Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களிடம் இசை ஞானம் இல்லை தேச தாகமே உண்டு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எங்கே காழ்ப்பிருக்கின்றது. மாவீரர் காலத்தில் களியாட்டங்கள் வேண்டாம் என்ற ஆதங்கமே நெடுக்ஸின் கவிதையில் தொக்கி நிற்கின்றது.

//இசைஞானியின் மீதான எதிர்ப்புணர்வை அதிகம் வெளிக்காட்டி இருக்கிறது.//

மீண்டும் தவறாக விளங்கிக் கொள்கின்றீர்கள். இங்கு யாருக்கும் இசைஞானி மீது வெருப்புக்கிடையாது. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் வேண்டாம் என்பதே இங்கு வெளிப்படையான கோரிக்கை. அதை திரிபு படுத்தாதீர்கள்.

//இசை இல்லாமல் நீங்கள் நான் உட்பட யாருமே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் கூற முடியுமா? :rolleyes://

அதெப்படி ..? இசையை உட்கொண்டு யாரும் உயிர்வாழ்வதில்லை... வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் உணவைப் போல நீரைப்போல இசை உயிர்வாழ்தலுக்கு இன்றியமையாதது அல்ல... ஆகவே இசையில்லாது எல்லோரும் இருக்கலாம்.

ஆடு மாடு காட்டில் வாழும் விலங்குகள் எல்லாம் இசைக்கச்சேரி கேட்டுத்தான் உயி வாழுகின்றன என்று சொல்வீர்கள் போலிருக்கின்றதே.

இசை மனதின் சவுந்தரியங்களை மீட்டுக்கொள்ள உதவுமே ஒழிய உயிவாழ்தலுக்கல்ல...

//இசையின் ஆரம்பம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் கூற முடியுமா?//

உங்கள் வீட்டிலிருந்து தான் என்று சொல்வீர்கள் போலுள்ளதே.. :D

இருந்தால் காப்புரிமை போட்டு வைத்துக் கொள்ளுங்கள் :D காக்காய் கொத்திக் கொண்டு போகப்போகின்றது :lol: :lol:

என்ன எல்லாளரே!

இங்குள்ள எல்லோரையும் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறீர்கள் போல் இருக்கிறது....

நெடுக்கின் கவிதையில் உள்ள கருத்தை மட்டுமே நான் கேட்டேன்... அதற்கு மேலால் வேறு எந்த விடயத்தையும் நான் தொடவில்லை. நெடுக்கு பதில் எழுதாத சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி மற்றவர்களைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்ப்பதை ஏற்க முடியவில்லை. இதுவரை இத்திரியில் நான் இரண்டு கருத்துக்களை மட்டுமே பதிவிட்டேன் அதுவும் நெடுக்கிடமே என்னுடைய கருத்தும் கேள்வியும் முன்வைக்கப்பட்டது. எதற்கும் நான் எழுதிய இரு கருத்துக்களையும் ஒழுங்காக வாசித்துப்பாருங்கள் :icon_mrgreen:

  • Replies 109
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவர் பதிலளிக்கவில்லை என்பது போல் நீங்களும் அவருடைய இந்த கேள்விக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.

அக்கா உங்களிடமிருந்து இவ்வாறானதொரு கருத்து வரும் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. யாழில் இதுவரை சரியாக தான் எழுதி வருகிறேன் என்று அடிக்கடி கூறுவீர்கள்...

இந்த திரியில் பலரும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்து வந்து இசைஞானியையும் மாவீரர்களையும் பயன்படுத்தி நெடுக்ஸ் அண்ணாவை தாக்கி எழுதுகிறார்கள். அவர்கள் சந்தோசப்படும் வகையில் உங்கள் கருத்தும் அமைந்துள்ளது.

இளையராஜாவின் இசை நிகழ்வுக்கு போக தான் வேண்டும் என்றால் செல்லுங்கள். அது பற்றி கருத்திடுங்கள். ஆனால் மற்றவர்களை எள்ளி நகையாடும் கருத்துகள் வேண்டாம். அது உங்கள் மேலான மதிப்பை நீங்களே குறைத்துக்கொள்வது போலானது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். :)

[size=1]நியானி: தணிக்கை[/size]

துளசி நீங்கள் என்ன எழுதினீர்கள் நியானி எதனை வெட்டினார் என்பது எனக்குத் தெரியாது.

அம்மா தாயே நான் நெடுக்கிடம் கேட்டது கவிதை தொடர்பான கேள்வி. அதற்குப் பதில் அளிக்காமல் திசை திருப்பி கேள்வி கேட்டது நெடுக்கு முதலில் என்னுடைய கேள்வியை நெடுக்கு புரிந்து கொள்ளவில்லையாயின் தனக்குப் புரியவில்லை உங்கள் கேள்வியின் சாரம் என்ன என்று அவர் கேட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு தொடர்பற்ற ஒரு கேள்வியை முன்வைத்து அதற்கு நான் பதில் அளிக்கவில்லை என்று நீங்கள் குறை பிடித்து வந்திருப்பது........ மிகவும் வருந்தத்தக்கது.

துளசி மற்றவர்கள் நெடுக்கைத் தாக்கி மகிழும்போது நீங்களும் இப்படி எழுதியது தவறு என்று சொல்லாதீர்கள். உங்களைக் காட்டிலும் நெடுக்கில் எனக்கு மிகுந்த பாசமும் வாஞ்சையும் உண்டு. அதற்காக அவர் எழுதிய கவிதையில் இருக்கும் சிறு மறுவை அதுவும் இப்போதுள்ள தருணத்தில் அவர் தவிர்த்திருக்கலாம். அதை அவர் முழுமையாக சரியென்று வாதிடும்போது அதனைத் தவறென்று சுட்டிக்காட்ட எனக்கு ஒரு அக்காவாக உரிமை இருக்கிறது. அவருக்குச் சரியென்று படுவது எனக்கு தவறென்று படுகிறது அதனை இங்கு வெளிப்படுத்தியிருந்தேன். இது கருத்துக்களம் அவரவர் கருத்தை அவரவர் பதிகின்றனர். இப்போது நீங்கள் சொல்லிய கருத்திற்கும் நான் பதில் பதிவிடுகின்றேன். இதில் நீங்கள் மனந்தாக்குவதற்கு ஏதேனும் இருக்கிறதா?

"இளையராஜாவின் இசை நிகழ்வுக்கு போக தான் வேண்டும் என்றால் செல்லுங்கள். அது பற்றி கருத்திடுங்கள். ஆனால் மற்றவர்களை எள்ளி நகையாடும் கருத்துகள் வேண்டாம். அது உங்கள் மேலான மதிப்பை நீங்களே குறைத்துக்கொள்வது போலானது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். :)"

[size=5]இதற்கு என்ன அர்த்தம்?[/size]

[size=5]நான் இந்தத்திரியில் இதனைப்பற்றி ஏதாவது எழுதியிருக்கிறேனா? தயவு செய்து இதற்கு பதில் தாருங்கள் உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும்[/size] :rolleyes:

ஒண்டும் பிழையாக எழுதவில்லை. இன்னொருவரின் பெயரை எழுதியிருந்தேன். அதனால் அதனை தணிக்கை செய்திருந்தார்கள்.

சரி... அதே கேள்வியை நானும் கேட்க இருந்தேன். எனவே எனக்கு பதிலளியுங்கள். :)

மற்றவர்கள் போல் நீங்களும் அவரை தாக்கி எழுதுவதாக நான் கூறவில்லை. ஆனால் அவரை நீங்கள் நக்கலடித்து கருத்து எழுதியிருந்தமை அவரை மனதளவில் பாதிக்கக்கூடிய ஒரு விடயம், மற்றவர்களுக்கு ஒரு சந்தோசத்தை கொடுத்திருக்கும் விடயம் என்பதை கூறியிருந்தேன். நீங்கள் நக்கலடிக்காமல் தவறை மட்டும் சுட்டிக்காட்டி இருந்திருந்தால் நான் அவ்வாறு கூறியிருக்க மாட்டன்.

இவ்வளவு காலம் உங்களை யாராவது எவ்வளவு கோபப்படுத்தி எழுதினாலும் அமைதியாக இருந்த நீங்கள் இளையராஜாவின் இசை நிகழ்வு தொடர்பான சர்ச்சை தொடங்கியதிலிருந்து மற்றவர்களை கேலி செய்வது போன்ற கருத்துகளை இடுவதை வேறு திரியிலும் அவதானித்துள்ளேன். இளையராஜா மீதான உங்கள் பற்று தான் நீங்கள் இவ்வாறு எழுத காரணம் என்று நினைத்து கேட்டேன். :) தவறாக இருப்பின் மன்னித்து கொள்ளுங்கள்.... :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் பிழையாக எழுதவில்லை. இன்னொருவரின் பெயரை எழுதியிருந்தேன். அதனால் அதனை தணிக்கை செய்திருந்தார்கள்.

சரி... அதே கேள்வியை நானும் கேட்க இருந்தேன். எனவே எனக்கு பதிலளியுங்கள். :)

எந்தப்பதிலை எதிர்பார்க்கிறீர்கள்.... நாங்கள் போடுவது வெளிவேசம் என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும் என்றுதானே..... ஆமாம் நாங்கள் போடுவது வெளிவேசம் நாங்கள் இப்படித்தான். ஏனென்றால் எங்களுக்கு தமிழீழத்தில் எத்தகைய இழப்போ பாதிப்போ ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக உங்களைப்போல் நெடுக்குவைப்போல்தான் இருந்திருப்போம். அதனால் தமிழீழத்தில் எவ்வித பாதிப்பையும் அடையாத எங்களுக்கு உங்களுடைய உணர்வுகளை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. மன்னிக்கவும்

மற்றவர்கள் போல் நீங்களும் அவரை தாக்கி எழுதுவதாக நான் கூறவில்லை. ஆனால் அவரை நீங்கள் நக்கலடித்து கருத்து எழுதியிருந்தமை அவரை மனதளவில் பாதிக்கக்கூடிய ஒரு விடயம், மற்றவர்களுக்கு ஒரு சந்தோசத்தை கொடுத்திருக்கும் விடயம் என்பதை கூறியிருந்தேன். நீங்கள் நக்கலடிக்காமல் தவறை மட்டும் சுட்டிக்காட்டி இருந்திருந்தால் நான் அவ்வாறு கூறியிருக்க மாட்டன்.

நான் நக்கலாக கருத்தெழுதியிருந்ததை உங்களால் நிரூபிக்கமுடியுமா?.... முடியுமென்றால் நிரூபியுங்கள்.

இவ்வளவு காலம் உங்களை யாராவது எவ்வளவு கோபப்படுத்தி எழுதினாலும் அமைதியாக இருந்த நீங்கள் இளையராஜாவின் இசை நிகழ்வு தொடர்பான சர்ச்சை தொடங்கியதிலிருந்து மற்றவர்களை கேலி செய்வது போன்ற கருத்துகளை இடுவதை வேறு திரியிலும் அவதானித்துள்ளேன். இளையராஜா மீதான உங்கள் பற்று தான் நீங்கள் இவ்வாறு எழுத காரணம் என்று நினைத்து கேட்டேன். :) தவறாக இருப்பின் மன்னித்து கொள்ளுங்கள்.... :)

எனக்கு இளையராசா மீது ஆழ்ந்த காதல் அதனால்தான் கோபப்படுகின்றேன் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் உங்களை மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

எந்தப்பதிலை எதிர்பார்க்கிறீர்கள்.... நாங்கள் போடுவது வெளிவேசம் என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும் என்றுதானே.....

நான் நக்கலாக கருத்தெழுதியிருந்ததை உங்களால் நிரூபிக்கமுடியுமா?.... முடியுமென்றால் நிரூபியுங்கள்.

நீங்கள் போடுவது வெளிவேசம் என்று நான் கூறினேனா? நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்... நீங்கள் யாழிலும் யாழுக்கு வெளியிலும் தமிழீழ பாதையில் நீண்ட தூரம் பயணித்தவர். நீங்கள் என்றும் என் நம்பிக்கைக்குரியவர் அதில் மாற்றமில்லை.

இதை தான் குறிப்பிட்டேன்... இதை எழுதாமல் தவிர்த்திருக்கலாம் என்று கூறினேனே தவிர உங்களை குறை சொல்லும் நோக்கம் அல்ல. புரிந்துகொண்டு இருவரும் இவ்விடயத்தை விட்டு விடலாம். :)

நீண்ட பந்திகளாக எழுதுவதில் நீங்கள் திறமைசாலி ஆனால் தெளிவான பதிலை உதிர்க்கும் அளவுக்கு உங்கள் பந்தி எழுத்துக்கள் பயன்படுவதில்லை. உங்களிடம் உள்ள ஒரு தன்மை, எதிராக வாதிடுபவர்களைக்குழப்பிவிடும் அளவுக்கு நிறைய பந்திபந்தியாக எழுதி குவிப்பதில் வல்லவர். எதிர்கருத்துச் சொல்பவர்களுக்கு உங்கள் குழப்பம் நிறைந்த பந்திகளை வாசிப்பதில் ஏற்படும் அலுப்பே மேற்கொண்டு கருத்தை முன்வைக்கவிடுவதில்லை. புத்திசாலி :lol:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அட உண்மையை எழுதினா இதை நக்கல் என்று எடுக்கிறீங்களே... :o

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் உங்களுடைய பிரச்சினை என்ன?

ஒரு துக்கவீடு முடிந்து 8ஆம் நாள் பால்தெளித்தவுடன் அவர்கள் தங்கள் துக்கத்தை முடித்து விட்டு ஆடலாம் பாடலாம் என்று சொல்கின்றீர்களா?

ஒரு விரத காலம் ஆரம்பிக்க முதலே வீடெல்லாம் சுத்தப்படுத்தி கழுவி மெழுகி ஆயத்தங்கள் முன்னரே ஆரம்பிப்பதில்லையா?

அது போலத்தான் இதுவும்.. மாவீரர் காலம் ஆரம்பிக்கும் முன்னரே அதற்கான மன தயார்படுத்தலுக்கான அவகாசம் எங்களுக்கு வேண்டும். அக்காலங்களில் இத்தகைய உள்ளக வெளியக களியாட்டங்களை தவிர்த்துக் கொள்ளவே முயல்கின்றோம்.

அதனாலேயே இந்த இசை நிகழ்ச்சி நவம்பர் மாதத்தில் வேண்டாம் என்கின்றோம்.

உங்களைப்போல அந்த நிகழ்ச்சியில் கலந்து விட்டு நேரே மாவீரர் நிகழ்வில் கலந்து கொண்டு துக்கம் காட்ட எங்களால் முடியவில்லை. எங்களுக்கு இந்த புனிதமான தயார்ப்படுத்தலுக்கு அமைதியான சூழ்நிலை தேவை.

அவ்வளவு தான் .. அதற்காக மாவீரர் வாரத்திற்கு முன்னுள்ள சில காலங்கள் அமைதியான மன ஒருநிலைப்படுத்தல் சாத்தியமாக வேண்டும்.

இவ்வாறான நிகழ்ச்சிகள் நடாத்த மீதி 11 மாதங்கள் இருக்கின்றனவே. ஏன் இதற்குள் தான் நடாத்துவோம் என்று அடம்பிடிக்கின்றீர்கள் என்பது தான் எங்கள் ஆதங்கமும் அதன் எதிர்ப்பும் தான் இதுவே ஒழிய இசையின் மீதுள்ள கோபமோ இளையராஜாவின் மீதுள்ள அவமதிப்போ அல்ல.

நீங்கள் மாவீரர் வாரத்தை அனுட்டிக்கின்றீர்கள் நாங்கள் அதை ஒரு மாதமாக அனுட்டிக்கவிரும்புகின்றோம்.

உங்களுக்குத் தெரியுமா? பலர் தங்கள் ஆயுளையே அவர்களை நினைந்து கதறிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது.

இதை அறிந்தவர் யாராவது நவம்பரில் இந்நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவார்களா?

நம் தேசம் பற்றியும் அதன் வலி இழப்புகளும் புரிந்து கொண்டவர்களால் இப்படி கல்நெஞ்சம் கொண்டவராகப் பேசிடத்தான் முடியுமா?

மற்றும் படி கல்லாப்பெட்டி நிறைப்பதோ மற்றவனை ஒழிப்பதோ நமது நோக்கம் அல்ல. உண்மையிலேயே இன உணர்வுள்ளவர்கள் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களிடம் ஏன் இந்த மாதத்தை தெரிவு செய்தீர்கள் என்ற ஒற்றைக் கேள்வியை ஆவது வீசியிருப்பார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இன மண் உணர்வுள்ளவர்கள் தான் இங்கு மாவீரர் காலத்தில் இந்நிகழ்ச்சி நடக்க வேண்டுமென்று கச்சை கட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களோ அல்லது எம் இன மண் உணர்வுகளைச் சிதைக்க நினைத்து (அப்படி யாரேனும் உண்மையிலேயே இருந்திருப்பார்களேயானாலும்)அவர்களைத் தூண்டி விட்டவர்களோ இங்கு வாதிடவோ தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கவோ இல்லை என்பதையும் எண்ணிப்பாருங்கள்.

முதலில் ஓடுபவனை விட முழுவதும் ஓடி முடிப்பவனே வெற்றியாளன் என்பது என் கருத்து.

83 இனக்கலவரம் ஆடி மாதத்தில் நடந்தது. ஆகவே ஆடியில் எந்த வித களியாட்ட வைபவங்களும் செய்யக்கூடாது. 2009 வைகாசியில் பல ஆயிரம் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்ட கரி நாட்கள்.எனவே எந்த வித களியாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. கார்த்திகை மாதத்தில் மாவீரர் நாள் கொண்டாடுவதால் கார்த்திகையிலும் எந்த வித களியாட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்பது உங்கள் வாதம்.

வி.புலிகள் எப்போதாவது கார்த்திகை மாதத்தை மாவீரர் மாதமாக கொண்டாடும் படி கேட்டார்களா அல்லது கொண்டாடினார்களா என்றால் இல்லை. ஏன் இவ்வருடம் மட்டும் உங்கள் மனநிலையை சரிப்படுத்த கார்த்திகையை மாவீரர் மாதமாக்க வேண்டும்? 2009 ற்கு பின் தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு வெளிக்கிட்டு இருந்தாலும் போன வருடம் இதே மாதம் ஜேசுதாசின் இசைக்கச்சேரி நடைபெற்றது. அப்போ மாவீரர் மாதத்துக்கு என்ன நடந்தது? இளையராஜாவின் இசை நிகழ்வு நடை பெறும் போது மட்டும் எப்படி கார்த்திகை மாதம் மாவீரர் மாதமாகி விடும்??

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நுணா,[/size]

[size=4]முதலில், நான் 'மாவீரர் மாதம்' என்பதை ஆதரித்தோ இல்லை ஏற்றோ எங்கும் எழுதவில்லை.[/size]

[size=4]இரண்டாவதாக, நான் இந்த இசை நிகழ்ச்சி இந்த மாதம் முதல் வாரத்தில் நடப்பதை எதிர்க்கவில்லை.[/size]

[size=4]நான் கேட்டது எல்லாம் ஒரு பொது அறிவு கேள்வியே:[/size]

[size=4]- யார் இதை ஒருங்கிணைத்து நடாத்துகிறார்கள்? இவர்கள் முன்னர் ஏதாவது இசை நிகழ்ச்சியை நடாத்தியவர்களா?[/size]

[size=4]- எவ்வாறு ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இந்தப்பெரிய இசை நிழ்கச்சியை நடாத்த துணிந்தது?[/size]

[size=4]- இவர்களின் பின்னால் யாரும் உள்ளார்களா? இல்லையா?[/size]

[size=4]அப்படி இருந்தால் அது சிங்கள அரசாக இருக்ககூடாது என்பதாலேயே கேட்டேன்.[/size]

[size=4]நன்றிகள்![/size]

ஓ அப்போ உங்களின் வாதப்படி சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நிகழ்வை நிறுத்த முடியும். ஒரு பொதுமகன் சந்தேகப்படுகிறான் என்றால் நிகழ்வு நிறுத்தப்பட வேண்டும்.

எனது சந்தேகம் புலிகளின் பணத்தை தம்வசம் முடக்கியவர்கள் சிலர் தான் இந்நிகழ்வை நடாத்துவதாக ஒருவர் குறிப்பிட்டார். அந்த கோணத்தில் ஏன் உங்கள் புலநாய்வு செல்லவில்லை??

83 இனக்கலவரம் ஆடி மாதத்தில் நடந்தது. ஆகவே ஆடியில் எந்த வித களியாட்ட வைபவங்களும் செய்யக்கூடாது. 2009 வைகாசியில் பல ஆயிரம் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்ட கரி நாட்கள்.எனவே எந்த வித களியாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. கார்த்திகை மாதத்தில் மாவீரர் நாள் கொண்டாடுவதால் கார்த்திகையிலும் எந்த வித களியாட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்பது உங்கள் வாதம்.

வி.புலிகள் எப்போதாவது கார்த்திகை மாதத்தை மாவீரர் மாதமாக கொண்டாடும் படி கேட்டார்களா அல்லது கொண்டாடினார்களா என்றால் இல்லை. ஏன் இவ்வருடம் மட்டும் உங்கள் மனநிலையை சரிப்படுத்த கார்த்திகையை மாவீரர் மாதமாக்க வேண்டும்? 2009 ற்கு பின் தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு வெளிக்கிட்டு இருந்தாலும் போன வருடம் இதே மாதம் ஜேசுதாசின் இசைக்கச்சேரி நடைபெற்றது. அப்போ மாவீரர் மாதத்துக்கு என்ன நடந்தது? இளையராஜாவின் இசை நிகழ்வு நடை பெறும் போது மட்டும் எப்படி கார்த்திகை மாதம் மாவீரர் மாதமாகி விடும்??

இப்படியே கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் இது வேலைக்காவாது. இப்போது தான் நிகழ்ச்சி இரத்தாகி விட்டதே.

வருகிற மாதத்திலோ அடுத்த வருடத்திலோ நவம்பர் தவிர்த்து எப்போ வேண்டுமானாலும் நிகழ்ச்சியை நடாத்தலாம்.. இளையராஜாவின் இசைவெள்ளத்தில் மூழ்கிக் களிக்க நாங்களும் தயாராகவே இருக்கின்றோம்.

மாவீரர் காலத்திற்கும் மற்றவற்றிற்கும் நிறையவே வேறு பாடு உண்டு. எங்களுக்காகவே வலிந்து தன்னுயிரை இழந்தவர்களுக்கும் இனக்கலவரங்களாலும் அரச பயங்கரவாதத்தால் தவிர்க்க முடியாது இறந்து போனவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா? உயிர் உயிர் தான் என்ற சப்பைக்கட்டுகள் இங்கு தேவையில்லை.

//ஓ அப்போ உங்களின் வாதப்படி சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நிகழ்வை நிறுத்த முடியும். ஒரு பொதுமகன் சந்தேகப்படுகிறான் என்றால் நிகழ்வு நிறுத்தப்பட வேண்டும்.

எனது சந்தேகம் புலிகளின் பணத்தை தம்வசம் முடக்கியவர்கள் சிலர் தான் இந்நிகழ்வை நடாத்துவதாக ஒருவர் குறிப்பிட்டார். அந்த கோணத்தில் ஏன் உங்கள் புலநாய்வு செல்லவில்லை??//

உங்கள் சந்தேகம் இதுவாக இருந்தால் அது விசாரிக்கப்பட வேண்டியதே. அதேபோல இலங்கை அரசின் பணத்தில் அல்லது இந்திய ரோவின் தூண்டுதலில் நடாத்தப்படும் நிகழ்ச்சி என்றால் விசாரிக்கப்படவேண்டியது தான் என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

இயற்கை இந்த நிகழ்ச்சியை இரத்து செய்து இங்கு நன்மையே செய்திருக்கின்றது. இளைய ராஜாவின் இசை மீது அனைத்து தமிழ் மக்களுக்கும் இருக்கக்கூடிய ஆகர்ஷிப்பைக் காப்பாற்றியே இருக்கின்றது.

அது நீங்கள் நினைத்தது போல ஈழ மற்றும் தமிழக மக்களுக்கிடையே வந்திருக்கக்கூடிய கசப்பையும் தவிர்த்தே விட்டிருக்கின்றது.

இதன் மூலம் மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற இந்த யாழ்களத்தில் இருக்கும் அனைத்து உறவுகளையும் நிம்மதியடையவே வைத்திருக்கின்றது.

Edited by எல்லாள மகாராஜா

  • கருத்துக்கள உறவுகள்

1000 பேர் 1000 பேசுவாங்க அவங்க சொல்லுறத எல்லாம் நம்ப முடியுமா? ஒருத்தன் தன்னோட சொந்த முயற்சியில கஷ்டப்பட்டு பணம் சம்பாதிச்சு பணக்காரண இருந்தாலும் சொல்லுறாங்க புலிட்ட அடிச்சா காசு புலிக்கு சேத்த காசு அப்பிடின்னு எல்லாம் பொறமை பிடிச்ச திருட்டு பசங்க இவங்க பேச்சை நம்பிகிட்டு......

இளையராஜாவோட நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது இசைக்குழுவினர் வர முடியாமல் போனதால் மற்றும்படி இது கார்த்திக்கை மாதம் என்பதால் அல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.