Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் நடைபெறவுள்ள உலகத்தமிழர் மாநாட்டின் நோக்கம் என்ன?

Featured Replies

[size=4]பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவும் இணைந்து இம் மாநாட்டினை நவம்பர் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடாத்துகின்றன.[/size]

ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில், சொல்லப்பட்ட பரிந்துரைப்பின் பிரகாரம், இலங்கை அரசு மேற்கொண்ட யுத்தம் குறித்தான சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இம்மாநாட்டின் தீர்மானமாக அமையவிருக்கிறது. பேரவை வெளியிட்ட அறிக்கையில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

[size=1][size=4]ஆயினும் , விசாரணை எவ்வாறு அமைய வேண்டுமென நிபுணர் குழு முன்வைத்த பரிந்துரை , ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வதாக அமையவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.[/size][/size]

[size=1][size=4]குறிப்பாக, தமது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து, உடனடியாக நேர்மையான விசாரணை ஒன்றினை இலங்கை அதிகாரவாசிகள் ஆரம்பிக்கவேண்டுமெனவும் , அது சுயாதீனமான சர்வதேசத்தரம் வாய்ந்ததாக இருப்பது அவசியமெனவும் நிபுணர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.[/size][/size]

[size=1][size=4]ஆனாலும் இவ்வாறான ஐ.நா.அழுத்தங்கள் போர்க்குற்ற ஆதாரங்களுடன் வருமென்பதைப் புரிந்து கொண்ட சிங்களம் , தனது தலையாட்டிகளை கொண்டதொரு குழுவினை அமைத்து ,அதற்கு 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' [LLRC] என்கிற பெயரையும் வைத்தது.[/size][/size]

[size=1][size=4]சர்வதேச வல்லரசாளர்களும் அதனை இன்முகம் கொண்டு வரவேற்றனர். குற்றவாளியை நீதிபதி நாற்காலியில் அமர்த்திய கோமாளித்தனத்திற்கு இந்த உலக சனநாயகச் சட்டம்பிமார் துணை நின்றார்கள்.[/size][/size]

[size=1][size=4]இவ்வருடம் மார்ச்சில் நடைபெற்ற ஐ.நா.மனிதஉரிமைப் பேரவைக் கூட்டத்தில், இந்தியா அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு ஆலோசனை கூறின.[/size][/size]

[size=1][size=4]இருப்பினும் நிபுணர் குழுவும், மனிதஉரிமைப் பேரவையும் சுட்டிக்காட்டிய ஐ.நா.வின் புலமைசார் நிபுணத்துவத்தை இணைத்துக்கொள்ள வேண்டுமென்கிற ஆலோசனையை சிங்களம் ஏற்க மறுத்துவிட்டது. அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கவும் சபையில் தீர்மானம் கொண்டுவந்தவர்களால் முடியவில்லை.[/size][/size]

[size=1][size=4]ஐ.நா.வில் நேற்று நடைபெற்ற அகில காலக்கிரம மீளாய்வு [universal Periodic Review] கூட்டத்திலும் சர்வதேச விசாரணை குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.[/size][/size]

[size=1][size=4]இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் பனிப்போர் நிகழ்த்தும் வல்லரசுகளின் நலன்களுக்கு, இவ்வகையான பாரிய அழுத்தங்கள் தற்போதைய சூழலில் தேவையில்லாததொன்றாக இருக்கலாம். ஏனெனில் மென் அழுத்தங்கள் ஊடாக இலங்கையைக் கையாளும் போக்கினையே இவை கடைப்பிடிக்கின்றன என்பதுதான் நிஜம்.[/size][/size]

[size=1][size=4]இந்நிலையில், இறுதிப்போரில் 40,000 இற்கு [ தற்போது அந்த எண்ணிக்கை 70,000 ஐ தாண்டும் என்கிறார் யாஸ்மின் சுக்கா ] மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு , ஐ.நா.சபையின் உறுப்புநாடுகள் 'சர்வதேச சுயாதீன விசாரணை' ஒன்றினை உருவாக்க வேண்டுமென விடுக்கப்படும் அழைப்பு ,அந்நாடுகளினால் எவ்வாறு உள்வாங்கப்படும் என்பது குறித்து சிந்திக்கவேண்டும்.[/size][/size]

[size=1][size=4]அதேவேளை இதில் கலந்து கொள்ளும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமது அரசிடம் இதனை வலியுறுத்துவார்களா என்று திடமாகச் சொல்லமுடியாது.[/size][/size]

[size=1][size=4]தமிழ் மக்களைப் பொறுத்தவரை, பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் , திட்டமிட்டவகையில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு, கலாச்சாரச் சிதைவு, தேசிய இனத்தின் கட்டுமானத்தை உடைத்தல் போன்றவற்றால் வந்த ஒடுக்குமுறைகளை இன்னமும் அனுபவிக்கின்றாகள்.[/size][/size]

[size=1][size=4]'சர்வதேச சுயாதீன விசாரணை' என்பது சுதந்திரம் [?] பெற்ற காலம் முதல் , தமிழ் மக்கள் மீது சிங்களம் மேற்கொள்ளும் இன அழிப்பினை வெளிப்படுத்தும் விரிந்த தளமாக இருக்கவேண்டும். மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இன அழிப்புக்கொடூரங்களை விசாரிக்கும் வகையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது பொருத்தமற்றது. ஏனெனில் கிழக்கின் மீது சிங்கள இராணுவம் தொடுத்த ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கும் நீதி வேண்டும். [/size][/size]

[size=1][size=4]கல்லோயாவிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை பேரினவாத சிங்களத்தின் கோரக்கரங்கள், பூர்வீக தமிழ் குடிகளின் வாழ்வாதரங்களை சிதைத்துவிட்டது. இன்னமும் அதன் மேலாதிக்க வன்மம் [/size][/size]

[size=1][size=4]குறைந்தபாடில்லை.[/size][/size]

[size=1][size=4]வடக்கில், சிங்களக் குடியேற்ற வசந்தங்கள் சீனப் பணத்தில் பலமாக வீசுகின்றன.[/size][/size]

[size=1][size=4]ஆகவே மீண்டெழுந்து, சகல திசைகளிலும் போராட்டங்களை முன்னகர்த்த வேண்டியதே எமக்கு இருக்கும் ஒற்றைத் தெரிவு.[/size][/size]

[size=1][size=4]வல்லரசுகளுக்கு ஏற்றவகையில் எமது அடிப்படை உரிமைகளை மாற்ற முடியாது. 'தோற்கடிக்கப்பட்டு விட்டீர்கள்' என்கிற உளவியல் பரப்புரை ஊடாக ,இறைமையற்ற தீர்வினைத் திணிக்கவே இவர்கள் முயற்சிப்பார்கள்.[/size][/size]

[size=1][size=4]சர்வதேச விசாரணை என்பதையும், முள்ளிவாய்க்காலுக்குள் முடக்க விரும்புவார்கள்.[/size][/size]

[size=1][size=4]அதிலும் போர்க்குற்றம்,மனித உரிமை மீறல் என்கிற சொல்லாடல்களுக்குள் ஒரு தேசிய இனத்தின் அழிவை அடக்கி விடுவதே தமது பிராந்திய நலனுக்கு உகந்தது என்று எண்ணுகிறார்கள் போலுள்ளது.[/size][/size]

[size=1][size=4]ஆகவே, தாயக, தமிழக , புலம்பெயர் மக்கள் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து நடாத்தப்படும் இம்மாநாட்டில், இனஅழிப்பிற்கு எதிரான 'சர்வதேச சுயாதீன விசாரணை' நடாத்தப்படவேண்டும் என்கிற தீர்மானத்தை மேற்கொள்வதே சரியானது.[/size][/size]

[size=1][size=4]கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் மத்தியில் மாநாட்டின் 'உத்தேச தீர்மானம்' [Draft Resolution]விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.[/size][/size]

[size=1][size=4]பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் சனநாயக முறைமையும் அதுதான்.[/size][/size]

[size=1][size=4]-[/size][/size]

ஆக்கம்: இதயச்சந்திரன்

[size=1][size=4]மூலம்: தமிழ் கனேடியன் - கார்த்திகை 2, 2012

பிரசுரித்த நாள்: Nov 03, 2012 0:43:15 GMT[/size][/size]

[size=1]http://tamilcanadian...icle/tamil/1467[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் நடைபெறவுள்ள உலகத்தமிழர் மாநாட்டின் நோக்கம் என்ன? -இதயச்சந்திரன்

[saturday, 2012-11-03 10:45:23]

பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவும் இணைந்து இம் மாநாட்டினை நவம்பர் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடாத்துகின்றன.

ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில், சொல்லப்பட்ட பரிந்துரைப்பின் பிரகாரம், இலங்கை அரசு மேற்கொண்ட யுத்தம் குறித்தான சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இம்மாநாட்டின் தீர்மானமாக அமையவிருக்கிறது. பேரவை வெளியிட்ட அறிக்கையில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

ஆயினும் , விசாரணை எவ்வாறு அமைய வேண்டுமென நிபுணர் குழு முன்வைத்த பரிந்துரை , ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வதாக அமையவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக, தமது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து, உடனடியாக நேர்மையான விசாரணை ஒன்றினை இலங்கை அதிகாரவாசிகள் ஆரம்பிக்கவேண்டுமெனவும் , அது சுயாதீனமான சர்வதேசத்தரம் வாய்ந்ததாக இருப்பது அவசியமெனவும் நிபுணர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் இவ்வாறான ஐ.நா.அழுத்தங்கள் போர்க்குற்ற ஆதாரங்களுடன் வருமென்பதைப் புரிந்து கொண்ட சிங்களம், தனது தலையாட்டிகளை கொண்டதொரு குழுவினை அமைத்து ,அதற்கு 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' [LLRC] என்கிற பெயரையும் வைத்தது. சர்வதேச வல்லரசாளர்களும் அதனை இன்முகம் கொண்டு வரவேற்றனர். குற்றவாளியை நீதிபதி நாற்காலியில் அமர்த்திய கோமாளித்தனத்திற்கு இந்த உலக சனநாயகச் சட்டம்பிமார் துணை நின்றார்கள்.

இவ்வருடம் மார்ச்சில் நடைபெற்ற ஐ.நா.மனிதஉரிமைப் பேரவைக் கூட்டத்தில், இந்தியா அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு ஆலோசனை கூறின.

இருப்பினும் நிபுணர் குழுவும், மனிதஉரிமைப் பேரவையும் சுட்டிக்காட்டிய ஐ.நா.வின் புலமைசார் நிபுணத்துவத்தை இணைத்துக்கொள்ள வேண்டுமென்கிற ஆலோசனையை சிங்களம் ஏற்க மறுத்துவிட்டது. அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கவும் சபையில் தீர்மானம் கொண்டுவந்தவர்களால் முடியவில்லை.

ஐ.நா.வில் நேற்று நடைபெற்ற அகில காலக்கிரம மீளாய்வு [universal Periodic Review] கூட்டத்திலும் சர்வதேச விசாரணை குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் பனிப்போர் நிகழ்த்தும் வல்லரசுகளின் நலன்களுக்கு, இவ்வகையான பாரிய அழுத்தங்கள் தற்போதைய சூழலில் தேவையில்லாததொன்றாக இருக்கலாம். ஏனெனில் மென் அழுத்தங்கள் ஊடாக இலங்கையைக் கையாளும் போக்கினையே இவை கடைப்பிடிக்கின்றன என்பதுதான் நிஜம்.

இந்நிலையில், இறுதிப்போரில் 40,000 இற்கு [ தற்போது அந்த எண்ணிக்கை 70,000 ஐ தாண்டும் என்கிறார் யாஸ்மின் சுக்கா ] மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு , ஐ.நா.சபையின் உறுப்புநாடுகள் 'சர்வதேச சுயாதீன விசாரணை' ஒன்றினை உருவாக்க வேண்டுமென விடுக்கப்படும் அழைப்பு ,அந்நாடுகளினால் எவ்வாறு உள்வாங்கப்படும் என்பது குறித்து சிந்திக்கவேண்டும்.

அதேவேளை இதில் கலந்து கொள்ளும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமது அரசிடம் இதனை வலியுறுத்துவார்களா என்று திடமாகச் சொல்லமுடியாது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் , திட்டமிட்டவகையில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு, கலாச்சாரச் சிதைவு, தேசிய இனத்தின் கட்டுமானத்தை உடைத்தல் போன்றவற்றால் வந்த ஒடுக்குமுறைகளை இன்னமும் அனுபவிக்கின்றாகள்.

'சர்வதேச சுயாதீன விசாரணை' என்பது சுதந்திரம் [?] பெற்ற காலம் முதல் , தமிழ் மக்கள் மீது சிங்களம் மேற்கொள்ளும் இன அழிப்பினை வெளிப்படுத்தும் விரிந்த தளமாக இருக்கவேண்டும்.

மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இன அழிப்புக்கொடூரங்களை விசாரிக்கும் வகையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது பொருத்தமற்றது. ஏனெனில் கிழக்கின் மீது சிங்கள இராணுவம் தொடுத்த ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கும் நீதி வேண்டும்.

கல்லோயாவிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை பேரினவாத சிங்களத்தின் கோரக்கரங்கள், பூர்வீக தமிழ் குடிகளின் வாழ்வாதரங்களை சிதைத்துவிட்டது. இன்னமும் அதன் மேலாதிக்க வன்மம் குறைந்தபாடில்லை.

வடக்கில், சிங்களக் குடியேற்ற வசந்தங்கள் சீனப் பணத்தில் பலமாக வீசுகின்றன.

ஆகவே மீண்டெழுந்து, சகல திசைகளிலும் போராட்டங்களை முன்னகர்த்த வேண்டியதே எமக்கு இருக்கும் ஒற்றைத் தெரிவு.

வல்லரசுகளுக்கு ஏற்றவகையில் எமது அடிப்படை உரிமைகளை மாற்ற முடியாது. 'தோற்கடிக்கப்பட்டு விட்டீர்கள்' என்கிற உளவியல் பரப்புரை ஊடாக ,இறைமையற்ற தீர்வினைத் திணிக்கவே இவர்கள் முயற்சிப்பார்கள்.

சர்வதேச விசாரணை என்பதையும், முள்ளிவாய்க்காலுக்குள் முடக்க விரும்புவார்கள்.

அதிலும் போர்க்குற்றம்,மனித உரிமை மீறல் என்கிற சொல்லாடல்களுக்குள் ஒரு தேசிய இனத்தின் அழிவை அடக்கி விடுவதே தமது பிராந்திய நலனுக்கு உகந்தது என்று எண்ணுகிறார்கள் போலுள்ளது.

ஆகவே, தாயக, தமிழக , புலம்பெயர் மக்கள் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து நடாத்தப்படும் இம்மாநாட்டில், இனஅழிப்பிற்கு எதிரான 'சர்வதேச சுயாதீன விசாரணை' நடாத்தப்படவேண்டும் என்கிற தீர்மானத்தை மேற்கொள்வதே சரியானது.

கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் மத்தியில் மாநாட்டின் 'உத்தேச தீர்மானம்' [Draft Resolution]விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் சனநாயக முறைமையும் அதுதான்.

-இதயச்சந்திரன்-

http://seithy.com/breifNews.php?newsID=69488&category=TamilNews

//இனஅழிப்பிற்கு எதிரான 'சர்வதேச சுயாதீன விசாரணை' நடாத்தப்படவேண்டும் என்கிற தீர்மானத்தை மேற்கொள்வதே சரியானது.//

உத் தேசத் தீர்மானத்தில் இதுவும் உள் அடக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

[size=4]நல்லது. [/size]

[size=1]

[size=4]இன்னொரு அணுகுமுறையாக எமது நாட்டில் எமது மக்களுக்கு எதிராக நடந்தது / நடப்பது "இனவழிப்பு"[size=5] [ GENOCIDE] [/size]என்பதை சர்வதேசம் ஏற்க நாம் பாடு பாடல் வேண்டும். [/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]சிறப்பாக நடைபெற்று வரும் லண்டன் உலக தமிழர் மகாநாட்டு ஏற்பாடுகள் பேராதரவு வழங்க தமிழக தலைவர்கள் வலியுறுத்து[/size]

[size=3]

[size=4]பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வ கட்சி பாராளுமன்ற குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கூட்டாக இணைந்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடத்தவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க உலக தமிழர் மகாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. [/size][/size][size=3]

[size=4]எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெற இருக்கும் இந்த மகா நாட்டில் தாம் கலந்து கொள்ள இருப்பதை ஏராளமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதேவளை தமிழ்நாட்டில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் என்று பெரும் எண்ணிக்கையானோர் இந்த மகா நாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர். தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த மகா நாட்டிற்கு வருகைதர உள்ளனர். [/size]

[/size][size=3]

[size=4]யுத்தத்திற்குப் பின்னரான தமிழ் மக்களின் அரசியல் மற்றும் ராஜதந்திர போராட்டத்தின் முக்கியமானதொரு நிகழ்வாக அமையவிருக்கும் இந்த மகாநாடு முழுமையான வெற்றி பெற்று, எதிர்வரும் மார்ச் 2013 இல் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் சிறி லங்காவுக்கெதிராக உறுப்பு நாடுகள் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கான சர்வதேச அரசியல் ஏது நிலைகளை உருவாக்குவதற்கு உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.[/size][/size]

[size=3]

[size=4]உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இந்திய கம்யூனிச கட்சி தலைவர் டி. ராஜா, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் பெ. மணியரசன், இந்திய கம்யூனிச கட்சி (தமிழ் நாடு) துணைச் செயலாளர் சி. மகேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பல்வேறு தலைவர்கள் தற்போதைய தருணத்தில் இந்த மகாநாட்டின் அவசியத்தையும் முக்கியத்தையும் வலியுறுத்திஇ சகல தமிழர் தரப்பும் தோளோடு தோள் நின்று இந்த மகா நாட்டுக்கு ஆதரவு நல்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.[/size][/size]

[size=3]

[size=4]மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளை குழி தோண்டிப் புதைத்து சிறி லங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொண்ட இனஅழிப்பு யுத்தம் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை இந்த மகாநாடு வலியுறுத்தும் அதேசமயம் அதனை சாத்தியமாகும் வழிவகைகள் குறித்தும் எவ்வாறு எதிர் காலத்தில் ஒன்றிணைந்த செயற்திட்டங்களை முன்னெடுப்பது என்பது குறித்துமான மூலோபாய திட்டங்கள் பற்றியும் ஆராய்கிறது. [/size][/size]

[size=3]

[size=4]சுயாதிபத்தியம் மற்றும் இறைமை ஆகிய கோட்பாடுகளின் போர்வையில் பாரிய மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகளில் இருந்து சிறி லங்கா அரசாங்கம் தப்பிக்க முயற்சித்து வரும் நிலையில், சர்வதேச சுயாதீன விசாரணையை ஒன்றை ஐ. நா வினூடாக கொண்டுவருவதில் வெற்றி பெறுவதானது எதிர் காலத்தில் சிறி லங்காவுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைவதுடன் பெரும் பின்னடைவையும் கொடுக்கும் என்பதுடன் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வானது தவிர்க்க முடியாதவகையில் சிறி லங்காவின் கைகளுக்கு அப்பாற்ப்பட்ட அதன் சுயாதிபத்தியம் மற்றும் இறைமை ஆகியவற்றால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சர்வதேச விவகாரமாக பரிணாமம் பெறும் என்று இந்த மகாநாடு தொடர்பில் வழங்கியுள்ள ஆசிச் செய்திகளில் பலர் கோடிட்டு காட்டியுள்ளார்கள்.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=4][size=5]மாநாட்டின் அமர்வுகள்[/size]

இம்மாநாட்டின் இரு அமர்வுகள் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளன. அத்தோடு பிரதிநிகள்கலந்துகொள்ளும் இராப்போசன விருந்தும் இ மக்கள் சந்திப்பும் ஏற்பாடாகி உள்ளது.[/size]

[size=4]மாநாடு : கால அட்டவணை

இடம் : பிரித்தானிய பாராளுமன்றம்

07.11.2012 : மதியம் 12.15 – 3.00

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரயாடலும் தீர்மானத்தை பிரகடனப்படுத்தலும்[/size]

[size=4]இடம் : பிரித்தானிய பாரளுமன்றம்[/size]

7.11.2012 – மாலை : கருத்துப்பகிர்வும் இராப்போசனமும்.

[size=4]இடம் : பிரித்தானிய பாராளுமன்றம்[/size]

08.11.2012 : மாநாடு மதியம் 02 மணி முதல் 06 மணி வரை

[size=4]09.11.2012 : மக்கள் சந்திப்பு 06 மணி முதல் 10 மணி வரை[/size]

[size=4]பிரித்தானிய தமிழர் பேரவை[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.thehindu.com/news/states/tamil-nadu/karunanidhi-india-should-press-un-for-referendum-in-sri-lanka/article4062602.ece

Karunanidhi: India should press UN for referendum in Sri Lanka

The DMK leader said as part of its campaign for a referendum, his party would mobilise international opinion.

Its leaders, including M.K. Stalin, T.R. Baalu, T.K.S. Elangovan and K.S. Radhakrishnan, would participate in a conference to be held in London.

  • தொடங்கியவர்

[size=4]இலங்கைத் தீவில் நடைபெற்ற இன அழைப்பின் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரனை ஒன்று ஆரம்பிக்கபடவேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடு தற்போது லண்டன் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஆரம்பமாகியுள்ளது. மூன்று நாட்கள் தொடர்ந்து பல அமர்வுகள் மூலம் நடைபெறப்போகும் இந்த மாநாட்டை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பிரித்தானிய பாராளுமன்ற குழுத்தலைவர் திரு . லீஸ் கொட் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.[/size]

[size=4]பிரித்தானிய தமிழர் பேரவையின் அனுசரனையோடு நடைபெறும் மாநாட்டில் உலகப்பரப்பில் பரந்து வாழும் பெரும்பாலான அனைத்து தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் `கலந்துகொண்டுள்ளனர்கள்.[/size]

[size=4]இம்மாநாட்டை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றார்கள். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் நாட்டு பிரதிநிதிகள் பொன்னாடை போர்த்து சிறப்பித்ததோடு , ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதற்கு நன்றிகளை தெரிவித்தனர். அவர்களின் சிறப்பு செய்தலை ஏற்றுக் கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதற்கு பாடுபடுமாறு கேட்டுக் கொண்டனர்.[/size]

[size=4]ஆரம்ப வைபவத்தை தொடர்ந்து , தீர்மானம் பற்றிய விவாதமும் இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பான விவாதமும் ஆரம்பமாக உள்ளது.[/size]

[size=4]தொடரும் இந்த உலக மாநாட்டின் மேலதிக தகவல்கள் தொடர்ந்தும் வெளிவரும்.[/size]

[size=4]இலங்கைத் தீவில் நடைபெற்ற இன அழைப்பின் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரனை ஒன்று ஆரம்பிக்கபடவேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடு தற்போது லண்டன் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஆரம்பமாகியுள்ளது. மூன்று நாட்கள் தொடர்ந்து பல அமர்வுகள் மூலம் நடைபெறப்போகும் இந்த மாநாட்டை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பிரித்தானிய பாராளுமன்ற குழுத்தலைவர் திரு . லீஸ் கொட் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.[/size]

[size=4]பிரித்தானிய தமிழர் பேரவையின் அனுசரனையோடு நடைபெறும் மாநாட்டில் உலகப்பரப்பில் பரந்து வாழும் பெரும்பாலான அனைத்து தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் `கலந்துகொண்டுள்ளனர்கள்.[/size]

[size=4]இம்மாநாட்டை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றார்கள். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் நாட்டு பிரதிநிதிகள் பொன்னாடை போர்த்து சிறப்பித்ததோடு , ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதற்கு நன்றிகளை தெரிவித்தனர். அவர்களின் சிறப்பு செய்தலை ஏற்றுக் கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதற்கு பாடுபடுமாறு கேட்டுக் கொண்டனர்.[/size]

[size=4]ஆரம்ப வைபவத்தை தொடர்ந்து , தீர்மானம் பற்றிய விவாதமும் இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பான விவாதமும் ஆரம்பமாக உள்ளது.[/size]

[size=4]தொடரும் இந்த உலக மாநாட்டின் மேலதிக தகவல்கள் தொடர்ந்தும் வெளிவரும்.[/size]

மிகவும் ஆக்கபூர்வமானதும் ,தேவையானதுமான ஓர் நிகழ்ச்சி .............உண்மையில் விடுதலைப்புலிகளின் மௌனத்தின் பின் முதல் முதலாக நடைபெறும் ஓர் வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வாகவே இது பார்க்கப்படுகிறது ..........இங்கே ,இந்த தளத்திலே தமிழர்களின் இன்றைய நிலையில் இருந்து .அடுத்த நிலைக்கு செல்லுவதற்கான அரசியல் செயற்பாடுகளை ,இந்த தமிழரின் பிரதிநிதிகள் ,மேற்கொண்டு அதனூடு சர்வதேசத்தின் முழுக்கவனத்தையும் எம் மீது திரும்பிப்பார்க்க செய்வதும் ,அதனூடு எம் நீண்ட கால பிரச்சனைக்கு ஓர் தீர்வை உருவாக்குவதும் ,போலி வேஷம் போட்டுத்திரியும் சிறிலங்காவினதும் ,அவர்களின் எடுபிடிகளினதும் கொடூரமான முகத்தை இந்த உலகம் உணரவைப்பதற்கான முழுமையான செயற்பாடுகளையும் செய்யவேண்டும் ...........அதற்குரிய அருமையான சந்தர்ப்பமாகவே இது காணப்படுகிறது ...........கடந்த காலத்தில் நாம் விட்ட தவறுகளை பாடமாக கொண்டு புதிய புதிய அணுகுமுறைகளை இவர்கள் மேற்கொள்ளவேண்டும் .....அதற்கு உலகில் வாழும் ஒட்டு மொத்த தமிழர்களும் ,பேதங்கள் ,மனக்கசுப்பகளை மறந்து பூரண ஆதரவும் கொடுக்கவேண்டும் ...................விழ விழ எழுவோம்...................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka must be investigated for crime of genocide: London conference

[size=2][TamilNet, Wednesday, 07 November 2012, 18:09 GMT][/size]

The global conference organized by British Tamils’ Forum (BTF) and All Party Parliamentary Groups for Tamils (APPGT), involving participation of civil society activists and politicians from the island and Tamil Nadu, diaspora groups, and British parliamentarians, on Wednesday called for an independent international investigation on the complete conduct of the Sri Lankan state against the Tamil nation, specifically calling for an investigation on the allegations of war crimes, crimes against humanity and genocide committed by the GoSL on the Tamil people. The proposed resolution also urged the global civil society and leaders of the IC to stop decimation of the Tamil nation by the Sri Lankan state.

  • தொடங்கியவர்

545326_298407916929794_2136847285_n.jpg

599153_298409690262950_1585288122_n.jpg

ஸ்டாலின் ,டி ஆர் பாலு வந்தார்களா ?

பொன்னாடை போர்த்தினார்களா ?

  • தொடங்கியவர்

ஸ்டாலின் ,டி ஆர் பாலு வந்தார்களா ?

பொன்னாடை போர்த்தினார்களா ?

222431_298412026929383_1349450384_n.jpg

மணி .

  • தொடங்கியவர்

[size=5]லண்டன் உலகத் தமிழர் மாகா நாடு : சிறிலங்கா அரசு நடத்திக்கொண்டிருப்பது திட்டப்பட்ட தமிழின அழிப்பே என அனைத்து தமிழ் கட்சிகளும் ஏற்றுக் கொண்டன‌.[/size]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இந்திய பாராளுமன்ற உறுப்பினர் திரு D.ராஜா , மாநில தலைவர் தா. பாண்டியன் ஆகியோர் இலங்கையில் நடைபெற்றது திட்டமிடப்பட்ட கட்டங்கட்டமான இனப்படுகொலை என்ற வாதத்தை பதிவு செய்தனர்.

[size=4]பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக திரு .ஜி,கே மணி அவர்கள் பேசும்போது, பிரித்தானிய தமிழர் பேரவையோடு இணைந்து தாம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்ஸிலில் பணியாற்றுவது குறித்து பேசினார்.[/size]

[size=4]அம்மாநாட்டில் உரையாற்றிய திரு தொல். திருமாவளவன் அவர்கள் போரின் பின்னரான அவலங்களை பட்டியலிட்டு பேசினார். தாம் இந்திய மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாகவும் கூறினார். [/size]

[size=4]நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சார்பாக இம்மாநாடுக்கு வருகை தந்த திரு கா. அய்யநாதன் அவர்கள் தாம் இலங்கை மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம் என்ற செய்தியை பதிவு செய்தார்.[/size]

[size=4]இந்து மக்கள் கட்சி தலைவர் திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் இலங்கையில் இந்துக் கோவில்கள் அழிக்கப்படுகின்றன , தமிழ் மண்ணில் புத்த விகாரைகள் கட்டப்படுவதை சுட்டிக் காட்டி , இது முன்னரும் திருஞான சம்பந்தர் காலத்திலும் நடைபெற்றது. அதனை ஞான சம்பந்தர் வென்றது போல இலங்கையிலும் தமிழர்கள் வெல்வார்கள் என்று கூறினார்.[/size]

[size=4]இம்மாநாட்டில் சேவ் தமிழ் அமைப்பின் சார்பாக கலந்துகொண்ட திரு சரவணகுமார் அவர்கள் , இலங்கைத் தீவில் நடைபெற்ற இன அழிப்பு ஓர் சுயாதீன சர்வதேச விசாரனைக்கு உட்படுத்த வேண்டுமென வலியுறுத்தியதொடு , இம்மாநாட்டின் தீர்மானத்தை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.[/size]

[size=4]மே 17 அமைப்பை சார்ந்த திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டார்கள் அவர் இன்றைய அமர்வில் தமது கருத்துக்களை பதிவு செய்கிறார்.[/size]

[size=4]புதிய தமிழகம் கட்சியின் தலைவர் . டாக்டர் . கே.கிருஸ்ணசாமி அவர்கள் இம்மாநாட்டில் பேசினார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து பேசாத எவருமே தம்மை ஓர் மனித உரிமை ஆர்வலர்கள் என்று கூறிக் கொள்ள முடியாது என்ற வாதிட்டார் [/size]

[size=4]திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக பேசிய திரு மு.க ஸ்டாலின் “டெசோ” மாநாட்டின் தீமானங்களும் அதன் பின்னரான தமது செயற்பாடுகள் குறித்தும் பேசினார்.[/size]

[size=4]காந்திய மக்கள் இயக்கம் சார்பாக திரு குமரய்யா பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்கள்.[/size]

[size=4]இம்மாநாட்டின் தீர்மாணம் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயளாளர் திரு ரவிக்குமார் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று தீர்மானம் இறுதி செய்யப்படும்[/size]

[size=4]மாநாட்டின் தொடர்சியாக லண்டனில் இரவு விருந்துபசாரத்துடன் கூடிய கலந்துரையாடல் நடைபெற்றது.[/size]

[size=4]அதில் கலந்து கொண்டு பேசிய திரு . விடுதலை ராஜேந்திரன் அவர்கள் மாநாட்டை பெரிதும் புகழ்ந்து பேசியதோடு தமிழர்கள் ஒற்றுமையாக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.[/size]

[size=4]அவ்விருந்துபசாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.எஸ் . சிறீதரன் , திரு அ. விநாயகமூர்த்தி , திரு .எஸ். யோகேஸ்வரன் ஆகியோர் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.[/size]

[size=4]தில்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு ராம் சங்கர் அவர்கள் , தில்லி தமிழ் வழக்கறிஞர் சங்கம் சார்பாக பேசினார்.[/size]

[size=4]இலங்கைத் தீவில் நடைபெற்றது ஓர் இனப்படுகொலைதான் என்பதனை ஆதார பூர்வமாக நிரூபிக்கும் வகையில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தை நடாத்தும் திரு யூட் லால் பெர்ணாண்டோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் . தமிழர்களது போராட்டம் தொடர்பான நீண்ட புரிதலை கொண்டுள்ள திரு யூட் , தமிழர் தரப்பு நியாயங்களை பட்டியலிட்டு பேசினார். இனப்படுகொலையை நிரூபிப்பதற்கு இனிவரும் காலங்களில் உள்ள சகல வழிமுறைகளையும் அதாரத்தோடு சுட்டிகாட்டி பேசினார். பல்வேறு சிந்தனையோட்டங்களுடனும் குழப்பமுடனும் உள்ள தமிழ் மக்களுக்கு அவரது உரை பெரும் நம்பிக்கை கொடுப்பதாக இருந்தது. [/size]

[size=4]டப்ளின் மக்கள் தீர்ப்பாயதை நடாத்தி , அதற்காக தொடர்ந்தும் பாடுபடும் திரு யூட் லாலுக்கு அவர்களின் உரையின் இறுதியில் மக்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோசம் செய்து தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி

பாராட்டுக்களும் நன்றிகளும்

தொடரட்டும் தங்கள் சேவைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதலாம்.

[size=4]பாராட்டுக்களும் நன்றிகளும்[/size]

போரை இத்தனை அழிவுகளுடன் முடித்ததற்கு இலங்கை போய் ராஜபக்சாவிற்கு பொன்னாடை போர்த்தியவர்களுக்கு லண்டனில் கூப்பிட்டு பொன்னாடை போர்த்தியது பெரும் சாதனைதான் .

இதில் யார் சுரணை அற்றவர்கள் என்று யாரும் தெரிந்தால் சொல்லவும் .

  • கருத்துக்கள உறவுகள்

போரை இத்தனை அழிவுகளுடன் முடித்ததற்கு இலங்கை போய் ராஜபக்சாவிற்கு பொன்னாடை போர்த்தியவர்களுக்கு லண்டனில் கூப்பிட்டு பொன்னாடை போர்த்தியது பெரும் சாதனைதான் .

இதில் யார் சுரணை அற்றவர்கள் என்று யாரும் தெரிந்தால் சொல்லவும் .

விடுங்க பாஸ் இப்ப நீங்க திருந்தி வந்தா நாங்க ஏற்க மாட்டமா

விடுங்க பாஸ் இப்ப நீங்க திருந்தி வந்தா நாங்க ஏற்க மாட்டமா

யார் திருந்தி யாரிடம் போகின்றார்கள் என்று பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம் .கால் வாசி ராஜபக்சாவின் காலில் விழுந்துவிட்டது .இப்ப ஸ்டானின் ,பாலு என்று கருணாநிதியின் காலிலும் விழுந்தாச்சு இனி சோனியா தான் பாக்கி .

சோனியாவிடம் காலில் விழுந்துவிட்டு சோனியா திருந்திவிட்டார் என்றுதான் சொல்லப்போகின்றீர்கள் .

நீங்களெல்லாம் இப்படி ஒரு தெளிவிற்கு வந்ததே சந்தோசம் தான் .

  • தொடங்கியவர்

போரை இத்தனை அழிவுகளுடன் முடித்ததற்கு இலங்கை போய் ராஜபக்சாவிற்கு பொன்னாடை போர்த்தியவர்களுக்கு லண்டனில் கூப்பிட்டு பொன்னாடை போர்த்தியது பெரும் சாதனைதான் .

இதில் யார் சுரணை அற்றவர்கள் என்று யாரும் தெரிந்தால் சொல்லவும் .

[size=4]இப்படி செய்தால் ஏன் செய்தீர்கள் என ஒரு சாரார் கேட்பார்கள்? [/size][size=1]

[size=4]இன்னொரு சாரர் ஏன் எதிரிகளை [/size][size=4]அணை[/size][size=4]த்து போகவில்லை என கேட்பார்கள்? [/size][/size][size=1]

[size=4]அடுத்த பக்கத்தினர் உங்களுக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியுமா என கேட்பார்கள்?[/size][/size]

[size=1]

[size=4]இவைகள் அனைத்தையும் தாண்டி செய்பவர்களும் உள்ளார்கள். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.