Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்சார சபையின் கவனயீனத்தால் ஹாட்லி கல்லூரி மாணவன் உயிரிழப்பு; மக்கள் கடும் சீற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பருத்தித்துறை தம்பசிட்டி கட்டப்பாதி ஒழுங்கையில் மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த ஹாட்லிக் கல்லூரி உயர்தர உயிரியல் பிரிவு மாணவன் மு.கலாகரன் (வயது 17) உயிரிழந்துள்ளார்.

மின்சார சபையின் பொறுப்பற்ற தன்மையாலேயே இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதிகாலை தொடக்கம் பெய்த கடும் மழை காரணமாக இந்த வீதியில் மின்கம்பியொன்று அறுந்து தொங்கியது. இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கரவெட்டியிலுள்ள பிரதேச அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அது சீர்செய்யப்படவில்லை.

இந்நிலையில் மாலை 6 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றுவிட்டு இந்த ஒழுங்கையால் வந்து கொண்டிருந்த மேற்படி மாணவன் மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கியத்தில் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். மாணவனின் சடலம் நேற்றிரவு வரை அந்த இடத்திலேயே இருந்தது.

மின்சாரம் தாக்கியதில் மாணவன் உயிரிழந்த செய்தியறிந்த பின்னரே மின்சார சபையினர் இந்தப் பகுதிக்கான மின்சாரத்தை துண்டித்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பருத்தித்துறை கடற்கரை வீதி உள்ளிட்ட பல இடங்களில் கடும் காற்று காரணமாக சில மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் வட மராட்சியின் சில பிரதேசங்கள் நேற்று இருளில் மூழ்கியிருந்தன. இது தொடர்பில் மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சம்பவ இடங்களுக்கு வருகை தரவில்லையென்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்

http://www.thinakkur...ffna&Itemid=459[/size]

[size=4]அநியாய இறப்பு :( [/size]

[size=4]இப்படியான இறப்புக்கள் தொடரவே செய்யும். காரணம், மக்கள் எந்தவிதமான நீதியையும் பெறமுடியாத நிலையில் சிங்கள ஆட்சியில் உள்ளனர்.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி. அத்தோடு அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதேவேளை பருத்தித்துறை கடற்கரை வீதி உள்ளிட்ட பல இடங்களில் கடும் காற்று காரணமாக சில மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் வட மராட்சியின் சில பிரதேசங்கள் நேற்று இருளில் மூழ்கியிருந்தன. இது தொடர்பில் மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சம்பவ இடங்களுக்கு வருகை தரவில்லையென்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்

இறந்தவருக்கு என் அனுதாபங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய ஒரு மரணம்!

ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.