Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2012 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடனே எழுந்த பாகன் தானும் உரையாற்ற வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் குசினுக்குள் ஓடிய தமிழ் ஸ்ரீ அண்ணா ஒரு எள்ளுபாகுடன் வந்து பாகனின் vaaikkul திணித்து இதை தின்னுமாறு கூறுகின்றார் எள்ளுப்பாகு போன பாகன் வாயை திறக்க முடியாமல் ஓடி திரிகின்றார்

இப்பொழுது சகாரா அக்காவின் சிற்றுரை இடம் பெறும்

சகாரா அக்கா தொண்டையை செருமிக் கொண்டு தனது சாரியை சரி பார்க்கிறார்

இப்பொழுது மைக்க சரி பார்க்கிறார். ஒலிக் கட்டுப்பாட்டாளரை பார்த்து தனக்கு கொஞ்சம் எக்கோ வைக்க சொல்லுறார்.

இப்பொழுது ஒரு கர்வமிக்க பார்வையுடன் சிற்றுரையை தொடங்குறார்

யாழ் உறவுகளே என் சிற்றுரையை கேட்க தயாராகும் காவியச் செல்வங்களே வணக்கம்

இளைய ராஜா ஒரு இசை கவி

இந்த சகாரவோ யாழ்க் கவி

இளையராஜா ஒரு இசைச் சமுத்திரம்

அவரின் இசை கேட்டு தூங்காத உயிர்கள் இல்லை.

அவரின் தாலாட்டும் இசை எம்மை நிச்சயம் சீராட்டும்.

அவரின் இசைக்கு கனடாவில் தடையா முடியாது

விட மாட்டேன். நான் உண்ணாவிரதம் இருந்தாவது

நிகழ்ச்சியை நாடாத்தி காட்டுவேன்.

க்ஹலோ ஹலோ ஹலோ

அவரது உரையை இடையில் நிறுத்தி விட்டார்கள்

மேடையில் நிஜானி திடீர் என தோன்றி எமது நிகழ்ச்சிக்கு சம்மந்தம் இல்லாமல் அக்கா பேசியதால் இவரது உரையை நிறுத்துகிறோம் என்று அறிவிக்கிறார்

இசை அண்ணா அவர்கள் உடனடியாகவே மன்னிப்பு கேட்டு அடுத்த நிகழ்வை அறிவிக்கிறார். அப்பொழுது எல்லாளன் முகத்தில் ஒரு பிரகாசம்

Edited by SUNDHAL

  • Replies 269
  • Views 15.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இன்று பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்ட ஆக்கங்களுக்கு உரியவர்களான

தமிழ்சூரியன்

ரதி அக்கா

கரும்பு

ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் மூன்று பரிசுகளை தட்டிச்சென்ற தமிழ் சூரியன்,ரதி,மற்றும் கலைஞனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.அனுசரணை வழங்கிய அகூதாவுக்கும் ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய சுபேஸ்,தமிழ் சிறி,சுண்டல் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.

அலையக்காவை பார்த்து பார் அலை மச்சி சுண்டல் திண்ணை மாதிரி இன்சையும் கிண்டல் பண்ணுறார் என்று முறையிட அலையோ ஒரு நாட்டாமை ரேஞ்சுக்கு முகத்தை வைச்சு சுண்டலை பார்த்து சுண்டல் சும்மா இருங்கோ அப்புறம் சாத்திரியாரிட்டை சொல்லி தேசிக்காய் வெட்டிப் போடுவன் எண்டு சொல்ல நந்தன் குறுக்கிட்டு சாத்திரியார் அந்த மாதிரி சாத்திரியார் இல்லை எண்டு விளங்கப் படுத்த அலையோ அது எனக்கும் தெரியும் நான் சும்மா சுண்டலை மிரட்ட சொன்னனான் எண்டு சமாளிக்கிறார். அப்பொழுது மேடையில் நிண்ட இசை அண்ணா பார்வையாளர்களை பார்த்து தயவு செய்த அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறார். சுண்டலுக்கு அருகில் வந்த நிழலி அண்ணா சுண்டலையும் நந்தனையும் பார்த்து தயவு செய்து நீங்க இருவரும் வேறு இடத்தில் போய் அமருங்கோ இதிலை நிண்டு கடலை போடாதைங்கோ பாக்கறவங்க என்ன நினைப்பான எண்டு விளாச சுண்டலுக்கும் அழுகையே வந்துட்டுது

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

சற்று நேரத்தில் எமலோகத்தில் சில யாழ்கள உறவுகள் செய்யும் அட்டகாசம் :lol: நாடகமாக வரவுள்ளது என்பதை அறியத்தருகிறோம்..நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. .

  • கருத்துக்கள உறவுகள்

உடனே எழுந்த பாகன் தானும் உரையாற்ற வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் குசினுக்குள் ஓடிய தமிழ் ஸ்ரீ அண்ணா ஒரு எள்ளுபாகுடன் வந்து பாகனின் vaaikkul திணித்து இதை தின்னுமாறு கூறுகின்றார் எள்ளுப்பாகு போன பாகன் வாயை திறக்க முடியாமல் ஓடி திரிகின்றார்

எள்ளுபாவிற்கு பதிலாக கோதுமை அல்வா கொடுத்திருந்தால் குறைந்தது இரண்டு மணித்தியாலத்துக்கு வாய் திறக்காமல் இருந்திருப்பார் :D:lol:

எல்லோரும் நிகழ்ச்சிப் பரபரப்பில் இருக்க அர்ஜுன் அண்ணா மட்டும் அடிக்கடி தனது கார்க்கு சென்ற வண்ணம் இருந்தார்

  • கருத்துக்கள உறவுகள்
:D

யாழ்கள கொத்துரொட்டிcrew... :wub:

kottu-roti-action.jpg

கோழி, மாறும் ஆட்டிறைச்சிக் கொத்து ரொட்டிகள் ரெடி...

Kothu%20Roti.preview.JPG

Chicken%252520Kothu.jpg

கறுப்பியை மனதில் நினைத்து செய்த மரக்கறிக் கொத்து... :lol:

Veg_kothu_roti1.337103543_large.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா காருக்கு போக அங்க ஏற்கனவே காரை திறந்து குமாரசாமி அண்ணா தப்பிலி குட்டி தமிழ் அரசு சுபேஷ் எண்டு ஒரு கூட்டமே நிண்டு போத்தில காலி பண்ணி பசைத்தணியை மட்டும் கலந்து வைத்திருந்தார்கள்.....

அதை குடித்த அர்ஜுன் அண்ணா ஆடி ஆடி மீண்டும் மண்டபத்தை நோக்கி

  • கருத்துக்கள உறவுகள்

10244_494450567251827_764960571_n.jpg

[size=5]வடை உறைப்பாக இருக்கு என்று சாப்பிடாது இருக்கும் உறுப்பினர்களிற்கு சொக்கிலைற்று வழங்கப்படும் :D:icon_idea: [/size]

அர்ஜுன் அண்ணா காருக்கு போக அங்க ஏற்கனவே காரை திறந்து குமாரசாமி அண்ணா தப்பிலி குட்டி தமிழ் அரசு சுபேஷ் எண்டு ஒரு கூட்டமே நிண்டு போத்தில காலி பண்ணி பசைத்தணியை மட்டும் கலந்து வைத்திருந்தார்கள்.....

அதை குடித்த அர்ஜுன் அண்ணா ஆடி ஆடி மீண்டும் மண்டபத்தை நோக்கி

:lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D :D
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு அண்ணா கொடுத்த வடையில் ஓட்டை இருக்கெண்டு சுபேஷ் அத சாப்பிட மாட்டன் எண்டு அழுதிட்டு இருக்கார்......

நந்தன் அண்ணா வடையில ஓட்டை இல்லாட்டி அதுக்கு பேர் donut டா என்று சொல்லி சமதானப்படுத்துகின்றார்

அர்ஜுன் அண்ணா காருக்கு போக அங்க ஏற்கனவே காரை திறந்து குமாரசாமி அண்ணா தப்பிலி குட்டி தமிழ் அரசு சுபேஷ் எண்டு ஒரு கூட்டமே நிண்டு போத்தில காலி பண்ணி பசைத்தணியை மட்டும் கலந்து வைத்திருந்தார்கள்.....

அதை குடித்த அர்ஜுன் அண்ணா ஆடி ஆடி மீண்டும் மண்டபத்தை நோக்கி

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு அண்ணா கொடுத்த வடையில் ஓட்டை இருக்கெண்டு சுபேஷ் அத சாப்பிட மாட்டன் எண்டு அழுதிட்டு இருக்கார்......

நந்தன் அண்ணா வடையில ஓட்டை இல்லாட்டி அதுக்கு பேர் donut டா என்று சொல்லி சமதானப்படுத்துகின்றார்

:D:lol: :lol:

sarbath.jpg

[size=5] [/size][size=5]இந்த கிளாஸ் குமாரசாமி அண்ணனுக்கும் தமிழ் சிறிக்கும் கொடுக்கவும் :D[/size]

cooldrinks.jpg

[size=5]இதனை ******** கொடுக்கவும் [/size] :D

  • கருத்துக்கள உறவுகள்

குசினிக்குள நிண்டு அலை அக்கா தமிழரசு அண்ணாவ நாளைக்கும் சாப்பிட பார்சல் கட்டி தர சொல்லி கேட்டிட்டு இருக்கா தமிழ் அரசு அண்ணா என் பார்சல் எல்லாம் நாளைக்கு நானே வீட்ட வந்து சமைச்சுத் தாரன் எண்டு கடுப்பாகி கத்திட்டு இருக்கார்....தாம் ஒரு பார்சல் வாங்குவம் எண்டு போன யாயினி குசினிக்குள் போய் வெறும் தண்ணி மட்டும் குடிச்சிட்டு வந்து அமருகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அறிவிப்பு செய்து களைத்துப்போன சுண்டலுக்காக ஸ்பெசலாக தயாரிக்கப்பட்ட பேப்பர் தோசை :D[/size]

47965_156534567821911_1678751873_n.jpg

  • தொடங்கியவர்

[size=6]யமனாக நிழலியும், சித்திரகுப்தனாக தமிழ் சிறியும், யமதூதர்களாக தூயவன்,நிர்மலன்,புத்தன்,தும்பளையான்,ஜீவா ஆகியோரும் நந்தனாக நந்தனும் கலந்து சிறப்பிக்கும்... எமலோகத்தில் நந்தன் நாடகம் இதோ...[/size]

______________________________________________________________________________________________________________________________

2054 ஆம் வருடம்,மார்கழி மாதம்,அதிகாலையில் தூக்கத்தில் ஆழ்ந்துருந்திருக்கிறார் நந்தன்.அப்போது பார்க்க பயங்கரமான,விகாரமான தோற்றம் உடைய சிலர் அவரிடம் வருகிறார்கள். அவர்கள் "வா எங்களுடன்", என்று கூறி நந்தனை தர தரவென இழுத்துச் செல்கிறார்கள். (உரையாடல் முழுதும் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்).

காட்சி௧ள் (வானவீதியில்)

நந்தன்: ஆமாஆஆஆ நீங்கெல்லாம் யாருப்பா..?

யமதூதர்கள்: நாங்கள் யமதூதர்கள். உன் உயிரைப் பறித்துப் போகின்றேம்.

நந்தன் : என்னாது... என் உயிரை எடுத்துட்டீங்களா,சொல்லவேயில்லை.

யமதூதர்கள்: சொல்லிட்டுச் செய்ய நாங்க என்ன தமிழ் சினிமா ஹீரோவா, பஞ்ச் டயாலக் பேசி உயிரை எடுக்க...பொத்திக்கொண்டு இருடா டுபாக்கு...

நந்தன் : ஆமா யமதூதா..., ரம்பா,ஊர்வசி,மேனகா எல்லாம் அங்கிட்டு நல்லா இருக்காங்களா.

யமதூதர்கள் : நீ கொஞ்ச நேரம் வாயை அடைத்துக் கொண்டு வருகின்றாயா கிராதகா..?

நந்தன் : என்னது நீங்க மட்டும் வந்துருக்கிங்க, தேவதூதர்கள்,புஷ்பக விமானம் எல்லாம் நமக்கு வராதா?

யமதூதர்கள்: அடேய் நீ பண்ணிய பாவங்களுக்கு,கெட்ட கேட்டுக்கு அவங்க எல்லாம் வரனுமா?.சும்மா பிணாத்தாம வாடா.

நந்தன்: ஆமா எவ்வளவு தூரம் போகனும்?...இப்பிடி ரொம்பத்தூரமின்னு தெரிஞ்சிருந்தா வரும்போது வீட்டிலிருந்து கொஞ்சம் வொட்காவை எடுத்துவந்திருப்பனே..

யமதூதர்கள்: அடேய்,எங்க பொறுமையை சோதிக்காதே. பேசாம வருகிறாயா நரனே.

நந்தன்: இங்கை திண்ணையும் இல்லை..போகின்ற வழிக்கு பொழுது போகனும் இல்லை...

யமதூதர்கள்: சூலாயுத்தால் வாயில் இடித்து,இப்ப நீ வாயை மூடலைன்னா,அடிச்சே கிழிச்சுடுவேம்.எப்பிடி வசதி.

நந்தன் : அய்யோ, ஆத்தாடி, என்று கப்சிப்.

காட்சி - 2 (எமலோகத்தில் எமனது இறுதி தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது).

சித்ரகுப்தன்: மன்னா,இவன் ஒரு ஜெகஜாலக் கில்லாடி, நல்லவன் போல நடிப்பவன். இவனை எமலோகத்தில் விட்டு அனைத்து தண்டனைகளும் தரவேண்டும்.

யமன்: அது என் வேலை, நீ முதலில் இவனது குற்றங்களைப் படி.

நந்தன் : அடப்பாவிகளா, இங்கனயும் பதவிப் போட்டியா?.

யமதூதர்கள்:உஷ் வாயை மூடிக்கொள். இல்லை என்றால் உன் தண்டனை இரு மடங்கு ஆகிவிடும்.

நந்தன் : சரி அப்பு.

சித்ரகுப்தன்: மன்னா சொல்ல அசிங்கம், இவன் பள்ளியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது.....

யமன் : சரி,சரி, இரகஸ்யங்களை சப்தம் போடாதே. வாலிபக் குறும்பு. இதுக்கு தண்டனையா, இவனை தகிக்கும் தங்க பதுமையைக் கட்டி அனைக்கச் சொல்லி வறுத்து எடுப்போம்.

நந்தன் : அடப்பாவமே, நான் எப்பவும் தங்கம் என் உடம்பில் கூடப் போட்டதே கிடையாது. கட்டிக்க தங்கப் பதுமையா?. பூலோகத்தில் அப்புறம் ஏன் தங்கம் விலை ஏறாது. சரி இங்கனயாவது போட்டுக்குவேம்.

யமதூதர்கள்: அடேய் அது சூடான கொதிக்கும் தங்கப் பதுமைடா.

சித்ரகுப்தன்:அதுமட்டும் இல்லை இவன் திண்ணையில் குடித்துவிட்டு, ஒருமுறை.......

யமன்: அடேய்,கஸ்மாலம், கேப்மாரி,முடிச்சவிக்கி, உன்னை....

சித்ரகுப்தன்: மன்னாஆஆஆ.. என்ன ஆச்சு தங்களுக்கு உளறுகின்றீர்கள்.

யமன்(சுதாரித்து): ஒன்றுமில்லை,திண்ணை என்றவுடன் அங்கு இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் வெறியில் பேசிக்கொள்ளும் பாசை ஒட்டிக் கொண்டது.இதுக்கு தண்டனையாக இவனை நாலு யமதூதர்களை விட்டு முள்ளுச் சவுக்கால் பரேட்டாவைப் போல அடித்து புரட்டி எடுங்கள்.

சித்ரகுப்தன்: மன்னா இதையும் கேளுங்கள்,லண்டனில் இவன்........

யமன்: அடேய் போதும், போதும் இந்தக் குற்றத்திக்கே இவன் நரகத்தில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதுக்கு தண்டனையாக இவனை எண்ணைச் சட்டியில் போட்டுப் பொறிக்க வேண்டும்.

சித்ரகுப்தன்:இது மட்டும் அல்ல மன்னா, யாழில் இவன் பதில் எழுதுறன் எண்ட பெயரில் கண்டதையும் எழுதி,தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்பி உள்ளான்.ஒரு முறை இவன் களௌறவுகளிடம்......

யமன் : அடேய்ய்ய், மேலே சொல்லதே,என் வாயில் கெட்ட வார்த்தை வந்துவிடும்,இதுக்கு இவன் நாவை அறுத்துச் வறுவல் பண்ணுங்கள்.

நந்தன்: என்னது இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இதுக்கு முன்னால இவரு புரோட்டாக் கடையில் மாஸ்டரா இருந்தாரா?. வறுக்கனும்,பொறிக்கனும்,வடகம் போடனும்,வறுவல் போடனும் அப்படின்னு தீர்ப்பு சொல்றார்....?

யமன் : அடேய் நரனே. என்ன தைரியம் இருந்தால் என்னை புரோட்டா மாஸ்டர் என்பாய். இதுக்கு உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

யமதூதன்: கேட்டாயா, வாயை வைச்சுக் கிட்டு சும்மாயிருந்தா,இப்படி நடக்குமா?

நந்தன் : இல்லைனாலும்,அடப்போய்யா.. நாங்க எல்லாம் எத்தனை பேரைப் பார்த்துருக்கேம்.

சித்ரகுப்தன்: மன்னா,என்ன ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள்.

யமன்: இந்த நரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், என்ன தண்டனை என்ற குழப்பத்தில் உள்ளேன்.

நந்தன்: அப்பாடா, வந்த வேலை முடிஞ்சது. எதே நம்மளால முடிஞ்சது. குழம்பி தீர்வதுக்குள் எஸ் ஆகனும். எப்படிய்ய்ய்.

சித்ரகுப்தன்: மன்னா, இந்த மூன்று தண்டனைகளும் ஒரே காலத்தில் கொடுப்போம். அல்லது தண்டனைக் காலத்தை இன்னமும் அதிகரிப்போம்.

நந்தன்: அடடா, மன்னர் குழம்பினாலும் இந்த அல்லக்கைகள் விடாது போல இருக்கே. சரி சமாளிப்போம். எவ்வளவோ பார்த்துட்டேம்,இது என்ன..

யமன்: மிக மிக கடுமையான தண்டனையாக இருக்கவேண்டும்,அதைப் பார்த்து எவனும் என் முன் வாயைத் திறக்கக் கூடாது.

நந்தன் : பேசாமல் எல்லாரையும் மன்மோகன் ஆக்கிடுங்க...யாரும் வாயைத் தொறக்க மாட்டாங்க...

யமதூதன்: அடேய் உன் தப்புக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.வாயை மூடு.

யமன்: ஆகா கண்டுபிடித்து விட்டேன், மிக கொடுமையான தண்டனை, யாரும் வழங்காத தண்டனை. அற்புதமான, ஆளைப் பையித்தியம் பிடிக்க வைக்கும் தண்டனை.

சித்ரகுப்தன் : ஆவலுடன் மன்னா என்ன அது மன்னா, சொல்லுங்கள்.

நந்தன்: அடாடா,வில்லங்கமா இருக்கும் போல, சரி பொறிக்கறது வீட பெரிசா என்ன தண்டனையைத் தரப்போறானுங்க.

யமன்: டேய் நரனே, அடுக்கடுக்காய் பாவங்கள் பண்ணியது இல்லாமல்,என்னையே கிண்டல் பண்ணத் துனிந்த உனக்கு அதிக பட்ச தண்டனை வழங்குகின்றேன். இதை அனுபவித்து நீ பைத்தியம் பிடித்து அனு அனுவாய் சித்தரவதைப் படுவாய்.

நந்தன் : என்ன தண்டனைன்னு சொல்லாம, புதிர் போட்டா எனக்கு என்ன ஜோசியமா தெரியும்.

யமன்: கோபமாக,சத்தமாக எழுந்து நின்று, அடேய் நரனே, உனக்கு இந்த தண்டனைதான் பொருத்தம். நீ இங்கு இருக்கும் காலம் எல்லாம் தினமும், நீ நெடுக்காலபோவான் எழுதிய பதிவுகள் எல்லாத்தையும் நீயே உக்காந்து படிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு வழங்கும் தண்டனை.

நந்தன் : பதட்டமாக, சத்தம் போடத்துவங்கியபடி....அய்யோ அய்யோ அது மட்டும் வேண்டாம், நீங்க சொன்ன எல்லா தண்டனைகளும் ஒட்டு மொத்தமாக தாருங்கள், ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம் என்று கத்திக்கொண்டு கண்விழிக்கிறார்....

_____________________________________________________________________________________[size=6] [/size]

[size=6]நந்தன் கண்விழிக்கவும்..நாடகம் இனிதே நிறைவேறுகிறது...நன்றி வணக்கம் உறவுகளே..நிழலி மட்டும் தான் போட்டிருக்கும் வாடக்கைக்கு எடுத்த எமதர்மன் உடுப்புகளை தரமாட்டன் என்டு மண்டபத்தின் பின்னால் அடம்பிடிக்கிறார்..இப்பிடியே இருந்து யாழுக்கை வெட்டப்போறாராம்... :( :([/size]

.

Edited by நீலமேகம்

[size=4]இப்பொழுது யாழ் அன்புவும் சுண்டலும் நந்துவும் இணைந்து நாடாத்தும் சிறிய நகைச்சுவ நாடகம் இடம் பெறுகிறது

இதில் ரோபோவாக சுண்டலும் மாஸ்டராக அன்புவும் சயன்டிஸ் ஆக நந்துவும் நடிக்கிறார்கள்

அன்பு: (பார்வையாளர்களை பார்த்து) இப்ப நான் புதுசா அறிமுகப் படுத்தும் ரோபோவிற்கு எல்லா மொழியும் தெரியும்

நந்தன்: எல்லா மொழியும் என்றால் பக்கத்துக்கு சொப்பிங் சென்ரரில் வேலை செய்யும் தேன்மொழியை தெரியுமா

அன்பு: நீ டாவடிச்சு ஜொள்ளு வடிக்கிற மொழி எல்லாம் அதுக்கு தெரியாது. நான் சொல்லுறது உலகத்திலை உள்ள எல்லா மொழிகளும் அதாவது எல்லா லாங்க்வேயுக்களும் தெரியும் எண்டு அர்த்தம் இப்ப இந்த சுண்டல் என்கிற ரோபோவை அறிமுகப் படுத்தப் போறான்

அதை அறிமுகப் படுத்தினா சும்மா அதிருமில்லே

sooo 9......8.....7....6.....5.....4.....3....2....1...

(இந்திரன் இசையுடன் சுண்டல் ரோபோவாக வருகிறான் உன் பேர் சொன்ன்னதும் என்ற பாடலுடன்)

அன்பு :(உணர்ச்சிவசப் பட்டவராக) எந்திரா எந்திரா என்திறேந்திரேந்திரா

ரோபோசுண்டல்: டேய் நீ எந்திரா எந்திரா என்திறேந்திரேந்திரா எண்டால் நிகழ்ச்சிக்கு வந்த சனம் எழுந்து வீட்டை போய்டும் அப்புறம் நிழலி அண்ணா எங்களை துலைச்சுடுவார்

அன்பு: இல்லைப்பா ஒரு பில்டப் கொடுத்தேன்

ரோபோசுண்டல் : அப்பிடியே நான் ஒரு அப்பு அப்பப் போறான்

அன்பு: ஓகே ரோபோ நான் உன்னை இவங்களிட்டை அறிமுகப் படுத்தப் போறன்

ரோ.சுண்டல்: ஆமா இவர் பெரிய மணிரத்தினம் நான் மாதவன் இவர் என்னை அறிமுகப் படுத்துறார். ஹோயஜாள்ளே அட தூ

நானே என்னை அறிமுகப் படுத்துறேன். ஹாய் என் பேரு ரோபோசுண்டல் இஸ்பீட் 500 மேகாஹைட்ஸ் மெமோரி 32மெகாபைட்ஸ்

நந்தன்: என்ன இஸ்பீட் எண்டு சொல்லிப் போட்டு இவ்வளவு சிலோவா பேசுது ரோபோ

சு.ரோபோ: யாரு இவன்

அன்பு: சயிண்ட்டிஸ்ட்

சு.ரோபோ: சயின்டிஸ்டா!!!!!!!! இவன் மூஞ்சிய பார்த்தா உடம்பு சரி இல்லாமல் யூரின் டெஸ்ட்டுக்கு வந்த மாதிரி இருக்கான்

அன்பு: ஸ்ஸ்ஸ் ரோபோ அவன் என் நண்பன் இப்பிடி கிண்டல் பண்ண கூடாது

ஆஅஹ்ஹ்ஹ்ஹ வசனாலும் உன் இஸ்டைலும் அழகும் அப்பிடியே இருக்கு

சு.ரோபோ: ஆஹ்ஹ தைங்கு தைங்கு கூடவே பிறந்தது

அன்பு: எந்த ஆசுப்பத்திரியில் பிறந்தது?

சு.ரோபோ: அவுஸ்திரேலியா சிட்னி ஆசுப்பத்திரியில் பிறந்தது

ஒரு பஞ்சு டயலாக் பேச விட மாட்டியே

இப்பொழுது இந்த நாடகத்துக்கு சிறிய இடைவேளை பின்னர் இது தொடரும் [/size]

Edited by யாழ்அன்பு

நெருப்பு நீலமேகம் சுப்பர்!

:lol: :lol: :lol: :lol:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • தொடங்கியவர்
:lol: அன்பு நல்லாருக்கு..எழுத்தை கொஞ்சம் பெருசாக்குங்கோ...
  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

இந்த முறை விழா அந்த மாதிரி இருக்கு சூப்பர்........

ஒரு ஒரு மணிநேரத்திற்கு முன்னம் தான் நீலமேகதிக்கு subject கொடுதிருந்தம் அசத்திட்டார்........

இந்த விழாவின் நாயகர்கள் நீங்கள் தான் நீல மேகம் அன்பு அண்ணா இன்னும் எதிர்பாகிரம் :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே கூதுகலமாகவும் உற்சாகமாகவும் நிகழ்ச்சியை பார்த்துகொண்டு இருக்கும் உறவுகளே அடுத்து நிகழ்ச்சியில் யாழ் களத்திற்கு என்று ஒரு பாடலை எழுதித்தந்த தமிழ் சூரியன் அண்ணாவும்

யாழ் கள போட்டியின் நடுவராக இருந் சுபேஷும் கௌரவிக்க படுவார்கள்

யாருப்பா அங்கெ ரெண்டு தேங்க பாதிக்குள்ள ஒரு வெத்திலையும் ஒரு பாக்கும் ஒரு வாழைப்பழமும் வைச்க்க்கொண்டு வாங்கப்பா

மச்சி சுபேஷ் தேங்க இசை அண்ணா வீட்ட மனைவிக்கு தெரியாம காடசிட்டு வந்தது போகேக்க குத்திட்டு போய்டப்பு

  • தொடங்கியவர்
:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.