஒருங்கிணைப்பதுடன், பால்சேனைக்கு அருகிலுள்ள கட்டளைப் பணியகம் மற்றும் முன்னணி அரன்களை வழிநடத்தி வருகிறார்.

puthinam.com

  • தொடங்கியவர்

22 die in LTTE onslaught on Karuna group

BY P KARUNAKHARAN

DH NEWS SERVICE, COLOMBO:

At least 22 cadres were killed and several injured when armed cadres of the Tamil Tiger rebels launched a pre-dawn military onslaught to retake vast stretch of areas under renegade rebel Colonel Karunas control in the Eastern Batticaloa district. The fighting erupted shortly after Thursday midnight on the Verugal river banks when Karunas loyalists fired on the LTTE cadres who tried to infiltrate into the rebel leaders areas. Both sides have used long range guns and mortars to defend their positions.

Succeeding in punching a hole in Karuna's Forward Defence Lines (FDLs), the elite fighting formations of the LTTE leadership have advanced into Vakarai, where Karuna's operational headquarters with command and communication infrastructure is located. Pro-LTTE Tamilnet website quoting the residents of the area reported that the infantry formations of the LTTE, spearheaded by crack commando units of the LTTE, backed by heavy artillery fire, were now consolidating their positions in Paatchenai, about 6 km north of Vakarai, having crossed the Verugal river before dawn.

More than three hundred young fighters of the Karuna group who were defending the southern side of the river and the interior surrendered without fight, the Tamilnet quoted an LTTE commander who led one of the advance teams that crossed the Verugal River as saying. Several heavy mortars too were surrendered.

A large sea side base of the Karuna Group in Kathiraveli, about 12 kilometres north of Vakarai, has also fallen into the hands of the advancing LTTE units without much resistance.

According to a PTI report, the rebels belonging to the Karuna faction were forced to pull back from key points in eastern Sri Lanka as fighting intensified. Fighters belonging to V Muralitharan, better kno-wn as Karuna, the defector who left the main Tamil Tiger group in March, were retreating as the fighting grew worse and some 4,000 civilians began fleeing the east.

  • தொடங்கியவர்

புலிகளுடன் மட்டும் பேசக் கூடாது, அரசுக்கு ஹெல உறுமய தெரிவிப்பு!

சமாதானப் பேச்சில் தாமும் பங்குபற்றுவது அவசியம் என உரிமை கோருகிறார் கருணா

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளு டன் சமாதானப் பேச்சுக்களைத் தொடங்கப் போவதாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்றுமுன்தினம் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் உறுதி அளித்தார். புலிகளுடன் மட்டும் அரசு பேசக் கூடாது என்று நாடாளுமன்றத் தில் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட பௌத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய உரத்த குரலில் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கேணல் கருணா, கிழக்குத் தமிழ் மக்களும் பிரச்சினையில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதற்குச் சமாதானப் பேச்சுக்களில் அவர்களின் பிரதிநிதியாகத் தாமும் பங்குகொள்ளவேண்டியது அவசியம் என்று உரிமை கோரியிருக்கின்றார். ஐலண்ட|| ஆங்கிலப் பத்திரிகைக்கு கருணா வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு உரிமை கோரி யிருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோ, புலிகளின் வன்னி நிர்வாகமோ கிழக்குத் தமிழ் மக்கள் மீது தீர்ப்பு எதையும் திணிக்க முடியாது. அவர்கள் சார்பில் பேசும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. எனவே, நாங்களும் எதிர்காலத்தில் நடக்கும் சமாதானப் பேச்சுக்களில் கிழக்குத் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டு அவர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகள் க~;ட ந~; டங்களுக்குத் தீர்வுகாண வேண்டும்|| என்று கருணா தனது செவ்வியில் தெரிவித்துள்ளார் என்று ஷஷஐலன்ட்|| ஆங்கிலப் பத்திரிகை தனது நேற் றைய இதழில் செய்தி வெளியிட்டி ருக்கிறது. ஹெல உறுமய கட்சியைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சியின் ஆதரவு தனக்குக் கிடைக்காதா என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கலாய்த்துக் கொண்டு இருக்கி றது. சிறுபான்iமை அரசாங்கத்தை அமைக்கும் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் தனக்குப் பெரும் பான்மை உண்டு என்று காட்டுவதற்குக் ஹெல உறுமயவின் ஆதரவு பெரும் உதவியாக இருக்கும். இந்த நிலை யில் விடுதலைப் புலிகளுடன் அரசாங் கம் நடத்த இருக்கும் உத்தேச சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் பாணியில் கருத்துத் தெரிவித்திருக்கிறது ஹெல உறுமய. இனப்பிரச்சினை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த நோக்கத்தில் பேச்சு நடத்த ஜனாதி பதி முற்படுகிறார் என்பது குறித்து நன்கு ஆராய வேண்டியிருக்கிறது. இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேச்சுக் களை நடத்தக் கூடாது. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அமைப்புக்களுடனும் வட்ட மேசை மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் ஹெல உறுமய கூறியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் எவ்வகையிலாவது உடன்படிக்கை செய்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி பேச்சு நடத்த முற்பட்டால் அதனைத் தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

Thanx: Uthayan

  • தொடங்கியவர்

அதிருப்தி படை தளபதி கருணா கதி என்ன? தலைமை முகாமை பிரபாகரன் படை சுற்றி வளைத்து தாக்குதல்

கொழும்பு,ஏப்.10- கருணா தலைமை முகாமை பிரபாகரன் படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்காக ஆயுதபோர் நடத்தி வரும் விடுதலைபுலிகள் இயக்கத்தில் கடந்த மாதம் பிளவு ஏற்பட்டது.

பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு அம்பாறை பகுதி தளபதியாக முரளீதரன் என்ற கருணா இருந்தார். அவரது தலைமையின் கீழ் ஏறத்தாழ 6 ஆயிரம் புலிகள் உள்ளனர். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அதனால் தனது தலைமையிலான புலிகள் தனித்து இயங்கப்போவதாகவும் கடந்த மாதம் கருணா அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து கிழக்கு பகுதி புலிகள் தளபதி பொறுப்பில் இருந்து கருணாவை நீக்கிவிட்டு ரமேஷ் என்பவரை பிரபாகரன் நியமித்தார். கருணா புலிகள் இயக்கத்துக்கு தொடர்பு இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தலாம் என்று பொதுமன்னிப்பும் அளித்தார். அதை கருணா ஏற்கவில்லை.

கருணா துரோகி. அவர் ஒழித்துக்கட்டப்படுவார். அவருடன் இருக்கும் வீரர்கள் சரண் அடைந்துவிட வேண்டும் என்றும் பிரபாகரன் எச்சாpத்தார். ஆனால் கருணா தனது பிடியைவிடாமல் இருந்தார்.

இதனால் இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் எந்த நேரத்திலும் பிரபாகரன் படைக்கும், பிhpந்து சென்ற கருணா ஆதரவாளர்களுக்கும் இடையே போர் மூளலாம் என்ற நிலை இருந்தது.

இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிந்ததை தொடர்ந்து இந்த போர் மூண்டுவிட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிரபாகரனின் கமாண்டோ படை யின் ஒரு பிhpவு திhpகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் ஆற்றங்கரையை அடைந்தது. பயங்கர ஆயுதங்கள் தாpத்திருந்த அந்த படை வெருகல் ஆற்றில் இறங்கி தென் பகுதியில் உள்ள மட்டக்களப்பில் புகுந்தது. இது அதிருப்தி தளபதி கருணாவின் கோட்டை ஆகும். பிரபாகரன் படையினர் பீரங்கி, ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்தனர். பிரபாகரன் படையினரை பார்த்ததும் கருணா ஆதரவாளர்கள் சுடத்தொடங்கினர். இருதரப்பினருக்கும் இடையே 2 மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

வெருகல் ஆற்றங்கரையில் நடந்த சண்டையில் இருதரப்பிலும் 1000 வீரர்களுக்கு மேல் ஈடுபட்டனர். இருதரப்பில் ஏராளமானவர்கள் இறந்ததாக வும், காயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. 9 பேர் இறந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. பிரபாகரன் தரப்பில் காயம் அடைந்தவர்கள் வளச்செனாய் மருத்துவமனையிலும், கருணா தரப்பில் காயம் அடைந்தவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனை யிலும் அனு மதிக்கப்பட்டு உள்ளனர்.

பிரபாகரன் தரப்பில் இறந்தவர்களில் 2பேர் பெண் புலிகள் என்றும் அவர்களது உடல்களை கருணா ஆதரவாளர் அப்புறப்படுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சண்டையின் இடையே அப்பாவி மக்களும் சிக்கி காயமடைந்து உள்ளனர்.

கருணா தரப்பில் காயம் அடைந்தவர்களை ஏற்றி வரச்சென்ற ஒரு ஆம்புலன்சின் டிரைவர் குண்டு வீச்சில் இறந்தார். அவரது உடலை மீட்க செஞ்சிலுவை சங்கத்தின் உதவியை கருணா தரப்பு கோhpயது. பாதுகாப்புக்கு இரு தரப்பிலும் உத்தரவாதம் இல்லாமல் அந்த பணியில் இறங்க மாட்டோம் என்று செஞ்சிலுவை சங்கம் மறுத்து விட்டது.

கருணா படை 300 பேர் சரண்

பிரபாகரன் படை வெருகல் ஆற்றை கடந்ததுமே அங்கு இருந்த கருணா ஆதரவு படையினர் 300 பேர் எந்தவித எதிர்ப்பும் இன்றி சரண் அடைந்துவிட்டதாக புலிகளின் இணையதளம் செய்தி வெளியிட்டது. கருணாவின் சில முகாம்கள் பிரபாகரன் படை வசமாகி விட்டதாக தொpகிறது.

கருணா தளபதி காயம்

இந்த சண்டையில் கருணா ஆதரவு தளபதி ஜெயம் என்பவர் காயம் அடைந்தார். கருணாவின் சகோதரரும் மற்றெhரு தளபதியுமான வெற்றி தப்பி ஓடிவிட்டார்.

கருணா தரப்பை சேர்ந்த செய்தி தொடர்பாளர் வரதன் கூறும்போது பிரபாகரன் படையினர் எங்கள் பகுதிகளில் ஊடுருவி முன்னேறிவிட்டார் கள் என்று ஒப்புக்கொண்டார்.

மட்டக்களப்பு முழுவதும் பரவலாக இருந்த கருணா ஆதரவாளர்கள் இப்போது பிரபாகரன் படை கொடுத்த நெருக்கடியால் பச்சென்னை என்ற இடத்தில் கூடி தங்கள் நிலையை பலப்படுத்திக் கொண்டு இருக்கிறhர்கள்.

கருணாவின் தலைமையகம் வரகரை என்ற இடத்தில் உள்ளது. அந்த தலைமையகத்தை நோக்கி பிரபாகரன் படை முன்னேறி செல்கிறது.

பிரபாகரன் - கருணா படை மோதலை தொடர்ந்து இலங்கை ராணுவம் முழு உஷhர் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சண்டை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு பரவி விடாமல் தடுக்க அவர்கள் விழிப்பாக இருக்கிறhர்கள்.

கருணாவின் தலைமையகத்தை பிரபாகரன் படை பிடித்துவிட்டால் கருணாவின் ஆதரவாளர்கள் அனைவரும் சரண் அடைந்து விடுவார்கள். அத்துடன் போர் முடிந்துவிடும்.

கருணா கதி என்ன?

கருணாவின் தலைமையகத்தை பிரபாகரன் படை நெருங்கிவிட்டதாகவும் அதை சுற்றி வளைத்து அடுத்து தாக்குதலை தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. அதிருப்தி தளபதி கருணா எங்கு இருக்கிறhர், அவரது கதி என்ன என்பது தொpயவில்லை.

Thanx: Dinakaran

  • தொடங்கியவர்

சண்டை நடக்கும் மட்டக்களப்பில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீட்டை காலி செய்து ஓட்டம்

கொழும்பு, ஏப். 10- சண்டை நடக்கும் மட்டகளப்பு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஈழ தமிழர்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பு தேடி ஓடுகிறhர்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிhpந்த மட்டக்களப்பு அம்பாரை பகுதி அதிருப்தி தளபதி கருணாவை ஒழிக்க பிரபாகரனின் படை போர் தொடங்கி உள்ளது அல்லவா?

பிரபாகரனின் அதிரடி கமாண்டோ படையினர் பயங்கர ஆயுதங்களுடன் மட்டக்களப்பில் புகுந்து கருணாவின் படையினருடன் போhpட்டு வருகிறhர்கள்.

இந்த போhpல் பொதுமக்களும் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிறhர்கள். இது வரை 2 அப்பாவிகள் பலியாகி விட்டனர். பலர் குண்டு காயம் அடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சண்டை நடக்கும் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பு தேடி வேறு இடங்க ளுக்கு ஓடுகிறhர்கள்.

இதை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் தொpவித்தனர். வீடுகளை காலி செய்தவர்கள் பள்ளிகள், அரசு கட்டிடங்களில் தஞ்சம் புகுந்து உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினர் விநியோகித்து வருகிறhர்கள். மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் தமிழர் களின் நிலை பாpதாபமாக இருக்கிறது.

இலங்கையில் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் நார்வே நாட்டு தலைமையி லான கண்காணிப்பு படை விடுதலை புலிகள் இடையே நடக்கும் போhpனால் கவலை அடைந்து உள்ளது. அந்த படையை சேர்ந்த அதிகாhp ஆக்னஸ் கூறுகையில், மட்டக்களப்பில் உருவாகியுள்ள சூழ்நிலையை கண்காணித்து தகவல்களை சேகாpத்துக் கொண்டு இருக்கிறேhம். இந்த மோதலின் விளைவால் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் நிலை தான் கவலை அளிக்கிறது என்றhர்.

கண்காணிப்பு படை அதிகாhpகள் இலங்கை ராணுவ அதிகாhpகளுடன் இந்த மோதல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.

Thanx: Dinakaran

  • தொடங்கியவர்

2800 People Displaced Due to Fighting-UNHCR

Bandula Jayasekara in Colombo, SLT 10.00 A.M Saturday 10 April. Office of the United Nations High Commissioner for Refugees (UNHCR) in Colombo says 2800 people have been displaced so far due to fighting between the Prabhakaran and Karuna factions of the LTTE yesterday. UNHCR spokesman John Breusch told The Lanka Academic that people had walked 17 km to a school in Mankerny and stayed at a school last night. UNHCR spokesman said " We are trying to assess the situation in the area now. We will be sending non-food relief items such as shelter to the displaced people."

Heavy fighting broke out yesterday between the two factions yesterday and unconfirmed reports said that nearly 40 cadres and number of civilians were feared killed. No fighting was reported since late yesterday.

  • தொடங்கியவர்

வாகரை வரை தடையின்றி முன்னேற்றம்

கருணாவின் பிரதேசத்துக்குள் புலிகள் ஊடுருவிப் பாய்ச்சல்

எதிர்த்தவர்கள் 8 பேர் காயம், அவர்களில் நால்வர் மரணம்

ஈடுகொடுக்க முடியாமல் பல நு}ற்றுக்கணக்கானோர் சரண்

விடுதலைப் புலிகள் படையணிகள் மட்டக்களப்புக்கு வடக்கே யுள்ள வெருகல் ஆற்றைக் கடந்து கருணாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நேற்று அதிகாலை ஊடுருவி அதிரடித் தாக்குதல் நடத்தின. தாக்குதலில் கருணா தரப்பினர் 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் நால்வர் இறந்துவிட்டனர் என அறிவிக்கப்படுகிறது. முன்னேறி வரும் புலிகள் படையணி கள் வாகரையை அடைந்தன என்று பிந்திக் கிடைத்த தகவல் கள் தெரிவித்தன. புலிகள் கருணாவின் பகுதிக்குள் புகுந்து கனரக பீரங்கிகள் சகிதம் அதிரடித் தாக்குதல் நடத்தியதில் கருணா தரப்பின் வாகரைப் பிரதேசத் தளபதி ஜெயமும் காயமடைந்தார். அவரைப் புலிகள் கைது செய்திருக்கின்றனர் என்று ஒரு தகவல் தெரிவித்தது. தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் கருணாவின் எல்லைப் பாதுகாப்புக்கு நிறுத் தப்பட்டவர்களும், புதிதாக அனுப்பப்பட்டவர்களுமாக பல நு}ற்றுக்கணக்கானோர் சரணடைந் தனர். தம்மிடம் இருந்த கனரக பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை அவர்கள் கையளித்தனர். தாக்குதல் நடத்திய புலிகள் முதலில் கருணாவின் கதிரவெளி தளத்தைக் கைப்பற்றித் தம்வசமாக்கினர். அந்தத் தளத்துக்குப் பொறுப்பாக இருந்தவர் மார்க்கான் ஆவார். அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மாங்கேணியிலிருந்து வெருகல் வரையான பகுதிக்குப் பொறுப்பாக இருப்பவர் ரெஜி என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி சிவனேசத்துரை. இவர் கருணாவின் மூத்த சகோதரர். வெருகலில் அதிகாலையில் தாக்குதல் ஆரம்பமானபோது ரெஜி முதலில் வாகரைக்கு ஓடித்தப்பிவிட்டார். அவரை முற்பகலில் அங்கே தாம் கண்டனர் என்று வாகரை வாசிகள் தெரிவித்தனர். விடுதலைப் புலிப் போராளிகள் நேற்று முற்பகல் வாகரைக்கு மிகச் சமீபமாக உள்ள பால் சேனையில் தமது நிலையைப் பலப்படுத்திக்கொண்டிருந்தனர

  • தொடங்கியவர்

SRI LANKA REBEL CLASH

SRI_LANKA_REBEL_CLAS1.jpg

Tamil Tiger rebels wait to move and set up a new defense line after they retreated from their position from the Verugal Ferry in rebel controlled Tamil Tiger area at Palinchankaly, eastern Sri Lanka on Friday, April 9, 2004. Rival Tamil Tiger guerrilla factions fought with mortars and guns Friday, in a battle that killed at least nine people, wounded 20 and imperiled Sri Lanka's fragile hopes for peace.

  • தொடங்கியவர்

Sri Lanka Rebel Chief Pulls Back Fighters

By DILIP GANGULY

The Associated Press

KAJUWATTE, Sri Lanka - A renegade rebel commander has pulled back thousands of fighters to defend his base in eastern Sri Lanka after the main rebel faction attacked him with heavy mortar and gun fire, a military official and witnesses said Saturday.

Fighting on Friday between the Tamil Tiger rebel factions, which killed at least nine people and wounded 20, was the worst since a 2002 truce halted the country's 19-year civil war and threatened the fragile peace that has enveloped the nation.

Breakaway commander Vinayagamoorthy Muralitharan, also known as Karuna, recalled 2,000 of about 6,000 fighters to his Thoppigala base to set up defenses, a military official said on condition of anonymity.

Thoppigala is a jungle area in Batticaloa, 135 miles east of Colombo.

To reach Thoppigala, the main faction would have to cross through fortified government-held areas, thereby threatening Sri Lanka's fragile cease-fire, the official said.

The Norway-brokered cease-fire bars the rebels from entering government-held areas. Any attempt to carry weapons through government territory could provoke a military response, the official warned. The closest government territory is just six miles from Thoppigala, he added.

The Verugal River area - scene of Friday's fighting - was calm after the fighters pulled back and there were no signs of tensions Saturday, with people moving about and doing their usual work.

However, the military warned that both sides had planted Claymore mines - remotely detonated anti-personnel devices - on trees, bushes and bridges.

After hours of mortar and machine-gun fire Friday, about 500 fighters from the breakaway group - including women and teenage boys and girls - withdrew from the area, claiming they were repositioning, not retreating.

"About 1,000 ... people came and attacked us, so this is a tactical withdrawal and we are going to set up our new defense line," S. Kumar, a senior commander of the breakaway group, told The Associated Press.

"We will fight to the last," said Kumar, carrying a light machine gun.

The two sides had squared off at the river since Karuna announced the schism on March 3 in a dispute over regional rivalry and political strategy.

For two decades the Tamil Tigers fought government troops in a bloody separatist conflict which has claimed an estimated 65,000 lives.

Amid fears that the peace process could be doomed if government troops are drawn into the fighting, President Chandrika Kumaratunga ordered her commanders to help evacuate rebel casualties from both sides, but not to interfere in their conflict, an official in her office said.

"We don't want to get dragged into this," Defense Secretary Ciril Herath told The AP after an emergency meeting with European cease-fire-monitors in Colombo. "We are watching the situation very closely."

The army positioned men along the roadways in the region and along the sea cliff to prevent any landing by the mainstream Tigers at Panichachankani, where refugees were being cared for by the international relief organizations UNICEF and OXFAM.

On April 2, a political alliance led by Kumaratunga, who has taken a tough line on the rebels, won the most seats in parliamentary elections, defeating the party led by former Prime Minister Ranil Wickremesinghe, who initiated the most recent round of peace efforts.

Kumaratunga, blinded in one eye by a Tiger suicide bomber in 1999, had accused her rival of being too soft on the rebels.

Last Monday, the Tigers warned they would go back to war with the government if their demands for sweeping autonomy in Tamil-majority northeast Sri Lanka were not met. They say the minority Tamils face widespread discrimination from the ethnic Sinhalese majority.

  • தொடங்கியவர்

வக்கரையை நோக்கி விடுதலைப் புலிகள் படை!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணாவின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்க வியாழன் இரவு தாக்குதலை தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள், கருணாவின் முக்கிய முகாம் அமைந்துள்ள வக்கரையை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இலங்கையின் வட பகுதியையும், கிழக்குப் பகுதியையும் பிரிக்கும் வெறுகல் ஆற்றைக் கடந்த விடுதலைப்புலிகளின் படையின் மீது, கருணாவின் ஆதரவாளர்கள் நேற்று இரவு நடத்திய இரண்டு தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக புலிகள் ஆதரவு இணைய தளமான தமிழ் நெட் கூறியுள்ளது.

1997 மற்றும் 99ம் ஆண்டுகளில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலின் போது அதற்கு கடும் பதிலடி கொடுத்து ஆனையிரவு ராணுவ முகாமை கைப்பற்றிய தளபதி ஜெயந்தன் தலைமையிலான (?) சக்தி வாய்ந்த படைப்பிரிவு இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் நெட் கூறியுள்ளது.

நேற்று நடந்த தாக்குதலில் விறுகல் ஆற்றங்கரையில் சிக்கிக் கொண்ட கருணா குழுவினர் சரணடைந்தது மட்டுமின்றி தங்கள் வசம் இருந்த 120 எம்எம் பீரங்கிகளை ஒப்படைத்துவிட்டதாகவும் புலிகள் செய்தி கூறுகிறது.

ஜெயந்தன் படைப்பிரிவினருடன் மட்டக்களப்பு, அம்பாரை பகுதிகளில் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் தலைமையிலான படைகளும் கருணாவின் துணைத் தளபதியாக இருந்த பிரபா என்பவர் தலைமையிலான படைகளும் வக்கரை நோக்கி முன்னேறி வருவதாக அச்செய்தி கூறுகிறது.

இந்தப் போரில் இதுவரை எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் ஏதும் கிட்டவில்லை. இதற்கிடையே இலங்கையின் கிழக்குப் பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த தனது பாதுகாப்புப் படைகளின் தளபதிகளை மட்டக்களப்பிற்கு செல்லுமாறு அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.

கருணா குழுவினர் மீது விடுதலைப் புலிகள் நடத்தி வரும் தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று இலங்கை அரசு கருதுவதாக புலிகளிடம் தெரிவிக்குமாறு நார்வே தூதுக்குழுவை அதிபர் சந்திரிகா கேட்டுக் கொண்டுள்ளார்.

Thanx: Webulagam

  • தொடங்கியவர்

தேர்தல் முடிவுகள் தமிழினத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கின்றதா?

மிகப் பெரிய அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வெற்றியை, தமிழர் பாரம்பரிய பிரதேசங்களில் உறுதி செய்துள்ளதால், தமிழினத்திற்கு இது ஒரு பாரிய வெற்றியாகக் கணிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தத் தேர்தல் முடிவுகளும் அதன்பின் உருவாகியுள்ள ஆட்சி நிலைப்பாடுகளும், தமிழினத்தின் வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளனவா என்று ஒருமுறை ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

மஹிந்த ராஐபக்ஷ பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே லக்ஷ்மன் கதிர்காமர் தான் பிரதம மந்திரி என்று பரவலாக நம்பப்பட்டதுடன், ஐனாதிபதி கூட, அவரது பெயரையே முதலில் முன்மொழிந்தாலும், பின்னர் நீண்ட நேர ஆலோசனைகளை நடாத்தி, மஹிந்தவை பிரதமராக அறிவித்தார்.

பிரதம மந்திரி பதவியின் பலம்

உண்மையில், ஐனாதிபதியின் கட்சி தவிர்ந்த பிறிதொரு கட்சியின் தலைமையில் பாராளுமன்றம் இருந்த காரணத்தினாலேயே, பிரதம மந்திரி என்ற பதவி கடந்த இரண்டு ஆண்டுகளாக முக்கியத்துவம் பெற்றது. அதற்கு முன்னர், ஆளும் கட்சியிடமே ஐனாதிபதி, பிரதம மந்திரி என்ற இரு பதவிகளும் இருந்த போது, பிரதம மந்திரியாக யார் இருந்தார் என்று கூட பலருக்குக் தெரியாது. உண்மையில், ஐனாதிபதி பதவியேற்றதும், பிரதம மந்திரியாக தனது தாயார் சிறீமாவோ பண்டாரநாயக்காவையே நியமித்திருந்தார். அவர் அந்தக் கதிரையில் ஒரு கௌரவ பொறுப்பாளராக உட்கார்ந்திருந்தாரோ ஒழிய, பாராளுமன்றத்தை ஆட்டிப்படைக்கும் பலம் உட்பட, நாட்டின் ஆட்சி சார்ந்த அத்தனை முடிவுகளையும் எடுக்கும் பலம் ஐனாதிபதிக்கே இருக்கிறது.

Nஐ.ஆர்.ஐயவர்த்தன ஐனாதிபதியாக இருந்த காலத்தில், உருவாக்கப்பட்ட பலம்பொருந்திய சர்வ அதிகாரங்களையும் உள்ளடக்கிய ஐனாதிபதிப் பதவிக்கு முன்னே, பிரதமர் பதவி ஒரு செல்லாக் காசுதான். திடிரென ஐனாதிபதியின் கட்சி தவிர்ந்த இன்னுமொரு கட்சி பாராளுமன்றத்தை அதிகாரம் செய்கின்ற நிலை வந்தபோதுதான், Nஐ.ஆர்.ஐயவர்த்தன அவரது காலத்தில் தனது கதிரையின் பலத்தை உறுதிசெய்ய என்னவெல்லாம் செய்திருந்தார் என்பது பலருக்குப் புரிய ஆரம்பித்தது.

எதிர்க்கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.முன்னணி, பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்றபோதும், ஆரம்பத்திலிருந்தே ஐனாதிபதியின் சர்வ அதிகாரத்திற்கு முன்னே, ஒவ்வொரு அசைவிற்கும் ஐனாதிபதியின் தலையசைப்பை எதிர்பார்த்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். ஒரு கட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் கேட்டபோதுகூட, ஐனாதிபதியின் பலத்திற்கு சார்பாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.

அமைச்சுக்களைப் பறித்தமை, தேசிய ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தியமை, பாராளுமன்றத்தைக் கலைத்தமை, முப்படைத் தளபதிகளை தனது நேரடித் தலைமையில் வைத்திருந்தமை உட்பட, ~நாட்டின் இறைமைக்குக் குந்தகம்| நிகழ்வதாகக் கூறி, எதைச் செய்வதற்கும் ஐனாதிபதி என்ற கதிரைக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், பிரதம மந்திரியாக யார் இருந்தாலும், அவர் எடுக்கும் எந்தவொரு முடிவையும் காரணம் கூறாது தடுத்து நிறுத்தும் உரிமை கூட ஐனாதிபதியிடமே இருந்தது.

இப்போது நிலமை வேறு. ஆட்சி மீண்டும் ஐனாதிபதியின் கட்சியிடமே வந்துவிட்டது. ஐனாதிபதியின் கட்சியிடம் பாராளுமன்றம் இருக்கும்வரை, பிரதம மந்திரியின் ஆசனம் ஒரு வெற்றுக்கதிரையே. கிட்டத்தட்ட இந்தியாவின் ஐனாதிபதி கதிரையும் சிறீலங்காவின் பிரதம மந்திரி கதிரையும் ஒரே தகுதியைக் கொண்டது தான். ஆக, பாராளுமன்றத்தை தலைமை தாங்கி நடத்துகின்ற வாய்ப்பு ஒன்று இருந்தாலும், அங்கே ஐனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே எந்த முடிவுகளும் எடுக்கப்படுவதோடு, கருத்துக்களும் முன்வைக்கப்படும். பாராளுமன்றத்தை அவசர அவசரமாகக் கலைத்து, பொதுத்தேர்தலொன்றை அறிவித்ததற்குக் கூட அதுவே முக்கிய காரணம்.

பொதுத்தேர்தலுக்கான காரணம்

ஐனாதிபதி சந்திரிகாவின் கட்சித் தலைமையில் பாராளுமன்றமும் இருந்தபோது, எதிர்க்கட்சியினர் மக்களின் எதிர்ப்பலையை எழுப்பியதன் மூலம், பாராளுமன்றத்தில் தொடர்ச்சியான குழப்பம் ஏற்பட்டபோதே, வேறுவழியின்றி ஐனாதிபதியாக இருந்த சந்திரிகா, பொதுத் தேர்தலை அறிவிக்க நேர்ந்தது. தேர்தலில் தோற்றதும், சரியான தருணத்திற்காகக் காத்திருந்து, எப்படியும் ஆட்சியைத் தனது கட்சியின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் மட்டுமே பொதுத் தேர்தலுக்காக வியூகமமைத்து Nஐ.வி.பி.யுடன் கூட்டணி அமைத்தார்.

இப்போது அவர் நினைத்தபடியே அவரது கட்சித் தலைமைக்குக் கீழே ஆட்சி முழுமையாக வந்துவிட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி, தனக்கு அமைச்சிலுள்ள ஒருவரை பிரதம மந்திரியாக நியமிப்பதன் மூலம், விரைவில் ஐனாதிபதி ஆட்சிக்கு முடிவுரை எழுதி, பிரதம மந்திரியின் கதிரைக்கு அதிக பலத்தைக் கொடுக்கும் அதே நேரத்தில், ஆளும் கட்சியின் தலைவர் என்ற வகையில், பிரதம மந்திரி ஆசனத்தில் தானே அமர்வதுதான் தற்போதைய நோக்கம். எள் என்றால் எண்ணையாக் காலடியில் வந்து நிற்கும் கதிர்காமரை பிரதமர் கதிரையில் இருத்தி விட்டால், வேலையை சுலபமாக முடிக்கலாம் என்று சந்திரிகா விரும்பினாலும், எதிர்ப்புக் கிழம்பியபோது, ஐனாதிபதி ஆட்சியை மாற்றியமைத்து பிரதம மந்திரி ஆட்சிக்கு குறிப்பிட்ட மாதத்திற்குள் ஆயத்தம் செய்வதற்கு இணங்கும் ஒருவரை மட்டுமே நியமிக்கும் நிலைப்பாடு சந்திரிகாவிடம் இருந்தது. அதை நிறைவேற்றக்கூடிய ~தாய் சொல்லைத் தட்டாத| அடுத்தவரான மஹிந்த அந்தக் கதிரைக்கு வழிமொழியப்பட்டார்.

அந்த விசுவாசமான குழந்தை, பதவிப் பிரமாணம் செய்த கையுடன், மறக்காது தனது விசுவாசத்தை வெளிக்காட்டியது. ஐனாதிபதி ஆட்சியை மாற்றியமைத்து, சந்திரிகாவை பாராளுமன்றத்தின் பிரதம மந்திரிக் கதிரையில் இருத்துவதே எனது முதல் கடன் என்று தெட்டத்தெளிவாக உள்ளதைச் சொல்லி விட்டது அந்த எஐமானனுக்கு விசுவாசமான ஊழியன்.

தமிழ் கூட்டமைப்பின் வெற்றி மூலம் சாதிக்க விரும்பியதென்ன?

சரி. விசயத்திற்கு வருவோம். எப்படியும் சந்திரிகா கூட்டணியைவிட, ரணில் கட்சி சற்று அதிகமான ஆசனங்களைப் பெறும் என்ற நம்பிக்கையுடன், அவருடன் கூட்டணி இணைந்து ஆட்சியமைக்க தமிழ்க் கூட்டமைப்புக்குப் பலம் சேர்ப்பதே எமது திட்டமாக இருந்தது. இறுதிவரை, ஐ.தே.முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து, பாராளுமன்றத்திற்கான பெரும்பான்மைப் பலத்தை இலகுவாக நிரூபிப்பார்கள் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஐ.தே.மு.வுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து 113 ஆசனங்களுக்கு அதிகமாகப் பெறும் என்பதில் இருவேறு கருத்து யாருக்கும் ஆரம்பத்தில் இருந்ததில்லை. இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக, வடக்கு, கிழக்கு, தெற்கில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள், சில நிரந்தர மாற்றங்களை உருவாக்கி விட்டன.

கிழக்கின் குழப்பங்கள், முஸ்லிம் கட்சிகளுக்கு ஓரிரு ஆசனங்களை அதிகமாகக் கொடுக்க வழிசெய்தன. தெற்கில், ஹெல உருமயவின் திடிர் உதயம், ரணில் கனவில் மண்அள்ளிப் போட்டன. மலையகத்தின் உட்கட்சிப் பூசல்கள், சில ஆசனங்கள் கைதவறிப் போக வழிசமைத்தன. வடக்கில், ஆனந்தசங்கரியின் குழப்பத்தால், வெறும் இரண்டாயிரம் வாக்குகள் குறைந்ததால் ஒரு ஆசனம் ஈ.பி.டி.பி.யிடம் பறிபோனது. ஐக்கிய தேசிய முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து 104 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், ஒன்பது ஆசனங்கள் சிக்கலை உருவாக்கின.

முஸ்லிம் காங்கிரசின் 5 ஆசனங்களும், மலையகக்கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் இரு ஆசனங்களும் அடங்கலாக 111 ஆசனங்கள் தம்வசம் உள்ள நிலையில், வெறும் இரண்டே ஆசனங்கள் குறைவான நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் வாய்ப்பை முற்றாக இழந்தது. யாழ். தொகுதியில் ஒரு ஆசனம், அம்பாறையில் ஒரு ஆசனம் உட்பட, கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஒருவரை நியமித்திருந்தால் கிடைத்திருக்கக்கூடிய ஒரு ஆசனத்தையும் இழந்த நிலையில், தற்போது சர்வசங்கடமான பாராளுமன்றப் பிரவேசமே காத்திருக்கிறது.

தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன், முழு ஆசனங்களையும் பெற்று, ஆட்சியமைக்கும் கட்சியின் முடிவை நிர்ணயிக்கும் பலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வரவேண்டும் என்பதே உள்ளுர எமது திட்டமாக இருந்தபோது, கற்பனை பண்ணிக்கூடப் பார்க்காத சந்திரிகா வெற்றி, பொங்கி வரும்போது தாழி உடைந்த கதையாகிப் போனது.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறுகட்சிகளின் விழுக்கு

பாராளுமன்றத்தில் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், ஆட்சியதிகாரத்தை நிர்ணயிக்கும் வலிமையுள்ள கட்சியாக பாராளுமன்றம் நுழைந்தால் மட்டுமே, நாம் விரும்பும் அளவுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து, எமது இலக்கை நோக்கி நகர வாய்ப்பு உருவாகியிருக்கும்.

சந்திரிகா கட்சிக்குத் தாவவேண்டிய தேவையேற்படலாம் என்ற வியூகத்தில், இறுதி நேரத்தில் ரணில் கட்சிக்கெதிரான கருத்துக்களைப் பரவலாகத் தெரிவித்து வந்தவர் ரவூப் ஹக்கீம். முஸ்லிம் காங்கிரஸ் தற்செயலாக 8 ஆசனங்களைப் பெற்றிருந்தால், இம்முறை தேர்தலின் வெற்றி நாயகனாக ஹக்கீமே திகழ்ந்திருப்பார். அறுதிப் பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியிருக்கும். 7 ஆசனங்கள் பெற்றிருந்தால் கூட, ஈ.பி.டி.பி. கைகொடுத்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரிடம் உள்ளவை 5 மட்டுமே. அதனால், மனிதர் அடங்கிப்போய் உட்கார்ந்திருக்கிறார். (இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்தாக தயவுசெய்து எடுக்க வேண்டாம், ஹக்கீமின் தேர்தல் குறித்த நிலைப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வாதம்).

பாராளுமன்றத்தில் தனிக்குரலாக ஒலிக்க முடியுமா?

இப்போது நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல், முற்று முழுதாக ஈழத் தமிழினத்தின் அபிலாசைகளைத் தீர்த்து வைப்பதற்கு வாய்ப்பு வழங்கிய தேர்தலல்ல. மூன்றாவது பலமான கட்சியாக உருவெடுத்திக்கின்ற திருப்தியும், ஒரு தலைமையின் கீழ் ஒன்றாக நிற்கின்ற வெற்றியும் திருப்தியளித்தாலும், பாராளுமன்றத்தில் தனிக் குரலாக ஒலிப்பதற்கான பலத்தை நாம் நிஐமாகத் தவறவிட்டுள்ளோம் என்றே கருதவேண்டியுள்ளது.

இந்நிலையில், மகிழ்ச்சி தரும் விடயங்கள் சிலவும் உண்டு. குறைந்தது எட்டு ஆசனங்களையாவது தம்வசம் வைத்திருக்கும் ஹெல உருமய அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைக்க மறுக்கும் பட்சத்தில், மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாக, புதிய தேர்தலுக்கு நாள் பார்க்கும் நிலை வரும். ஹெல உருமய இணைந்து செயற்பட இணங்கும் பட்சத்தில் கூட, Nஐ.வி.பி.க்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்கனவே கருத்துமுரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிட்ட நிலையில், ஹெல உருமயவின் வருகை மேலதிக நெருக்கடிகளையே தோற்றுவிக்கும். தொழிலாளர் காங்கிரஸ் இணைவதற்கு இணங்குவதாக இருந்தால்கூட, அவர்கள் கேட்கப்போகும் முக்கிய இரு அமைச்சுக்களை ஏற்கனவே Nஐ.வி.பி. தனதாக்கிக் கொண்டுள்ள நிலையில், அதுவும் கல்லில் நாருரிக்கும் கதைதான்.

ஆக, இந்தத் தேர்தல் ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர வெற்றி தரும் தேர்தலல்ல. இன்னுமொரு தேர்தல் வரலாம், அதுவும் மிக விரைவில் வரலாம் என்று பார்க்கும்போது, ஈழத்தமிழர்கள் இன்னும் செறிவாகத் தங்கள் ஆசனங்களை உறுதிசெய்து, மலையகக் கட்சிகளை முற்றாக ஒன்றிணைத்து, பாராளுமன்றத்தின் ஆட்சிப் பீடமேறும் கட்சியைத் தீர்மானிக்கின்ற பலத்தைப் பெறுவதே, எமது அபிலாசைகளை வென்றெடுக்கும் நிரந்தரப் பலத்தைத் தரும்.

நன்றி - காவலூர் கவிதன்/தமிழ்நாதம்

  • தொடங்கியவர்

More than 11,000 civilians flee Sri Lanka fighting

(AFP)

10 April 2004

TRINCOMALEE, Sri Lanka - More than 11,000 Sri Lankans have fled their homes since the Tamil Tigers launched an offensive on a breakaway rebel, officials said on Saturday, as relief workers used a lull in fighting to hand out relief supplies.

At least two civilians were reported killed and many more wounded since the main Tamil Tiger group launched a major offensive Friday to re-take territory held by a renegade regional commander just south of here, officials said.

The main civil administrator in the Batticaloa district, C. Punyamoorthy, estimated the number of people who fled their homes in the troubled areas was in excess of 11,000.

About 4,000 have moved to school buildings, but others have gone to safer areas to live with their friends or relatives, Punyamoorthy said. We are making arrangements to provide them with rations for three days.

The International Committee of the Red Cross (ICRC) said it had begun handing out emergency relief supplies such as plates, cups and other cooking utensils.

We are getting manpower from the local Red Cross society to help with the distribution, ICRC spokesman Sukumar Rockwood said amid a lull in fighting.

Military sources said only sporadic firing was heard overnight after intense battles Friday afternoon near the coastal town of Vakarai, which appeared to have fallen to the main rebel group.

The defence ministry said the new government considered the break out of factional fighting a violation of a truce arranged by peace broker Norway in February 2002 between the government and the main leadership of the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

It is intended to inform the Norwegian facilitators to convey to the LTTE that this is a violation of the ceasefire agreement and the government expects to take up this issue with the LTTE leadership, a ministry statement said.

The President (Chandrika Kumaratunga) directed the chief of defence staff and service commanders to visit the area and take all necessary steps to enforce law and order, the ministry statement said.

It was not immediately clear how security forces could do so as the rebel fighting was concentrated in an area where government forces have no control.

The renegade leader, V. Muralitharan, better known by his nom de guerre Karuna, withdrew his fighters in the face of an onslaught of artillery, mortar bombs and automatic assault rifles, military sources said.

Karuna has said nine of his fighters were killed in the battles.

Aid workers and medical staff said two civilians were killed: an ambulance driver and a paramedic.

Seven child soldiers were among 15 people treated at two hospitals in Batticaloa, south of the Trincomalee port, doctors said. The Tigers have long faced international criticism for using underage fighters.

The main LTTE leadership based in northern Sri Lanka has vowed to get rid of Karuna who on March 3 broke away from the Tigers saying the LTTE ignored the interests of Tamils in the east.

The guerrillas are not known for tolerating dissent and previous challengers to the leadership of Tiger supremo Velupillai Prabhakaran, 49, had been eliminated ruthlessly.

The internecine fighting broke out a week after national elections that were narrowly won by Kumaratungas Freedom Alliance, which includes hard-liners opposed to concessions to the rebels.

Kumaratunga was due to induct a new cabinet of ministers Saturday, but she is expected to retain the key defence and finance portfolios.

Prabhakarans main LTTE this week called for a revival of peace talks with the incoming government, but warned it would return to fighting if it was not granted self-rule.

Diplomats said the fresh fighting further dimmed prospects for reviving the Norwegian-brokered peace process, which has been stalled since April.

More than 60,000 people have died in the three-decade campaign by the LTTE to set up a separate homeland for the Tamil minority.

  • தொடங்கியவர்

கருணாவின் அணி பின்வாங்கியது

ஜ தீபன் ஸ ஜ சனிக்கிழமை, 10 ஏப்பிரல் 2004, 17:25 ஈழம் ஸ

சர்வதேச செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, கருணா தமது அணியில் வைத்திருப்பவர்களை பின்வாங்கச் செய்து, தான் இருக்கும் தொப்பிக்கல காட்டுப் பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதாகத் தெரியவருகிறது.

சர்வதேச செய்தி நிறுவனமொன்றின் இலங்கை நிருபராகப் பணியாற்றும் இந்தியர் ஒருவர் கஐ_வத்தை எனுமிடத்திலிருந்து மேற்படி செய்தி நிறுவனத்திற்கு இன்று சனிக்கிழமை வழங்கிய செய்தியிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் மற்றும் நேரில் கண்டவர்களின் தகவல்களின் படியே இத் தகவலை வழங்கிய மேற்படி பத்திரிகையாளர், சுமார் 2,000 பேரை கருணா இவ்வாறு பின்வாங்கச் செய்து தனது தளத்தைப் பாதுகாப்பதில் ஈடுபடுத்தியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

வாகரைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற மோதலையடுத்து அங்கிருந்த சுமார் 500 கருணா அணியினர் அப்பிராந்தியத்தை விட்டு ஏற்கனவே வெளியேறியுள்ளதாக மேற்படி பத்திரிகையாளர் அக் குறிப்பில் எழுதியுள்ளதானது வாகரைப் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதையும், மேற்குறிப்பிட்ட 2,000 பேரில் ஏனையவர்கள் மட்டக்களப்பின் வேறு பகுதிகளிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

மட்டக்களப்பின் எந்தெந்தப் பகுதிகளிலிருந்து இந்த பின்வாங்கல் இடம்பெற்றது என்ற விபரமேதும் தெரியாத போதும், தான் தற்போது பலாத்காரமாக இணைத்து வைத்திருக்கும் போராளிகள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து தமக்கெதிரான தாக்குதல்களில் ஈடுபடும் சம்பவங்கள் வாகரையில் இடம்பெற்றதையடுத்தே இவ்வாறான நடவடிக்கையில் கருணா அணியினர் ஈடுபட்டிருக்கலாம் என பிறிதொரு செய்தி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் தமது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இவர்களை வைத்திருந்தால் தமது பாதுகாப்பை மேலும் உறுதியாக்குவதுடன், இவ்வாறான சரணடையும் சம்பவங்கள் மற்றும் தமக்கெதிராகப் போரிடும் சம்பவங்களைத் தவிர்க்கலாம் என அவர்கள் கருதியிருக்கலாம் எனவும், அத்தோடு தலைமைப்பீடத்தின் தாக்குதலை எதிர்கொள்வதற்கான திராணியற்ற நிலையைச் சமாளிப்பதற்காகவும் இது இடம்பெற்றிருக்கலாம் எனவும் இச் செய்தி குறித்துக் கருத்துத் தெரிவித்த செய்தி ஆய்வாளர் கூறியுள்ளார். இதேவேளை கருணா அணியினர் தமது பின்வாங்கலின் போது இராணுவ ட்றக் வண்டியைப் பயன்படுத்துவதை காட்டும் புகைப்படம் ஒன்றை பிறிதொரு செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது.

வாகரையில் இருந்து வெளியேறிய பொதுமகன் ஒருவர் சண்டை பற்றி ஒரு பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்த போது, 'கட்டுடல் கொண்ட - வளர்ந்த - புலிகளின் போராளிகள் அலை அலையாக வெருகல் பக்கத்திலிருந்து திரண்டு வந்துகொண்டிருந்தனர். கருணா பக்கத்தில் உள்ள சிறு பொடியன்கள் அவர்களுக்குத் தாக்குப் பிடிப்பார்களா என்று நான் நம்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார். இது கருணா போர்நிறுத்த காலத்தில் இணைந்த, புதிதாகப் பயிற்சி பெற்ற, சண்டைக்கள அனுபவமற்ற பல போராளிகளையே தன்வசம் வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

இ தற்கான காரணம் யாதெனில், ஏற்கனவே இணைந்த போராளிகள் தலைமைப்பீடத்தின் மீதான விசுவாசத்தைக் கொண்டிருப்பார்கள் என்பதோடு, தலைமைப்பீடத்தின் தொடர்பு ஏற்படும் பட்சத்தில் மீண்டும் அவர்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதே. ஏனினும் புதிய போராளிகளும் அவ்வாறான அணுகுமுறைகளையே மேற்கொள்வதால் தற்போது கருணா அணி குழப்பமானதொரு நிலையிலுள்ளது.

எனவே தனது அணியினர் மத்தியில் இருக்கும் போராளிகளின் தலைமைப்பீடத்தின் விசுவாசம் குறித்த அச்சத்தைக் கொண்டுள்ள கருணா யாரை நம்புவது, யாரை நம்பாமல் விடுவது என்ற இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதேவேளை தொப்பிக்கல மீது தாக்குதல் இடம்பெற்றால் கருணாவின் அணியின் முன்னணிப் போராளிகளே தலைமைப்பீடத்திற்கு உதவுவார்கள் என்பதையுமே களநிலமை குறித்து ஊகிக்கக் கூடியதாகவுள்ளது என மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Thanx: Puthinam

  • தொடங்கியவர்

மட்டு. நிலவரம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்த அறிக்கை

ஜ வன்னியிலிருந்து கிருபா ஸ ஜ சனிக்கிழமை, 10 ஏப்பிரல் 2004, 22:04 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவுக்கும், அவருடைய சகாக்களுக்கும் எதிரான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை முழுமையாக கீழே தருகிறோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தினால் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா, தொடர்ந்தும் தலைமைப்பீடத்திற்கு எதிரான செயற்பாடுகள், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கு உந்துதலாக தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான சக்திகளும் பின்புலத்தில் செயற்படுகின்றன.

கருணாவினால் இயக்க நடைமுறைக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட குழப்பத்தை எமது தலைமைப்பீடம் இரத்தக்களரி, உயிரிழப்புக்கள் இன்றி சுமுகமான நிலைக்குக் கொண்டுவருவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளது.

ஆயினும் போராளிகள் தமது சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறி, இயக்கத்துடனோ அன்றி பெற்றோருடனோ இணைந்து கொள்வதற்கு தடையாக இருப்பது மட்டுமல்ல, போராளிகளை அழிப்பதற்கான செயற்பாடுகளிலும் கருணா இறங்கியுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்களையும், போராளிகளையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தலைமைப்பீடம் தள்ளப்பட்டுள்ளது. எனவே கருணாவை தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சந்தர்ப்பத்;திலும், அநேக போராளிகள் எம்மிடம் திரும்பிவந்து கொண்டிருக்கிறார்கள். எனவே வீணான உயிரழப்புக்களைத் தவிர்ப்பற்கு, எஞ்சியுள்ள போராளிகளையும் இயக்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு கோருகிறோம்.

இதேவேளை, தமிழ்த் தேசியத்துக்கான போராட்டத்தில் தமது பிள்ளைகளை மனமுவந்து இணைத்துவைத்த பெற்றோர்கள் கருணாவின் துரோகச் செயல்களுக்கு தமது பிள்ளைகளை பலியாக்கிவிடாது அவர்களை மீட்டு எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறோம். என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினரால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanx: Puthinam

  • தொடங்கியவர்

இன்று பதவியேற்ற அமைச்சர்களின் விபரம்

ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ சனிக்கிழமை, 10 ஏப்பிரல் 2004, 20:39 ஈழம் ஸ

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, இன்று ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க முன்னிலையில் பதவியேற்றது.

1. பெருந்தெருக்கள் அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஐபக்ஷ

2. கைத்தொழில், சுற்றுலா, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க

3. தபால் தொலைத் தொடர்புகள் மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.nஐயரத்ன

4. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமரசிறி தொடாங்கொட

5. சுகாதார நலன் மற்றும் போஷாக்கு அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா

6. விமானப் போக்குவரத்து மற்றும் துறைமுக அமைச்சர் மங்கள சமரவீர

7. சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி

8. வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்

9. வர்த்தக வாணிப நுகர்வோர் விவகார அமைச்சர் nஐயராஐ; பெர்னாண்டோ புள்ளே

10. ஆற்றுவள அபிவிருத்தி, ரஐரட்ட அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

11. நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் Nஐhன் செனிவிரத்ன

12. மகளிர் அபிவிருத்தி மற்றும் சமூக நல அமைச்சர் சுமேத nஐயசேன

13. நிதி அமைச்சர் - சரத் அமுனுகம

14. கிறிஸ்தவ மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் - மில்றோய் பெர்ணான்டோ

15. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் - ஐPவன் குமாரதுங்க

16. சமுர்த்தி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சர் - பவித்திரா வன்னியராச்சி

17. பெருந் தோட்டத்துறை அமைச்சர் - அனுர பிரியதர்சன யாப்பா

18. சுதேச மருத்துவ அமைச்சர் - திஸ்ஸ கரலியத்த

19. நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக அமைச்சர் - தினேஷ் குணவர்த்தன

20. விவசாய, சந்தை அபிவிருத்தி, இந்து விவகாரம், தமிழ் மொழி பாடசாலை மற்றும் தொழிற் பயிற்சி வடக்கு அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா

21. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை கிழக்கு மாகாண கல்வி மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி அமைச்சர் - பேரியல் அஷ்ரப்

22. சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் - சுசில் பிரேமnஐயந்த

23. தொழில் உறவு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் - அதாவுட செனிவிரத்ன

24. பிராந்திய உட்கட்டமைப்பு அமைச்சர் - ஆர்.எம்.எஸ்.பி. நாவின்ன

25. திறமை அபிவிருத்தி தொழிற் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் - பியசேன கமகே

26. மாகாண சபைகள், உள்ளுராட்சி சபை அமைச்சர் - ஐனக பண்டார தென்னக்கோன்

27. போக்குவரத்து அமைச்சர் - பீலிக்ஸ் பெரேரா

28. தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் - சி.பி.ரட்னாயக்க

29. கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் - ஏ.எல்.எம்.அதாவுல்லா

30. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் - றெஐpனோல்ட் கூரே

31. விஞ்ஞான தொழில்நுட்பத் துறை அமைச்சர் திஸ்ஸ விதாரன

இன்று ஐனாதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்கவில்லை.

Thanx: Puthinam

  • தொடங்கியவர்

புலிகள் தாக்குதல்: தனது பகுதியைக் காக்க கருணா பகீரத முயற்சி

இலங்கை: நேற்றிரவு கருணாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் சுமார் 20 பேர் இறந்தனர். சுமார் 300 கருணா ஆதரவாளர்கள் பிரபாகரன் படையினரிடம் சரணடைந்தனர்.

இதனால் சில கிலோ மீட்டர் பகுதி புலிகள் வசமானது.

2002 ஆம் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு புலிகள் தரப்பில் நடக்கும் பெரிய சண்டை இதுவே என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

புலிகளின் இந்தத்தாக்குதலை அடுத்து தோப்பிகலா பகுதியைப் பாதுகாக்க சுமார் 2000 பேரை கருணா அனுப்பியுள்ளதாக இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

இப்பகுதி கொழும்பிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இப்பகுதிக்குச் செல்லவேண்டுமெனில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியைக் கடந்து சென்றாக வேண்டும். பிரபாகரன் தரப்பினர் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்குள் நுழைந்தால் அது அமைதி ஒப்பந்தத்தை மீறும் செயலாகக் கருதப்படும்.

ஒருவேளை பிரபாகரன் தரப்பினர் இப்பகுதியில் ஊடுருவ முயன்றால் அரசுத்தரப்பினருடன் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த காட்டுப்பகுதி தொப்பிகலாவிலிருந்து 6 மைல் தொலைவியே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் நேற்றைய சண்டைக்குப் பிறகு அங்கு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

நேற்றைய தாக்குதலில் நிலைகுலைந்த கருணா படையைச் சேர்ந்த 500 பேர் வேறு இடங்களுக்கு ஓடிவிட்டனர்.

கருணா படையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடைசி வரை போராடுவோம் என்று கூறினார்.

இலங்கை ராணுவம் இப்பிரச்சினையில் தலையிடாமல், இருதரப்பிலும் உயிரிழந்தவர்களை மீட்க உதவுமாறு தன் ராணுவத்திற்கு அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.

Thanx: Dinamani

  • தொடங்கியவர்

பிளவுகளும் பின்புலங்களும் கருணா - மாத்தையா

கருணா! மாத்தையாவை தொடர்ந்து விடுதலைப்போருக்கும் தேசியத்தலமைக்கும் துரோகம் இழைத்துள்ள மற்றுமொரு பெயர்.மாத்தையாவிற்கு வீசப்பட்டது போன்ற பதவி ஆசைதான் கருணாவிற்கும் வீசப்பட்டுள்ளது ஆனால் இம்முறை மிகச்சமார்த்தியமான முறையில் நடத்தப்பட்டுள்ளது இந்த நகர்வு.வெறுமனே பதவி என்கின்ற ஒன்றைவிடவும் பிரதேசவாதம் என்பதையும் மேம்படுத்தி இதில் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளது.இதற்காக கிட்டத்தட்ட இரு

ஆண்டுகள் மேல் பிடித்துள்ளது. கருணாவிற்கு மிக நெருக்கமான வன்னித்தலமையோடு நெருங்கிய தொடர்புகள் அற்ற ஒருவரால் தொடர்ந்து போதிக்கப்பட்ட விடயங்களே இந்த நிலை மாற்றத்தின் அடிப்படை

இதைவிடவம் கருணாவின் உயிருக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை இராணுவம் முழுமையான ஆதரவை யுத்தம் ஒன்று ஏற்பட்டால் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மாத்தையாவின் துரோகம் வெளி உலகிற்கு உடனடியாக அறிவிக்கப்படவில்லை ஆனால் இம்முறை பிரச்சாரங்களை பலப்படுத்த திட்டமிடப்பட்டது

உள்ளுரில் அராங்க ஊடகமும் தனியார் ஊடகம் ஒனறும் இதற்கென முன்கூட்டியே தயார்ப்படுத்தப்பட்டுள்ளன அதற்கு ஏதுவாக ஜனாதிபதியிடம் இருந்த அமைச்சுப்பொறுப்புகள்

இந்த விடயத்தை கையாண்ட இலங்கை பிரதிநிதியான கதிர்காமருக்கு வழங்கப்பட்டு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யயப்பட்டன.

இதேவேளை விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி வளங்களின் கோட்டையாக கருதப்படும் ஐரோப்பாவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி அங்கும் தமிழர்களின் ஒற்றுமையயை குலைப்பதன் மூலம் போராட்ட வேகத்தை மட்டுப்படுத்தி தேசியத்தலமையை பலவீனப்படுத்த பாரிய திட்டம் தீட்டப்பட்டது.

மட்டக்களப்பை சேர்ந்த நுNனுடுகு அமைப்பின் சர்வதேச விவகாரங்களை கையாளும் ராமராஜ்

தலமையில் ஆரம்பிக்கப்பட்டு நிதி பற்றாக்குறையால் நின்று போனதாக அறிவிக்கப்பட்ட வுடீஊ ஐ மீண்டும் உடனடியாக ஆரம்பிக்க பூரண உதவிகள் செய்யப்பட்டுள்ளன.கிட்டத்தட்

  • தொடங்கியவர்

கருணாவுக்கு எதிரான தாக்குதலில் மாங்கேணி நோக்கி முன்னேறும் புலிகள்

விலகிவரும் போராளிகளுடன் பெற்றோர் சந்திக்க ஏற்பாடு

map.jpg

மட்டக்களப்பு, திருகோணமலை எல்லைக்குச் சமீபமாக நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை, கருணா குழுவினருக்கெதிரான தாக்குதலை ஆரம்பித்த விடுதலைப் புலிகள் மாங்கேணி நோக்கி முன்னேறிக் கொண்டிýருப்பதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கும் வெருகல் பகுதியில், மிகக் குறுகிய தரை வழிப் பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டிýல் வைத்திருந்த கருணா குழுவினர் இரு மாவட்டங்களையும் பிரிக்கும் ஆற்றுக்குத் தெற்கே நிலை கொண்டிýருந்தனர்.

இதேவேளை, அந்தக் குறுகிய பிரதேசத்தின் ஆற்றுக்கு வடக்கே விடுதலைப் புலிகள் நிலை கொண்டிýருந்தனர்.

விடுதலைப் புலிகள் தங்கள் மீது எவ்வேளையிலும் பாரிய தாக்குதலைத் தொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆயத்தங்களுடன் கருணா குழுவினர் இந்தப் பகுதியில் நிலை கொண்டிýருந்தனர். வாழைச்சேனைக்கு வடக்கே மாங்கேணி முதல் வெருகல் வரையிலான பகுதிகளுக்கான கட்டளைத் தளபதியாக கருணாவின் சகோதரர் ரெஜி (விநாயகமூýர்த்தி சிவநேசத்துரை) நியமிக்கப்பட்டிýருந்தார்.

நேற்று அதிகாலை ஒரு மணியளவில் கதிரவெளிக்கும் வாகரைக்கும் இடையேயுள்ள கடலோரப் பகுதியான பால்ச்சேனைப் பகுதியில் பல படகுகள் மூýலம் திடPரெனத் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அப்பகுதியில் பாதுகாப்பாக நிலை கொண்டதுடன், கருணா அணியினருக்கெதிராக வடபகுதி நோக்கியும், தென்பகுதி நோக்கியும் பாரிய தாக்குதலை ஆரம்பித்தன.

வெருகல் ஆற்றுப் பகுதியை மையமாக வைத்து வடபகுதியை நோக்கி பால்ச்சேனையிலிருந்து புலிகளின் படையணியொன்று பாரிய நகர்வொன்றை ஆரம்பித்த அதேநேரம், பால்ச்சேனையில் தரையிறங்கிய புலிகளின் மற்றொரு படையணியொன்று கண்டலடிýப் பகுதியை மையமாக வைத்து தென்பகுதியை நோக்கி பால்ச்சேனைப் பகுதியிலிருந்து முன்னேறத் தொடங்கியது.

விடுதலைப் புலிகள் பாரிய அளவில் படகுகள் மூýலம் பால்ச்சேனைப் பகுதியில் தரையிறங்கி திடPர்த் தாக்குதலை ஆரம்பித்த பின்பே, தங்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் ஆரம்பமானது கருணா குழுவினருக்குத் தெரிய வந்தது.

பால்ச்சேனைப் பகுதியிலிருந்து வெருகல் ஆற்றுப் பகுதியையே முக்கிய மையமாக இலக்குவைத்து மோட்டார்கள் மற்றும் கனரக ஆயுதங்களின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் அணிகள் முன்னேறத் தொடங்கிய அதேநேரம், வெருகல் ஆற்றுக்கு வடக்கே தங்கள் நிலைகளிலிருந்து விடுதலைப் புலிகள் ஆட்லறிகள் மற்றும் மோட்டார் தாக்குதலை மேற்கொண்டு வெருகல் ஆற்றுப் பகுதியை நோக்கி முன்னேறி வரும் படையணிக்கு உதவிகளை வழங்கிக் கொண்டிýருந்தனர்.

பால்ச்சேனைப் பகுதியிலிருந்து வெருகல் ஆற்றுப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிýருந்த விடுதலைப் புலிகளின் படையணிக்கும், கருணா தரப்பினருக்குமிடையே அதிகாலை ஒரு மணியளவில் கடும் சமர் வெடிýத்த அதேநேரம், பால்ச்சேனைக்குத் தெற்கே கண்டலடிýயை நோக்கி முன்னேறிய புலிகளின் படையணிக்குப் பாரிய எதிர்ப்பு எதுவும் ஏற்படவில்லை.

அதிகாலை ஒரு மணிமுதல் 3 மணிவரை கடும் மோதல் நடைபெற்ற அதேவேளை, புலிகளின் படையணி கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வெருகல் ஆற்றங்கரையை அண்மித்தது.

இதேவேளை, பால்ச்சேனையிலிருந்து கண்டலடிý ஊடாக தெற்கு நோக்கி நகரத் தொடங்கிய புலிகளின் படையணி பாரிய எதிர்ப்புகளின்றி அதிகாலை நான்கு மணியளவில் வாகரைக்குச் சமீபமாகச் சென்றடைந்தது.

வெருகல் ஆற்றுப் பகுதியில் கருணா குழுவினர் சற்று எதிர்ப்புக் காட்டிýயதால், அதிகாலை 3 மணியின் பின்னர் தங்கள் தாக்குதலின் வேகத்தைச் சற்றுத் தளர்த்திய புலிகள், ஏனைய பகுதிகளில் இருந்து கருணா குழுவினரை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டிýனர்.

ஜெயம் படுகாயம்

ஆட்லறிகள் மற்றும் மோட்டார்களின் உதவியுடன் முன்னேறிய புலிகள் கனரக ஆயுதங்கள் மூýலம் இந்தத் தாக்குதலை நடத்தியதில் வாகரைப் பகுதிக்கான கருணா குழுவின் முக்கிய தளபதி ஜெயம் படுகாயமடைந்தார்.

இதேவேளை, வெருகல் ஆற்றுப் பகுதியில் நிலை கொண்டிýருந்த கருணா குழுவினரின் படையணிக்குப் பொறுப்பாக இருந்த, 'கருணாவின் சகோதரரான ரெஜி" அங்கிருந்து தப்பிச் சென்று வாகரையை வந்தடைந்ததாக நேற்றுக் காலை அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, புலிகளின் பாரிய தரையிறக்கம் மற்றும் தாக்குதலை அடுத்து கருணா குழுவினரில் பலர் அவ்விடங்களை விட்டு தப்பிச் சென்றதாகவும் இதேவேளை, 400க்கும் மேற்பட்ட போராளிகள் ஆயுதங்களுடன் வந்து விடுதலைப் புலிகளின் படையணிகளுடன் இணைந்து கொண்டதாகவும், இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றும் புலிகளின் தளபதி ஒருவர் தெரிவித்தார்.

கதிரவெளி கட்டுப்பாட்டிýல்

இதேவேளை, வாகரையிலிருந்து வடக்குப் புறமாக சுமார் 12 கி.மீ.தூரத்தில் இருக்கும் கதிரவெளிப் பகுதியிலுள்ள கருணா குழுவின் முகாம் பகுதியை சுற்றி வளைத்த கடற்புலிகள், அப்பகுதியில் கடும் தாக்குதலை நடத்தியபோது கருணா குழுவினர் கடும் எதிர்ப்புக் காட்டாது அங்கிருந்து விலகிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், கதிரவெளியிலுள்ள கருணா குழுவின் முகாமிற்குப் பொறுப்பாக இருந்த மார்க்கானுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியவரவில்லையென அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 3 மணிக்குப் பின்னர் பாரிய மோதல்கள் எதுவும் நடைபெறாத போதிலும், ஆங்காங்கே இரு தரப்பிற்கும் இடையே சிறு சிறு மோதல்கள் நடைபெற்றதாகவும், விட்டுவிட்டு துப்பாக்கிச் சூýட்டுச் சத்தங்களும், மோட்டார் குண்டுச் சத்தங்களும் கேட்டுக் கொண்டிýருந்ததாகவும் சம்ப10ர்ப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கருணாவை தனிமைப்படுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிýருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதேநேரம், குறிப்பாக ஆயுதங்களற்ற நிலையில் கருணா குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு போராளிகளை விடுவிக்கும் நோக்கிலும் இந்த நடவடிýக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று அதிகாலைக்குப் பின்னர் பாரிய மோதல்கள் இடம்பெறாதபோதிலும், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் ரோந்து நடவடிýக்கைகள் கிழக்குக் கடற்பரப்பில் பெருமளவில் இடம்பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகளின் நடவடிýக்கைகள் கடற்பரப்பினூடாகவே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பிற்குமிடையே கடும் சமர் ஆரம்பித்ததையடுத்து, தக்க சமயத்தில் கருணா குழுவிலிருந்து விலகிச் செல்ல தருணம் பார்த்திருந்த பொறுப்பாளர் சிலர் உட்பட பெருமளவு போராளிகள் எதுவித எதிர்ப்பும் காட்டாது புலிகளின் அணிகளுடன் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, பால்ச்சேனைக்கு வடக்கேயும், தெற்கேயும் முன்னேறிச் சென்ற விடுதலைப் புலிகள், ஆங்காங்கே கருணா குழுவினரின் முகாம்களை பெட்டிý வடிýவில் சுற்றி வளைத்துள்ளதாகவும் வெருகலில் பெரும் பகுதியும், கதிரவெளிப் பகுதியும் புலிகளின் ப10ரண கட்டுப்பாட்டிýற்குள் வந்துவிட்டதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவித்தன.

பால்ச்சேனைக்குத் தெற்கே முன்னேறிச் சென்ற புலிகளின் அணிகள், பாரிய எதிர்ப்புகள் எதுவுமின்றி வாகரைப் பகுதியையும் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிýருப்பதாகவும், வாகரைப் பகுதியின் காட்டுப் பகுதிகளை அண்டிýய பனிச்சங்கேணி மற்றும் கட்டுமுறிவுப் பகுதிகளில் ஆங்காங்கே மோதல்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கருணாவின் முக்கிய தாக்குதல் பிரிவின் பொறுப்பாளரான ஜிம்கலித் தாத்தாவின் அணியை நோக்கி நேற்று மாலை தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

தற்போது விடுதலைப் புலிகள் வாழைச்சேனையிலிருந்து சுமார் 25 கி.மீ.தூரத்தில் நிலை கொண்டிýருப்பதாகவும், இவர்கள் மேலும் முன்னேறுவதற்கான அறிகுறி இருக்கும் அதேநேரம், மட்டக்களப்பு - கொழும்பு வீதியைத் தாண்டிýச் சென்றால் மட்டுமே, தற்போது கருணா இருக்கும் தொப்பிக்கல பகுதிக்குச் செல்ல முடிýயும் என்பதால் புலிகளின் அணி முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் இராணுவத்தினர் முழுமையாக ஈடுபடக் கூýடும் எனவும் இராணுவ தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் இராணுவத் தளபதி

நேற்றுப் பிற்பகல் விசேட ஹெலிகொப்டர் மூýலம் மட்டக்களப்பிற்குச் சென்ற கூýட்டுப்படைகளின் தளபதியும், இராணுவத் தளபதியுமான லெப்.ஜெனரல் லயனல் பலகல மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சந்தகிரி ஆகியோர் மட்டக்களப்பு நகரில் கிழக்கு மாகாணத் தளபதிகளுடன் நீண்டநேரச் சந்திப்புகளை நடத்தியதாகவும் தெரிய வருகிறது.

விடுதலைப் புலிகள், கருணா இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கி முன்னேறுவதானால் மட்டக்களப்பு - கொழும்பு வீதியை கடந்தே செல்ல வேண்டிýயிருக்கும். தற்போது இந்த வீதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிýலேயே இருக்கின்றது. விடுதலைப் புலிகள் இந்த வீதியை கடந்து செல்லாதவாறு தடுப்பதில் படையினர் பெரும் முனைப்புக் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிýருந்தபோது, வாழைச்சேனையிலிருந்து வாகரை நோக்கி வாகனமொன்றில் சென்று கொண்டிýருந்த, கருணாவின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான முக்கிய பொறுப்பாளராகக் கருதப்படும் பிள்ளையான் என்பவர் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பிலிருந்து வெளி மாவட்ட மக்களை துரத்தும் நடவடிýக்கையில் மிக மும்முரமாக பிள்ளையான் இருந்தவர் எனவும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூýட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றபோது அவர்களுக்கு கருணா அணியினரைக் காவலுக்கு அனுப்பியதுடன், அவர்களை அங்கிருந்து மீண்டும் பலவந்தமாக மட்டக்களப்பிற்கு கொண்டு வந்ததில் பிள்ளையானுக்கே முக்கிய பங்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் நேற்றைய மோதல்களின்போது கருணா குழுவிலிருந்து விலகி வந்து தங்களுடன் இணைந்த நூற்றுக் கணக்கான போராளிகளை அவர்களது பெற்றோர் சந்திக்க உடனடிýயாக ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அமைப்பிலிருந்து விலகிச் செல்ல விரும்பும் போராளிகளுக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் எனவும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Thanx: Thinakkural

  • தொடங்கியவர்

வன்னியிலுள்ள புலிகளின் தலைமையுடன் தொடர்பு கருணா தரப்புடன் தொடர்பெதுவுமில்லை

- கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர்

மட்டக்களப்பில் இடம்பெறுவது விடுதலைப் புலிகளின் உள் விவகாரப் பிரச்சினை என்பதால் அதில் தாம் தலையிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் துணைத் தலைவர் ஹொக்லண்ட் தமக்குக் கருணா தரப்பினருடன் எந்தவித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தற்போது தோன்றியுள்ள நிலைமைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர் இது குறித்து நேற்றுக் காலை 11 மணியளவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத்தை சந்தித்துப் பேசியுள்ளேன். இது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இச் சண்டையில் அரசாங்கப் படைகள் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனினும், இச் சண்டை சமாதான நடைமுறைகளுக்கு ஆபத்தானது.

இச் சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளிடமிருந்தோ, கருணா தரப்பினரிடமிருந்தோ, அரசாங்கப் படையினரிடமிருந்தோ புகார்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை.

எனினும், இப்போது நடைபெறுவது விடுதலைப் புலிகளின் உள் விவகாரப் பிரச்சினை. இதில் தலையிட வேண்டாம் என அவர்கள் சகல தரப்பினரையும் எச்சரித்துள்ளனர். இப் பிரச்சினையில் இராணுவம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனவே, மோதல் நடைபெறும் இடத்திற்கு நாங்கள் போக முடியாது. போகப் போவதுமில்லை.

எமக்கும் கருணா குழுவிற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், வன்னியில் உள்ள புலிகளின் தலைமைப் பீடத்துடன் தொடர்புகளை வைத்திருக்கிறோம்.

இப்போது நாங்கள் கிழக்கின் நிலைவரம் பற்றி விசாரணை செய்து வருகிறோம். ஆனால், அங்கு சண்டை தொடர்ந்தால் எம்மால் அங்கு செல்ல முடியாது. செல்லப் போவதுமில்லை.

நாம் இப்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் செயற்படுகிறோம். கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் செயற்படவில்லை. கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் செல்லவில்லை. செல்லவும் முடியாது. செல்லப் போவதுமில்லை.

தற்போதைய சண்டை கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெறுவதால் நாங்கள் அங்கு செல்லப் போவதில்லை.

Thanx: Thinakkural

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.