Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுராதபுரம் வான்படைத் தளத்தில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Featured Replies

[size=2]

அனுராதபுரம் வான்படைத் தளத்தில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

69349_372379142839569_1032644534_n.jpg[/size][size=2]

அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படைத் தளம் மீது “எல்லாளன்” என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் மேலும் பல வானூர்திகள் சேதமாக்கப்பட்டன.

பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு:

லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் - திருகோணமலை)

லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் - யாழ்ப்பாணம்)

லெப். கேணல் மதிவதனன் (பாலசுப்பிரமணியம் தயாசீலன் - யாழ்ப்பாணம்)

மேஜர் சுபன் (கதிரவன் ஜீவகாந்தன் - யாழ்ப்பாணம்)

மேஜர் கனிக்கீதன் (இராசன் கந்தசாமி - மட்டக்களப்பு)

மேஜர் இளம்புலி (துரைரட்ணம் கலைராஜ் - யாழ்ப்பாணம்)

மேஜர் காவலன் (சண்முகம் சத்தியன் - கிளிநொச்சி)

மேஜர் எழிலின்பன் (விமலநாதன் பிரபாகரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் தர்மினி (கணேஸ் நிர்மலா - கிளிநொச்சி)

கப்டன் புரட்சி (செல்வராசா தனுசன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கருவேந்தன் (மயில்வாகனம் சதீஸ்குமார் - கிளிநொச்சி)

கப்டன் புகழ்மணி (தர்மலிங்கம் புவனேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் புலிமன்னன (கணபதி நந்தகுமார் - யாழ்ப்பாணம்)

கப்டன் அன்புக்கதிர் (வில்சன் திலீப்குமார் - முல்லைத்தீவு)

கப்டன் சுபேசன் (நாகராசா மகாராஜ் - மன்னார்)

கப்டன் செந்தூரன் (கணேசநாதன் தினேஸ் - யாழ்ப்பாணம்)

கப்டன் பஞ்சீலன் (சிவானந்தம் கஜேந்திரன - மட்டக்களப்பு)

கப்டன் ஈழப்பிரியா (கந்தையா கீதாஞ்சலி - யாழ்ப்பாணம்)

கப்டன் அருள்மலர் (சேவியர் உதயா - யாழ்ப்பாணம்)

கப்டன் ஈழத்தேவன் (தங்கராசா மோசிகரன் - யாழ்ப்பாணம்)

லெப். அருண் (பத்மநாதன் திவாகரன் - யாழ்ப்பாணம்)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.[/size]

http://www.facebook.com/karumpulimaveerarkal

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

வீர வேங்கைகளுக்கு நினைவு நாள் வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

ஒப்பில்லாத அந்த வீர மறவர்களுக்கு எமது ஆழ்ந்த வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் அதுவும் விமான படைத்தளத்திற்குள் ஊடுருவி சென்று தாக்குதல் நடத்திய திறமைசாலிகள். வீர வணக்கங்கள்.

இப்படியான பலரும் உயிருடன் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இனிவரும் காலத்தில் போர் நடக்குமானால் தற்கொலை தாக்குதலை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் இறக்க இறக்க ஈழப்பற்றாளர்கள், திறமைசாலிகள் குறைந்து செல்ல ஈழத்துக்கெதிரானவர்கள், காட்டிக்கொடுப்பாளர்கள் அதிகரித்துக்கொண்டு செல்கிறார்கள். எனவே தாக்குதலை நடத்தி விட்டு தப்பி செல்லும் வகையில் அவர்கள் தாக்குதல் வியூகம் அமைய வேண்டும்.

[size=4]மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..![/size]

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]எல்லாளன் நடவடிக்கை - ஐந்தாம் ஆண்டு நினைவு[/size]

[size=5]el.JPGஎல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியிருக்கிறார்கள்.

இந்தவகையில்தான் வன்னிமண்ணை போரிருள் சூழத் தொடங்கியபோது அதனை முறியடித்து ஒளியேற்றுவதற்கான பெரும்பணியை நிறைவேற்றுவதற்காக லெப்.கேணல் இளங்கோ தலைமையில் 21 வீரர்கள் சிறப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.[/size]

[size=5]eelamheros.jpg[/size]

[size=5]லெப்.கேணல் இளங்கோ – அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது.

எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும்.

உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது.

சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது.

21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது.

லெப். கேணல் வீமன் – பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார்.

மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் - யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன.

வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது.

இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான்.

வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர்.

அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார்.

பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான்.

லெப்.கேணல் மதிவதனன் – என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது.

அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது.

பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான்.

மேஜர் இளம்புலி – இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது.

இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான்.

இவர்களோடு,

கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா,

கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன்,

மேஜர் சுகன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன்,

மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன்,

கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார்,

கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன்,

மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன்,

கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார்,

கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார்,

கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ்,

கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ்,

லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன்,

கப்டன் பஞ்சசீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன்,

மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி,

கப்டன் ஈகப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி,

கப்டன் அருள்மலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா,

கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

அனுராதபுர மண்ணில் பகைவரின் வானூர்திகளை அழித்து வன்னி முற்றுகைக்கான முதலடியைக் கொடுத்த இந்த வீரமறவர்களின் தியாகத்தை வீண்போகாமல் காக்கப்பட வேண்டும். எல்லாளன் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்.[/size]

[size=5]http://www.vannionline.com/2010/10/blog-post_9967.html[/size]

[size=3]இந்தத் தாக்குதல் புலிகள் மீதான உலகப் பார்வையை மாற்றியது. ஏற்கனவே தீவிரவாதப் பட்டியலில் வைத்திருந்த கனடாவும், அமெரிக்காவும் தமது நிலைப்பாட்டை மேலும் இறுக்கின. இவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள், அதற்கான நிதி கிடைக்கின்றன என்ற விடயத்தை தோண்டத் தொடங்கின. புலிகளின் இந்த அபரித வளர்ச்சியால் கதிகலங்கிய இந்தியா களத்தில் குதிக்கவே, போட்டிக்கு சீனாவும், பாகிஸ் தானும் இலங்கைக்கு உதவிக்கு வந்தன.[/size]

[size=3]கடந்தகாலம் தமிழர்களிடமிருந்து மிக வேகமாக அரிக்கப்படுகின்றது. நம்மைக் கடந்து போகும் ஒவ்வொரு கணமும் வலிகளாலும், மனித சமூகம் எதிர்கொள்ளவே முடியாத துயரங்களாலும் நிரம்பியவை. ஆனால், அவை நம்மில் தங்குவதில்லை. முகாமிடுவதில்லை. மிகுகதியில் அழிந்துவிடுகின்றன. நினைவழிதலின் அரசியல் எனும் விடயம் இங்கு மட்டும் தான் விரைவான தன் செயற்றிறனைக் காட்டியிருக்கின்றது. உலகில் போராடித் தோற்ற வேறு எந்த இனங்களிடமும் காணப்படாத ஓர் அரிய, தவிர்க்கப்பட வேண்டிய பண்பாடாக நாம் வைத்திருக்கின்றோம்.[/size]

[size=3]ஏன் கடந்தகாலம்?[/size]

[size=3]நமது நாள்கள் குருதியால் நிரம்பியவை. இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தொடங்கிய இந்த இரத்தப் பெருக்கெடுக்கும் இலங்கைத் தமிழரின் வரலாறானது, 1983இலிருந்து வீரியம் பெற்றது. 2009 இல் ஒட்டுமொத்த வெறியையும் நம் மீது கட்டவிழ்த்தது. இந்த நாள்களில் கொப்பளித்து அடங்கி, நாறிப்போன குருதிக்குள், குழந்தைகள், கருவில் இருந்த சிசுக்கள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள், ஆண்கள் என அனைவருமே மூழ்கினர்.[/size]

[size=3]அவர்கள் அனைவரும் சிந்திய குருதியின் வண்ணத்தில் தான் நம் ஒவ்வொருவரின் காலைகளும் விடிந்தன. சாவு விழும் என்ற எதிர்பார்ப்புடனும், சாவை பற்றிய செய்தி வரும் என்ற எதிர்பார்ப்புடனேயுமே சனங்கள், பக்கங்களையும், பத்திரிகைகளையும் பார்த்த காலம் இன்னும் ஆறவில்லை.[/size]

[size=3]365 நாள்கள் நம் சாவுக்கு போதாது[/size]

[size=3]உலகில் சிறியதொரு இனமாக இருந்து கொண்டு, எப்படி ஒவ்வொரு நாளும் சாவை வைத்துக் கொள்ள முடிகின்றது? இதற்கான விடை நாம் வேட்டையாடப்பட்டதிலும், வேட்டையாடப்பட்டதற்கான காரணாகாரியங்களிலுமே உள்ளது. தமிழர்கள் இந்தத் தீவில் வாழவே கூடாது என்ற எண்ணம் சாவுகளை நம் மீது அள்ளிவீசியது. பால், வயது வேறுபாடறுக்கப்பட்ட சாவுகள், தமிழர் நிலம் முழுவதும் விதைக்கப்பட்டன.[/size]

[size=3]இந்த சாவு விதைப்புக்கும், அதன் அறுவடைக்கும் 365நாள்களும் போதாமலிருந்தன. ஒவ்வொரு குடிசையிலும், ஒன்றுக்கு மேற்பட்ட சாவுச் செய்திகள் நாள் தோறும் இருந்தன. இருக்கின்றன. அதனால் தான் நம் மத்தியில் சாவுகளை நினைவு கொள்வதற்கு நாள்கள் போதாமலிருக்கின்றன. அதனாலேயும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியவைகளை மறந்தே போனோம்.[/size]

[size=3]நினைவழிதலின் அரசியலை விளங்கிக் கொள்ளுதல்[/size]

[size=3]இன்று உலகம் முழுவதும் அமெரிக்காவுக்குப் பயன்படாத தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் விரைவான தோல்வியை சந்தித்து வருகின்றன. அவை விரைவாகவே தீவிரவாத விளம்பரங்களைப் பெற்றும் விடுகின்றன. அத்தோடு இன விடுதலைக்காக வீழ்ந்த அத்தனை உயிர்களும் வீணான சாவுகளின் பட்டியலில் தம்மை இணைத்துக் கொள்கின்றன.[/size]

[size=3]அந்த சாவுகள் பெறுமதியற்றவையாக, சிங்கள புத்தரின் மொழியில் வாழத் தகுதியற்றவனவாக வரலாற்றில் பதிவுசெய்து கொள்கின்றன. ஆனால் போராடும் இனங்களின் பக்கம் நின்று பார்த்தால், இந்தச் சாவுகள் நினைவில் வைக்கப்பட வேண்டியவை. ஆனால் இன விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கும் அரசுகள் அவ்வாறான நினைவுகளையும் அழிப்பதில் கனகச்சிதமாக செயற்படுகின்றன. அதற்கான செயற்பாடுகளையே நினைவழிக்கப்படுதலின் அரசியல் என அழைக்கின்றனர்.[/size]

[size=3]எப்படி அழிக்கப்படுகின்றது நினைவு[/size]

[size=3]இலங்கையில் புலிகள் தனி இராச்சியம் ஒன்றையே நிறுவியிருந்தார்கள். பல இடங்களில் அவரகளது போராட்ட நினைவுச் சின்னங்கள் இருந்தன. குறிப்பாக மாவீரர் துயிலும் இல்லங்கள் பார்க்கும் ஒவ்வொரு சந்ததிக்கும் விடுதலை வேட்கையையும், போராடும் குணத்தையும் கடத்தும் ஊடகங்களாக அமையப்பெற்றிருந்தன.[/size]

[size=3]மக்கள் வணங்கிச் செல்லும் ஆலயநிலையை அவை எட்டியிருந்தன. அந்த இடங்களைக் கடக்கும்போது பேருந்துகளில் பாடல்கள் ஒலிப்பதில்லை. வாகனங்கள் அசைவொலி எழுப்புவதில்லை. அவ்வளவுக்கு மரியாதைக்குரிய நினைவுகளாக அவை பாதுகாக்கப்பட்டன. ஆனால், இன்று திட்டமிட்டவகையில் நினைவழிக்கும் அரசியல் படலம் அந்த புனித மையங்களிலெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றது.[/size]

[size=3]அந்த இடங்களில் இப்போது எந்த நினைவும் இல்லை. அனைத்துமே கிளறப்பட்டாயிற்று. அண்ணனின் நினைவு மீது தம்பி கிரிக்கெட் விளையாடும் மைதானங்கள் உருவாக்கியளிக்கப்பட்டுள்ளன. போராட்டம் தோற்று 3 வருடங்களுக்குள் நினைவுத் தரைகள், வெறும் கட்டாந்தரைகள் ஆகிவிட்டன. இப்படித்தான் ஒவ்வொரு நினைவிடமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.[/size]

[size=3]போராடிய மக்களுக்கு வேறொரு உலகில் வாழும் எண்ணத்தை வழங்கக் கூடிய சூழலை உருவாக்குவதற்கான பணிகள் தீவிரம் பெற்றுவருகின்றன. அதில் முக்கால்வாசிக்கு மேல் வெற்றியும் அடைந்தாயிற்று. இன்று வன்னியில் போரில் காயம்பட்ட கட்டடங்களைக் கூட காணக்கிடைப்பதில்லை. அனைத்தும் ஐ.என்.ஜீ.ஓவும், அரசு சார்ந்த நிறுவனங்களாலும் பூசி மெழுகப்பட்டுள்ளன. ஆக போரில் காயப்பட்ட அப்பாவின் நினைவை மட்டும் அவரின் மகனும், அந்த மகனின் நண்பர்களும் சுமக்கின்றனர். அதுவும் இந்த அப்பா, அப்பப்பா ஆகும் போது மறக்கப்பட்டுவிடும்.[/size]

[size=3]ஒரு நினைவு[/size]

[size=3]இன்று 22ஆம் திகதி. 2007 ஆம் ஆண்டும் இதே போன்றதொரு 22 ஆம் திகதி வந்தது. ஆனால் அது இந்த முறை போன்று மௌனித்த பெருவெளிக்குள் இயங்கவில்லை. அந்த நாள் தொடங்கி மாதக்கணக்கில் பெரும் ஆரவாரம் இருந்தது. உலகம் இரண்டாவது தடவையாக தமிழர்பக்கம் திரும்பியது இந்த 22 இல் தான். அந்த ஆபத்தான பார்வையை இந்த 22 தான் தந்தது.[/size]

[size=3]இந்த நாள் இது போன்றதொரு ஆச்சரிய செய்தியைத் தருமென்று சனங்கள் யாருமே நினைக்கவில்லை. அன்றும் வழமையாக புலிகளின் குரல் வானொலி 6.30 இற்கு ஆரம்பமாகியது. ஆனால் அன்று மட்டும் தொடக்கத்தில் வரும் அறிவிப்பாளர்கள் இருக்கவில்லை. தன் குரலினால் போர்க்களத்தையே கொண்டுவரும் தி.தவபாலன் (தி.இறைவன்) மைக்கை பொறுப்பெடுத்திருந்தார். அன்று முழுதும் அவரின் கையில் தான் அது இருக்கப் போகின்றது என்ற விடயம் ஆரம்பத்தில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை.[/size]

[size=3]அதிகாலை 3 மணியளவில் அனுராதபுரம் விமானப் படைத்தளத்துக்குள் நுழைந்த 21 பேர் கொண்ட விசேட கரும்புலிகள் அணி அந்த தளத்தையும், அங்கிருந்த விமானங்களையும் தாக்கியளித்தது என்ற செய்தி அனைத்து சனங்களையும் சுவாரஸ்யமாக்கியது.[/size]

[size=3]வெற்றிப் பாடல்களுக்குள்ளும், தவபாலன் எப்போது வாயைத் திறப்பார் என்ற ஆவலுக்குள்ளும் வானொலிப் பெட்டியடியில் பலர் படுக்கை போட்டனர்.அவரும் சளைக்காமல் அந்தத் தாக்குதல் தொடர்பான நேரடி வர்ணனையை வழங்கிக் கொண்டிருந்தார். எப்படிப் பயிற்சி பெற்றனர்? எப்படி நுழைந்தனர்? எப்படி தாக்கினர்? எவ்வளவு பெறுமதியிழப்பு போன்ற தகவல்களை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டேயிருந்தார்.கிளிநொச்சி இளைஞர்கள் பட்டாசுக் கொளுத்திக் கொண்டாடினர்.[/size]

[size=3]அன்று காலை வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையில் தாக்குதல் குறித்து எந்தச் செய்திகளும் இருக்கவில்லை.அதனால் மாலையில் விசேட பதிப்பொன்று வந்தது. அதில் தம் உயிரை இழந்த முகங்கள் கடைசிப் புன்னகையுடன் இருந்தன. அவர்களின் முகங்களைக் கண்டதிலிருந்து சனங்கள் மத்தியிலிருந்து வெற்றிக் கொண்டாட்டங்கள் அடங்கிப் போயிற்று.[/size]

[size=3]அன்று தொடங்கிய தாக்குதல் பற்றிய கதைகளும், செய்திகளும் பல மாதங்கள் நீடித்தன. ஒவ்வொரு பத்திரிகையும் புலிகளின் பலத்தையும், இலங்கை இராணுவத்தின் பலவீனத்தையும், இழப்பையும், அதற்குப்பிறகு இலங்கையில் ஏற்படப் போகும் மாற்றத்தையும் பலவாறாக எழுதித் தொலைத்தன. ஆனால் 2009 இல் முடிந்த யதார்த்தம் அவை எழுதியதிலிருந்து முற்றாக மாறுபட்டிருந்தன.[/size]

[size=3]முதல் கூட்டுத் தாக்குதல்[/size]

[size=3]விடுதலைப்புலிகள் சமாதானகாலத்தின் முடிவில் அபரிதமான ஆயுத வளர்ச்சியைக் கண்டிருந்தார்கள் என்று எழுதப்பட்டு வந்த நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதற்கேற்றாற் போலவே புலிகளும் மூன்று வழியிலான தாக்குதலை நடத்தியிருந்தனர். கரும்புலிகள் அணி நேரடியாகத் தாக்குதலில் ஈடுபட, புலிகளின் விமானப்படையும் சமநேரத்தில் தாக்குதல் நடத்தியது. பக்க பலத்திற்கு புலிகள் பக்கமிருந்து ஆட்லெறி எறிகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது.[/size]

[size=3]ஆகவே அந்த அரசியல் ஆய்வாளர்கள் அனைவரினதும் கருத்துக்கள் நிஜப்பட்டதாகவே தொடர்ந்தும் புலிகளுக்கு உசுப்பேத்தினர். இதுவரை உலகில் வேறு எந்த விடுதலை இயக்கமும் இதுபோன்ற ஒருங்கிணைப்புத் தாக்குதலை நடத்தவில்லையெனவும், இது அதீத வளர்ச்சி எனவும் முழங்கினர்.[/size]

[size=3]உலகின் பார்வை மாறியது[/size]

[size=3]ஆனால் இந்தத் தாக்குதல் புலிகள் மீதான உலகப் பார்வையை மாற்றியது. ஏற்கனவே தீவிரவாதப் பட்டியலில் வைத்திருந்த கனடாவும், அமெரிக்காவும் தமது நிலைப்பாட்டை மேலும் இறுக்கின. இவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள், அதற்கான நிதி கிடைக்கின்றன என்ற விடயத்தை தோண்டத் தொடங்கின. புலிகளின் இந்த அபரித வளர்ச்சியால் கதிகலங்கிய இந்தியா களத்தில் குதிக்கவே, போட்டிக்கு சீனாவும், பாகிஸ்தானும் உதவிக்கு வந்தன. புலிகளுக்கு எதிராகப் இலங்கை அரச படைகள் பயன்படுத்த இந்த நாடுகள் அனைத்துமே போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களை வாரிக் கொட்டின.[/size]

[size=3]2009 முடிவுவரை அந்த நிலை தான் தொடர்ந்தது. புலிகளை ஒடுக்குவதற்கான சந்தர்ப்பங்கள் அவர்களாலேயே உருவாக்கிக் கொடுக்கப்பட்டதென உசுப்பேற்றிய பத்திரிகைகள் மறுபடியும் எழுதத் தொடங்கின. சீனாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் இலங்கைக்குள் கால்வைப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்கு அனுராதபுரத்தாக்குதல் இப்படித்தான் உதவியது.[/size]

[size=3]பிணங்களைக்கொண்டாடிய சிங்களவர்கள்[/size]

[size=3]அன்று மாலையே சிங்களத் தொலைக்காட்சிகள் ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பின. அனுராதபுரத் தாக்குதலில் மரணித்த போராளிகளின் நிர்வாண உடலங்கள் வாகனப் பெட்டிகளில் கட்டி தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டன. சிங்கள மக்கள் அதனைப் பார்வையிட்டு பெருமூச்செறிந்தனர். எதைக்கொடுத்தாவது இவர்களை அழித்தொழிக்க வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்டனர்.[/size]

[size=3]2009 முடிவுக்கு தம்மாலான அனைத்து உதவிகளையும் ஆட்சியாளர்களுக்கு சிங்கள மக்கள் வழங்கினர். இப்போதும் இந்த அரசு தாங்க முடியாத பொருளாதார சுமைகளை அந்த மக்கள் மீது சுமத்துகின்ற போதும் தமது ஆதரவை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதற்கு அந்த மக்களின் கனவை இந்த அரசு நிறைவேற்றி வைத்தது தான் பிரதான காரணி. அந்த வெற்றியின் நினைவே சிங்கள மக்கள் மத்தியில் இந்த அரசை கதாநாயகப்படுத்தியிருக்கின்றது. இப்படியான ஒரு கடந்த கால நினைவையும் நாம் வைத்திருக்கின்றோம்![/size]

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.