Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பு அம்மா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1990 லை இருந்து எப்பிடி நடக்கிறது?? ..மாவீரர் மண்டபத்தில் ஆசியசாமான் கடை போடுவது யெர்மனியில் தான் முதலில் தொடங்கியது பிரான்சில் இன்றுவரை கடை அந்த நடைமுறை இல்லை.வணக்க நிகழ்வு ஒரு பக்கதால் போகும் சனங்கள் கடைக்குள் சேலை. சாமான்கள் பார்த்துகொண்டிருப்பார்கள். இதனை கவனித்து 96 ம் ஆண்டு இயக்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எனக்கு 92 ற்கு பின்னர் தமிழ்செல்வனோடும் 2001 ற்கு பின்னர் கஸ்ரோவேடும் மோதல்கள் ஏற்பட்டுவிட்டது அதனால் தலைமையோடு தொடர்புகளை பேணு வதற்காக நடேசன். சூசை பாலகுமார் ஆகியோரேடுதான் அதிகம் கதைப்பேன். அவர்கள் ஊடாக நான் மட்டுமல்ல பலரும் கடை விடயத்தை கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர்.வணக்க நிகழ்வுகள் தொடங்கியதும் கடைகளை பூட்டி நிகழ்வு முடிந்த பின்னர் திறக்குமாறு அங்கிருந்தே உத்தரவு வந்திருந்தது.

அதே போலத்தான் புலம் பெயர் நாடுகளில் வியாபார நிலையமாகவே இயங்கும் கோயில்களில் கூட ஜயர் சாமிக்கு யாராவது வாங்கி குடுத்த பூமாலையை உடனே திருப்பியெடுத்து மற்றவர்களிற்கு விற்பதில்லை. ஆனால் சாமிக்கு மேலாக நினைக்கும் மாவீரர்களிற்கு வைப்பதற்காக விற்ற பூவினை எடுத்து திரும்பவம் மற்றையவரிற்கு விற்பது மாவீரரரை கேவலப் படுத்துவதாக இருக்கிறது என்பதும் தலைமையின் கவனத்திற்கு கொண்டு வரப் பட்டிருந்தது. அதையும் செய்யவேண்டாம் என உத்தரவு வந்த பின்னரும் அது தொடர்ச்சியாக இங்கு நடந்து கொண்டுதானிருந்தது. இது சம்பந்தமாக அனைத்துலக பொறுப்பாளர் வாகீசனுடன் (இவர் தற்சமயம் உள்ளே உள்ளார்) தொலைபேசி ஊடாக சண்டை கூட பிடித்திருந்தேன். அன்று இயக்கம் ஆயுதப் போராட்டம் நடாத்திய காலத்தில் பூ விற்பது கடை போடுவது அதன் வருமானம் போராட்டத்திற்கு தேவை.அதனால்தான் அன்று இதைப் பற்றி எழுதவில்லை. ஆனால் இன்று இதன் வருமானம் மாவீரர்களின் பெயரால் எங்கே போகின்றது . சில தனி நபர்களிக்குத்தானே??? அதனால்தான் இன்று எழுதவேண்டி வருகின்றது.

ஆனால் உங்கள் வாதம் அன்று நடந்த தவறு தொடர்ந்து நடக்கவேண்டும் அதை யாரும் கேட்கக்கூடாது என்பது. அடுத்ததாக இன்றைய வருமானம் மண்டப வாடைகை என்று நீங்கள் வந்து சொல்லாம். கடந்த வருட மாவீரர் தின நிகழ்வு முடிய அதை இரண்டு பிரிவாக நடத்தியவர்களில் இங்கிலாந்தில் தலைமைச் செயலகம் தனது பங்கிற்கு 6 ஆயிரம் நட்டம் என அறிவித்தது அது எங்கே எப்படி நடட்டம் என்று எந்த விபரங்களும் இல்லை. ஆனால் தலைமை செயலகம் வழைமை போல் வாயே திறக்கவில்லை சுமார் 55 ஆயிரம் பவுண்சுகள் வருமானம் என்பது பங்கு பிரித்ததில் ஏற்பட்ட தகராற்றில் உள்ளிருந்து கசிந்த தகவல். இங்கு நீங்கள் யார் சார்பாக கதைக்கிறீர்கள் தலைமை செயலகம் சார்பாகவா??..அல்லது அனைத்துலக செயலகம் சார்பாகவா?..என்பதை விளக்குவதோடு தொடர்ந்தும் நாகரீகமாக கருத்தாடினால் நானும் தொடர்ந்தும் கருத்தாடத் தயார்...நீங்கள் தயாரா???? <_<

 

நீங்கள் எழுதியவை உண்மைகள் ............ அதை கடந்து மாவீர்களை மதிப்பவர்களின் மனதில் கத்தியால் கீறுவது போன்ற ஒரு வலி நிச்சயம் இருக்கும்.
 
இப்போதும் தவறையும் பழியையும் என்மீதும் உங்கள் மீதும்தான் நான் சுமத்துகிறேன்.
எல்லாவற்றிற்கும் பின் நின்றுவிட்டு............. எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்பதுதான் தவறானது. அதுகும் ஆணாக இந்த சமூகத்தில் இருக்கும் நானும் நீங்களும் எங்கள் தவறை யார்மீதாவது இலகுவாக சுமத்திவிட்டு  தப்பித்து கொள்கிறோம்.
 
மாவீரர் நாளுக்கு பணம் நிறைய வருகிறது என்று எழுதுகிறீர்கள்........... (நீங்கள் எழுதியது பொய் என்று சொல்ல முயலவில்லை) ......... எங்கிருந்து வருகிறது எப்படி வருகிறது என்று கொஞ்சம் விளக்கமாக எழுத முடியுமா?
 
மேலே கந்தப்பு எழுதியதுபோல் .......
இங்கு எந்த பூ வியாபாரமும் இல்லை. இவைகள் எல்லாம் கொஞ்சம் புதிதாக இருக்கிறது. 
சுவிஸ் நாட்டில் மூன்று மாவீரர் நாளுக்கு சென்று இருக்கிறேன். 
அங்கு எல்லாம் சிறப்பாகத்தான் நடந்தது........... 2007ஆம் ஆண்டிற்கு முன்பு. மிகவும்  எழுச்சியுடன் செய்கிறார்கள்   என்ற எண்ணம் ஏற்பட்டே மீண்டும் மீண்டும் சென்றேன்.
 
பூவை ஏன் விற்பனை செய்கிறார்கள்??
சுவிசில் எல்லோருக்கும் நான் சென்றபோது சும்மாதான் கொடுத்தார்கள். ஒரு பூவும் ஒரு மெழுகுதிரியும்  கொடுத்தார்கள்.
 
கடைகள் என்று ஏதும் இருக்கவில்லை .......
உணவகங்கள் இருந்தது அதுகும் அவர்களின் நிர்வாகத்தின் கீழ்தான் இருந்தது. அது தேவையும் கூட  பலர் பல மணி நேரம் கழித்து பயணம் செய்து வருகிறார்கள்  அவர்களுக்கு அப்படியொரு   வசதியை செய்வது பிழையென தெரியவில்லை. ஒரு மாவீரர் நாளில்  இரண்டு நேர உணவை தவிர்ப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் சமூகம் என்பது  எல்லா வகையான்வர்களியும் சேர்த்துதானே இருக்கிறது.
தங்களுக்காக நீங்கள் பட்டினி இருங்கள் என்று மாவீரர் சொன்னார்களா ?? அப்படி என்று  யாராவது  கேட்கக்கூடும். அவர் அவர் அறிவை பொறுத்தே கேள்விகள் இருக்கும்.
 
இதை செய்தியாக பரப்புவதால் ...........
புலிவாந்தி எடுப்பவர்களுக்கு அவலாக கிடைக்குமே தவிர. மாற்றத்திற்கு வழியில்லை.
பிரான்சில் நடக்கும் தவறை .............. வன்னியில் இருப்பவர்கள் திருத்த வேண்டும் எனும் உங்களுடைய என்னுடைய   அழுக்கு சிந்தனைதான் தவறுகளை விதைக்கிறது.
இங்கு நடக்கும் தவறை  கூட திருத்த எம்மிடம் வக்கில்லையா??
 
இடை விடாத போராட்டம்தான் வெற்றியை தரும் .............
அங்கு சொன்னேன் ......... இங்கு சொன்னேன். என்று விட்டு சும்மா இருந்தால் எப்படி முடிவு வரும் ?
 
மக்களை நேராக சந்தித்து இதுபற்றி அவர்களுடைய அபிப்பிராயத்தை முதலில் பெறவேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

 

மாவீரர் நாளுக்கு பணம் நிறைய வருகிறது என்று எழுதுகிறீர்கள்........... (நீங்கள் எழுதியது பொய் என்று சொல்ல முயலவில்லை) ......... எங்கிருந்து வருகிறது எப்படி வருகிறது என்று கொஞ்சம் விளக்கமாக எழுத முடியுமா?
 

 

மருதங்கேணி நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள். சுவிசில் பூக்களுக்குக் காசு வாங்குவதில்லை என்பது சந்தோசமாக இருக்கு. அதற்காக காசு வாங்குவது தவறு என்றும் கூற முடியாது. நான் கடந்த பத்து ஆண்டுகளாக செயற்பாட்டாளர்களில் ஒருவராகப் பிரித்தானியாவில் இருக்கிறேன். Exsel மண்டபத்தில் மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதாயின் அதன் மண்டபமே 75,000பவுண்ட்ஸ். அதைவிடக் கதிரைகள் மேடை ஒலிப்பதிவுகள் ,ஒளியமைப்பு,  மண்டபக் காப்புறுதி, பாதுகாவலர்கள், உணவுப்பண்டங்களின் விற்பனைக்கான காப்புறுதித் தொகை என கிட்டத்தட்ட நூறாயிரம் பவுண்ட்சைத் தாண்டும். இவற்றுக்காகவே முதலே டிக்கட் விற்று கணிசமான தொகையை கடைக்காரர்களிடமும் மற்றவரிடமும் அறவிடுவர். மாவீரர் நாளன்று உணவுப்பகுதியில் அதி கூடிய விற்பனை நடைபெறும். இரண்டாவது மலர் விற்பனையிலும் மூன்றாவது வெளியீட்டிலும் கிடைக்கும். கடந்த பல வருடங்களாக சில தில்லுமுல்லுகள் நடந்து சரிவரக் கணக்குகள் காட்டப்படாது ஆறு மாதங்களின் பின்னர் கணக்குக் காட்டப்பட்டு, பிரச்சனைகள் இருந்தது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பொது மக்களையும் உள்வாங்கி கணக்குகள் உரிய முறையில் காட்டப்பட்டு. மிகுதியாக வரும் பணம் தாயகத்தில் உள்ள மாவீரர் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப் படுகிறது என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செலவுகள் எல்லாம் போக 5000 பவுண்ட்ஸ் மிச்சமாகியது. இம்முறை அதிகமாகத்தான் வரும் ஏனெனில். இம்முறை மண்டபத்தில் மட்டும் சேர்ந்த பணம் 90850 பவுண்ட்ஸ். உண்டியல் குலுக்கியதில் சொர்ப்பப் பணமே சேர்ந்தது.

பூ விற்பதில் எனக்குப் பிடிக்காத விடயம் கடந்த ஆண்டுவரை மக்கள் தொகை அதிகமாக இருந்ததனால் மீண்டும் மீண்டும் போட்ட பூக்களை எடுத்து வந்து விற்பனை செய்ததுதான். இம்முறையும் அது நடந்ததா என்று தெரியவில்லை. ஏனெனில் அந்த இடத்தில் நான் நிக்கவில்லை.

 

ஒருவகையில் பார்த்தால் எல்லோரும் அங்கு ஒன்று கூடுவது மிகவும் நல்ல ஒரு விடயம் என்றாலும் இத்தனை பணத்தைப் போட்டு இந்த மண்டபத்தை எடுக்க வேண்டுமா என்றும் மனம் எண்ணாமல் இல்லை. ஆனாலும் இம்மண்டபத்தை எடுக்காமல் விட்டாற்போல் எம் தமிழர் தாயக மக்களுக்கு உதவத் தம் பணத்தை அள்ளித் தரப் போவதில்லை என்பதும் ஒரு இடத்தில் வைக்காது பிரித்து சிறிய மண்டபங்களில் செய்யும்போது, போகாமல் இருந்தால் என்ன என்னும் அவர்கள் மனநிலையும் மாறும் என்பதும் தான் உண்மை.

 

சுவிற்சர்லாந்தில் நடைபெறுகின்ற மாவீரரர் நாள் நிகழ்வுக்கு கடந்த 1997ம் ஆண்டு முதல் சென்று வருகின்றேன். இதுவரை பூஇ மெழுகுதிரிகளுக்கென ஒருசதம் காசு காசுகூடக் குடுத்தது கிடையாது. கொத்துரொட்டி விற்பனைக்கு பல காரணங்கள் உண்டு. மாவீரர் நாள் மண்டபஇ ஒலியமைப்புஇ பூஇ மெழுகுதிரிகளின் செலவுக்கான பணம் தேவை. அது மட்டுமல்லாமல் சுவிற்சர்லாந்தில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வு நாட்டின் நடுப்பாகத்தில் நடைபெறும் சுவிற்சர்லாந்தில் தமிழர் அனைத்துப் பகுதிகளிலும் பரந்துவாழ்கின்றார்கள். கிட்டத்தட்ட 300 கி.மீ தொலைவிலிருந்து மக்கள் வருவார்கள். அப்படி வருபவர்கள் காலை 9.00 மணிக்கே புறப்படுவார்கள் அவர்களுக்கான உணவு நிச்சயம் தேவையானது. இங்கு விற்பனை செய்யாது விட்டால் அருகில் இருக்கம் மைக்டொனால்ட் போன்ற உணவகங்களுக்குத்தான் அவர்கள் போவார்கள். சுவிற்சர்லாந்து மாவீரர் நாள் நிகழ்வுகளில் மாவீரர்களுக்கான மலர் வணக்கம் நடைபெற்று நிறைவடையும்வரை உணவக விற்பனை எதுவும்  நடைபெறமாட்டாது. நிகழ்வு நிறைவுபெற்றதும் ஒவ்வொரு மாவீரரது படமும் அதற்காக பாதுகாப்பான உறைகளில் இடப்பட்டு ஒழுங்காக அடுக்கப்படுவதை அவதானித்திருக்கின்றேன். நீங்கள் குறிப்பிடும்படி ஜேர்மனியில் நடைபெற்றால் அது நிச்சயம் திருத்தப்பட வேண்டியதே. 

  • கருத்துக்கள உறவுகள்

poppy_300+PHOTO.jpg

இந்த பொப்பியை கனடாவில் விற்கிறார்கள். விலை $1.00 :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.